என் நண்பியின் கணவருக்கு மூன்று வாரங்களிற்கு முதல் கொறோனா தொற்று ஏற்பட்டது. கடுமையான காய்சல் 10 நாட்களாக தொடர்ந்தது.ஆனாலும் அவர் பயத்தில் வைத்தியசாலைக்கு செல்லவில்லை.ஆவி பிடிப்பது, ரசம் குடிப்பது என பல தமிழ் வைத்திய முறைகளை விடாமல் செய்து கொண்டிருந்தார்.ஆனால் அவருக்கு மூச்சு விடிவதில் எந்த சிரமமும் இருக்கவில்லை. அவர்களிற்கு 1 வயதில் ஒரு குழந்தை இருக்கின்றது அந்த குழந்தையை பரிசோதிப்பதற்காக வந்த nurse தற்செயலாக நண்பியின் கணவரின் நாடித் துடிப்பை பரிசீலித்துள்ளார்.அப்போது அவரின் நாடித்துடிப்பு மிக குறைவாக இருந்ததால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளார். அங்கு சென்று பார்த்தபோது அவரது ஙரையீரல் 90% பாதிக்கப்பட்டிருந்தது.மிக கடுமையான நிலையில் அவர் உடல்நிலை காணப்பட்டது.தப்புவது கடினம் என வைத்தியர்களால் கூறப்பட்டது.எனினும் வைத்தியர்களின் கடுமையான ஒரு கிழமை போராட்டத்தில் அவர் இப்போது அபாய கட்டத்தை இப்போது தாண்டிவிட்டார். அவர் வைத்தியசாலை செல்லாமல் இருந்திருந்தால் இப்போது அவரை பார்த்திருக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஒவ்வொரு உடலுக்கேற்ப இந்த கொறோனா தன் இயல்பை மாற்றிக்கொள்கிறது.யாராக இருந்தாலும் ஒரு வைத்தியரின் ஆலோசனையை பெறுவது பாதுகாப்பானது..