-
Posts
15241 -
Joined
-
Last visited
-
Days Won
22
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by பெருமாள்
-
உங்களுக்கே ஆத்திரம் வருதுல்ல? நகைச்சுவை….. ஒரு ரயில் திடீரென வயலில் இறங்கி ஓடி நல்ல வேளையாக மறுபடி டிராக்கில் ஏறி ஓடியது..ஓட்டுநர் மீது ரயில்வே துறை விசாரணை நடந்தது... ஏன் வண்டியை வயலில் இறக்கினீர்கள்?தண்டவாளத்தில் ஒரு ஆள் ஹாயா நடந்து போனான்..ஹாரன் அடிக்க வேண்டியதுதானே?பாத்த உடனே ஹாரன் அடிச்சேன்.. அவன் விலகல..மறுபடியும் ஹாரன் அடிக்கலயா?அடித்தேன். ஹாரனை அழுத்தி அடிச்சேன் .. அவன் விலகவே இல்லை..அப்போ பரவாயில்லனு அவன் மேல ஏத்த வேண்டியது தானே... அவன் மேல ஏத்த உங்களுக்கே ஆத்திரம் வருதுல்ல?அப்போ எனக்கு எவ்வளவு ஆத்திரம் வந்திருக்கும்? ஆனா வண்டி கிட்ட வந்த உடனே அந்த திமிரு பிடிச்சவன் வயல்ல இறங்கி ஓட ஆரம்பிச்சிட்டான்...
-
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
பெருமாள் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
நான் யார் என்ன செய்கிறன் என்ற விபரங்கள் உங்களிடம் இருக்கு ஆனாலும் யாழில் என்னை பற்றி எழுதும்போது வேறு விதமாகத்தான் எழுது கிரியல் அதுக்கு நன்றி பாஸ் . முதலில் அந்த சன்ரைஸ் பப் காணாமல் போகணும் 😄 -
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
பெருமாள் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
நாங்க ஒன்றும் ஸ்ரீயின் அடி பொடி இல்லை முதலில் உங்க சுமத்து யாருக்கு பார் லைசன்ஸ் வாங்கினார் என்று பாருங்க இல்லை என்றால் ....................................................................................? -
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
பெருமாள் replied to நியாயம்'s topic in ஊர்ப் புதினம்
சிங்களவர்கள் உட்பட என்று சொல்ல உங்களுக்கு மனம் வருகிதுல்லை 😄 -
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
பெருமாள் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இந்த விபரங்களை வைத்து கொண்டு எப்படி பார் சிறியை அடித்து துவைத்து காயபோடுவது ? பார் ஸ்ரீயின் சொந்த கம்பனிகளையும் போட்டு விடுங்க அப்பத்தான் சும்மை மறுபடியும் கொண்டுவரலாம் பீல்டில் . -
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
பெருமாள் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இதுதான் நடக்கபோகுது . -
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
பெருமாள் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இன்னும் லிஸ்ட் வரவில்லையா ? -
பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
பெருமாள் replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இன்னும் லிஸ்ட் வந்துதா வரலியா ? -
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க, அரிசி தட்டுப்பாட்டைத் தீர்க்க அரசாங்கம் நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். “அரசாங்கம் நீண்ட கால தீர்விற்கு செல்ல வேண்டும்.இல்லையென்றால் நாடு மற்றுமொரு நெருக்கடியை சந்திக்க நேரிடும்.நெல் சந்தைப்படுத்தல் சபை இந்த நெருக்கடியை போக்குவதற்கு ஒரு முறையான வேலைத்திட்டத்தை தயாரித்து யால பருவத்திற்கான நெல்லை கொள்வனவு செய்ய வேண்டும், இவ்வாறான சூழ்நிலையில் சந்தையில் அரிசிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படலாம்” என சேமசிங்க எச்சரித்துள்ளார். பீர் மற்றும் கால்நடை தீவன உற்பத்திக்கான அரிசி விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வெள்ளத்தினால் சேதமடைந்த நெற்செய்கைகளுக்கு நட்டஈடு வழங்குவதற்குப் பதிலாக அவற்றை மீள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் விவசாயப் பணிப்பாளர் கே.பி.குணரத்ன தெரிவித்துள்ளார். https://www.4tamilmedia.com/menu-news/srilanka/severe-shortage-imminent-if-rice-not-imported-within-next-two-weeks
-
சிங்களவர்களுக்கு புரிந்து விட்டது நம்மவர்களுக்கு இன்னும் புரிய வில்லை அவ்வளவுதான் . புலம் பெயர் தமிழரில் ஊர் திரும்பி போனவர்கள் யார் அவர்களின் பாக் ரவுண்ட் என்ன ? ஆனால் இன்னமும் ஊர் பக்கமே போக மாட்டினம் என்ற வைராக்கியத்துடன் இருக்கும் புலம் பெயர் என்ன நிலையில் இருக்கினம் என்ற தரவு நம்மிடம் இல்லை ஆனால் சொ=சிங்களத்திடம் இருக்கு . அநேகர் தமிழ்நாடு சென்று பலாலிக்கு செல்லவே விரும்புகினம் .
-
ஒரு பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒரு முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான். திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான். அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான். எல்லோரும் திகைத்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான். முதலைகள் அவனை விரட்ட தொடங்கின. அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான். அந்த பணக்காரனும் பேசியபடியே பத்து லட்சம் ரூபாயை உடனே தந்து விட்டான். வாயெல்லாம் பல்லாக தான் இருந்த இடத்துக்கு திரும்பி வந்த அந்த தைரியசாலி தன் மனைவியிடம் மெதுவாக கேட்டான். " இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும் போது தள்ளி விட்டுட்டியே. நான் செத்திருந்தா?" மனைவி அமைதியாக சொன்னாள் "அப்போதும் எனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்". நீதி: ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்.
-
புலம் பெயர் அமைப்புக்களை தூக்கி எறிந்த அநுர அரசு
பெருமாள் replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
பெருமாளுக்கும் இவரை பிடிக்காது . -
அது கிடைக்காது என்று சொல்லி விடுங்க அவாவிடம் 😁
-
அதுக்கு பிறகும் அவரின் மகளுக்கு என்ன தேவையிருந்தது அங்கு ? 😃 சுமத்திரன் தருவேன் என்ற பங்கு பத்திரங்கள் போன்றவற்றை தேடுகிறா போல் உள்ளது ?
-
உக்ரைனிற்கு எதிரான போரில் யாழ் இளைஞர்களா?மறுக்கின்றது ரஸ்ய தூதரகம்
பெருமாள் replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
ரைசியவின் லைன் சென்றிக்கு ஆள் எடுப்பதாக சொல்லியே இவர்களுக்கு சொல்லபட்டு அனுப்ப பட்டு உள்ளார்கள் என்கிறார்கள் இம்முறை குளிர் தொடக்கதிலே கில்லி விளையாட பயந்து போய் அலறி இருக்கிறார்கள் . -
மீண்டும் அதிகரிக்கும் பொருட்களின் விலை! மக்கள் கடும் விசனம்
பெருமாள் posted a topic in ஊர்ப் புதினம்
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் மக்கள் தமது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். பல அரிசி ஆலைகள் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் விலையும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன் கடந்த அரசாங்கங்களின் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. https://tamilwin.com/article/sri-lanka-weather-change-economy-effects-1733135297 -
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்(Narendra Modi) அழைப்பின் பேரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்வார் என அந்நாட்டின் கிரெம்ளின் மாளிகை(Kremlin - ரஷ்ய கூட்டமைப்பின் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லம்) செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ரஷ்ய தூதரகத்தின் தகவலின்படி, புடினின் இந்தியா வருகைக்கான திகதிகள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிவு செய்யப்படும் என கிரெம்ளின் மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் வருடத்திற்கு ஒரு முறை இது போன்ற கூட்டங்களை நடத்த இரு நாட்டு தலைவர்களும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கிரெம்ளின் மாளிகை மோடியின் அழைப்பை ரஷ்யா பெற்றுள்ளதாகவும், , நாங்கள் அதை நிச்சயமாக சாதகமாக பரிசீலிப்போம் என கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாடல் கூறியுள்ளார். மேலும், கடந்த ஒக்டோபர் - இல் நடைபெற்ற 16ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 23 ஆவது இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு இந்தியா வருமாறு புடினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளார். இதற்கமைய இரு தலைவர்களும் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பைப் பற்றி விரிவான ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/putin-visits-india-at-modi-s-invitation-1733149422
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் கடந்தகால உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன குறித்து முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளைத் தற்போது நிறைவேற்றுவீர்களா என பிரித்தானிய (UK) வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் அந்நாட்டுப் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் (27) நடைபெற்ற வெளிவிவகாரக்குழுக் கூட்டத்திலேயே இலங்கையைப் பூர்விகமாக கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் மேற்கூறப்பட்ட விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார். பிரித்தானிய அரசாங்கம் இதன்போது, "இன்றை தினம் (27) உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு முக்கியமான நாளாகும்" என்று சுட்டிக்காட்டிய உமா குமரன், 'கடந்த 2023ஆம் ஆண்டு தமிழர்களுக்குத் தோள் கொடுக்குமாறும், மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை பரிசீலிக்குமாறும் நீங்கள் பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தீர்கள். அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் சர்வதேச நீதிப்பொறிமுறை தொடர்பான பரிந்துரையைப் பரிசீலிக்குமாறு அப்போதைய எதிர்க்கட்சித்தலைவரும் வலியுறுத்தியிருந்தார். இப்போது நீங்கள் வெளிவிவகார செயலாளர். அவர் பிரதமர். எனவே, நீங்கள் உங்களது முன்னைய கருத்துக்களின்படி செயற்படுவீர்களா? மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைப்பீர்களா?' என டேவிட் லெமியிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமி, "தற்போது இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியிருக்கிறது. அத்தோடு கடந்தகால மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்ட விடயத்தில் முன்னேற்றகரமான சமிக்ஞைகள் தென்படுகின்றன. அதேவேளை, கடந்தகால மீறல்களுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு கொள்கைகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம். மேலும் அத்தகைய மீறல்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவது மிக அவசியமாகும்' என்று தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/british-foreign-secretary-regarding-sri-lanka-1733160919
-
மாவீரர் தின நிகழ்வு நடத்தியோரை ஏன் கைது செய்யவில்லை என கொழும்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, குற்ற விசாரணைப் பிரிவிடம் இன்றைய தினம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் காணொளிகளை சமூக உடகங்களில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிலரை பொலிஸார் கைது செய்திருந்தனர். மாவீரர் நிகழ்வு எனினும் இந்த மாவீரர் நிகழ்வுகளை மேற்கொண்டவர்களை அடையாளம் கண்டு என் கைது செய்யவில்லை என நீதவான் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த காணொளியை சமூக ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கெலும் ஹர்ஷன என்ற நபர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நபரை பிணையில் விடுதலை செய்த போது, நிகழ்வினை நடத்தியவர்களை ஏன் கைது செய்யவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் நீதவான் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்கான சட்ட அவகாசம் குறித்த தகவல்களை முன்வைக்குமாறு நீதவான் திலின கமகே, குற்ற விசாரணைப் பிரிவிற்கு அறிவித்துள்ளார். https://tamilwin.com/article/why-police-not-arressted-maavirar-day-organizers-1733158431
-
திருகோணமலையைச் சேர்ந்த 60 வயதுப் பெண் ஒருவர் பயங்கரவாத குற்றத் தடுப்பினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி எதிர்வரும், 4ஆம் திகதி விசாரணை இடம்பெறவுள்ளதாக அழைப்பு கடிதத்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை அழைப்பு இந்நிலையில், எந்தவிதக் காரணங்களும் குறிப்பிடப்படாமல் விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனிடையே இலங்கை பொலிஸார் மேற்கொள்ள வேண்டிய விசாரனையை பயங்கரவாதப் பிரிவைக் கொண்டு நடத்துவது ஒரு அச்சுறுத்தும் செயல் சமூக ஊடகங்களில் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. https://tamilwin.com/article/60-year-old-woman-questioned-by-crime-stoppers-1733163593
-
இலங்கையில் இடம்பெற்ற போருக்குப் பிறகு நல்லிணக்கம் மற்றும் குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசு தொடர்ந்தும் காலம் அவகாசம் கோரி வருகிறது. எனினும், இலங்கைக்கு எதிரான பிடியை விட்டுக்கொடுக்க கூடாது என்ற முடிவுடன், நீண்டகாலமாக நாட்டில் காணப்படும் அரசியல் பிரச்சினைகளுக்கு சர்வதேச நடுவர் மன்றத்தின் ஊடாகவே தீர்வு காண முடியும் என புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இன்று வரை வலியுறுத்தி வருகின்றன. தேசிய பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும், இனிவரும் எந்தவொரு பேச்சுக்களையும் சர்வதேச நடுவர் முன்னிலையில் நடத்த வேண்டும் என அந்த அமைப்புக்கள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றன. அந்தவகையில் இலங்கையில் வரலாற்று ரீதியான ஆட்சியை கைப்பற்றியுள்ள அநுரகுமார திசாநாயக்க அரசு, சர்வதேச பொறிமுறையின் ஊடாக தமிழர்களுக்கான உள்ளக விசாரனையை ஆரம்பிக்க புதிய நகர்வை கையாள திட்டமிட்டுள்ளதாக அரசியல் தற்போது வட்டாரங்களில் சில கருத்துக்கள் மேலோங்கியுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ், சர்வதேச பொறிமுறை என்பது அநுர அரசால் கையாள திட்டமிடப்பட்டுள்ள அதிமுக்கிய செயற்பாடு என சுட்டிக்காட்டினார். மேலும் , இவ்வாறான விடயங்கள், புலம் பெயர் அமைப்புக்களுக்கு சவாலை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார். https://tamilwin.com/article/government-challenges-diaspora-organizations-1733156459
-
ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார். ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது. நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை. இதனால் பாட்டியின் பேரன் மிகவும் வருத்தமடைந்தான். பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான். அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி. வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது. கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா..? என்ற குழப்பம் உண்டாகியது.. எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று.. விஏஓவிற்கு ஒரு கடிதம் எழுதினான். மதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான். கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்தன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம்.. நமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு.. பேரன் எழுதுன கடிதத்ததையும் சேர்த்து அனுப்பினார். தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது. தாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு.. மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார். கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது.கலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே.. கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான். கேட்டவன் எதிர்க்கட்சிக் காரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்.. நமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார். அனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு.. ஆத்து தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணி தான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்.. அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார். கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார். அவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த அனுபவத்தின் படி பார்த்தால்.. என்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை..ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று.. மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து.. மாநில அமைச்சரிடம் இருந்து மாவட்ட கலெக்டருக்கு வந்து..மாவட்ட கலெக்டரிடமிருந்து தாசில்தாருக்கு வந்து அவரிடமிருந்து விஏஓக்கு வந்து.. விஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது.. (இந்த கதை சிரிக்க மட்டுமல்ல.... 🙁 ) சிந்திக்கவும்.😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃