-
Posts
15244 -
Joined
-
Last visited
-
Days Won
22
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by பெருமாள்
-
இந்த வெயிலில் தொரைக்கு கோட் கேக்குதாம் . அதிரடிப்படையினருடன் வலம் வரும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்
-
வடகிழக்கில் உள்ள பழைய தோத்தான் குரங்கு அரசியல்வாதிகள் யாராவது தாயகத்தில் நடை பெற்ற மாவீரர் நினைவு தினம்களில் கலந்து கொள்ளவில்லையே ? நானும் தேடி தேடி பார்க்கிறேன் செய்தி கிடைக்கவில்லை இப்படியே விட்டால் அனுரா கூட்டம் ஒரு தும்பு கட்டையை யாழில் நிறுத்தினாலும் சனம் வோட்டு போட்டு தள்ளும் என்ற அறிவாவது இல்லையா அல்லது வேறு முக்கியமானவரை தூக்குவம் என்று சொன்ன இ...... என்பவர்களின் வார்த்தை நம்பிக்கையா?
-
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு
பெருமாள் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
சிங்களம் இதை முதலிலே செய்து இருக்கலாம் ஆனால் கடந்த பதின் நாலு வருடத்தில் வாங்கிய பொருளாதார அடியில் எழுந்து இருக்க முடியாமல் பல வேசம்கள் போட்டு நாடகம் நடிக்குது புலம்பெயர் தமிழரிடம் வழக்கம்போல் எந்த ஒரு தீர்வும் தராமலே தமிழரை பேய்காட்டலாம் என்று நினைக்கின்றனர் ஏனென்றால் வழக்கம்போல் இனவாதம் கக்கும் ராஜபக்சா கூட்டம் அமைதியாக இருக்கிறது இனவாத தேரர் கூட்டம் அமைதியாக இருக்கிறது . -
இது ஒரு அபூர்வ சக்திவாய்ந்த மரம்! ஒருவன் வனப் பகுதியில் ட்ரெக்கிங் போய் கிட்டு இருந்தபோது அவனுடைய ஷு ! அறுந்து விட்டது! அங்கு இருந்த மரத்தில் அதை தொங்க விட்டான். ஒரு பலகை பக்கத்தில் இருக்க! " இந்த மரத்தில் உங்கள் காலணிகளை தொங்க விட்டால்! உங்கள் மனைவி உங்கள் பேச்சை கேட்பார்கள் " என்று எழுதி விட்டு சென்றான்! கொஞ்ச நாள் கழித்து அந்த மரத்தின் படம் இது! புரியுது! இந்த மரம் எங்கே என்று தானே கேட்கிறீங்க!😆
-
இன்று பிறந்தநாள் கொண்டாடும் @வீரப் பையன்26 தம்பிக்கு வாழ்த்துகள். வளத்துடன் வாழ்க.
-
"சார் எம் புருசனை ரெண்டு நாளா காணோம்?" "பேரு என்னம்மா?" "லியோ" "நீ தானா அவன் ஒயிஃப். இந்தாம்மா 'நீ தேடி வருவ, வந்து கம்பளைண்ட் கொடுக்கும் போது இந்த லெட்டரை கொடுங்கன்னு கொடுத்துட்டு போயிருக்கான்' "மதிப்பிற்குரிய காவல்துறை அதிகாரி ஐயா, என் வீட்டில் கடந்த செவ்வாய் அன்று என் மனைவி மீன் எடுத்து மீன் குழம்பு வைத்தார். செவ்வாய், புதன் என இரண்டு நாள்கள் மீன் குழம்பு மற்றும் வறுவலோடு ஓடியது. மூன்றாம் நாள் வியாழக்கிழமை நாளை என்ன குழம்பு என்று கேட்கும் போது 'மீன் குழம்பு தான் இருக்கே, அதுவே இன்னும் மூன்று நாளைக்கு வரும், சூடு பண்ணி வைக்கிறேன்' என்று சொன்னார். இது இந்த வாரம் மட்டுமல்ல கடந்த ஏழு வருடங்களாகவே தொடர்கிறது. இன்றோடு ஐந்தாம் நாள் மீன் குழம்புக்கு கெடு முடிந்த நிலையில் சனிக்கிழமை மாலை நானே வீடு திரும்புவேன் என்று கூறிக்கொள்கிறேன். நன்றி" "அந்தாளு வீட்டுக்கு வரட்டும், இன்னைக்கு இருக்கு கச்சேரி" "ஏம்மா அதான் வர்றேன்னு சொல்லிட்டார்ல. திரும்ப ஏம்மா பிரச்சினை?" "கல்யாணம் ஆகி எட்டு வருசம் ஆச்சு, ஏழு வருசம்னு எழுதியிருக்கார் பாருங்க 🤬🤬"
-
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
பெருமாள் replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
உங்களின் வழக்கமான புலிக்காய்ச்சல் சந்தடி சாக்கிலை மொட்டை பொய்யையும் சேர்த்து செருகிவிடுவதுதான் உங்கள் திறமை . ரசோ வையும் என்னையும் கோர்த்து விடுவதில் உங்களுக்கு என்ன அலாதி இன்பம் ? -
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படாமல் போனது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமந்திரன் நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால் அரசாங்கத்திற்கு சார்பாகவே செயற்பட்டிருப்பார். எனவே, அவர் தேர்தலில் தோல்வியுற்றது அநுர மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் எனக் கூறப்படுகின்றது. சுமந்திரன் தமிழ் மக்களின் உரிமைக்காக தீவிரமாக போராடியிருந்தால் தென்னிலங்கையில் அவருக்கு இந்தளவுக்கு ஆதரவு இருந்துருக்காது. இவ்வளவு காலமும் அரசாங்கத்துக்கு சார்பாக சுமந்திரன் செயற்பட்டதாலேயே அவரை வடக்கு மாகாண மக்கள் நிராகரித்த போதும் தென்னிலங்கை மக்கள் ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி, https://tamilwin.com/article/southern-sri-lanka-s-perspective-on-sumanthiran-1732557870
-
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
பெருமாள் replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
தெரியும் ஆனால் ஒரு விடயத்தை சொல்லும்போது ஈபிடிபி என்று விபரமாய் சொல்லியிருந்தால் நல்லது நன்றி உங்கள் விளக்கத்துக்கு . -
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
பெருமாள் replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
உங்கள் ஊர் எது ? -
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
பெருமாள் replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
அப்படி எந்த இயக்கம் பயிற்சி கொடுத்தது ? -
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றவேளை கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார். கடந்த 04.10.2024 அன்று பயணித்த குறித்த இளைஞர் அவரது சகோதரி பிரான்ஸ் நாட்டில் இருப்பதால் அங்கு தொழில் நிமித்தமாக செல்ல முயற்சித்துள்ளார். அந்த இளைஞனுக்கு ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழ் இளைஞர்கள் இந்நிலையில், ரஷ்ய விமான நிலையத்தில் தரையிறங்கிய இளைஞனுடன் முல்லைத்தீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ரஷ்ய விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல வேண்டுமென இவர்களை கூட்டிச் சென்ற முகவர் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து அங்குள்ள இராணுவ முகாமில் இவர்களைத் தங்க வைத்து இவர்களுக்கு ரஷ்ய இராணுவத்தின் சீருடைகள் வழங்கி 15 நாட்கள் கட்டாயமாக பயிற்சியின் பின்னர் உக்ரைனின் எல்லையில் போருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதிக்கு மனு இவ்விடயம் தொடர்பாக குருநகர் பகுதியை சேர்ந்த கோமஸ் அதிஸ்ரராஜா மிதுர்ஷன் என்ற 25 வயது இளைஞன் தாயாருக்கு தனது புகைப்படங்களைத் பகிர்ந்து நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தாயார் தனது மகனையும் ஏனையவர்களை மீட்பதற்கு ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மனு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த பயணத்திற்காக முகவர் ஒருவருக்கு ஒவ்வொருவரும் தலா 60 இலட்சம் ரூபாய் வரையான பணத்தை செலுத்தியுள்ளனர். இது தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/jaffna-guy-forced-to-involved-in-russian-army-1732537133
-
ஏற்கனவே உங்க ஆள் சுமத்திரன் செய்த வேலைகளால் கோமணத்தை கூட முகத்தை மூட முடியாமல் கூனி குறுகி நின்றோம் வேட்டிதானே .😁
-
சபாஷ் சரியான போட்டி ! - நீயா ! நானா ! ஒரு முறை ஒரு பெண்மணி பொருட்கள் வாங்க சூப்பர் மார்கெட் சென்றார் . பொருட்கள் வாங்கிய பின் பணத்தை கொடுக்க பர்ஸை திறக்க அதில் டீவி ரிமோட் ஒன்று இருக்க, அதை பார்த்த கேஷியர் அவரிடம் ! " என்னம்மா ! எப்பவும் டீவி ரிமோட் வைத்து இருப்பீர்களா " என்று கேட்க அதற்கு அவர் ! " இல்லை ! நான் கடைக்கு போக வேண்டும் கொஞ்சம் வாங்க என்று என் கணவனை கூப்பிட்டேன் ! அவர் இன்று கிரிக்கெட் மேட்ச் இருக்கு நான் வரலை என்று சொல்லிவிட்டார் ! அதான் அவரை பழி வாங்க டீவியை ஆஃப் செய்துவிட்டு ரிமோட்டை எடுத்து வந்து விட்டேன் ! இப்ப அவர் எப்படி படம் பார்ப்பார் " என்றார் ! நீதி - எப்பொழுதும் மனைவி வெளியே செல்ல கூப்பிட்டால் மறுக்காமல் செல்லவும் ! இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது ! பொருட்களுக்கு கொடுக்க பணம் குறைவாக இருந்ததால், பெண்மணி அவரின் க்ரெடிட் கார்டை கொடுக்க ! அதை வாங்கி SWIPE செய்த கேஷியர் சிறிது கொண்டே ! " அம்மா ! உங்கள் கணவர் உங்கள் க்ரெடிட் கார்டை பிளாக் செய்து விட்டார் ! என்று சொன்னார் ! நீதி - கணவனின் கருத்திற்கு மதிப்பு கொடுங்கள் ! இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது ! பெண்மணி ! தன் பர்ஸில் இருந்த கணவனின் க்ரெடிட் கார்டை எடுத்து, கொடுக்க !கணவன் தன் கார்டை பிளாக் செய்யவில்லை ! நீதி - மனைவியின் புத்திசாலித்தனத்தையும் அறிவையும் குறைத்து எடை போட்டு விடாதீர்கள் ! இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது ! கேஷியர் கார்டை swipe செய்ய அது பின் நம்பர் கேட்க ! கேஷியர் பெண்மணியை பார்த்து உங்க கணவரின் மொபைலுக்கு பின் நம்பர் வந்திருக்கும் கொஞ்சம் சொல்லுங்க என்று சொல்ல ! நீதி - சில நேரம் ஆண் தோற்றாலும் ! அவன் சார்ந்த தொழில் நுட்பம் அவனை காப்பாற்றும் ! இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது ! பெண்மணி ! இருங்க சொல்றேன் என்று பர்ஸை திறந்து அதில் இருந்த கணவனின் போனை எடுத்து பின் நம்பரை கேசியார் கிட்ட சொன்னார் ! ரிமோட் எடுக்கும்போதே எதற்கும் இருக்கட்டும் என்று, கணவனின் க்ரெடிட் கார்டையும் மொபைலையும் எடுத்து வந்தார் ! நீதி - மனைவியின் அபார புத்திசாலித்தனம் சாதாரணமானது இல்லை ! இருங்க இன்னும் கதை முடியவில்லை ! தொடர்கிறது ! பொருட்களை வாங்கி கொண்டு ! டாக்சி பிடித்து வீடு வந்த சேர்ந்த பெண்மணி , கணவனின் வண்டி இல்லாதது கண்டு ஆச்சரியம் அடைய ! வீட்டிற்குள் சென்று பார்த்தல் , மேசையில் ஒரு பேப்பர் எழுதி இருந்தது! அதி " எல்லா இடங்களிலும் டீவி ரிமோட் தேடி பார்த்தேன் ! கிடைக்கவில்லை அதனால் என் நண்பர்களுடன் மேட்ச் பார்க்க போகிறேன் ! உனக்கு எதாவது வேண்டும் என்றால் என் போனுக்கு கூப்பிடு என்று எழுதி இருந்தது ! நீதி - கணவனை கட்டுப்படுத்த முயற்சிக்காதீர்கள் ! நீங்கள் தோற்று போவீர்கள் !
-
அந்த அறிவாளிதான் ஒரு தங்கத்திடம் தோத்தான் குஞ்சு ஆனது இதுக்கு பிறகும் தனக்கு மானம் ரோசம் இருக்கெண்டு என்னெண்டுதான் தமிழ் மக்கள் முன்னிலையில் நடமாடுதோ ?
-
உங்கட சுமத்திரன் சேர் க்கு இப்படி பாடம் எடுக்க உங்களால் முடியுமா ?
-
எதிர்வரும் மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில்(United Kingdom ) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் லண்டனில் இன்று (24.11.2024) போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தமிழீழ தேசிய கொடிநாள் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. கார்த்திகை 21 1990 ஆம் ஆண்டு கார்த்திகை 21 ஆம் நாள் எமது தேசிய கொடியை தேசியத் தலைவர் அறிமுகப்படுத்தி முதன்முதலாக ஏற்றி வைத்தார். எமது தேசியக்கொடி எமது இனத்தின் தனித்துவத்தின் ஒரு அடையாளமாக விளங்குகின்றது. இதன் தனித்துவத்தையும் புனிதத்துவத்தையும் நிலைநிறுத்தி அடுத்த சந்ததியிடம் கையளிப்பது எமது கடமையென இதன் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வானது லண்டனில் இன்று பிற்பகல் 12 மணி தொடக்கம் 03 மணிவரை நடைபெற்றது. இதில் பெருமளவான புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொண்டனர். https://tamilwin.com/article/eelam-tamils-protest-in-britain-1732469815
-
சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வதற்கு மாற்று வியூகம் எதிர்காலத்தில் சுமந்திரன்(M.A.Sumanthiran) மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்வதற்கான நகர்வுகள் காணப்படுவதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் குயின்ரஸ் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியலிங்கத்தை தெரிவு செய்தமை பலருக்கு இங்கு அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. சத்தியலிங்கம் எப்போது, அந்த பதவியில் இருந்து விலகுகின்றாரோ அந்த சமயம் இரண்டாம் இடத்திலுள்ள சுமந்திரனுக்கு அது வாய்ப்பாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, சுமந்திரன் மீண்டும் நாடாளுமன்றம் செல்வதற்காக மேற்கொள்ளப்படும் மாற்று வியூகங்கள்தொடர்பிலும் அரசியல் ஆய்வாளர் இதன்போது தெளிவுபடுத்தினார். https://tamilwin.com/article/tamil-arasuk-katchi-internal-politics-1732457349
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
பெருமாள் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இது ஒரு சைக்கோ தெரிந்தும் பத்து பேரை வோட்டு இதுக்கு போடவேண்டி வந்தது சுமத்திரன் எனும் கோடாலி காம்பை அரசியலில் இருந்து அகற்றவே ஆனால் அந்த பேயை விட இந்த வந்த பேயை வாயை அடக்க சொல்லுங்க பார்லி மென்டில் வந்த முதல் நாளிலே குரங்கு சேட்டை விடுது இதுக்கெல்லாம் யார் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள் ? -
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பெருமாள் replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
ரகுமானின் டைவேர்ஸ் எனக்கு இந்த கதை நினைவுக்கு வந்தது . இந்தக் கதையை படித்துவிட்டு முடிவில் உங்களில் ஒருவர் கைதட்டினால் கூட நமக்கு வெற்றி தான். மிக மிக பொறுமையாக கதையை படித்து அர்த்தத்தை உள்வாங்கிக்கொள்ளவும். சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விரும்புகிறவர்களுக்கு இது ஒரு வழிகாட்டி! மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டியாளும் அரசன் அவன். அவன் மகள் பட்டத்து இளவரசி திருமணம் செய்துகொள்வதில் நாட்டமில்லாமல் இருந்தாள். தனது குலகுருவின் ஆலோசனையை அடுத்து பல ஆலய திருப்பணிகளை செய்தான் அரசன். இதையடுத்து அரச குடும்பத்தினர் யாவரும் வியக்கும் வண்ணம், இளவரசிக்கு திருமணம் செய்துகொள்ளும் ஆசை எழுந்தது. தனக்குரியவனை தானே தேர்ந்தெடுக்க வேண்டும். அவன் அனைத்திலும் சிறந்தவனாக இருக்கவேண்டும்' என்று கருதினாள். தன் தந்தையிடம் தனது விருப்பத்தை தெரிவித்து, "அப்பா... அழகோ, பணமோ, பட்டமோ, பதவியோ இவைகள் மட்டுமே என்னை மணப்பவரின் தகுதியாக இருக்கக் கூடாது. அதற்கு மேலும் நான் அவரிடம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறேன். எனவே எனக்கேற்றவரை தேர்ந்தெடுக்க நீங்கள் உதவவேண்டும் அப்பா" என்றாள். 'மகள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாளே அதுவே சந்தோஷம். மேலும் தனது கணவனை தேர்ந்தெடுக்க நம்மையும் ஆலோசனை கேட்கிறாளே.. அது அதைவிட ''சந்தோஷம்' என்று மகிழ்ந்த மன்னன் தனது மகளுக்கு திருமணம் செய்துவைக்கும் திட்டத்தை பற்றி குறிப்பிட்டு தகுதியுடையவர்கள் சுயம்வரத்துக்கு விண்ணப்பிக்கலாம் நாலாபுறமும் செய்தி அனுப்பினான். பல விண்ணப்பங்கள் வந்தன. அவற்றை மிக கவனமாக பரிசீலித்து ஐந்து விண்ணப்பங்களை மட்டும் இறுதி செய்தான் மன்னன். அவர்களை தனது அரண்மனைக்கு வரச் சொல்லி தகவல் அனுப்பினான். இதைக் கேள்விப்பட்ட இளவரசி, மிகவும் குழப்பமடைந்தாள். “அப்பா இது எனக்கு உண்மையில் சவாலான ஒன்று தான். ஐந்து பேரில் யாரை தேர்ந்தெடுப்பது என்று எனக்கு புரியவில்லை. நீங்களே இவர்களுள் மிகச் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுத்துவிடுங்கள்" என்றாள். பந்து தன் பக்கமே திரும்பியதையடுத்து மன்னன் மீண்டும் குழப்பமடைந்தான். தனது குலகுருவை அரண்மனைக்கு வரவழைத்து அவரது பாதங்கள் பணிந்து, தனக்கு முன்னுள்ள சவாலை குறிப்பிட்டான். அனைத்தையும் நன்கு கேட்ட குரு, மன்னனுக்கு சில ஆ லோசனைகள் வழங்கினார். அதைக் கேட்டு முகம் மலர்ந்த மன்னன், "அப்படியே செய்கிறேன் குருவே!" என்றான். அரண்மனை குதிரைப் பயிற்சியாளர்களை அழைத்து, “நம்மிடம் பழக்குவதற்கு கடினமான குதிரை எதாவது இருக்கிறதா?" என்று கேட்டான். சற்று யோசித்த பயிற்சியாளர்கள் “ஆம்... அரசே அரேபியாவிலிருந்து வந்த சில குதிரைகள் இருக்கின்றன. மிகவும் அஜானுபாகவான குதிரைகள் அவை. பழக்குவதற்கு மிகவும் கடினமாக முரட்டுத் தனமாக இருக்கின்றன. எதற்கும் கட்டுப்படாத அக்குதிரைகள் பல பயிற்சியாளர்களை உதைத்து கீழே தள்ளி காயப்படுத்தியிருக்கின்றன. அவற்றை என்ன செய்வதென்றே எங்களுக்கு தெரியவில்லை" என்றார்கள். விபரத்தை குறித்துக்கொண்டான் மன்னன். மறுநாள் தான் இறுதி செய்த ஐந்து பேரையும் வரவழைத்து குதிரைகள் பற்றி சொல்லி, "உங்களுக்கு தரப்படும் முரட்டுக் குதிரையை யார் அடக்கி அதில் என் மகளையும் ஏற்றிக்கொண்டு சவாரி. செய்கிறீர்களோ அவரே என் மகளை மணக்கமுடியும்” என்று அறிவித்தான். இந்த போட்டியை பற்றி கேள்விப்பட்டவுடன் இளவரசி மிகவும் குழப்பமடைந்தாள். ஏனெனில் சிறு வயதில் குதிரை மீது அமர்ந்து, அது மிரண்டு ஓடி, கீழே விழுந்து அடிப்பட்டதிலிருந்து தனக்கு குதிரையின் கனைப்பு சத்தமோ குதிரையில் ஏறி அமர்ந்து சவாரி செய்வதோ பிடிக்காது என்பது தந்தைக்கு தெரியும். அப்படியிருக்க ஏன் இந்தப் போட்டியை அறிவித்தார் என்று குழப்பமடைந்தாள். ஆனாலும் தனது தந்தையின் முடிவின் பின்னணியில் நிச்சயம் ஏதாவது அர்த்தமிருக்கும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு போட்டிக்கு ஒப்புக்கொண்டாள். குறிப்பிட்ட நாளன்று அரண்மனை மைதானத்தில் ஒரு குதிரை கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. மணமகன்கள் ஐந்து பேரும் விருந்தினர் மாளிகைக்கு வரவழைக்கப்பட்டார்கள். இளவரசியை மணம் புரிய அவர்கள் செய்யவேண்டிய சிலவற்றை குறிப்பிட்டு இறுதியில் குதிரையை அடக்கி அதில் இளவரசியுடன் சவாரி செய்யவேண்டியதை பற்றியும் விவரிக்கப்பட்டது.' மகளை நோக்கி, "போட்டியின் போது இவர்களுடன் நீ கூட இருக்கவேண்டும்" என்றும் கூறினார். போட்டியாளர்கள் யாருக்குமே இளவரசிக்கு குதிரை மீது இருந்த பயம் பற்றி மூச்சு கூட விடவில்லை. தனித்தனியே பந்தய மைதானத்திற்கு அனைவரும் வெவ்வேறு நேரங்களில் வருவதற்கு மருட்சியுடன் அவனுடன் ஏறினாள். வெற்றிக் களிப்பில் மைதானத்தை கண்களை மூடியபடியே இருந்தாள். இரண்டாமவன் வந்தான். அவன் தான் இந்த நாட்டிலேயே மிகப் பெரிய செல்வந்தனின் ஒரே மகன் அவன். திடீரென்று கைகளை தட்டினான்... எங்கிருந்தோ ஒரு கட்டுமஸ்தான ஆசாமி வர, அவனிடம், "இந்த குதிரையை அடக்கு" என்று கூற, அவன் சில வினாடிகளில் குதிரையை அடக்கிவிட, அவன் துணையுடன் இளவரசியை குதிரை மீது ஏற்றிக்கொண்டவன் அந்த ஆசாமிக்கு ஏற்பாடானது. முதலாமவன் வந்தான். பார்க்க கட்டுமஸ்தாக இருந்தான். இளவரசியை பார்த்தான். குதிரையை சுற்றி சுற்றி வந்தான். குதிரையின் பிடரியை பிடித்து இழுத்தான். குதிரை பலமாக கனைத்தது. இளவரசி பயந்து நடுங்கினாள். அடுத்த சில வினாடிகளில் எப்படியோ குதிரையை அடக்கிவிட்டான். இளவரசியின் கையை பற்றி அனைத்து மேலே ஏற்றினான். இளவரசி மருட்சியுடன் அவனுடன் ஏறினாள். வெற்றிக் களிப்பில் மைதானத்தை சுற்றி சுற்றி வந்தான். ஆனால், இளவரசியோ அச்சம் நீங்காதவளாக கண்களை மூடியபடியே இருந்தாள். இரண்டாமவன் வந்தான். அவன் தான் இந்த நாட்டிலேயே மிகப் பெரிய செல்வந்தனின் ஒரே மகன் அவன். திடீரென்று கைகளை தட்டினான்... எங்கிருந்தோ ஒரு கட்டுமஸ்தான ஆசாமி வர, அவனிடம், "இந்த குதிரையை அடக்கு” என்று கூற, அவன் சில வினாடிகளில் குதிரையை அடக்கிவிட, அவன் துணையுடன் இளவரசியை குதிரை மீது ஏற்றிக்கொண்டவன் அந்த ஆசாமிக்கு பணமுடிப்பை தந்து அனுப்பினான். "கையை சொடுக்கினால் நாம் இட்ட வேலையை செய்து முடிக்க பலர் இருக்கும்போது, நாம் ஏன் நமக்கு தெரியாத வேலைகளை செய்ய ரிஸ்க எடுக்கவேண்டும்.. இது தான் என்னோட பாலிஸி" என்றான் இளவரசியை பார்த்து புன்னகைத்து. ஒரு வகையில் இவன் சொல்வது வாஸ்தவம் தான் என்று தோன்றியது இளவரசிக்கு.. மூன்றாமவன் வந்தான். பார்க்க மன்மதன் போல இருந்தான். மிக நேர்த்தியாக அழகாக ஆடையுடுத்தியிருந்தான். பந்தயத்தை பற்றி கேள்விப்பட்டதும், “எனக்கு குதிரையேற்றமெல்லாம் தெரியாது. ஆனால், நீ என்னுடன் இருக்கும் நேரத்தை உன்னால் மறக்க முடியாததாக செய்யமுடியும்" என்று கூறி, இளவரசியை பல்லக்கில் ஏற்றி தானும் ஏறி மலைப்பாங்கான இடத்திற்கு சென்றான். அங்கு அருவிகளையும் இயற்கை காட்சிகளையும் அவளுக்கு காண்பித்தான். அரைமணி நேரம் கழித்து மீண்டும் திரும்பினார்கள். சொன்னது போல இளவரசிக்கு மனதுக்கு இதமாக இருந்தது. நான்காமவன் வந்தான். பந்தயத்தை பற்றி கூறியதும், இளவரசியை பார்த்தான். இளவரசி இவனை மருட்சியுடன் பார்த்தாள். குதிரை மீது ஏறுவது என்றால் அவளுக்கு பயம் என்று அவனுக்கு புரிந்துவிட்டது. உடனே எனக்கு ஒரு பலகையும், தூரிகையும், வண்ணப் பொடிகளும் வேண்டும் என்று கூறினான். அடுத்த சில நொடிகளில் அவை வந்துவிட சுமார் ஒரு மணிநேரம் செலவிட்டு அந்த இடத்திலேயே, அந்த குதிரை மீது இளவரசி அமர்ந்திருப்பதைப் போல ஒரு தத்ரூபமான அழகான ஓவியத்தை வரைந்துவிட்டான். ஓவியத்தில் தன் அழகை பார்த்து தானே வியந்து வெட்கப்பட்டாள் இளவரசி. அவளுக்கு நெகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது. கடைசியாக ஐந்தாமவன் வந்தான். அவனிடம் பந்தயத்தை பற்றி சொல்லப்பட்டது குதிரையை சுற்றி வந்து தடவிக்கொடுத்தான். குதிரை பலமாக கனைத்தது. இளவரசி அச்சத்தில் கண்களை மூடிக்கொள்வதை கவனித்தான். குதிரையை மீண்டும் தடவிக்கொடுத்தான். இந்த முறை குதிரை விட்டது ஒரு உதை. தூரப்போய் விழுந்தான். உடைகளை துடைத்துக்கொண்டு எழுந்தான். நேரே இளவரசியிடம் சென்று "வா நாம் இரண்டு பேரும் தானே ஏறப்போகிறோம். இரண்டு பேரும் குதிரையிடம் செல்வோம்” என்றான். இளவரசி மறுத்தாள். "வேண்டாம்... எனக்கு குதிரைகள் என்றாலே அலர்ஜி. குதிரைகளுக்கும் என்னைக் கண்டால் அலர்ஜி. என்னால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்...." “பரவாயில்லை... அதனால் என்ன? ஏற்கனவே கீழே தள்ளிவிட்டுடுச்சு. இதுக்கும் மேல என்ன இருக்கு? பரவாயில்லே வா.." என்று கூறி குதிரையிடம் இளவரசியை அழைத்துக் கொண்டு தானும் சென்று, அதைத் தடவிக்கொடுத்து இருவருமே அதன் மீது ஏறப்போவதால், இருவரையும் அதற்கு பரிச்சயமாக்க முயற்சிகள் செய்தான். குதிரை அந்நியோன்யமாகி ஓரளவு தெரிந்தவுடன், தைரியமாக அதன் மீது தானும் ஏறி இளவரசியையும் ஏற்ற முயற்சித்தான். இளவரசி... "வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு... வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு" என்று அச்சத்தில் தயங்கினாள். "பயப்படாதே... நான் விழுந்தாலும் உன்னை விழ விட மாட்டேன்" என்றபடி அவளை ஆசுவாசப்படுத்தி தான் ஏறி இளவரசியையும் ஏற்ற முயற்சிதான். அவன் கொடுத்த உத்வேகத்தில் இளவரசி எப்படியோ குதிரை மீது ஏறிவிட்டாள். பந்தயப்படி இன்னும் குதிரை ஒரு அடி கூட எடுத்து வைக்காத நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம், குதிரை கனைத்தது. கனைப்பு சத்தத்தை கேட்ட இளவரசி பயத்தில் "வீல்" என்று அலறிவிட்டாள். குதிரை மிரண்டு போய் திமிறியதில் இருவரும் கீழே விழுந்தார்கள். இருவரையும் ஒரு உதை விட்டுவிட்டு குதிரை சில அடிகள் தள்ளிப் போய் நின்றது. இருவருக்குமே லேசான அடி. சிராய்ப்புக்கள். காவலர்கள் ஓடி வந்தார்கள். குதிரை அப்புறப்படுத்தப்பட்டு, இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. கீழே விழுந்து குதிரையிடம் உதையும் வாங்கியதில் இளவரசிக்கு கோபம் + சோகம் என்றாலும் போட்டியின் விதிப்படி தோற்றுவிட்ட அவனுக்காக சிறிது பரிதாபப்பட்டாள். அனைத்தும் முடிந்த பின்னர் மாளிகைக்கு திரும்பினாள் இளவரசி. "எப்படியம்மா போட்டி நடந்தது? உனக்கு ஏற்ற மணமகனை தேர்ந்தேடுத்துவிட்டாயா?" "அப்பா... எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் என்னைக் கவரவில்லை. ஒரு வகையில் சிறந்தவர்களாக தெரிகிறார்கள்." என்றாள். என்னைக் கவர்ந்தவர்கள் போட்டியில் வெற்றிபெறவில்லை. ஒவ்வொருவரும் "என்ன செய்யலாம்? நீயே சொல். "எனக்கு குழப்பமாக இருக்கிறது அப்பா. நீங்களே எனக்குரியவரை தேர்ந்தேடுத்துவிடுங்கள். உங்கள் முடிவு மீது நான் முழு நம்பிக்கை வைக்கிறேன்". "சரியம்மா... உனக்கு பொருத்தமானவரை நான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறேன்." என்றான். தனது மாளிகையில் இளவரசி காத்திருந்த வேளையில், மன்னர் தேர்ந்தெடுத்த நபர் வந்திருப்பதாக காவலாளி கூற, இவள் ஆர்வமுடன் வாயில் சென்று பார்த்தாள். அங்கு ஐந்தாவதாக வந்த இளைஞன் நின்றுகொண்டிருந்தான். போட்டியின் நிபந்தனைப்படி இவர் வெற்றி பெறவில்லையே... எப்படி தந்தை இவரை தேர்ந்தெடுத்தார்? குழப்பமடைந்தவள், அப்பாவிடம் சென்றாள். "என் முடிவை நீ ஏற்றுக்கொள்ளவில்லையா அம்மா?" என்றான் மகளை நோக்கிய அரசன். "இல்லை இல்லை அப்பா. நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இவரை நீங்கள் இறுதி செய்ததன் காரணத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன்". அரசன் சொன்னான்... "முதலாவதாக வந்தவன் மிக சிறந்த குதிரையேற்ற வீரன் திறமைசாலி, ஆனால் அது அவனைப் பொருத்தவரை நல்லது. ஆனால் உனக்கு நல்லதில்லை. உன்னை முதன் முதலில் பார்த்தவன், யோசிக்கவில்லை. அவனிடம் உனக்கு கொடுப்பதற்கு அன்போ அக்கறையோ தனது திறமையை நிரூபிப்பதில் தான் கவனம் செலுத்தினானே தவிர, உனக்கு அது பிடிக்குமா பிடிக்காதா என்பதை பற்றியெல்லாம் அவன் எதுவும் இல்லை". இரண்டாமவன் மிகப் பெரிய பணக்காரன். அவனிடம் உள்ள செல்வம் காலத்தால் அழியக்கூடியது. பணத்தால் எதையும் வாங்க முடியும் என்கிற மனப்பான்மை அவனிடம் இருக்கிறது. பணத்தால் உனக்கு வசதியான வாழ்க்கை கிடைக்குமே தவிர மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, மனநிறைவான வாழ்க்கைக்கு அதையும் தாண்டி சில விஷயங்கள் தேவை. அதை அவனால் அளிக்க முடியாது." மூன்றாமவன் உன்னை சற்று களிப்புடன் வைத்திருந்தான். ஆனால் உன் தோழிகளுடனும் நண்பர்களுடனும் செல்லும்போது கூட உனக்கு அந்த களிப்பும் மகிழ்ச்சியும் கிடைக்காதா என்ன? மேலும் இவன் கடமையை மறந்துவிட்டான். நம் கண் முன்னே உள்ள சவால்களையும் கடமைகளையும் இப்படி புறக்கணிப்பது சரியல்ல. காரணம், நமது மகிழ்ச்சியான தருணங்கள் முடிந்தவுடன் அவை மீண்டும் நம் முன்னே வரும். மைதானத்தில் குதிரை எப்படி அடக்கப்படுவதற்கு காத்திருந்ததோ அதே போல பிரச்னைகளும் வாழ்க்கையில் காத்திருக்கும். அவற்றை சந்தித்தே தீரவேண்டும்! "நான்காம் நபர் மிக பெரிய கலைஞன். திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவனிடம் உனக்கோ எதிர்காலத்தில் அவன் உன்னிடம் கொள்ளக் கூடிய பந்தத்திற்கோ கொடுப்பதற்கு ஒன்றுமில்லை." "ஆனால், ஐந்தாவதாக வந்தானே அவன் தான் உன் உணர்வுகளை புரிந்துகொண்டான். குதிரை மீது நீ கொண்டிருந்த அச்சத்தை கவனித்து அதை போக்குவதற்கு முயற்சித்தவன் அவன் மட்டுமே. அவன் போட்டியில் ஜெயித்தானா இல்லையா என்பது பிரச்னையல்ல. ஆனால் குதிரையை அடக்க முயற்சித்த போராட்டத்தில் நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்தீர்கள். ஒன்றாக விழுந்தீர்கள். கற்றுக்கொண்டீர்கள். இது தான் வாழ்க்கை துணை என்பதற்கு சரியான அர்த்தம் மகளே!" என்றார். “வாழ்க்கை துணை' என்ற சொல்லுக்கு தகுதியானவர் அழகும் செல்வமும் செல்வாக்கும் திறமையும் கலைத்திறனும் நகைச்சுவை உணர்வும் கொண்டவர் அல்ல. உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் புரிந்துகொண்டு கடினமான காலகட்டங்களில் உங்களுடன் இருந்து உங்கள் ஆற்றலை வெளியே கொண்டு வரக்கூடியவர் எவரோ அவரே 'வாழ்க்கைத் துணை' என்ற பதத்திற்கு உண்மையான அர்த்தம் கொண்டவர். புறத்தோற்றம், பணம், உத்தியோகம், வசதி வாய்ப்புக்கள் இதெயெல்லாம் அளவுகோலாக வைத்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்தவர்கள் பலர் ஒன்று உதை வாங்கி கொண்டிருக்கிறார்கள் , அல்லது கோர்ட் படியேறிக்கொண்டிருக்கிறார்கள்.. -
ஒரு ஊரில் ஒரு அம்மா இருந்தார். அவருக்கு ஒரு மகன். வயசான காலத்தில் அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உழைப்பு தேடி பட்டணத்துக்கு வந்தான் அந்தப் பையன். அங்கே இங்கே தேடினான் வேலை கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு ஆள் இந்த பையனை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். முதலில் சிலநாள் எந்த வேலையும் கொடுக்கவில்லை. பிறகு ஒரு நாள் அவனை கூட்டிக்கொண்டு ஒரு எருமை மாட்டுத் தோலை அவனிடம் கொடுத்தார். ஏன் எதற்கு என்று கேட்காமல் இவன் அதை வாங்கிக்கொண்டான். அப்புறம் அவர் ஒரு நான்கு கோணிப் பைகளை எடுத்துக் கொண்டார். ஒரு ஒட்டகத்தை ஏற்பாடு செய்தார். புறப்படு போகலாம் என்றார். இவன் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை. முதலாளி கூப்பிடுகிறார் சரி என்று புறப்பட்டான். இரண்டு பேரும் சேர்ந்து அந்த ஒட்டகத்தில் ஏறிக் கொண்டார்கள். பயணம் ஆரம்பமாகியது. போய்க் கொண்டே இருந்தார்கள். ஒரு பெரிய செங்குத்தான மலை வந்தது. ஒட்டகத்தை நிறுத்தினார். பையன் இறங்கினான். அவர் சொன்னார் இதோ பாருப்பா இந்த மாட்டுத் தோலை விரித்து அதிலே படுத்துக் கொள் என்றார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் முதலாளி சொல்கிறார் என்று படுத்து கொண்டான். உடனே அவர் அந்த எருமை தோலை நான்கு பக்கமும் எடுத்து ஒன்றாக்கி ஒரு கயிற்றினாலே கட்டினார். உள்ளே அந்த பையன். இவர் அவனை அப்படியே கட்டிப் போட்டு விட்டு விலகி வந்த ஒரு மரத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்டார். அங்கே அவர் கட்டிப்போட்டது ஒரு எருமை மாடு மாதிரி தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் இரண்டு பெரிய கழுகுகள் அங்கே பறந்து வந்தன. அந்த எருமை தோல் மூட்டையை அப்படியே தூக்கி கொண்டு உயரப் பறந்து போய் அந்த செங்குத்தான மலை உச்சியில் போட்டன. அலகால் கொத்தின. உள்ளே இருந்து ஒரு பையன் வெளியே வருவதை பார்த்ததும் அந்த கழுகுகள் பயந்து ஓடிவிட்டன. அந்த பையன் அங்கே பார்க்கிறான் அவன் காலடியில் ஏராளமான நவரத்தினங்கள் கொட்டிக் கிடந்தன. கீழே நின்று கொண்டிருந்த முதலாளி ஏன் சும்மா நின்று கொண்டிருக்கிறாய். உன் காலடியில் கிடக்கிற கற்களைப் பொறுக்கி கீழே போடு என்றார். அவன் போட ஆரம்பித்தான். முதலாளி நான் எப்படி கீழே இறங்கி வருவது என்று கேட்டான். நீ முதலில் போடு அப்புறம் அதற்கு வழி சொல்கிறேன் என்றார். நான்கு சாக்கும் நிரம்பியது. சேர்த்துக் கட்டி ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார் முதலாளி. முதலாளி என்று கத்தினான் அவன். முட்டாளே என் வேலையாட்களுக்கு எப்படி வேலை கொடுக்கிறேன் என்பது புரியவில்லையா? அந்த மலை உச்சியில் பின்னால் திரும்பிப் பார் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது புரியும் என்று சொல்லி விட்டு போய்விட்டார். பையன் திரும்பிப் பார்க்கிறான் அங்கு ஏராளமான எலும்புக்கூடுகள். ஆகா ஏமாந்து போய்விட்டோம் என்பதை புரிந்து கொண்டான். கொஞ்ச நேரத்தில் ஒரு கழுகு தலைக்கு மேலே பறந்து வந்தது. இவன் ரொம்ப சாமர்த்தியமாக ஒரே தாவலில் அதன் காலை பிடித்துக் கொண்டான். கழுகு பயந்துபோய் மேலே பறந்தது. கடைசியில் களைத்துப் போய் கீழே இறங்கத் தொடங்கிவிட்டது. இவன் தரையில் குதித்து தப்பித்துக் கொண்டான். கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் பழைய முதலாளியிடம் போய் வேலை கேட்டான். அவருக்கு ஆச்சரியம் இவன் எப்படி தப்பித்தான் என்று இருந்தாலும் இவன் வேற யாரோ அவன் சாயலில் இருக்கிறான் என்று நினைத்து வேலையில் சேர்த்துக் கொண்டார். இரண்டு நாள் கழித்து வழக்கம் போல நாலு சாக்கு எடுத்துக் கொண்டு அவனையும் அழைத்துக்கொண்டு அந்த மலைப் பக்கம் போனார். எருமை தோலை தரையில் விரித்து படுக்க சொன்னார். உடனே இவன் புத்திசாலித்தனமாக முதலாளி எனக்கு எப்படி படுப்பது என்று தெரியவில்லை. நீங்கள் கொஞ்சம் படுத்துக் காட்டினால் நன்றாக இருக்கும். அவரும் எதார்த்தமாக இதுகூட தெரியவில்லையா? என்று சொல்லிக் கொண்டு அதில் படுத்தார். அவ்வளவுதான் உடனே அவன் திடீரென்று அப்படியே சுருட்டி கட்டிவிட்டான். கொஞ்ச நேரத்தில் வழக்கம் போல் இரண்டு கழுகுகள் வந்து தூக்கிக் கொண்டு போய் அந்த நவரத்தின மலை உச்சியில் போட்டன. மூட்டையை பிரித்து முதலாளி வெளியே வந்தார். கீழே இருந்து பையன் கத்தினான். நேரத்தை வீணாக்காதீங்க. ரத்தினக் கல்லை எல்லாம் பொறுக்கி கீழே போடுங்க என்றான். அவருக்கு புரிந்து போனது இவன் பழைய ஆள்தான். சரி சரி மலை உச்சியில் இருந்து எப்படி கீழே இறங்கி வந்தாய். அதைச் சொல் முதலில் என்றார். முதலில் ரத்தினக் கல்லை பொறுக்கி கீழே போடுங்கள் அப்புறம் சொல்கிறேன் என்றான். வேற வழியில்லை பொறுக்கிப் போட்டார் நான்கு சாக்குகளிலும் கட்டிக்கொண்டு ஒட்டகத்தில் ஏறி புறப்பட்டான். முதலாளி கத்தினார். தப்பித்தது எப்படி என்பதைச் சொல்லாமல் போகிறாயே என்றார். உங்களுக்குப் பின்னால் இருக்கிற எலும்புக்கூடுகளின் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டான். இது ஒரு துர்க்மெனிய நாட்டு கதை.