Everything posted by பெருமாள்
-
ரஷ்யா - உக்ரைன் போரில் இலங்கை படை
ஒரே நாடு ஒரே இனம் என்ற கூட்டம் கடைசியில் எப்படி இருக்கினம் 😃இன்னும் இருக்கு புத்தரை காவிக்கொண்டு இருங்க .
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
சார் என்பது பிழையான தகவலை தந்ததுக்கு வருந்துகிறேன் மன்னிக்கவும் kavi அருணாசலம் ஐயா . வழக்கம்போல் வேலை அவசரத்தில் எனக்கும் இந்த சார் சார் என்று போட்டு விட்டு வேலையை முடிக்காமல் இருப்பது பிடிக்காது அந்த வெறுப்பில் இந்த சார் வெறுப்பை உண்மை என்று நம்பி போட்டு விட்டேன் பக்ட் செக் செய்யாமல் வேலை அவசரத்தில் இனி நானும் 5 ௦ வயதில் பென்சன் எடுத்தால் இந்த பக்ட் செக் செய்யலாமோ என்று ஒரு யோசனை உருவாக்கியவர்களுக்கு நன்றி .
-
ரஷ்யா - உக்ரைன் போரில் இலங்கை படை
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போரில் இலங்கை படையினர் பங்களிப்பை வழங்கி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது இலங்கையின் ஆயுதப்படையினர் கூலிப்படையாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய படையினரின் சார்பாகவும் உக்கரையின் படையினரின் சார்பாகவும் பொருளாதார நலன்களினால் சுமார் நூற்றுக்கணக்கான இலங்கை படையினர் பாதுகாப்பு முன்னரங்கப் பகுதிகளில் போரில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இலங்கையின் பொருளாதார நெருக்கடி இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான முன்னாள் படை வீரர்கள் இவ்வாறு ரஷ்யா மற்றும் உக்கிரேன் சார்பில் போரில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை இராணுவத்திலிருந்து விலகி ரஷ்ய படையில் இணைந்து கொண்ட படைவீரர் ஒருவர் அண்மையில் உயிரிழந்திருந்தமை குறித்த தகவல்களை ஊடகம் ஒன்று அறிக்கையிட்டிருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டில் இலங்கை அரச படையினர் பெரும் எண்ணிக்கையிலான போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. தமிழர்கள் மீது பாரியளவில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டதாகவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் குடியுரிமை மற்றும் மாதாந்தம் 2000 டொலர் சம்பளம் ஆகிய நலன்களை கருத்திற் கொண்டு பல இலங்கை படையினர் ரஷ்ய போரில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் ரஷ்யாவில் உயிரிழந்ததாக கூறப்படும் இலங்கையர், இலங்கையில் இராணுவத்தில் இணைந்திருந்த போது வெறும் 20,000 ரூபா சம்பளத்தையே பெற்றுக்கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இரண்டு இலங்கையர்கள் அண்மையில் ரஷ்யாவின் Dontesk பகுதியில் கொல்லப்பட்டதாகவும், கடந்த ஆண்டு இறுதியில் மூன்று இலங்கையர்கள் உக்ரைனில் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பதினைந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் உலகில் சனத்தொகையின் சதவீதத்தின் அடிப்படையில் கூடுதல் எண்ணிக்கையிலான படை பலத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்கின்றது. கடந்த 2018ஆம் ஆண்டில் இலங்கையில் படைவீரர்களின் எண்ணிக்கை 317,000 என உலக வங்கி அறிக்கையிட்டிருந்ததுடன் இது பிரித்தானியாவின் வழயைமான படைவீரர்களின் எண்ணிக்கையை விடவும் இரட்டிப்பு எண்ணிக்கையாகும். தமிழர் தாயகப் பிரதேசங்களின் சில இடங்களில் இரண்டு சிவிலியனுக்கு ஒரு படைவீரர் என்ற அடிப்படையில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். ரஷ்ய இராணுவத்தின் உறுதி கடந்த ஆண்டில் ரஷ்ய இராணுவம் வெளிநாட்டு படையினரை ஆட் சேர்ப்பதற்கான திட்டத்தை அறிவித்திருந்ததுடன் ரஷ்ய கடவுச்சீட்டை துரித கதியில் பெற்றுக்கொடுக்கவும், மாதாந்தம் 2000 டொலர் சம்பளம் வழங்கவும் உறுதிமொழி வழங்கியுள்ளது. இந்நிலையில் ஓய்வு பெற்றுக்கொண்ட படைவீரர்கள் ரஷ்ய படையில் இணைந்து கொண்டுள்ளதாகவும் மேலும் பலர் இணைந்து கொள்ள உள்ளதாகவும் அரச புலனாய்வுப் பிரிவினர் விசேட புலனாய்வு அறிக்கை ஒன்றை பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்னவிடம் ஒப்படைத்துள்ளனர். இலங்கை இராணுவப் படையில் கடமையாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு இராணுவத்தில் இணைத்து கொள்வதற்கான முகவர்களாக தொழிற்பட்டு வருவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தினை நடத்திச் சென்ற இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதுடன் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் சுற்றுலா வீசாக்கள் மூலம் சென்று படைகளில் இணைந்து கொள்வதாகத் குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் முதலில் இந்தியாவின் டெல்லிக்கு சென்று அங்கிருந்து போலந்து சென்று அசர்பைஜான் வழியாக உக்ரைன் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/sri-lankan-army-in-russia-ukraine-war-1712264758?itm_source=parsely-api
-
முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
கிண்ணியாவில் பிள்ளயார் கோவில் இடித்து புத்தர் சிலை வைக்கும் போது உங்கடை பம்மந்தர் கொழும்பு இலவசமாய் கிடைக்கும் வீட்டுக்கு வாய திறந்து கொண்டு கிடந்தவர் கிண்ணியா பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை ஏன் இதுவே ஒரு முஸ்லிம் இடத்தில் நடந்தால் அவங்கடை அரசியல்வாதிகள் சும்மா இருப்பார்களா ?
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
பிழையை திருத்தியதுக்கு நன்றி
-
முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
என்னத்துக்கு கருத்து இப்படி வந்தது என்றே தெரியாமல் நீங்கள் மட்டுமே யாழில் கருத்து எழுதுவதாக நினைக்க வேண்டாம் பிழைகளை சுட்டி காட்டுவது பிழை என்கிறிர்கள் .
-
நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்
நன்றி ரசொதரனுக்கு . சார் என்பதன் முழு அர்த்தம் Slave i remainஇதன் பின் சார் என்று எழுதுவது நல்லதா கெட்டதா நீங்களே உணர்ந்து கொள்ளுங்க ? கவி அருணாசலம் ஐயா கனகாலம் தமிழ்நாட்டில் இருந்தவர் போல் உள்ளது .
-
முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
எல்லாவிடமும் பிழைகள் உள்ளது அதுக்காக நடக்க வேண்டியதை பார்க்கணும் அதை விட்டு சொறிந்து கொட்டிக்கொண்டு இருக்க கூடாது .
-
முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
சம்பந்தர் என்பவர் யார் என்றாவது தெரியுமா ? மேலே புத்தர் சிலைமற்றைய சமயத்தவர் பக்கம் வைக்க போகாயினம் காரணம் அந்த இனத்தினில் உங்களை போல் ஆட்கள் இல்லை .
-
முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
சமபந்தர் பிழை வேண்டும் என்றே .
-
முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்
அது சிங்கள் அமைச்சர்களின் வேலையை இவர் ஏன் கூவி குலவை அடிக்கிறார் ? சவால் விடுகிறேன் முடிந்தால் முஸ்லிம் கிறிஸ்த்துவ ஆலயங்களுக்கு அருகில் புத்தர் சிலையை வைக்கட்டும் பார்க்கலாம் முடியாது அவர்களால் . ஆனால் திருகோனமலையில் பார்க்கும் இடமெல்லாம் புத்தர் எல்லாம் எங்கடை சமபந்தர் எனும் கோடாலி காம்பின் அனுசாரனை 1௦8 சிவலிங்கத்துக்கு வெறும் 16 பேரே உள்ள சிங்களவர்கள் எதிர்ப்பு இவ்வளவுக்கும் காரணம் சுமத்திரன் எனும் ரணிலின் பொம்மை .
-
Wadge Bank - இந்தியா தட்டி தூக்கிய கடல் பொக்கிஷம்... "மிரள வைக்கும் இந்திராவின் ராஜதந்திரம்.."
அட பிச்சை கார சிங்கள கூட்டம் தமிழர்களின் அனுமதி இன்றி அப்பவே இந்தியாவுக்கு தமிழர்களின் முக்கிய மீன் வளம் உருவாகும் கடல் பூமியை தாரை வார்த்து விட்டார்களா ? அதுக்காக சர்வேதேச தடையில் உள்ள ரோலர்களை வைத்து அந்த மீன் விளையும் கருவறையை நாசம் பண்ணகூடாது என்ற விடயம் உள்ளதல்லவா .
-
அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
இந்த தொடரில் மிக முக்கிய விடயம் என்றால் இந்த காலத்தில் இந்த தொடரை சொல்லுபவர்கள் எழுதுபவர்கள் தங்களின் அரசியல் கட்சி நடை முறைகளுக்கு ஏற்ப வளைத்து நெளித்து ஓட்டுகிறார்கள் உண்மையான கொப்பி நூலகத்தில் உள்ளது .
-
அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
இந்த தொடரை முதலில் இங்கு யாழில் மட்டுகளின் அனுமதியுடன் ஆரம்பித்தேன் ஆரமபத்தில் என்னிடம் இருந்த சேகரிப்புகள் இடம் இருந்தே எழுதியதுக்கு காரணம் அப்போதைய புலி எதிர் பாளர்களின் புலி வரலாறை தவறாக எழுத தொடங்கியது ஆனால் காலம் செல்ல பலபக்கத்தால் நெருக்கடிக்குக்கு உள்ளாகி அத்தொடரை நிறுத்தவேண்டிய நிலைக்கு ஆளானேன் 6௦ வயதுக்கு மேல் எனக்கு இந்த பூமியில் வாழ்வுண்டால் நிறைய தொடர்கள் வெளி வரும் . https://yarl.com/forum3/topic/149916-அல்பிரட்-துரையப்பா-முதல்-காமினி-வரை/
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுமே அக்காவுக்கு .
-
வடக்கில் பதிவாகிய அனல் பறக்கும் வெப்பம்!
போரில் காணாமல் போனதில் மரங்களும் உள்ளது போல் இருக்கு .
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
போர்டிங் கவுண்டரில் டிக்கெட் மாற்றம் பண்ண முடியுமா என்று கேட்டு பாருங்க ஆட்கள் குறைவாக இருந்தால் குறைந்த விலையில் முதல் வகுப்பு கிடைக்கும் மிக நீண்ட பயணம் என்றால் மிக நல்லது . இப்படி பெற்று கொண்டது பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன் இப்ப அந்த சூட்சுமம் வேலை செய்யுமா தெரியலை .
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பயண வருசை குறைவாக இருந்தால் போர்டிங் பாஸ் எடுக்கையில் ஒரு 1௦௦ இருநுறு பவுன் உடன் அப்டேட் முதல்வகுப்பு கிடைக்கும் நமக்கு எங்கே என்றாலும் நித்திரை வந்துடும் ஓரிரு முறை ஆசைக்கு ஏறி இறங்கியதுடன் சரி மற்றபடி எக்கனாமிக் ல் பெல்ட் போட்டால் குரங்குக்கு பெல்ட் போட்டு கட்டியது போல் மனபிராந்தி உருவாகுவதை தவிர்க்க முடியாது 😃 அவர்களுக்கு மணித்தியாலம் ஒன்றுக்கு 12௦ பவுன் வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கு மேல் வரும் வருமானத்துக்கு முதல் வகுப்பு சிலவை காட்டினால் வரி விலக்கு கிடைக்கும் தானே ........
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஊருக்கு போய் வருபவர்களில் பலவகை இருக்குது . ஊரில் இருந்து வியபாரம் செய்பவர்கள் அடிக்கடி போய் வருவார்கள் முட்டை போட்ட ஆமை போல் அமைதியாக இருப்பார்கள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது போனின் ரிங் சத்த வேறு பாடு மூலமே ஆள் எங்கு நிக்கிறார் என்று தெரியும் . இன்னொரு வகை முப்பது நாப்பது வருஷம் கழிந்து ஊர் பக்கம் போனவர்கள் அப்படியானவர்கள் ஊரை பார்த்த புளுகில் அவர்கள் ஏதாவது வாட்சப் குழுமத்தில் இருந்தால் அந்த குழுமத்தில் சிங்கன் ஊரில் நிக்கும் காலம்மட்டும் பனாட்டு வேப்பமரம் பணம் கிழங்கு கருவாடு எல்லாம் இலவச ஒளிபரப்பில் படமாய் கொட்டி மண்டை காய வைப்பார்கள் .குழந்தையின் ஆனந்த ஆட்டத்தை ரசிப்பது போல் அமைதியாக இருந்துட வேண்டியதுதான் 😀 அடுத்த கூட்டம் ஊரைபார்த்த புளுகில் தாங்கள் ஊரில் இருக்கும்மட்டும் கனவு இடங்களின் விலையை பார்த்து உடனே காணியை வேண்டி மூன்று மாடி வீடும் கட்டி கமராவை பூட்டி விட்டு இங்கு வந்து கமராவுக்குள் தங்கள் வீட்டை பார்த்து ஆனந்தப்படும் கூட்டம் இருக்குது அங்கிருக்கும் வசதியில்லாத ஆரையாவது குடியேற்றி இருக்கலாமே என்று கேட்டால் ஓம் இரவு வந்தால் லைட் போட ஒரு ஆளை வேலைக்கு வைத்து இருக்கிறேன் என்பார் .😀இரண்டு மூன்று வருடத்துக்கு ஒருக்கா ஊர் போறவர்களுக்கு ஏன் வீடு தேவை? அடுத்தது இங்கிருக்கும் மட்டும் வாட்சப் குழுமத்தில் புலி பற்றி எதாவது செய்தி வந்தால் வீழ்ந்து விடாத வீரம் அப்படி இப்படி உசுப்பேத்தும் ஸ்ட்டேட் போட்டு கொண்டு இருப்பவர் ஊர் போய் வந்த வுடன் புலி புலித்தலைமை எல்லாத்தையும் போட்டு திட்டும் வகை இந்த சேர்க்கையில் யாழிலும் ஒரு சிலர் உள்ளனர் . ஆனால் எல்லாத்திலும் ஒரு மோசமான கூட்டம் உண்டு அவர்கள்தான் நீங்கள் சொல்லும் ஆட்கள் ஊரில் இருபவர்களுக்கு படம் காட்டும் கூட்டம் அனேகமாக அவர்கள் சோசல் பணத்தில் அரசின் உதவிகளை பெற்றுகொள்பவர்கள் இவர்கள் ஊர் போய் வந்தால் அங்கு அப்படி இப்படி ஆகா ஓகோ என்று இலங்கையரசின் உத்தியோகப்பற்று அற்ற உல்லாசபயண விளம்பர முகவர் ஆட்டம் ஆட்டம் காட்டுவார்கள் .அத்துடன் அடிக்கடி போய் வருவார்கள் . இதுக்குள் @goshan_cheஎல்லாத்தையும் ஒரு செய்தியாளர் போல் கவனிக்க முயற்சி பண்ணியிருக்கார் . இப்ப விடயம் என்னவென்றால் நீங்கள் சொல்வது போல் ஒன்றுக்கு ஒன்று வந்தால் யார் போவார்கள் அரச உதவி கூட்டம் மட்டுமே போகும் காரணம் அதுகளுக்கு இங்கு சிலவு செய்ய முடியாது . அடுத்த உண்மை எந்த ஒரு காலமும் யுரோவுக்கு அல்லது பவுனுக்கு நிகராக இலங்கை நாணயம் வலுபெற போவதில்லை காரணம் இலங்கையை சுற்றி கடல் மாத்திரம் அல்ல கடனும் இருக்கிறது.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் இன்று இலங்கை வருகின்றனர்
சந்தோசம் சொந்த நாடு வந்ததுக்கு .
-
ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை வீசக்கூடும்” – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
ஏப்ரல் இரண்டா ஆகி விட்டது லண்டன் இன்னும் குளிர் போகவில்லை .
-
அமெரிக்காவில் மோதிய கப்பலில் இலங்கைக்கு எடுத்து வரப்பட இருந்தவை ஆபத்தான கழிவுப் பொருட்கள்
உங்களுக்கு தெரிந்துது அவ்வளவுதான் வந்து சேர்ந்த கப்பல்களின் கொண்டிய்யினர் களில் என்னதான் இருக்கு என்று வெளிப்படையாக சொல்ல சொல்லுங்க அதன் பின் நீங்களும் சொறிலங்கா சொல்லுவீர்கள் .😀@goshan_cheUNKALUKKUM THAAN .
-
அமெரிக்காவில் மோதிய கப்பலில் இலங்கைக்கு எடுத்து வரப்பட இருந்தவை ஆபத்தான கழிவுப் பொருட்கள்
இதைத்தானே பலமுறை சொல்லியுள்ளேன் இந்த நவீன உலகின் குப்பை கிடங்கு சொறிலங்கா என்று வக்காடி இல்லைஎன்று கம்பு சுற்றுபவர்கள் நேரில் வரவும் . **
-
ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளுடன் இணைய வேண்டாம்! – பாதுகாப்பு அமைச்சு
அப்ப கதை உண்மைதான் ரைச்சிய படைகளுக்குள் சிங்கள போர்குற்ற படைகள் .