Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக சில அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்களை ஆதாரம்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு வெளிநாடு செல்ல எத்தனிக்கும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றிற்கு மீண்டும் தெரிவாகும் சாத்தியப்பாடுகளில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையே இவ்வாறு வெளிநாடு செல்ல முயற்சிப்பதற்கான பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேற எத்தனிப்பதாக சபநாயாகர் இதேவேளை, மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளிறேத் திட்டமிட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என நாடாளுமன்றில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டமொன்றில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி நாடாளுமன்ற பதவி விலகியிருந்தார் மேலும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரட்ன பதவி விலகி கனடா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/parliment-mps-trying-to-move-aboroad-1709954375
  2. මනුස්සකම ගැන සිංහල බල්ලෝ දන්නවද? 2009 අපි කටු කටවල් වලට මැදිවෙලා මැරෙනකොට එයාලගේ ප්‍රධාන උන්වහන් ක්‍රිපාට් එක සහෝදර සිංහලයන්ට දීලා පිපිරුම් ගහලා සැමරුවා.දැන් කොහොමද?
  3. தென் மாநிலங்களின் வருவாயில் தான் வடமாநிலங்கள் தொங்கி கொண்டு இருக்கினம் இதையே தயாநிதி மாறன் இந்தி படித்தால் தமிழ் நாட்டில் கக்குஸ் தான் கழுவ வேண்டி வரும் என்று சொல்ல எழுந்த எதிர்ப்பு இருக்கே அப்பா சொல்லி மாளாது ............................
  4. அட இன்னும் இந்த திரி அனையவில்லையாக்கும் அப்ப பிளான் பண்ணியே நிறைய எலிகள் உள் வந்துள்ளன . குறை ஒன்றும் வேண்டாம் கள உறவு @ரசோதரன் திரிக்குள் போனபின் ஒரு பீலிங்
  5. இலங்கை பெரும் ஆபத்தில் இருப்பதாக அவுஸ்திரேலிய பொருளாதார நிபுணர்கள் தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை கடனை திருப்பிச்செலுத்தவில்லையென்றால் என்ன நடக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது என்றும் நிபுணர்கள் எச்சரித்ததாகவும் கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்து இலங்கை திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கையின் தலைவிதி மேலும், அவுஸ்திரேலியாவிலுள்ள கன்பரா பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர்கள் இலங்கையின் தலைவிதி குறித்து ஆச்சரியம் தெரிவித்ததாகவும், ஒரு நாடு எப்படி இத்தகைய நிலையை அடைந்திருக்க முடியும் என்றும் தம்மிடம் வினவியதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து அவுஸ்திரேலிய கல்வியலாளர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும், அவர்களின் சகல கருத்துக்களையும் தன்னால் திரட்ட முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை மாத்திரமன்றி பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளைப் பற்றியும் அவர்களுக்கு அதிக புரிதல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையர்களுக்கு மிகவும் கடினமான பாதை இருப்பதாகவும், இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/danger-zone-in-srilanka-warrning-for-australiya-1709690905
  6. ஒரு இனத்தையே அழித்து விட்டு கூடவே இலங்கையில் இருந்து கிடைக்கும் இரட்டை ஜனாதிபதி பென்சனில் நடைபயிறசியின் பின் நிம்மதியாக லண்டன் தெருவில் காலார இருக்கிறா என்றால் ???????????????
  7. இதென்னமோ கதைக்க இவர் முருக்கம் மரமேரியா குரங்கு போல் (மட்டுக்கள் வேண்டாம் என்றால் வெட்டி விடுங்க )சம்பந்தமில்லா யாருக்கும் நாவலரை வம்புக்கு இழுக்கிறார் .
  8. கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான பிட்காயினின் மதிப்பு, அதன் உச்சத்தை எட்டியிருக்கிறது. அதாவது, இந்திய மதிப்பில் ஒரு பிட்காயின் மதிப்பு 50 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. பிட்காயின் மதிப்பு அதிகரித்தன் பின்னணியில் அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த கிரேஸ்கேல், பிளாக்ராக் மற்றும் ஃபிடிலிட்டி போன்ற முதலீட்டு நிறுவனங்கள், நிலையற்றது என்று வர்ணிக்கப்படும் இந்த டிஜிட்டல் கரன்சியை வாங்க பில்லியன்கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளன. இந்த முதலீட்டின் காரணமாக, இந்த சக்திவாய்ந்த நிறுவனங்கள் 'பிட்காயின் திமிங்கலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. பிட்காயின் என்றால் என்ன? பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றாகும். இந்த பணத்தை உலகின் பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் போது பயன்படுத்த முடியும். நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம். மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெறலாம். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொடுத்தும் வாங்கலாம். தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை கொண்டு இணையதளங்களில் பொருட்கள் வாங்கலாம், விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம். பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் 'பிளாக்செயின்' என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது. பிட்காயின் அமைப்பின்படி மொத்தமாக 2.1 கோடி பிட்காயின்கள் மட்டுமே புழக்கத்தில் இருக்கமுடியும். அதில் இதுவரை 1.9 கோடி பிட்காயின்கள் மைனிங் செய்யப்பட்டு, அவை பரிமாற்றத்தில் உள்ளன. ‘பிட்காயின் மைனிங்’ என்பது உருவாக்கப்பட்ட பிட்காயினை கணினி உதவியுடன் புழக்கத்திற்கு கொண்டு வரப்படும் நடைமுறை ஆகும். உலகம் முழுவதும் இந்த பணியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ‘பிட்காயின் திமிங்கலங்கள்’ யார்? உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், இந்த டிஜிட்டல் பணத்தில் முதலீடு செய்துள்ளனர். மொத்தமுள்ள 2.1 கோடி பிட்காயின்களில், சில நிறுவனங்கள் அல்லது தனிநபர்களிடம் இந்த பிட்காயின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன. அவ்வாறு அதிக பிட்காயின்களை வைத்து அதன்மூலம் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் நபர்களை ‘பிட்காயின் திமிங்கலங்கள்’ என்று முதலீட்டாளர்கள் வர்ணிக்கின்றனர். உலகம் முழுவதும், அதிக பிட்காயினை வைத்துள்ளவர்கள் விவரத்தை பிப்ரவரி 29 வரை எடுத்தபோது சில தகவல்கள் தெரியவந்தன. கீழேயுள்ள புள்ளிவிவரங்கள், நேரடி ஆராய்ச்சி மற்றும் பொது தளத்தில் கிடைக்கும் தகவல்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மதிப்பீடுகள் ஆகும். 60 லட்சம் பிட்காயின்கள் காணாமல் போனது எப்படி? மொத்தமுள்ள பிட்காயின்களில் சில லட்சம் பிட்காயின் காணாமல் போய் விட்டதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். அச்சிடப்பட்ட பணத்தை தொலைப்பது போல பிட்காயின்களை தொலைக்க முடியுமா? பிட்காயின்கள் என்பது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் இயங்கும் பணம் என்பதால் இதை பாதுகாக்க பல அடுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிட்காயின் கரன்சி பரிமாற்றம் நடக்கிறது. இந்நிலையில் ஒரு பயனர், தனது பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும்(பாஸ்வேர்டு) மறந்தால் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை மீட்பது கடினம். பிட்காயின் பரிமாற்றத்தில், வாடிக்கையாளர் சேவை ஏதும் இல்லாத நிலையில், கணக்குகளை மறந்ததால் லட்சகணக்கான பிட்காயின்கள் உரிமை கோர ஆள இல்லாமல் நிரந்தரமாக காணாமல் போகின்றன. முப்பது முதல் அறுபது லட்சம் பிட்காயின்கள் இப்படி காணாமல் போய் இருக்கலாம் என்கிறனர் வல்லுநர்கள். வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தூக்கி எறிந்த தனது ஹார்ட் டிஸ்கில் சேமிக்கப்பட்ட வாலட் கணக்கால் 8000 பிட்காயின்களை இழந்தார். குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிட்காயின் பரிமாற்றமும் நாளடைவில் காணாமல் போகின்றன என்று கிரிப்டோ-புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எலிப்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த புலனாய்வாளர்களின் மதிப்பீட்டின்படி, 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகளான செயல்பாடில்லாத நிலையில் 31.5 லட்சம் பிட்காயின்கள் இருக்கின்றன. இவ்வாறு 5 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாடில்லாமல் இருக்கும் இந்த பிட்காயின்களால், நிரந்தரமாக காணாமல் போகும் பிட்காயின்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று செயின்லைஸிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த புலனாய்வாளார்கள் கூறுகின்றனர். காணாமல் போன பிட்காயின் குறித்து இப்படி பலரும் ஒரு மதிப்பீட்டை வழங்குகின்றனர். ஆனால் இதில் 11 லட்சம் பிட்காயின், அடையாளம் தெரியாத ஒரு நபருக்கு சொந்தமாக இருக்கலாம் என்றும், அவர் தான் பிட்காயினை உருவாக்கி இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. அப்படியெனில் 24 லட்சம், அதாவது மொத்த பிட்காயினில் 11% பங்கு சந்தையில் இருந்து நிரந்தரமாக காணாமல் போய்விட்டதாக மதிப்பிடப்படுகிறது. கிரிப்டோ பரிமாற்றம் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள், கிரிப்டோ-பயனர்களுக்கான வங்கிகளைப் போல செயல்படுகின்றன. இங்கு பிட்காயின் மற்றும் பிற டிஜிட்டல் கரன்சிக்கு பதிலாக டாலர், பவுண்டு, ரூபாய் போன்ற உங்களுக்கு விருப்பமான பணமாக மாற்றிக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்களின் சார்பாக சுமார் 23 லட்சம் பிட்காயின்கள் இப்படியான பரிமாற்ற மையங்களில் உள்ளதாக கே33 ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். உலகின் மிகப்பெரிய கிரிப்டோ பரிமாற்ற நிறுவனங்கள் பினான்ஸ் - 5,50,000 பிட்காயின்கள் பிட்பினெக்ஸ் - 4,03,000 பிட்காயின்கள் காயின்பேஸ் - 3,86,000 பிட்காயின்கள் ராபின்ஹூட் - 1,46,000 பிட்காயின்கள் OKX - 1,26,000 பிட்காயின்கள் அடையாளம் தெரியாத திமிங்கலங்கள் ‘பிட்காயின் திமிங்கலம்’ என்பது தங்கள் டிஜிட்டல் வாலட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பிட்காயின்களை வைத்திருக்கும் நபர்களை குறிக்க பயன்படுத்தும் சொல்லாடல். பிரபல வலைத்தளமான Bitinfocharts, உலகின் டாப் 100 பிட்காயின் பணக்காரர்களின் பட்டியலை பொதுவெளியில் இருக்கும் பரிமாற்ற தகவலின் அடிப்படையில் பட்டியலிட்டுள்ளது. இந்த 100 பேர் பட்டியலில் 80 பேரின் அடையாளங்கள் யாருக்கும் தெரியவில்லை. அடையாளம் தெரியாத இந்த நபர்களின் வாலட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பிட்காயின்கள் உள்ளன.இப்படி அடையாளம் தெரியாத திமிலங்களின் பிட்காயின் கையிருப்பை கணக்கிட்டால், மொத்த பிட்காயின்களில் அவை 8% வரை உள்ளன. இதுபோன்ற ஏதாவது ஒரு வாலட் உங்களுக்கு சொந்தமாக இருந்தால், இன்றைய சந்தை மதிப்பின்படி நீங்கள் பல லட்சம் கோடிகளுக்கு சொந்தக்காரராக இருப்பீர்கள். புழக்கத்திற்கு வராத பிட்காயின்கள் பிட்காயின்கள் செயல்படும் விதத்தின் அடிப்படையில் அதன் எண்ணிக்கை அதிகபட்சமாக 2.1 கோடியாக மட்டுமே இருக்கமுடியும். உலகெங்கிலும் உள்ள தன்னார்வ கணினிகளின் வலையமைப்பை பயன்படுத்தி ஒவ்வொரு நாணயமும் உருவாக்கப்பட வேண்டும். இதையே கிரிப்டோ வழக்காடு மொழியில், மைனிங் செயல்பாடு என்கின்றனர். சுரங்கத்தில் இருந்து கனிமங்களை வெட்டியெடுப்பது போல, இந்த வலையமைப்பில் இருந்து ஒவ்வொரு பிட்காயினாக எடுக்க வேண்டும். இந்த பணியில் பல்வேறு நிறுவனங்கள், தங்களின் கணினிகளை பயன்படுத்தி வேலை செய்து வருகின்றன. அப்படி மைனிங் செய்யப்படும் பிட்காயின்கள் சந்தையில் புழக்கத்திற்கு வரும். இதுவரை மொத்தமுள்ள பிட்காயின்களின் 93% கரன்சி சந்தையில் புழக்கத்தில் உள்ளன. மொத்தமாக உருவாக்கப்பட்ட 2.1 கோடி பிட்காயின்களில், வெறும் 7% பிட்காயின் மட்டுமே இன்னும் மைனிங் செய்யப்படாமல் உள்ளன. உலகின் கடைசி பிட்காயின் 2140ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சத்தோசி நகமுட்டோ - பிட்காயினை உருவாக்கியவர் பிட்காயின்கள் 2009ஆம் ஆண்டு முதன்முதலாக உருவாக்கப்பட்டன. இதை உருவாக்கிய அடையாளம் தெரியாத நபரிடம் 11 லட்சம் பிட்காயின்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. அந்த நபரிடமுள்ள இந்த கிரிப்டோ கரன்சி எதுவும் இத்தனை ஆண்டுகளில் எந்த பரிமாற்றத்திலும் பங்குகொள்ளவில்லை. பிட்காயின்களை உருவாக்கிய அந்த அடையாளம் தெரியாத நபரின் பெயர் சத்தோசி நகமுட்டோ என்றும், அவர் ஜப்பானைச் சேர்ந்தவர் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இந்த பெயருடைய நபர் ஆணா, பெண்ணா அல்லது உயிருடன் இருக்கிறாரா, இறந்து விட்டாரா என்று எந்த தகவலும் தெரியாது. அவரிடம் உள்ள 11 லட்சம் பிட்காயின்களின் இன்றைய மதிப்பின் அடிப்படையில், அடையாளம் தெரியாத இந்த நபர் உலகின் 22வது பணக்காரராக இருப்பார் என்று மதிப்பிடப்படுகிறது. பிட்காயின் மதிப்பு திடீர் உச்சம் ஏன்? கடந்த ஜனவரி மாதத்தில், அமெரிக்க நிதித்துறை அதிகாரிகள் ஒழுங்குபடுத்தப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் மூலமாக பிட்காயின்களுடன் இணைக்கப்பட்ட, ஸ்பாட் பிட்காயின் பத்திரங்களை விற்க அனுமதி வழங்கினர். இதன் மூலமாக இந்த முதலீட்டு நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான பிட்காயின்கள் வாங்கின. அதைக் கொண்டு வெளிச்சந்தையில் பிட்காயின் பத்திரங்களை விற்பனை செய்தன. இப்படியான பத்திரங்களை வாங்கிய எந்தவொரு நபரும், நிறுவனமும் பிட்காயின்களை சொந்தமாக வைத்திருக்கவில்லை. பிப்ரவரி 29ஆம் தேதி இந்த முதலீட்டு பத்திரங்களை மூலமாக 9 லட்சத்து 33 ஆயிரம் நாணயங்கள் பத்திரங்களாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கே33 ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலமாக இந்த வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்த பிட்காயின் மதிப்பில் 4.5% கரன்சியை வைத்துள்ளனர். காவல்துறையிடம் எவ்வளவு உள்ளது? உலகெங்கிலும் உள்ள காவல் முகமைகள், தங்களது கைது நடவடிக்கையின் போது சட்டவிரோத செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்ட பிட்காயின்களை பறிமுதல் செய்கின்றன. இப்படி பறிமுதல் செய்யப்படும் பிட்காயின் ஏலத்தில் விடப்படுகின்றன. சந்தை வல்லுநர்களின் தரவுகளின்படி, அமெரிக்க காவல்துறை தொடர்புடைய பறிமுதல் நடவடிக்கையின் மூலமாக 2 லட்சத்து 30 ஆயிரம் பிட்காயின்கள் பிடிபட்டுள்ளன. இதேபோல 2018ல் நடந்த பறிமுதல் நடவடிக்கையின் மூலமாக இங்கிலாந்தில் 60 ஆயிரம் பிட்காயினும், அண்மையில் ஜெர்மனி காவல்துறை 50 ஆயிரம் பிட்காயினையும் பறிமுதல் செய்தனர். பிட்காயினை வாங்க ஆர்வம் காட்டும் நபர் மென்பொருள் நிறுவன உரிமையாளரான மைக்கேல் சேலர், தனது நிறுவனம் மூலமாக பிட்காயின்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 2020ஆம் ஆண்டு முதல், மைக்ரோஸ்ட்ரடேஜி என்ற தனது நிறுவனம் மூலமாக பல்லாயிரக்கணக்கான பிட்காயின்களை இவர் வாங்கி வருகிறார். ஒவ்வொரு முறை பிட்காயினை வாங்கும் போதும் அதை தனது சமூக ஊடகத்தில் மைக்கேல் பதிவிட்டு கொண்டாடுவார். மைக்கேல் தனது நிறுவனங்களின் வழியாக இதுவரை 1,93,000 பிட்காயின்களை வாங்கியுள்ளார். இதன் மூலமாக உலகிலேயே அதிக பிட்காயின்களை வைத்து நிறுவனமாக இவரின் நிறுவனம் அறியப்படுகிறது. உலகின் முதல் பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான மவுண்ட் காக்ஸ், 2011 ஆம் ஆண்டில் சுமார் 8,50,000 பிட்காயின்களை இழந்தது. இதைப் பற்றி தனது புத்தகத்தில் எழுதியுள்ள மார்க் ஹண்டர் கூறுகையில், “நாணயங்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு இன்னும் குழப்பம் உள்ளது. ஆனால் காணாமல் போன பிட்காயின்களில் பெரும்பாலானவை திருடர்களால் விற்கப்பட்டு சந்தையில் புழக்கத்தில் உள்ளன.” என்றார். பிட்காயினை வைத்திருக்கும் நாடு மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரின் அதிபருக்கு பிட்காயின் மீது அளவு கடந்த பிரியம் உண்டு. அதன் விளைவாக கடந்த 2021ஆம் ஆண்டு அந்நாட்டின் பொதுப் பணத்தை பயன்படுத்தி பிட்காயினை இவர் வாங்கத் தொடங்கினார். அதிபரின் இந்த செயலுக்கு கடுமையாக எதிர்ப்புகளும் கிளம்பின. இந்த நாட்டுக்கு சொந்தமாக 2,800 பிட்காயின்கள் இருப்பதாக கிரிப்டோகரன்சி வலைதள பதிவாளரும், டச்சு ஆய்வாளருமான எலியாஸ் கணிக்கிறார். ஆனால் அதிகாரப்பூர்வமாக எல் சால்வடோர் நாட்டுக்கு சொந்தமாக எத்தனை பிட்காயின் உள்ளன என்ற விவரம் பொதுவெளியில் இல்லை. 2023ஆம் ஆண்டின் கடைசி காலாண்டு வருவாயை டெஸ்லா நிறுவனம் வெளியிடும் போது அதில் அந்நிறுவனத்திற்கு சொந்தமாக 9,700 பிட்காயின் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2021ஆம் ஆண்டு, ஈலோன் மஸ்க்கின் நிறுவனம் 40,000 க்கும் மேற்பட்ட பிட்காயினை வாங்கியது. ஆனால் அண்மையில் அதில் பெரும்பாலானவற்றை அந்நிறுவனம் விற்றுவிட்டது. 1 கோடிக்கும் அதிகமான பிட்காயின்கள் பொதுமக்களிடம் உள்ளன என்று பால்பார்க் நிறுவனம் மதிப்பிடுகிறது. இதில் எத்தனை தனிப்பட்ட நபர்கள் பிட்காயின்களை வைத்திருக்கிறார்கள் என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியாது. ஆனால் கிரிப்டோ-டெக் நிறுவனமான ரிவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு மதிப்பீட்டை வெளியிட்டது. அதன்படி 81.7 லட்சம் பிட்காயின் பயனாளர்கள் பரிமாற்றங்களில் ஈடுபடுவதாக குறிப்பிடுகிறது. அப்படியெனில் உலக மக்கள் தொகையில் 1% பேர் கிரிப்டோ பயனாளர்களாக இருக்கிறார்கள். https://www.bbc.com/tamil/articles/c6pj4g5l33no
  9. ஒவ்வொரு முறையும் புது புது அவதாரில் வந்து கரித்து கொட்டுவதுதான் முழு நேர வேலையாக்கும் சாந்தன் 3௦ வருட போராட்டத்தின் கடைசி வித்துக்கள் இனி ஒரு ஆயுத போராட்டம் என்பது கிடையாது ஈழத்தில் இருக்கும் சின்ன குழந்தைக்கும் தெரியும் அந்த விடயம் .ஆனால் உணர்வுகள் செத்து விடவில்லை இதை அறிய இந்திய புலனாய் கூட்டம் வேணுமென்றே சாந்தனை கொலை செய்து அவரின் இறுதி ஊர்வலத்தை பார்த்து உறுதி செய்து கொண்டுள்ளது அவர்களின் கட்டளைக்கு பந்தம் பிடிப்பவர்களுக்கு இந்த செய்தி பிடிக்காது என்பது எங்களுக்கு தெரியும்தானே ?😁 வணக்கம் கந்தப்பு 2022 ஒக்டோpar மாதம் காணாமல் போய் இன்றுதான் காண்கிறேன் மிக்க மகிழ்ச்சி திரும்பி வந்ததில் சுகமாய் இருகிறீர்களா? முகமூடியில் நின்று வகுப்பு எடுப்பது எல்லோருக்கும் ஈசியானது .
  10. இலங்கை கடற்பரப்பினுள் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்றொழிலாளர்களின் தொழில் முதல்களை அழிப்பதற்கும் எதிராக வடக்கு மாகாண கடற்றொழில் இணையத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்று (05.3.2024) யாழ் மாவட்டச் செயலகத்திலிருந்து ஆம்பமாகி உள்ளது. வீதித் தடைகள் போராட்டக்காரர்கள் இந்திய துணை தூதரகம் சென்று மகஜர் ஒன்றை கையளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், பொலிஸார் இந்திய துணை தூதரகத்திற்குள் போராட்டக்காரர்களை செல்ல விடாது வீதித் தடைகளையிட்டு மறித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இந் நிலையில் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்ட போராட்டகாரர்கள் இலங்கை கடற்றொழிலாளர்களின் கடல் வளத்தை அழிக்காதே, தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்து, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர். மேலும் இந்த நாட்டில் வாழுகின்ற நாங்கள் எங்களது பாதுகாப்பையும் உரிமையையும் வலியுறுத்தி தரையில் போராட்டத்தை நடாத்துகிற போது கம்பிக்கூடுகளை வைத்து எங்களை தடுத்து நிறுத்துகிற இலங்கை படைகள் கடலில் எங்கள் பகுதியில் அத்துமீறி எங்களையே தாக்குகிற இந்திய கடற்றொழிலாளர்களை ஏன் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது என கேள்வி எழுப்பிய கடற்றொழிலாளர்கள் எங்களை கட்டுப்படுத்த முன்னர் இந்தியர்களை கட்டுப்படுத்துங்கள் எனவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/a-massive-demonstration-by-fishermen-in-jaffna-1709618132
  11. இலங்கையின் சனத்தொகையில் 2023 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், புலம்பெயர்தல், பிறப்பு வீதங்கள் குறைதல் மற்றும் அதிகரித்த இறப்பு வீதங்கள் உள்ளிட்ட காரணங்களினாலயே சனத்தொகை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதன்படி 2022 இல் 2,181,0000 ஆக இருந்த மக்கள் தொகை 2023இல் 2,037,0000 ஆகக் குறைந்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மேலும், புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை 2022இல் 361,800 இல் இருந்து கடந்த ஆண்டு 268,920 ஆகக் குறைந்துள்ளதோடு வருடாந்த இறப்பு விகிதமும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2014 இல் 125,334 வீதமாகவிருந்த இறப்பு வீதம் 2023 இல் 196,000 ஆக உயர்ந்துள்ளது. 2022 இல் 85,572 ஆக இருந்த நாட்டை விட்டு இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2023 இல் 222,715 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/decline-in-sri-lanka-s-population-1709628328
  12. இப்படியான விடய்யங்களில்@கோசான் போன்றவர்களுக்கு கை துரு துருக்கும் கூடவே அடுத்த ஐடி நாதமுனிக்கும்.
  13. இங்கிலுசுக்குள் எழுதி விட்டார்கள் நம்புவது தவிர வேறு ஒன்றும் இல்லை .😃
  14. Courtesy: Nada. Jathu உலகம் முழுவதுமே மனிதனின் தன்னிச்சையான செயற்பாடுகளால் தனது இயற்கையை இழந்து சமநிலையைத் தக்க வைக்க முடியாத சூழலை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பது இன்றைய யதார்த்தமாகின்றது. இவற்றை தடுப்பது என்பது ஒரு முரண்நிலை விவாதமாகும் இவற்றை முகாமைத்துவம் செய்வது என்பது மட்டுமே சாத்தியமானதும், சாதகமானதும் எதிர்கால உலக இயக்கத்திற்கு சாதுரியமானதும் ஒரு செயற்பாடாகும் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இந்த வள அழிப்புக்கள் அமேசனில் தொடங்கி புன்னாலைக்கட்டுவன் வரைக்கும் மாப்பியாக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் ஆச்சரியமான விடயம் யாதெனில் மூன்றாம் உலக நாடுகளில் இவற்றை முகாமை செய்ய வேண்டிய அரசுக்கள் மற்றும் பொறுப்புடைய அரச நிறுவனங்களே இந்த இயற்கை வளச்சுரண்டல் தொழிலில் பின்னணியாக செயற்பட்டு வருகின்றன. ஒரு சில அரசியல்வாதிகள் ஒரு சில தனவந்தர்கள் ஒரு சில அரச அதிகாரிகள் (இராணுவம் மற்றும் பொலிஸார் உட்பட்டவர்கள்) தங்களது பணப்பைகளை இச்செயற்பாடுகளில் நிரப்பி வருவது உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது. முதலாவதாக வடக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் மணல் வியாபாரம். இது ஒரு இயற்கை வளமாகும். இதற்குரிய வழங்கலானது பாரபட்சமின்றி கிரமப்படுத்தப்பட வேண்டுமே அன்றி வியாபாரமாக்க முடியாது. மணல் விநியோகம் இச்சுரண்டலால் மிகவும் பாரதூரமாக பாதிக்கபடும் மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் ஆகும். இங்கே வடபகுதி மணல் விநியோகத்தினை ஒரு வரைபடத்திற்குள் அமைப்பீர்களாக இருந்தால் மணல் விநியோக அனுமதிகள் அனைத்தும் யாழ்.மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கே வழங்கப்படுகின்றது.காரணம் அங்கேயே வழங்கலுக்கு உரித்தான வகையில் மணல்கள் உரிய தரத்துடன் காணப்படுகின்றன. மணல் நுகர்வு 90 சதவீதமானது யாழ்.மாவட்டத்திலேயே காணப்படுகின்றது. இதுவே இக்கொள்ளைச் சம்பவத்திற்கு மிகப் பிரதானமானதொரு காரணியாக அமைகின்றது. தற்சமயம் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டரீதியான மணல் அகழ்விற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு அகழ்வு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மணல் அகழ்வு மற்றும் விற்பனை அனுமதி வேறாகவும், வழித்தட அனுமதி வேறாகவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற நிலையிலேயே பேணப்படுவது திருட்டுக்கு மிகவும் சௌகரியமாக இருக்கின்றது. மணல் கொள்ளை இம்மணல் வியாபாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கும் 22 வயதுடைய ஒரு ரிப்பர் உரிமையாளரும், சாரதியுமான ஒருவர் பின்வருமாறு இத்தொழில் முறையை விளக்குகின்றார். ஒரு லோட் 3 கியுப் மணலை அனுமதி வழங்கப்பட்ட மணல் யாட்டில் இருந்து தன்னால் ரூபா 22,500.00 க்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும், இம் மணலை யாழ்ப்பாணம் கொண்டு சென்று ரூபா 62,000.00 – 65,000.00 வரைக்கும் மாசி மாத இறுதிவார நிலவரத்தின்படி விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கின்றார். இச்செயற்பாடு காலை 7.00 க்கு முல்லைத்தீவில் ஆரம்பித்து அண்ணளவாக 11.00 மணிக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் முடிவடைந்துவிடுவதாகவும் தெரிவிக்கின்றார். இவ் வழித்தடத்தில் பயணிக்கும்போது எழுதுமட்டுவாள் பொலிஸ் காவலரணில் தொடங்கி யாழ்ப்பாணம் வரைக்குமான மணலைப் பறிக்கும் இடங்களுக்கு இடையே சராசரி 15 இடங்களில் பொலிஸாருக்கு ரூபா 300.00 – 500.00 வரைக்கும் இலஞ்சம் வழங்குவதாக தெரிவிக்கின்றார். இதில் பெருந்தெருக்களுக்கான போக்குவரத்து பொலிஸார், கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் நிலையங்களை சேர்ந்தவர்களாக போக்குவரத்து பொலிஸார், கொடிகாமம் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் (சீருடை தரிக்காது ரீசேட்டுடன் முச்சக்கரவண்டியில் யுக்திய நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள்), இவற்றுக்கு மேலாக பாடசாலைகளின் அணுகுதலுக்கான கடமைகளுக்காக மிருசுவில், கொடிகாமம், மீசாலை, சங்கத்தானை, நுணாவில் மற்றும் மாகாண சபையின் விசேட தேவைகளுக்காக கைதடியில் கடமைசெய்யும் பொலிஸார் இவர்கள் அனைவரும் அடங்குகின்றார்கள். இவ் ரூபா 300.00 - 500.00 க்கான பிரதி உபகாரம் யாதெனில் வழங்கப்பட்ட வழித்தட அனுமதிப்பத்திரத்தினை செல்லுபடியற்றதாக்காது விடுவிப்பது. பகல் 11.00 மணிக்கு பின்னரே திருட்டு மணல் ஏற்றம் ஆரம்பிக்கின்றது. இம்மணலானது மணல் தேவை இருக்கும் யாழ்பாணத்திற்கு குறுகிய நேரத்தில் வழங்கத்தக்கதாகவும், ஏற்கனவே இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் பொலிஸார் உள்ள இடத்திலும் அமைவது வாகனத்திற்கும் சாரதிக்கும் பாதுகாப்பானது எனக் கருதிக்கொண்டு மிக அதிகமாக கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக அகழப்படுகின்றது. இதனாலேயே கிளிநொச்சி அதிகம் பாதிக்கப்படுகின்றது. இந்த அகழ்வு இடங்களுக்கு பொறுப்பான பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு பணம், சாராயம், கசிப்பு முதற்கொண்டு பல்வேறு வகையான பொருட்கள் சிறப்பாக விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கின்றார். மேலதிகமான இன்னும் ஒரு தகவலையும் தெரிவித்தார் வட பகுதியில் அதிஉச்ச மதுபான வியாபாரம் உள்ளதான ஏ9 சாவகச்சேரியில் உள்ளதொரு மதுபானசாலையை சொல்கின்றார். முறைகேடான நடவடிக்கை மணல் கொண்டுவரும் அனைத்து டிப்பர்களும் முறைகேடான நடவடிக்கைகளுக்கான மதுபானங்களை சாவகச்சேரியிலே கொள்வனவு செய்து தினமும் ஆயிரக்கணக்கான மதுபானப் போத்தல்கள் டிப்பர் சாரதிகளால் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் சலுகைகளுக்காக கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படுகின்றதாம். இத் தகவலை வேறு ஒரு முறையிலும் உறுதிசெய்ய முடிந்தது. யாழ்ப்பாண பிராந்திய இறைவரித் திணைக்களத்தில் வருமான வரி செலுத்தும் மதுபானச் சாலைகளில் சாவகச்சேரி மதுபான விற்பனை நிலையமே முன்னிலை வகிக்கின்றது. இது தனது பிரதேசத்தில் இருக்கும் சனச் செறிவுடன் ஒப்பிடுகையில் குறைந்தபட்சம் 6 ஆவது அல்லது 7 ஆவது மதுபான விற்பனை நிலையமாக திகழ வேண்டும் என்பது தரவுகளின் அடிப்படையான முடிவாகும் இருப்பினும் முதன்நிலை வகிப்பது மேற்குறித்த டிப்பர் சாரதியின் கூற்றை உண்மையாக்கும் வகையில் கருதமுடிகின்றது. முதலாவது லோட் மட்டும் சட்டபடியானது இரண்டாவதும் மூன்றாவதும் சட்டமுரணானது. மணல் திருடிய இடத்தில் இருந்து ஏ9 வரைக்குமான இடத்தில் பொலிஸ் பிடித்தால் தான் பிரச்சினை என்றும் ஏ9ல் ஏறிவிட்டால் தங்களிடம் வழித்தட அனுமதி இருப்பதாகவும், தங்களது பொலிஸார் தான் வீதிக்கடமையில் இருப்பதாலும் தனக்கு பயம் இல்லை என்றும், மணல் திருடும் இடத்தில் விசேட அதிரடிப்படையில் மாட்டினால் மாத்திரமே வழக்காக மாறும் எனவும் வெகு இலாவகமாக கருத்து தெரிவிக்கின்றார். ஏன் இந்த தொழிலை தான் தெரிவுசெய்தார் என்பதற்கான நியாயப்படுத்தலாக இருபத்தியைந்து இலட்சத்திற்கு உள்ளாக ஒரு வளமான டிப்பரை காசுக்க கொள்வனவு செய்ய முடிவதாகவும் நெருக்கடி இருப்பின் இதில் ஒரு தொகையை லீசாக பெறலாம் என்றும் சராசரி 03 லோட் (அவருடைய மொழியில் 01 ஜெனுவின் 02 கள்ளம்) ஏற்றினால் சாராசரி தனக்கு ரூபா 50,000.00 - 60,000.00 வரைக்கும் ஒரு நாளில் இலாபம் ஈட்ட முடிவதாகவும் கூறுகின்றார். இந்த கள்ள தொழிலுக்கு சாரதியை நியமிக்க கூடாது எனவும் ஏன் என்றால் இங்கே எதுவுமே நேர்மை இல்லாத இடத்தில் தனக்குப் பணியாற்றும் ஒரு சாரதிமட்டும் தனக்கு எப்படி நேர்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பார் என்ற அடிப்படையில் தானே நேரடியாக இதனை செய்வதாகவும் தன்னுடைய சினேகிதர்கள் 25 பேர் அளவில் தங்களது குழுவில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார். பல மடங்கு இலஞ்சம் மேலும் இதுபோல 05 அல்லது 06 குழுக்கள் செயற்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றார். இங்கே அரச செயலக அதிகாரிகளின் செயற்பாடுகள் மாத்திரமே மிகவும் பலவீனமாக இருப்பதால் மணல் முதலாளிகள், டிப்பர் மாபியாக்கள், குறித்த பகுதிப் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அதீதமாக சம்பளங்களுக்கு மேலாக பலமடங்கு இலஞ்சங்களை பெற்றுக்கொள்கின்றார்கள். யாழ்.மாவட்டத்தில் கொடிகாமம், சாவகச்சேரி, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்ற பொலிஸார் பெரு விருப்புடன் வருவதாக அறிய முடியகின்றது காரணம் மூன்று மடங்கு சம்பளம் பெற்றுக்கொள்ள முடியுமாம். ஒன்றும் அகப்படாவிட்டாலும் வேகமானியுடன் வீதியில் இறங்கினால் போதுமாம் சாரதியின் வேகத்தினை அளவிட்டு அவர்களுக்கு காண்பித்து அக்குற்றத்தினை நிரூபித்து அதற்காக இலஞ்சம் தாங்களே பெற்றுக்கொண்டு விடுவிக்கின்றார்கள். குறித்த சாதனங்களில் பதிவு செய்யப்பட்டவைகளை மீளாய்வுக்கு உட்படுத்தி அதில் தவறு காண்பிக்கப்பட்ட வாகனங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்தால் 5 சதவீதம் கூட சட்டத்திற்குள் அடங்கியிருக்காது. இயற்கை வளமானதொரு விடயத்தினை வினைத்திறனாக முகமைசெய்து அகழ்வதனையும் விநியோகத்தினையும் மேற்கொள்ள முடியாததொரு நிலையிலேயே அண்ணளவாக ரூபா 2,50,000.00 மேற்பட்ட மாதாந்த வேதனத்தினையும் இதர பல சலுகைகளையும் பெற்றுக்கொண்டு ஒவ்வொரு மாவட்ட செயலருக்கும் கதிரைக்கு பாரமாக இருக்கின்றார்கள். கடந்த கால எரிபொருள் பங்கீடு தொடர்பில் அரசாங்கத்தினால் கியு ஆர் முறமை நடைமுறைப்படுத்த இருக்கும் விடயமே தெரியாமல் அந் நடைமுறை அறிவிப்பு வருவதற்கு சரியாக இருநாட்களுக்கு முன்னர்தான் மாவட்ட செயலகங்கள் எரிபொருள் பங்கீட்டு அட்டை அச்சிட்டு அதனை கிராம சேவகர் தொடக்கம் மாவட்ட செயலர்கள் வரை ஒப்பமிட்டு யுஎன்டீபியின் நிதி அனுசரணையில் மில்லியன் கணக்கில் அவசர கொள்வனவாக கொள்வனவு செய்து நடைமுறைபடுத்த முனைந்தார்கள். குறைந்தபட்சம் இவ்வாறு செலவு செய்த மில்லியன் கணக்கான யுஎன்டீபியின் பணம், மக்களின் அலைச்சல் ஆகியவற்றின் பிரதியுபகாரமாக ஒரு நாள் ஆகிலும் அவ் அட்டைகளுக்கு எரிபொருள் பங்கிடப்படவில்லை. இதுவே ஒரு மிகச் சிறந்த உதாரணமாகும். இதில் குறித்த அலுவலகங்களின் அவசர கொள்வனவுகள் காரணமாக கொள்வனவு உத்தியோகத்தர்களும் கணக்காளர்களும் அச்சகங்களில் அடித்ததைத் தவிர ஒரு துளி பெற்றோலும் அடிக்கப்படவில்லை. வினைத்திறனாக மணலை பகிரந்தளிக்க ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் ஒவ்வொரு நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும், நியாய விலையில் இயற்கைவளம் அனைவருக்கும் கிடைக்கத்தக்க வகையில் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். மணல் அகழும் உரிமம் பெற்றவர்கள் சட்ட ரீதியான போக்குவரத்துடன் மணலை இந் நிலையங்களுக்கு விநியோகிக்க வேண்டும். இச் செயற்பாடுகளை தொழில்நுட்பத்தால் முகமை செய்யவேண்டும். இயற்கை வளமும் பாதுகாக்கப்பட வேண்டும், செயற்கை முறைச் சந்தைச் சூழல் தவிர்க்கப்பட்டு ஒரு சமனிலையை உருவாக்கப்பட வேண்டும். இயற்கை வளத்தினை ஒரு சட்ட திட்டத்திற்கு அமைவாக பகிரவேண்டும். இவற்றை செய்வதற்கு கையறுந்த அறிவுடைய அரச நிறுவனங்களும் அதன் பிரதானிகளும் இப்போது இருக்கும் நடைமுறைகளை திருத்த முன்வராது சிறப்பான திட்டங்களை முன்மொழியாது தங்களது கடமைக்காக கடமையாற்றுவது இன்னும் இன்னும் அரச உத்தியோகம் புருசலட்சணம் என்ற வடபகுதிக் கோட்பாட்டுக்கே பொருத்தமானதாகும். சுண்ணாம்புக் கற்கொள்ளை வடக்கே இருந்த காங்கேசன் சீமெந்து தொழிற்சாலையை மீள இயங்கவைத்தால் அதன் மூலப்பொருளாக யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கல் அகழ முடியாது என்றும் இதனால் இங்கே மீள அமைப்பது பொருத்தமான என்றதொரு சூழலியலாளர்களின் ஆர்வம் மிக்க கருத்தும் இத் தொழிற்சாலையின் மீள்நிர்மாணத்தில் பாரிய தாக்கத்தினை செலுத்துகின்றன. இச் சூழ்நிலையில் திருகோணமலையில் இயங்கிவரும் பிரபல சீமெந்து தொழிற்சாலைக்கு யாழ்பாணத்து சுண்ணாம்புக்கற்கள் தான் மூலப்பொருட்களாக கடந்த 04 வருடங்களாக அனுப்பட்டுவருவது ஏனோ இச் சூழலியலாளர்களுக்கும், சுற்றாடல் அதிகார சபைக்கும், மாவட்ட மற்றும் சம்பந்தப்பட்ட அகழ்வுக்குரிய பிரதேச செயலர்களுக்கும் தெரியவில்லை என்பது மிகப்பெரிய மர்மமாக இருக்கின்றது. மண்ணையும் மக்களையும் காப்போம் என திடசங்கற்பம் கொண்ட தமிழ் தேசிய வாதிகளுக்கும் தமிழ்ப்பற்று அரசியல் வாதிகளுக்கும் இச் சுரண்டல்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பூமிக்கு மேலே இருக்கும் கற்பாறையை உடைப்பதையும் பூமிக்கு கீழே இருக்கும் கல்லை அகழ்வதற்கும் இருக்கும் வேறுயாடுகள், அபாயங்கள் முதலியவற்றையும் அதற்குரித்தான சட்ட ஏற்பாடுகளையும் பின்பற்றாது அல்லது நடைமுறைப்படுத்தாது இவ் விடயம் தொடர்வது யாழ்ப்பாணம் என்றதொரு நிலத்தினை இல்லாமல் செய்வதற்கான செயற்பாடுகள் ஆகும். யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பிரபல வர்த்தகர் உட்பட்ட இரு தரப்பினரால் தினமும் 15 க்கு மேற்பட்ட 8 கியுப் காவுதிறன் கொண்ட பாரஊர்திகளில் மிகவும் இலாவகமாக மூடப்பட்டு அனுப்படுவதாக அவற்றில் பணியாற்றும் ஒரு சாரதி தெரிவிக்கின்றார். தான் தென்பகுதியை சேர்ந்தவர் எனவும் கடந்த 04 வருடங்களாக இப் பணியை செய்பவராகவும் தெரிவிக்கின்றார். இவ் வகையான மிகக் கூடியகாவுதிறனுக்கு அப்பாற்பட்ட அளவில் ஏற்றிச் செல்வதற்கு பொலிஸார் அனுமதிப்பார்களா என வினவியதற்கு தங்களது நிறுவனத்தில் பொலிஸாரின் விடயங்களை கையாள்வதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார் என்றும் எங்கேனும் சிக்கல் இருப்பின் அவர் உடனடியாக தொடர்பு கொள்வார் என்றும் சம்பந்தபட்ட பொலிஸாருக்கு யாழ்ப்பாணம் பெரிய இடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வரும் என்றும் அதனால் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மிகக் கௌரவமாக தெரிவிக்கின்றார். இவற்றை எங்கே ஏற்றுவீர்கள் என வினவியதற்கு எங்களுக்கு எங்களுடைய வாகன தரிப்பிடத்தில் பெரிய லோடரால் லோட் செய்யப்பட்டு வெளியே தெரியாதவகையில் தறப்பாளிடப்பட்டு கையளிக்கப்படும் எனவும், தங்களது மிகவும் பாதுகாப்பாக வெளித்தெரியாதவாறு முடக்கப்பட்ட வாகனத் தரிப்பிடமும் கல் ஏற்றுமிடமும் தங்களது நிறுவனத்தால் யாழ். புறநகர் பகுதியில் பேணப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கின்றார். வளக்கொள்வனவு அனுமதிக்கு புறம்பாக அகழப்படுகின்றது, அனுமதியற்று மாகாணத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றது, சூழல் நேயம் மிக்க சீமெந்து உற்பத்தி தொழிற்சாலையாக அறியப்பெற்ற இலங்கை மற்றும் சர்வதேச தர நியமங்கள் பெற்ற சட்டரீதியான உற்பத்தி நிறுவனம் முறைகேடாக ஒரு வளக்கொள்வனவை மேற்கொண்டு மூலப்பொருளை உள்வாங்குகின்றது. இதனை முகமை செய்யவேண்டிய அரசுநிறுவனங்கள் அதிகார சபைகள், உத்தியோகத்தர்கள் என்போர் உறங்குநிலை போன்று உறங்குகின்றார்கள். சூழல் நலன் சார்ந்து சிந்திக்காத எந்தவொரு மனிதனும் வாழத் தகுதியற்றவன் என்பதை வாழ்வின் இறுதிக்காலத்தில் மட்டுமே உணர்வான் இப்போது வாழும் வரைக்கும் மண்ணை விற்றென்ன கல்லை விற்றென்ன வாழ்ந்தால் போதுமே என்ற நிலைதான் இருக்கின்றது. இருக்கவேண்டியவர் இருந்தால் இன்று இப்படியெல்லாம் நடக்குமா என்ற முதியவர் ஒருவரது முனுகலுடன் மணல் டிப்பரையும் லொறியையும் கடந்து செல்லவேண்டியுள்ளது. பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 01 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
  15. முதலில் இங்கு உள்ள ஒரு சிலரில் மரபணு வை பார்க்கணும் சிலவேளை முழுக்க சிங்களவர் என்றே காட்டினாலும் ஆச்சரியபட தேவையில்லை . 1 தமிழரை கொஞ்சம் பெருமையா சொன்னால் உடனே பக்கம் பக்கம் ஆக கோபத்தின் உச்சியில் நின்று எழுதுவார்கள் 2. புலிகள் இனி வரப்போவதில்லை ஆனாலும் புலி செய்தபுலிகளே ஒரு சில பிழைகளை திருப்பி திருப்பி எழுதி இன்பம் காண்பார்கள் . 3.சிங்களவர்கள் என்ன செய்தாலும் அவர்கள் சிறந்த அறிவுடனே தான் செயற்படுகிறார்கள் என்று பெருமை கொள்வார்கள் .
  16. பிரச்சினையின் பின்னணியில் இருந்து சுமந்திரன் செயற்பட்டுவிட்டு பின்னர் கட்சிக்காக வழக்காடுவேன் என்று சொல்வது உண்மையானால் அது அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழியாய்ப் போகப்போகிறது என பேச்சாளரான கம்பவாரிதி ஜெயராஜ் தெரிவித்துள்ளார். தனது தளத்தின் உரையாடல் பகுதியொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும், 1. உரலார் கேள்வி :- தமிழரசுக் கட்சியின் பதவி தேர்வுகளை ஆட்சேபித்து நீதிமன்றில் வழக்குத் தொடுத்தவர்கள் சுமந்திரனதும், சாணக்கியனதும் ஆதரவாளர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் சுமந்திரனோ தான் கட்சிக்காக நீதிமன்றில் வழக்காடுவேன் என்று அறிக்கை விடுத்துள்ளார். அங்கு என்ன நடக்கிறதென்று உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? உலக்கையார் பதில் :- இடியப்ப சிக்கல் தான். இடியப் போகிற வீட்டில் முதலில் அங்காங்கு வெடிப்புகள் தோன்றும். தமிழரசுக் கட்சியிலும் அதுதான் நடக்கிறது. வரவர அங்கு வெடிப்புகள் பெரிதாகிக் கொண்டே போகின்றன. இப்படியே போனால் ‘வீடு’ விழப்போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது. சுமந்திரன், “பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்” என்கிறார்கள். அதுபற்றிய உண்மை ஏதும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று, சுமந்திரன் அப்படிச் செய்கிறார் என்றால் அவர் பெரிய தவறு செய்கிறார் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. பகையை வெளிப்படையாய்க் கையாளாமல் தந்திரமாய்க் கையாள்பவர்களை மக்கள் மதிக்க மாட்டார்கள். ஒரு அரசியல் தலைவருக்கு புத்திசாலித்தனம் அவசியம் தான்!. ஆனால் தந்திரம் மிக்க அதிபுத்திசாலித்தனம் மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்ச்சியைத் தான் தோற்றுவிக்கும். முன்பு தமிழ்நாட்டின் முதலமைச்சராய் இருந்த மூதறிஞர் ராஜாஜியைப்பற்றி சிலர், “ராஜாஜிக்கு உடம்பெல்லாம் மூளை. மூளையெல்லாம் சிந்தனை. சிந்தனையெல்லாம் வஞ்சனை” என்று கிண்டலாய்ச் சொல்வார்கள். அவரது அந்த அதிபுத்திசாலித்தனமும் பின்னாளில் மக்களால் ரசிக்கப்படாமல் போயிற்று. நம் நாட்டு மூத்த தமிழ்த் தலைவர்களான தந்தை செல்வா, ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆகிய இருவரிலும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் செல்வாவை விட அதி புத்திசாலியாய் இருந்தார். ஆனால் அந்தப் புத்திசாலிதனத்துக்கும் தமிழ் மக்கள் மத்தியில் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஜீ.ஜீ. அவர்கள் தேர்தல் பரப்புரைக்காகச் செல்லும் போது, ஒரு வீட்டினுள் புகுந்து தனக்கான ஆதரவைக் கேட்பாராம். அத்தோடு அந்த வீட்டுக்காரரிடம் அடுத்த வீட்டில் இருப்பவர்கள் பற்றிய விபரங்கள் முழுவதையும் கேட்டறிந்து கொள்வாராம். பின்னர் அடுத்த வீட்டிற்குள் நுழையும் போதே, தான் அவர்களுக்கு நெருக்கமானவர் என நினைக்கச் செய்ய, அவர்களை உரிமையாய் பெயர் சொல்லி அழைத்து கொண்டே உள் நுழைவாராம். அது மட்டுமல்லாமல் அவர்களது பிள்ளைகளின் படிப்பு, தொழில் முதலியவை பற்றியெல்லாம் அக்கறையுடன் விசாரிப்பாராம். அந்த வீட்டுக்காரர்கள், ஐயா! எங்களைப் பற்றியெல்லாம் முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறாரே என மயங்கிப் போவார்களாம். சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் அந்த அதி புத்திசாலித்தனம் நம் மக்களாலும் பெரியளவில் விரும்பப்படவில்லை. மென்மையாகவும், எளிமையாகவும், இயல்பாகவும் இருந்த தந்தை செல்வாவை தான் மக்களுக்கு அதிகம் பிடித்தது. இவையெல்லாம் வஞ்சனையாய் செயற்படும் அதி புத்திசாலிகளை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பதற்கான முன் உதாரணங்கள். பிரச்சினைகள் வரும்போது தந்திரங்கள் செய்யாமல், நேர்மையாக அவற்றை கையாள்வதுதான் மக்கள் மனதை வெல்வதற்கான சுலபமான வழி என்று நினைக்கிறேன். நீங்கள் சொன்ன பிரச்சினையில் சுமந்திரன் பின்னணியில் இருந்து செயற்பட்டுவிட்டு பின்னர் கட்சிக்காக வழக்காடுவேன் என்று சொல்வது உண்மையானால் அது அவருக்கு அவரே வெட்டிக் கொள்ளும் புதைகுழியாய்ப் போகப்போகிறது. 2. உரலார் கேள்வி :- இந்தியாவை மெல்ல மெல்ல இந்து நாடாக ஆக்க முயல்வது சரிதானா? உலக்கையார் பதில் :- அதில் தவறென்ன இருக்கிறது? இந்தியாவைப் புதிதாக யாரும் இந்து நாடாக ஆக்க வேண்டிய அவசியமில்லை. அது ஏற்கனவே இந்துநாடாகத் தான் இருக்கிறது. இந்தியா இந்து சமயத்தின் தளமாக இருக்கும் ஒரு நாடு என்பதை எவர் மறுக்க முடியும்? வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே அங்கிருந்த இந்து மத அடையாளங்களை எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி, கிழக்கு மேற்குகளிலும் சரி அங்கு எல்லா இடங்களிலும் வரலாற்றுத் தொன்மைமிக்க இந்து மதக் கோவில்கள் நிரம்பிக் கிடக்கின்றன. அடியார்கள், ஆழ்வார்கள் எனத் தமிழ் நாட்டில் இந்துமதத்தை வளர்த்த பெரியவர்களைப் போன்ற பலர் இந்தியா முழுவதிலும் விரவி இருந்திருக்கிறார்கள். அங்குள்ள புனித நதிகள், மலைகள் எல்லாம் கூட இந்து மத வரலாற்றில் பதிவாகி இருக்கின்றன. அங்குள்ள விலங்குகள், பறவைகள் மட்டுமன்றி மரங்களும், கற்களும் கூட இந்து சமய வரலாற்றோடு தொடர்புள்ளவையாய்ப் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், தர்மசாஸ்திரம் என இந்து மதத்தின் அடிப்படை நூல்கள் எல்லாம் அங்குதான் தோன்றி வளர்ந்து நிலைத்திருக்கின்றன. பண்டைய காலந்தொட்டு அங்குள்ள மக்களில் பெரும்பான்மையோர் இந்துசமய வழிபாட்டு முறையையும், ஆசாரங்களையும், சீலத்தையும்தான் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். இவையெல்லாம் இன்று நேற்றுப் பதிவான விடயங்கள் இல்லை. தொன்றுதொட்டு வரும் விடயங்கள். அப்படியிருக்க இந்தியாவை இந்து நாடு எனச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? மத்திய கிழக்கு நாடுகள் தம்மை இஸ்லாமிய நாடுகள் எனப் பகிரங்கமாக அறிவிக்கின்றன. மேற்கு நாடுகள் தம்மைக் கிறிஸ்தவ நாடுகளாகத் துணிந்து வெளிப்படுத்துகின்றன. நம் நாடு தன்னைப் பௌத்த நாடு எனப் பகிரங்கப் படுத்தியிருக்கிறது. மேற் சொன்ன நாடுகளில் பல தம் நாட்டில் மற்றைய சமயங்களின் வழிபாட்டிற்கே தடை விதித்திருக்கின்றன. இவற்றை யாரும் பிழை சொல்வதில்லை. இந்தியாவை இந்து நாடு என்று சொன்னால் மட்டும் ஏனோ சிலர் குற்றம் சாட்டப் பாய்ந்து வருகிறார்கள். சிறுபான்மையினருக்கு உரிமையும், மதிப்பும் கொடுக்கத் தான் வேண்டும். அதற்காக பெரும்பான்மையினரின் உரிமையை மறுப்பதென்பது ஏற்க முடியாததொன்று என்றே கருதுகிறேன். சல்லடையார் சலிப்பு - கள்ளமில்லாத வெளிப்படையான உறுதியான பதில். வாரிதியாரின் துணிவு பாரட்டத்தக்கது. 3. உரலார் கேள்வி :- இந்த நூற்றாண்டின் ஆச்சரியப்படத்தக்க புதுமையாக எது இருக்கப் போகிறது? உலக்கையார் பதில் :- ‘ஏலியன்ஸ்’ என்று சொல்லப்படுகின்ற வெளிக்கிரக வாசிகளின் வருகை தான் அத்தகைய புதுமையாக இருக்குமென நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நூற்றாண்டின் ‘ஐன்ஸ்ரீன்’ என்று சொல்லப்பட்ட மறைந்த விஞ்ஞானி ‘ஸ்டீபன் ஹக்’ இது பற்றி ஏற்கனவே சொல்லி விட்டுப் போய் விட்டார். ‘ஏலியன்ஸ்களாலும், செயற்கை அறிவூட்டலினாலும் பூமிக்குப் பேராபத்து நிகழ இருக்கிறது என்று அவர் சொன்ன கூற்று உண்மையென்றே நான் கருதுகிறேன். அவர் சொன்ன இரண்டில் ஒன்று மிக விரைவில் நடக்கப் போவதாய் எனது உள் மனம் சொல்கிறது. ஆய்வாளர்கள் ஏற்கனவே ஏலியன்ஸ்கள் பூமிக்கு வரத் தொடங்கிவிட்டார்கள் என்கிறார்கள். அடிக்கடி பலநாடுகளிலும் பறக்கும் தட்டுக்கள் இனங்காணப்பட்டுள்ளன. அமெரிக்க விமானப்படை, கடற்படை ஊழியர்கள் கூட அதனை உறுதி செய்திருக்கிறார்கள். சொன்னால் நம்பமாட்டீர்கள், 1993 அல்லது 1994 என்று நினைக்கிறேன் யாழில் போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த காலம் அது. அக்காலத்தில் ஒருநாள் இரவு, நாம் ஓர் ஆலயத்தில் பட்டிமண்டபம் நடத்திக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட நடுச் சாமநேரம். திடீரென பட்டிமண்டபத்தைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் எல்லோரும் வானத்தை அண்ணாந்து பார்த்தார்கள். அவர்கள் எதைப் பார்க்கிறார்கள் என்று அறிய நானும் அண்ணாந்து பார்த்தேன். அப்போது வானத்தில் ஐந்து ஒளிர் பொருட்கள் கிடையாக ஒன்றன் பின் ஒன்றாகப் பறந்து போனதைக் கண்டு வியந்து போனேன். எரிகற்களாக இருந்தால் அவை செங்குத்தாகத் தான் பயணித்திருக்கும். நாம் கண்ட ஒளிப் பொருள்களின் கிடைக்கோட்டுப் பயணமும், அவற்றின் பயணவேகத்தில் இருந்த நிதானமும் அவற்றைப் பறக்கும் தட்டுகளாய்த்; தெளிவாய் இனங்காட்டின. இதையெல்லாம் நீங்கள் நம்பவா போகிறீர்கள்? முக்கியமான ஒன்றை மட்டும் சொல்லி விடுகிறேன். கடல் பயணங்கள் செம்மையாவதற்கு முன்பு, கடல் தாண்டி இன்னொரு நிலப் பரப்பு இருப்பதையும், அங்கு மக்கள் வாழ்வதையும் யாரும் நம்பியிருக்கவில்லை. பின்னர் துணிந்த சிலர் கடல் பயணம் செய்து பிற கண்டங்களைக் கண்டு பிடித்தார்கள். அதன் பின்பு அவர்கள் படைபலத்தோடு அங்கு சென்று அங்குள்ளவர்களை அழித்து அல்லது அடக்கி அந்தப் பிரதேசத்தைத் தமக்காக்கிக் கொண்டார்கள். இது நாம் அறிய நடந்த வரலாறு. அது போலத்தான் ஆகாய வழியாகச் சென்று மக்கள் வாழும் இன்னொரு கிரகத்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் இன்று முயன்று வருகிறார்கள். இக் காரியத்தை நாம் மட்டுமல்ல வேற்றுக் கிரகவாசிகளும் செய்வார்கள் என்பது திண்ணம். அவர்கள் நம்மை விட அறிவாளிகளாகவும், பலசாலிகளாகவும் இருக்கும் பட்சத்தில் எமது பூமியை அழித்தோ, அடிமையாக்கியோ கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதுபற்றித்தான் இன்றைய வல்லரசுகள் பயப்படுகின்றன. அப்போதாவது நம் மக்கள் மத்தியில் இருக்கும் இன, மத, ஜாதிச் சண்டைகள் முடிகிறதா என்று பார்ப்போம். https://tamilwin.com/article/sri-lankan-jayaraj-kambavarithi-srilanka-political-1709348032
  17. தனிக்காட்டு ராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
  18. ஓவரா குதிக்ககாதிங்க முடிந்தால் ஒரு இரண்டு கிழமைக்கு வாகன இறக்குமதி தடையை சிங்கள அரசியல்வாதிகள் எடுக்கட்டும் பார்க்கலாம் அதன் பின் சிம்பாவே நாட்டு பணம் போல் சொறி லங்கன் ரூபாயை மாட்டு வண்டிலில் தான் கொண்டு திரிய வேண்டி வரும் . வரும் வரத்தான் போகுது அப்போது வேறு பெயரில் நீங்கள் வராமல் இருந்தால் சரி .
  19. இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தலைவர் மற்றும் செயலாளர் தெரிவுகளை இரத்துசெய்ய உடன்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவானது இன்றையதினம்(29.02.2024) திருகோணமலை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேலும், '' கடந்தமாதம் 21ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெற்ற பொதுச்சபை கூட்ட தெரிவுகளை இரத்துசெய்யக்கோரி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி மனுதாரர்களின் கோரிக்கைக்கு அமைவாகவும், கட்சியின் நலன்கருதியும் குறித்த கோரிக்கைகளுக்கு நாங்கள் உடன்பட்டோம். இதற்கு காரணம் இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினை மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனை. இந்த வழக்கு நீடிக்குமாக இருந்தால் அது சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும். இதன்படி வழக்கானது எதிர்வரும் ஏப்ரல்,05ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . மேலும், வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றுக்கு முன்னிலையாகியுள்ள நிலையில் தமது கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். எனினும் எம். எ சுமந்திரன் நீதிமன்றுக்கு முன்னிலையாகாவில்லை. அவரது நிலைப்பாடு தொடர்பில் கலந்தாலோசித்து மேலதிக முடிவை எடுப்போம்." என்றார். கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு மேலும், இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக பீற்றர் இளஞ்செழியனால் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதையடுத்து எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியமாநாடு கடந்த 19 ஆம் திகதி நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தநிலையில், அதற்குத் தடை விதிக்கக்கோரி யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இருவேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவில் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இந்தமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. https://tamilwin.com/article/election-of-the-president-of-the-canceled-tna-1709187542
  20. உணவை குறைத்து மின் கட்டணம் செலுத்தும் நிலைமைக்கு தாம் வந்துள்ளதாக கொழும்பிலுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பதினையாயிரத்திற்கும் மேலாக தமக்கு மின் கட்டணம் வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். வட்டிக்கு பணம் பெற்று மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமது கவலையை தெரிவித்துள்ளனர். ஒரு இலட்சம் ரூபா கூட தற்போதைய காலத்தில் போதவில்லை. வீட்டு வாடகை, நீர் கட்டணம், மின் கட்டணம், உணவு, பிள்ளைகளின் படிப்பு என எதனையுமே சமாளிக்க முடியவில்லை என கூறியுள்ளனர். https://tamilwin.com/article/electricity-bill-today-in-sri-lanka-1709122250

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.