-
Posts
8740 -
Joined
-
Last visited
-
Days Won
103
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by ரஞ்சித்
-
ஆனால், இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் உறுப்பினர்களுக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் செயல்ப்படும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதை தமிழ் இளைஞர்கள் சந்தேகத்துடனேயே பார்த்தார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஊடாக மக்கள் முன்னால் தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வைத்த வாக்குறுதியான இறையாண்மையுள்ள சுதந்திரமான தமிழீழத்தினை உருவாக்கும் நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபடுவோம் என்பதற்கு முரணான வகையில் இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் செயற்படுவதாக விஞ்ஞாபனம் கூறியதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஆனால், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை இத்தேர்தலின் மூலம் மக்கள் ஆணையாக மாற்றவேண்டும் என்பதே தமது முதலாவது குறிக்கோளாக அன்று இருந்தமையினால், இதுபற்றி அப்போதைக்கு அதிகம் முரண்படுவதை அவர்கள் தவிர்த்தார்கள். இளைஞர்கள், குறிப்பாக ஆயுத அமைப்புக்களில் செயற்பட்டு வந்தவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றியடையவேண்டும் என்பதற்காகக் கடுமையாக உழைத்தார்கள். சுய கெளரவத்துடனும், மரியாதையுடனும் , சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்றால் எமக்கு ஈழமே தீர்வு என்று கூறியதுடன், ஆகவே, நீங்கள் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ் ஈழத்தை உருவாக்க உதவும் என்றும் மக்களிடம் பிரச்சாரம் செய்துவந்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் தேர்தல் பரப்புரைகளுக்குத் தலைமை தாங்கிய அமிர்தலிங்கம், தமிழ் ஆயுத அமைப்புக்களின் உதவியினை முழுமையாக உபயோகித்திருந்தார். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் இறுதிநாளான ஆடி 19 ஆம் திகதி நடைபெற்ற மிகப்பெரும் பொதுமக்கள் கூட்டத்தில் பேசிய அமிர்தலிங்கம் பின்வருமாறு பிரகடணம் செய்தார், "எமது பிரச்சினை வெறுமனே ஒரு தேசியப் பிரச்சினையல்ல. அது இரு இனங்களுக்கிடையிலான பிணக்காகும். ஆகவே நாளை மறுநாள் நடக்கவிருக்கும் தேர்தல் சாதாரணமான தேர்தல் அல்ல, மாறாக அது ஒரு மக்கள் ஆணையாக இருக்கும். இத்தேர்தல் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ வேண்டுமா அல்லது தனித்துச் சென்று தமக்கான தனிநாட்டினை உருவாக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும்". வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக தனிநாட்டிற்காக வாக்களித்திருந்தார்கள். வடக்கில் தாம் போட்டியிட்ட அனைத்து 14 தொகுதிகளிலும் வெற்றியீட்டிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் கிழக்கில் மேலும் 3 தொகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டனர். பின்னர் நடைபெற்ற பொத்துவில் தொகுதிக்கான தேர்தல் மூலம் இன்னொரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஆசனங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. இந்தத் தேர்தல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும், அமிர்தலிங்கத்திற்கும் மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருந்தது. தந்தை செல்வாவின் தொகுதியான காங்கேசந்துறையில் போட்டியிட்டிருந்த அமிர்தலிங்கம் மிகப்பெரிய வெற்றியினை ஈட்டியிருந்தார். 1975 ஆம் ஆண்டின் இடைத்தேர்தலில் தந்தை செல்வா பெற்ற 25,927 வாக்குகளைக் காட்டிலும் 5228 வாக்குகளை அதிகமாகப் பெற்று 31,155 வாக்குகளுடன் அமிர்தலிங்கம் வெற்றிபெற்றிருந்தார். அமிர்தலிங்கத்தின் மகிழ்ச்சிக்கு அளவேயிருக்கவில்லை. யாழ்ப்பாண தேர்தல் அதிகாரி விஜேபால தேர்தல் முடிவினை உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் தனது வெற்றிப் பேச்சை வழங்கிய அமிர்தலிங்கம்,"இத்தேர்தல் வெற்றியின்மூலம் தமிழ் மக்கள் இறையாண்மையுள்ள, சுதந்திர தனிநாடான தமிழ் ஈழத்தில் வாழவே விரும்புகிறார்கள் என்பது உறுதியாகிறது" என்று கூறினார். பலத்த கரகோஷத்திற்கு மத்தியில் தனது பேச்சினைத் தொடர்ந்த அமிர்தலிங்கம் இழந்த தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தம்மாலான அனைத்துத் தியாகங்களையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார். அவர் மேலும் பேசுகையில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு அமோக ஆதரவினைத் தமிழர்கள் வழங்கியிருப்பதன் மூலம் தனிநாட்டிற்கான ஆணையினைத் தந்திருக்கிறார்கள் என்று கூறினார். "இனித் திரும்பிப் பார்க்கப்போவதில்லை. எமது இலட்சியமான தமிழ் ஈழத்தை வென்றெடுக்க முன்னோக்கி அணிவகுத்துச் செல்வோம்" என்று அவர் முழங்கினார். தேசிய மட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றிருந்தது. 165 உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 138 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள சிறிமாவின் சுதந்திரக் கட்சி வெறும் 8 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தது. இலங்கைத் தொழிலாளர் கட்சி 1 ஆசனத்தைப் பெற்றிருந்தது. இடதுசாரிக் கட்சிகள் முற்றான தோல்வியினைத் தழுவியிருந்தன. ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 3,179,221, இது மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் 50.9 வீதமாகும். சிறிமாவின் சுதந்திரக் கட்சி 1,855,331 வாக்குகளைப் பெற்றிருந்தது, இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 29.7 வீதமாகும். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி பெற்ற வாக்குகள் 421,488, இது மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளில் 6.4 வீதமாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 62,707 வாக்குகளைப் பெற்றுகொண்டது, இது மொத்த வாக்குகளில் 1 வீதமாகும். ஜெயவர்த்தனே அரசாங்கத்தை அமைத்துக்கொண்டார். ஆனால், மக்கள் தனக்கு வழங்கிய ஆணையினை முற்றாக மறந்துவிட்ட அமிர்தலிங்கம், தொடர்ந்தும் சிங்கள மக்களுடன் சேர்ந்து செயற்பட முடிவெடுத்தார். தேசியப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எனும் பொறுப்பினை, இலங்கை அரசியலமைப்பின் மீது சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்ட அமிர்தலிங்கம், ஜனநாயகம் செழிப்புடன் செயற்பட தான் முழுமையாக ஒத்துழைக்கப்போவதாக வாக்குறுதியளித்தார் !
-
ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனியான பகுதியொன்றை தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக வரைந்திருந்தது. தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்கிற தலைப்பில் இது உருவாக்கப்பட்டிருந்தது. "தமிழ் பேசும் மக்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள் என்பதனை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இந்தப் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படாமல் இருப்பதனாலேயே தமிழ் பேசும் மக்கள் தனியான நாட்டினை உருவாக்கும் இளைஞர் அமைப்புக்களுக்கு ஆதரவளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இலங்கையின் ஒருமைப்பாட்டினைக் காத்திடவும், பொருளாதார அபிவிருத்தியை அடையவும் இந்தப் பிரச்சினைகள் காலம் தாழ்த்தாது தீர்க்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கருதுகிறது. எமது ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இந்தப் பிரச்சினைகளையும் கவலைகளையும் தீர்க்கக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் கைக்கொள்ளும் என்று கூறிக்கொள்வதுடன், பிரச்சினைகள் இருக்கக் கூடிய விடயங்களாக பின்வருவனவற்றை இனங்கண்டுள்ளது", " கல்வி - தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் - தமிழ் மொழியின் பாவனை - அரச மற்றும் தனியார் துறைகளில் தமிழ் பேசும் மக்களுக்கான வேலைவாய்ப்பு" "நாம் சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டுவதோடு இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க முயற்சி எடுப்போம்" என்றும் கூறியிருந்தது. சுதந்திரக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் "தேசிய ஒருமைப்பாடும் தேசியப் பிரச்சினைகள்" என்கிற தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறுகிறது, "இலங்கையில் இன, மொழி, சமூக, கலாசார வழிகளில் தேசிய மட்டத்தில் சிறுபான்மையினக் குழுக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எடுக்கும் வகையில் நாட்டில் இருக்கும் அனைத்து இனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஆலோசனைச் சபை ஒன்றினை எமது அரசு உருவாக்கும்" என்று கூறியிருந்தது. அதேபோல், இடதுசாரிக் கூட்டணியாகக் களமிறங்கிய கம்மூனிஸ்ட் கட்சி மற்றும் சமசமாஜக் கட்சி ஆகியவற்றின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய சிறுபான்மையின மக்கள் எனும் தலைப்பின் கீழ் பின்வருமாறு கூறியிருந்தது, "நாட்டின் ஒருமைப்பாட்டினைக் கடைப்பிடிக்கும் அதேவேளை, பொதுத் தேசிய மாவட்டங்களுக்கான வலையமைப்பின் மூலம் பிராந்தியங்களுக்கான அதிகாரப் பரவலாக்கலினை நாம் ஏற்படுத்துவோம். ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் மொழி தொடர்பான அதிகாரங்களை முழுமையாக அமுல்ப்படுத்தும் அதேவேளை, தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியினை உத்தியோக பூர்வ மொழியாகவும் நாம் ஆக்குவோம். ஏற்கனவே தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டிருக்கும் நிர்வாக அந்தஸ்த்தினை, குடியரசு யாப்பில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் உறுதிப்படுத்துவோம். அரசியலமைப்பில் சிங்கள மொழிக்கு வழங்கப்பட்டிருக்கும் நாட்டின் உத்தியோகபூர்வ மொழி எனும் அந்தஸ்த்தினை பாதிக்கா வண்ணம் தமிழ் மொழிக்கு யாப்பினூடாக தேசிய மொழி எனும் அந்தஸ்த்தினை நாம் வழங்குவோம். கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் இன, மத, குல ரீதியான பாகுபாட்டினை நாம் முற்றாக தடைசெய்வோம். இன மத ரீதியிலான கலகங்களைத் தூண்டுவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படும்". வாக்கெடுப்பு ஆகவே அனைத்துச் சிங்களக் கட்சிகளும் தமிழருக்குப் பிரச்சினைகள் இருக்கிறது, அவற்றினைத் தீர்க்க அரசியல் ரீதியில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியபடியே 1977 ஆம் ஆண்டிற்கான தேர்தலை எதிர்கொண்டன. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட தேசியக் கட்சிகள் இந்த அடிப்படையிலேயே தேர்தலில் பங்குகொண்டன. இதேவேளை இத்தேர்தலில் பங்குகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்களா அல்லது தனிநாட்டினை நோக்கி நகரப்போகிறார்களா என்பதனை உறுதிப்படுத்த இத்தேர்தலினை தமிழ் மக்கள் பாவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனி 1 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, அதனைத் தொடர்ந்து பாரிய பேரணி ஒன்றையும் நடத்தியது. மக்களின் முன் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய அமிர்தலிங்கம், இத்தேர்தல் தமிழர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிறதென்றும், இத்தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் சுதந்திர மக்கள் கூட்டமாக வாழவிரும்புகிறார்களா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள் என்றும் கூறினார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்கள் மீது 1956 ஆம் ஆண்டிலிருந்து அரச ஆதரவிலான குண்டர்கள் நடத்திவரும் தாக்குதல்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேசியிருந்ததுடன், இதன் விளைவாக தமிழர்கள் உரிமைகளோ, பாதுகாப்போ அற்ற இரண்டாம்தர குடிமக்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற வாதத்தினை முன்வைத்திருந்தார். "தமிழர்களும் முஸ்லீம்களும் சிங்களக் காடையர்களாலும், அரச ஆதரவுடனான சிங்கள அமைப்புக்களாலும், ராணுவ பொலீஸ் பிரிவுகளாலும் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்படு தாக்கப்பட்டு வருகின்றனர். திட்டமிட்ட இத்தாக்குதல்கள் மூலம் தமிழர்களும் முஸ்லீம்களும் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருவதுடன், அவர்களது சொத்துக்கள், வியாபார நிலையங்கள், வாழிடங்கள் முற்றாக அழிக்கப்பட்டும் வருகின்றன. உயிரிழப்புக்கள், உடல்ரீதியிலான துனுபுருத்தல்கள், பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் என்று மிகவும் கொடூரமானஅட்டூழியங்களுக்கு அவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர்" என்று அந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் கூறியது. அத் தேர்தல் விஞ்ஞாபனம் மேலும் கூறுகையில், "தமிழ் மொழிக்கான உரிமைகளைக் கோரி 1961 ஆம் ஆண்டிலிருந்து தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் அகிம்சை முறையிலான ஒத்துழையாமை போராட்டங்களை ராணுவப் பயங்கரவாதம் கொண்டு சிங்கள அரசுகள் மிகவும் மூர்க்கத்தனமாக அடக்கி வருகின்றன. 1976 ஆம் ஆண்டு புத்தளம் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 7 முஸ்லீம்களை சிங்களப் பொலீஸார் மிகவும் குரூரமான வகையில் கொன்றுதள்ளியிருந்தனர். இக்கொலைகள் பற்றி விசாரிக்க அரசாங்கம் இன்றுவரை மறுத்தே வருகிறது. இவ்வாறான சம்பவங்கள் கூறும் செய்தி என்னவென்றால், சிங்கள அரசாங்களின் கீழ் தமிழர்களுக்கோ முஸ்லீம்களுக்கோ சுதந்திரமாக வாழ முடியாதென்பதும், அவர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுவார்கள் என்பதும் தான்". மேலும், இந்த விஞ்ஞாபனம் கேள்வியொன்றினையும் வாக்காளர்களை நோக்கி முன்வைத்திருந்தது, "சிங்கள அரசாலும், அதன் காடையர்களாலும் தொடர்ச்சியாக கொலைகளுக்கும், சொத்துச் சூறையாடல்களுக்கும், அழிவுகளுக்கும் முகங்கொடுத்துவரும் தமிழ் பேசும் மக்கள் முன்னால் உள்ள மாற்றுத் தேர்வுதான் என்ன? இருட்டினுள் தமது அடையாளத்தைத் தேடிக்கொண்டும், அழிவின் விளிம்பிலும் நின்றுகொண்டிருக்கும் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தனியான தமிழ்த் தேசத்தினைத் தவிர வேறு மார்க்கம் ஏதாவது இருக்கின்றதா? " என்று கேட்டிருந்தது. இக்கேள்விக்கான பதிலையும் அந்த விஞ்ஞாபனமே முன்வைத்திருந்தது. "இதற்கு நம்மிடம் இருக்கும் இறுதியானதும், துணிவானதுமான ஒரே முடிவு, எமது தந்தையர் ஆண்ட எமது தேசத்தை மீண்டும் நாமே ஆள்வதுதான். சிங்கள ஏகாதிபத்தியம் எமது தாயகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் மூலம் தமிழர்கள் தனிநாட்டு நோக்கிப் பயணிக்கவே முடிவெடுத்திருக்கிறார்கள் என்பதனை தமிழர் விடுதலைக் கூட்டணி சிங்கள அரசுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறது. நீங்கள் எமக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ் தேசம் சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ விரும்புகிறதென்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்தும்". தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்தலின் பின்னர் எவ்வாறான நடவடிக்கையினை எடுக்கும் எனும் கேள்விக்கான பதிலையும் இத்தேர்தல் விஞ்ஞாபனம் கொடுத்திருந்தது. "இத்தேர்தலினூடாக பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வுசெய்யப்படும் தமிழ்பேசும் உறுப்பினர்கள் இலங்கையின் தேசிய சபையில் உறுப்பினர்களாக இருக்கும் அதேவேளை, தேசியத் தமிழ் ஈழச் சபையிலும் உறுப்பினர்களாகத் தொழிற்படுவர். மேலும், இந்த தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் ஈழத்திற்கான அரசியலமைப்பினை வரைவதுடன், அதனை நடைமுறைப்படுத்த அகிம்சை வழியிலும், தேவையேற்பட்டால் நேரடி நடவடிக்கைகள் மூலமாகவும் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பர்".
-
றோயல் கல்லூரி, கொழும்பு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான தனது சந்திப்பு ரகசியாமக இருக்கவேண்டும் என்று ஜெயவர்த்தனா விரும்பினார். ஆகவே கொழும்பு றோயல் கல்லூரிக்கு முன்னால் அமைந்திருந்த தனது தொடர்மாடி வீட்டிற்கு தோசை விருந்தொன்றிற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களையும் தொண்டைமான் அழைத்திருந்தார். ஜெயவர்த்தனா, எம் டி பண்டா மற்றும் எஸ்மொண்ட் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியையும், அமிர்தலிங்கம் , சிவசிதம்பரம் மற்றும் கதிரவேற்பிள்ளை ஆகியோர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினையும் பிரதிநிதித்துவம் செய்திருந்தனர். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட்டால் சிறிமாவின் அரசாங்கத்தினை வீழ்த்த முடியும் என்று தொண்டைமான் கூறவும் அங்கிருந்த அனைவரும் அதனை ஆமோதித்தனர். "ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியிருக்கிறது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தைக் காத்திட வேண்டும்" என்று ஜெயவர்த்தனா கூறினார். இதற்குப் பதிலளித்த கதிரவேற்பிள்ளை, "ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியிருக்கிறது, அதனைக் காப்பாற்றும் உங்களின் முயற்சிக்கு நாம் ஆதரவாய் இருப்போம்" என்று கூறினார். இதனால் மகிழ்ந்த ஜெயவர்த்தனா, "நாங்கள் இருவரும் ஒரே ஆவர்த்தனத்தில் பேசுகிறோம்" என்று கூறினார். பின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களைப்பார்த்து, "நான் பதவியேற்றதும் எந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார் ஜே ஆர். அப்போது தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்னவென்பதை இரு பகுதியினரும் ஆராய்ந்தார்கள். அதன்படி பின்வரும் பிரச்சினைகள் அவர்களால் அடையாளம் காணப்பட்டன. தமிழ் மொழியின் பாவனை தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியிருப்புக்களை நிறுத்துவது வேலைவாய்ப்பு பல்கலைக்கழக அனுமதி இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை தந்தை செல்வா கைக்கொண்ட அணுகுமுறைக்கும் அமிர்தலிங்கம் கைக்கொண்ட அணுகுமுறைக்கும் இடையே பாரிய வேறுபாடு இருந்தது. செல்வா அவர்கள் 1957 இல் பண்டாரநாயக்காவுடன் பேசும்போதும், 1977 இல் சிறிமாவுடன் பேசும்போதும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வொன்றைப்பற்றியே அவர் பேசினார். தனது இலட்சியத்தை விட்டுக்கொடுக்காது ஆனால், தமிழ்மக்கள் எதிர்கொண்டு நிற்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகளைப்பற்றி அவர் பேசினார். இதன்படி பண்டாரநாயக்காவுடன் சமஷ்ட்டி அலகு அடிப்படையிலான தீர்வு பற்றியும், சிறிமாவுடன் தனிநாட்டுக்கான அமைப்புப் பற்றியும் அவர் பேசியிருந்தார். ஆனால், அமிர்தலிங்கமோ தனிநாட்டிற்கான தேவை பற்றி ஒருபோதும் ஜெயவர்த்தனாவுடன் பேசியதில்லை, மாறாக பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றி மட்டுமே அவர் பேசினார். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தொண்டைமானின் இல்லத்தில் அன்று நடந்த சம்பாஷணைகளில் ஒரேயொரு முறை மட்டுமே தனிநாடு எனும் பதம் பாவிக்கப்பட்டது. அதுகூட ஜெயவர்த்தனாவினாலேயே கூறப்பட்டது. அனைவரும் இந்திய கோப்பிப் பாணத்தை அருந்திவிட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் அமிர்தலிங்கத்தைப் பார்த்து பின்வருமாறு கூறினார் ஜெயவர்த்தனா, " நீங்கள் தனிநாட்டிற்கான பிரச்சாரத்தை மேற்கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. எனக்குத் தேவையானதெல்லாம் நீங்கள் 15 ஆசனங்களை வெல்வது மட்டும் தான். அப்படி வென்றால் மட்டுமே என்னால் அரசாங்கம் ஒன்றினை அமைக்க முடியும்" என்று கூறினார். தனிநாட்டிற்கான தேவையினை அந்தச் சந்திப்பில் முன்வைப்பதில் அமிர்தலிங்கம் தோல்விகண்டிருந்தாலும் கூட, ஐக்கிய தேசியக் கட்சி தமிழருக்குப் பிரச்சினைகள் இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளவைப்பதில் வெற்றி கண்டிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியவை தமது 1977 ஆம் ஆண்டுத் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழருக்குப் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொண்டிருந்ததுடன், அவற்றுக்குத் தீர்வு காணவேண்டிய அவசியம் பற்றியும் கூறியிருந்தன. தமிழர்களுக்குப் பிரச்சினைகள் இல்லை, அவர்கள் சிங்களவரைக் காட்டிலும் அதிக சலுகைகளை அனுபவிக்கிறார்கள், தாம் அனுபவிக்கும் சலுகைகளைத் தொடர்ச்சியாக தக்கவைக்கவே கூக்குரலிட்டு வருகிறார்கள் என்று உலகின் முன் பிரச்சாரம் செய்துவந்த சிங்களவர்களின் கடும்போக்கில் இது பாரிய திருப்பம் என்றால் அது மிகையில்லை.
-
"இவ்வளவு காலமும் தமிழர்களுக்கென்று எந்தப் பிரச்சினையுமில்லை என்று சிங்களவர்கள் உலகத்தை ஏமாற்றி வந்திருக்கின்றனர். சிங்களவர்களை விடவும் தமிழர்களே அதிக சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள் என்றும் கூறிவந்தனர். ஆனால், அவர்களால் இதனை இனிமேல் கூறமுடியாது. ஏனென்றால், அரசாங்கம் தமிழர்களுக்குத் தனியான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதனை ஏற்றுக்கொண்டுள்ளதோடு, அவற்றினை அடையாளம் காணவும் அவர்களால் முடிந்திருக்கிறது. ஒரு தனிநாட்டிற்கான முயற்சியினை ஆரம்பிப்பதற்கு எமக்குப் பலமான அடித்தளம் ஒன்று கிடைத்திருக்கிறது" என்று கூறினார். ஆனால் தமிழ் இளைஞர்களோ இந்தப் பதிலினால் திருப்தியடையவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தனிநாட்டிற்கான முயற்சிகளை எடுக்காமல் தாமதித்துவருவதாக இளைஞர்கள் குற்றஞ்சாட்டினர். ஆகவே, அவர்களை பொறுமையினைக் கடைப்பிடிக்குமாறு கோரிய தந்தை செல்வா, வரப்போகின்ற தேர்தலினை ஒரு சர்வஜன வாக்கெடுப்பாகக் கணித்து, தனிநாட்டிற்கான ஆணையினை மக்களிடமிருந்து பெற்றுவிட வேண்டுமென்றும், பின்னர் படிப்படியாக தனிநாட்டிற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என்றும் கூறினார். தந்தை செல்வா தனது இரண்டாவது செயற்பாட்டினை திருகோணமலை இந்துக் கல்லூரியில் பங்குனி 1977 இல் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மாநாட்டில் முன்னெடுத்தார். அங்கு பேசிய தந்தை செல்வா அவர்கள், "1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மாநாட்டில் தமிழ்த் தேசத்தின் எதிர்காலம் தொடர்பான மாற்றப்படமுடியாத தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டு விட்டது. சிங்களத் தலைவர்களுக்கான எனது அறிவுரை என்னவென்றால், எங்களை எமது வழியில் செல்ல விடுங்கள் என்பதுதான். எமக்கிடையே கசப்புணர்வு ஏதுமின்றி, அமைதியாகப் பிரிந்துசெல்ல எம்மை அனுமதியுங்கள். சம அந்தஸ்த்துள்ள இரு நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பின்மூலம் இந்த நாடுகளின் இருப்பினை நாம் மேம்படுத்திக்கொள்ளலாம். தமிழர்களுக்கு வேறு தெரிவுகள் எதுவும் கிடையாது. எமது இளைய சந்ததியினரிடம் கசப்புணர்வு வளர்ந்து வருகிறது. இந்தக் கசப்புணர்வினை மேலும் வளரவிட்டு, மோதல்களாக்கி, ஈற்றில் வேற்று நாட்டு தலையீட்டினை இந்த நாட்டில் உருவாக்குவதைக் காட்டிலும் சமாதான முறையில் எமக்கிடையிலான பிரச்சினைகளை தீர்க்கும் வழிவகைகளை நாம் கையாள வேண்டும். இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை நாம் நம்புவதோடு, இந்தக் கடுமையான பயணத்தில் நாம் வென்றே தீருவோம் என்பதையும் இக்கணம் கூறிக்கொள்கிறேன்" என்று கூறினார். தமிழரின் பிரச்சினைக்கான அங்கீகாரம் 1977 ஆம் ஆண்டு, சித்திரை 29 ஆம் திகதி தந்தை செல்வா மரணமானார். அவருக்குப் பின்னர் அமிர்தலிங்கம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவராக வந்தபோதும் தந்தை செல்வாவினால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட தந்தை எனும் ஸ்த்தானத்தை அவரால் நிரப்ப முடியவில்லை. தந்தை செல்வா அவர்கள் தனக்கு முன்னால் வைக்கப்படும் சகல விவாதங்களையும் அமைதியாகக் கண்களை மூடிச் செவிசாய்த்துவிட்டு, அவற்றுக்கான தனது தீர்வுகளை அவர் முன்வைக்கும்போது எல்லோருமே கேள்வியின்றி அதனை ஏற்றுகொண்டார்கள். ஆனால், அமிர்தலிங்கம் வித்தியாசமானவர். பிரச்சினைகளைக் கிளப்பிவிடுவதும், மக்கள் முன் தன்னை பிரபலப்படுத்துவதும் அவருக்கு பிடித்திருந்தது. மக்கள் தந்தை செல்வா மீது வைத்திருந்த மரியாதையும், மக்கள் மீது செல்வா அவர்கள் கொண்டிருந்த கட்டுப்பாடும் அமிர்தலிங்கத்திற்கு எரிச்சலை ஊட்டியிருந்தது. அமிர்தலிங்கம் ஒரு மக்கள் தலைவன் என்பதை விடவும் ஒரு அரசியல்வாதியாகவே செயற்பட்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைமைப்பொறுப்பினைப் பெற்றுக்கொண்டபின்னர் அமிர்தலிங்கத்தின் ஒரே கரிசணையாக இருந்தது தேர்தலினை எதிர்கொள்வது எவ்வாறு என்பதும், தேர்தலின் பின்னர் தான் செயற்படவேண்டிய முறை என்னவென்பது பற்றி மட்டும் தான். ஜெயவர்த்தன தேர்தலில் அமோக வெற்றியீட்டுவர் என்று பரவலாகவே எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே ஜெயவர்த்தனாவுடன் ஒரு ஒப்பந்தத்தினைச் செய்யலாம் என்று அமிர்தலிங்கம் விரும்பியிருந்தார். வெளிப்படையாகவும், ரகசியமாகவும் ஜெயவர்த்தனவின் விருப்பினை நாடிபிடித்தறிய அமிர்தலிங்கம் சில செயல்களைச் செய்தார். வெளிப்படையாக அவர் செய்த விடயம் பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணம் ஊடாக பேச்சு ஒன்றுனை வழங்கியது. நாளிதழான வீரகேசரிக்குப் பேட்டியளித்த துரைரட்ணம் தமிழர் பிரச்சினைக்கான தீர்வினை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆலோசிக்கவே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி விரும்புவதாகக் கூறியிருந்தார். இதே மாதிரியான கருத்தையே அமிர்தலிங்கம் ஊர்காவற்றுரையில் தான் பேசிய கூட்டத்திலும் தெரிவித்தார். ரகசியமான செயற்பாட்டினை தொண்டைமான் ஊடாக அவர் நடத்தினார்.
-
"தயவுசெய்து ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களை ஒரு கூட்டத்திற்கு அழைக்கிறார்கள் என்றால் ஒருபோதும் அதனை நிராகரிக்க வேண்டாம். அக்கூட்டத்தில் பங்குபற்றுவதனால் மட்டுமே அவர்கள் கூறுவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று அர்த்தமாகிவிடாது. ஒரு கூட்டத்தில் பங்கேற்பதன் மூலம் நீங்கள் கூற விரும்புவதைக் கூறுவதற்கான சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைக்கிறது. நீங்கள் எங்கள் கவலைகளை செவிமடுக்கத் தயாரில்லாததனால், நாம் எம் வழியில் செல்லப்போகிறோம் என்பதை இந்த அரசாங்கத்திற்கு நான் சொல்லப்போகிறேன். எமக்கான தனிநாடான தமிழ் ஈழத்தை அமைப்பதில் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் இடமில்லை என்பதையும் நான் அங்கு சொல்லப்போகிறேன்" என்று அவர் கூறினார். பீலிக்ஸ் ஆர் டயஸ் பண்டாரநாயக்க சிறிமாவோ தலைமையில் 1977 ஆம் ஆண்டு மாசி 21 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் தந்தை செல்வா இதனையே கூறினார். தமிழருக்கான தனிநாடு என்கிற பேச்சினை கேட்கவே அரசு தயாரில்லை என்று கடும் தொணியில் அமைச்சர் பீலிக்ஸ் ஆர் டயஸ் பண்டாரநாயக்கா பேசியதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த தந்தை செல்வா அவர்கள், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, தமிழ் ஈழம் எனும் தமது இலட்சியத்தில் எதனையும் விட்டுக் கொடுக்க தாம் தயாரில்லை என்றும், ஆனால் இடைக்கால ஒழுங்காக தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் அவலங்களுக்கான தீர்வுகளை ஆராய ஒரு கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்தார். அன்று நடந்த கூட்டத்திலும், அதற்குப் பின்னர் பங்குனி 16 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்திலும் பங்குபற்றிய சிறிமாவோ தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் அவலங்களை செவிமடுக்கத் தயாராகவே இருந்தார். இவ்விரு இனங்களையும் பாதித்து வந்த முக்கியமான ஆறு விடயங்கள் அடையாளம் காணப்பட்டன. தமிழ் மொழியின் பாவனை பல்கலைக்கழக அனுமதி வேலையில்லாப்பிரச்சினை தமிழ் அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆதிகாரப் பரவலாக்கப்பட்ட நிர்வாகம் இந்தியத் தமிழர்கள் மலையகத் தோட்டங்களில் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் சிறிமாவோ இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தான் தர விரும்புவதாகக் கூறினார். தமிழ் மொழியினை தேவைக்கேற்றாற்போல் பாவிக்கும் அனுமதியை யாப்பினூடாக உருவாக்குவது, பல்கலைக்கழக அனுமதி முறையினை மாற்றுவது, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் வேலையில்லாப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பது, தமிழ் அரச ஊழியர்களின் பிரச்சினைக்கான தீர்வு, மலையகத் தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்று பல விடயங்களில் சாதகமான சிந்தனையினை அவர் கொண்டிருந்தவராகக் காணப்பட்டார். மேலும், அதிகாரப் பரவலாக்கம் என்பது தனது அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் கூறினார். தந்தை செல்வா கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி சாதகமான மனநிலையினைக் கொண்டிருந்தபோதும், ஏனையவர்கள் அதனை நம்பத் தயாராக இருக்கவில்லை. கூட்டத்தின் முடிவுபற்றி கருத்துத் தெரிவித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடம் செல்வா பின்வருமாறு கூறினார்,
-
அங்கீகரிக்கப்பட்ட மக்கள் ஆணை தந்தை செல்வாவின் இறுதிப் பிரகடணம் ஐந்து காரணங்களுக்காக "1977" ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வருடத்திலேயே இலங்கையின் இரு முக்கிய சிங்களக் கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கையில் தமிழருக்கு இனப்பிரச்சினை என்று ஒன்று இருக்கிறது என்பதனை ஏற்றுக்கொண்டன. இந்த வருடத்திலேயே தந்தை செல்வா இலங்கைத் தமிழருக்கிருக்கும் ஒரே தெரிவு சுதந்திரமான தனிநாடு மட்டுமே என்று பிரகடணம் செய்திருந்தார். இந்த வருடத்திலேயே இலங்கைத் தமிழர்கள் தனிநாட்டிற்கான தமது விருப்பத்தினை ஏகமனதோடு தெளிவாகச் சொல்லியிருந்தார்கள். இந்த வருடத்திலேயே ஜெயவர்த்தனவின் அரசாங்கம் பொலீஸ் ராணுவ அமைப்புக்களையும், காடையர்களையும் வைத்துக்கொண்டு தமிழர்களை அடக்கி ஒடுக்கும் கைங்கரியத்தினை ஆரம்பித்திருந்தார். இந்த வருடத்திலேயே தமிழ் ஆயுத அமைப்புக்கள் அரச ராணுவத்திற்கெதிரான தமது ஆயுத நடவடிக்கைகளைத் தொடங்கியிருந்தன. இது ஒரு தேர்தல் ஆண்டாகும். இந்த வருடத்திலேயே சுதந்திரக் கட்சி தனது புதிய அரசியலமைப்பின் மூலம் நடைமுறைக்கு முரணாக தனது 5 வருட ஆயுட்காலத்தை இன்னும் இரு வருடங்களால் நீட்டித்து, ஏழு வருடங்களை நிறைவு செய்திருந்த ஆண்டு. ஜெயவர்த்தனாவிற்கு சிங்கள மக்களிடையே அதிகரித்துவரும் செல்வாக்கினைக் கண்ணுற்று அச்சமடைந்த சிறிமாவோ, தமிழ் மற்றும் முஸ்லீம் வாக்குகளை எப்படியாவது பெற்றுவிட முயற்சித்துக்கொண்டிருந்தார். தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக பாராளுமன்றத்தில் இவ்வின மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, அம்மக்களின் குறைகளையும், தேவைகளையும் அறிந்துகொள்ள கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்களும் இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பினை இளைஞர்கள் மிகுந்த எரிச்சலுடனேயே பார்த்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மூலம் தமிழ் மக்களால் தமிழப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணி ஒன்றுதான். அது தம்மை ஒருவிடுதலைப் போராட்ட அமைப்பாக உருவாக்கி தனிநாட்டிற்கான வரைபினை வரைவது மட்டும்தான், நீங்கள் சிறிமாவின் கூட்டத்தில் பங்கேற்க எந்தத் தேவையுமில்லை என்று அவர்கள் வாதாடினர். தமிழ் இளைஞர் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் எந்தவொரு அரசியற் கட்சியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடக் கூடாதென்றும், தனிநாட்டினை உருவாக்கும் செயற்பாடுகளில் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று கேட்டிருந்தது. தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளை இந்தப் பிரச்சினையினை தந்தை செல்வாவின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தது. சுமார் 79 வயது நிரம்பிய, அனுபவம் மிக்க சிவில் வழக்கறிஞரான தந்தை செல்வா தன்னைச் சந்திக்க வந்திருந்த தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்களிடம் பின்வருமாறு கூறினார்.
-
யாழில் இந்தியாவை பிரதிபலித்து பறக்கவிடப்பட்ட பட்டங்கள் !
ரஞ்சித் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இந்தியா எமக்கான தீர்வைத் தரப்போவதில்லை அல்லது தர விடப்போவதில்லை என்பது தெரிந்தும் தமிழர்கள் ஏன் இன்னும் இந்தியாவின் பின்னால் அலைய வேண்டும்? அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் இப்போது கூட இந்தியா இலங்கையின் பக்கமே நிற்கும் என்று கூறியிருக்கிறார். இலங்கையைக் காப்பாற்றி, தான் இலங்கைக்கு நெருக்கமான நாடு என்று காட்டுவதில் இருக்கும் அக்கறை, தானே முன்னின்று செய்த 1987 ஆம் ஆண்டு உடன்படிக்கையினை முற்றாக அமுல்ப்படுத்துங்கள் என்று இலங்கையிடன் கோருவதில் இந்தியாவுக்கு இல்லை என்பது பலமுறை வெளிப்படுத்தப்பட்டு விட்டது, ஆனால் நாம் இன்னமும் தந்தையர் நாடு என்று சொல்லிக்கொண்டு நிற்கிறோம். -
இன்னொரு இறையாண்மையுள்ள நாட்டின்மீது ஆக்கிரமிப்புப்போர் ஒன்றினைக்ன்கட்டவிழ்த்துவிட்டு அம்மக்களை மீட்கவே அவர்களைக் கொல்கிறேன் என்று கூறும் ரஸ்ஸியாவிற்கும், தமிழினத்தை இனவழிப்புச் செய்துகொண்டே மபிதாபிமான மீட்பு நடவடிக்கை என்று கூறும் இலங்கைக்கும் அதிக வேறுபாடில்லை. அப்படியானால் ரஸ்ஸியா எந்தப்பக்கம் என்று புரிந்துகொள்வது கடிணமாக இருக்காது. ஆனால் என்ன, ரஸ்ஸியாவை நியாயப்படுத்த வெளிக்கிட்டால், இலங்கை செய்வதையும் நியாயப்படுத்தவேண்டி வரும். அதையும் செய்வோம்!
-
கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல்த் தலைவர்கள் மக்களைப் போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தும் முகமாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களான அமிர்தலிங்கம், வி.என்.நவரட்ணம், கே.பி.ரட்ணம், கே.துரைரட்ணம் , எம்.சிவசிதம்பரம் ஆகியோர் வைகாசி 21 ஆம் திகதி யாழ்ப்பாண பேரூந்து நிலையத்தில் கூடி மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததோடு, மறுநாள் நடைபெறவிருந்த குடியரசு தின நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். பொலீஸார் அவர்களைக் கைதுசெய்தனர். பன்னாலையிலிருந்த அவரது வீட்டிற்கு அமிர்தலிங்கத்தை அழைத்துச் சென்ற பொலீஸார் அவரது வீட்டைச் சோதனை செய்தனர். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தேசியப் பிரச்சினையாகக் காட்டிய பிரதமர் சிறிமாவும் அவரது அரசாங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தனிநாட்டினை உருவாக்க முயல்வதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். வைகாசி 23 ஆம் திகது தம்புள்ளை மகாவித்தியாலயத்தில் சிங்களவர்களிடம் பேசிய சிறிமா சமஷ்ட்டிக் கட்சியினர் பல்லாண்டுகளாக தனிநாட்டிற்காகப் பிரச்சாரம் செய்துவருவதாகவும் நாட்டில் ஒற்றுமையின்மையினை ஏற்படுத்த முயன்றுவருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நாட்டின் குடியரசு யாப்பினைக் காக்கவும், நாட்டின் அமைதியினைக் காக்கவும் மிகக்கடுமையான நடவடிக்கைகளை தான் எடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார். ஜி ஜி பொன்னம்பலம் தமிழரிடையே பிரிவினையினை உண்டாக்க நினைத்த அரசாங்கம், சிவசிதம்பரத்தை விடுதலை செய்ததுடன், ஏனைய தமிழ்த் தலைவர்களை உயர் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தியது. மேலும், தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு தலைவர்களையும் ஜூரிகளின் முன்னால் நிறுத்துவதைத் தவிர்த்து மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நிறுத்தி விசாரிக்கத் தீர்மானித்தது. இது, தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களுக்கான தமது ஆதரவினைக் காட்டக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் குடியரசு யாப்பின் நியாயத்தன்மையினைக் கேள்விகேட்கும் சந்தர்ப்பத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இந்த நான்கு தமிழ் தலைவர்களுக்கு ஆதரவாக வாதாட ராணியின் ஆணை பெற்ற வழக்கறிஞர் ஜி ஜி பொன்னம்பலம் உட்பட 61 வழக்கறிஞர்கள் முன்வந்தார்கள். தமது பிரதான ஆட்சேபணையாக அவசரகாலச் சட்டத்தினை தவறானது என்று வாதாடிய வழக்கறிஞர்கள் குடியரசு யாப்பின் அடிப்படையில் நான்கு தலைவர்களும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுவது செல்லுபடியற்றது என்று வாதாடியதோடு, அவர்கள் நால்வர் மீதும் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாகவும் கூறினர். "சட்டத்திற்குப் புறம்பான குடியரசு யாப்பின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டிருப்பதால் எனது கட்சிக்காரர்கள் எந்தவிதத்திலும் குற்றமற்றவர்கள் என்று கூறுகிறேன்" என்று வாதிட்டார் ஜி ஜி பொன்னம்பலம் . அவசரகாலச் சட்டத்தினை குடியரசு யாப்பில் அரசு குறிப்பிட்ட விதத்தில் இருந்த தவறினைப் பயன்படுத்தியே பொன்னம்பலம் இந்த வழக்கு தவறானது என்று வாதிட்டார். வைகாசி 22 வரை அமுலில் இருந்த சோல்பரி யாப்பின்பிரகாரம் ஆளுநரே அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்த முடியும். ஆனால், குடியரசு யாப்பின்படி பிரதமர் இதனைச் செய்ய முடியும் என்று இருந்தது. சோல்பரி யாப்பின் இறுதிநாளும், குடியரசு யாப்பின் ஆரம்பநாளும் ஒரே நாளான வைகாசி 22 ஆக குறிப்பிடப்பட்டிருந்தமையினால், இக்கைதுகள் செல்லுபடியற்றதாகிவிடும் என்று பொன்னம்பலம் மிகவும் திறமையாக வாதாடியிருந்தார். ஆகவே, அவசரகாலச் சட்டத்தினைப் பாவித்து வைகாசி 22 இற்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படியவேண்டியவர்கள் என்கிற நிலை உருவாகியது. இந்த விசாரணையின் இரண்டாவது ஆட்சேபணைப் பகுதியில் வாதாடிய திருச்செல்வம் குடியரசு யாப்பின்படி அமைக்கப்பட்ட இந்த நீதிமன்ற வழக்கு செல்லுப்படியற்றது என்று வாதாடினார். அவர் தனது வாதத்தினை இரு முனைகளூடாக முன்வைத்தார். முதலாவதாக சோல்பரி யாப்பு சிறு மாற்றங்களைச் செய்யவே அனுமதியளித்திருந்ததுடன், முற்றான யாப்பு மாற்றத்திற்கு ஆங்கீகாரம் வழங்கியிருக்கவில்லை என்று கூறினார். ஆனால், எதிர்த்து வழக்காடிய அரசு தரப்பு வழக்கறிஞர் சிவா பசுபதி, நடைமுறை அரசான ஐக்கிய முன்னணி மக்களிடமிருந்து யாப்பில் பெருமளவு மாற்றங்களைக் கொண்டுவரும் ஆணையினைப் பெற்றிருப்பதாக வாதாடினார். இதற்குப் பதிலளித்து வாதாடிய திருச்செல்வம், யாப்பினை மாற்றுவதென்பது கைதுசெய்யப்பட்ட தலைவர்களின் போராட்ட நோக்கங்களில் ஒன்றாக இருக்கவில்லை என்று கூறினார். திருச்செல்வம் முன்வைத்த இரண்டாவது வாதம் முக்கியமானது. அரசாங்கம் கூறுவதுபோல அரசியலமைப்பினை முற்றாக மாற்றுவதற்கு மக்களின் ஆணையினைப் பெற்றிருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும்கூட, அது தனியே சிங்கள மக்களின் ஆணை மட்டுமே அன்றி, தமிழ் மக்களின் ஆணை அல்ல என்று அவர் கூறினார். மேலும் தமிழ்மக்கள் தனிநாட்டிற்கான தேவையினை உணரத் தொடங்கிவிட்டதாகவும் 1956 ஆம் ஆண்டிலிருந்து சமஷ்ட்டி முறையிலான தீர்வொன்றிற்காக அவர்கள் தொடர்ச்சியாக வாக்களித்து வருவதாகவும் அவர் கூறினார். பொன்னம்பலம் முன்வைத்த முதலாவது வாதத்தினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன் அவசரகாலச் சட்டம் வைகாசி 22 உடன் முடிவிற்கு வரவேண்டும் என்றும், கைதுசெய்யப்பட்ட அரசியல்த் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கூறியது. இதே தீர்மானத்தில், குடியரசு யாப்பின் நியாயத்தன்மைபற்றிய கேள்விகளை அது நிராகரித்திருந்தது. நீதியற்ற குடியரசு யாப்பின் பிரகாரம் அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றத்திற்கு அந்த யாப்பின் நியாயத்தன்மைபற்றி விசாரிக்கும் உரிமை இல்லை என்று அது கூறியது. யாப்பினைக் கேள்விகேட்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என்று நழுவியதன் மூலம் தமிழர்களின் நலன்களைக் காக்கும் தேவையோ அல்லது அதிகாரமோ இலங்கையின் நீதித்துறைக்குக் கிடையாது என்பது அம்பலமாகியது. ஆனால், இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அரச தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்றத் தீர்ப்பின்மூல இலங்கையின் சட்டத்துறை தொடர்பாக தமிழர்கள் தவறான கருத்தினைக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதனால், இத்தீர்ப்பு மாற்றப்படவேண்டும் என்று முறையிட்டிருந்தார். மேலும், அவசர காலச் சட்டத்தினைப் பயன்படுத்தி இலங்கையின் காவல்த்துறையும், இராணுவமும் வடக்கில் பல கிளர்ச்சியடக்கும் நடவடிக்கைகளை எடுத்துவருவதால், இத்தீர்ப்பின்மூலம் இச்செயற்பாடுகள் பாதிப்படையலாம் என்றும் வாதிட்டார். அதன்படி நீதியரசர் விக்டர் தென்னாக்கோன் தலைமையில் கூடிய ஐந்து நீதியரசர்கள் அடங்கிய உச்ச நீதிமன்றக் குழு, உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்து அரசுக்குச் சார்பாக தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு மாசி 1977 ஆம் ஆண்டுவரை நடைபெற்று வந்தது. இதனால் விடுதலைப் போராட்டம்பற்றிய எண்ணத்தினையே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் முற்றாக மறந்துவிட்டிருந்தனர். ஆனால், ஆயுத அமைப்புக்கள் போராட்டம் தொடர்பாக தொடர்ச்சியாகச் செயற்பட்ட வண்ணமே இருந்தனர். வட்டுக்கோட்டைத்தீர்மானம் தொடர்பாக அவர்கள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தனர். போராட்டத்தை ஆரம்பிப்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர். இதற்கான ஆயத்த வேலைகளில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். பணத்தினைச் சேர்த்தல், ஆயுதங்களைச் சேகரித்தல், போராளிகளைச் சேர்த்தல், பயிற்சியளித்தல் என்று பல முனைகளில் அவர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தனர். 1976 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஆயுத அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர்களைத் தேடுவதை பொலீஸார் முடுக்கிவிட்டிருந்தனர். இளைஞர் அமைப்புக்களை அடியோடு அழித்துவிடுங்கள் என்று அமைச்சர் செல்லையா குமாரசூரியர் பொலீஸார் மீது அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார். வெள்ளவத்தையில் அமைந்திருந்த தனது வீட்டில் குமாரசூரியர், பஸ்த்தியாம்பிள்ளை மற்றும் பத்மனாதன் ஆகியோருடன் பல ரகசிய திட்டமிடும் கூட்டங்களை நடத்தியிருந்தார். தமது நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருவதை ஆயுத அமைப்புக்களின் இளைஞர்கள் உணரத் தலைப்பட்டனர். பிரபாகரனும் தனது மறைவிடங்களை அடிக்கடி மாற்றவேண்டியிருந்தது. ஆகவே, பொலீஸ் வலையமைப்பினை அழிக்கவேண்டிய தேவை இளைஞர்களுக்கு ஏற்பட்டது. பிரபாகரன் எப்படியாவது ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்துவிட வேண்டும் என்று விரும்பியிருந்தார். அமிர்தலிங்கத்தையும், நவரட்ணத்தையும் அவர் தொடர்ச்சியாக சந்தித்து போராட்டத்தினை முன்னெடுக்கும்படி கேட்டுவந்தாலும்கூட, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போராட்டம் பற்றி உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் அவர் அறிந்தே வைத்திருந்தார். ஆகவே, தனது அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுதப் போராட்டத்திற்கு தயார்ப்படுத்தி வைத்திருந்தார். இதன் முதற்கட்டமாக இருவிடயங்களைச் செய்ய அவர் தீர்மானித்தார். முதலாவது பொலீஸ் அதிகாரிகள் பஸ்த்தியாம்பிள்ளை மற்றும் பதமனாதன் ஆகியோரால் பின்னப்பட்டிருக்கும் உளவாளிகளின் வலையினை அழிப்பது. இரண்டாவது, துரையப்பாவின் கொலையினை விசாரிக்கும் பொலீஸ் அதிகாரிகளைக் கொல்வது மற்றும் இளைஞர் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வரும் அதிகாரிகளைக் கொல்வது. பொலீஸாருக்குத் தகவல் வழங்கும் உளவாளிகளையும், விசாரிக்கும் அதிகாரிகளையும் பற்றிய தகவல்களைச் சேகரிக்க தனது அமைப்பில் உளவுப் பிரிவொன்றை அவர் உருவாக்கினார். தனது போராளிகளுக்கான பயிற்சிகளின்போது உளவுத்தகவல்களைச் சேகரிக்கும் விதத்தினையும் அவர் கற்றுக்கொடுத்தார். புதிதாக இணையும் போராளிகள் தாக்குதல் அமைப்புக்களில் சேர்க்கப்படுமுன்னர் உளவுத்தலகவல்களைச் சேகரிப்பதில் ஈடுபடுத்தப்பட்டார்கள். பொலீஸாருக்குத் தகவல் கொடுக்கும் உளவாளிகளில் பிரபாகரன் முதலாவதாகக் கொல்லத் தீர்மானித்தவரின் பெயர் என். நடராஜா. இவர் உரும்பிராய் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றினை நடாத்தி வந்ததுடன், சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வந்தார். இவரை பிரபாகரன் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், போராளி சிவகுமாரன் பற்றிய தகவல்களை பொலீஸாருக்கு வழங்கியது இவரே. தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலவாது கொலை அதுதான் என்பது குறிப்பிடத் தக்கது. பிரபாகரன் தனது அமைப்பின் இரு உறுப்பினர்களை இந்த நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தார். நடராஜாவின் வீட்டிற்குச் சென்ற அந்த உறுப்பினர்கள் இருவரும் அவரை வெளியே வரும்படி அழைத்து அங்கேயே சுட்டுக் கொன்றனர். இந்த நடவடிக்கையே 1977 ஆம் ஆண்டில் தமிழ் மக்களை விடுதலை வேட்கை நோக்கி நகர்த்தியதுடன், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தமிழ் மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு தமிழீழத்தை அமைப்பதற்கான ஆணையினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கினர்.
-
தமிழர் மீது சிங்களத்தால் பிரயோகிக்கப்பட்ட பாகுபாடுகள் மக்கள் முன் பேசிய சிவசிதம்பரம் ஒன்பது விதமான பாகுபாடுகளை சிங்களவர்கள் சுதந்திரகாலத்திலிருந்து தமிழர்மேல் கட்டவிழ்த்துள்ளதாகக் குறிப்பிட்டார். அவையாவன, 1. தமிழ் மக்களின் ஒரு பிரிவினருக்கான பிரஜாவுரிமையினை இரத்துச் செய்ததன்மூலம் பாராளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினைக் குறைத்தது. 2. அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பலவந்தமான நிலப்பறிப்புக்கள் ஊடாக தமிழர் தாயகத்திலேயே தமிழரை சிறுபான்மையினராக மாற்றுவது. 3. சிங்கள மொழியை தனி ஆட்சி மொழியாக நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழுக்கான அந்தஸ்த்து வெகுவாகக் குறைக்கப்பட்டு தமிழ் மக்களும் இரண்டாம்தரப் பிரஜைகளாக ஆக்கப்பட்டுள்ளமை. 4. பெளத்த மதத்திற்கு அரச யாப்பின்மூலம் உயரிய அந்தஸ்த்துக் கொடுக்கப்பட்டமையானது நாட்டிலுள்ள ஏனைய மதங்களான சைவம், கிறிஸ்த்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்கள் இரண்டாம் நிலைக்கு இறக்கப்பட்டிருப்பது. 5. தமிழருக்கு வேலைவாய்ப்பு, கல்வி, காணிப்பங்கீடு மற்றும் பொருளாதாரத்தில் அவர்களுக்கான பங்கீடு ஆகியவற்றை வேண்டுமென்றே குறைத்ததன் மூலமும், தமிழ்ப் பிரதேசங்கள் வேண்டுமென்றே அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வருவதும் இலங்கையில் தமிழரின் இருப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளமை. 6. தமிழ் கலாசாரம் செழித்தோங்கி வளரும் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைத் தமிழரை முற்றாக தனிமைப்படுத்தியிருப்பதன் மூலமும், இலங்கையில் தமிழ் கலாசாரத்தை வளர்ப்பதற்கு முட்டுக்கட்டைகள் போட்டுவருவதன் மூலமும் திட்டமிட்ட ரீதியில் தமிழ் இனவழிப்பொன்றினை நடத்திவருவது. 7. தமிழ் பேசும் மக்கள் மீது தொடர்ச்சியான அரச ஆதரவுடனான வன்முறைகள் 1956 ஆம் ஆண்டில் கொழும்பு மற்றும் அம்பாறை (அழகிய பாறை) ஆகிய இடங்களிலும், 1958 ஆம் ஆண்டு நாடுமுழுவதிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களும் , 1961 ஆம் ஆண்டில் ராணுவத்தால் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளும், 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழராய்ச்சி மாநாட்டில் பொலீஸார் மிருகத்தனமாக தமிழர்களைப் படுகொலை செய்தமையும், 1976 ஆம் ஆண்டு தமிழ்பேசும் முஸ்லீம்கள் மீது புத்தளத்தில் பொலீஸார் நடத்திய தாக்குதல்களும் தமிழ்பேசும் மக்களை தொடர்ச்சியான அச்சநிலையில் வைத்திருப்பதன் மூலம் தமக்கெதிரான இன அடக்குமுறைகளுக்கெதிராக அவர்கள் கிளர்ந்தெழாவண்ணம் இருக்கவே செய்யப்பட்டு வருகின்றன. 8. தமிழ் இளைஞர்களை சகட்டுமேனிக்குக் கைதுசெய்து, அடைத்துவைத்துச் சித்திரவதை செய்வதும், காரணமேயின்றி அவர்களை நீண்டநாட்கள தடுத்து வைத்திருப்பதும். 9. இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், இனவாதிகளால் வரையப்பட்ட 1972 ஆம் ஆண்டு குடியரசு யாப்பின் மூலம் அதற்கு முன்னர் இருந்த சோல்பரி யாப்பினூடாக தமிழருக்குக் கிடைத்த மிகச்சொற்ப உரிமைகளைக் கூட முற்றாக இல்லாதொழித்து, தமிழ்த் தேசத்தின்மீது மிகக்கடுமையான சட்டங்களைப் பிரயோகித்தும், தமிழரின் ஒரு பகுதியினருக்கான பிரஜாவுரிமையினை இரத்துச் செய்ததன் மூலம் தமிழரின் அரசியல்ப் பலத்தைச் சிதைத்தும் பாராளுமன்றத்தில் சிங்களவர்களுக்கு மிகப்பெரும் பலத்தினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை. அமிர்தலிங்கத்தின் உரையே மிகவும் கடுமையானதாகவும், சிங்களவர்களைச் சீண்டும் வகையிலும் அமைந்திருந்தது. இளைஞர்களை உணர்வேற்றக்கூடிய வகையிலேயே தனது உரையினை அவர் வடிவமைத்திருந்தார். தனது உரையின் முதலவாது பகுதியில் தமிழரின் பண்டைய புகழ்பற்றியும், வீரம் பற்றியும் பேசினார். தமிழர்கள் ஒரு இறையாண்மையுள்ள இனமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய ஒரு சுதந்திர தேசத்தில் வாழ்ந்தார்கள் என்று கூறினார். சரித்திர காலம்தொட்டே தமிழரும் சிங்களவரும் இந்த நாட்டினை பிரித்து தமக்கான ஆளுகைப் பிரதேசங்களை ஆண்டுவந்ததாக அவர் கூறினார். வடக்கும் கிழக்கும் தமிழரால் ஆளப்பட மேற்கும் தெற்கும் சிங்களவரால் ஆளப்பட்டதாக அவர் கூறினார். அவ்வப்போது தமது எல்லைகளை மீறி, தமிழரை ஆக்கிரமிக்க சிங்களவர்கள் எடுத்த முயற்சிகளையெல்லாம் தமிழர்கள் முறியடித்து, மீண்டும் சிங்களவர்களை தமது முன்னைய நிலைகளுக்கே தள்ளிவிட்டதாக அவர் கூறினார். யாழ்ப்பாண இராச்சியம் அதன் பலமான காலமான கி பி 1350 இலங்கையில் போர்த்துக்கீசர்கள் 1505 இல் வந்திறங்கியபோது தமிழர்கள் சுதந்திரமான நாட்டில் வாழ்ந்துவந்தார்கள். யாழ்ப்பாண இராச்சியம் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. நாட்டின் தென்பகுதி கோட்டே இராச்சியத்தின் கட்டுப்பாட்டின்கீழும், மத்திய மலைநாட்டுப்பகுதி கண்டிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டின் கீழும் இருந்தது. 1619 ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கீசர்களிடம் வீழ்ந்தது. கோட்டே இராச்சியம் அதற்குமுன்னர் போர்த்துக்கீசர்களால் கைப்பற்றப்பட்டிருந்தது. அவர்களால் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்ற முடிந்திருக்கவில்லை. தம்மால் கைப்பற்றப்பட்ட தமிழ் மற்றும் சிங்கள தேசத்தின் இரு பகுதிகளையும் போர்த்துக்கீசர்கள் தனித்தனியாகவே ஆட்சிசெய்து வந்தார்கள். இதன்மூலம் இவ்விரு இனங்களினதும் தனித்துவ அடையாளம் பாதுகாக்கப்பட்டிருந்தது. போர்த்துக்கீசரிடமிருந்த பகுதிகளை ஒல்லாந்தர் கைப்பற்ற, பின்னர் அவர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் அவற்றினைக் கைப்பற்றினர். ஆனால் ஒல்லாந்தர்கூட தமிழ் சிங்கள பிரதேசங்களைத் தனித்தனியாகவே ஆண்டு வந்தனர். ஆனால், 1833 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட கோல்புறூக் கமிஷனின் ஆலோசனையின்படி ஆங்கிலேயர்கள் தமிழ்ப் பிரதேசங்களையும் சிங்களப் பகுதிகளையும் ஒன்றாக இணைத்தார்கள். நிர்வாகத்தினை இலகுவாக்குவதற்காக அவர்கள் இதனைச் செய்திருந்தார்கள். 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு சுந்தந்திரம் வழங்கியபோது தமிழர்களின் பிரதேசத்தை தமிழர்களிடமும், சிங்களவரின் பகுதிகளை சிங்களவர்களிடமும் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அவர்கள் முழு நாட்டினையும் சிங்களவர்களிடமே கொடுத்தார்கள். இன்று, சிங்களவர்கள் தமது சனத்தொகைப் பலத்தினைப் பாவித்து தமிழரின் தேசத்தை சிதைத்து, தமிழர்களைச் சிறுபான்மையினராக்கி, இரண்டாம்தரப் பிரஜைகளாக்கியிருக்கிறார்கள். அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தனது பேச்சின் இரண்டாம் பாகத்தினை தாம் முன்வைக்கும் தமிழருக்கான தமிழீழம் எனும் சுதந்திர தேசம் எப்படி அமையப்போகிறது என்பதுபற்றிப் பேசுவதற்காக வடிவமைத்திருந்தார். அந்தத் தேசம் வடக்குக் கிழக்கு மாகாணங்களைக் கொண்டிருக்கும். வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்கள் அத்தேசத்தின் குடிமக்களாக இருப்பார்கள். இலங்கையின் எப்பாகத்திலும் வாழும் தமிழர்களும், உலகில் எப்பகுதியில் வாழும் தமிழர்களும் இத்தேசத்தில் குடிமக்களாக விண்ணப்பிக்கும் தகமையுடையவர்கள் ஆகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமயத்தைப் பின்பற்ற விரும்புபவர்களோ அல்லது குறிப்பிட்ட பகுதியில் வாழ விரும்புகிறவர்களோ வேறு எவரின் அழுத்தமும் இன்றி வாழும் சுதந்திரத்தைக் கொண்டிருக்கும் இந்தத் தேசம் ஜனநாயகரீதியில் செயற்படுவதோடு அதிகாரம் அனைத்துப் பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும். இத்தேசம் மதச்சார்பற்ற சோசலிச தேசமாக இயங்கும். இத்தேசத்தின் உத்தியோகபூர்வ மொழி தமிழாக இருக்கும். மேலும், இங்குவாழும் சிங்களவர்களுக்கான உரிமைகள் சிங்கள தேசத்தில் வாழும் தமிழ்பேசும் சிறுபான்மை மக்களுக்கிருக்கும் உரிமைகளுக்கு ஒத்ததாக இருக்கும். இறையாண்மையுள்ள தமிழருக்கான தனிநாட்டினை உருவாக்கும் திட்டத்தினை தாம் உடனடியாக ஆரம்பிக்கப்போவதாகவும், தாயகத்தை மீடகப்போகும் போராட்டத்திற்கு தமிழ் இளைஞர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பெருந்தொகையான இளைஞர்கள் உச்சஸ்த்தானியின் பின்வருமாறு கோஷமிட்டனர், "நீங்களே எங்கள் தளபதி". "விடுதலைப் போராட்டத்திற்கான திகதியை அறிவியுங்கள்". "நாங்கள் எங்கள் உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறோம்". உணர்ச்சி மேலீட்டால் உந்தப்பட்ட இளைஞர்கள் ஓடிச்சென்று அமிர்தலிங்கத்தைத் தமது தோள்களில் சுமந்துகொண்டு, நீங்களே எங்கள் தளபதி, இப்போதே ஆணை வழங்குங்கள் என்று கோஷமிட்டனர். பிரபாகரன், உமாமகேஸ்வரன் உட்பட்ட பல ஆயுத அமைப்புக்களின் தலைவர்கள் வட்டுக்கோட்டைப் பிரகடணத்தில் பிரசன்னமாகியிருந்தனர். தமிழர் ஐக்கிய முன்னணியினரின் பிரதிநிதிகளுக்கான கூட்டமாக அது ஒழுங்குசெய்யப்பட்டிருந்தாலும் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். பலர் ஊர்களுக்கு ஊர்வலமாகச் சென்ற இளைஞர்கள் தமிழ் ஈழம் கோரி கோஷமிட்டபடி சென்றனர். பிரகடணம் செய்யப்பட்ட இடத்திற்கு வாயிற்காவலர்கள் அமர்த்தப்பட்டிருந்தபோதும்கூட, இளைஞர் கூட்டத்தை ஏதும் செய்யாது இருந்துவிட்டார்கள். அம்மைதானத்தைச் சுற்றிவந்த இளைஞர்கள், "எமக்குத் தமிழ் ஈழமே வேண்டும். அதனை மீட்டெடுக்க எமது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறோம்" என்று அவர்கள் உணர்வுபொங்க உரக்கமிட்டனர். தமிழ் இன உணர்வெழுச்சி அப்பிரதேசங்கும் நிறைந்திருந்தது. இப்படியான நிகழ்வினை யாழ்ப்பாணக் குடாநாடு இதற்கு முன்னர் ஒருபோதும் கண்டிருந்ததில்லை. தொடர்ந்து பேசிய அமிர்தலிங்கம் தனிநாட்டிற்கான ஆணையினை மக்கள் தந்துள்ளதனால், இப்போராட்டத்தினை முன்னெடுக்க தமது கட்சியான தமிழர் ஐக்கிய முன்னணி இனிமேல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்று அழைக்கப்படும் என்று கூறினார். "நாம் இப்போது ஒரு விடுதலை அமைப்பு" என்று தளபதி அமிர்தலிங்கம் முழங்கினார். பதிலுக்கு உரத்த குரலில் கோஷமிட்ட இளைஞர்கள் "நாம் விடுதலைப் போராட்டத்திற்குத் தயாராகி வீட்டோம், இப்போதே ஆரம்பியுங்கள்" என்று கூறினார். விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் செயற்குழு உடனடியாகச் செயற்பட்டு விடுதலைப் போராட்டத்தினை ஆரம்பிப்பதற்கான திட்டத்தினை வரையப்போகிறது என்று இளைஞர்கள் எதிர்பார்த்திருந்தனர். எதிர்பார்த்தபடியே கூடிய செயற்குழு நீண்டநேர ஆலோசனைகளுக்குப் பின்னர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின விளங்கப்படுத்தி துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டதுடன் குடியரசு தின கொண்டாட்டங்களை புறக்கணிக்குமாறும் தமிழ் மக்களைக் கேட்டிருந்தது. இளைஞர்களுக்கு இது ஏமாற்றத்தினைக் கொடுத்தது. அமிர்தலிங்கத்தைச் சந்திக்கச் சென்ற இளைஞர்கள் சிலர் "நீங்கள் உறுதியளித்த விடுதலைப் போராட்டம் இதுதானோ?" என்றும் கேட்டனர். "பொறுமையாக இருங்கள், நாம் முதலில் மக்களைப் போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தவேண்டும்" என்று தன்னைச் சந்திக்க வந்திருந்த இளைஞர்களுக்கு பதிலளித்தார் அமிர்தலிங்கம்.
-
பொங்கல் நாள் ஆர்ப்பாட்டமும் பிரதம அதிதிகளும் யாழ்ப்பாணத்தில் பொங்கல்நாளன்று ரணிலின் வருகையினை ஒட்டி காணாமலாக்கப்பட்ட இளைஞர் யுவதிகளின் பெற்றோரும் உறவினரும் பல்கலைக்கழக மாணவர்களோடு இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை நடத்தியிருந்தார்கள். எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது, எங்களது காணிகளை விட்டு வெளியேறு என்பனவே அவர்கள் முன்வைத்த கோஷங்களாக இருந்தன. ஆனால், இதனைத்தடுத்து நிறுத்திய பொலீஸார் மக்கள் மேல் நீர்த்தாரைப் பிரயோகம் நடத்தியதுடன், பேரணியையும் கலைத்தார்கள். இதே நாள், யாழ்ப்பாணத்தின் இன்னொரு பகுதியில், இதே மக்கள் கூட்டத்தின் இன்னொரு பகுதியினர் பொங்கல் நாளைச் சிறப்பாகக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். தலைவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் வருடாந்த பட்டமேற்றும் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டதுடன், பகல் 1 மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்விற்கு காங்கேசந்துறை சிறிலங்கா காவல்த்துறையின் அதிகாரி பிரதம விருந்தினராக மாலை, பொட்டுகள், மேளதாளங்களுடன் ஏற்பாட்டாளர்களால் வரவேற்று அழைத்துவரப்பட்டு, மேடையில் வீற்றிருக்கச் செய்யப்பட்டார். இடையிடையே ஒலிபெருக்கியில் அவரை வாழ்த்தி நன்றியும் தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் போராடிய மக்கள் கூட்டத்தின் சமூகத்தைச் சேர்ந்த இன்னொரு கூட்டம், யாழ்ப்பாணத்தில் தமது மக்களைத் தாக்கிய காவல்த்துறையின் அதிகாரியொருவரை பிரதம விருந்தினராக அழைத்து மகிழ்ந்தது. இதேவேளை, யாழ் பரியோவான் கல்லூரியின் 175 ஆவது (சரியாக எத்தனை ஆண்டுகள் என்று தெரியவில்லை) ஆண்டு நிறைவினையொட்டி அக்கல்லூரி மிகப்பெரும் கொண்டாட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்திருக்கிறது. அந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக இனக்கொலை ராணுவத்தின் ஜெனரல் ஒருவர் கல்லூரி நிர்வாகத்தினால் அழைக்கப்பட்டிருக்கிறார். எனது கேள்வியென்னவென்றால், தமிழரில் இந்த நிகழ்வுகளுக்கு அழைக்கப்படத் தகுதியுடைய ஒருவரும் இல்லையா என்பது முதலாவது. இரண்டாவது, எம்மை ஒரு பக்கம் துன்புருத்தி, அடிமைப்படுத்தி இன்றுவரை ராணுவ ஆக்கிரமிப்பினுள் வைத்திருக்கும் சிறிலங்கா ராணுவ காவல்த்துறையினருக்கெதிராக எம்மில் ஒரு பகுதியினர் ஆர்ப்பாட்டம் செய்துவரும் வேளையில், இன்னொரு பகுதியினர் அதே போர்க்குற்றவாளிகளை தமது நிகழ்வுகளுக்கு பிரதம அதிதிகளாக அழைப்பது வெளியுலகிற்கு எவ்வகையான செய்தியை அனுப்பப்போகிறது என்பதுதான்.
-
உறுதிசெய்யப்பட்ட மக்கள் ஆணை வட்டுக்கோட்டைத் தீர்மானம் பிரபாகரன் தனது அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை ஸ்த்தாபித்து சரியாக 9 நாட்களின் பின்னர் தமிழர் ஐக்கிய முன்னணி தனது தேசிய மாநாட்டினை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, பண்ணாகத்தில் நடத்தியது. 1975 ஆம் ஆண்டு, மாசி மாதம் 6 ஆம் திகதி காங்கேசந்துறை இடைத்தேர்தலில் தந்தை செல்வாவுக்கு மக்கள் வழங்கிய ஆணையான தமிழருக்கான தனிநாடு எனும் முடிவினை, தமிழர் ஐக்கிய முன்னணியினர் 1976 ஆம் ஆண்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் உறுதிப்படுத்தினர். வட்டுக்கோட்டைத் தீர்மானம் பின்வருமாறு பிரகடணம் செய்திருந்தது, "இலங்கையில் தமிழ் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்தவும், பாதுகாக்கவும் உலகில் அனைத்து தேசங்களுக்கும் இருக்கும் உரிமையான சுயநிர்ணய உரிமையினைப் பாவித்து தமிழ் ஈழம் எனும் சோசலிச, மதச்சார்பற்ற, இறையாண்மையுள்ள, சுதந்திரமான தனிநாட்டினை உருவாக்குவோம்". சுமார் 21 பந்திகளைக் கொண்ட நீண்ட தீர்மானத்தின்படி தமிழர்கள் தனிநாட்டிற்குத் தேவையான அனைத்து இலக்கணங்களையும் கொண்டிருப்பதால் தனிநாட்டினை அமைப்பதற்கான உரிமையுடையவர்கள் என்று கூறியிருந்தது 1976 ஆம் ஆண்டு, வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் தனது வருடாந்த மாநாட்டினை நடத்திய தமிழர் ஐக்கிய முன்னணி இத்தால் பிரகடணம் செய்வது யாதெனில், இலங்கைத் தமிழராகிய நாம் எமது மேன்மையான மொழியினையும், மதங்களையும், கலாசாரத் தொன்மையினையும், சுதந்திரமான தேச வரலாற்றையும் கொண்டு நமக்கே உரித்தான பூர்வீகத் தாயகத்தில் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வருகிறோம் என்றும், அந்நியரின் ஆயுதரீதியிலான ஆக்கிரமிப்பிற்கான காலம் வரைக்கும் நமது தாயகத்தில் நம்மை நாமே ஆண்டு வந்தோம் என்றும், எமது தேசம் சிங்கள தேசத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட தேசம் என்றும் பிரகடணம் செய்வதோடு, 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பின் மூலம் தமிழர்களாகிய எம்மை புதிய காலணித்துவம் ஆளும்வர்க்கமான சிங்களவர்கள் அடிமைப்படுத்த முயல்வதையும், தமது அதிகாரத்தினைப் பாவித்து தமிழ் தேசத்திற்கு உரித்தான தாயகப் பரப்பு, தமிழ் மொழி, பிரஜாவுரிமை, பொருளாதார வாழ்வு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு ஆகியவற்றில் தமிழரை வஞ்சித்து வருவதையும் இத்தால் முழு உலகிற்கும் கூறிக்கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது. அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் தந்தை செல்வா அவர்கள் தீர்மானத்தினை முன்மொழிய, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் உறுப்பினரான சிவசிதம்பரம் தீர்மானத்தினை வழிமொழிந்தார். மாநாட்டில் பேசிய செல்வா, பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழருக்கான நீதியான தீர்வினைப் பெற்றிட அயராது உழைத்தவன் என்கிற ரீதியில் தான் இத்தீர்மானத்தினை சமர்ப்பிக்கும் தகுதியைப் பெற்றிருப்பதாகக் கூறினார். அதேவேளை, "நான் தோற்றுவிட்டேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்ட்டி முறையிலான தீர்வின் அடிப்படையில் 1948 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பல அரசியல் தீர்வுகளை சிங்களத் தலைவர்களிடம் முன்வைத்து வந்திருக்கிறேன். ஆனால், அவை எல்லாவற்றையும் அவர்கள் நிராகரித்து விட்டார்கள். இரு ஒப்பந்தங்கள் ஊடாகவும், பல தொடர்ச்சியான ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் மூலமாகவும் அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படைகளை நான் இட முயன்றேன். அதுகூட தோல்வியில் முடிவடைந்துவிட்டது. நமக்கு முன்னால் இப்போது இருக்கும் ஒரே தெரிவு இலங்கையிலிருந்து பிரிந்துசென்று எமக்கான தனிநாட்டினை உருவாக்கிக்கொள்வது மட்டும்தான்" என்றும் அவர் கூறினார் தந்தை செல்வா அவர்கள் இந்த மாநாட்டில் உரையாற்றும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராகக் காணப்பட்டார். இரு பிரதம மந்திரிகளுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் குறித்து அவர் பேசினார். முதலாவதாக S W R D பண்டாரநாயக்காவுடன் 1957 இல் ஒரு ஒப்பந்தத்தினை அவர் கைச்சாத்திட்டிருந்தார். தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கான முக்கியமான மூன்று விடயங்களை அது கொண்டிருந்தது. அவையாவன, 1. சிங்கள மொழிக்கு வழங்கப்பட்டிருக்கும் உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்த்தினைப் பாதிக்காத வண்ணம் தமிழ் மொழிக்கு தேசிய மொழி எனும் அந்தஸ்த்தினை வழங்குதல். வடக்குக் கிழக்கு மாகாணங்களின் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு தமிழ் மொழியினைப் பாவிப்பது. 2. வடக்கிற்கு ஒரு பிராந்தியசபையும், கிழக்கிற்கு இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பிராந்தியசபைகளையும் உருவாக்குவது. மாகாண எல்லைகளுக்கு அப்பாற்சென்று இந்த பிராந்தியங்களை ஒன்றிணைப்பது. 3. குடியேற்றத்திட்டங்களை பிராந்திய சபைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது. இக்குடியேற்றங்களில் அமர்த்தப்படுவோர் மற்றும் இக்குடியேற்றத்திட்டங்களில் பணிக்கு அமர்த்தப்படுவோர் ஆகியவற்றை பிராந்திய சபைகளே தீர்மானிப்பது. என்பனவே அந்த மூன்று முக்கிய பகுதிகளாகும். பண்டாரநாயக்கா - செல்வா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தினை பெளத்த துறவிகளினதும், சிங்கள அரசியல்வாதிகளினது அழுத்தத்திற்கு அடிபணிந்த பண்டாரநாயக்க சில காலத்திலேயே கிழித்தெறிந்துவிட்டார். இரண்டாவது ஒப்பந்தம் சேனநாயக்க - செல்வா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. செல்வா அவர்கள் டட்லியுடன் 1965 ஆம் ஆண்டு இதனைக் கைச்சாத்திட்டார். பண்டாரநாயக்காவுடனான ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களே இந்த ஒப்பந்தத்தினதும் அடிப்படையாக அமைந்திருந்தன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தந்தை செல்வா அவர்கள் இரு விடயங்களை வெளிப்படையாகக் கூறியிருந்தார். அதாவது, தமிழ் மொழியினை வடக்குக் கிழக்கில் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிப்பதனை சிங்களவர்கள் விரும்பியிருக்கவில்லை. மேலும் குடியேற்றத்திட்டங்களில் குடியேற்றப்படுபவர்கள் தொடர்பான நடைமுறையும் அவர்களைப்பொறுத்தவரை பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது. டட்லியுடனான செல்வாவின் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு, 1. வடக்குக் கிழக்கில் தமிழ் மொழியே நிர்வாகத்திற்கும், ஆவணப் பதிவிற்கும் பாவிக்கப்படும். அத்துடன் நீதிமன்றச் செயற்பாடுகளும் தமிழ் மொழியில் இடம்பெறுவதோடு, நீதிமன்ற செயற்பாடுகளின் ஆவணங்களும் தமிழில் பதியப்படும். 2. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் குடியேற்றப்படும் மக்கள் பின்வரும் நிபந்தனைகளின் கீழ் குடியமர்த்தப்படுவார்கள், அ) முதலாவதாக, அந்த மாவட்டங்களில் காணியற்றவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். ஆ) அடுத்தபடியாக அம்மாவட்டத்தில் வதியும் தமிழ் பேசும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இ) மூன்றாவதாக, இலங்கையில் வாழும் ஏனைய மக்களுக்கு, குறிப்பாக இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு இக்காணிகள் வழங்கப்படும். S J V செல்வனாயகம் வட்டுக்கோட்டை மாநாட்டில் தந்தை செல்வா பேசும்போது, பண்டாவுடனான அவரது ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயங்களை எதிர்கட்சியை ஆட்சியில் அமர்த்தியாவது பெற்றுக்கொள்ள முடியும் என்கிற எதிர்பார்ப்பில் அவர்களுடன் ஒத்துழைத்துப் பணியாற்றுவது எனும் தனது கொள்கையும் தவறானது என்று அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். 1960 இல் டட்லியின் ஐக்கிய தேசியக் கட்சியரசை தோற்கடித்து, சுதந்திரக் கட்சியை மீண்டும் பதவிக்குக் கொண்டுவருவதன் மூலம் மீண்டும் பண்டா - செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று செல்வா நினைத்தார். ஆனால், செல்வாவின் ஆதரவுடன் 1960 இல் ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கட்சி அவரை மீண்டுமொரு முறை ஏமாற்றியிருந்தது. அதுமட்டுமல்லாமல், சிங்கள இனவாதியாக தன்னை வெளிப்படுத்திய பண்டாரநாயக்கா, மிகக் கடுமையான தனிச் சிங்களச் சட்டத்தினையும் உருவாக்கினார். இதன் பிறகு 1965 இல், பண்டாரநாயக்காவின் அரசை பதவியிலிருந்து அகற்றி டட்லியை மீண்டும் பதவியில் அமர்த்துவதன் மூலம் டட்லியுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தலாம் என்று செல்வா நம்பியிருந்தபோதும், டட்லி மறுபடியும் அவரையும் தமிழ் மக்களையும் ஏமாற்றினார்.
-
கெரில்லாக்களும் மக்கள் போராட்டமும் பிரபாகரனால் முன்மொழியப்பட்ட அமைப்பின் சாசனம் 1976 ஆம் ஆண்டு வைகாசி 5 ஆம் திகதி உருவாக்கப்பட்ட மத்திய குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து புதிய தமிழ்ப் புலிகள் எனும் பிரபாகரனின் ஆரம்ப அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று உத்தியோகபூர்வமாக் அழைக்கப்படலாயிற்று. பிரபாகரனே அமைப்பின் அரசியல்த் தலைவராகவும், இராணுவத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். மத்திய குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு, நாகராஜா, செல்லக்கிளி, ஐய்யர் மற்றும் விஸ்வேஸ்வரன். தனது ராணுவப் பிரிவினை மூன்று பிரிவுகளாக பிரபாகரன் வகுத்திருந்தார். அதன்படி, ஒவ்வொரு பிரிவும் பின்வரும் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டன. 1. பொலீஸாரின் உளவு வலையமைப்பினையும், பொலீஸாருக்கு தகவல் வழங்கும் துரோகிகளையும் இனங்கண்டு அழித்தல். 2. சிறிலங்கா அரசாங்கத்தின் நிர்வாகத்தை முடக்கிப் போடல். 3. இராணுவ முகாம்களை தாக்கி அழிப்பதோடு, இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் பகுதிகளை புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல். இவ்வாறு மீட்கப்படும் தமிழர் தாயகத்தில் நிர்வாகக் கட்டமைப்புக்களை நிறுவுவதன் மூலம் சுய ஆட்சியுடைய தமிழ் ஈழத்திற்கான அத்திவாரத்தினை இடுதல். தான் முன்னெடுத்திருக்கும் தாயக விடுதலைப் போராட்டம் மிக நீண்டதாக இருக்கும் என்பதனை பிரபாகரன் நன்கு அறிந்து வைத்திருந்தார். அதற்கு ஏற்ற வகையிலேயே தனது விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை அவர் உருவாக்கினர். சனத்தொகையில் மிகவும் சிறிய இனமான தமிழினத்திற்கு நகர்ப்புற கரந்தடிப்படையே சரியான போராட்ட முறையாக இருக்கும் என்று அவர் நம்பினார். மக்களை ஒரு போராட்ட சக்தியாக இயங்கவைப்பதன்மூலம் விடுதலையினைப் பெற்றுவிடமுடியும் என்று அவர் கருதினார். இதுபற்றி பேட்டியொன்றில் அவர் இவ்வாறு கூறியிருந்தார், "கெரில்லா முறையிலான கரந்தடிப் போர்முறையென்பது, உண்மையிலே ஒரு மக்கள் போராட்டமாகும். மக்கள் போராட்டத்தின் உச்சமே கெரில்லா போர்முறையாகும் என்றால் அது மிகையில்லை. ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தின் மனங்களிலும் போராட்ட உணர்வு வேரூன்றும்போது அது மக்கள் போராட்டமாக உருப்பெருகிறது. இந்த இலக்கினை நோக்கித்தான் நான் தேவையான அனைத்து விடயங்களையும் செய்துவருகிறேன்".
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் உருவாக்கம் துரையப்பா மீதான தாக்குதலின் வெற்றி மற்றும் புத்தூர் வங்கிக்கொள்ளையின் வெற்றி ஆகியவை கொடுத்திருந்த உற்சாகத்தினையடுத்து தனது நீண்டகாலக் கனவான நகர்ப்புர கரந்தடிப்படையொன்றினை செயற்படுத்தும் திட்டத்தினை முன்னெடுத்தார் பிரபாகரன். தமிழ்நாட்டில் சிறிதுகாலம் அவர் தங்கியிருந்த நாட்களிலேயே அவர் இதனைத் திட்டமிட்டு வந்தார். அவ்வமைப்பிற்கான பெயரைப்பற்றி அவர் சிந்தித்தபோது நிச்சயம் "தமிழ் ஈழம் " எனும் வார்த்தை தனது அமைப்பின் பெயரில் இருக்கவேண்டும் என்று விரும்பினார். சுந்தரலிங்கம் 1960 களில் பிரேரித்த ஈழம் என்பது அல்ல பிரபாகரனின் ஈழம் என்பது. தமிழ் இலக்கியங்களில் ஈழம் எனும் சொல் மொத்த நாட்டையுமே குறிப்பிட்டிருந்தது. ஆனால், பிரபாகரனின் கனவு தேசமான ஈழமோ தமிழ் மக்களின் வரலாற்றுத்தாயகமான இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களே என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அடுத்ததாக, புலிகள் எனும் சொல்லும் தனது அமைப்பின் பெயரில் இடம்பெறவேண்டும் என்று அவர் விரும்பினார். தமிழர்களின் பலமான மன்னர்களான சோழர்களின் சின்னம் புலியென்பது குறிப்பிடத் தக்கது. சோழர்களின் ஆட்சியிலேயே தமிழர்களின் நாகரீகம் பெருவளர்ச்சியடைந்ததோடு, பலமும் அதிகரித்திருந்தது. தமிழ் ஈழம், புலிகள் ஆகிய சொற்களோடு விடுதலை எனும் சொல்லும் தனது அமைப்பின் பெயரில் இருக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். அவரது அமைப்பு ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கப்போகின்றது, சிங்களவர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர் விடுதலை பெறவே அவரது அமைப்பு போராட்டத்தினை நடத்தவேண்டியிருந்தது. ஆகவே, தனது அமைப்பிற்கு "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்று அவர் பெயரிட்டார். தனது புதிய அமைப்பிற்கான இலட்சினை ஒன்றை பிரபாகரன் முன்னமே தேர்வுசெய்திருந்தார். அவர் மதுரையில் தங்கியிருந்த காலத்தில் ஒரு ஓவியக் கலைஞரைக் கொண்டு அதனை அவர் வரைந்து வைத்திருந்தார். அந்த வரைஞரிடம் தனது இலட்சினை அமையவேண்டிய விதத்தினைக் கூறினார் பிரபாகரன். கர்ஜிக்கும் புலியின் தலை, புலியின் முன்னங்கால்கள் வெளியே பாயுமாற்போல் இருக்க, இரு தானியங்கித் துப்பாக்கிகளும் 33 துப்பாக்கிக் குண்டுகளும் வட்டவடிவில் புலியின் தலையினைச் சுற்றிவர அது வரையப்பட்டிருந்தது. தான் வரைந்த ஓவியத்தை அந்த ஓவியர், பிரபாகரனிடம் காட்டியபோது பிரபாகரன் மிகுந்த உற்சாகமடைந்தார். தனது அமைப்பிற்கான அரசியலமைப்பின் வரைவையும் பிரபாகரன் தயாரித்து வைத்திருந்தார். அவ்வரைபின்படி, அமைப்பின் குறிக்கோள்கள் பின்வருமாறு கூறப்பட்டன, 1. முற்றான சுதந்திரம் கொண்ட தமிழ் ஈழம் 2. பூரண இறையாண்மை கொண்ட சோசலிச, ஜனநாயக மக்கள் அரசாங்கத்தை உருவாக்குதல். 3. அனைத்து விதமான சுரண்டல்களையும் இல்லாதொழித்தல், குறிப்பாக சாதி வேற்றுமைகளை முற்றாகக் களைதல். 4. சோசலிச உற்பத்தி முறையினைக் கைக்கொள்ளல். 5. விடுதலைக்கான போராட்ட வழியான அரசியல் போராட்டத்தின் நீட்சியாக ஆயுதப் போராட்டத்தினை மேற்கொள்வது. 6. கெரில்லா ரீதியிலான போர்முறை படிப்படியான பரிணாம வளர்ச்சியின் மூலம் முழுவடிவிலான மக்கள் போராக மாற்றி விடுதலையினை வென்றெடுப்பது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட மத்திய குழ்வொன்றினால் தலைமை தாங்கி நடத்தப்படும் என்று வரையப்பட்டிருந்தது. இந்த அமைப்பில் அரசியல் மற்றும் ராணுவப் பிரிவுகள் அமைந்திருக்கும். அமைப்பின் உறுப்பினர்கள் கடுமையான ஒழுக்கக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று அறிவுருத்தப்பட்டதுடன் புகையிலை, மதுபானம், உறுப்பினர்களிடையே பாலுறவு, குடும்பங்களுடனான தொடர்பு, மாற்று அமைக்களுடன் இணைதல் , புதிய அமைப்புக்களை தோற்றுவித்தல், அமைப்பை விட்டு பிரிந்து போதல் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டிருந்தன .
-
வங்கிக்கொள்ளைகள் அரசிலிருந்து வெளியேற்றப்பட்ட சமசமாஜக் கட்சி கடுமையான கோபத்துடன் இருந்ததுடன், அரசைத் தருணம் பார்த்து பழிவாங்கவும் காத்திருந்தது. சிறிமாவுக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றினைப் பாராளுமன்றத்தில் முன்மொழிந்த சமசமாஜக் கட்சி சிறிமா தனது அதிகாரத்தைத் தவராகப் பயன்படுத்துவதாகவும், அதிகாரத்தைப் பாவித்து செல்வமீட்டும் கைங்கரியத்தில் இறங்கியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியது. காணி சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தில் இச்சீர்திருத்த சட்டத்திற்கு முரணாக தன்னிடமிருந்த தென்னங்கணியொன்றினை தனியாருக்கு பெரும் விலையிற்கு விற்றதாகவும் குற்றஞ்சாட்டியது. ஆனால், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டாலும்கூட, சிறிமாவின் செல்வாக்குக் கடுமையான சரிவினைச் சந்தித்தது. மேலும், நீதியமைச்சரான பீலிக்ஸ் ஆர் டி பண்டாரநாயக்காவுக்கெதிரான ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும் சமசமாஜக் கட்சி ஆதரவளித்தது. இந்த அமைச்சர் தனது அதிகாரத்தைப் பாவித்து எதிர்க்கட்சியின் செயற்பாட்டாளர்களை அச்சுருத்திவருவதாகவே இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. சிங்களத் தலைவர்களிடையே ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்கள் அவர்களது நேரத்தின் பெரும்பகுதியினை விரயமாக்கிக்கொண்டிருக்க, பிரபாகரனோ ரகசியமாக வன்னி நோக்கிப் பயணித்தார். வவுனியா பகுதியில் தனது பயிற்சிமுகாம்களை உருவாக்கத் தொடங்கியதுடன், தனது பலப்பிரதேசமாகவும் அதனை மாற்றத் தொடங்கியிருந்தார். தனது தகப்பானாரான வேலுப்பிள்ளை காணி அதிகாரியாக இருந்தகாலத்தில் வன்னியின் பல பகுதிகளிலும் நடமட்டிய பிரபாகரனுக்கு வன்னியின் காடுகள் மிகவும் பரீட்சையமாக இருந்ததுடன், அவரைத்தேடி அரச படைகள் காடுகளுக்குள் நுழையும்போது தந்திரமாக அவர் தப்பிக்கொள்வதற்கும் அவரது காடுகள் பற்றிய பரீட்சயம் உதவியிருந்தது. பிரபாகரன் தனது முதலாவது பயிற்சிமுகாமை, வவுனியாவிலிருந்து மூன்று கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள, ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் ஆரம்பித்தார். அதற்கு பூந்த்தோட்டம் முகாம் என்று அவர் பெயரிட்டார். சுமார் 400 ஏக்கர்கள் விசாலமான அந்த பண்ணையில் பூங்கன்றுகள், மரக்கறித் தோட்டங்கள், வயல்வெளிகளும், அவற்றின் பின்புலத்தில் மிக அடர்ந்த காடும் காணப்பட்டது. காட்டின் மத்தியில் போராளிகள் தற்காப்புக் கலைகள் பயில்வதற்கும், குறிபார்த்துச் சுடும் பயிற்சியை மேற்கொள்ளவும் கொட்டில்களை அவர் அமைத்தார். இயக்கத்திற்கு புதிதாகச் சேர்க்கப்பட்டவர்கள் பூந்தோட்டம் முகாமில் ஆரம்பத்தில் மரக்கறித் தோட்டங்கள் மற்றும் வயல்வெளியில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இதன்மூலம் முகாமிற்குத் தேவையான அரிசியும், மரக்கறி வகைகளும் கிடைக்கப்பெற்றது. போராளிகளுக்கு காலையிலும், மாலையிலும் போர்ப்பயிற்சி வழங்கப்பட்டது. குறிபார்த்துச் சுடுதலில் மிகுந்த அக்கறையினை பிரபாகரன் காண்பித்தார். மனிதர்களைப் போன்ற உருவங்கள் அட்டைகளிலும், மரங்களிலும் வரையப்பட்டு குறிபார்த்துச் சுடும் பயிற்சி நடத்தப்பட்டது. குறிபார்த்துச் சுடும் பகுதிக்கு அடிக்கடி விஜயம் செய்த பிரபாகரன் பயிற்சி கிரமமாக நடைபெறுவதை மேற்பார்வை செய்துவந்தார். பிரபாகரனின் முகாமில் குறிபார்த்துச் சுடுவதில் பயிற்சியாளராகக் கடமையாற்றியவரும், பின்னாட்களில் ஈரோஸ் அமைப்பில் இணைந்துகொண்டவருமான நபர் ஒருவர் பேசும்போது, "அவரது அரையில் கைத்துப்பாக்கி செருகியிருக்க, மெதுவாக அவர் நடந்துவருவார். திடீரென்று பின்னால் திரும்பி, மரத்தில் இடப்பட்டிருக்கும் சிவப்பு நிற பயிற்சிக் குறிமீது துப்பாக்கியால் சுடுவார். தனது குறி கச்சிதமாக இலக்கைத் தாக்கிய பெருமிதத்தில் புன்னகைப்பார்" என்று பிரபாகரனின் துப்பாக்கி சுடும் திறமை பற்றி என்னிடம் பகிர்ந்தார். "அதேவேளை, இலக்குத் தவறுவது அவருக்கு மிகுந்த ஆத்திரத்தினை ஏற்படுத்திவிடும். ஒவ்வொருமுறையும் இலக்குத் தவறும்போது, எதிரி உங்களைக் கொன்றுவிடுவான் என்று எம்மிடம் அடிக்கடி கோபத்துடன் கூறியிருக்கிறார்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பயிற்சிமுகாமை நடத்துவதற்குப் பிரபாகரனுக்கு பெருமளவு பணம் தேவைப்பட்டது. ஆகவே, முகாமிற்கான நிதியினை எப்படித் திரட்டலாம் என்கிற சம்பாஷணையினை அவர் இயக்கத்திற்குள் ஆரம்பித்து வைத்தார். வெளிப்படையாக பணத்தினைச் சம்பாதிக்க முடியவில்லை. பொலீஸார் எந்நேரமும் அவர்களைத் தேடித் திரிந்ததுடன், பொதுமக்கள் நேரடியாக அவர்களுக்கு பணம் கொடுத்துதவ அஞ்சினர். ஆகவே தெற்கின் மக்கள் விடுதலை முன்னணியினர் கைக்கொண்ட வங்கிக்கொள்ளைகளில் தாமும் ஈடுபடுவதென அவர்கள் முடிவெடுத்தனர். "ஆனால், இது தவறல்லவா?" என்று மத்திய குழுவில் சிலர் கேள்வியெழுப்பவும் தவறவில்லை. பொதுமக்களின் பணத்தினையே வங்கிகள் கையாள்கின்றன. மக்களின் விடுதலைக்காகப் போராடும் ஒரு அமைப்பு, அம்மக்களின் பணத்தினையே கொள்ளையடிப்பதென்பது தவறல்லவா?" என்று அவர்கள் கேட்டார்கள். பிரபாகரன் இதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தார். அரசிற்குச் சொந்தமான வங்கியைக் கொள்ளையடிக்கலாம் என்று அவர் கூறினார். அரசுக்குச் சொந்தமான வங்கிகளைக் கொள்ளையடிக்க பிரபாகரன் முன்வைத்த இன்னொரு காரணம், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு நாட்டில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுவரும் அரசு, தமிழர் தாயகத்தை முற்றாகப் புறக்கணித்து வருவதால், அவ்வங்கிகளைக் கொள்ளையடிப்பது தகுமே என்றும் அவர் வாதிட்டார். அதன்பிறகு பிரபாகரன் வங்கிக்கொள்ளையினை மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டார். சில போராளிகளைத் தேர்ந்தெடுத்து அத்திட்டத்தினை விளக்கினார். வங்கி திறக்கும் நேரத்தினை அவதானிக்குமாறு அவர்கள் பணிக்கப்பட்டார்கள். அலுவல்கள் ஆரம்பிக்கும் நேரம், பரபரப்பாக இயங்கும் நேரங்கள், மந்தமாக இயங்கும் நேரங்கள், பணமும் நகைகளும் வைக்கப்படும் இடங்கள், கொள்ளையில் ஈடுபடவேண்டிய போராளிகளின் எண்ணிக்கை, வங்கிக்குச் செல்லவும், தப்பி வரவும் பாவிக்கவேண்டிய வாகனம் போன்றவை விலாவாரியாக அலசப்பட்டன. ஒவ்வொரு தகவலும் அவதானிக்கப்பட்டு, ஆலோசிக்கப்பட்டு, திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டு, பரீட்சித்தும் பார்க்கப்பட்டன. 1976 ஆம் ஆண்டு பங்குனி 5 ஆம் திகதி புத்தூரில் இயங்கிய மக்கள் வங்கிக்கு தான் தேர்ந்தெடுத்த போராளிகள் சிலரை அழைத்துக்கொண்டு சென்றார் பிரபாகரன். வங்கி அலுவல்கள் ஆரம்பித்திருந்த வேளை போராளிகளுடன் உள்நுழைந்த பிரபாகரன் கைத்துப்பாக்கியை மேலே உயர்த்திப் பிடித்துக்கொண்டு, வங்கி ஊழியர்கள் அனைவரையும் வங்கி முகாமையாளரின் அறையினுள் செல்லுமாறு பணித்தார். அதிர்ச்சியடைந்திருந்த ஊழியர்கள் அவர் கூறியதன்படி பணிந்தனர். கைகளை மேலே உயர்த்தியபடி நிற்குமாறு அவர்கள் பணிக்கப்பட்டிருந்தனர். காசாளரின் அறைக்கும், பாதுகாப்பாக பணம் வைக்கப்படும் அறைக்கும் இரு குழுக்கள் விரைந்தன. பணத்தையூம், நகைகளையும் இரு சாக்குகளில் சேர்த்துக் கட்டிய அவர்கள், "இந்த அசெளகரியத்திற்காக வருந்துகிறோம்" என்றுவிட்டுச் சென்றுவிட்டனர். அன்று சுமார் 5 லட்சம் ரூபாய் பணமும் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டன. யாழ்ப்பாணத்தின் முதலாவது வங்கிக்கொள்ளை வெறும் ஐந்தே நிமிடங்களில் நடந்தேறியது. இந்த வங்கிக்கொள்ளை அரசாங்கத்தையும் பொலீஸாரையும் கடும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்திய்ருந்தது. புதிய தமிழ்ப் புலிகளை முற்றாக அழிக்குமாறு பொலிசாருக்கு அரசு உத்தரவிட்டது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆயுத அமைப்புக்களை அடக்குவதற்கு விசேட பொலீஸ் புலநாய்வுப் பிரிவொன்று பொலீஸ் தலைமைச் செயலகமான கொழும்பில் உருவாக்கப்பட்டது. தமிழ் அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்களின் அரசியல் பேச்சுக்களை உன்னிப்பாக அவதானித்து வந்த பொலீஸ் புலநாய்வாளர்கள், ஆயுத அமைப்புக்களின் விபரங்களையும் திரட்டுமாறு பணிக்கப்பட்டனர். பொலீஸ் பரிசோதகர்களான பஸ்த்தியாம்பிள்ளை மற்றும் பத்மநாதன் ஆகியோரிடம் இந்த பணி வழங்கப்பட்டது. இவர்கள் இருவரும் தமக்குத் தகவல் வழங்கக்கூடிய தமிழ் உளவாளிகளைக் கொண்ட வலையமைப்பொன்றினை உருவாக்கத் தொடங்கினார்கள். புதிய தமிழ்ப் புலிகளின் புத்தூர் மக்கள் வங்கிக் கொள்ளையினால் உந்தப்பட்ட இன்னொரு ஆயுத அமைப்பான ஈழம் விடுதலை அமைப்பு, புலோலியில் அமைந்திருந்த பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கியினைக் கொள்ளையடித்தது. மக்கள் வங்கியினைப் போன்று, கிராம அபிவிருத்தி வங்கி அரச வங்கியல்ல. மாறாக இது விவசாயிகளுக்கு கடன் வழங்கும் ஒரு வங்கி. ஆனால், சமூக முற்போக்குச் சிந்தனை குறித்துப் பேசிய ஈழம் விடுதலை அமைப்பு, வறிய விவசாயிகளின் பணத்தினைக் கொள்ளையடித்துச் சென்றது. இக்கொள்ளையின் பின்னர், இவ்வமைப்பின் தலைவரான வரதராஜப்பெருமாள் பொலீஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன், அவரது அமைப்புக் கொள்ளையடித்துச் சென்ற பணமும், நகைகளும் மீட்கப்பட்டது. வரதருடன் கைதுசெய்யப்பட்ட ஏனைய உறுப்பினர்கள் ஹென்ஸ் மோகன், சந்திர மோகன் மற்றும் தங்க மகேந்திரன் ஆகியோர் ஆகும். வங்கி முகாமையாளரான வேலுப்பிள்ளை பாலகுமாரும் கொள்ளையில் உடந்தையாகச் செயற்பட்டதற்காகக் கைதுசெய்யப்பட்டார். பொலீஸ் பரிசோதகர் பத்மானாதனே கைதுகளை நடத்தியிருந்தார். ஈழம் விடுதலை அமைப்பு முற்றாக ஒடுக்கப்பட்டதோடு அதன்பிறகு அவ்வமைப்பின் செயற்பாடே இல்லாமற்போனது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தலைவர்கள், அமைப்பினையும், உறுப்பினர்களையும் விட்டு தலைமறைவாகியது இதுவே சரித்திரத்தில் முதன்முறையாகும்.
-
பேபி சுப்பிரமணியம் செஞ்சோலை பாடல் வெளியீட்டு நிகழ்வில் வி. பாலகுமாரன், பேபி சுப்பிரமணியம் மற்றும் எம். தங்கன் யாழ்ப்பாணத்து இளைஞர்கள் பிரபாகரன் எனும் பெயரை முன்னர் கேட்டிருந்தனர். ஆனால் தற்போது துரையப்பாவின் கொலைதொடர்பான பிரமிப்பு இளைஞர்கள் மத்தியில் பிரபாகரனை ஒரு வீரன் எனும் நிலைக்கு உயர்த்தியிருந்தது. புதிய தமிழ்ப் புலிகள் எனும் பெயருக்கு அவர்கள் தகுதியுடையவர்கள் தான் என்று மக்கள் பேச அரம்பித்திருந்தனர். ஆகவே, பிரபலமான அந்த அமைப்பில் தாமும் இணையவேண்டும் என்று சில இளைஞர்கள் விரும்பினர். அவர்களில் ஒருவர்தான் தனியாக அதுவரை இயங்கிக்கொண்டிருந்த எஸ். சுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட பேபி சுப்பிரமணியம். துரையப்பாவின் கொலை பேபி சுப்பிரமணியத்தை பிரபாகரனின் விசிறியாக மாற்றிவிட்டிருந்தது. அவர் தற்போதும்கூட பிரபாகரனின் விசிறிதான். வன்னி நிர்வாகத்தின் கல்வித்துறைப் பொறுப்பாளராக அவர் இன்று கடமையாற்றுகிறார். யாழ்ப்பாணத்தில் பிரபாகரன் தனது நிலையினைப் பலப்படுத்திக்கொண்டிருந்த அதே வேளை தெற்கில் ஜெயவர்த்தனா தன்னை கட்டமைத்துக்கொண்டு வந்தார். குடியரசு யாப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவு நாளான வைகாசி 22 , 1975 ஆம் ஆண்டு, கொழும்பு தெற்கின் தனது பாராளுமன்ற ஆசனத்திலிருந்து விலகிக்கொண்டார் ஜே அர். இதற்கான காரணமாக தேசிய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் தொடர்பான பிணக்கே இருந்தது. 1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின்படி பாராளுமன்றம் அரசியலமைப்பு ஆரம்பித்த நாளிலிருந்து ஐந்து வருடங்களுக்குத் தொடரமுடியும் என்று இருந்தது. ஆனால், சிறிமாவின் அரசானது 1970 ஆண்டில் பதவிக்கு வந்ததுடன், அது 1975 ஆம் ஆண்டு தேர்தல்களை மீளவும் நடத்தவேண்டிய தேவையும் இருந்தது. ஆனால், சிறிமா அரசியலமைப்பினைப் பாவித்து 1977 வரை ஆட்சியை நீட்டிக்க நினைத்திருந்ததால், ஜே ஆர் இதற்கான தனது எதிர்ப்பினைக் காட்டவும், தேர்தலினை 1975 இலேயே நடத்தவேண்டும் என்றும் கோரியே தனது ஆசனத்திலிருந்து விலகியிருந்தார். ஆகவே, ஜே ஆரின் கொழும்பு தெற்கிற்கான இடைத் தேர்தல் ஆடி 18 ஆம் திகதி நடத்தப்பட்டபோது தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர்களுள் ஒருவரான தொண்டைமான் ஜே ஆர் இற்கு தனது முழு ஆதரவினையும் வழங்கினார். சமஷ்ட்டிக் கட்சி, மற்றும் தமிழர் ஐக்கிய முன்னணியின் ஏனைய கட்சிகளும் திரைமறைவில் ஜே ஆர் இன் வெற்றிக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன. ஈற்றில் ஜே ஆர் 25,801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். தொண்டைமான் பிரபாகரனும், ஜே ஆரும் தமது நிலைகளைப் பலப்படுத்திக்கொண்டிருந்த அதே காலப்பகுதியில் சிறிமாவின் அரசாங்கம் கட்சிக்குள் பல உட்கட்சிப் பிணக்குகளை எதிர்கொள்ளத் தொடங்கியிருந்தது. பீலிக்ஸ் ஆர் பண்டாரநாயக்கா, லங்கா சமசமாஜக் கட்சி - கம்மியூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடான தேசியமயமாக்கும் கொள்கையினைக் கடுமையாக எதிர்த்து வந்ததுடன், ஈற்றில் லங்கா சமசமாஜக் கட்சியினை அரசிலிருந்து வெளியேற்றவும் காரணமானார். அதனைத் தொடர்ந்து கம்மியூனிஸ்ட் கட்சியும் அரசிலிருந்து விலகிக்கொண்டது.
-
தளர்த்தப்பட்ட தடைகள் அல்பிரெட் துரையப்பா கொல்லப்பட்டமை சிங்களவர்களிடையே அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் ஒருங்கே ஏற்படுத்தியிருந்தது. மிதவாதத் தமிழ்த் தலைமைகளை கடுமையாக விமர்சித்த சிங்களவர்கள் இளைஞர்களின் வன்முறைகளுக்கு பின்னால் இருந்து தூண்டுவது அவர்களே என்று குற்றஞ்சாட்டினர். குற்றப் புலநாய்வுத் துறையிடமிருந்து அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த அறிக்கையில் தமிழர் ஐக்கிய முன்னணியினரை, குறிப்பாக அமிர்தலிங்கத்தை இந்த வன்முறைகளுக்கு தூபம் போட்டவராகக் குற்றஞ்சாட்டியிருந்தது. இன்னொரு அறிக்கையின்படி, அமிர்தலிங்கமே இந்த வன்முறைக் கும்பல்களுக்கு பொறுப்பாக இருப்பதாகவும், இந்த ஆயுத அமைப்புக்களின் தலைவர்களை அமிர்தலிங்கம் அடிக்கடிச் சந்தித்துக் கலந்துரையாடி வருவதாகவும் கூறியிருந்தது. ஆனால், அந்த அறிக்கையில் சொல்லப்பட்டதில் சில உண்மைகளும் இல்லாமல் இல்லை. தமிழ் இளைஞர் பேரவை நாட்களில், பிரபாகரன், குட்டிமணி, தங்கத்துரை, சிறிசபாரட்ணம், சத்தியசீலன், முத்துக்குமாரசாமி மற்றும் வரதராஜப்பெருமாள் ஆகியோர் அமிர்தலிங்கத்தை அடிக்கடி சந்தித்தே வந்திருந்தார்கள். அமிர்தலிங்கம் மீது அவர்களுக்கு ஈர்ப்பு இருந்தது. புரட்சி செய்ய விரும்பும் இளைஞர்களுடன் தொடர்பில் இருக்கும்படி தந்தை செல்வாவே அமிர்தலிங்கத்தைப் பணித்திருந்தார். அமிர்தலிங்கத்தின் மூலம் இளைஞர்களின் கொதிநிலையினைக் கட்டுக்குள் வைத்திருப்பது அல்லது அதற்கு தடுப்பொன்றினைப் போட்டுவைத்திருப்பதே செல்வாவின் நோக்கமாக இருந்தது. ஆனால், இதனைப் புரிந்துகொள்ளாத சிங்கள அரசியல்வாதிகளும், பத்திரிக்கையாளர்களும், பல இடதுசாரிச் சிந்தனையாளர்களும் அமிர்தலிங்கத்தைத் தொடர்ந்தும் கடுமையாக விமர்சித்து வந்தது நாளடைவில் இந்த இளைஞர் அமைப்புக்கள் மீது அமிர்தலிங்கம் வைத்திருந்த பிடி தளர்ந்துபோகக் காரணமாகியது. துரையப்பாவின் மரணம் சிறிமாவைப் பொறுத்தவரை மிகப்பெரும் அதிர்ச்சியினை அவருக்கு ஏற்படுத்தி விட்டிருந்தது. ஆகவே, தமிழ் ஆயுதக் குழுக்களுக்கெதிராக கடுமையான பொலீஸ் நடவடிக்கைகளை அவர் முடுக்கி விட்டார். துரையப்பாவின் மரணச்சடங்கின் முன்னர் கொலையாளிகள் கைதுசெய்யப்பட்டவேண்டும் என்ற கட்டளை பொலீஸாருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து பொலீஸாரின் கண்காணிப்பிலிருந்துவந்த பல தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு சிறியில் அடைக்கப்பட்டார்கள்.ஆடி 28 முதல் ஆவணி 4 வரையான ஒருவார காலப்பகுதியில் பின்வரும் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பாட்டர்கள். கே. சிவானந்தன், ஏ. மகேந்திரா, நமசிவாயம் ஆனந்தவிநாயகம், சோமசுந்தரம் சேனாதிராஜா, எம். சின்னையா குவேந்திரராஜா, ஏ. மயில்வாகனம் ராஜகுலசூரியர், ஆனந்தப் பூபதி பாலவடிவேற்கரசன், சிவராமலிங்கம் சூரியகுமார், தம்பித்துரை முத்துக்குமாரசாமி, ஆசீர்வாதம் தாசன், கே.சுந்தரம்பிள்ளை சபாரட்ணம், அண்ணாமலை வரதராஜா, எஸ். அப்பாத்துரை நித்தியானந்தன், சிதம்பரம் புஷ்ப்பராஜா, ராமலிங்கம் கலேந்திரன், பொன்னுத்துரை சற்குணலிங்கம், டி. ஜீவராஜா, குருகுலசிங்கம், எம். பாலரட்ணம், பி. வீரவாகு, கே. உதர்சன், கே. சிவஜெயம், தம்பிப்பிள்ளை சந்ததியார், அமிர்தலிங்கம் ஆனந்தகுமார், வைத்திலிங்கம் சிறிதரன் மற்றும் சிலரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞர்களுள் அடக்கம். ஆனால், இவர்களுள் எவருமே துரையப்பாவின் கொலைபற்றி அறிந்திருக்கவில்லை. இவர்கள் எவருக்குமே புதிய தமிழ்ப் புலிகள் அமைப்புப் பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும், இவர்கள் கைதுசெய்யப்பட்ட நிக்ழவினை, கொலையாளிகளைப் பிடித்துவிட்டோம் என்று சிங்கள பத்திரிக்கைகள் கொண்டாடின. ஆனால், துரையப்பாவின் கொலையுடன் தொடர்புபட்டிருந்த ஒரு சிலர் ஆவணி மற்றும் புரட்டாதி மாதங்களின் இறுதிப்பகுதியில் கைதுசெய்யப்பட்டனர். அதுகூட தமிழ் இளைஞர் பேரவையின் கீழ்மட்ட உறுப்பினர்களைத் தேடித்தேடி பொலீஸார் கைதுசெய்துவந்தபோதே நடைபெற்றது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சிலரின் பெயர் விபரங்கள் வருமாறு, வி. சதாசிவம் சதானந்தசிவம், சோமு குலசிங்கம், செல்வரட்ணம் செல்வகுமார், ரட்ணபாலா, கொகா சந்திரன், ராஜேந்திரம் ஜெயராஜா, விஸ்வஜோதி ரட்ணம், பி. கலபதி, எஸ்.லோகனாதன், ஆறுமுகம் கிருபாகரன், ரஞ்சன், வாரித்தம்பி சிவராஜா, முத்துத்தம்பி வசந்தகுமார் மற்றும் மேரி அல்போன்ஸ் ஆகியோர். இவர்களுள், ஆறுமுகம் கிருபாகரன் ஆவணி 21 ஆம் திகதியும், கலபதி புரட்டாதி 19 இலும் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளை எதிர்நோக்கியபோது இவர்கள் தமக்குத் தெரிந்த விடயங்கள் எல்லாவற்றையும் பொலீஸாரிடம் கூறிவிட்டனர். இவர்கள் மூலமே புதிய தமிழ்ப் புலிகள் எனும் அமைப்பின் செயற்பாடுகள் குறித்தும், அவ்வமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றியும் வெளியுலகத்திற்குத் தெரியவேண்டி வந்தது. பிரபாகரனால் தமக்கு வழங்கப்பட்டிருந்த கட்டளைகளான "உங்களின் வீடுகளில் உறங்கவேண்டாம், எப்போதுமே ஒரு ஆயுதத்தினை உங்களுடன் வைத்திருங்கள்" என்பனவற்றைக் கடைப்பிடிக்கத் தவறியமையே கிருபாகரனும் கலபதியும் பொலீஸாரிடம் அகப்படவேண்டிய நிலைமையினை ஏற்படுத்தியிருந்தது. அவர்களைத் தேடி பொலீஸார் வந்தபோது அவர்கள் தமது வீடுகளில் ஆயுதம் ஏதுமின்றி காணப்பட்டார்கள். ஆனால், இதற்கு அவர்களால் கூறப்பட்ட காரணம் இயக்கத்திடம் அன்று இருந்தது வெறும் இரண்டு கைத்துப்பாக்கிகளே என்றும், அதனாலேயே தம்மால் ஆயுதம் ஒன்றினை வைத்திருக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது. இயக்கத்திலிருந்த இரு துப்பாகிகளில் ஒன்றினை பிரபாகரனும், மற்றையதை பற்குணராஜாவும் வைத்திருந்தனர். தன்னிடமிருந்த துருப்பிடித்த துப்பாக்கியின் மூலமே துரையப்பாவை பிரபாகரன் சுட்டிருந்தார். ஆனால், துப்பாக்கிகள் இல்லாவிட்டாலும்கூட கத்தி, மிளகாய்த்தூள் போன்றவற்றை தனது போராளிகள் எப்படிப் பயன்படுத்துவது என்று பிரபாகரன் அவர்களுக்குப் பயிற்சியளித்திருந்தார். குறைந்தது சமையலறைக் கத்தியையாவது உங்களுடன் வைத்திருங்கள் என்று தனது போராளிகளுக்கு அவர் சொல்லியிருந்தார். துரையப்பாவைச் சுட்டுவிட்டு அவரது காரில் நீர்வேலிவரை பயணித்த பிரபாகரனும் அவரது தோழர்களும், காரினை நீர்வேலியில் கைவிட்டு விட்டு ஒவ்வொரு திக்கில் சென்றார்கள். பிரபாகரன் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று அன்றிரவு அங்கு தான் தூங்கவிரும்புவதாகக் கேட்டார். அவரது நண்பருக்கோ துரையாப்பா மீது நடத்தப்பட்ட தாக்குதல் அப்போது தெரிந்திருக்கவில்லை. பிரபாகரன் கூட துரையப்பாவின் கொலைபற்றி நண்பரிடம் மூச்சுவிடவில்லை. தனது காற்சட்டையிலிருந்த கைத்துப்பாக்கியினை எடுத்து தலையணையின் கீழ்வைத்துக்கொண்டே அவர் உறங்கிப் போனார். காலையில் நண்பர் கண்விழித்துப் பார்க்கும்போது பிரபாகரன் எழுந்து போயிருந்தது தெரிந்தது. சிறிதுநேரத்தின் பின்னர் அப்பகுதியெங்கும் துரையப்பாவின் கொலைபற்றி மக்கள் பேசத் தொடங்கினர். அக்கொலை தமிழரின் அண்மைய சரித்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது அரசியற் கொலை என்பதுடன், அது இலங்கையின் வரலாற்றையும் புதிய பாதையில் பயணிக்கவைத்தது. பிரபாகரனுக்கு தனது திட்டங்கள் பற்றியோ, நடவடிக்கைகள் பற்றியோ இரகசியம் பேணும் இயல்பு இருந்தது. அவைகுறித்து சிறிய தகவல்கள் கசிவதைக்கூட அவர் விரும்பவில்லை. மேலும், தனது பாதுகாப்புக் குறித்தும் அவர் மிகுந்த கவனம் எடுத்திருந்தார். துரையப்பாவின் கொலையினையடுத்து தனது மூன்று தோழர்களுக்கும் தெரிந்திருந்த தனது மறைவிடங்களுக்கு மீண்டும் போவதை அவர் தவிர்த்து வந்தார். தனது தோழர்கள் பொலீஸாரால் கைதுசெய்யப்படுமிடத்து, சித்திரவதைகளின்போது அவர்கள் தனது மறைவிடங்களைக் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் என்று நம்பிய பிரபாகரன் அவ்விடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தே வந்தார். சில நண்பர்கள் அவரை மீண்டும் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்லுமாறு வேண்டிக்கொண்டனர். ஆனால் அவர் அதற்கு விரும்பவில்லை. தப்பியோடுவதற்கான தருணம் இதுவல்ல என்று அவர் தனது தோழர்களிடம் கூறினார். யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்து துரையப்பாவின் கொலையினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசியற் சூழ்நிலையினை தமக்குச் சாதகமாகப் பாவிக்கவேண்டும் என்று அவர்களிடம் கூறினார் பிரபாகரன்.
-
தமிழீழ விடுதலைப் புலிகளாக பரிணாம வளர்ச்சியடைந்த புதிய தமிழ்ப் புலிகள் ஒரு வீரனுக்கான தேவை துரையப்பாவின் கொலையின் மூலம் ஒரு செய்தியினை சிங்கள அரசுக்கு பிரபாகரன் தெரிவிக்க விரும்பினார். தமிழர் மீதான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் புதிய சக்தியொன்று களத்தில் இறங்கியிருக்கிறது என்பதுதான் அது. இது மிகக் கடுமையான தாக்கத்தினை தமிழ் மக்களிடத்திலும் சிங்களவரிடத்திலும் ஏற்படுத்திவிட்டிருந்தது. சுபாஷ் சந்திரபோசுக்கு நிகரான தமிழ் வீரன் ஒருவனை தமிழ்ச் சமூகம் நீண்டநாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஈழத்துக் காந்தியென்று மக்களால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட தந்தை செல்வா தனது மக்களுக்கான தந்தை எனும் ஸ்த்தானத்தைக் கொடுத்திருந்தார். ஆனால் அவராலும் மக்களுக்கான விடுதலையினைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. வன்முறையற்ற போராட்டங்கள் மூலம் தமிழருக்கான விடுதலையினையும், உரிமைகளையும் பெற்றுவிடமுடியும் என்று தந்தை செல்வா மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் முற்றான தோல்வியினையே தழுவியிருந்ததுடன், தமிழரின் இருப்புப் பற்றிய நம்பிக்கயீனத்தையும் தமிழரிடையே ஏற்படுத்திவிட்டிருந்தது. தந்தை செல்வாவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வன்முறையற்ற போராட்டங்களை சிங்கள அரசுகள் தமது அரச இயந்திரத்தினைப் பாவித்தும், காடையர்களை ஏவியும் மிகக் குரூரமாக அடக்கியிருந்தன. மனித விழுமியங்களை மதித்து முன்னெடுக்கப்பட்ட வன்முறையற்ற அகிம்சை ரீதியிலான போராட்டங்கள் சிங்கள அரசுகளால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தன. தமிழ் மக்கள் பலமான, தம்மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக திருப்பித் தாக்கக்கூடிய சக்தியொன்றை எதிர்பார்த்தனர். சுருங்கக் கூறின், ஒரு வீரனை அவர்கள் எதிர்பார்த்தனர். சிறிமாவோ பண்டாரநாயக்கா. துரையப்பாவின் கொலையின் மூலம் தம்மீதான தாக்குதல்களுக்கு தமது உயிரைத் துச்சமென மதித்து, திருப்பியடிக்கக் கூடிய இளைஞர்கள் அமைப்பொன்று உருவாகிவருவதை தமிழ் மக்கள் உணரத் தலைப்பட்டனர். துரையப்பாவின் கொலைக்கு தமிழர்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அவர்களின் மனோநிலையினை மிகவும் தெளிவாகக் காட்டியது. மக்களுடன் நட்பாகப் பழகும் மேயர் ஒருவர் கொல்லப்பட்டதால் அவர்கள் கவலையடைந்திருந்தாலும், சிறிமாவின் அரசியலமைப்பின் மூலம் தமிழர்களை அடிமைகொள்ள அவர் எடுத்துவந்த நடவடிக்கைகளுக்கு தன்னாலான முழு ஆதரவினை வழங்கிவந்த ஒரு தமிழ்த் துரோகி கொல்லப்பட்டது அவர்களுக்கு மகிழ்வினையே கொடுத்திருந்தது. சிங்கள இனவாதத்தின் அரசி என்று தமிழ் மக்களால் முற்றாக வெறுக்கப்பட்ட சிறிமா மீதான அவர்களின் அதிருப்தி பிரபலமான தமிழ் அரசியல்வாதியான துரையப்பாவை அவர்கள் தியாகம் செய்யுமளவிற்கு அவர்களைத் தள்ளிவிட்டிருந்தது. துரையப்பாவின் மரணம் சாதாரண யாழ்ப்பாணத் தமிழனின் மனதில் இதனைச் செய்த தமிழ் இளைஞர்கள் மீது இனம்தெரியாத மரியாதையினையும், பாசத்தினையும் ஏற்படுத்தி விட்டிருந்தது. "பொடியள் செய்துபோட்டங்கள், எங்கட பொடியள் அவங்களுக்குச் சரியான பாடத்தைப் படிப்பித்திருக்கிறாங்கள். நாங்களும் திருப்பியடிக்க எங்களிட்டையும் பலமாக படையொண்டு வந்திருக்கு" என்று கூறியதுடன் தமது இளைஞர்களின் துணிவுபற்றி கெளரவத்துடன் பேசத் தொடங்கினர்.
-
ஒரு துரோகியின் முடிவு தலைவர் பிரபாகரன் துரையப்பா மீதான தாக்குதலுக்கான தயாரிப்பு வேலைகளை பிரபாகரனே பொறுப்பெடுத்தார். தனக்கு உதவுவதற்காக மூவரையும் தெரிவுசெய்தார். கலபதி, கிருபாகரன் மற்றும் பற்குணராஜா ஆகியோரே அந்த மூவரும். தாக்குதலுக்கான ஆயுதத்தினைத் தயாரித்தல் மற்றும் துரையப்பாவைக் கொல்வது ஆகிய வேலைகளைத் தானே செய்வதாகத் அவர் தீர்மானித்தார். ஏனையவர்கள் துரையப்பாவின் நடமாட்டங்களை அவதானிக்கும் பணியில் அமர்த்தப்பட்டனர். துரையப்பா ஒரு கிறீஸ்த்தவராக இருந்தபோதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அவர் தவறாது பொன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த வரதராஜப்பெருமாள் ஆலயத்திற்குச் சென்றுவருவதை புலிகள் அவதானித்தனர். தான் வரதராஜப்பெருமாள் ஆலயத்திற்குச் சென்றுவருவதற்கான காரணத்தை துரையப்பா தனது நம்பிக்கைக்குரிய நண்பர்கள் சிலரிடம் கூறியிருக்கிறார். வரதராஜப்பெருமாள் கோயிலின் அமைவிடமும் அதன் அமைதியான தன்மையும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தனது நண்பரான யாழ்ப்பாண சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரான ராஜசூரியரிடம் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், அவ்வாலயத்தினுள் சென்றவுடன் தனது மனம் அமைதியடைந்துவிடுவதாகவும் அவர் கூறியிருந்தார். அல்பிரெட் துரையப்பா கொல்லப்பட்ட நாளான 1975 ஆம் ஆண்டு ஆடி 26 ஆம் திகதிக்கு முதல் நாள் பொன்னாலையிலிருக்கும் தனது நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற பிரபாகரன், அங்கு தனது நண்பரின் தாயார் சமைத்த உணவினை உட்கொண்டுவிட்டு, வழக்கம் போலவே தனது நண்பருடன் பேசிவிட்டு தூங்கச் சென்றுவிட்டார். அப்போது பிரபாகரன் குண்டுகள் ஏற்றப்படாத கைத்துப்பாகியொன்றை வெளியே எடுத்து தனது தலையணையின் கீழ் வைத்துக்கொண்டு தூங்குவதை நண்பர் அவதானித்தார். அவருக்கருகில் இரண்டு அல்லது மூன்று சிறிய பெட்டிகளும் இருந்தன. "உன்னால் ஒரு காகத்தைத் தன்னும் இத்துப்பாகியைக் கொண்டு சுடமுடியுமா?" என்று வேடிக்கையாக பிரபாகரனைப் பார்த்துக் கேட்டார் நண்பர். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த பிரபாகரன், "அமைதியாய் இரு, நாளைக்கு நடக்கப்போவதை மட்டும் பார்" என்று கூறினார். அந்த நண்பர் பிற்காலத்தில் இச்சம்பவம் பற்றிப் பேசும்போது, "பிரபாகரன் அன்று நன்றாகவே தூங்கினார், காலை விடியுமுன்னரே அவர் கிளம்பிவிட்டார்" என்று கூறுகிறார். நண்பரின் வீட்டிலிருந்து புறப்பட்ட பிரபாகரன் பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயிலின் முன்னாலிருந்த தேனீர்க் கடைக்குச் சென்றார். அங்கே கலபதி, கிருபாகரன் மற்றும் பற்குணராஜா ஆகியோர் அவருக்காகக் காத்திருந்தனர். கொலையின் பின்னரான விசாரணையின்போது சாட்சியமளித்த அக்கடையின் உரிமையாளர், அவர்கள் நால்வரும் தனது கடையில் காலையுணவினை முடித்துக்கொண்டு கோயிலின் அருகில் சென்று எவரின் வருகைக்காகவோ காத்திருப்பதை தான் கண்டதாக கூறினார். சிறிதுநேரத்தில் அங்குவந்த துரையப்பாவின் கார், கோயிலின் வாயிலைக் கடந்து ஒரு சில மீட்டர்கள் சென்று நிறுத்தப்பட்டது. தனது கதவினைத் திறந்துகொண்டு வெளியே இறங்கினார் துரையப்பா. அவருக்காகக் காத்திருந்த நான்கு இளைஞர்களும் அவரைப் பார்த்து, "வணக்கம் ஐயா" என்று கூறினார்கள். இயல்பாகவே நட்பாகப் பேசும் துரையப்பாவும் அவர்களைப் பார்த்து, "வணக்கம் தம்பிகள்" என்று பதிலுக்குக் கூறினார். பிரபாகரன் தான் மறைத்து வைத்திருந்த சுழற்துப்பாக்கியினை வெளியே எடுத்து துரையப்பாவை நோக்கிச் சுட்டார். துப்பாக்கிச் சன்னங்கள் துரையப்பாவின் நெஞ்சுப்பகுதியை ஊடறுத்துச் சென்றன. காயத்திலிருந்து இரத்தப் பீய்ச்சிட்டுப் பாய்ந்தது. நிலைகுழைந்து கீழே விழுந்த துரையப்பா அவ்விடத்திலேயே பலியானார். அதன்பின்னர் துரையப்பாவின் காருக்குச் சென்ற பிரபாகரனும் மற்றைய மூவரும், சாரதியை துரத்திவிட்டு காரை ஓட்டிச் சென்றனர். இனப்பிரச்சினையின் முதலாவது கொலை நடத்தப்பட்டாயிற்று. அது தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சிங்களவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது சிறிமாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழ் மக்களின் தனிநாட்டிற்கான ஆயுதப் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-
குட்டிமணி 1973 ஆம் ஆண்டு அவர் பயணித்த படகிலிருந்து டெட்டனேட்டர்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதையடுத்து குட்டிமணி தமிழ்நாட்டில் கைதானார். இந்தியாவின் வெடிபொருள் மற்றும் கடவுச்சீட்டு சட்டங்களின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட குட்டிமணி இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார். இலங்கையில் அரசுக்கெதிரான பழிவாங்கும் தாக்குதல்களை குட்டிமணி திட்டமிட்டிருந்தார் என்கிற இலங்கையரசின் அறிவிப்பினை ஏற்றுக்கொண்ட அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சரான திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர், முத்துவேல் கருனாநிதி, இலங்கை அரசு கேட்டுக்கொண்டதன்படி குட்டிமணியை இலங்கைக்கு நாடுகடத்த ஒப்புக்கொண்டார். இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட குட்டிமணி சிலகாலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அதேவேளை யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வந்திறங்கிய தங்கத்துரை தனது இயக்கத்தின் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்தார். 1975 ஆம் தைமாதம், மூன்றாவது அமைப்பொன்று உருவாக்கப்பட்டது. லண்டன் நகரில், தொடர்மாடிக் குடியிருப்பில் இடம்பெற்ற பல சம்பாஷணைகளின் விளைவாக இளையதம்பி இரத்திணசபாபதி மற்றும் அருளர் எனப்படும் அருட்பிரகாசம் ஆகியோர் இணைந்து இந்த மூன்றாவது அமைப்பினை உருவாக்கினர். இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது தமிழரின் பிரச்சினையை உலகறியச் செய்வதுதான். இவ்வமைப்பைச் சேர்ந்த சிலர் 1975 ஆம் உலகக் கிண்ண உதைபந்தாட்டம் நடைபெற்ற நகரங்களான இங்கிலாந்தின் ஓவல் மைதானம் மற்றும் மஞ்செஸ்ட்டர் மைதானம் ஆகியவற்றில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன், ஒருசிலர் இலங்கையில் சிங்கள அரசு தமிழர் மேல் புரிந்துவரும் அட்டூழியங்களை பதாதைகளில் எழுதி, அவற்றினைக் கைகளில் உயரப்பிடித்தவாறு மைதானத்தின் குறுக்கே ஓடினர். இவ்வமைப்பின் கிளையொன்று யாழ்ப்பாணத்திலும் திறக்கப்பட்டதோடு, 1976 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் வவுனியா கண்ணட்டி பகுதியில் இவ்வமைப்பின் இராணுவப் பயிற்சி முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இன்னுமொரு ஆயுத அமைப்பொன்று 1975 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டு, சுமார் 40 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டது. இந்த உறுப்பினர்களுக்கு பலவிதமான அரசியல்க் கொள்கைகள் இருப்பினும், ஒரு அமைப்பாக அமிர்தலிங்கத்தின் கீழ் இவர்கள் செயற்பட்டனர். இந்த அமைப்பில் இருந்த இடதுசாரி கொள்கையுடைய பல உறுப்பினர்கள் தமிழர் ஐக்கிய முன்னணியினரிடமிருந்து கட்டளைகளைப் பெற்றுக்கொள்வதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைப்பொறுத்தவரை தமிழ் அரசியல்வாதிகள் உதட்டளவில் மட்டுமே தமிழர் நலன்குறித்துப் பேசுபவர்களாகவும், பாராளுமன்ற பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும் அரசியல் செய்பவர்களாகவுமே தெரிந்தனர். ஆகவே, தமிழ் இளைஞர் பேரவை என்பது, இந்த அரசியல்வாதிகளிடமிருந்து தன்னை விலத்தி, செயற்றிறன் மிக்க, சமூக மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பினர். அத்துடன் தமிழர் ஐக்கிய முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட சாதி ஒழிப்புக் கோஷம் பொய்யானது என்றும் அவர்கள் வாதிட்டனர். இந்த வாதப் பிரதிவாதங்களின் விளைவாக தமிழ் இளைஞர் பேரவை 1975 ஆம் ஆண்டு ஆனி மாதம் இரு பிரிவுகளாக உடைந்தது. அதன்படி மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் ஆகியோர் தலைமையில் ஒரு பிரிவு தொடர்ந்தும் தமிழர் ஐக்கிய முன்னணியோடு செயற்பட, முத்துக்குமாரசாமி மற்றும் வரதராஜப்பெருமாள் தலைமையிலான மற்றைய பிரிவு பிரிந்துசென்று ஈழம் விடுதலை இயக்கம் எனும் அமைப்பினை உருவாக்கியது. துரோகிகளை அழித்தல் சிவாகுமாரனினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட, சிறிமாவின் தமிழ் முகவர்களான துரோகிகளைக் கொல்லும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க பிரபாகரன் முடிவெடுத்தார். 1975 ஆம் ஆண்டு, தமிழ் மக்கள் தனிநாட்டிற்கான ஆணையினை தந்தை செல்வாவிற்கு வழங்கிய அதே காலப்பகுதியிலேயே தமிழினத்தின் துரோகிகளை கொல்லும் முடிவினை பிரபாகரன் எடுத்திருந்ததாக அந்நாட்களில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பிலிருந்த உறுப்பினர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தனது அமைப்பினருடன் நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்ட பிரபாகரன் தனது முடிவிற்கான காரணம்பற்றி தெளிவாக விளக்கியிருந்ததாகவும் கூறினார். இந்தக் கலந்துரையாடல்களில் இலங்கைத் தமிழரின் சரித்திரப் பெருமைபற்றி பிரபாகரன் பரவசத்துடன் பேசியிருக்கிறார். குறிப்பாக யாழ்ப்பாண ராஜ்ஜியம் பற்றியும், போர்த்துக்கேயரிடம் அது வீழ்ச்சியுற்றது பற்றியும், பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதியில் தமிழ்த் தலைவர்களின் அசமந்தத்தினால் தமிழரின் இறையாண்மை சிங்களவரிடம் அடகுவைக்கப்பட்டதுபற்றியும் உணர்வுபொங்க அவர் பேசியிருக்கிறார். மேலும், காங்கேசந்துறை இடைத்தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை தமிழ் மக்கள் வழங்கியது குறித்துப் பேசிய பிரபாகரன், மக்கள் ஆணையின்படி இழக்கப்பட்ட தமிழரின் இறையாண்மையினை மீளப்பெற்றே தீருவோம் என்று முழங்கியதாகவும் கூறுகிறார். "இந்த உன்னதமான கடமை எமது தோள்களில் சுமத்தப்பட்டிருக்கிறது. இது இலகுவான காரியமல்ல. மிகவும் கடுமையானதாகவும் நீண்டதாகவும் இது இருக்கப்போகிறது. ஆனால், நாங்கள் இதனை செய்துமுடிப்போம்" என்று பிரபாகரன் கூறியிருக்கிறார். பிரபாகரனுக்கு அப்போது 20 வயதே ஆகியிருந்தது. அவரது வழிநடத்துதலின் கீழ் 30 போராளிகள் செயற்பட்டுவந்தனர். அவரிடமிருந்த ஆயுதங்கள் இரு கைத்துப்பாக்கிகள் மட்டுமே. ஒன்று வெளிநாட்டில் செய்யப்பட்டது, மற்றையது உள்நாட்டுத் தயாரிப்பு. வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் தனது பயிற்சிமுகாமினை அமைத்திருந்த பிரபாகரன் தனது தோழர்களுக்கு துப்பாக்கியை நேராகச் சுடும் பயிற்சியை வழங்கிவந்தார். தமது நள்ளிரவு கலந்துரையாடல்களில் தமது முதலாவது ராணுவ நடவடிக்கையின் இலக்கினை தெரிவுசெய்தார்கள். அவர்தான் யாழ் மேயர் அல்பிரெட் துரையப்பா. அது அமைப்பின் உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட ஏகமனதான முடிவு. தமது இலக்கு யாரென்பதைத் தெரிவித்த பிரபாகரன், அதற்கான காரணத்தையும் உறுப்பினர்களுக்கு விளக்கினார். அதில் முதலாவது குற்றச்சாட்டு, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத்தமிழர் மாநாட்டில் நடந்த படுகொலைகளில் துரையப்பா ஆற்றிய பங்கு. இரண்டாவது குற்றச்சாட்டு, தமிழாராய்ச்சி மாநாட்டின் படுகொலைகள் முடிந்த கையோடு, யாழ்ப்பாணத்தில் சிறிமாவுக்கு வரவேற்பளிக்க மக்களை பலவந்தமாகத் திரட்ட அவர் எடுத்த முயற்சிகள். மூன்றாவது குற்றச்சாட்டு, சிறிமாவின் அரசுக்கு ஆதரவான தளம் ஒன்றினை தமிழர்களிடையே ஏற்படுத்துவதற்கு துரையப்பா செய்துவந்த நடவடிக்கைகள். வரதராஜப் பெருமாள் கோயில், பொன்னாலை யாழ்ப்பாணம்
-
காங்கேசந்துறை இடைத்தேர்தலும் மக்கள் ஆணையும் காங்கேசந்துறை தொகுதி இடைத்தேர்தலை அறிவித்ததமை அரசை சிக்கலில் வீழ்த்தியிருந்தது. தந்தை செல்வாவுக்கு எதிராக இத்தொகுதியில் போட்டியிடுவதற்கு ஒருவரைத் தெரிவுசெய்வதென்பது அரசைப்பொறுத்தவரையில் கடிணமான விடயமாகக் காணப்பட்டது. இவ்விடயம் வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிமாவினால் பிரஸ்த்தாபிக்கப்பட்டது. இத்தேர்தலில் அரசாங்கத்தினால் நிறுத்தப்படும் வேட்பாளர் நிச்சயம் தோல்வியடைவார் என்பதை தான் நம்புவதாகக் கூறிய சிறிமா, அத்தோல்வி கெளரவமான முறையில் அமைவதை உறுதிசெய்யவேண்டும் என்றும் கூறினார். இதற்காக தமிழர் ஐக்கிய முன்னணியினரின்ருக்கெதிரான வாக்குகள் பிரிக்கப்படாமல் இருக்க பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க அவர் தீர்மானித்தார். காங்கேசந்துறையில் ஆதரவுத்தளம் ஒன்றினைக் கொண்டிருக்கும் கம்மியூனிஸ்ட் கட்சியிலிருந்து ஒருவரைத் தெரிவு செய்யலாம் என்று அமைச்சரவை அவருக்கு ஆலோசனை வழங்கியது. இதன்படி, கம்மியூனிஸ்ட் கட்சி வி. பொன்னம்பலத்தை இத்தேர்தலில் நிற்குமாறு கேட்டுக்கொண்டாலும்கூட, அவர் இதனை இலகுவில் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. தந்தை செல்வாவின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு நிகரான மாற்று தீர்வொன்றினை தான் மக்களிடம் முன்வைத்தாலன்றி இத்தேர்தலில் தன்னால் போட்டியிட முடியாதென்று பொன்னம்பலம் தனது கட்சியின் அரசியல்த் துறையினரிடம் கூறினார். பொன்னம்பலம் தனது கட்சியினரிடையே தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வாக பிராந்தியங்களுக்கான சுயாட்சி முறையினை முன்வைத்து விவாதித்து வந்திருந்தார். ஆகவே, வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான தன்னாட்சி அதிகாரத்தை உருவாக்குவதாக உத்தியோகபூர்வமற்ற முறையில் அவர் தேர்தலில் மக்களின் முன் பிரச்சாரப்படுத்தலாம் என்று அவரது கட்சி மேலிடம் அனுமதியளித்தது. சுமார் 41,227 வாக்காளர்கள் கொண்ட இத்தொகுதி மக்களிடம் இரு விடயங்களுக்கான ஆணையைத் தருமாறு தந்தை செல்வா கேட்டிருந்தார். முதலாவது 1972 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பான ஒற்றையாட்சி முறையினை நிராகரிப்பது. இரண்டாவது தமிழர்கள் தமக்கான தனிநாட்டை உருவாக்கிக்கொள்வதென்பது. தந்தை செல்வாவின் தேர்தல் பிரச்சாரப் பேரணிகளில் ஆயுத அமைப்புக்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். பிரபாகரனும் அவரது தோழர்களும் தந்தை செல்வாவிற்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக்கிளையின் தலைவர் மற்றும் செயலாளர்களான ஈழவேந்தன் மற்றும் உமாமகேஸ்வரன் போன்றோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இத்தொகுதியின் ஓவ்வொரு வீட்டிற்கும் சென்ற இவர்கள் மக்கள் அனைவரும் தமிழ் ஈழமென்னும் தனிநாட்டிற்காக வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போதே பிரபாகரனும் உமாமகேஸ்வரனும் முதன்முதலாக சந்தித்துக்கொண்டதாக ஈழவேந்தன் கூறியிருந்தார். காங்கேசந்துறை இடைத்தேர்தல் 1975 ஆம் ஆண்டு மாசி மாதம் 6 ஆம் திகதி நடைபெற்றது. தந்தை செல்வா அதிகூடிய வாக்கு வித்தியாசத்தில், அறுதியான வெற்றியைப் பெற்றார்.மொத்த வாக்காளர்களில் 87.09 வீதமானோர் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்தனர். அத்தொகுதியின் வரலாற்றில் இதுவே மிகக்கூடிய வாக்களிப்பு வீதமாகும். பொன்னம்பலத்திற்கு வழங்கப்பட்ட 9,547 வாக்குகளுக்கெதிராக தந்தை செல்வா 25,927 வாக்குகளைப் பெற்றார். உடல் ஊனமுற்றிருந்த வாக்காளர்களைக் கூட தமது தோள்களில் சுமந்துசென்று போராளிகள் வக்களிப்பில் கலந்துகொள்ளச் செய்திருந்தனர். தனது தேர்தல் வெற்றியின்பின்னர் மக்களிடம் உரையாற்றிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார், "அந்நியரின் ஆக்கிரமிப்பினூடாக ஒருகுடையின் கீழ் கொண்டுவரப்படும்வரை இந்த நாட்டின் தமிழர்களும், சிங்களவர்களும் வெவ்வேறானஇறையாண்மைகொண்ட மக்கள் கூட்டங்களாகவே சரித்திர காலம் முதல் வாழ்ந்து வந்தனர். கடந்த 25 வருடங்களாக ஒருமித்த இலங்கையினுள் சிங்களவர்களுக்குச் சமமான வகையில் அரசியல் உரிமைகளைப் பெற நாம் போராடி வருகிறோம்". "ஆனால், மிகவும் வேதனையளிக்கும் விதமாக தொடர்ந்து ஆட்சியமைத்துவரும் சிங்களத் தலைவர்கள் சுதந்திரம் அடைந்ததன் பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அபரிதமான அதிகாரத்தினைப் பாவித்து எமக்கான அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்து வருவதுடன், எம்மை இரண்டாம்தர மக்கள் எனும் நிலைக்கும் தள்ளிவருகிறார்கள். தமிழ் மக்களுக்கெதிராகப் பாகுபாடு காட்டுவதன் மூலம் இதனை அவர்களால் செய்துவர முடிகிறது". "இத் தேர்தல் வெற்றியின் மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையின்படி எனது மக்களுக்கும், இந்தநாட்டிற்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவெனில் தமிழ் மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் சுயநிர்ணய உரிமையின் பிரகாரம், சுதந்திரமான தனிநாடான தமிழீழத்தினை உருவாக்குவோம் என்பதாகும்". இதனைச் செவிமடுத்துக்கொண்டிருந்த இளைஞர்கள் "தமிழ் ஈழமே எமது தாய்நாடு" என்றும் "தமிழ் ஈழமே எமது விருப்பு" என்றும் கோஷமிட்டனர். பல இளைஞர்கள் தந்தை செல்வாவின் அருகில் சென்று தமது சுட்டுவிரலில் கிறி, அவரது நெற்றியில் இரத்தத் திலகம் இட்டனர். எஸ் ஜே வி செல்வனாயகம் அன்றிலிருந்து தான் இறந்த 1977, சித்திரை 5 ஆம் திகதிவரை தான் கொண்ட கொள்கையில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. தனது பேச்சுக்களில் தனிநாட்டிற்கான அவசியத்தை அவர் நியாயப்படுத்தியே வந்திருந்தார். தமிழீழம் என்பது நிலப்பரப்பு ரீதியியாகவும், மக்கள் தொகையிலும் சிறியதாக இருப்பதால் சாத்தியமற்றது என்று அவரை விமர்சித்தவர்களுக்கு அவர் வைகாசி மாதம், 1975 ஆம் ஆண்டு கொக்குவிலில் நடைபெற்ற கூட்டத்தில் பதிலளித்திருந்தார். "தமிழ் ஈழத்தைக் காட்டிலும் மக்கள் தொகையிலும், நிலப்பரப்பிலும் குறைந்த நாடுகள் தம்மை சுதந்திரமான, தனியான நாடுகளாக அரசாண்டு வருகின்றன. அப்படியிருக்கையில், ஏன் தமிழர்கள் தமக்கான தனிநாட்டிற்கான போராட்டத்தை முன்னெடுக்கக் கூடாது?" என்று அவர் கேள்வியெழுப்பினார். சிங்கள அரசுடன் மேலும் பேச்சுவார்த்தைகளில் தமிழர்கள் ஈடுபடவேண்டும் என்று கூறிவந்தோருக்கு 1975 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 2 ஆம் திகதி, தெல்லிப்பழை கொல்லன்கலட்டியில் பதிலளித்துப் பேசிய தந்தை செல்வா, "நாங்கள் அவர்களுடன் தேவையானளவிற்குப் பேசியாயிற்று. எமக்கு சட்டரீதியாகக் கிடைக்கவேண்டிய உரிமைகளைப் பெறுவதற்காக எமது சிங்களச் சகோதரர்களுடன் கடந்த 25 வருடங்களாக சமாதான வழிமுறைகளில் கேட்டு வந்திருக்கிறோம். பல சிங்களத் தலைவர்களுடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதோடு, பல ஒப்பந்தங்களையும் செய்திருக்கிறோம். ஆனால், எமது எல்லா முயற்சிகளும் தோற்றுப்போயுள்ள நிலையில் நாம் அவர்களுக்கு "வணக்கம்" கூறி விடைபெறும் காலமும் எமக்கான தனிநாட்டினை உருவாக்கும் காலமும் வந்துவிட்டது". என்று கூறினார். ஆயுத அமைப்புக்கள் மிதவாத அரசியல்த் தலைவர்கள் தமது வன்முறையற்ற அரசியல் செயற்பாடுகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் முற்றான தோல்வியினைச் சந்தித்தையடுத்து, விரக்தியுற்று தமது முன்னைய நிலைப்பாடான ஒருமித்த இலங்கைக்குள் சமஷ்ட்டி அடைப்படியிலான தீர்வினைக் காணுதல் என்பதிலிருந்து தனியான நாடு என்பதே ஒரே வழி எனும் நிலைப்பாட்டிற்கு வந்துகொண்டிருக்க, ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்த இளைஞர்கள் தம்மை ஒருங்கிணைப்பதிலும், பலப்படுத்துவிதலும் ஈடுபட்டிருந்தார்கள். 1975 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் இரு ஆயுத அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் மறைவாக இயங்க ஆரம்பித்திருந்ததுடன், மூன்றாவது அமைப்பு இங்கிலாந்து லண்டனில் உருவாக்கப்பட்டது. பிரபாகரன் குழு என்று அறியப்பட்ட புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பே இவற்றுள் முதன்மையானதாகக் காணப்பட்டது. அவ்வியக்கத்தினது அர்ப்பணிப்பு மிக்க போராடக் கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை 30 வரை அதிகரித்திருந்தது. அதனிடம் அப்போது இரு துருப்பிடித்த சுழற்துப்பாக்கிகளும், வீட்டில் செய்யப்பட்ட இரு கையெறிகுண்டுகளும் மாத்திரமே இருந்தன. இவற்றினை வைத்துக்கொண்டே சிறிமாவுக்கு வரவேற்பளிக்க துரையப்பாவும், குமாரசூரியரும் மேற்கொண்ட முயற்சிகளை பிரபாகரனின் போராளிகள் தவிடுபொடியாக்கியிருந்தனர். செட்டியே இந்த செயற்பாடுகளின் பிரதானமாகச் செயற்பட்டிருந்தார். செட்டிமேல் பிரபாகரன் வைத்திருந்த நம்பிக்கை அப்போது பலனளித்திருந்தது போலத் தோன்றியது. ஆனால், செட்டி தொடர்பாக பெரிய சோதி கொண்டிருந்த ஐய்யமும் தவறானதல்ல. ஏனென்றால், தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தைக் கொள்ளையடித்த செட்டி, சுமார் 69,000 ரூபாய்களை தன்னுடனேயே வைத்திருந்தார். திடீரென்று அவருக்கு வந்த வசதியினைப் பார்த்து சந்தேகித்த நண்பர்கள் இது குறித்து அவரிடம் வினவியபோது, அப்பணத்தைக்கொண்டு தான் ஒரு பழைய காரினை வாங்கியதாக அவர் பொய்யுரைத்திருந்தார். 1974 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் அவர் கைதுசெய்யப்பட்டார். செட்டியின் கைது பிரபாகரனுக்கு சிக்கலான சூழ்நிலையினைத் தோற்றுவித்தது. பொலீஸாரின் கடுமையான விசாரணைகளின்போது, செட்டி தனது இருப்பிடங்க்களை நிச்சயம் காட்டிக்கொடுத்துவிடுவார் என்பதை பிரபாகரன் உறுதியாக நம்பினார். மேலும், தமிழ் அதிகாரி பத்மநாதன் செட்டிக்கு வழங்கிய சித்திரவதைகளை பிரபாகரனே எதிர்பார்க்கவில்லை என செட்டியின் நண்பர் ஒருவர் பிற்காலத்தில் என்னிடம் கூறியிருந்தார். பத்மநாதன் செட்டியை ஒருவாறு பொலீஸ் உளவாளியாக மாற்றுவதில் வெற்றி கண்டிருந்தார். செட்டியின் கைதின் பின்னர் பிரபாகரனுக்குப் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. பழங்களையும், நண்பர்களிடமிருந்து கிடைக்கும் உணவையும் உட்கொண்டே அவர் சமாளித்து வந்தார். மிகுந்த களைப்புடனும், பசியுடனும் அவர் தனது தோழர்களின் வீடுகளுக்கு சொல்லமலேயே வந்துவிடுவார். அவரை தமது சமையலறைக்குள் அழைத்துச் சென்ற அவர்கள் அங்கிருந்த உணவுகளை அவருக்குக் கொடுப்பார்கள். அதனை அவர் உட்கொண்டுவிட்டு, அங்கேயே சில மணிநேரம் படுத்துறங்கிச் சென்றுவிடுவார். எம். என், நாராயணசாமி தனது புத்தகமான "இலங்கையின் புலிகள்" இல் குறிப்பிடும்போது, "அவருக்கு ஒருமுறை மஞ்சள்க் காமாலை வந்திருந்தது. ஆனால், அவரோ வைத்தியரிடம் போக விரும்பவில்லை. ஆனால் அதிசயமாக, அவரது தோழர்களுக்கு வியப்பளிக்கும் வகையில் அவர் குணமானார்" என்று எழுதுகிறார்.
-
திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் கேட்ட தமிழர்களும், யாழ்ப்பாணத்தில் திறந்த சிறிமாவும் ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான எதிரணிக்கு மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் ஆதரவு சிறிமாவின் அரசை அச்சப்படுத்தியிருந்தது. ஆகவே, தமிழர் ஐக்கிய முன்னணியினை தன்பக்கம் வைத்திருக்க விரும்பியது. திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைக்குமாறு தமிழர்கள் பல காலமாக அரசைக் கேட்டுவந்தனர். ஆனால் இதுதொடர்பாக பாராமுகமாக இருந்துவந்த சிறிமா, இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து, தமிழரின் வாக்குகளை தன்பக்கம் இழுத்துக்கொள்ள, யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பலகலைக்கழகம் ஒன்றினை அமைக்கப்போவதாக அறிவித்தார். மேலும், தானே இப்பல்கலைக்கழகத்தினைத் திறந்துவைக்கப்போவதாகவும் தெரிவித்தார். பொன்னம்பலம் இராமநாதன் (1851 - 1930) அது ஒருவகையான தந்திரோபாய அரசியல் அறிவிப்பு. இளைஞர்கள் சிறிமா செய்யப்போவதை உணரந்துகொண்டனர். சிறிமாவின் சிங்கள அரசு செய்ய நினைப்பது திருகோணமலையில் அமைக்கும்படி தமிழர்களால் கோரப்பட்ட தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்றினை அவர் அமைப்பதன் மூலம் வடக்குத் தமிழர்களுக்கும் கிழக்குத் தமிழர்களுக்கும் இடையே பிரிவினையொன்றை உருவாக்கவே அவர் முனைகிறார் என்பதனை தெளிவாகப் புரிந்துகொண்டனர். உடனடியாக செயலில் இறங்கிய பல்கலைக்கழக அதிகாரிகள், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவிருக்கும் புதிய பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் கைலாசபதி அவர்களைத் தலைவராக தேர்வுசெய்ததுடன், அப்பல்கலைக்கழகத்தினை அமைப்பதற்காக பொன் பொன்னம்பலம் ராமநாதனால் உருவாக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியின் வளாகத்தினை தெரிவுசெய்தனர். 1974 ஆம் ஆண்டு ஐப்பசி 6 ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சிறிமா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார். பல்கலைக்கழகத்தினை சிறிமா திறந்துவைக்கும் நிகழ்வினை முற்றாகப் புறக்கணிக்குமாறு போராளிகள் மக்களைக் கேட்டுக்கொண்டதோடு, சிறிமாவின் ஆதரவாளர்களால் யாழ்க்குடாநாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட பிரதமரை வரவேற்கும் எந்த அரச நிகழ்விலும் பங்கெடுக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். பிரதமரின் வருகைக்கெதிராக கறுப்புக்கொடி போராட்டத்தையும் அவர்கள் ஒழுங்குசெய்தனர். தமிழர் ஐக்கிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அவர்களது ஆதரவாளர்களும் இளைஞர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளினை ஏற்றுக்கொண்டனர். தமிழ் மக்கள் சார்பாக முடிவெடுக்கும் அதிகாரம் அபோது ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்களின் கைகளுக்கு மாறியிருந்தது. சிவகுமாரனின் மரணமும், சத்தியசீலனின் கைதும் நான்கு ஆயுத அமைப்புக்களின் இரண்டினை முற்றாகச் செயலிழக்க வைத்திருந்தன. மேலும், தங்கத்துரையும் குட்டிமணியும் தொடர்ந்தும் சேலத்தில் தங்கியிருந்தமை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயற்பாடுகளையும் பெரிதாகப் பாதித்திருந்தது. பிரபாகரனின் யாழ் மீள்வருகையோடு, அவரது இயக்கமான புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பு மட்டுமே யாழ்ப்பாணத்தில் வீரியத்துடன் செயற்படத் தொடங்கியது. 20 வயது நிரம்பிய பிரபாகரனின் முடிவுகளை மரியாதையுடன் மக்கள் ஏற்றுக்கொள்ள தமிழர் ஐக்கிய முன்னணியினரும் வேண்டாவெறுப்புடன் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த சிறிமாவுக்கு மிகச் சூடான வரவேற்பினை பிரபாகரன் அளித்தார். சிறிமாவின் வருகையினையொட்டி யாழ்க்குடாநாட்டின் 6 இடங்களில் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன. யாழ்ப்பாணச் சந்தை, காங்கேசந்துறை பொலீஸ் நிலையம், கம்மியூனிஸ்ட் கட்சி அரசியல்த்துறை உறுப்பினர் பொன்னம்பலத்தின் வீடு ஆகியன இலக்குவைக்கப்பட்டிருந்தன. பொன்னம்பலமே சிறிமாவின் மொழிபெயர்ப்பாளராக செயலாற்றியிருந்தார். இந்தக் குண்டுவெடிப்புக்களால் எவருக்கும் உயிர்ச்சேதமோ அல்லது உடமைகளுக்கு கடுமையான சேதங்களோ ஏற்பட்டிருக்கவில்லை, ஆனால் அச்சகரமான சூழ்நிலையொன்றினை இது தோற்றுவித்திருந்தது. இவற்றிற்கு மேலதிகமாக சில பேரூந்துகள் மீது கல்லெறிரித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் ஒரு சில தீக்கிரையாக்கப்பட்டும் இருந்தன. சிறிமாவின் யாழ் வருகையினை முன்னிட்டு அல்பிரெட் துரையப்பாவும், அமைச்சர் செல்லையா குமாரசூரியரும் மேற்கொண்ட வரவேற்பு நிகழ்வுகளுக்கு மக்கள் கூட்டத்தினை ஒன்றுதிரட்ட அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பிசுபிசுத்துப் போயின. துரையப்பாவே இதில் மும்முரமாக மக்களைத் திரட்ட எத்தனித்ததுடன், தனது சொந்த வாகனத்திலேயே மக்களை நிகழ்விற்கு அழைத்துவரவும் முயன்றார். சிறிமாவின் யாழ்வருகையும், அதனூடாக அவர் அடைய நினைத்த மக்கள் ஆதரவு முயற்சியும் படுதோல்வியைச் சந்தித்திருந்தன. தமிழ் ஆயுத அமைப்புக்களின் சொற்படி தமிழர் ஐக்கிய முன்னணி நடக்க எடுத்த முடிவும் அரசிற்கு எரிச்சலினை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் தமிழர் ஐக்கிய முன்னணிக்கெதிராக தனது கோபத்தினைக் காட்டிக்கொள்ளும் நிலையில் சிறிமாவின் அரசு இருக்கவில்லை. எதிரணியின் வளர்ந்துவரும் செல்வாக்கிற்கு அஞ்சியிருந்த அரசாங்கம் தமிழர் ஐக்கிய முன்னணியினரிற்கு அப்போது அழுத்தங்களைக் கொடுக்க விரும்பவில்லை.தமிழர் ஐக்கிய முன்னணியினரின் இரு கோரிக்கைகளான காங்கேசந்துறைத் தொகுத்திக்கான இடைத்தேர்தலினை நடத்துவது மற்றும் சிறையிலிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுதலை செய்வது ஆகியவற்றினை செய்ய ஏற்றுக்கொண்ட அரசு தேர்தலினை நடத்தியதோடு சில இளைஞர்களையும் விடுதலை செய்தது. மேலும், தனது அரசு அறிவித்த பல்கலைக்கழக தரப்படுத்தல் முறை மூலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்த வடபகுதி மாணவர்களையும் இளைஞர்களையும் சமாதானப்படுத்த மாவட்ட ரீதியான பல்கலைக்கழக அனுமதி எண்ணிக்கை முறையினையும் அறிவித்தது. தமிழ் பரீட்சைத்தாள்களைத் திருத்தும் தமிழ் ஆசிரியர்கள், தமிழ் மாணவர்களுக்கு சாதகமாகச் செயற்படுகிறார்கள் என்கிற சிங்களவர்களின் குற்றச்சாட்டினை அடுத்து அரசால் நியமிக்கப்பட்ட கியுனிமன் ஆணிக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே மாவட்ட ரீதியிலான பல்கலைக்கழக அனுமதி எண்ணிக்கை முறையினை அரசு கொண்டுவந்தது. கியுனிமன் ஆணிக்குழுவின் அறிக்கையின்படி, "ஒரு குறிப்பிட்ட மொழியில் பதிலளிக்கப்படும் வினாத்தாளகளை திருத்தும் ஆசிரியர்கள் அம்மாணவர்களுக்குச் சார்பாகத் திருத்துவதற்கான சாத்தியங்களோ, அல்லது அப்படி நடந்தமைக்கான சாட்சிகளோ எம்மால் கண்டறியப்படவில்லை" என்று சிங்களவர்களின் குற்றச்சாட்டினை முற்றாக நிராகரித்திருந்தது. மேலும், அரசால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த தரப்படுத்தல் முறையானது இனங்களுக்கிடையிலான நம்பிக்கையீனத்தையும், சந்தேகத்தினையும் மேலும் ஆளமாக்கி விட்டிருப்பதாகவும் பொதுப்பரீட்சைகளின்மீது மக்கள் வைத்திருந்த நம்பகத்தன்மையினையும் தரப்படுத்தல் முறை வெகுவாக பாதித்திருக்கிறது என்றும் கூறியது. 1974 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்ட ரீதியிலான பல்கலைக்கழக அனுமதி முறையின்படி பல்கலைக்கழகங்களிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களில் 30 வீதமானோர் மெரிட் மூலமாகவும், 55 வீதமானவர்கள் மாவட்டங்களுக்கான எண்ணிக்கை மூலமாகவும், மிகுதி 15 வீதமானோர் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டனர். மாவட்ட எண்ணிக்கை அடிப்படையிலான அனுமதி முறை யாழ்ப்பாண மாணவர்களைப் பாதித்திருந்தபோதிலும், வேறு மாவட்டங்களில் வாழும் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் புகும் நிலையினை உருவாக்கியிருந்தது. 1974 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 7 வீதத்திற்கு வீழ்ச்சி கண்டது. இது மொத்த மக்கள் தொகையில் யாழ்ப்பாண மக்களின் எண்ணிக்கை வீதத்திற்குச் சமனானது. ஆனால், இந்த புதிய அனுமதி முறை வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்த தமிழ் மாண்வர்களுக்கு அனுகூலமாக அமைந்தது. இந்த மாவட்ட ரீதியிலான அனுமதி முறையூடாகவே கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து முதன்முதலாக ஒரு மாணவர் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகும் வாய்ப்புக் கிடைத்திருந்தது.
-
முதலாவது இராணுவ நடவடிக்கை நாடுதிரும்பிய பிரபாகரன் சிவகுமாரன் முயன்று செய்யமுடியாமற்போன ஒரு விடயத்தைப் பிரபாகரன் செய்துமுடித்தார். அதுதான் யாழ்நகர மேயராக இருந்த அல்பிரெட் துரையப்பாவைக் கொல்வது. சிவகுமாரனின் திடீர் மரணமும் பிரபாகரன் நாடுதிரும்புவதற்கான காரணிகளில் ஒன்றாகவிருந்தது. சிவகுமாரனின் மறைவோடு அரசுக்கெதிரான கிளர்ச்சியாளாளர்களின் செயற்பாடுகள் மந்தகதியினை அடைந்தன. ஆகவே, இச்செயற்பாடுகளுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க தான் நாடு திரும்புவது அவசியமானதென்று பிரபாகரன் கருதினார். அப்போது பிரபாகரனுடன் செட்டியும் இருந்தார். புதிய தமிழ்ப் புலிகளை பிரபாகரன் ஆரம்பிக்கும்போது செட்டியும் அவருடன் இருந்தார். 1973 ஆம் ஆண்டு செட்டி கைதுசெய்யப்பட்டு அநுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டபோது, அங்கிருந்து தப்பி அவர் சென்னை வந்தடைந்திருந்தார். பிரபாகரனுடன் கோடாம்பக்கத்தில் தங்கியிருந்த பெரிய சோதி, பிரபாகரன் செட்டியுடன் சேர்ந்து செயற்படுவதை விரும்பியிருக்கவில்லை. அதனால், குட்டிமணி தங்க்த்துரை ஆகியோரிடம் இதுபற்றி முறையிட்டிருந்தார். ஆனால், இந்த அழுத்தங்களுக்கு அடிபணிய பிரபாகரன் விரும்பவில்லை. அவரைப்பொறுத்தவரையில் அன்றைய தேவையாக இருந்தது தாயகத்தில் அரசுக்கெதிரான ராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது மட்டுமே, அதற்கு செட்டி அவருக்குச் சரியான ஆளாகத் தெரிந்ததனால், அவருடன் சேர்ந்து செயற்பட அவர் தீர்மானித்திருந்தார். சிவகுமாரன் மரணித்து ஏறத்தாள ஒன்றரை மாதத்திற்குப் பின்னர், 1974 ஆம் ஆண்டு ஆடி மாதம் பிரபாகரன் நாடு திரும்பினார். தனக்கான மறைவிடங்களைக் கண்டுபிடிப்பதில் பல கஷ்ட்டங்களை அவர் அனுபவிக்க நேர்ந்தது. அவரது முன்னைய மறைவிடங்கள் அனைத்தையும் பொலீஸார் அறிந்துவைத்திருந்தனர். அவரிடம் பணமிருக்கவில்லை. ஊரிலிருந்த அவரது முன்னாள்த் தோழர்களும் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். பொலீஸாரின் கண்களிலிருந்து தப்பியிருந்த ஒருசில நண்பர்களும் அச்சம் காரணமாக பிரபாகரனுக்கு உதவ முன்வரவில்லை. ஆயுதரீதியில் செயற்பட எத்தனித்த பல இளைஞர்கள் மீது பொலீசார் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வந்த காலம் அது. இப்போராளிகளைத் தேடி வேட்டையாடுவதில் முன்னின்று செயற்பட்ட பல தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகள் மிகக்கடுமையாக இருந்தன. தமிழ்ப் பொலீஸ் பரிசோதகர்களான பஸ்த்தியாம்பிள்ளை, பத்மநாதன், மற்றும் தாமோதரம்பிள்ளை ஆகியோர் மேலிடத்திலிருந்து வரும் பாராட்டுதல்களுக்காகவே தமிழ் இளைஞர்களைத் தேடித்தேடி வேட்டையாடி வந்தனர். "அவர்கள் எப்படியாவது இளைஞர்களைப் பிடித்துவிடுவார்கள்" என்ற பெயர் பொலீஸ் திணைக்களத்தில் அவர்களுக்கு இருந்தது. தமிழ் இளைஞர்களுடன் கடுமையாக நடந்துகொள்ளுமாறு அரசாங்கமும் இவர்களைப் பணித்திருந்தது. அமைச்சர் குமாரசூரியர் இந்தவிடயத்தில் மிகக்கடுமையாக நடந்துகொண்டிருந்தார். தமிழ் ஆயுத அமைப்புக்களை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடக் கங்கணம் கட்டிய குமாரசூரியர் தமிழ் பொலீஸ் அதிகாரிகளின் கடுமையான செயற்பாடுகளின் பின்னால் இருந்துவந்தார். தமிழர்களை அரசின் வழிக்குக் கொண்டுவர குமார்சூரியர் எடுத்துவந்த முயற்சிகளையெல்லாம் தமிழ் இளைஞர்கள் குழப்பிவிடுவார்கள் என்பதை அவர் உணரத் தலைப்பட்டார்.
-
முதலாவது மாவீரர் சிவகுமாரனின் உருவச்சிலை – 2004 சிவகுமாரனே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது மாவீரன் என்று தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொண்டது. அவரது உயிர்த்தியாக நாள் மாணவர் எழுச்சி நாளன்று நினைவுகூரப்பட்டது. பிரபாகரனின் ஆணையின்படி இந்தநாள் தொடர்ச்சியாக நினைவுகூரப்பட்டு வருகிறது. தமீழ விடுதலைப் போராட்டத்திற்கு உண்மையாக உழைத்தவர்களை நினைவுகூர்வதென்பது பிரபாகரனைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது. ஆரம்பத்தில் சிவகுமாரனின் மறைவு நாளாக ஆனி 5 கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், 1996 ஆம் ஆண்டின் மாணவர் எழுச்சி நாளுக்குப் பின்னர் அது ஆனி 6 இற்கு மாற்றப்பட்டது. ஆனி 5 உலக சுற்றுச்சூழல் தினமாகக் கொண்டாடப்பட்டுவருவதே இதற்குக் காரணமாகும். 1993 ஆம் ஆண்டிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிவகுமாரனின் நினைவுநாள் கொண்டாடப்பட்டு வந்தது. 2003 ஆம் ஆண்டு மொத்த வடக்குக் கிழக்கு மாகாணங்களிலும் இது அனுஷ்ட்டிக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு, சிவகுமாரனின் தியாகத்தை வணக்கம் செலுத்தும் முகமாக, மேலே உயர்த்திப் பிடிக்கப்பட்ட முஷ்ட்டியுடனான சிவகுமாரனின் உருவச்சிலை வெண்கலத்தில் செய்யப்பட்டு அவரது பிறந்த ஊரான உரும்பிராயில் நிறுத்தப்பட்டது. தமிழ் மாணவர் அமைப்பினரின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான முத்துக்குமாரசாமி அச்சிலையினைத் திறந்துவைத்தார். 1977 ஆம் ஆண்டு இராணுவம் அச்சிலையினை அடித்து நொறுக்கியிருந்தாலும் கூட, மறுவருடமே அது மீளவும் கட்டி எழுப்பப்பட்டது. இராணுவம் 1981 இல் மீண்டும் அச்சிலையினை உடைத்துப் போட்டது. 1982 ஆம் ஆண்டு மாசி 27 ஆம் திகதி வெளிவந்த சட்டர்டே ரிவியூ பத்திரிக்கை இச்சிலை தொடர்பான சம்பாஷணை ஒன்றினைப்பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. 1982 ஆம் ஆண்டு, தை மாதம் 28 ஆம் திகதி உரும்பிராயில் சிவகுமாரனின் வீட்டிற்கு அதிரடியாக நுழைந்த சுமார் 50 ராணுவத்தினர் தாம் இங்கே ஒளிந்திருக்கும் ஆயுதக்குழு உறுப்பினர்களைத் தேடுவதாக அவரது பெற்றோரிடம் கூறியிருக்கின்றனர். அவ்வேளை சிவகுமாரனின் உடைக்கப்பட்ட சிலையிலிருந்து எடுக்கப்பட்ட சிறிய துண்டொன்றைக் கண்டனர். "இது யாருடைய சிலை?" என்று ராணுவ வீரர்களின் தளபதி சிவகுமாரனின் தாயாரான அன்னலட்சுமியைப் பார்த்துக் கேட்டான். "உடைக்கப்பட்ட எனது மகனின் சிலையிலிருந்து நான் எடுத்துவந்த சிறிய துண்டே அது" என்று அவர் பதிலளித்தார். "இதை இங்கே கொண்டுவந்தது யார்?" என்று அவன் மீண்டும் கேட்டான். "சாதாரண பொதுமக்கள்" என்று தாயார் பதிலளித்தார். "சிவகுமாரன் தற்போது எங்கே?" என்று அவன் மீளவும் கேட்டான். "அவர் 1974 ஆம் ஆண்டு ஆனி 5 ஆம் திகதியன்று இறந்துவிட்டார்" என்று அவர் பதிலளித்தார். சிவகுமாரன் மரணித்து 8 வருடங்களாகியும் அவர்பற்றிய செய்தி அந்த இராணுவ அதிகாரிக்குத் தெரிந்திருக்கவில்லையென்றால், தமிழ் மக்களின் போராட்டம் பற்றி எவ்வகையான அறிவினைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். அந்த ராணுவ அதிகாரி மட்டுமல்லாமல், நாட்டின் பிரதமரான சிறிமா, அவரது அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொலீஸார் என்று எவருமே தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகள், உணர்வுகள் குறித்து ஒருபோதுமே அக்கறைப்பட்டிருக்கவில்லை என்பதனையும் இது காட்டுகிறது. சிவகுமாரனின் மரணச் சடங்கின்போது அமிர்தலிங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து ரகசிய உளவுச் செய்தியொன்றினை யாழ்ப்பாணப் பொலீஸார் பிரதமர் சிறிமாவுக்கு அனுப்பிவைத்திருந்தனர். இந்த உளவு அறிக்கையின்படியே சிறிமா தனது தீர்மானங்களைப் பின்னர் எடுத்திருந்தார். அந்த உளவு அறிக்கை பின்வருமாறு கூறியது, "நாங்கள் அவரது பேச்சினை பதிந்து வைத்திருக்கிறோம். அந்த பேச்சில் அவர் ஒரு குற்றவாளியை வீரன் என்று புகழ்ந்திருந்தார்" .