Everything posted by பெருமாள்
-
இலங்கையில் அமெரிக்க போர்க்கப்பல்!
உங்களுக்கு நாங்க சொல்லி தெரியனுமா நீங்களே வசிட்டர் முனிவர் போல் .
-
யாழ்.செல்கிறார் சீனத் தூதுவர்
இனி அவர்களின் நாடு இது அவர்கள் எங்கும் செல்வார்கள் அது ஒரு செய்தி அல்ல இந்தியர்கள் இந்த 14 வருடங்களில் தமிழருக்கு ஏதாவது ஒன்று செய்து இருக்கணும் அல்லது மலையக மக்களுக்கு தன்னும் செய்து இருக்கணும் செய்ய வில்லையே ?
-
தமிழ்த் தேசியத்தை விட்டு தமிழ் மக்கள் விலகவில்லை; விளக்குகிறார் கஜேந்திரகுமார்
ஐயோ இவங்கடை ஆக்கினை தொடரும்போல் உள்ளதே ?
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் - டக்ளஸ் தேவானந்தா!
வீனையினை தூக்கி ஒரே அடி உடைந்த வீணையில் இருந்து சத்தம் வருமா ? அநேகமா இந்த அறிக்கையெல்லாம் சேர்த்த செய்த அநியாங்கள் போன்றவற்றில் இருந்து தப்பிக்கவே .- சிறீதரன் - சிறிநேசனுக்கு எதிராக செயற்பட்ட சுமந்திரனிற்கு காத்திருந்த ஏமாற்றம்
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சிறிநேசன் ஆகியோருக்கு எதிராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் அதிருப்தி அடைந்துள்ளதாக கருத்து வெளியிடப்பட்டு வருகின்றது. இந்த தேர்தலில் சிறீதரன் மற்றும் சிறிநேசன் ஆகியோர் மக்கள் மத்தியில் பெரும்பான்மையை பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்று விட கூடாது என்னும் வகையில் சுமந்திரன் செயற்பட்டார். இது தொடர்பில் முன்னதாக சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சந்தர்ப்பம் ஒன்றிலும் சிறீதரனுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், சுமந்திரனின் எதிர்பார்ப்பிற்கு நேர்மாறாக சிறீதரன் வெற்றி பெற்றுள்ளமை சுமந்திரனுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும், சிறீதரன் - சிறிநேசன் இருவரும் வெற்றி பெற்று விடுவார்கள் என நன்கு தெரிந்ததாலேயே சுமந்திரன் அவர்களுக்கு எதிராக செயற்பட்டதாகவும் அவ்வெற்றி சுமந்திரனால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கும் எனவும் கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு. குணரட்னம் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/sumanthiran-dissapointed-on-sritharan-srineshan-1731932860- சிரிக்கவும் சிந்திக்கவும் .
பத்து வரி பேய் கதை. ஓர் இரவு நேரம்…ஒருவன் தன் மூன்று வயது மகன் தூங்கிக் கொண்டிருக்கும் போது…தன் மனைவியின் மேல் உள்ள கோபத்தில் அவளைக் கொன்று, யாருக்கும் தெரியாமல் பிணத்தை புதைத்து விட்டான். மறுநாள் காலை மகன் எழுந்து அம்மாவை பற்றி கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பது என்று ஆலோசனை செய்தான். ஆனால் மகன் அம்மாவை பற்றி கேட்கவில்லை. இரண்டாவது நாலாவது கேட்பான் என நினைத்தான். ஆனாலும் கேட்கவில்லை. வழக்கம்போல் மகன் சந்தோசமாக இருந்தான். மூன்றாவது நாள் மகனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தான், "உனக்கு நம் வீட்டில் ஏதாவது மாற்றம் தெரியுதா? _என்கிட்ட ஏதாவது கேட்கணும் போல இருந்தா கேளு". மகன் மெல்ல கேட்டான்:"மூணு நாளா அம்மா ஏன் உனக்கு பின்னாடியே நிக்கிறாங்கப்பா"?- நாடாளுமன்றத் தேர்தல் 2024: தமிழ்க்கட்சிகள் விளங்கிக்கொள்ள வேண்டிய எளிமையான பேருண்மைகள்
தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைவதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த நாடாளுமன்றத்தில் 13 ஆசனங்கள். இந்த முறை ஒன்பது ஆசனங்கள். மருத்துவர் அர்ஜுனாவின் அரசியல் நிலைப்பாடுகள் ஸ்திரமானவை அல்ல. எனினும் அவரையும் இணைத்துக் கொண்டால் பத்து ஆசனங்கள். தமிழ்த் தேசியத் தரப்புக்குக் கிடைக்காத ஆசனங்கள் தமிழ்த் தேசிய பரப்புக்கு வெளியே போயிருக்கின்றன. வடக்கில் மொத்தம் ஐந்து என்பிபி வேட்பாளர்களும் கிழக்கில் இரண்டு என்பிபி தமிழ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இருவரும் வடக்கிலிருந்தும், பிள்ளையான் கிழக்கில் இருந்தும் சென்றார்கள். மூன்று வேறு கட்சிகளைச் சேர்ந்த மூன்று தமிழ் பிரதிநிதிகள். இப்பொழுது ஒரே தென்னிலங்கைக் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர். என்பிபி இனப்பிரச்சினையைத் தீர்க்கும் என்று நம்பி தமிழ் மக்கள் அதற்கு வாக்களிக்கவில்லை. தமிழ்த் தேசிய அரசியல் பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டத் தவறியதன் விளைவே அது. தமிழ்ச் சமூகமானது ஒருவர் மற்றவரை நம்பாத; தன் பலத்தை தானே நம்பாத; ஒருவர் மற்றவரை சந்தேகத்தோடு பார்க்கின்ற; ஒருவருக்கு எதிராக மற்றவர் சூழ்ச்சிக் கோட்பாடுகளைப் புனைகின்ற; சமூகத்தில் மினுங்கிக் கொண்டு தெரியும் ஒருவரை சந்தேகத்தோடு வெறுப்போடு அணுகுகின்ற; வெறுப்பர்கள் அதிகம் நிறைந்த; கூட்டுணர்வு குறைந்த; தாய் நிலத்தை விட்டுப் புலம்பெயரும் வேட்கை மிகுந்த ஒரு சமூகமாக மாறி வருகின்றது. அவ்வாறு தூர்ந்து கொண்டு போகும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசிய அரசியலுக்கு உண்டு. தன் பலம் உணர்ந்து ஒருவர் மற்றவரை நம்பிக்கையோடு பார்க்கின்ற; உருகிப்பிணைந்த ஒரு திரட்சியாக தமிழ் மக்களைத் திரட்ட வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உண்டு. ஆனால் தேசியவாத அரசியல் என்றால் மக்களைத் திரளாக்குவதுதான் என்ற எளிமையான பேருண்மையை விளங்கிக் கொள்ளாத அல்லது அதை விளங்கிக் கொள்ளத் தேவையான பண்பாட்டு இதயத்தைக் கொண்டிராத; தேசிய கூட்டுணர்வைக் கொண்டிராத, பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளின் தோல்வியின் விளைவே, அதிகரித்த சுயேச்சைகளும் கட்சிகளும் ஆகும். இதனால் ஏற்பட்ட சலிப்பினாலும் விரக்தியினாலும் வெறுப்பினாலும் ஒரு பகுதி தமிழ் வாக்காளர்கள் என்பிபியை நோக்கிப் போனார்கள். நாடாளுமன்றத்தில் என்பிபி பெற்றிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது திருப்பகரமான மாற்றங்களைச் செய்யப் போதுமான ஒரு பெரும்பான்மை. பெரும்பான்மை அப்படிப் பார்த்தால் என்பிபி இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் புரட்சிகரமான முடிவை எடுக்குமா? அல்லது மகாவம்ச மனோநிலையின் கைதியாக மாறி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தானே தோற்கடிக்குமா? இலங்கைத் தீவியின் எந்த ஒரு தேர்தல் வெற்றியும் எப்பொழுது முழு வெற்றியாக மாறுகிறது என்றால், இனப்பிரச்சினையைத் தீர்க்கும் போதுதான். என்பிபி கருதுவதுபோல இனப்பிரச்சினை, ஒரு மனிதாபிமானப் பிரச்சினையல்ல. அது இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ளாமையின் விளைவுதான். இச்சிறிய தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள், தேசிய இனங்கள் உண்டு என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களை இறமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொண்டு, இலங்கைத் தீவின் அரசுக் கட்டமைப்பை பல்லினத் தன்மை கொண்ட ஒன்றாகக் கட்டமைக்க வேண்டும். அவ்வாறான அடிப்படை மாற்றம் ஒன்றைச் செய்வதற்கு என்பிபி தயாரா? இப்போதிருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதைச் செய்யப் போதுமானது. அதேசமயம் இம்முறை தேர்தல் முடிவுகளில் தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் நம்பிக்கையூட்டும் விடயங்கள் எவை என்று பார்த்தால்,கிழக்கில் பிரதேச வாதத்தை முன்வைக்கும் பிள்ளையான் தோற்று விட்டார். அது பெரிய வாக்கு வித்தியாசத்தில் கிடைத்த தோல்வியல்ல. சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த தோல்விதான். சங்குக்கு யாழ்ப்பாணத்தில் கிடைத்த தோல்வி போல. எனினும், தேர்தல் கணக்கில் அது தோல்வி. கிழக்கில் தமிழரசுக் கட்சிக்கு ஐந்து ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. இது கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்துக்கு முன் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தாயக ஒருமைப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியின் அடுத்த கட்ட வளர்ச்சி. ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு வேட்பாளருக்கு வடக்கில் மட்டும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. தமிழ் தேசியப் பிரதிநிதித்துவம் நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மைய பிரதேச வாதத்துக்கு தலைமை தாங்கும் அரசியல்வாதி தோல்வியுற்றிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, தாயக ஒருமைப்பாட்டை நிரூபித்தது. நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு தாயக ஒருமைப்பாட்டை நிரூபித்திருக்கிறது. வடக்கையும் கிழக்கையும் பிரித்த ஜேவிபிக்கு வடக்கு கிழக்கில் 7 ஆசனங்கள் கிடைத்திருக்கும் ஒரு பின்னணியில் கிழக்கில் தாயக ஒருமைப்பாட்டுக்கான பலமான மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது. மேலும், தமிழரசுக் கட்சி அதிகம் ஆசனங்களை பெற்ற ஒரு தனிக் கட்சியாக மேலெழுந்திருக்கிறது. கடந்த முறையைவிட இந்த முறை இரண்டு ஆசனங்கள் அதிகம். ஒரு கட்சியாக அந்த வெற்றியைக் கொண்டாடலாம். ஆனால் தேசத்தைத் திரட்டுவது என்பது கட்சியைப் பலப்படுத்துவது மட்டும் அல்ல. கடந்த நாடாளுமன்றத்தோடு ஒப்பிடுகையில் மொத்த தமிழ் தேசியப் பிரதிநிதித்துவத்தில் மூன்று ஆசனங்கள் இழக்கப்பட்டமை வீழ்ச்சி. என்பிபி யாழ்ப்பாணத்தில் அதிக ஆசனங்களை வென்றிருக்கிறது. கிழக்கிலும் அதற்கு ஆசனங்கள் கிடைத்துள்ளன. அவை தமிழ்த் தேசிய அரசியலின் தோல்விகள். இந்தத் தோல்விகளுக்கு ஊடாகப் பார்த்தால் தமிழரசுக் கட்சி பெற்ற வெற்றியைக் கொண்டாட முடியாது. ஆனால் சுமந்திரன் கட்சியின் வெற்றியைக் கொண்டாடுகிறார். கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாகத் தமிழரசியலைத் தீர்மானிக்கும் சக்திபோல செயற்பட்ட சுமந்திரனும் இந்தத் தோல்விக்குப் பொறுப்பு. அதற்குரிய தண்டனையை வாக்காளர்கள் அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசிய அரசியலில் பின்னடைவை ஏற்படுத்திவிட்டு கட்சி பெற்ற சிறு வெற்றியை எப்படிக் கொண்டாட முடியும்? ஏனைய கட்சிகள் இல்லாமல் தனிக் கட்சியாக வெல்ல முடியும் என்று மார்தட்டுவதே தேசியவாத அரசியலுக்கு, தேசத் திரட்சிக்கு எதிரானது. https://tamilwin.com/article/parliament-election-2024-political-essay-1731876493- ஜனாதிபதி அநுரவின் கையொப்பத்துடன் தமிழில் வெளியான அறிக்கையின் உண்மைத் தகவல்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் அறிக்கை போலியானது என தெரிவிக்கப்படுகிறது. போரின் போது உயிர் நீர்த்தவர்களை நினைவு கூறுவது தொடர்பில் இந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் போரின் போது உயிர்நீர்த்தவர்களை நினைவு கூறுவதில் தமிழ் சமூகம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போலி அறிக்கை எனினும் இந்த ஆண்டு முதல் அவ்வாறு எவ்வித தொந்தரவுகளும் இன்றி நினைவு கூர சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்க தரப்பு எவ்வித அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை. குறித்த அறிக்கை போலியானது என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் ஊடகத் தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்த போலி அறிக்கை தொடர்பில் தேசிய ஊடகங்கள் எவையும் தகவல் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/fake-report-regarding-the-prez-1731907660- சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி...
ஆஆ பரட்டை களை ஓனான் வேடம் இட்ட உங்கள் ஆள் இனி இல்லை அதனால் தற்கொலை செய்ய மாட்டிர்கள் பேராண்டி .- சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி...
எனக்கும் ஒரு சந்தேகம் முதலில் தமிழ் வின் பொய் சொல்கிறது என்று நினைக்கிறேன் .- சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி...
தமிழரசுக் கட்சியின்(TNA) தேசியப் பட்டியல் தொடர்பிலான சர்ச்சை நிலைகள் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் தற்போது வலுப்பெற்று வருகிறது. எனினும் தமது கட்சிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அந்த நியமனங்களில் ஒருவராக கருதப்படும் பா. சத்தியலிங்கத்தினது உள்வருகையானது முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் திட்டமிடலின் ஒரு அங்கம் என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. அந்த வகையில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மா. இளம்பிறையன் தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெறும் பல்வேறு முரணான கருத்துக்களை எடுத்துரைத்திருந்தார். மேலும், சுமந்திரனின் கருத்திற்கு அமையவே செயலாளரின் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், எதிர்வரும் காலங்களில் சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம் மீண்டும் மீண்டும் தமிழரசுக்கட்சியை நீதிமன்றுக்கு அழைத்து செல்லும் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்... https://tamilwin.com/article/controversy-over-the-national-list-of-tna-1731866604- "சிரிக்க மட்டும் ..."
ஓர் ஊரில், ஏழை ஒருவர் சிறிய அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கிடைத்த ஊதியத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஒருநாள் அவர் நடந்துபோய்க்கொண்டிருந்தபோது, ஒரு பழைய நாணயத்தைப் பார்த்து, அதை எடுத்து தூசி தட்டினார். அந்த நாணயத்தில் நடுவில் துளை இருந்தது. அந்தக் காலத்தில் துளை இருந்த நாணயம் கிடைத்தால், அது நல்லது, இராசி என்ற நம்பிக்கை உண்டு. அந்த மனிதருக்கும் அது கிடைத்ததில் அதிக ஆனந்தம். இனிமேல் எனது கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடும் என்று மகிழ்ந்து, அந்த நாணயத்தை பத்திரமாக தனது மேல் சட்டைப்பைக்குள் போட்டு வைத்தார். அதை ஒருநாளும் வெளியே எடுக்கமாட்டார். ஆனால் அதை அடிக்கடி தொட்டு மட்டும் பார்த்துக்கொள்வார். சிறிது காலம் சென்று, நல்வாய்ப்புகள், உண்மையாகவே அவரை தேடிவரத் தொடங்கின. செல்வம், பணம், புகழ், பதவி போன்ற எல்லாம் வந்து சேர்ந்தன. சமுதாயத்தில் அவர் பெரிய மனிதரானார், எல்லாரும் அவரைப் பாராட்டினார்கள். அவர் எதைத் தொட்டாலும் வெற்றிதான், எல்லாம் அந்த நாணயத்தின் மகிமை என்று மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும் அந்த மேல்சட்டையைப் போட்டுக்கொண்டுதான் வெளியில் கிளம்புவார். வெளியே புறப்படுவதற்குமுன், சட்டைப் பையில் அந்த நாணயம் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக்கொள்வார். இப்படி பல ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் அந்த துளையுள்ள நாணயத்தை கண்ணால் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்தது. அன்று காலையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தன் மனைவியிடம் தனது ஆசையைச் சொன்னார். ஆனால் மனைவியோ, இப்ப எதுக்கு அதைப் பார்க்கணும், வேண்டாமே என்று இழுத்தார். இல்லை இன்று பார்த்தே தீருவேன் என, அதை சட்டைப் பையிலிருந்து வெளியே எடுத்துப் பார்த்தார். அந்த நாணயத்தில் துளையே இல்லை. அப்போது அவரது மனைவி அவரிடம், உங்க சட்டை தூசியா இருக்கேன்னு, நான் அதை உதறினேன். அப்போ அந்த நாணயம் சன்னல் வழியாக தெருவில் விழுந்துவிட்டது. நானும் எவ்வளவோ நேரம் தேடினேன். கிடைக்கவில்லை. யாரோ அதற்குள் எடுத்துவிட்டார்கள்போலும். உங்களுக்குத் தெரிந்தால் வருத்தப்படுவீர்களே என்று நினைத்து, உங்களது சட்டைப் பைக்குள் ஒரு காசை போட்டுவைத்தேன் என்றார். சரி இது நடந்தது எப்போது என கணவர் கேட்க, நீங்க அந்தக் காசை எடுத்த மறுநாளே நடந்தது என்று மனைவி சொன்னார். ஆம். அந்த மனிதருக்கு நல்வாய்ப்பைக் கொடுத்தது அந்த நாணயமில்லை, அவரது நம்பிக்கை. அதாவது தன்னம்பிக்கை. அதுதான் அவரில் வேலை செய்துள்ளது. எனவே வாழ்வில் முன்னேற விரும்புகிறவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். “உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை (சுவாமி விவேகானந்தர்)- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரையை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ.. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். ‘ஈ மெயிலா? எனக்கு ஈமெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே’ என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார். இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர். ‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி... நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே.. எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...- திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சத்தியலிங்கத்தின் இறுதிக் கையொப்பம் : காத்திருக்கும் அதிர்ச்சி தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் ப. சத்தியலிங்கம் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளதாக சுமந்திரனால் வெளியிடப்பட்ட கருத்து பலர் தரப்பிலும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், "முன்னதாக கடந்த தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகாத யாரும் இந்த தேர்தலில் போட்டியிட கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்தார். அது மாத்திரமின்றி, இத்தேர்தலில் சிறீதரன் போட்டியிட கூடாது என்றும் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இவ்வாறிருக்கையில், தற்போது தேர்தலில் போட்டியிட்டு மக்கள் தெரிவில் தோல்வியடைந்துள்ள ப. சத்தியலிங்கத்தை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் மூலம் அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளமைக்கு சுமந்திரனே பதில் கூறியாக வேண்டும்” என கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/udaruppu-today-lankasri-1731848186- திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அட்டமத்து சனி லேசிலை போகாது சத்தியலிங்கம் தேசிய பட்டியலில் போகிறார் என்று அறிக்கை விட்டது சுத்து மாத்துதான் .- திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
தமிழ் இனத்தை அழித்த சந்திரிகா கூட லண்டன் தெருக்களில் சாவகாசமாக நடமாடி திரிந்தவ ஆனால் தமிழருக்கு அரசியல் செய்ய பின்கதவால் வந்த அட்டமத்து சனி சுமத்திரன் லண்டன் தெருக்களில் நடமாடி திரிய முடியாது .- திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இங்கு லண்டன் வந்தால் பழைய கணக்குகளுக்கு பலன்ஸ் பண்ண அடி விழும் என்று அந்த அட்டமத்து சனிக்கு தெரியும் எனவே இங்கு வராது .- சிவமோகன் வழங்கிய குற்றப்பத்திரிகையை வாங்க மறுத்த சுமந்திரன்..!
வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வழங்க முற்ப்பட்ட போது அதனை சுமந்திரன் வாங்க மறுத்துள்ளார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்றுவருகின்றது. பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் இதன்போது கட்சியின் செயலாளரின் பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் கட்சியின் கூட்டுப்பொறுப்பு உருக்குலைக்கப்பட்டதாகவும் அதனை விசாரணை செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனால் கட்சியின் பதில் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. குறித்த குற்றப்பத்திரிகையின் பிரதியை இன்றைய கூட்டத்திற்கு வருகைதந்த அனைவருக்கும் சிவமோகன் வழங்கியிருந்தார். இந்நிலையில் சுமந்திரனுக்கும் அதனை வழங்க முற்ப்பட்ட போது அவர் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டுச்சென்றார். குறித்த குற்றப்பத்திரிகையில்.. கட்சி மாநாட்டுக்கு முன்னர் ஆலோசனைக்கூட்டம் நடாத்தாமை, சுகயீனம் எனக்கூறி பொதுக்குழு கூட்டத்திற்குவராமை, யாப்பிற்கு முரணாக தேர்தல் நியமனக்குழுவை நியமித்தமை, கட்சி உருக்குலைய காரணமாக இருந்தமை, முல்லைத்தீவு மாவட்டக்குழுவின் ஆலோசனை இன்றி தேர்தல் நியமனங்களை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சிக்கு பெரும் பின்னடைவு இதேவேளை இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவமோகன்… தோற்றவர்கள், நாடாளுமன்றதேர்தல் கேட்ககூடாது என்று சொன்னவர் யார். அப்படி ஒரு முடிவு கட்சி எடுக்கவில்லை. கட்சி எடுக்காத முடிவை கட்சியின் பேச்சாளர் என்ற போர்வையில் உட்புகுத்த கூடாது. முஸ்லீம்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்ற அவரது கருத்து தமிழரசுக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்ப்படுத்தியது. அது கட்சி எடுத்த முடிவா இல்லையே. போரை நீங்கள் ஏற்கவில்லை. நீங்கள் கொழும்பில் இருந்தீர்கள் நாங்கள் இந்த மண்ணில் இருந்தோம். அதை ஏற்பதா இல்லையா என்று நாங்களே தீர்மானிக்க வேண்டும். அதை நீங்கள் சொல்லத்தேவையில்லை. தோற்றவர்கள் கேட்க கூடாது என்று கூறிவிட்டு தேசியபட்டியல் கொடுப்பதற்கு இனி இங்கு போராட்டம் நடக்கும். நான் எடுக்கமாட்டேன் என்று சொல்லி அவரும். நீங்கள் எடுங்கள் என்று சொல்லி சிலநேரம் கொடுக்கப்படலாம். அது பிழை. படுதோல்வியடைந்த சுமந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியை உருக்குலைத்த சத்தியலிங்கம் ஆகியோர் தாங்களாகவே பதவிகளில் இருந்து விலகிகொள்ள வேண்டும். தேசியபட்டியல் ஆசனத்தை வன்னிக்கு கொடுக்க வேண்டும் என்றால் அது இரண்டாவது விருப்பு வாக்கை எடுத்தவருகே கொடுக்க வேண்டும் என்றார். https://tamilwin.com/article/sumanthran-refused-buy-charge-sheet-sivamohan-1731834495- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர். ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில் விசாரிப்பார்கள். பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை. ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர். அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் . பின்னர் கேட்டார், தம்பி உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும். கடவுள் எங்கே? சொல் கடவுள் எங்கே இருக்கிறார் ? அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான். அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான். அவன் சொன்னான் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளைக் காணோமாம். அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான். 😏😏 ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள் 😔😔 இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது😶😶😶- திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இங்கு ஆறு பக்கம் தாண்டி இந்த திரி ஓடுது சுருக்கமா சொல்லணும் என்றால் சுத்து மாத்து சுமத்திரன் பதவிக்காக யாரின் காலில் விழுந்து நக்கியாவது பாராளுமன்றம் சென்று விடுவார் நாங்கள்தான் நேரத்தை விரயமாக்குகிறோம் . தேர்தலில் தோல்வியை சந்தித்தவர் தேசிய பட்டியல் மூலம் செல்ல கூடாது எனும் சட்டத்தை கொண்டு வரனும் கொண்டு வர விடுவார்களா ? நாமல்குஞ்சு தேசிய பட்டியல் மூலம் உள்ளே வருதாம் .- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இந்த லூசு பெயில் பண்ணவில்லை யாக்கும் ? பொறுங்க வரும் 27 திகதி அனுராவின் முகம் எப்படி என்று வடகிழக்கு தமிழர்கள் அறிவார்கள் .- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அவர் போகமாட்டேன் என்று அறிக்கை விட்டு நடிப்பார் கொஞ்ச நேரத்தின் பின் மத்தியகுழு உத்தரவுக்கு அமைய போவேன் என்பார் அவர் போகணும் அப்பத்தான் சுத்து மாத்து பற்றி அங்குள்ளவர்களுக்கு உண்மை முகம் புரியும் டக்கிலஸ் ஓட ஓட அடிவாங்கியதை போல் இவரும் வாங்கி கட்டுவார் காரணம் சிங்கள எம்பிமாருக்கே பாதுகாவலர் இல்லை இவருக்கு அனுரா கொடுப்பாரா ? அனுராவின் உண்மை முகம் வரும் கார்த்திகை மாதம் 27ல் தெரிந்து விடும் .- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் - டக்ளஸ் தேவானந்தா!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.