Everything posted by பெருமாள்
-
ட்ரம்பின் முடிவுகளால் பிளவடைய போகும் இலங்கை - திணறும் இந்தியா!
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(22.12.2025) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் இலங்கையிலிருந்து வெளியேறியவுடன் சீனாவினுடைய மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்க கூடிய ஜாவேவும் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவருடன் உயர்மட்ட குழுவொன்றும் வருகின்றது. இவ்வாறு அரசியல் தலைவர்கள் இலங்கைக்குள் வருவதை பூகோள அரசியல் ரீதியாக சாதாரணவிடயமாக பார்க்க முடியாது. கடந்த 11.12.2025 அன்று அமெரிக்க துணைச்செயலாளர் எலிசன் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இலங்கைக்கான பேரிடர் பணியின் முதன்மை பங்கினை அமெரிக்கா வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனவே தற்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் வருகைக்கும், சீனாவின் உயர் அதிகாரியின் வருகைக்கும் முக்கிய காரணமாக இருப்பது அமெரிக்க துணைச்செயலாளரின் வருகை எனலாம். TamilwinTamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Late...Tamilwin provides all the latest Sri Lankan Tamil News of Sri Lanka and International The news includes local, regional, national and international news on Sri Lanka, India, World, Political, Busines
-
இலங்கை மீது எற்பட்டுள்ள திடீர் அச்சம்- அவசரமாக விரைந்துள்ள எஸ்.ஜெயசங்கர்
இலங்கையை டிட்வாபுயல் உலுக்கிய பின்னர் அழிவிலிருந்து மீள பல அண்டையநாடுகள் உதவிகரம் நீட்டின. அதில் இந்தியா மற்றும் அமெரிக்கா முன்னிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இலங்கைக்கு அமெரிக்க துணைச்செயலாளர் எலிசன் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இந்தநிலையில் நேற்றையதினம்(2025-12-22) இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(22.12.2025) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வருகைதந்துள்ளார். இன்றையதினம்(23) சீனாவினுடைய முக்கிய பிரதிநிதிகள் குழுவும் வருகை தரவுள்ளது. https://tamilwin.com/
-
சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி தமிழ் பெண்
சுவிஸின் சட்டம்கள் கடுமையானவை முடிந்தால் புர்கா அணிந்து அரசியல் செய்யட்டும் பார்க்கலாம் .
-
தேசிய மக்கள் சக்தி வசம் சென்ற கரைத்துறைப்பற்று பிரதேச சபை! தமிழரசை சாடும் பலர்..
தேர்தல் வந்தால் தமிழரசு மண் கவ்வும் பின்னால் கதவால் வந்த கபட வேட தாரி சுமத்திரன் பின் கதவால் போயிடுவார் .
-
பௌத்த தேரரை இப்படி இழுத்துச் செல்வீர்களா..? வேலன் சுவாமிக்காக களமிறங்கும் தமிழ் அரசியல்வாதிகள்
சட்டவிரோத விகாரைக்கு எதிராக தையிட்டியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் வேலன் சுவாமி கைது செய்யப்பட்டமையினை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியிலுள்ள கட்சி தலைமையகத்தில் இன்று(22/12/2025) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். தையிட்டியில் ஏற்பட்ட பதற்ற நிலை மேலும், நேற்றைய தினம் தையிட்டியில் நடைபெற்ற சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் வேலன் சுவாமி கைது செய்யப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெளத்த பிக்கு ஒருவர் இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக இழுத்துச் செல்லப்படுவாரா என கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன், இந்த பதற்ற நிலை காரணமாக, தற்போது வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தற்போது தமிழ்க்குடிமகன் அனைவரும் ஒன்றிணைய தயார் என்ற செய்திகளைப் பார்க்கிறோம். ஆனால் குறித்த விடயம் தொடர்பாக எமக்கு எவ்வித அழைப்பும் விடுவிக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாக ஒரு தடவைக்கு நூறு தடவை சிந்திக்கப்பட வேண்டும் என்றும் மணிவண்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும், கஜேந்திரகுமார் மற்றும் ஏனைய தமிழ்க் கட்சிகள் தொடர்பாகவும் கடுமையாக விமர்சித்தும் மணிவண்ணன் பேசியுள்ளார். https://tamilwin.com/
-
தேசிய மக்கள் சக்தி வசம் சென்ற கரைத்துறைப்பற்று பிரதேச சபை! தமிழரசை சாடும் பலர்..
முல்லைத்தீவு- கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளர் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் இன்று(22/12/2025) இடம்பெற்றுள்ளது. இரகசிய வாக்கெடுப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசுக் கட்சியின் சின்னராசா லோகேஸ்வரன் கடந்த ஜீன் மாதம் வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் மாதம் தவிசாளர் பதவியில் இருந்து விலகியிருந்தார். இதனைத் தொடர்ந்து, வெற்றிடமாக காணப்பட்ட தவிசாளரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் இன்று(22) நடைபெற்றுள்ளது. அதில், 21 உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். தவிசாளர் தெரிவில், 13 உறுப்பினர்கள் இரகசியமான முறையில் வாக்கெடுப்பினை நடத்த ஆதரவு தெரிவித்த நிலையில், தவிசாளர் தெரிவிற்கான முன்மொழிவு இடம்பெற்றுள்ளது. தவிசாளர் தெரிவு இதன்படி, தமிழரசுக் கட்சி சார்பில் மிக்கேஸ் பிள்ளை ஜோன்சன் மோகனராஜா, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ், தேசிய மக்கள் சக்தி சார்பில் இமக்குலேற்றா புஸ்பானந்தன் ஆகியோர் உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில், இமக்குலேற்றா புஸ்பானந்தன் 10 வாக்குகளையும்,ஜோன்சன் மோகனராஜா 5 வாக்குகளையும் தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ் 6 வாக்குகளையும் பெற்ற நிலையில் பெரும்பான்மை வாக்குகள் பெறாத நிலையில் குறைந்த வாக்கினை பெற்ற தமிழரசுக் கட்சி சார்பில் முன்மொழியப்பட்டவர் நீக்கப்பட்டார். இதனையடுத்து, இரண்டாம் தடவையாக இமக்குலேற்றா புஸ்பானந்தன், தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ் ஆகியோருக்கு இடையிலான போட்டி இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்டுள்ளது. அதில், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இமக்குலேற்றா புஸ்பானந்தன் 14 வாக்குகளையும் தொம்பைப்பிள்ளை பவுல்ராஜ் 7 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இந்த வாக்கெடுப்பு அடிப்படையில், உள்ளூராட்சி ஆணையாளராக புதிய தவிசாளர் தேசிய மக்கள் கட்சியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கரைத்துறைப்பற்று பிரதேச சபை அனைத்து மக்களின் முன்மொழிவுகளையும் ஏற்று சபையினை நடத்துவோம், மத்திய அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்புக்களையும் ஏற்று கரைத்துறைப்பற்று பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வதில் பாராபட்சம் இன்றி செயற்படுவோம், ஜனாதிபதியின் கொள்கையின்படி பாமர மக்களை முன்னேற்றுவோம் என புதிய தவிசாளர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் உறுதி எடுத்துக் கொண்டுள்ளார். இதேவேளை, முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபை தமிழரசுக் கட்சியினாலேயே பறிபோனது என சமூக செயற்பாட்டாளர் மற்றும் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சமூக செயற்பாட்டாளரின் ஆதங்கம் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் ஒருவர், முல்லைத்தீவு மாவட்டத்தை தமிழரசுக் கட்சியானது புறக்கணித்து செல்கின்றது. இன்று அரச கட்சியினருக்கு வாக்களித்து தமிழரசுக் கட்சியினரின் பெரும்பான்மை ஆதரவோடு தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்திருப்பது மிக வேதனையான விடயம். இரத்த வடுக்கள் தெரியாதவர்களும், வெடியோசை கேட்காதவர்களும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இங்கே இருக்கின்ற சில நன்னடத்தை கெட்டவர்களின் வாக்குறுதிகளை நம்பி எமது கரைத்துறைப்பற்று பிரதேச சபையை தேசிய மக்கள் சக்திக்கு தாரைவார்த்து கொடுத்திருக்கின்றார்கள். இது தாயக மண்ணிற்கு கிடைத்த பெரும் தோல்வியாகவே நான் கருதுகின்றேன். தாயக விடுதலை போராட்டத்திற்கு தங்கள் உயிரை தியாகம் செய்த மாவீரர்களின் கனவுகள் சற்றேனும் மதிக்காத தமிழரசுக்கட்சி ஈழத்தின் இதய பூமியில் வேறுகட்சிக்கு ஆட்சியமைத்து கொடுத்ததற்கு தமிழரசுக் கட்சியின் தலைமைக்கும், கட்சியினை சேர்ந்தவர்களுக்கும் கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். பொறுப்பில்லாத தலைமைகள் அதேப்போன்று கரைத்துறைப்பற்று பிரதேசபை உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா கூறுகையில், அதிக வாக்குகளை பெற்று ஆளும் கட்சி தவிசாளர் பதவியினை கைப்பற்றியது தமிழரசுக் கட்சியின் சுயநலத்தை காட்டுகிறது. இன்று இந்த தமிழ் மண்ணை இழந்ததற்கு காரணம் தமிழரசுக் கட்சி தான். இவர்கள் வீட்டுக்குள் இருந்து அரசியல் நடத்திக்கொண்டு, உல்லாச படகுகளை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேசபை உறுப்பினர் தவராசா அமலன் கருத்து தெரிவிக்கையில், கரைத்துறைப்பற்று தவிசாளர் தெரிவில் தமிழரசுக் கட்சி இந்த சபையை இழந்திருக்கின்றது. ஏனெனின் தமிழரசுக் கட்சியின் தலைமைகள் முல்லைத்தீவில் இருக்கும் ஒரு நபரின் கதையினை கேட்டு செயற்பட்டுள்ளனர். இதனால் தான் இன்று இந்த சபை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் சென்றிருக்கிறது. தேசியம் கதைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியில் குளிர்காய்ந்து கொண்டு இருக்கும் ஒரு சிலர் தான் தலைமைகள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். https://tamilwin.com/a
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
பூர்வ குடிகள் தமிழர் இல்லை என்று வந்தேறு குடி சிங்களம் ஆடிய ஆட்டத்தால் இலங்கை இன்று பல்வேறு நாடுகளால் பங்கு பிரிக்கப்பட்டு கொண்டு இருக்குது போக போக இன்னும் சிதறு தேங்காயை போன்று போகும் இப்பவே சிங்களவர்கள் அகதியாய் லண்டனிலும் தஞ்சம் கோரி கொண்டு இருக்கிறார்கள் இங்கு சிலருக்கு மோட்டு சிங்களம் என்றால் கோபம் வரும் இப்ப துணிந்தே சொல்லலாம் மோட்டு சிங்களம் ஒழுங்கா நாட்டை ஆட்சி புரிய தெரியாமல் சொந்த இனம் சிங்களமும் அகதியாய் நாட்டை விட்டு ஓடுது .
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
சுமத்திரன் என்பவர் கபட வேட தாரி அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது .
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
முஸ்லிம்களை வெளியேற்றியது இன சுத்திகரிப்பு என்றவரின் தற்போதைய அமைதி பற்றிதான் சுட்டிகாட்டபட்டது .
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
டெல்லி இன்னும் கனவு கண்டு கொண்டு இருக்கிறது புலி மீளுருவாக்கம் நடைபெறும் என்றும் தனது அரசியல் பிழைக்காது எனவும் நம்பிக்கொண்டு உள்ளது .
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
முஸ்லிம்களை வடகிழக்கை விட்டு புலிகள் அனுப்பியது இன சுத்திகரிப்பு என்று சொல்லியவர் தற்போது அவர்களை மீள் குடியேற அழைப்பு விடலாமே ? புயலால் அவர்களும் பாதிக்க பட்டு உள்ளார்கள் இங்கு முஸ்லிம்களுக்கு ஆதரவாய் கருத்து எழுதுபவர்கள் எங்கு போனார்கள் ? இங்கு இதய சுத்தியுடன் கருத்துக்கள் வருவதில்லை முஸ்லிம் ஆதரவாளர் போன்று நடிப்பவர்களுக்கு குழம்பிய குட்டையை மேலும் மேலும் குழப்புவதே நோக்கம் அன்றி வேறொன்றும் இல்லை . தற்போதைய நிலையில் பலபக்கமும் அடிவாங்கிய அரசியல்வாதி சுமத்திரன் முஸ்லிம்களுக்கு ஆதரவாய் இந்த நேரம் அறிக்கை விட்டு பார்க்கட்டுமே பார்க்கலாம் . தனது சுயநல அரசியலுக்காக சுமத்திரன் பிச்சைகாரனை விட கேவலமாய் நடந்து கொள்ள கூடியவர் நடந்து கொள்பவர் . பசிக்கு யாசகம் பெறுபவர்களை கூட அனுதாபம் காட்டலாம் சுமத்திரன் போன்றவர்கள் திருட்டு யாசகம் பெறுபவர்களில் ஒருத்தர் .
-
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி!
முதலில் புரையோடி போன சிங்கள புத்த சிலைகளை வடகிழக்கில் வைப்பதை நிறுத்தனும் அதன் பின் ஆலய வழிபாடுகள் மேற்கொள்ளும் நடிப்பை தொடர்வது நல்லது .
-
கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்கள்! பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகள்
கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்களின் பட்டியலின் பிண்ணனியில் தமிழ் அரசியல்வாதிகள் செயற்படுவதாக தேசியமக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்(20.12.2025) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, கிளிநொச்சியில் கட்டப்பஞ்சாயத்து நடாத்திக் கொண்டு பல அரசியல்வாதிகள் நல்லவர்கள்போல் நடிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கிளிநொச்சியில் திடீர் பணக்காரர்கள் எப்படி சொத்துக்கள் சேர்த்தனர் என்ற விபரத்தை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, தம்மைத் தாக்கிய கூலித்தொழிலாளியிடம் எப்படி சொத்து வந்தது என்பனையும் கணக்கு காட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/
-
இந்தியாவை உடைப்போம் என கோஷம்; மீண்டும் வெடித்த வன்முறை - வங்கதேசத்தில் நடப்பது என்ன?
வங்கதேசத்தில் இந்தியாவிற்கு எதிராக கோஷங்களும், மீண்டும் வன்முறையும் வெடித்துள்ளது. வங்கதேசத்தில் தேர்தல் வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ராணுவத்தில் உள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் ஆட்சி கவிழ்ந்ததில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. வங்கதேச இடைக்கால அரசின் பிரதமர் முகமது யூனுஸ் தலைமையில், ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த வழக்கில் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படாமல் இந்தியாவிலே இருந்து வருகிறார். வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவிற்கு எதிராக கோஷம் வங்கதேசத்தில் இந்தியாவிற்கு எதிரான கோஷங்கள் அதிகரித்து வருகிறது. டிசம்பர் 15 ஆம் திகதி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தேசிய குடிமக்கள் கட்சி தலைவர் ஹஸ்னத் அப்துல்லா, "இந்தியா பிரிவினைவாத சக்திகளுக்கு தங்குமிடம் அளித்தால், வங்கதேசமும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பிரிக்கும்" என பேசினார். இதனால் கவலையடைந்த இந்திய அரசு, டெல்லியில் உள்ள வங்கதேச உயர் ஆணையரை இந்திய வெளியுறவுத் துறை நேரில் அழைத்து விளக்கம் கேட்டது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்த ஹஸ்னத் அப்துல்லா, "ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்து வருவதால், இந்திய உயர் ஆணையரை நமது நாட்டை விட்டு வெளியேற்றி இருக்க வேண்டும்" என பேசினார். மேலும், டாக்காவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் நோக்கி சில அமைப்புகள் பேரணி நடத்த முயன்றது. இதனையடுத்து, வங்கதேசத்தில் உள்ள 3 விசா மையங்களை இந்தியா மூடியது. வங்கதேசத்தில் மீண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது. ஷெரீப் உஸ்மான் ஹாதி உயிரிழப்பு கடந்த ஆண்டு ஆட்சி கவிழ்ப்பிற்கு காரணமான போராட்டத்தில் "இன்கிலாப் மோன்சோ"( Inqilab Moncho) அமைப்பு முக்கிய வகித்தது. இந்த அமைப்பின் தலைவரான 32 வயதான ஷெரீப் உஸ்மான் ஹாதி(sharif osman hadi), கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி, டாக்காவில் உள்ள ஒரு மசூதியிலிருந்து வெளியேறியபோது முகமூடி அணிந்த நபர்களால் சுடப்பட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் அவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாள் அவர் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரண செய்தி வெளியானதும் ஆதரவாளர்கள் டாக்காவில் உள்ள சதுக்கத்தில் போராட்டத்தில் இறங்கினர். ஹிந்து இளைஞர் அடித்து கொலை இதனையடுத்து, போராட்டக்காரர்கள் வங்கதேசத்தின் முக்கிய நாளிதழ்களான 'தி டெய்லி ஸ்டார்' (The Daily Star), 'புரோதோம் ஆலோ' (Prothom Alo) ஆகிய அலுவலகங்களுக்கு தீ வைத்து சேதப்படுத்தினர். மேலும், சட்டகிராம் (Chattogram) நகரில் உள்ள இந்தியத் துணை உயர் ஆணையரின் இல்லம் மற்றும் இந்திய துணை தூதரகம் மீதும் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உடனாடியாக விரைந்த காவல்துறையினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதனையடுத்து, மைமென்சிங் மாவட்டத்தின் பல்லூகா உபஜிலா, துபாலியா பரா பகுதியில் ஜவுளி கடை ஒன்றில் பணியாற்றிய தீபு சந்திர தாஸ் என்பவர் முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக கூறி அடித்து கொல்லப்பட்டார். மேலும், அவரை மரத்தில் கட்டி வைத்து தீ வைத்துள்ளனர். Lankasri Newsஇந்தியாவை உடைப்போம் என கோஷம்; மீண்டும் வெடித்த வன்முறை -...வங்கதேசத்தில் இந்தியாவிற்கு எதிராக கோஷங்களும், மீண்டும் வன்முறையும் வெடித்துள்ளது. வங்கதேசத்தில் தேர்தல் வங்கதேசத்தில்...
-
இமயமலையில் அணு ஆயுதம் ஒன்றைத் தொலைத்த அமெரிக்கா... 60 வருடங்களாக நீடிக்கும் மர்மம்
சீனாவை ரகசியமாக கண்காணிக்கும் பொருட்டு அணு ஆயுதத்தால் இயங்கும் கருவி ஒன்றை இமயமலையில் நிறுவ முயன்ற அமெரிக்கா, அதை அங்கேயே தொலைத்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. அணுசக்தி கருவி 1965 ஆம் ஆண்டு பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது, சீனா அணுகுண்டு சோதனை ஒன்றை முன்னெடுத்தது. இதனையடுத்து சீனாவின் ஏவுகணை சோதனையைக் கண்காணிக்கும் பொருட்டு இமயமலையின் நந்தா தேவி சிகரத்தின் மீது அணுசக்தியால் இயங்கும் ஆண்டெனா ஒன்றை நிறுவ அமெரிக்கா முடிவு செய்தது. அமெரிக்க மற்றும் இந்திய மலையேறுபவர்கள் தங்கள் சரக்குகளை தயார் செய்தனர். ஒரு ஆண்டெனா, கேபிள்கள் மற்றும் SNAP-19C எனப்படும் 13 கிலோ ஜெனரேட்டர். அதன் உள்ளே புளூட்டோனியம் இருந்தது. மலையேறுபவர்கள் தங்கள் இலக்கை நெருங்கவிருந்த நேரம், திடீரென்று ஒரு பனிப்புயல் மலையை மூடியது. கீழே முகாமில், அதிர்ச்சியில் உறைந்துபோன அதிகாரிகள் குழு அவர்களைத் தொடர்புகொண்டு, எடுத்துச்சென்ற பொருட்களை தொலைக்க வேண்டாம், பத்திரப்படுத்துங்கள் என வேண்டுகோள் விடுத்த நிலையில், மொத்த கருவிகளையும் சிகரத்தின் ஒருபகுதியில் மறைத்துவிட்டு, உயிருடன் தப்பியுள்ளனர். நாகசாகியில் வீசப்பட்ட அணு குண்டில் பயன்படுத்தப்பட்ட புளூட்டோனியத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு கொண்ட அணுசக்தி கருவி ஒன்றை அவர்கள் இமயமலையில் விட்டுச் சென்றனர். அதன் பின்னர் அந்த அணுசக்தி கருவிகளை எவரும் பார்த்ததில்லை. சீனாவை உளவு பார்க்க, அப்படி ஒரு திட்டத்தை முன்னெடுத்ததை அமெரிக்கா இதுவரை ஒப்புக்கொண்டதில்லை. அமெரிக்காவின் உளவு அமைப்பான CIA முதலில் அந்த அணுசக்தி கருவியை காஞ்சன்ஜங்கா சிகரத்தில் நிறுவவே திட்டம் தீட்டியுள்ளது. உலகின் மூன்றாவது உயரமான சிகரம் அது. பின்னர் இந்திய இராணுவம் தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், நந்தா தேவி சிகரத்தின் மீது அணுசக்தியால் இயங்கும் ஆண்டெனாவை நிறுவ முடிவானது. மூடி மறைக்கப்பட்டது செப்டம்பர் மாதம் மலையேறத் தொடங்கிய குழு, அக்டோபர் 16 ஆம் திகதி பனிப்புயலில் சிக்கியுள்ளது. 1965ல் நடந்த இச்சம்பவத்தில், தொலைத்த அணு ஆயுத கருவிகளை மீட்க மீண்டும் அதே குழு, ஓராண்டுக்குப் பிறகு மலையேறியுள்ளது. ஆனால் அவை மாயமாகியிருந்தது. பனிக்கட்டி, பாறை, உபகரணங்கள் என அனைத்தும் அந்தப் பனிச்சரிவால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 1978 வரையில் அமெரிக்காவின் அந்த ரகசிய திட்டம் மூடி மறைக்கப்பட்டது. ஆனால் ஒரு பத்திரிகையாளர் மொத்தமாக அம்பலப்படுத்த, அமெரிக்காவிற்கு எதிராக இந்தியாவில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தது. சிஐஏ எங்கள் தண்ணீரை விஷமாக்குகிறது என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் ஒலித்தன. ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரும் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்ம் ரகசியமாக முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், ஆர்ப்பாட்டங்கள் கைவிடப்படுவதாக தகவல் வெளியானது. தற்போது வரையில், SNAP-19C எனப்படும் 13 கிலோ எடை கொண்ட புளூட்டோனியம் ஜெனரேட்டர் என்ன ஆனது என்பது மர்மமாகவே உள்ளது. Lankasri Newsஇமயமலையில் அணு ஆயுதம் ஒன்றைத் தொலைத்த அமெரிக்கா... 60 வரு...சீனாவை ரகசியமாக கண்காணிக்கும் பொருட்டு அணு ஆயுதத்தால் இயங்கும் கருவி ஒன்றை இமயமலையில் நிறுவ முயன்ற அமெரிக்கா, அதை அங்கேய...
-
வெள்ளத்தில் மூழ்கிய துபாய்.. மத்திய கிழக்கிலும் பதற்றத்தை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம்
மத்திய கிழக்கின் முக்கிய நகரமான துபாயில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, பல பகுதிகள் இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காலநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புக்கள் பதிவாகி வரும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் தற்போது மழை அதிகரித்துள்ளது. இந்நிலையில், துபாய் பொலிஸார், கனமழை பெய்து வருவதன் காரணமாக பாதுகாப்பு கவலைகள் எழும்பியுள்ளதால், அப்பகுதி மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மேலும், நகரின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நகர மக்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கையில், வெள்ளிக்கிழமை நண்பகல் வரை மிகவும் கவனமாக இருக்கவும், தேவைப்படாவிட்டால் முற்றிலும் வெளியே செல்வதைத் தவிர்க்கவும் துபாய் பொலிஸார் வலியுறுத்தியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபியில், கனமழை எச்சரிக்கைகள் நடைமுறையில் இருந்ததாக அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கலீஜ் டைம்ஸின் அறிக்கையின்படி, மாறிவரும் வானிலை காரணமாக அபுதாபி சிவில் பாதுகாப்பும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கோரியுள்ளது. அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையில், சமூக ஊடக தளமான X இல், மழை மற்றும் மூடுபனி நகர வானலையை மூடியதால், சின்னமான புர்ஜ் கலீஃபா கிட்டத்தட்ட முற்றிலும் அடர்ந்த மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருப்பதைக் காட்டும் காட்சிகளும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Tamilwinவெள்ளத்தில் மூழ்கிய துபாய்.. மத்திய கிழக்கிலும் பதற்றத்தை...மத்திய கிழக்கின் முக்கிய நகரமான துபாயில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, பல பகுதிகள் இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கிய...
-
தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
Blackburn Brothers 2௦ களில் அஸ்டாவை வாங்கினார்கள் குஜராத்திகள் 6.8 பில்லியன் மில்லியன் அல்ல பில்லியன் கொஞ்ச நாளில் இந்த செய்திதான் கபடி கபடி 😄
-
பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்
இங்கும் இந்த நாய்கள் தடை ரகசியமாக வளர்த்து கடைசியில் எஜமானையே கடித்து குதறும் போது தான் உண்மை வெளியில் வரும் .
-
சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!
போனவர்களுக்கும் சந்தித்து கொண்டவர்களும் உண்மையான மீனவர் பிரச்சனை பற்றி தெளிவு கிடையாது டெல்லியின் ஏவலில் போன கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் .
-
56,000 பாக். பிச்சைகாரர்களை திருப்பி அனுப்பிய சவுதி
வன்மையாக கண்டிக்க வேண்டிய விடயம் ஒரே மதத்துகாரர் இப்படி நட்டாற்றில் விட கூடாது .எண்ணெய் கண்டு பிடிக்கும் முன் இதே சவூதிகள் எப்படி இருந்தார்களாம் பழையதை மறந்து கொட்டமடிக்கிறார்கள் .
-
தமிழர் பகுதியில் சுவிசின் இரகசிய நகர்வு.
இவ்வளவு காலமும் இந்தியன் இருந்து எங்களுக்கு என்ன செய்தார்கள் ? எவன் வந்தாலும் அவனின் சுய நலத்துக்கே வருவான் இலங்கையின் பூர்வ குடி நாங்கள் என்று கடைசியில் எங்களின் இருப்பே பறி போகிறது அதை இந்தியா ரசித்து கொண்டு இருக்கு தமிழ்நாட்டில் தமிழர்கள் டாஸ்மார்க்கில் விழுந்து கிடக்கிறார்கள் .வடகிழக்கில் இருப்பே பறி போகையில் எவன் வந்து எம்மை சாட்டி அரசியல் செய்தால் அதை பிடித்து கொண்டு மேலே போவதுதான் சாணக்கியம் . பழிவாங்கும் இந்திய படங்களை பார்த்து இன்னும் இன்னும் அழிந்து கொண்டு இருக்கிறோம் நல்லகாலம் ஜப்பான்காரன் அணுகுண்டு வீச்சுக்கு பின் அத்தகைய படங்களை பார்க்கவில்லை அவர்களை யார் அழித்தார்களோ அவர்களின் உதவியின் ஊடே வளர்ந்து காட்டி கொண்டார்கள் .
-
தமிழர் பகுதியில் சுவிசின் இரகசிய நகர்வு.
உரிமை உள்ளவர்கள் இலங்கை அருகில் உள்ளது சிங்களவர்கள் கிந்தி பாட்டை ரசித்து கொண்டாடுவார்களே தவிர நம்பி நம்ம வடகிழக்கு தமிழர்களின் கண்மூடித்தனமாய் விசுவாசம் போல் ஏமாற மாட்டார்கள் தங்களின் இந்திய அரசியலில் மிக தெளிவாய் இருப்பார்கள் . உதாரணத்துக்கு இந்திய அரசின் உசுபேத்தளில் நம்மவர் திருகொணோஸ்வரருக்கு மிகபெரிய காண்டா மணி இங்கிலாந்தில் வைத்து செய்து அங்கு கொண்டு சென்றார்கள் கடைசியில் சிங்கள அரசு மறுப்பு தெரிவிக்க கொண்டு போன மணி சேமிப்பு கிடங்கில் கிடக்கு . இப்படி டெல்லியின் இயலாமை வெள்ளிடைமலை.
-
தமிழர் பகுதியில் சுவிசின் இரகசிய நகர்வு.
ஊரிலை நல்லதண்ணி கிணத்துக்காரன் கையில் திடீர் என்று பணம் கிடைத்தால் என்ன செய்வான் ? நாலு பக்கமும் சுவர் இரண்டு ஆள் உயரத்துக்கு வைத்து அந்த நல்ல தண்ணியை தான் மட்டுமே அனுபவித்து கொண்டாடுவான் . அப்படி ஆகா ஓகோ எனும் அளவுக்கு சிங்களம் பெரும் பணக்காரனா மாற கனிம மலை வெட்டுபவர்கள் விடுவார்களா ?
-
தமிழர் பகுதியில் சுவிசின் இரகசிய நகர்வு.
பிச்சை காசு தான் கிடைக்கும் . வழக்கம்போல் மீனுக்கு வாளும் பாம்புக்கு தலையும் காட்ட முடியாதளவுக்கு அமெரிக்கா வாலை ஓட்ட நறுக்கி விட்டுத்தான் உதவியே கொடுத்து உள்ளது கொஞ்சம் பணம் கிடைத்தாலும் சிங்களம் தென்னாசிய அரசியல் தன்ரை குடும்பியில் என்பது போல் இடற தொடங்கும் இது உள்ளே வந்தவங்களும் விளங்கும் வேற வழியே கிடையாது தமிழர் பகுதியில் நாலு புத்தர் சிலை வைத்து கபடி கபடி விளையாட வேண்டியதுதான் . அந்த கனிம வளத்தை கையாள கூடிய அளவுக்கு இந்தியா வளரவில்லை என்கிறார்கள் வழக்கம் போல் அணில் ஏற விட்ட கேஸ் தான் அநேகமா நம்ம அரசியல்வாதிகளிடம் மகஜர் ஒன்று வாங்கி கொண்டு இருப்பார்கள் .
-
இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கவுள்ள ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்!
எல்லாம் கொஞ்ச நாள்தான் .