Everything posted by பெருமாள்
-
அபுதாபியில் இந்துக் கோயில்
கிழமைக்கு 14௦ பவுனுக்கு டீசல் அடித்த நமக்கு தற்போது 7௦ மைலுக்கு வெறும் 1.5௦ பவுன்ஸ் தான் இரவு 12க்கு பிறகு சிலவு எல்லாம் கரண்டு கார்கள் செய்த வேலை நன்றி மீரா . உலகில் அல்லா மட்டுமே கடவுள் எனும் கோசம் வராது பழையபடி ஒட்டகம் மேய்ப்பது நல்ல தொழில் .லித்தியம் 9௦வீத இருப்பு தற்போது மட்டும் அவுசில் மட்டுமே கண்டறியபட்டுள்ளது சிலவேளை லித்தியம் பற்றரிகளை விட மென்மையான உலோகம் கண்டு பிடிக்கும் மட்டும் அவுஸ்ரேலியாதான் லித்தியம் பர்றரிகளின் வல்லரசு .
-
இலங்கை இராணுவத்தில் ஏற்படும் திடீர் மாற்றம்
இலங்கையில் ஆயுத படையினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையை 135000 ஆக இந்த வருட இறுதிக்குள் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சுமார் 150000 இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பகுதியாக குறைக்கப்படும் என கடந்த ஆண்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்திருந்தார். 2030 ஆண்டில் இராணுவத்தின் எண்ணிக்கை இதற்கமைய, எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் இராணுவ படையினரின் எண்ணிக்கை ஒரு இலட்சமாக பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி கொள்கைகளின் அடிப்படையில் இவ்வாறு படைத்தரப்பு குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு அளவில் தொழில்நுட்ப ரீதியாகவும் மூலோபாய ரீதியாகவும் சமநிலையான பாதுகாப்பு படை ஒன்றை உருவாக்கும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு அளவில் கடற்படை மற்றும் விமானப்படையினரின் எண்ணிக்கை 35000 ஆக குறைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இராணுவ படைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கை புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக எதிர்வரும் சில மாதங்களில் இராணுவத்தின் எண்ணிக்கை 35000னால் குறைவடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விமானப்படையினர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் துஷான் விஜயசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, கடற்படைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடரும் எனவும் ஓய்வு பெற்றுக்கொள்ளும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் புதிதாக இணைத்துக்கொள்ளப்படுவோரின் எண்ணிக்கையிலும் வித்தியாசம் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இதனால் தொடர்ச்சியாக கடற்படைக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கடற்படை பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசிங்க கூறியுள்ளார். இலங்கையில் தொழிற்சங்க போராட்டங்கள் நடைபெறும் போது படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படுகின்றது. எனினும் படையினரின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு ஏனைய நடவடிக்கைகளில் படையினரை ஈடுபடுத்த முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/tri-forces-halt-general-recruitment-1707878229 இந்த படம் வெளிவந்த இணையம் https://www.adaderana.lk/news.php?nid=91365அதில் வந்த செய்தியின் சுருக்கம் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலும் பாகிஸ்தானின் கப்பலும் ஒரே நேரத்தில் இலங்கைக்கு வருகின்றன. நேரம் கிடைத்தால் தமிழாக்கம் செய்து போடுகிறேன் . கொப்பி பண்ணிய தமிழ் விண்ணுக்கு அதன் ஆங்கில மொழியாக்கம் தெரியவில்லை எல்லாம் ai செய்த வேலை .😀
-
சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த தமிழர் தளபதி
தலைவர் என்பதுக்கு அர்த்தம் வேறாகி போவது நமது அரசியலில் வேறாகி போகும் அவ்வளவுக்கு நரியிலும் கேவலமான சுமத்திரன் இன்னும் அரசியலில் இருந்து எல்லாரையும் குழப்புவார் இந்த கருத்து வெட்டப்பட்டாலும் நடக்கபோவது அதுதான் இருந்து பாருங்கள் ஒவ்வொரு விடயத்திலும் ஏதாவது ஒரு குழப்பத்தை உருவாக்கி கொண்டு இருப்பார் சுமத்திரன் .
-
செந்தில் பாலாஜி கைதாகி 8 மாதம் கழித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? திமுக வியூகம் என்ன?
பாரதிய ஜனதாவில் இருந்து பிரிந்த ஒருவர பெயர் sri வீர ரெட்டி முதன் முதலா தேர்தலில் போட்டி போடுகிறார்கள் அவர்கள் விவசாயி சின்னத்தை கேட்டு இருக்கிறார்கள் கொடுத்தார் களா இல்லியா என்பது இன்னும் உறுதியாகவில்லை நாளை தெரியும் என்கிறார்கள் . இதில் பகிடி என்னவென்றால் இவர்கள் முதலில் கேட்டது புலி சின்னம் தேர்தல் ஆணையம் உயிருடன் உள்ள சின்னம் கொடுக்க முடியாது விவசாயி சின்னத்தை ஒதுக்கியது அந்த சின்னத்தில் இரண்டு முறை போட்டியிட்டு வருமான கணக்கு வழக்கு விபரங்கள் தேர்தல் ஆணையகத்துக்கு சரியாக காட்டபட்டு இருந்தால் அந்த கட்சியின் சின்னத்தை மற்றைய லெட்டர் பேடு கட்சிக்கு எழுந்தமானமாய் கொடுக்க முடியாது . கதை இங்கு வேறு நான் நினைக்கிறன் அந்த சின்னத்தில் ஐந்து முறைக்கு மேல் போட்டியிட்டுள்ளார்கள் கடைசியாக 3௦ லட்சம் வாக்களார்கள் அந்த சின்னத்துக்கு வாக்கு அளித்துள்ளார்கள் . அது சரி சமிபத்தில் சீமானின் தம்பிகளின் வீடுகளில் nia ஏன் ரெய்டு அடித்தது அதுவும் இப்படியான தேர்தல் நேரம் ? இப்ப உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறன் . அதுசரி சீமானின் தம்பி பையன் இந்த பக்கம் வருவதில் லையா ? கொசிப்பு அந்த sri வீர ரெட்டி தமிழக முக்கிய அரசியல்வாதியின் உறவினர் என்கிறார்கள் செய்தி உறுதிபடுதப்டவில்லை நாளை லண்டன் அதிகாலை நேரம் செய்தி உண்மைத்தன்மை வெளிவரும் என்கிறார்கள் உண்மையானால் தமிழ்நாடு சுனமியாகும் .
-
செந்தில் பாலாஜி கைதாகி 8 மாதம் கழித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? திமுக வியூகம் என்ன?
பிரசாந்த் கிஷோர் இவருடைய ஆருடம் கணிப்பு தப்புவதில்லை அவர் சொல்வது போல் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் கதை கந்தல்தான் ஏன் சீமான் திருமா போன்றவர்களின் நிலையும் முதலில் இருந்து தொடங்கவேண்டி வரும் .
-
செந்தில் பாலாஜி கைதாகி 8 மாதம் கழித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? திமுக வியூகம் என்ன?
- தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன்
நான் சொல்வது ஒரு போதும் உங்களுக்கு புரியபோவதில்லை நீங்க சொல்வது எனக்கு புரிந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் நடக்க போவதில்லை காரணம் வேறு ஒரு தொழில் நுட்ப்ப பதிவில் அதை பற்றி பதிகிறேன் .தற்போது லண்டன் நேரம் 2.௦9 கோசானையும் நாதமுணியும் ஒன்றாக காணமல் போகிறார்கள் என்று பல யாழ்கள நண்பர்கள் கேள்விக்கு முதலில் விடையை கண்டு பிடியுங்க ? நாளை சந்திப்போம்.- தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன்
- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
என்ன ஆதாரம் புலிகள் தான் அழைத்தார்கள் என்பதுக்கு ? புலி இல்லா நேரம் எலி கூட சிங்கம்தான் . அந்த நேரம் கள்ள பியர் யாபாரம் செய்தவன் கூட செல்லப்பாவின் பாட்டுக்கள் தான் கேட்கணும் என்று சொல்லி வான்களில் சப்ளை செய்தார்கள் டிரைவரா வந்தவன் உணர்ச்சி பொங்க முதலாளிக்கு உழைத்து கொடுத்தான் இன்று அவன் வாடகை வீட்டில் முதலாளி வில்லோ கவுசில் .- செந்தில் பாலாஜி கைதாகி 8 மாதம் கழித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? திமுக வியூகம் என்ன?
ஆரம்ப கணிப்புக்களில் கடைசி நேர கருத்து கணிப்புக்கள் தல கீலாக்கிய பல சம்பவங்கள் உள்ளன சங்கி உள்ளே வந்தால் அவ்வளவுதான் தமிழ்நாடு .சீமான் மீண்டும் மீண்டும் கூட்டனி இல்லை இல்லை என்கிறார் அதுதான் அவரின் பலவீனம் . விஜய் என்ற கூத்தாடியை உதயநிதிக்கு பதிலா பல லட்சம் கோடி கொடுத்து அரசியலில் உள்ளே விட்டு இருக்கிறார்கள் .பொறுத்து இருந்து பார்ப்பம் பொப் கொர்னுடன் .- டெல்லியை நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு
- கருணாவின் ஈச்சையடி பண்ணையில் இரு சடலங்கள் மீட்பு
தமிழ் வின்னுக்கு துரோகி முரளிதரன் இன்னமும் கருணா அம்மானாக தெரிகிறார் .- இலங்கை போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ள கனடா
கனடாவின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லிவ்ரே இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார். கனடாவின் தமிழ் ஊடகங்களுக்கு அவர் அளித்த நேர்காணல்களிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிமன்றம் ஆகியவற்றில் ராஜபக்ச ஆட்சியில் நடைபெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளோம். திட்டமிடப்பட்ட சதி மேலும், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தமிழினத்தை அழிப்பதற்கான திட்டமிடப்பட்ட சதி என்பதை ஐ.நா உட்பட சர்வதேச அரங்குகளில் முன்னிறுத்துவோம். அத்துடன், குறித்த வழக்கினை நடாத்துவதற்காக கனடாவின் வெளிவிவகார விடயங்களுக்கான வழக்கறிஞர்களை நாங்கள் வழிநடத்தவுள்ளோம்” என தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/canadian-politician-against-sri-lankan-war-crimes-1707838457- செந்தில் பாலாஜி கைதாகி 8 மாதம் கழித்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? திமுக வியூகம் என்ன?
இனி திமுகா என்ற கட்சி தமிழ்நாட்டில் இருக்குமா என்பதே சந்தேகம்தான் குடும்ப ஆட்ச்சிக்கு எதிராக கட்சிக்காரர்களே வெம்பி கொண்டு இருக்கிறார்கள் 2௦௦க்கு காசுக்கு போனவர்களே புரியாணி அண்டாவை துக்கிக்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் . வரும் தேர்தலில் அண்ணாமலை பாரிய அறுவடையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார் போற போக்கை பார்த்தால் ஸ்டாலின் சிறை செல்வதை தடுக்க முடியாது போல் உள்ளது .- கருணாவின் ஈச்சையடி பண்ணையில் இரு சடலங்கள் மீட்பு
மட்டக்களப்பு - வாழைச்சேனை, ஈச்சையடி பகுதியில் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (13.2.2024) இடம்பெற்றுள்ளதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரான் பேரல்லாவெளி பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் கருணா அம்மானுக்கு சொந்தமான பண்ணையில் வயல் வேலைக்காக நின்ற இருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளனர். சின்ன நுரைச்சோலை - குடும்பிமலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரும், அவரது மருமகனான புலிபாய்ந்த கல்லைச் சேர்ந்த 21 வயதுடைய நபரும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை குறித்த பண்ணையை வாழைச்சேனையைச் சேர்ந்த ஒருவர் குத்தகை அடிப்படையில் நிர்வகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். https://tamilwin.com/article/two-men-killed-in-electric-fence-1707821150- தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன்
ஈழம் என்ன கிடைக்கவேண்டிய தீர்வே கிடைக்கப்போவதில்லை கண்ணுக்கு எட்டிய தூரம் மட்டும் கானல் நீர்தான் தெரியுது .உங்கள் சுமத்திரன் தமிழருக்கு அரசியல் செய்யுறன் என்று எதிர் காலத்தில் குழப்ப அரசியல் தான் வழக்கம்போல செய்ய போறார் அதனால் அங்குள்ள் மக்கள் மேலும் மேலும் மோசமாக பாதிக்கப்பட போகிறார்கள் .- தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன்
- தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன்
முதலில் அந்த வெக்கை நாட்டுக்குள் ஏனையா கோட்டும் சூட்டும் யாரை எமாத்த ? இந்த உடுப்புகள் ? ரணிலையும் தான் சேர்த்து கேள்வி கேட்கிறேன் ? மக்கள் முன் தாங்கள் படித்தவர்கள் என்று காட்டதானே இந்த வேஷம் ? இனப்பிரச்சனைக்கு தீர்வு இல்லா விட்டால் இலங்கை ஆதால பாதாளத்துக்குள் இதை உருவாக்கியவர்கள் வேறு யாரோ ஆனால் இந்த சிங்களத்துக்கு கழுvi விடும் சுமத்திரன் ரணில் ஆசியுடன் சொல்வதுதான் கேவலம் .- தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன்
- தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன்
- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
மேலே உள்ள படங்களில் உள்ள ஒழுக்கமான மனிதர்களும் யாழ்ப்பாணத்தில் தான் வாழ்ந்தார்கள் .அதே முற்ற வெளி , தலைவரின் சுதுமலை பிரகடனத்தில் நம் மக்கள் நிற்கும் நிலையை பாருங்களேன் எத்தனை நேர்த்தி..!- யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
யாழில் நடைபெற்று வரும் தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி சற்று நேரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் முன்னனி பாடகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் பங்குபற்றும் குறித்த நிகழ்ச்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில் இன்று (09.02.2024) நடைபெற்றுள்ளது. சனநெருக்கடி இதன்போது இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த மக்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றதால் அங்கு சனநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் ஒருவர் மயக்கமடைந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து ஏற்பட்ட குழப்ப நிலையை பொலிஸார் கட்டுப்படுத்தும் வரையில் இசை நிகழ்ச்சியானது சில நிமிடங்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/hariharan-musical-show-in-jaffna-1707497246- இந்திய துணை உயர்ஸ்தானிகருக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு!
இந்திய துணை உயர்ஸ்தானிகர் டாக்டர். சத்யஞ்சல் பாண்டே அவர்களுக்கும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இடையில்லான சந்திப்போன்று இடம்பெற்றுள்ளது. இதில் வட கிழக்கில் குறிப்பாக கிழக்கில் இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட இருக்கும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சனை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், த. கலையரசன், முன்னாள் மாநகர முதல்வர் தி. சரவணபவன், உட்பட மட்டக்களப்பு தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர், செயலாளர் மற்றும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1368537- உங்க கிட்னியை புதுசா வைத்திருக்க இந்த பதிவை படிங்க..!
நன்றி இணைப்புக்கு தமிழன்பன் .- சர்வதேசத்தில் சாதிக்கும் இலங்கையர்களுக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்காவின் முன்னிலை விஞ்ஞானி சிவா சிவானந்தனின் வேண்டுகோள்
யாழ்கள கருத்துக்கள் எதை நோக்கி போகின்றன என்பதுக்கு இந்த திரியே சாட்சி . அந்த மனுசன் சொல்லவருவதையாவது புரிந்துகொள்ள முயற்சிக்காமல் ................. தகப்பன் வல்வையை சேர்ந்தவர் . Sivananthan was born in Madduvil South near Chavakachcheri in northern Ceylon.[1] His father was a Tamil scholar from Valvettithurai and his mother was teacher of religion and science.[1] He was educated at Saraswathi Maha Vidyalayam, Drieberg College and Jaffna Hindu College (1968–75).[1][2][3] After school he joined the University of Peradeniya's Science Faculty in 1976, graduating in 1980 with a BS degree in physics.[1][3][ https://en.wikipedia.org/wiki/Siva_Sivananthan - தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.