Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) கனடா நோக்கிப் பயணமாகியுள்ளார். கனேடிய(Canada) வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் இந்தோ- பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதியமைச்சர் வெல்டன் எப்பை சந்தித்து உரையாடவுள்ளார். தமிழ் மக்களின் நெருக்கடிகள் இந்தச் சந்திப்பு கனடாவின் - ஒட்டோவாவில்(Ottawa) உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது, பொறுப்புக்கூறல், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள், தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பாக பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய பிரதியமைச்சருடனான சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் பங்கேற்கவுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியிருக்கவுள்ள சிறீதரன் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/sri-lankan-mp-sumanthiran-visits-ottawa-1734244102?itm_source=parsely-detail
  2. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 75 ஆயிரம் கிலோ நாட்டரிசி, மனிதப் பாவனைக்குப் பொருத்தமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக கடந்த 4ஆம் திகதி முதல் அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. பாவனைக்கு உதவாத அரிசி அதன்படி தற்போது இந்தியாவில்(India) இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 4ஆம் திகதி முதல் சனிக்கிழமை வரை தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 2,300 மெற்றிக் தொன் அரிசி சுங்கத்திற்கு கிடைத்துள்ளது. அவற்றில் 90% வீதமானவை சுங்கத்தில் இருந்து தற்போதைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த பெருமளவான அரிசி பாவனைக்கு பொருத்தமற்றது என நேற்று (14) உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் அடையாளம் கண்டுள்ளனர். சுமார் 75,000 கிலோ அரிசி இவ்வாறு பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. நாட்டுக்கு கொண்டு வரப்படும் அரிசி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர், சுகாதார அமைச்சின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களால் சோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனை அதன்படி, பரிசோதனைகளின் போது, இறக்குமதி செய்யப்பட்ட 3 கொள்கலன்களில் இருந்த 75,000 கிலோ அரிசி பாவனைக்கு பொருத்தமற்றது என்பது தெரியவந்துள்ளது. அவற்றில் இரண்டு கொள்கலன்களில் உள்ள அரிசியில் வண்டுகள் இருந்ததாகவும், மற்றைய கொள்கலனில் இருந்த அரிசியில் உற்பத்தி திகதி அடங்கிய பழைய லேபிள்களின் மேல் புதிய லேபிள் ஒட்டப்பட்டிருந்ததால், அந்த கொள்கலன்களை சுங்கத்தில் இருந்து விடுவிக்க சுகாதாரத்துறை அனுமதி வழங்கவில்லை. தற்போதைக்கு மனித பாவனைக்கு உதவாத குறித்த அரிசித் தொகையை மீண்டும் திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/imported-rice-in-sri-lanka-found-infested-1734238699
  3. முதலில் இந்த படத்தில் இருக்கும் கண்ணாடி போட்ட குரங்கை யும் சீனாவுக்கு அனுப்பும் குரங்குகள் உடன் அனுப்பி வைக்கவும் தமிழரசு கட்சி உருப்படும் இந்த குரங்கின் வேலைதான் இவ்வழவு கலவரமும் .
  4. அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ?
  5. திண்ணையில் ஒரு நாளைக்கு பத்து கருக்கு மட்டைக்கு மேல் வைக்க முடியாது என்ற கட்டுப்பாடுடன் திண்ணையை துறப்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை 😄
  6. முதலில் செய்து விட்டு சொல்லுங்கடா வாயளையும் வெடித்தது காணும் .
  7. இங்கு சோலார் பனல் பூட்டிய ஆட்களிடம் நன்மை ஆ இல்லை பிழையா ? ரெண்டுக்கும் நடுவிலை மண்டைய ஆட்டுவார்கள் . இந்த யுடுப் கோஸ்டிகள் தான் இவற்றை ஊதி பெருபிப்பது ஒரு விடயம் சரியோ பிழையோ என்பதுக்கு முதல் முந்திரி கொட்ட போல் நிப்பினம் .
  8. குரங்குகளை பிடித்து சைனாவுக்கு அனுப்புற கையோட என்கடைவெத்து வேட்டு தமிழ் அரசியல்வாதி கள் எனும் குரங்கு கூட்டத்தையும் முக்கியமாய் சுமத்திரன் என்ற குரங்கையும் அனுப்பினால் புண்ணியமாய் போகும் .😄
  9. வாழ்க்கையை நன்கு துவங்கிட வேண்டிய கதைகள்: 1. நோக்கியா ஆண்ட்ராய்டை நிராகரித்தது 2. yahoo Google ஐ நிராகரித்தது 3. கோடாக் டிஜிட்டல் கேமராக்களை நிராகரித்தது வாழ்க்கை பாடங்கள்: 1. வாய்ப்புகளை தவற விடாதீர்கள் 2. மாற்றத்தைத் தழுவுங்கள் 3. கால ஓட்டத்திற்கு ஏற்ப நீங்கள் மாற மறுத்தால், நீங்கள் காலாவதியாகிவிடுவீர்கள் மேலும் இரண்டு கதைகள்: 1. Facebook whatsapp மற்றும் instagram ஐ கைப்பற்றுகிறது 2. தென்கிழக்கு ஆசியாவில் உபெர் நிறுவனத்தை கிராப் கைப்பற்றுகிறது மேலும் பாடங்கள்: 1. உங்கள் போட்டியாளர்கள் உங்கள் கூட்டாளிகளாக மாறும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக மாறுங்கள் 2. முன்னேறி சென்று போட்டியை அகற்றுங்கள். 3. புதுமைகளைத் தொடருங்கள் மேலும் இரண்டு கதைகள்: 1. கர்னல் சாண்டர்ஸ் 65 இல் KFC ஐ நிறுவினார் 2. கேஎஃப்சியில் வேலை கிடைக்காத ஜாக் மா, அலிபாபாவை நிறுவி 55 வயதில் ஓய்வு பெற்றார். மேலும் பாடங்கள்: 1. வயது என்பது வெறும் எண் 2. தொடர்ந்து முயற்சி செய்பவர்களே வெற்றி பெறுவார்கள் இறுதியாக: ஃபெராரி நிறுவனர் என்சோ ஃபெராரியால் அவமதிக்கப்பட்ட டிராக்டர் உற்பத்தியாளரின் பழிவாங்கலின் விளைவாக லம்போர்கினி நிறுவப்பட்டது. பாடங்கள்: யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், எப்போதும்! ✔️ கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள் ✔️ உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள் ✔️ தோல்விக்கு பயப்பட வேண்டாம்
  10. 👨🦗ஆண் கொசு : டார்லிங் உனக்காக ஒரு சிங்கத்தையே வேட்டையாடி கொண்டு வருவேன் .... 👩🦗பெண் கொசு : ஓகே ஓகே போய் தூங்கு ... 👨🦗ஆண் கொசு : கண்ணே !!! உனக்காக ஒரு யானையவே அடிச்சு கொண்டு வந்து கொடுப்பேன் .... 👩🦗பெண் கொசு : சரி .. சரி ... மொதல்ல தூங்க போ டார்லிங்... 👨🦗ஆண் கொசு : உன்ன நா மெர்சிடஸ் கார்ல உட்கார வெச்சு பாரீஸ் ரோட்ல சுத்தி காண்பிப்பேன் .... 👩🦗பெண் கொசு : என் மேல உனக்கு எவ்வளவு லவ் னு புரியுது டியர்.... காலையில பேசலாம் போய் தூங்கு ... 👨🦗ஆண் கொசு : நீ என்ன நம்ப மாட்டியா ..??? நாளைக்கு உனக்கு 100 கிராம்ல தங்க செயின், வைரத்துல நகை போடுவேன் பாரு ... 👩🦗பெண் கொசு : நா நம்புறே டியர் ... நீ இப்போ தூங்க போ .... 👨🦗ஆண் கொசு : உலகமே திரும்பி பாக்கற மாதிரி கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.1,00,00,000 கொடுப்பேன் பாரு .... இப்போது 👨🦗ஆண் கொசுவை ஓங்கி அறைந்த 👩🦗பெண் கொசு ... "ஸ்ரீதரனின் கள்ள லைசன்ஸ் பாரில் சரக்கை அடிச்சவனை கடிச்சுட்டு இங்க வந்து ஒளறாதேனு எத்தன தடவ சொல்லி இருக்கேன்...!!! ???" 😡😡😡 🙀🙀🙀😹😹 படித்ததில் வயிறு வலிக்க சிரித்த பதிவு..!!
  11. கன பேருக்கு நேற்று இரவு கை கால்கள் நடுக்கம் வந்து இருக்கும் .
  12. அனுரா உண்மையான சிங்கள பவுத்தனாக இருந்தால் 1978 ல் இந்திய ஏவு படைகளால் உயிருடன் கட்டி v வீதியில் போடப்பட்ட jvp உறுப்பினர்களின் மேல் இந்திய படைகளின் டாங்கி படையணியின் வெறியாட்டத்தை நினைவு கூற சொல்லுங்க .
  13. அறிவாளிகள் என்று சொல்லி திரியும் முட்டாள்களுக்கு சமர்ப்பணம் நம்ம ஆளு லண்டனில் படித்து கொண்டிருந்த சமயம் அது. அவருக்கு பீட்டர் என்று ஒரு பேராசிரியர் இருந்தார். அவருக்கு நம்ம ஆளை கண்டால் பிடிக்கவே பிடிக்காது. ஒரு சமயம் மதியம் அவர் உணவு அருந்தி கொண்டிருந்த மேசையில் நம்ம ஆள் அமர்ந்தார். நம்ம ஆளை வெருப்பேற்ற " பறவையும் ! பன்றியும் ஒன்றாக உட்கார்ந்து உணவு அருந்த முடியாது ! " என்று எல்லோரும் கேட்கும் மாறு சத்தமாக சொல்ல! அதற்கு அவர் ! நம்ம ஆளை பார்த்து! " சரி அப்படி என்றால் நான் பறந்து போகிறேன்! " என்று சொல்லி விட்டு வேறு மேசைக்கு சென்று விட்டார். பேராசிரியருக்கு அவமானம் ஆகி விட்டது. எப்படியாவது நம்ம ஆளை பழி வாங்க நினைத்த அவர் அப்பொழுது வந்த தேர்வில் கடினமான கேள்விகளை கேட்டு இருந்தார். ஆனால் நம்ம ஆள் நன்றாக படித்து இருந்ததால் சரியாக விடை அளித்து இருந்தார். திருத்திய விடை தாளை கொடுக்கும் முன் நம்ம ஆளை நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு உன்னால் பதில் சொல்ல முடியுமா என்று கேட்க! நம்ம ஆள் சரி என்று சொல்ல! பேராசிரியர் " நீ நடந்து போகும் போது வழியில் உனக்கு பை கிடைக்கிறது அதில் நிறைய பணமும், அறிவும் இருக்கு! அதில் நீ எதை எடுப்பாய் என்று கேட்க! நம்ம ஆள் யோசிக்காமல் நான் பணத்தை தான் எடுப்பேன் என்று சொல்ல! பேராசிரியர் சிரித்து கொண்டே என்ன ! நானாக இருந்தால் அறிவை தான் தேர்ந்து எடுப்பேன் என்று சிரித்து கொண்டே சொல்ல ! அதற்கு நம்ம ஆள் அது சரி சார் பொதுவாக ஒருவர் தன்னிடம் இல்லாத ஒன்றை தானே தேர்ந்து எடுப்பார் என்று சொல்ல! வகுப்பில் எல்லோரும் சிரிக்க பேராசிரியருக்கு அவமானமாக போய் விட்டது. கோபத்தில் விடை தாளில் Idiot ( முட்டாள் ) என்று எழுதி விடை தாளை நம்ம ஆள் கிட்ட நீட்ட. நம்ம ஆள் வாங்கி பார்த்து விட்டு ஐயா உங்க கையொப்பம் போட்டு இருக்கீங்க ஆனா என் கிரேட் ( Grade) எவ்வளவு என்று போட மறந்து விட்டீர்கள்! என்று சொல்ல பேராசிரியர் திகைத்து போய் நின்றார்!
  14. ஏண்டி இவன் தான் உன் கள்ளக் காதலனா! ஏண்டி என்ன தைரியம் இருந்தா உன் கள்ளக் காதலனை வீட்டுக்கே கூட்டி வந்து இருப்ப! பாக்க பிச்சைக்காரன் மாதிரி இருக்கான். என்னடி உன் டேஸ்ட் இவ்வளவு மட்டமா இருக்கு! மூ...வி மூ.வி! குடிச்சா உனக்கு கண்ணு மண்ணு தெரியாது ! கண்ணாடி முன்னாடி நின்று உளராமல் பேசாம தூங்கு சரியா?
  15. கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை.. அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது, அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு. இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு. அப்போது கருமேகங்ள் சூழ்ந்தன. மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன. மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான். மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது. என்ன நடக்கும்.? மான் பிழைக்குமா? மகவை ஈயுமா? மகவும் பிழைக்குமா? இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா? வேடனின் அம்புக்கு இரையாகுமா? புலியின் பசிக்கு புசியாகுமா? மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்.. மான் என்ன செய்யும்? மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை. அப்போது நடந்த நிகழ்வுகள்....... மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான். எய்தப்பட்ட அம்பு புலியை தாக்கி அது இறக்கிறது. தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது.. அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது. நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.. வரும்..அச்சூழ்லில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்.. சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்.. நாம் இம்மானிடம் இருந்து மானிடம் கற்றுக்கொள்வோம்.. அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும். இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.. எதில் என் கவனம்? எதில் என் நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்? வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்.. அவர் எப்போதும் எதிலும் நம்மை வருத்த செய்ய மாட்டார். இறைவன் தூங்குவதும் இல்லை.. துயரப்படுத்துபவரும் இல்லை.. உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்!
  16. என்ன சார் யோசனை சொல்றேன் என்று ஆளை காலி பண்ண ஐடியா கொடுக்குறீங்க! ஒரு பஸ்ஸில் ஜன்னலோர சீட்டில் இரண்டு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். பஸ் போய்க் கொண்டிருந்தது. அதில் ஒரு பெண் "யோவ் கண்டக்டர் இங்கே வாய்யா... இந்த ஜன்னலக் கொஞ்சம் திறந்து வைத்து விட்டுப் போ" என்றாள். கண்டக்டர் வந்து ஜன்னலை திறந்து வைத்து விட்டுப் போனார். அந்தப் பெண்ணுக்கு அடுத்து உட்கார்ந்திருந்த பெண் "யோவ் கண்டக்டர் இங்கே வாய்யா... வந்து இந்த ஜன்னலை சாத்தி விட்டுப் போய்யா" என்றாள். கண்டக்டர் வந்து "என்னம்மா அந்தம்மா ஜன்னலை திறந்து வைக்கச் சொல்லுது நீங்க ஜன்னலை சாத்தி வைக்கச் சொல்றீங்க கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணி பிரயாணம் பண்ணக் கூடாதா?" என்று கேட்டார். அதற்கு முதல் பெண் சொன்னாள் "இங்கே பாரு நீ ஜன்னல அடைச்சன்னா நான் மூச்சு முட்டி செத்துப் போவேன்" என்றாள். இரண்டாவது பெண் "இங்கே பாரு நீ ஜன்னல திறந்து வச்சின்னா நான் குளிர்ல விறைச்சி செத்துப் போவேன்"னாள். கண்டக்டர் என்ன செய்றதுன்னு திகைச்சி நின்னுகிட்டிருந்தப்ப, கடைசி சீட்டில் பீடி குடிச்சிகிட்டிருந்த ஒரு மனுசன் கண்டக்டரை கூப்பிட்டு "அங்கே என்ன பிரச்னை" என்று கேட்டான். கண்டக்டர் சொன்னார் "அதை ஏன் கேட்கிற ஒரு அம்மா ஜன்னல அடைச்சா மூச்சு முட்டி செத்துப் போவேன்ங்குது. இன்னொரு அம்மா ஜன்னல திறந்து வச்சா குளிர்ல விறைச்சி செத்து போவேங்குது. ஒருத்தருக்கு ஒருத்தர் அட்ஜஸ்ட் பண்ணிப் போகக் கூடாதா கொஞ்ச நேரத்தில் இறங்கப் போறாங்க அதுக்குள்ள இப்படி சண்டை போட்டுகிட்டா என்ன செய்றது". அந்த மனுசன் "நான் ஒரு யோசனை சொல்லவா?" என்று கேட்டான். கண்டக்டர் "சரி சொல்லுய்யா நீ என்ன சொல்லப் போறேன்னு பார்ப்போம்" என்றார். அவன் சொன்னான் "கொஞ்ச நேரம் ஜன்னலை அடைச்சி வை, அந்த அம்மா செத்துப் போகும், அப்புறம் கொஞ்ச நேரம் ஜன்னலை திறந்து வை இந்தம்மா செத்துப் போகும் நாம நிம்மதியா போகலாம்" என்றான். கண்டக்டர் சொன்னார் "நல்ல ஆளுய்யா நீ அப்படி அவங்க ரெண்டு பேரும் செத்துப் போனா அந்தப் பொம்பளைகளோட புருசங்க வந்து கேட்டா நான் என்னய்யா பதில் சொல்றது"ன்னு கேட்டார். அதற்கு அவன் சொன்னான் "அதைப் பத்தி நீ கவலைப் படாதே அந்த ரெண்டு பொம்பளைகளோட புருசன் நான் தான்.. அதனால தான் அந்த யோசனையை சொன்னேன்" என்றான். கண்டக்டர்: 😳😳😳
  17. கோசனுக்கும் உங்களுக்கும் நான் யார் என்பது இதுவரை தெரியாமல் இருக்காது 😄
  18. யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி என்று எழுத முதுகெலும்பு இல்லை தினக்குரலுக்கு .
  19. இலவசம் எனும் திருட்டு ! திருடன் ஒருவன் இரவில் சுவர் ஏறி குதித்தான்! பெரிய நாய் ஒன்று நின்று கொண்டிருந்தது. நாய் அவனை பார்த்தது அவன் நாயை பார்த்தான்! நாய் குலைக்க வில்லை! தைரியமாக இரண்டு அடி எடுத்து வைத்தான்! குலைக்க வில்லை! வீட்டில் கதவருகே வந்தான் ! கள்ள சாவி கொண்டு கதவை திறக்க முற்பட்டான்! நாய் அப்பொழுதும் குலைக்க வில்லை! திடீர் என்று அவனுக்கு ஒரு சந்தேகம்! கதவை திறக்கும் போது நாய் குலைத்தால் என்ன செய்ய ! தயாராக வைத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டில் இருந்து இரண்டு பிஸ்கட்டை எடுத்து நாய்க்கு போட்டான்! நாய் உடனே குலைக்க ஆரம்பித்து விட்டது! திருடன் நாயை பார்த்து கேட்டான்! ஏன் நாயே! நான் சுவர் ஏறி குதித்த போது குலைக்க வில்லை! கதவு வரை நடந்த போது குலைக்க வில்லை! வீட்டின் கதவை திறக்கும் போது குலைக்க வில்லை மாறாக உனக்கு பிஸ்கெட் போடும்போது குலைக்க ஆரம்பித்து விட்டயே என்று கேட்க அதற்கு நாய் இவ்வளவு நேரம் நீ உன் வேலையை செய்கிறாய் என்று நினைத்து கொண்டு இருந்தேன்! ஆனால் தேவை இல்லாமல் எனக்கு பிஸ்கெட் இலவசமாக நீ போடும்போது தான் நீ தவுறு செய்கிறாய் என்று அறிந்து கொண்டேன். இன்று எப்பொழுதெல்லாம் நமக்கு இலவசம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் அரசு இயந்திரம் தவறு செய்கிறது என்று பொருள்! புரிந்து கொள்ளுங்கள்!
  20. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE) மீதான ஐந்தாண்டுத் தடை நீட்டிப்பை டெல்லி உயர் நீதிமன்ற நடுவர் மன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த மே 14ஆம் திகதி ஐந்தாண்டுத் தடை நீட்டிக்கப்பட்ட பின்னர், சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ – UAPA) கீழ் அந்த நடுவர் மன்றத்தை மத்திய உள்துறை அமைச்சு அமைத்தது. இலங்கையில் தமிழா்களுக்குத் தனி ஈழம் வழங்கப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டு இருந்தது. வெளியிடப்பட்ட அறிக்கை அந்தத் தடை முடிவுக்கு வரவிருந்த வேளையில் மேலும் ஐந்தாண்டுக்குத் தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அந்த இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்க போதிய காரணம் உள்ளதா என்பதை முடிவு செய்ய, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா தலைமையில் நடுவர் மன்றம் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை உள்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. “கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வீழ்த்தப்பட்டது. தனி ஈழம் “இருப்பினும் தனி ஈழம் கோருவதையோ அதற்கான பிரசாரம் மற்றும் நிதி திரட்டும் நடவடிக்கைகள் மூலம் ஈழம் அமைவதற்கான பணிகளில் இரகசியமாக ஈடுபடுவதையோ அந்த அமைப்பு கைவிடவில்லை என நடுவர் மன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்து விட்டது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அரசு அளித்த தகவலின் அடிப்படையில், யுஏபிஏ சட்டத்தின் கீழ், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்க போதிய ஆதாரம் இருப்பதாக நடுவர் மன்றம் கூறியுள்ளது. எனவே, அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்வதாகவும் அது அறிவித்து உள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடா்ந்து அச்சுறுத்தலாக உள்ளது என்றும் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளில் அந்த அமைப்பு தொடா்ந்து ஈடுபடுகிறது என்றும் நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது. https://tamilwin.com/article/delhi-high-court-confirmed-the-ban-on-ltte-1733757937?itm_source=parsely-detail
  21. கனடாவில் ஆயுதங்களுடன் தமிழ் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவை சேர்ந்த 37 வயதான தனராஜ் தங்கராஜா, மற்றும் 37 வயதான கிஷானி பாலச்சந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். தனராஜ் தங்கராஜா மீது 8 குற்றச்சாட்டுகளும், கிஷானி பாலச்சந்திரன் மீது 3 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. சோதனை நடவடிக்கை கடந்த 3ஆம் திகதி மார்க்கம் வீதி மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை சோதனை செய்த போது இவர்கள் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://tamilwin.com/article/tamil-couple-arrested-in-canada-1733758309
  22. முதலில் வடக்கு பக்கம் இருக்கும் கடற்படையை தெற்குக்கு மாற்றி விடனும் என்கிறார்கள் அங்கிருப்பவர்கள் கேரள கஞ்சா கொண்டு வரும் ரோலருக்கு பாதுகாப்பு கொடுப்பதே இந்த சிங்கள நேவிதானமே ? முதலில் தமிழர் பகுதியை கரையான் அரிப்பது போல் அரிக்க சிங்கள அரசியல்வாதிகள் கொடுப்புக்குள் சிரித்து கொண்டு கண்டும் காணாமல் இருந்தார்கள் கடைசியில் சிங்கள பகுதி பள்ளிக்கூட வாசல் மட்டும் விற்பனை நடக்க தொடங்க புதிதாய் வந்த வேட தாரிகள் குய்யோ முய்யோ என்று அலறிக்கொண்டு இருக்கினம் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.