Everything posted by பெருமாள்
-
இலங்கையில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
எல்லாமே இறக்குமதிதான் என்றால் இப்படித்தான் இருக்கும் .
-
ஈழம் அழிந்ததற்கு தி.மு.கவை மட்டும் குறை கூறுகிறார்கள்; ஆனால் உலகளவில் நடந்த அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை! – திருமாவளவன்
என்னதான் குத்தி முறிந்தாலும் இனி திமுக குடும்ப அரசியலை தமிழக மக்கள் ரசிக்கபோவது கிடையாது அதற்கு சேலம் இளைஜர்அணி மாநாடு சாட்சி 2௦௦9கர்மா விடாது துரத்தும் மற்றைய ராகுல் காந்தி ஆட்களே இல்லாத இடத்தை நோக்கி கையை அசைகிறார்.
-
மத்தியகிழக்கை நோக்கி நகர்த்தப்படுகின்ற அமெரிக்க இராணுவம்! ஆரம்பமாகின்றதா அமெரிக்க ஈரான் போர்?
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு யுத்தம் இடம்பெறுவதற்கான மணித்துளிகள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கதாகக் கூறுகின்றார்கள் சில போரியல் நோக்கர்கள். சில தினங்களுக்கு முன்னர் ஜோர்தானில் உள்ள அமெரிக்க காவல் நிலையான டவர்-22 மீது ஈரான் வழிநடாத்தலில் செயற்பட்டுவருகின்ற Kataib Hezbollah என்ற அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டு 40 வீரர்கள் வரையில் காயமடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கா பதில் நடவடிக்கையில் இறங்கும் என்று பரவலாகவே எதிர்பார்க்கப்பட்டுவருகின்றது. https://tamilwin.com/article/us-iran-war-in-middle-east-1706876382
-
சுமந்திரனுக்கு எதிராக வாக்களித்தவர்கள் அச்சத்தில்
சுமந்திரனுக்கு எதிராக வாக்களித்தவர்கள் அச்சத்தில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சுமந்திரன் அவருடைய வாயாலயே சொல்கிறார் நான் நேரடியாக சென்று பேசிய போது 200 பேருக்கு மேற்பட்டவர்கள் எனக்கு வாக்களிப்பதாக உறுதியளித்திருந்தார்கள். ஆனால் 134 வாக்குகள் தான் பதிவாகின என்று, இதிலிருந்து இன்னொரு விடயம் தெரிகிறது. உங்களுக்கு நேரடியாக சொல்வதற்கே பலர் பயப்படுகிறார்களா?அதை வெளிப்படையாக தெரிவிப்பதில் கூட அச்சம் இருக்கின்றதா? என்பது உங்களது வார்த்தைகளிலே தெரிகிறது. https://tamilwin.com/article/those-who-voted-against-sumandran-are-in-fear-1706894506?itm_source=article
-
சிறீதரனுக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டை வெகு விரைவில் நடத்துமாறு கட்சியின் முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். எமது வரலாற்றில் முதன்முறையாக வாக்கெடுப்பினாலே தெரிவு செய்யப்பட்ட தலைவராகிய நீங்கள் வைபவ ரீதியாக பதவியேற்பது முக்கியமான விடயமாகும் என அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், எமது மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் பல்வேறு சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் அது முற்றுப்பள்ளி வைக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே, காலம் தாழ்த்தாது வெகு விரைவில் அந்தப் பகிரங்கப் பொது நிகழ்வை நடத்துமாறு அன்புரிமையோடு நான் கேட்டுக்கொள்கின்றேன் என வலியுறுத்தியுள்ளார். மேலும், ஏற்கனவே நடந்த கட்சியின் நிர்வாகிகள் தெரிவு முடிந்த முடிவு என்பதையும் இக்கடிதத்தில் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். https://tamilwin.com/uk
-
வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவேண்டுமா? இலங்கைக்கு செல்லுங்கள் - இந்தியர்களிற்கு ஜெய்சங்கர் ஆலோசனை
இந்தியர்கள் விடுமுறையைக் கழிப்பதாயின் அதற்கு மிகப் பொருத்தமான இடமாக இலங்கை காணப்படுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் பரிந்துரைத்துள்ளார். இன்று இந்திய முகாமைத்துவக் கழகத்தின் வைபவம் ஒன்றில் கலாநிதி ஜெய்சங்கர் சிறப்பு அதிதியாகக் கலந்த கொண்டு விரிவுரை ஒன்றை நிகழ்த்தினார். இலங்கையுடனான நெருக்கம் அங்கு நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையுடனான நெருக்கம் குறித்து இதன்போது கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கருத்து வெளியிட்டுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கரின் இலங்கை தொடர்பான கருத்து இன்றைய சர்வதேச ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளது.https://tamilwin.com/article/sri-lanka-is-the-best-place-for-indians-1706724269
-
அரச வங்கிகளில் இலட்சக்கணக்கில் கடன் வாங்கி ஏமாற்றிய தொழிலதிபர்கள்
அரசாங்க வங்கிகளில் இலட்சக்கணக்கில் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர்கள் நம் நாட்டில் இருக்கின்றார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வரி நிலுவை தொடர்ந்தும் தெரிவிக்கையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்க மற்றும் இலங்கை மதுவரித் திணைக்களம் போன்ற நிறுவனங்களில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பான உண்மைகளை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அந்த நிறுவனங்களின் மோசடி மற்றும் ஊழல்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும். வரி நிலுவையை வசூலிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதேவேளை, அரசாங்க வங்கிகளில் இலட்சக்கணக்கில் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். கடன் வாங்கிய பின்னர் தொழில்கள் வங்குரோத்தாகி விட்டன என்று காட்டுகிறார்கள். ஆனால் நல்ல இலாபம் ஈட்டும் வேறு தொழில்கள் உள்ளன. எதிர்காலத்தில் இதுபோன்ற வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் அனைவரும் வரி செலுத்துவதையும், வங்கிக் கடன் செலுத்துவதையும் தவிர்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lanka-government-bank-loans-1706709672
-
செங்கடலில் தாக்கப்பட்ட பிரித்தானிய கப்பல்
யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைத் தாக்குதலில் செங்கடல் வழியாகப் பயணித்த பிரித்தானிய எண்ணெய் கப்பல் தீப்பிடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கில் யேமனுக்கும் கிழக்கில் அரபிக்கடலுக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் ஆழமான இடமாகக் கருதப்படும் ஏடன் வளைகுடாவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானின் ஆதரவுடன் மேற்குலக நாடுகளால் சந்தேகிக்கப்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 'மெர்லின் லுவாண்டா' எனப்படும் எண்ணெய்க் கப்பல் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பணியாளர்கள் இந்தியா, ஜப்பான், அமெரிக்க மற்றும் பிரான்ஸ் கடற்படைகளின் உதவியுடன் தீயை அணைத்ததாக பிரித்தானியாவில் உள்ள கப்பல் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்போது 22 இந்தியர்கள் மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கப்பல் பாதுகாப்பாக அருகில் உள்ள துறைமுகத்திற்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமனில் உள்ள தங்கள் தளங்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக இது அமைந்தது என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். https://tamilwin.com/article/marlin-luanda-attacked-by-houthi-1706551918
-
36 மணி நேரம் விரதம் மேற்கொள்ளும் பிரித்தானிய பிரதமர் ரிஷி
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வாரத்துக்கு 36 மணி நேரம் கடுமையான விரதம் ஒன்றைக் கடைப்பிடிப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர் மேலும், திங்கட்கிழமை முழுவதும் எதுவும் சாப்பிடாமலும் வாரந்தோறும், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 5.00 மணி வரை அவர் விரதம் இருப்பதாகவும் நண்பர்கள் கூறியுள்ளனர். கொழும்பில் பிரபல ஹோட்டலில் உணவருந்த சென்ற தம்பதிக்கு அதிர்ச்சி உடல் கட்டுக்கோப்பு இந்நிலையில் ரிஷி சுனக் விரத காலத்தில் தண்ணீர் அல்லது பால் சேர்க்காத காபி மட்டுமே அருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ரிஷி ஒரு இந்து என்கிற முறையில் விரதம் இருக்கும் அதே நேரத்தில், அவரது விரதம் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு உதவுவதால் அவ்வப்போது அவர் விரதம் இருப்பதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். 2022 இல்,ஒரு நேர்காணலில்"நான் இடைப்பட்ட உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறேன், அதனால் பெரும்பாலான நாட்களில் என்னிடம் காலை உணவு எதுவும் இல்லை.” என ரிஷி சுனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/british-prime-minister-rishi-fasted-for-36-hours-1706555343
-
தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
சும்மா உதார் விடாதிங்க சும்மின் பெறுமதியான ஒரு கருத்தை இங்கு சொல்லுங்க பார்ப்பம் ? முக்கிய கடிதத்தில் ஒப்பமிடுவதற்கு மறுத்த சுமந்திரன் ஐசிசி நீதி விசாரணை பொறிமுறை போன்றவற்றில், குறிப்பிட்ட சரத்தில் நாங்கள் கொண்டு வந்த விடயங்களில் சுமந்திரனுக்கு உடன்பாடு இருக்கவில்லை. அதனை அவர் வெளிப்படையாக கூறினார் என்று பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவி தெரிவித்தார். எல்லோரும் கையெழுத்திட்ட அந்த கடிதத்தில் அவருக்கு உடன்பாடு இருக்கவில்லை. மிக முக்கியான அந்த கடிதத்தில் அவர் கையெழுத்திடவில்லை. அவரைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்த எம்.பிக்கள், விக்னேஷ்வரன் ஐயா உள்ளிட்ட அனைவரும் கையெழுத்திட்டிருந்தனர் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவி சுட்டிக்காட்டினார். https://tamilwin.com/article/sumandran-refused-to-sign-the-letter-1706533224
-
தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
எனக்கு நம்பிக்கை இல்லை ஆனால் சுமத்திரன் போல் யுத்த விசாரணை முடிந்து விட்டது இன அழிப்பு நடக்கவில்லை அப்படி நடந்தால் புலிகளையும் விசாரிக்கணும் எனும் உருட்டல்கள் இருக்காது . தற்போதைய நிலையில் அங்கு இனி யார் வந்தாலும் எதுவுமே செய்ய முடியாதபடி சுமதிரனை வைத்து ரணில் உடைத்து விட்டார் .
-
தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
2௦௦9 முதல் சும் யார் v?
-
தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
இனியும் சுத்து மாத்து சுமத்திரனை கட்சியில் வைத்திருப்பது ஆபத்து .
-
தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவில் தானும் போட்டியிடப் போவதாக நடித்து நேற்று நடந்த கூட்டத்தை சுமந்திரன் குழப்பினார். இது அவருடைய ராஜதந்திரம் என்று யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “பொதுச் செயலாளர் பதவிக்கு குகதாசன் தான் வரவேண்டும் என்று சுமந்திரன் விரும்பினார். இதன் காரணமாக தான் போட்டியிடப் போவதாக அறிவித்து கள நிலவரத்தை குழப்பி, சிறிநேசனை வெளியேற்றி தான் நினைத்த குகதாசனை அந்த பதவிக்கு சுமந்திரன் கொண்டு வந்தார். இதுதான் உண்மையில் நடந்த விடயம். சுமந்திரனின் பொய் பேச்சுக்களையும், பொய் கருத்துக்களையும் நம்பும் அளவுக்கு எல்லோரும் இருக்கின்றனர்” என்றும் இளம்பிறையன் சுட்டிக்காட்டினார். https://tamilwin.com/article/tamil-arasu-katchi-current-issue-1706440704
-
போலி சிகரெட்டுக்கள் தொடர்பில் சூத்திரதாரியாக செயல்படுபவர் யார் ?
சைனா தான் இங்கிலாந்து தரவியல் சொல்லுது .
-
ஈழத்தமிழரைக் கைவிட்ட இந்தியா தற்போது மாலைதீவைக் கைப்பற்றுகிறது.
இந்தியா இலங்கையில் மூக்கை நுழைக்காமல் இருந்தாலே காணும் இலங்கை அமைதி பூங்காவாக மாறும் .
-
இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்
அத்துடன் அவருக்கு இதுதான் வித்துவதுவர் என்று ..........எப்படி சொல்வது என்று தெரியாது ஆனால் இங்கு உள்ள அவர் போல் நூறில் ஒன்றே ar எனும் சூட் எனும் போர்வையில்கிழே =. ரகுமானுக்குக்காக .
-
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர்; முன்னிலையில் டொனால்டு டிரம்ப்
தமிழ் சினிமா பார்த்து கெட்டொழிந்து போயிருக்கிரம் இங்கு வரும் பதில் கருத்துக்களை பார்க்கும் போது முக்கியமாய் சிலர் என்னை விட வயதில் மூத்தவர்கள் உலக அரசியலை தயவு பண்ணி கொஞ்சம் அப்டேட் பண்ணி கொள்வது நல்லது .
-
தோடம்பழச்சாறு ஒன்றின் விலை 6,000 ரூபா!
மன்னிக்கவும் சிலரை நாய் என்று விளித்தது தப்புத்தான் ஆனால் தனது அப்போதைய சுகத்துக்கு ஒரு இனத்தையே நட்டாற்றில் விட்டு சென்ற தலைவர்களை எப்படி அழைப்பது என யோசிக்கும்போது நாய் என்பது மிக குறைந்த சொல் அதையிட்டு அவர்களின் ஆதரவாளர்கள் சந்தோசம் அடைவது நல்லது .
-
தோடம்பழச்சாறு ஒன்றின் விலை 6,000 ரூபா!
ஆரம்பத்தில் சொல்லியது போல் சோம்பேறி சிங்களவர்களால் இந்த தீவு நாசமாகியது தேயிலை இறப்பர் க்கு தமிழன்தான் வேணும் தங்கடை கொலை இனவழிப்புக்கு வெள்ளை சட்டை அணிந்த பொன்னம்பலம் ராமநாதன் எனும் தமிழ் நாய் வேணும் இப்பவும் 2௦௦9 நடந்த இனஅழிப்பை அப்படி நடக்கவில்லை என்று ஒன்று சொல்லி திரியிதே ஒரு ...... சுமத்திரன் என்பவர் . இந்த உலகத்திலே சும்மா இருந்து வாழ்வது இலங்கை தீவில் வந்தேறு குடிகளான சிங்கள இனம் ஒன்றே .
-
வடக்கில் மீன்பிடித்துறைசார் முதலீட்டு வலயம் தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தை - இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தகவல்
மாலைதீவும் பறிபோய் கடைசியில் இலங்கை இந்திய கடல் எல்லையில் சைனா காரன் வரப்போறான் எல்லத்தையும் இந்தியாவின் ஜேம்ஸ் போன்ட் என்று புளுகும் Jaishankar பார்த்துப்பார் என்று நம்புகினம் அவரே ஒரு இரட்டை உளவாளி என்பது புரியாமல் .😃
-
இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
அந்த சைக்கிள் கூட்டமும் ரணிலின் ஏவல் ........வேலையாட்கள் தான் சுத்துமாத்து சுமத்திரன் இப்போதைக்கு அரசியல் ஓய்வுக்கு போனால் ஸ்ரீதரன் கள்ள மணல் மூலம் ஆசியாவின் முதல் பணக்காரார் ஆகி விடுவார் அங்குள்ள தமிழ் மக்களுக்கு ஒவ்வொரு வருடம் வரும் திபாவளிக்கு தீர்வு வரும் என்று இலவு காத்த கிளிக்கு போட்டியாய் இருக்க வேண்டியதுதான் .
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
கிழவருக்கு ரணிலால் பின்கதவால் கொண்டுவந்த சுத்து மாத்தய் தலைவராக்க முடியலை எனும் ஆற்றாமை .சிறியருக்கு சம்மந்தரை விட்டால் தமிழருக்கு வேறு ஆள் கிடயாது என்று சம்மந்தரை பிடிக்காதவர்கள் கூட சொல்ல வைத்த மாயம் என்ன என்ற வியப்பு.😀
-
சுரைக்காயை சாதாரணமா நினைக்கிறோம்... இங்க பாருங்க அது செய்ற அற்புதத்தை
இணைப்புக்கு நன்றி உடையார் . ஆனாலும் சுரைக்காய்யின் இவ்வளவு நன்மைகளுக்கும் ஆதாரமில்லை என்று ஒரு கூட்டம் குளறி அழும் ஆனால் தாங்கள் எழுதும் கருத்துகளுக்கு ஆதாரம் இருக்குமா இருக்காதா என்று பார்க்க மாட்டினம் .