Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. அது மட்டும் இல்லை அதுக்கு மூளையே கிடையாது ஒன்றில் தூதுவர்களை தனியாகத்தான் சந்திப்பார் காரணம் பிட்டுகேடுகள் வெளியாலை தெரியகூடாது . இந்த முஞ்சுஉறு லண்டனில் தான் கறுப்பு கண்ணாடி காருக்குள் ஒளித்து திரியுதாம் வெளியில் வந்தால் தமிழ் சனம் கலைத்து கலைத்து கோவணத்தையும் உருவி அடி போடும் .
  2. முதுகெலும்பு இல்லாத கூட்டம் தேவையற்று சமய சண்டைகளை வளர்க்க விரும்புகினம் .
  3. ஸ்ரீ அண்ணேய் சிலருக்கு எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் ஏற்று கொள்ள மாட்டினம் இங்கு சிலருக்கு பதிலே போடுவதில்லை புலிகள் தான் இவ்வளவு அழிவுக்கும் காரணம் எனும் மன நோயாளிகளுடன் தர்க்கம் பண்ணி பலனில்லை விட்டு விடுங்க ஓராமாய் நின்று குரைத்து கொள்ளட்டும் .
  4. அது ஒரு சிவபெருமான் கோவில் . அந்தாளும் வந்து சண்டை போட போகுது 😀
  5. இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன் பிரித்தானியாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழரசுக்கட்சியின் பிரித்தானிய ஆதரவு அணி என்று ஒரு அணியினரை சுமந்திரன் முகநூல் பக்கங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இவர்களை சந்தித்து மூடிய சமையலறையில் சுமந்திரன் கலந்துரையாடிள்ளார் என்று பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்தார். அவர்கள் தனிப்பட்ட சந்திப்புகளுக்காக சந்திக்கின்றார்களே தவிர தமிழ் தேசியம் சார்ந்து சந்திக்கவில்லை. சுமந்திரன் தவறானவர் என்று சாணக்கியனே ஒப்புக்கொள்ளும் வகையில் பேசும் காணொளியொன்றினை நான் சமூகவலைத்தளமொன்றில் பார்த்தேன் என குறிப்பிட்டார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். https://tamilwin.com/
  6. கேட்கிறன் என்று குறை நினைக்கவேண்டாம் ஒரு தமிழனாய் அவர் சொன்ன வார்த்தைகளில் என்ன பிழை உள்ளது ? இதே சிங்கள அரசியலவாதிகள் தமிழருக்கு எதிராக இனவாதம் கக்கும் போது உங்கள் a1 கார்டூன்கள் பெரிதாக வரவில்லையே என்ன காரணம் ?
  7. கடந்த 23ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளாக நேற்றைய தினம் பெருந்திரளான மக்களின் வருகையுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த, அணையா விளக்கு போராட்டத்தில் பங்கேற்பதற்காக போராட்ட களத்திற்கு சென்ற, அமைச்சர் சந்திரசேகரன், இரா.சாணக்கியன் மற்றும் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மக்களால் அடித்து துரத்தப்பட்டனர். அத்துடன், செம்மணியில் நேற்று இடம்பெற்ற அணையா விளக்கு போராட்ட இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனையும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து விரட்டியடித்தனர். இது தொடர்பில் இளங்குமரன் எம்.பி இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதுடன் செம்மணியில் குழப்பத்தை ஏற்படுத்திய ஒருவரையும் விட்டு வைக்க மாட்டேன் என பகிரங்க எச்சரிக்கையும் விடுத்துள்ளார். https://tamilwin.com/
  8. இசைப்பிரியா குடும்பத்தை நான் ஏன் காட்டிக்கொடுக்க வேண்டும். அவர்கள் மாவீரர் குடும்பம். அவர்களை காட்டிக் கொடுத்தால் நான் எவ்வாறு தமிழனாக இருக்க முடியும் என இந்தியா - பெங்களூரை சேர்ந்த திரைப்பட இயக்குநர் கு.கணேசன் தெரிவித்துள்ளார். யாழ் - வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இசைப்பிரியாவின் ஊடக பயணத்தை திரைப்படமாக்கினேன் ஆனால் அதனை வெளிவரவிடாது பலர் தடைகளை ஏற்படுத்தினர். ஆனாலும் அதனையும் தாண்டி ஏழாண்டுகளுக்குப் பின்னர் இசைப்பிரியாவின் வரலாறு வெளிவந்துள்ளது. இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில் சிங்கள மக்களை விட தமிழ் மக்கள் சுயநலம் மிக்கவர்களாக மாறி விட்டனர். குறிப்பாக ஈழத்தமிழர்களின் இன்றைய நிலைக்கு ஈழத்தமிழர்களே தான் காரணம், எல்லாவற்றுக்கும் குறைகளைக் கூறிக் கொண்டு அழிவின் நிலைக்கு வந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.... https://tamilwin.com/
  9. புலி போட்ட சூட்டில் முன்னாள் தலையாட்டி களுக்கு இப்பவும் வலிக்குது போல் உள்ளது .
  10. செம்மணி போராட்டத்திற்கு வந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம்(25) இடம்பெற்றுள்ளது. செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என கூறியே அமைச்சர் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். விரட்டியடிக்கப்படும் அரசியல்வாதிகள் அத்துடன், அமைச்சர் சந்திரசேகர் உடன் இருந்த தேசிய மக்கள் சகத்தியினரும் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, போராட்டக் களத்திற்கு வருகை தந்த இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோரும் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/
  11. யாழ்.சாவகச்சேரி நகரில் நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(10) மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸ்நிலையத்தின் கீழ் இயங்கும் போதைப்பொருள் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. கைது இதனையடுத்து, குறித்த பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் மாணவர்களில் மூவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சாவகச்சேரி நகர்ப்பகுதியில் மரத்தளபாட திருத்தவேலை செய்யும் வர்த்தக நிலையத்தை நடத்தும் 45 வயதான முஸ்லிம் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து போதைமாத்திரைகள் பெற்றுக் கொள்வது தெரியவந்துள்ளது. ஜஸ் போதைக்கு அடிமை இந்த நிலையில் இன்று குறித்த வர்த்தகர் 330 போதைமாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இவர் ஜஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தான் ஜஸ் போதைக்கு அடிமையானவர் எனவும் போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜஸ் போதைப்பொருளை பெற்று பாவித்து வருவதாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/
  12. பட ரிலீசுக்கு முன் இப்படித்தான் சிவகர்த்திகேயனும் பொராட்ட சூரியும் போல் அடிபடுவார்கள் இலவச விளம்பரம் தேடி படம் ரிலிஸ் ஆகி விட்டதும் கமல் இன்னுமொரு குழப்பமான கருத்தை வெளியிடுவார் அதற்கு என்ன அர்த்தம் என்று மீடியாவில் இருந்து பட்டி தொட்டி உள்ள பாமரன் தொடக்கம் படித்தவன் வரை தலையை பிய்த்து கொண்டு திரிவார்கள் வழக்கம் போல் சில நாட்கள் சென்ற பின் கமலே விளக்கம் கொடுப்பார் அதாவது கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்பது போலும் கேட்காதது போலவும் அவரின் விளக்கம் இருக்கும் பிறகென்ன கன்னட மீடியாக்கள் கமல் மன்னிப்பு கேட்ட விட்டார் என்று அலறும் அதுக்கு இடையில் நம்ம பக்கம் தமிழ் நாட்டில் மற்றொரு பரபரப்பான செய்தி குஞ்சு பொரித்து பறக்க தொடங்கும் பிறகென்ன மக்கள் அந்த செய்தி யில் இந்த மகா நடிகனின் பொய் பிரட்டு செய்திகளை மறந்து விடுவார்கள் . பக்கத்தில் சொந்த இனம் ஆயிரகணக்கில் கொல்லபட்டு கொண்டு இருக்கும் நேரம் மானடா மயிலாட பார்த்து கவலையை போக்கி கொண்டவர்கள் அல்லவா ............................
  13. அவர் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் பிறந்தவர். அவரது குடும்பம் ஒரு தமிழ் ஐயங்கார் (பிராமண) குடும்பம், எனவே அவரது பூர்வீக மொழியும், பண்பாடும் தமிழ் மையமாக இருக்கிறது. ஐயங்கார் என்பது வைணவ சமயத்தை குறிக்கும் .
  14. ஒரு படத்துக்கு இலவச விளம்பரம் காலா காலமாய் மணி ,கமல் கூட்டம் செய்யும் இலவச விளம்பர அந்தர் பல்டி . அப்ப Suhasini Mani Ratnamஎன்ன வெள்ளி பார்த்து கொண்டு இருக்கறாங்க போல் உள்ளது அவங்க பூர்வீகம் கர்நாடக தானே ?
  15. குறை நினைக்க வேண்டாம் அந்த பகுதி எத்தனையாம் பக்கத்துள் என்று சொன்னால் தெரிந்தால் சொல்லி உதவி பண்ணுங்க நானும் தேடி பார்க்கிறேன் சிலவேளை வேலை பளு காரணமாக என் கண்ணில் படாமல் போயிட்டோ என்று நினைக்கிறேன் . இப்படி எழுதுவதால் வேலன் சாமிக்கு சப்போர்ட் பண்ணுகிறான் என்று பெருமாளை ஒதுக்க வேணாம் வேலன் சாமி என்பதே டுபாகூர் சாமி அந்த பெயரே நல்லூர் முருகன் தனது கனவில் நல்லூர் முருகன் சொல்லிய பெயர் அது என்று சொல்லி பெயர் மாறியவர் . அவர் ஒரு மாமிச பட்சணி
  16. எனக்கும் விளங்கவில்லை முஸ்லிம் கிணத்துக்குள் பன்றி கறியை எங்கு போட்டார்கள் யாழ்ப்பான வைப மாலை யில் எங்கு எத்தனையாம் பக்கத்துள் எழுத பட்டுள்ளது ?
  17. ஈழத்தமிழர் விவகாரத்தில் தொடர்ந்தும் வெறுப்பை வெளிப்படுத்தி வரலாற்று துரோகங்களை அரங்கேற்றி வரும் இந்தியா தம்மை நம்பி வந்த ஈழ தமிழர்களை 30 ஆண்டுகளுக்கு மேல் அகதிகளாகவே நடாத்துகின்ற அவலம் நேற்று இந்திய உச்சநீதிமன்றத்தில் ஈழ அகதி ஒருவர் தொடர்பான தீர்ப்பின் மூலம் மீளவும் தன்னை ஒரு ஈழத்தமிழர்களுக்கு எதிரான ஒரு நாடாக அடையாளப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் காந்தி சதுக்கம் ,காந்தி பூங்கா , மகாத்மா காந்திக்கு சிலை என்று இலங்கையர்கள் இந்தியாவின் மீதான ஆதரவை வெளிப்படுத்தினாலும் இந்தியாவோ ஒரு எதிரியை பாவிப்பது போலவே பாவித்து வருகிறது. இந்த நிலையில் ஈழத்தமிழர்களுக்கு இந்தியா இதுவரை என்ன செய்திருக்கிறது என்று கேட்டால் உண்மையில் இதுவரை எதுவுமே செய்யவில்லை என்பதுதான் பதில். இந்தியாவின் ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாடுகளை பற்றியும் தமிழரின் தேசிய வேட்கையை சிதைத்த இந்திய நகர்வுகள் தொடர்பாகவும் ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு. வணக்கம். இன்றைய நாளும் மற்றுமொரு ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வின் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று 2052025 இன்றைய நாளை பொறுத்தவரை நாங்கள் பேச வேண்டிய விடயம் அல்லது பேசுகின்ற மிக முக்கியமான ஒரு விடயமாக மாறியிருப்பது ஒரு அகதியினுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருப்பது மாத்திரமல்லாமல் அதற்கு சொல்லப்பட்டிருக்கக்கூடிய காரணம் என்பது ஈழத்தமிழ் மக்களிடையே அவர்களுடைய மனங்களில் இவ்வளவு காலமும் இந்தியா தன்னுடைய தந்தைய நாடு என்பதும் இந்தியா எங்களுக்கு ஆதரவாக இப்போதாவது ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கையோடும் இருந்த மக்களுக்கு மிகப்பெரிய அதிர்வலைகளையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைய தினம் இந்தியாவிலிருந்து ஒரு செய்தி வெளிவந்தது. அந்த செய்தியை நான் உங்களோடு இப்போது பகிர்ந்து கொள்கிறேன். 140 கோடி மக்கள் தொகையுடன் ஏற்கனவே போராடி வரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள அகதிகளுக்கு இடமளிக்கக்கூடிய இந்தியா ஒன்றும் தர்மசாலை அதாவது இலவச தங்குமி இடம் அல்ல என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதாகவும் இலங்கை தமிழகதியினுடைய தங்குமிடத்திற்கான அனுமதி கோரிக்கையை நிராகரித்திருப்பதாகவும் அந்த செய்தி வெளிவந்தது. தமிழில் விடுத்தலை புலிகள் அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்ததாக இலங்கை தமிழரான ஒரு மனுதாரர் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தனிநபர் அல்லது அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் யுஏபிஏ என்று சொல்லக்கூடிய சட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்தினால் அந்த நபர் குற்றவாளி என தீர்ப்பாளிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் அவரது சிறைதண்டனையை 10 ஆண்டுகளில்ிருந்து ஏழு ஆண்டுகளாக கடந்த 2022 ஆம் ஆண்டு குறைத்திருந்தது. அதன் அத்தோடு அவரது சிறைதண்டனை முடிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டது. மேலும் மூன்று வருடங்களாக அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய அந்த நபர் இலங்கைக்கு திரும்பினால் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் எனவே தன்னை இலங்கைக்கு நாடு கடத்து விளைதை தடுத்து நிறுத்த கூறியும் உச்ச நீதிமன்றத்திலே மனுதாக்கல் செய்திருந்தார். தான் முறையான விசாவின் மூலமாக இந்தியா வந்ததாகவும் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் இப்போது இந்தியாவிலே குடியேறி விட்டனர் எனவும் அந்த மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளான தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி கே வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அந்த அமர்வு உலகம் முழுவதிலும் இருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? நாங்கள் 140 கோடியுடன் போராடுகிறோம். இது எல்லா இடங்களிலும் இருந்து வரும் வெளிநாட்டினரை மகிழ்விக்க கூடிய தர்மசாலை அல்ல. இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இலங்கையில் உங்களது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்கு செல்லுங்கள் என கூறி இந்த மதுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டிருக்கிறது என்பதை சொல்லிக்கொள்ளலாம். அதே நேரம் குறிப்பாக ஒரு விடயத்தையும் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். கடந்த 2024ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்திலே ஒரு இலங்கை தமிழர்களுடைய குடியுரிமை மனைவை பரிசலித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அதனை விரைவாக தீர்மானிக்குமாறு நீதிமன்றம் உத்திரவெற்றிருந்த ஒரு வழக்கையும் நான் உங்களுக்கு மேற்கொள் காட்டி விடுகிறேன். ஆக இந்த வழக்கினுடைய தீர்ப்பில் நான் இறுதியாக கூறியது. இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இலங்கையில் உங்களது உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்கு செல்லுங்கள் என கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுருந்தார்கள். ஆக இந்தியா எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஈழத்ததமிழர்களுக்கான தீர்வுக்காகவோ அல்லது ஈழத்ததமிழர்களுடைய பிரச்சனையிலோ தலையிட போவதில்லை. அவர்களுக்காக பரிந்து பேச போவதில்லை என்ற ஒரு விடயத்தை மிக் தெளிவாக இந்திய நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. ஆக இந்த விவகாரத்திலே இன்று ஒரு நாள் இந்தியா எங்களுக்காக ஒரு தீர்வை பெற்று தரும். இந்தியாவால் தான் எங்களுக்கு விடிவு கிடைக்கும் என்று சொல்லி நம்பி இருக்கக்கூடிய ஆயிரம் ஆயிரம் ஈழ தமிழ் உள்ளங்களை இந்தியா இந்த தீர்ப்பின் மூலமாக மாற்றி இருக்கிறது. குறிப்பாக சொல்லக்கூடிய வேண்டுமாக இருந்தால் நான் ஏழவே குறிப்பிட்டிருக்கக்கூடிய ஒரு விடயம்தான். இந்த இந்தியாவினுடைய அமைதிப்படை இலங்கைக்கு வந்தது. அப்போது அந்த அமைதிப்படை இலங்கைக்கு வந்த நாளினை மிக கோலாகலமாக கொண்டாடினார்கள். அவர்களை தலையிலே தூக்கி வைத்து கொண்டாடினார்கள் ஈழத்தின் தமிழ் மக்கள். அதாவது எங்களை காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவம் வந்திருக்கிறது. ஸ்ரீலங்க அரசினுடைய தொடர் நடவடிக்கைகளில் இருந்து ஈழ தமிழ் மக்களாக எங்களை காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவம் வந்திருக்கிறது என்று சொல்லி அவர்கள் சந்தோஷப்பட்டார்கள் ஊர்வலங்க செய்தார்கள் மகிழ்ந்து கொண்டார்கள். ஆனால் அந்த நிலைமை முற்றாக மாறி ஈழ தமிழ் மக்கள் கண்டு அஞ்சி ஒழிக்கின்ற ஒரு ராணுவமாக இந்திய ராணுவம் இருந்தது. இந்திய ராணுவம் படுகொலைகளை செய்தது பாலியல் வல்லுறவுகளை மேற்கொண்டது. இன்னும் இன்னும் சொல்லிக்கொள்ள வேண்டுமாக இருந்தால் மிக காடைனமாக வைத்திய சாலைக்குள் புகுந்து நோயாளர்களை சுட்டு கொண்டது. இப்படியான நடவடிக்கைகளை செய்தது. அந்த நிலைமையிலும் கூட அதன் பின்பதாகவும் கூட இளதமிழ் மக்கள் இன்றுவரை இந்தியா எங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்யும் என்று சொல்லி நம்புகிறார்கள். அன்பான தமிழக உறவுகளே என்னுடைய இந்த பேச்சை கண்டு நீங்கள் கொதைத்து எழலாம். உங்களுடைய ஆக்ரோசமான கருத்துக்களை வெளிப்படுத்தலாம். ஆனால் நான் சில விடயங்களை உங்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் எப்போதும் இந்தியாவை விரோதிகளாக பார்த்தது இல்லை. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சண்டை வருகிற போது பெரும்பாலான இழத்து தமிழ் மக்களுடைய மனநிலை இப்போதும் ஆகியிருக்கிறது பாகிஸ்தானுடைய பக்கமாக என்று சொல்லி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் துடுப்பாட்டம் அதாவது கிரிக்கெட் போட்டி ஒன்று இடம்பெற்றால் கூட எங்களுடில் பலரினுடைய ஆதரவு என்பது இந்தியாவினுடைய பக்கமாக இருக்கும். ஏனென்று சொன்னால் இந்தியாவினுடைய எதிரிநாதரி பாகிஸ்தான். ஆகவே எங்களுக்கு பாகிஸ்தான் மீது விருப்பமில்லை. பாகிஸ்தானோடு உடன்பட நாங்கள் தயாரில்லை என்று மனநிலையில் தான் இளத்தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். எங்களுடைய ஒவ்வொரு வீதிகளிலும் ஒவ்வொரு ஊர்களிலும் வடக்குக்கிழக்கில் இருக்கக்கூடிய பெரும்பாலான இடங்களிலே மகாத்மா காந்திக்கு சிலை வைத்திருக்கிறார்கள். எங்கெல்லாம் இருக்கக்கூடிய ஒவ்வொரு இடங்களிலும் ஒரு வீதிக்கு காந்தி வீதி என்று பெயரிட்டிருப்பார்கள். அதேபோல காந்தி சதக்கம் என்று சொல்லி ஒரு சதக்கத்தை ஒதுக்கி இருப்பார்கள். அதை தாண்டி மகாத்மா காந்தி பூங்கா என்று சொல்லி பூங்காவை வைத்திருப்பார்கள். இப்படி நிறையவே இந்தியாவினுடைய விவகாரங்களிலும் இந்தியாவை சார்ந்தவர்களையும் அவர்கள் தூக்கி எறிந்ததாகவோ நிராகரித்ததாகவோ அல்லாமல் பெருமைப்படுத்தக்கூடிய வகையிலே செயல்பட்டிருக்கிறார்கள். எங்களுடைய பலரினுடைய ஒரு தலைமுறைக்கு முற்பட்ட பெயர்களை பார்க்கிற போது இந்திரா சந்திரபோஸ் இப்படியான பெயர்களை எங்களுடைய மக்கள் சூடி இருந்தார்கள். அந்த அளவுக்கு நாங்கள் இந்தியாவோடு மிக நெருக்கமாக எங்களுடைய உணர்வுகளை பேணி இருந்தோம். ஆனால் இந்தியா தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்கிறது? பெரும்பாலான உறவுகள் குறிப்பிடக்கூடிய விடயம் இந்தியா வீடு கட்டி கொடுத்திருக்கிறது. சந்தோஷமாக வைத்திருக்கிறது ஈழத்ததமிழர்களுக்கு நன்றி இல்லை என்பது. இந்தியா வீடு கட்டி கொடுத்திருக்கிறது என்பது ஈழதமிழர்களுடைய தேவை வீடு கட்டி தருவது அல்ல. எங்களால் உழைத்து எங்களுக்கான வீடுகளை கட்ட முடியாமல் இல்லை. ஆக இந்த விவகாரத்திலே வீடு கட்டி கொடுத்தது இந்தியா தமிழர்களுக்கு நன்றி இல்லை என்ற வார்த்தைகளை சொல்லுகின்றவர்கள் நீங்கள் உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். குறிப்பாக ஒரு விடயத்தை நான் இங்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஈழ தமிழர்கள் தங்களுடைய கடந்த கால யுத்தத்தின் காரணமாக உலகமங்கிலுமே பரவிச் சென்றார்கள். அப்படி அவர்கள் பதவி சென்ற நாடுகளிலே ஒவ்வொரு நாடுகளிலும் அவர்களுக்கான அங்கீகாரம் என்பது எந்த அளவுக்கு இருந்திருக்கிறது என்று சொன்னால் அந்த நாடுகளிலே நாடாளுமன்ற உறுப்பினர்களாக அந்த நாடுகளினுடைய அமைச்சர்களாக மாறும் அளவுக்கு இருந்திருக்கிறது. கனடாவிலே இப்போது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். பிரதானியாவுக்கு பார்க்கிற போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். உமாகுமரன் என்று சொல்லக்கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். ஆவஸ்திரேலியாவிலே ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கிறார். அவர்கள் எல்லாம் ஆவஸ்திரேலியாவிலேயும் பிரதானியாவிலும் கனடாவிலும் பிறந்து விளந்தவர்கள் அல்ல. இந்த நாட்டில இருந்து அகதியாக சென்றவர்கள் அந்த நாட்டிலே இருந்து அகதியாக சென்றவர்களுடைய பிள்ளைகள் அவர்களுக்கு அந்த நாடுகள் அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. பிரதானியாவை பொறுத்தவரை ஒரு ஐந்து ஆண்டுகள் அந்த நாட்டிலே அகதியாக இருந்தால் பெர்மனன்ட் ரெசிடன்ட் என்று சொல்லக்கூடிய பிஆர் வழங்குவார்கள். அதேபோல 10 ஆண்டுகளிலே அந்த நாட்டினுடைய குடியுரிமை வழங்குவார்கள். ஆனால் இந்த இந்தியாவிலே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 84ஆம் ஆண்டுக்கு பின்பதாக நிறைய பேர் எங்களுடைய தமிழ் மக்கள் இந்தியாவிலே தஞ்சம் கூறினார்கள். அவர்கள் 30 35 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் அகதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆக யாரோ யாரோ எல்லாம் அநிய நாடுகள் எல்லாம் இந்த தமிழர்களுக்குரிய உரிமையையும் அவர்களுக்கான அகதி அந்தஸ்தை நீக்கி அவர்களை தங்களுடைய குடிமக்களாக அரவணைத்துக் கொள்கிற போது நாங்கள் முழுவதுமாக நம்பி இருந்த இந்தியா எங்களை அகதிகளாக வைத்து பார்க்கிறது 30 ஆண்டுகள் கடந்தும் அகதி முகாம்களிலே அடிப்படை உரிமைகள் இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு நிலைமை இருக்கிறது. நிச்சயமாக ஒரு விடயத்தை நாங்கள் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்த இலங்கையில் இந்திய தமிழர்கள் இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு குடியுரிமை இருக்கிறது. ஒரு காலத்திலே அவர்களுடைய குடியுரிமை கேள்விக்கு உட்படுத்தப்பட்டபோது இதே ஈழத்ததமிழர் சமூகம் அவர்களுக்காக பின்னின்றது. தந்தை செல்வநாயகம் அவர்கள் எதிர்த்து நின்றார். அந்த தமிழர்களுக்காக பேசினார். அவர்களும் எங்களுடைய மக்கள் என்று பேசினார். ஆனால் இந்தியா அப்படியாக பேசுவதற்கான வாய்ப்பையே நிராகரித்திருக்கிறது. இப்படி இருக்கக்கூடிய சூழலில் அன்பான தமிழக உங்களிடம் விரயமாக வேண்டுகின்ற விடயம். உங்களைப் போலவே நாங்களும் இருக்கிறோம். உங்களை போல உங்களை மீது நாங்கள் பற்றுத்தி கொண்டிருக்கிறோம். உங்களை நாங்கள் நேசிக்கிறோம். உங்களின் மீது மிகுந்த அன்பு செலுத்துகிறோம். நீங்கள் எங்களுடைய உணர்வுகளில் கலந்து எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளாக நாங்கள் உங்களை பார்க்கிறோம். இந்தியா எங்களுடைய தந்தையர் தேசம் என்று சொல்லி நாங்கள் அடிக்கடி சொல்லி கொள்வோம். அப்பா என்று அழைத்து ஒரு பிள்ளையை தள்ளிவிட்டு நீ மாற்றான் பிள்ளை என்று சொல்வதுதான் நியாயமாக இருக்கிறதா இந்தியாவுக்கு என்ற ஒரு கேள்வி இருந்து கொண்டிருக்கிறது. ஈழ தமிழர்கள் இன்று ஒரு நாள் இந்தியா எங்களுடைய விவகாரத்தில் தலையிடும் எங்களுக்காக ஒரு தீர்வை பெற்று தரும் நாங்கள் சுதந்திரமாகவும் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ வழி அமைத்து தரும் என்று சொல்லி எதிர்பார்ப்போடுதான் இருந்தார்கள். ஆனால், இப்போது அந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த தீர்வு மிகப்பரிய அதிர்வலைகளையும், மிகப்பெரிய மாற்றங்களையும் உண்டு பண்ணும் என்பதை மறந்து விடாதீர்கள். ஆக அன்பான சொந்தங்களே எங்களுடைய தமிழ்நாட்டு சொந்தங்கள் எங்களுக்காக பேசுகிறார்கள். அவர்கள் எங்களுடைய வரலாறுகளை கடத்துகிறார்கள். எங்களுடைய கருத்துக்களை எங்களுடைய கதைகளை பேசுகிறார்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நாங்கள் அவர்களை குற்றம் சொல்லவில்லை. ஒரு ஒன்றிய நாடாக ஒருமித்த நாடாக இந்தியாவிடம் இதனை வலியுறுத்துங்கள் அன்பான உறவுகளே ஈழ தமிழர்கள் நம்முடைய சொந்தங்கள் நம்முடைய மக்கள் இந்த நிலைப்பாட்டை அவர்களுக்கு தெளிவுபடுத்துங்கள். அவர்கள் நிச்சயமாக இந்தியா எங்களுக்கு என்ன செய்தது என்ற கேள்வியை நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். குறிப்பாக இந்த இளத்தமிழர்களுடைய போராட்ட வரலாற்றை பொறுத்தவரை அன்றைய காலகட்டத்திலே இந்தியாவில் இருந்து பயிற்சி பெற்று வந்த போராளிகளினுடைய மொத்த எண்ணிக்கை 40,000ஆக இருந்தது. அந்த நேரத்தில் ஸ்ரீலங்காவினுடைய ராணுவ எண்ணிக்கை வெறும் 9,000ஆக இருந்தது. அந்த நேரத்தில் நினைத்திருந்தால் தமிழ் தரப்புகள் எந்த வகையான போராட்டங்களை எந்த வகையான நகர்வுகளை மேற்கொண்டிருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள். ஆனால் இந்தியா ஒற்றுமைக்கு கொஞ்சம் விளைவிக்க முடியாது என்ற அடிப்படையில் அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தது. அதேபோல பிரட் என்று சொல்லக்கூடிய அமைப்புக்கு வந்திருக்கக்கூடிய அந்த காலப்பகுதியிலே ஆயுதம் ஏakே47 என்று சொல்லக்கூடிய ஆயுதங்கள் வந்தது. அதனை பறைத்துக் கொண்டதுமே இந்தியா. இப்படியாக நிறைய சம்பவங்களை செய்தது. ஒற்றுமையாக இருந்து அந்த 40,000 போராளிகளை பிளவுபடுத்தி அவர்களுக்குள் ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட்டு ஒருவர் ஒருவர் தங்களுடைய இனத்தினுடைய கூடாரை காம்புகளாக அவர்களை மாற்றிய பெருமை இந்தியாவை சார்ந்ததாக இருக்கிறது. ஆகவேதான் இந்த விவகாரத்திலே நாங்கள் தொடர்ச்சியான அதிர்வனைகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. வேந்த புண்ணிலே வேல் பாற்றுவது போலவே இந்தியா நடந்து கொண்டே இருக்கிறது. இந்தியா ஈழ தமிழர்களுடைய சுய நிர்ணயத்தை மறக்கிறது. ஈழ தமிழர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கக்கூடிய இனப்படுகொலையை நிராகரிக்கிறது. உலக நாடுகள் எல்லாம் இலங்கையிலே இனப்படுகொலை இடம்பெற்றது என்று சொல்லுகிற போது இந்தியா அது தொடர்பாக வாயை துறக்கவில்லை. யாரோ யாரோ என்று சொல்லக்கூடியவர்கள் எல்லாம் எங்களுக்காக பரிந்து பேசுகிற போது எங்களுடைய உணர்வோடு தொடர்புபட்டு எங்களுடைய உறவுகளாக இருக்கக்கூடிய இந்தியா இந்த விவகாரத்தில் இப்படியான ஒரு நிலைப்பாட்டையில் இருப்பது எந்த வகையில் நியாயம் என்பதுதான் ஒவ்வொரு ஈழ தமிழனின் கேள்வியுமாக இருக்கிறது. குறிப்பாக சொல்லிக்கொள்ள வேண்டுமாக இருந்தால் இந்த விவகாரத்திலே தமிழ்நாட்டு தலைவர்கள் தங்களுடைய எதிர்ப்புகளையும் கருத்துக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் நாங்கள் எப்போதுமே இந்த தமிழ்நாட்டு தமிழர்களை நாங்கள் குற்றம் சாட்டியதில்லை. அவர்கள் எங்களுக்காகவே தங்களுடைய கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். ஈழத்தமிழர்களுடைய சுயநிர்மை உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் 21க்கும் அதிகமான தமிழ்நாட்டு தலைவர்கள் தங்களினுடைய உயிர்களை தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களை நாங்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டோம். அவர்கள் எங்களுடைய நினைவுகளில் கலந்தவர்கள். ஆனால் இந்தியா என்று ஒருமித்த நாடு என்று வருகிற போது இந்தியா எங்களுக்காக செய்கின்றது விடயங்களை பற்றிதான் நாங்கள் பேசுகின்றோம். எங்களினுடைய உரிமைகளை பறைக்கிறது எங்களுடைய இறப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. மீண்டும் மீண்டும் இப்படியான சம்பவங்களை இடம் பெறுகிறது. குறிப்பாக இளத்தமிழனே ஒரு சோகத்தின் வடுக்களிலே தாங்கி தங்களுடைய இழப்புகளை பேசி கொண்டிருக்கக்கூடிய காலப்பகுதியில் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜியா கென்றிக்கு சென்று அங்கே இருக்கக்கூடிய மகாநாயக தேர்களை சந்தித்து அவர்களுக்கு தன்னை அவர்களிடம் அரசு தன்னுடைய எதிர்காலத்திற்காக தன்னுடைய நாட்டினுடைய எதிர்காலத்திற்காக அவர்களிடம் ஆசி பெற்று வந்ததாக செய்தி வெளியிடுகிறார்கள். ஆக ஒரு பக்கமாக ஈழத்ததமிழ் மக்கள் தங்களுடைய உறவுகளை தொலைத்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக வீதிகளில் காத்திருக்கிறார்கள். கொல்லப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி ஒரு பக்கமாக இருக்கிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் தனக்கு ஏதும் சம்பந்தம் இல்லை என்பது போல இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியா இந்த விவகாரத்தில் தலையிடாமல் ஒரு பக்கமாக இருந்தால் கூட போதும். ஆனால் மீண்டும் மீண்டும் ஈழ தமிழர்களுடைய மனதில் வெஞ்சினத்தை பாற்றி வெந்த புண்ணிலே வேலை பாற்றுவது போன்ற நகர்வுகளை எப்படி ஏற்றுக்கொள்வது என்ற ஒரு கேள்வி இருந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இந்த விவகாரத்திலே திமுகாவினுடைய தலைவர் முக ஸ்டாலின் ஒரு அதிர்விலைகளை வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல இன்னும் சொல்லக்கொள்ள வேண்டுமாக இருந்தால் அன்புமணி ராமதாஸ் இதனை கண்டித்திருக்கிறார். இப்படிக்காக சில கருத்துக்கள் இப்போது வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பாஜாகா தலைவர் அண்ணாமலை இந்த தீர்ப்பை வரவேற்றி இருப்பதாக சோதி இருக்கிறார்கள். இந்தியாவினுடைய சட்டங்களை மதிக்க வேண்டும் என்று சொல்லியும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான சட்டங்களை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லியும் அவர் சொல்லியிருக்கிறார். இந்த விவகாரம் எந்த அளவுக்கு பாரதரமான நிலைமை ஏற்படுத்துகிறது என்று பாருங்கள். ஒரு தமிழனாக தமிழனுடைய உணர்வை புரிந்து கொள்ள முடியாத நிலையில் எங்களுடைய தமிழர்கள் இருந்து கொண்டிருக்கிறார்களா என்ற கேள்வியையும் நான் இந்த நேரத்தில் முன்வைத்து விடுகிறேன். அதே நேரம் நான் உங்களோடு இன்னும் சில விடயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கு துருவான செய்தி வெளியிடப்பட்டிருக்கக்கூடிய ஒரு செய்தி தளத்திலே சில தமிழ்நாட்டு உறவுகள் இப்படி கருத்துக்களை இட்டிருந்தார்கள். இதனை வாசிக்கின்ற போது எங்களுடைய மனம் எந்த அளவுக்கு வெந்திருக்கும் என்று சொல்லி நீங்கள் ஊகித்து கொள்ளுங்கள். அதாவது இந்த சில மேற்கொள் காட்டக்கூடிய கருத்துக்களை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அப்போ இதுக்கு அகதிகள் முகாம் கட்டி இலங்கை அகதிகளை தங்க வைத்திருக்கிறீர்கள். அடிச்சு துரத்த வேண்டியதுதானே. ஒருவேளை இங்கே அகதிகள் முகாம் இருப்பது இந்த நீதிபதிகளுக்கு தெரியாதா? அடுத்தது சம்மட்டி வழக்கி பதிவு செய்யும்போது இந்த மாதிரியான தீர்ப்பை உடனே வழங்கி விட வேண்டும். இன்னும் ஒரு கருத்து இந்தியாவில் இலங்கை குடிமகன் தங்க சட்டபூர்வ உரிமை இல்லை. சட்டபூர்வ விதி அதிகாரம் இல்லாத கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞன் வனுவாக தாக்கல் செய்வது சட்ட விரோதம். நீதிபதி கருத்தும் தீர்வும் சரியானது அப்படிங்கற கருத்து. அதேபோல திருட்டு ரயிலே வந்த வினைதான் இலங்கை அகதிகள் அனுபவிக்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன். திருட்டு ரயிலேறி வந்த வினைதான் இலங்கை அகதிகள் மீண்டும் அனுபவிக்கிறார்கள். இப்போதாவது நீதிபதிகள் உணர்ந்தார்களே இதை போல தட்டி வைத்து கொள்ள வேண்டும் அவர்களை அப்படியும் கருத்துக்கள். ஆனால் சில கருத்துக்கள் வந்திருக்கிறது. கேள்விகள் கேட்கும் உரிமை இந்த நீதிமன்றத்திற்கு இருக்கும் என்று சொன்னால் இனப்படுகலக்கு இந்திய ராணுவத்தை அனுப்பியது சரியா? ஒதுங்கி இருந்தால் அவர்கள் அங்கேயே இருந்திருப்பார்கள் இந்த விடயத்தை நாங்கள் ஒரு முக்கியமான விடயமாக பார்க்கலாம். கனம் நீதிபதி அவர்களே ஏற்கனவே நமது சத்திரத்தில் பல டோகங்கியாக்கள் இருக்கிறார்கள். அவர்களை என்ன செய்ய போகிறீர்கள் என்று சொல்லி ஒரு கேள்வி இருக்கிறது. சில கருத்துக்களைதான் நான் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதாவது எங்களுடைய விவகாரத்திலே நீங்கள் தலையிடாமல் இருந்திருந்தால் உங்களுடைய அமைதிப்படை என்ற போர்டையில் அட்டூடிய படை இலங்கைக்கு வந்து வடக்கு கிழக்கிலே எங்களுடைய மக்களை இருப்பை அவர்களின் மீது துப்பாக்கி சூடுகளை அவர்களுடைய இருப்பின் மீதான ஆயுத பிரயோகத்தை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் எங்களுடைய மக்கள் எங்களுடைய நாட்டில் ஏதோ ஒன்று செய்து கொண்டிருந்திருப்பார்கள். எங்களுடைய மக்களுக்கான போராட்டம் அவர்களுக்கானதாக இருந்திருக்கும். நீங்கள் ஆயுதம் கொடுத்து படையினரை அனுப்பி 2009லே முள்ளிவாய்க்காலிலே அந்த பேரவலத்தை நிகழ்த்தாமல் இருந்திருந்தால் எங்களுடைய மக்கள் உங்களிடம் வந்து அகதிகளாக இருந்திருக்க மாட்டார்கள். இந்த நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய சுய நிர்ணய ஆட்சியை நிரூபித்திருப்பார்கள். நான் ஒரே ஒரு விடயத்தை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்திவிட்டு வருகிறேன். அதாவது 2009க்கு முற்பட்ட காலப்பகுதியிலே வடக்கிலே குறிப்பாக இந்த புதுக்குடியி இருப்பு வந்திரி பிராந்தியத்திலே ஒரு யாசகம் பெறுகின்ற நபரை கூட நீங்கள் அடையாளம் காட்ட முடியாது. அந்த அளவுக்கு எங்களுடைய நிலமும் எங்களுடைய மக்களும் எங்களை காப்பாற்றிக் கொண்டவர்களும் எங்களுடைய காவலர்களாக இருந்தவர்களும் இருந்திருந்தார்கள். இந்த தேசம் தன்னிறைவான ஒரு தேசமாக எங்களுடைய தேசம் இருந்தது. நாங்கள் யாருக்கு இடமும் சோற்றுக்காக பிச்சை எடுக்கவில்லை. அரிசிதாரங்கள் பரப்பு தாருங்கள் என்று சொல்லி வீதிக்கு செல்லவில்லை. நாங்கள் நிறைவானவர்களாக இருந்தோம். ஆனால் அந்த அத்தனை விடயங்களையும் மாற்றியதில் இந்தியாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. நீங்கள் செய்த இந்த வினைகளின் பாரதூரங்களை உணர்ந்து என்றாலும் எங்களுடைய மக்களினுடைய இருப்பின் மீதான கேள்விக்கு உட்படுத்தலை தொடர்ந்து தவிர்த்து விடுங்கள். இது ஒரு அன்பான வினயமான வேண்டுகோள். மீண்டும் மீண்டும் சொல்லிக் கொடுக்கிறேன். எங்களுடைய தமிழ்நாட்டு உறவுகளின் மீது எங்களுக்கு மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. உங்களிடம் அன்பான வேண்டுகோள். எங்களுடைய ஈழத் தமிழ் மக்களினுடைய அந்த இறப்புக்காக உங்களுடைய பிராந்திய ஒன்றிய அரசுகளை வலியுறுத்துங்கள். அன்பான உறவுகளே நாளை மற்றுமொரு இன்றைய அதிர்வினோடாக உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் அதுவரை வணக்கம் https://tamilwin.com/
  18. தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் எதிரொலிகள் சர்வதேசத்திடம் இருந்து இலங்கை அரசுக்கு அழுத்தங்களாக வெளிப்படுத்தப்படுகிறன. இந்நிலையில் இறுதியுத்தத்தில் போர்குற்றவாளிகளாக கருதப்பட்ட பல இலங்கையின் இராணுவ வீரர்களுக்கு எதிராக தடைகளையும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழும் நாடான பிரித்தானியாவில், போர்க் குற்றவாளிகளை ஆதரித்தார் என்ற அடிப்படையில் இலங்கை பாடகி யோஹானிக்கு எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. யோஹானி தனது தந்தை மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா உட்பட போர்க்குற்றவாளிகளாக தடைவிதிக்கப்பட்டவர்களை பாராட்டியமையே இந்த எதிர்ப்புக்கு காரணமாகியது. மேலும் முன்னாள் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட தரப்புக்கு இவ்வாறு பல தடைகளை சர்வதேசம் விடுத்துள்ளமை தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்திக்கு கிடைத்துள்ள வெற்றியாகவும், தமது வலிகளை மறைக்கவும், மறுக்கவும் முடியாது என்பதை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவதற்கான பாதை என்றும் கூறப்படுகிறது. இதற்கமைய மே 18ஆம் திகதியான நேற்று இலங்கை மற்றும் உலகவாழ் தமிழர்கள் இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் உயிர்நீத்த தமது உறவுகளை நினைவுகூறிய நிலையில், நீங்காத உரிமை போராட்டத்திற்கு சர்வதேசம் வழங்கிய பதில்களை விரிவாக ஆராய்கிறது கீழுள்ள... https://tamilwin.com/
  19. இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது தனது அரசாங்கம் தடைகளை விதித்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரித்தானிய (UK) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில், இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கடந்த கால அட்டூழியங்களுக்கு ஒப்புதல் மற்றும் பொறுப்புக்கூறல் தேவை என்று ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மேலும், "ஆயுத மோதலில் கொல்லப்பட்ட மற்றும் பரவலான மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்களை நினைவுகூரும், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மற்றும் பிறருடன் நாங்கள் இணைகின்றோம். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையின் 16 ஆண்டுகளைக் குறிக்கும் வேளையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு மண்டலங்கள் என்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவித்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மீது செல் தாக்குதல் நடத்தியது. ஆயுத மோதல் முழுவதும், இலங்கை சட்டவிரோதக் கொலைகள், கட்டாயக் காணாமல் ஆக்கப்படல், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளைச் செய்தது மற்றும் மோதலின் இறுதி மாதங்களில் அதன் இராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. கடுமையான தடை இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நால்வர் மீது எமது அரசாங்கம் இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதித்தது. இந்த நடவடிக்கையில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், "நீதி மற்றும் அமைதியைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை இந்த புனிதமான நாள் நினைவூட்டுகிறது" என்று ஸ்டார்மர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை, கடந்த ஆண்டு பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், 2009 ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், “15ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினத்தை” நினைவுகூரும் ஒரு செய்தியை வெளியிட்டார். அதில், "முள்ளிவாய்க்கால் என்பது காணாமல் போனவர்களை நினைவுகூருவதோடு, அட்டூழியங்கள் செய்தவர்களை நீதியின் முன்நிறுத்த வேண்டும் என்பதையும் நினைவூட்டுவதாக இருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இலங்கை தமிழர்கள் மேலும், "நமது நாடு முழுவதும் உள்ள தமிழ் சமூகங்கள் இந்த புனிதமான நாளைப் பற்றிச் சிந்திக்கும்போது, தமிழ் மக்களுக்கு நீடித்த அமைதி, நல்லிணக்கம் மற்றும் நீண்டகால அரசியல் தீர்வை நோக்கிச் செயல்படுவதற்கான நமது உறுதிப்பாட்டை தொழிலாளர் கட்சி மீண்டும் உறுதிப்படுத்துகிறது" எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில், பிரித்தானிய அரசாங்கம் இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதிகளான சவேந்திர சில்வா, ஜகத் ஜெயசூரியா, கடற்படைத்தளபதி வசந்த கரனாகொட மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி கருணா என அழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என்போருக்கு எதிராக தடைகளை விதித்தது. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த நால்வருக்கும் தடை விதித்தமை தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. . https://tamilwin.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.