Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. ஓர் ஊரில், ஏழை ஒருவர் சிறிய அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கிடைத்த ஊதியத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஒருநாள் அவர் நடந்துபோய்க்கொண்டிருந்தபோது, ஒரு பழைய நாணயத்தைப் பார்த்து, அதை எடுத்து தூசி தட்டினார். அந்த நாணயத்தில் நடுவில் துளை இருந்தது. அந்தக் காலத்தில் துளை இருந்த நாணயம் கிடைத்தால், அது நல்லது, இராசி என்ற நம்பிக்கை உண்டு. அந்த மனிதருக்கும் அது கிடைத்ததில் அதிக ஆனந்தம். இனிமேல் எனது கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடும் என்று மகிழ்ந்து, அந்த நாணயத்தை பத்திரமாக தனது மேல் சட்டைப்பைக்குள் போட்டு வைத்தார். அதை ஒருநாளும் வெளியே எடுக்கமாட்டார். ஆனால் அதை அடிக்கடி தொட்டு மட்டும் பார்த்துக்கொள்வார். சிறிது காலம் சென்று, நல்வாய்ப்புகள், உண்மையாகவே அவரை தேடிவரத் தொடங்கின. செல்வம், பணம், புகழ், பதவி போன்ற எல்லாம் வந்து சேர்ந்தன. சமுதாயத்தில் அவர் பெரிய மனிதரானார், எல்லாரும் அவரைப் பாராட்டினார்கள். அவர் எதைத் தொட்டாலும் வெற்றிதான், எல்லாம் அந்த நாணயத்தின் மகிமை என்று மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும் அந்த மேல்சட்டையைப் போட்டுக்கொண்டுதான் வெளியில் கிளம்புவார். வெளியே புறப்படுவதற்குமுன், சட்டைப் பையில் அந்த நாணயம் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக்கொள்வார். இப்படி பல ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் அந்த துளையுள்ள நாணயத்தை கண்ணால் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்தது. அன்று காலையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தன் மனைவியிடம் தனது ஆசையைச் சொன்னார். ஆனால் மனைவியோ, இப்ப எதுக்கு அதைப் பார்க்கணும், வேண்டாமே என்று இழுத்தார். இல்லை இன்று பார்த்தே தீருவேன் என, அதை சட்டைப் பையிலிருந்து வெளியே எடுத்துப் பார்த்தார். அந்த நாணயத்தில் துளையே இல்லை. அப்போது அவரது மனைவி அவரிடம், உங்க சட்டை தூசியா இருக்கேன்னு, நான் அதை உதறினேன். அப்போ அந்த நாணயம் சன்னல் வழியாக தெருவில் விழுந்துவிட்டது. நானும் எவ்வளவோ நேரம் தேடினேன். கிடைக்கவில்லை. யாரோ அதற்குள் எடுத்துவிட்டார்கள்போலும். உங்களுக்குத் தெரிந்தால் வருத்தப்படுவீர்களே என்று நினைத்து, உங்களது சட்டைப் பைக்குள் ஒரு காசை போட்டுவைத்தேன் என்றார். சரி இது நடந்தது எப்போது என கணவர் கேட்க, நீங்க அந்தக் காசை எடுத்த மறுநாளே நடந்தது என்று மனைவி சொன்னார். ஆம். அந்த மனிதருக்கு நல்வாய்ப்பைக் கொடுத்தது அந்த நாணயமில்லை, அவரது நம்பிக்கை. அதாவது தன்னம்பிக்கை. அதுதான் அவரில் வேலை செய்துள்ளது. எனவே வாழ்வில் முன்னேற விரும்புகிறவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். “உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை (சுவாமி விவேகானந்தர்)
  2. ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரையை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ.. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். ‘ஈ மெயிலா? எனக்கு ஈமெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே’ என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார். இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர். ‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி... நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே.. எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...
  3. சத்தியலிங்கத்தின் இறுதிக் கையொப்பம் : காத்திருக்கும் அதிர்ச்சி தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் ப. சத்தியலிங்கம் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளதாக சுமந்திரனால் வெளியிடப்பட்ட கருத்து பலர் தரப்பிலும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், "முன்னதாக கடந்த தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகாத யாரும் இந்த தேர்தலில் போட்டியிட கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்தார். அது மாத்திரமின்றி, இத்தேர்தலில் சிறீதரன் போட்டியிட கூடாது என்றும் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இவ்வாறிருக்கையில், தற்போது தேர்தலில் போட்டியிட்டு மக்கள் தெரிவில் தோல்வியடைந்துள்ள ப. சத்தியலிங்கத்தை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் மூலம் அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளமைக்கு சுமந்திரனே பதில் கூறியாக வேண்டும்” என கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/udaruppu-today-lankasri-1731848186
  4. அட்டமத்து சனி லேசிலை போகாது சத்தியலிங்கம் தேசிய பட்டியலில் போகிறார் என்று அறிக்கை விட்டது சுத்து மாத்துதான் .
  5. தமிழ் இனத்தை அழித்த சந்திரிகா கூட லண்டன் தெருக்களில் சாவகாசமாக நடமாடி திரிந்தவ ஆனால் தமிழருக்கு அரசியல் செய்ய பின்கதவால் வந்த அட்டமத்து சனி சுமத்திரன் லண்டன் தெருக்களில் நடமாடி திரிய முடியாது .
  6. இங்கு லண்டன் வந்தால் பழைய கணக்குகளுக்கு பலன்ஸ் பண்ண அடி விழும் என்று அந்த அட்டமத்து சனிக்கு தெரியும் எனவே இங்கு வராது .
  7. வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வழங்க முற்ப்பட்ட போது அதனை சுமந்திரன் வாங்க மறுத்துள்ளார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்றுவருகின்றது. பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் இதன்போது கட்சியின் செயலாளரின் பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் கட்சியின் கூட்டுப்பொறுப்பு உருக்குலைக்கப்பட்டதாகவும் அதனை விசாரணை செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனால் கட்சியின் பதில் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. குறித்த குற்றப்பத்திரிகையின் பிரதியை இன்றைய கூட்டத்திற்கு வருகைதந்த அனைவருக்கும் சிவமோகன் வழங்கியிருந்தார். இந்நிலையில் சுமந்திரனுக்கும் அதனை வழங்க முற்ப்பட்ட போது அவர் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டுச்சென்றார். குறித்த குற்றப்பத்திரிகையில்.. கட்சி மாநாட்டுக்கு முன்னர் ஆலோசனைக்கூட்டம் நடாத்தாமை, சுகயீனம் எனக்கூறி பொதுக்குழு கூட்டத்திற்குவராமை, யாப்பிற்கு முரணாக தேர்தல் நியமனக்குழுவை நியமித்தமை, கட்சி உருக்குலைய காரணமாக இருந்தமை, முல்லைத்தீவு மாவட்டக்குழுவின் ஆலோசனை இன்றி தேர்தல் நியமனங்களை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சிக்கு பெரும் பின்னடைவு இதேவேளை இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவமோகன்… தோற்றவர்கள், நாடாளுமன்றதேர்தல் கேட்ககூடாது என்று சொன்னவர் யார். அப்படி ஒரு முடிவு கட்சி எடுக்கவில்லை. கட்சி எடுக்காத முடிவை கட்சியின் பேச்சாளர் என்ற போர்வையில் உட்புகுத்த கூடாது. முஸ்லீம்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்ற அவரது கருத்து தமிழரசுக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்ப்படுத்தியது. அது கட்சி எடுத்த முடிவா இல்லையே. போரை நீங்கள் ஏற்கவில்லை. நீங்கள் கொழும்பில் இருந்தீர்கள் நாங்கள் இந்த மண்ணில் இருந்தோம். அதை ஏற்பதா இல்லையா என்று நாங்களே தீர்மானிக்க வேண்டும். அதை நீங்கள் சொல்லத்தேவையில்லை. தோற்றவர்கள் கேட்க கூடாது என்று கூறிவிட்டு தேசியபட்டியல் கொடுப்பதற்கு இனி இங்கு போராட்டம் நடக்கும். நான் எடுக்கமாட்டேன் என்று சொல்லி அவரும். நீங்கள் எடுங்கள் என்று சொல்லி சிலநேரம் கொடுக்கப்படலாம். அது பிழை. படுதோல்வியடைந்த சுமந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியை உருக்குலைத்த சத்தியலிங்கம் ஆகியோர் தாங்களாகவே பதவிகளில் இருந்து விலகிகொள்ள வேண்டும். தேசியபட்டியல் ஆசனத்தை வன்னிக்கு கொடுக்க வேண்டும் என்றால் அது இரண்டாவது விருப்பு வாக்கை எடுத்தவருகே கொடுக்க வேண்டும் என்றார். https://tamilwin.com/article/sumanthran-refused-buy-charge-sheet-sivamohan-1731834495
  8. ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர். ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில் விசாரிப்பார்கள். பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை. ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர். அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் . பின்னர் கேட்டார், தம்பி உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும். கடவுள் எங்கே? சொல் கடவுள் எங்கே இருக்கிறார் ? அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான். அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான். அவன் சொன்னான் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளைக் காணோமாம். அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான். 😏😏 ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள் 😔😔 இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது😶😶😶
  9. இங்கு ஆறு பக்கம் தாண்டி இந்த திரி ஓடுது சுருக்கமா சொல்லணும் என்றால் சுத்து மாத்து சுமத்திரன் பதவிக்காக யாரின் காலில் விழுந்து நக்கியாவது பாராளுமன்றம் சென்று விடுவார் நாங்கள்தான் நேரத்தை விரயமாக்குகிறோம் . தேர்தலில் தோல்வியை சந்தித்தவர் தேசிய பட்டியல் மூலம் செல்ல கூடாது எனும் சட்டத்தை கொண்டு வரனும் கொண்டு வர விடுவார்களா ? நாமல்குஞ்சு தேசிய பட்டியல் மூலம் உள்ளே வருதாம் .
  10. இந்த லூசு பெயில் பண்ணவில்லை யாக்கும் ? பொறுங்க வரும் 27 திகதி அனுராவின் முகம் எப்படி என்று வடகிழக்கு தமிழர்கள் அறிவார்கள் .
  11. அவர் போகமாட்டேன் என்று அறிக்கை விட்டு நடிப்பார் கொஞ்ச நேரத்தின் பின் மத்தியகுழு உத்தரவுக்கு அமைய போவேன் என்பார் அவர் போகணும் அப்பத்தான் சுத்து மாத்து பற்றி அங்குள்ளவர்களுக்கு உண்மை முகம் புரியும் டக்கிலஸ் ஓட ஓட அடிவாங்கியதை போல் இவரும் வாங்கி கட்டுவார் காரணம் சிங்கள எம்பிமாருக்கே பாதுகாவலர் இல்லை இவருக்கு அனுரா கொடுப்பாரா ? அனுராவின் உண்மை முகம் வரும் கார்த்திகை மாதம் 27ல் தெரிந்து விடும் .
  12. ஊரில் ஒரு நாய் குலைத்தால் எல்லா நாய்களும் குலைக்கும் ! நாய்களுக்கு ஒரு பழக்கம் உண்டு! ஊரில் எங்கேயாவது ஒரு நாய் குலைத்தால்! பக்கத்து வீட்டு நாய் குலைக்க ஆரம்பிக்கும்! பின்னர் இன்னொரு நாய் குரைக்க ஆரம்பிக்கும்! ஒரு கட்டத்தில் ஊரிலிருக்கும் எல்லா நாய்களும் குறைக்க ஆரம்பிக்கும்! கடைசியாக குலைத்த நாய்க்கும் மற்ற நாய்களுக்கும் முதலில் குலைத்த நாய் ஏன் குலைத்தது என்று தெரியாது! அது போல் தான் முட்டாள் மனிதர்களும் ! ஒருவரை பற்றி ஒருவன் புறம் பேசினாலோ அல்லது அவதூறு கிளப்பினாலோ என்ன நடந்தது என்று தெரியாமலே அவர்களும் அவதூறு பரப்ப ஆரம்பித்து விடுகிறார்கள்! முட்டாள்கள் வேறு வழி இல்லை என்று சொல்லும் வழக்கு இது!
  13. niதிபதி; நீங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள்தானே!... உங்களுக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டுமா!? #மனைவி; ஆமா பெரிய "காதல்!" நான் ஏமாந்துட்டேன் ஐய்யா!!! இவர் வாயை திறந்தாலே எல்லாமே பொய்தான், பேசுகிறார்... ஒரு விசயத்தில் கூட என்னிடம் உண்மையாகவே இல்லை... தயவுசெய்து எங்களை பிரித்துவிடுங்கள்... #கணவன்; இவள் பயங்கரமான ஹிட்லர் பேத்தி ஐய்யா! எல்லாவற்றிற்கும் ஒரு கேள்வி கேட்கிறாள், என் மீது சந்தேகப்படுகிறாள், முடியல மை லார்ட்... தயவுசெய்து விவாகரத்து கொடுத்துவிடுங்க... #நீதிபதி; சரி உங்கள் விருப்பப்படி விவாகரத்து கொடுத்துவிட்டால் உங்கள் குழந்தையை யார் பார்த்துக்கொள்வது!? #கணவன்; இது என்ன கேள்வி...!!! என் குழந்தை என்னிடம்தான் வளரவேண்டும், அதுதான் நியாயமும் கூட... #மனைவி; அது எப்படி! நியாயம்...!!! பத்து மாசம் சுமந்து கஷ்டப்பட்டு பெத்து எடுத்தவள் நான்! உடனே இவருக்கு தூக்கி கொடுத்திடனும்மா...! முடியாது மை லார்ட்... #நீதிபதி; இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் Mr...? #கணவன்; ஐய்யா... நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்களாமா! #நீதிபதி; ம்ம்! கேளுங்க!? #கணவன்; ஐய்யா...!!! ATM மெஷின்ல கார்டு உள்ளே சொருகி பணம் வெளீயே எடுத்தப்பிறகு அந்த பணம் ATM மெஷினுக்கு சொந்தமா! இல்ல! பணம் எடுத்த அந்த ஆளுக்கு சொந்தமா!??? #மனைவி; அடப் பாவி... சண்டாளா..."!!! #நீதிபதி; ஒரே கேள்வியில் தலை கிருகிருவென சுற்றி டேபிளில் அடித்து எம்பி சுருண்டு கீழே விழுந்தார் ஜர்ஜ்... ((கோர்ட் இத்துடன் கலைகிறது. "டமால்"))
  14. இவ்வளவு கூட்டமும் தமிழருக்கு என்று வந்து இதுவரை தங்களின் வருமானத்தை மட்டுமே பார்த்தவர்கள் எல்லாமே கோடாலி காம்புகள் .
  15. சுத்து மாத்து எப்படியும் உள்ளே வந்து விடும் என்ன கேவலம் செய்தாவது உள்ளேதான் அனுரா அரசின் ஆதரவு இல்லாவிட்டால் கூட்டத்தில் கேள்வி கேட்டவரை மட்டும் போலிஸ் தூக்கி இருக்காது .
  16. நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ள எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பில்லை இல்லை என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் வழங்கிய செவ்வி ஒன்றின் மூலம் குறிப்பிட்டிருந்தார். தற்போது யாழ் - கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதியில் சுமந்திரன் தோல்வியடைந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் அவர் தேசியப்பட்டில் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு அதிகளவில் இல்லை என தெரிவிக்கின்றது. தேசியப்பட்டியல் எனினும், மக்கள் தன்னை நிராகரித்தால் இனிவரும் காலங்களில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லவே மாட்டேன் என்றும் சுமந்திரன் குறித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தற்டீபாது நாடளாவிய ரீதியில் நாடாளுமன்ற தேர்தலு்ககான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/ma-sumanthiran-regarding-the-national-list-1731646785
  17. படுக்க போன நம்மளை முழிக்க வைக்காதிங்க பாஸ் 😀
  18. ஐயோ இனி இந்தலூசின் அலுப்பளுகளை கேக்க வேண்டி உள்ளது வேறை என்ன அந்த லூசுக்கும் நம்ம பத்து பேரை வோட் போட சொன்னோமே நல்ல வேலை பார்த்து உள்ளார்கள்நன்றி அவர்களுக்கு .
  19. தெரிந்த விடயம் தானே . இனி சொரிந்த புண்ணுக்கு மருந்து போட சிலர் வருவார்கள் 😄
  20. கணவன் காலில் விழுந்தால் நம்பாதீங்க! நேற்று என் புருசன் இனிமேல் குடிக்க மாட்டேன் என்று என் காலில் விழுந்து சத்தியம் பண்ணினார்! ஓ! அப்ப உன் வீட்டுக்காரர் குடிப்பதை நிறுத்தி விட்டார் என்று சொல்லு! நீ வேற என் ரெண்டு கொலுசையும் கழட்டி விற்று குடித்து விட்டார்!
  21. 19 வயதில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார், அமெரிக்க ரகசிய சேவையில் ஊடுருவி நாட்டின் பல ரகசியங்களைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டார். இவரது தந்தை தனியாக வசித்து வந்த முதியவர். ஒரு நாள், அவர் தனது தோட்டத்தில் உருளைக்கிழங்கை நடவு செய்ய விரும்பினார், ஆனால் அவரது முதுமை காரணமாக அவ்வாறு செய்ய அவருக்கு வலிமை இல்லை. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்ட தனது மகனுக்கு ஒரு செய்தியை அனுப்பினார், அது கூறியது: சிறிது நேரம் கழித்து, தந்தைக்கு மகனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது: செய்தி வெளியான ஒரு மணி நேரத்திற்குள், இரகசிய சேவைகளும் இராணுவமும் அந்த வீட்டை சுற்றி வளைத்தன. அவர்கள் பூமி மீட்டரை மீட்டரைத் தோண்டி, எல்லாவற்றையும் அகற்றினர், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை, வீட்டை விட்டு வெளியேறினர். ஒரு வாரம் கழித்து, தந்தைக்கு ஒரு புதிய கடிதம் வந்தது.
  22. கொஞ்சம் சிரிங்க பாஸ் ஒருநாள் சித்திரகுப்தன் வருத்தமாக பிரம்மனிடம் சொன்னார், பெண்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்தால், இப்பொழுது இருக்கும் கணவனே , ஏழு ஜென்மத்துக்கும் கணவனாக அவர்களுக்கு கிடைப்பான் , ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது . என்ன சிக்கல் ..?? பிரம்மா வினவினார் . பெண்கள் அதே கணவன்தான் வேண்டும் என்கிறார்கள் , ஆனால் ஆண்கள் வேறு பெண்தான் வேண்டும் என்கிறார்கள், அதுதான் சிக்கல் . இருவரையும் திருப்தி செய்ய, என்ன செய்ய வேண்டும் ..?? இடையில் குறுக்கிட்ட நாரதர் சொன்னார் , பூமியில் எல்லாம் தெரிந்த ஞானி ஒருவர் இருக்கிறார் , அவர் பெயர் சாணக்கியர், அவரைப் பாருங்கள் , இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார் . சித்திரகுப்தர் , சாணக்கியரை சென்று பார்த்தார் . சாணக்கியரும் எவ்வளவோ யோசனை செய்து பார்த்தார் , ஒன்றும் சரிவரவில்லை . கடைசியாக , அந்த கணவன்களிடமே கேட்டு விடுவோம் என்று முடிவு செய்து , அவர்களிடம் பேசினார்கள் . கணவன்மார்களில் ஒருவர் ,ஒரு யோசனை சொன்னார் . அதைக்கேட்டு சாணக்கியர் அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிவிட்டு இதை விட சிறந்த தீர்வு வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறிவிட்டு இதை அந்த பெண்களிடமே கேட்டு விடுங்கள் என்று சொன்னார் . இந்த தீர்வை , சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் கூறினார் . அதற்கு அந்த பெண்கள் சித்திரகுப்தனை கையெடுத்து கும்பிட்டுவிட்டு எங்களுக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் . அப்படி என்னதான் தீர்வு .." அது " ..?? சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் , பிரம்மா நீங்கள் கேட்ட அதே கணவன்தான் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் , ஆனால் ஒரு நிபந்தனை , ஏழு ஜென்மத்திற்கும் அதே மாமியார்தான் இருப்பார் , அதற்கு உங்களுக்கு சம்மதமா என்றார் .... ........ " வாழ்க வளமுடன் " ..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.