Everything posted by பெருமாள்
-
தமிழரசுக்கட்சியின் குழப்பநிலைக்கு சுமந்திரனே காரணம்: எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு
அழுது முடிச்சாச்சா இல்லை இன்னும் யாரும் இருந்தால் மேடைக்கு வாருங்கப்பு சீக்கிரம் ......................
-
தமிழரசுக்கட்சியின் குழப்பநிலைக்கு சுமந்திரனே காரணம்: எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு குழப்பக்காரர் எனவும் தமிழ் அரசியலில் அவரது இருப்பு இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், “சுமந்திரன் எங்கு சென்றாலும் குழப்பத்தை ஏற்படுத்தி மகிழ்வதோடு அதற்கு ஆதாரமாக சில விடயங்களை குறிப்பிடலாம். அவரால் வடக்கு மாகாண சபையில் குழப்பம் ஏற்பட்டதோடு, சீ.வி.கே.சிவஞானத்தை கையாண்டு விக்னேஸ்வரனை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்தார். விலகிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சமீபத்தில் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய அனைத்து கட்சிகளும் வெளியேறியது. இந்தக் கட்சிகளின் விலகல் தீர்மானத்துக்கு காரணம் சுமந்திரனின் தலையீடே ஆகும். திருகோணமலையில் தமிழரசுக்கட்சியில் ஏற்பட்ட குழப்பநிலைக்கும் அவர் தான் காரணம். அத்துடன், சுமந்திரனின் தலையீட்டினால் 20க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைக் கொண்டிருந்த லண்டன் GTF அமைப்பானது மூன்று தனிநபர்களாக குறைக்கப்பட்டது. தமிழர் போராட்டத்தை ஆதரிப்பதற்காக 2009ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கனடிய தமிழ் காங்கிரஸ் சுமந்திரனின் தலையீட்டின் பின்னர் இலங்கைக்கு ஆதரவாக சாய்வடைய ஆரம்பித்தது. ஊழல் விவகாரங்கள் சுமந்திரன் யாழ்ப்பாணக் கல்லூரியில் ஊழல் விவகாரங்களை மறைக்க முற்பட்ட போது அங்கும் அவரால் குழப்பநிலை தோன்றியது. இதனால், அமெரிக்க மிஷனின் நிதி உதவி குறைக்கப்பட்டது. இந்த ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான விரிவான நிர்வாக சீர்திருத்தங்கள் கோரப்பட்ட போதிலும் அவை அனுமதிக்கப்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்க மிஷன் அவரது முன்மொழிவுகளை நிராகரித்தது. இவை மட்டுமன்றி அவரால் விளைவிக்கப்பட்ட குழப்பங்களை நாம் இன்னும் பட்டியிலிடலாம். ஏன் தமிழரசுக்கட்சி தமிழ் அரசியலில் சுமந்திரனை விரும்புகிறார்கள் என்று கேட்க விரும்புகிறோம். அவரால் கடந்த 15 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றவர்களின் கருத்துக்களை பொருட்படுத்தாமலே மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர் இறையாண்மை இதனால், ஜனநாயக அரசியலில் அவரது இருப்பு கேள்விக்குறியாகியுள்ளதோடு தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் அரசியல் அதிகாரம் இல்லாத நிலை தொடர்கிறது. தமிழரசுக் கட்சியில் இருந்து சுமந்திரனை நீக்கினால், உலக அரங்கில் தமிழர்களுக்கு அவர் முன்வைத்துள்ள எதிர்மறையான பிம்பம் இல்லாது அவர் ஏற்படுத்திய குழப்பம் தீரும். தமிழர் இறையாண்மையை அடைவதை இலக்காகக் கொண்ட ஒரே கொள்கையின் கீழ் குழப்பங்கள் இன்றி ஒன்றிணைய முடியும் என கூறியுள்ளனர். https://tamilwin.com/article/sumanthran-s-presence-in-tamil-politics-1708527373?itm_source=parsely-api
-
தமிழரசுக் கட்சியை சுமந்திரனால் காப்பாற்ற முடியுமா
Courtesy: Nada. Jathu இரட்டை இலைச் சின்னப் பிரச்சினையில் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் இழுபறிபட்டு நீதிமன்றத்தினை நாடி கட்சியின் செயல்வலுலை சீர்குலைத்த ஒரு நிலையையே இன்றைய தமிழரசுக்கட்சியும் அடைந்திருக்கின்றது. இருசம்பவங்களினதும் பின்னணிகள் மற்றும் அணுகுமுறைகள் வேறு வேறு விதமாக இருந்தாலும் இரு சம்பவங்களாலும் கட்சிக்கு விளையும் விடயம் ஒன்றாகத்தான் இருக்கும். சுமந்திரனது அரசியல் பிரவேசமானது தேர்தல் வியாபாரத்தில் ஈடுபடாத புத்திசாலிகளை உள்வாங்க என அரசியலமைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு கதவான தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற வாழ்க்கைக்குள் நுழைக்கப்படுகின்றார். தமிழ் தேசிய அரசியல் அவர் ஒரு புத்திசாலியாக நிபுணத்துவ மேற்சட்டையுடன் அடையாளப்படுத்தப்பட்டு ஒரு புலமை வளமாக தமிழ் தேசிய அரசியலில் காண்பிக்கப்பட்டார். அடுத்த பொதுத் தேர்தலில் தான் நேரடியாக அரசியல் ஈடுபட்டு வெற்றியீட்ட வேண்டும் என்ற தீர்மானத்தில் தேர்தல் வியாபாரத்தில் உள்நுழைகின்றார். இது ஒரு முரண்நிலை அணுகுமுறை என்பதை அன்றைய கால காட்டத்தில் பெருந்தலைவர் என விளிக்கப்படும் சம்பந்தரோ கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவோ கட்டுப்படுத்தும் தேவை அற்றவர்களாக இருந்திருக்கின்றார்கள். காரணம் அன்றைய காலகட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னும் பெயரில் வீட்டு சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பிச்சைக் கோப்பைக்குள் தான் அனைத்து வேட்பாளர்களும் வாக்குக்களை உண்டுகொண்டிருந்தார்கள். வெற்றி என்பது உறுதி என்பதைவிட தமிழ் அரசுக்கட்சிக்காரருக்கு தோல்வி மீதான பயமோ அழுத்தமோ உள்ளூர இருக்கவில்லை. இத்தோல்வி மற்றும் அழுத்தம் என்னவோ அக் கூட்டமைப்பில் இருந்த கஜேந்திரகுமார், சுரேஸ்பிரேமச்சந்திரன் ஆகியோருக்கே இருந்தது. அந்த காலகட்டத்தில் இவ்இருவரைத் தவிரவும் வேறுயாரும் சுமந்திரனது செயற்பாடுகளை விமர்சிக்கவில்லை. காரணம் இவர்கள் இருவருக்கும் மிகத் தெளிவாக தெரியும் வெளியேறவேண்டியவாக்கு நிலை ஒன்று உருவாகுமிடத்து நாடாளுமன்ற உறுப்புரிமையில் தங்களுக்குரிய இடம் அங்கே கிடைக்காது. சுமந்திரன் அரசியல் வியாபாரம் இவ்வாறானதொரு சூத்திரமே அன்றைய களச்சூழல் ஆகும். அதற்காகவே கஜேந்திரகுமாரும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் கூவினார்களே அன்றி தமிழ் மக்களுக்காக கூவவில்லை என்பதை இன்றுவரைக்குமாக அனுபவச் சூழல் புடம்போட்டு நிற்கின்றது. புலமையாளன் என்ற கதவில் உள்வந்து போட்டியாளன் ஆக மாறிய சுமந்திரன் அரசியல் வியாபாரத்தில் நுழைந்ததில் இருந்து இந்த கட்சியின் தலைமைப் பதவி என்பதற்கு மிகத் தெளிவாக அண்ணளவாக 10 வருடங்களுக்கு முன்னரே திட்டமிட்டுவிட்டார். அதற்கு உகந்தவகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பாக இருந்த காலத்திலும் பிற்காலத்திலும் தனக்கு இடையூறுகள் எனக் கருதியவற்றை மிகவும் சாமர்த்தியமாக சம்மந்தர் என்ற நிழலையும் மாவை சேனாதிராஜா என்ற கழன்ற கத்திப்பிடி போன்ற தலைவரையும் அவ்வப்போது தட்டி தட்டி வெட்டுவதுபோல் பாவித்து தெளிவாக முன்னகர்த்தியிருந்தார். ஒரு கட்டத்தில் சுமந்திரனது நடவடிக்கைகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு பாதிப்பு, கட்சிக்கு பாதிப்பு என்பவற்றைக் கடந்து சுமந்திரனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு வெற்றியாகவே அமைந்திருந்தது. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் ஒரு உட்கட்சி ஜனநாயகமும், தமிழ் தேசிய உணர்வு ரத்தங்களும் கொதிக்காது அப்பா திரைப்படத்தில் வரும் தம்பிராமையா கதாபாத்திரம் போல என்ன நடந்தாலும் நமக்கு என்ன என கடந்து சென்றவர்களுள்தான் இன்றைய அனைவரும் அடங்குகின்றார்கள். கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் கட்சிகளின் பிரிவு வேட்பாளர்களின் நிலை முதலியவற்றைக் கருத்திற்கொண்டும் தேர்தல் வியாபாரத்தில் தமிழரசுக் கட்சிக்கு தலைவர் ஆகவேண்டும் என்ற தனது தீர்மானத்திற்கு சுருதி சேர்க்க வேண்டும் என்றால் சுமந்திரன் நேரடியாக அதிகூடிய வாக்குக்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த முடிவானது என்ன தேவைக்காக தேசியப்பட்டியல் ஆசனத்தில் உள்வாங்கப்பட்டாரோ அப்போது அவரிடம் எதிர்பார்க்கப்பட்ட நிபுணத்துவப் புனிதத்தினை இழந்துவிட்டார். அச்சிந்தனையில்தான் கடந்த இரு தேர்தல்களிலும் வேட்பாளர்களும் வடிவகைப்படுகின்றார்கள். வெற்றி வேட்பாளர்களைவிட தோல்வி வேட்பாளர்கள் மிகத் தெளிவாக உள்ளடக்கப்படுகின்றார்கள். சித்தாந்த அரசியல் மிகவும் கவலைக்கும் வெட்கத்திற்கும் உரியதொரு விடயம் சமபந்தி,போசனம் என சாதியத்தை ஒறுத்த தமிழ் கட்சிகளும் இயக்கங்களுக்கும் இணைந்து தேர்தலை சந்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்மைப்பிற்குள் இன்றைய நிலையில் மகாசபைக்கு இத்தனை ஆசனங்கள் ஒதுக்க வேண்டும் என சாதிய ஒறுப்பால் கௌரவம் பெற்ற சமூகங்களோ மீளவும் இந்த ஒதுக்கத்தினை கோரிப்பெற்றுக்கொள்கின்றார்கள். இந்த இடத்தினையும் கடந்த தேர்தலில் மிகச் சிறப்பாக வடிவமைத்து வேட்பாளர்களையும் இட்டு நியாயப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே இருவேறு சித்தாந்த அரசியல் தளங்களை அடிப்படையாக கொண்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தான் சுமந்திரனும் சிறீதரனும் செயற்பட்டிருந்தனர். இந்த அடிப்படை வேறுபாட்டுக்கு மூலகாரணம் கட்சியின் யாப்பு, நிலைப்பாடு, செயற்பாட்டு ஒழுக்கம் முதலிய விடயங்கள் எவையும் கிஞ்சித்தேனும் இன்றைய கால ஓட்டத்திற்கு பொருத்தமான வகையில் தமிழரசுக் கட்சியிடம் இல்லை. குறைந்த பட்சம் மரபு ரீதியான செயற்பாடுகளை மதிக்கத் தயாராகவும் இருக்கவில்லை. அடுத்த தலைவருக்கான தகுதி என தமக்குள் தகுதியேற்றம் செய்யவேண்டிய சூழலில் தான் இரு சித்தாந்த தளங்களும் சுமந்திரனும் சிறீதரனும் ஒன்றாக வாக்கு சேகரிக்கின்றார்கள். இருவரும் நேரடியாக வெல்லவைக்கப்படுகின்றார்கள். சுமந்திரன் வென்றாலும் அவரது இறுதி இலக்கு (அல்ரிமேட் கோல்) அடையப்படவில்லை. இந்த சூழ்நிலையிலேயே உட்கட்சி ஜனநாயகம் என்ற விடய வாதப்பொருள் மிகவும் கலவீனமான யாப்பு உடைய தமிழ் அரசுக் கட்சிக்குள் கருத்தரிக்கின்றது. அது நாளடைவில் வெளிவந்து இயன்றவரை கணிசமான பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. தனியே கிளிநொச்சி மண் என்ற பௌதீக பிரிப்பை முழுக்கட்டுப்பாட்டில் அதாவது தமிழரசுக் கட்சிக்குள் மாற்று அணிகள் இன்றி தனக்குரிய தனி அணியாகவே மாத்திரம் சிறீதரன் பேணிவந்திருந்தார். இத் தேர்தல் உத்தியில் ஏற்கனவே கடந்த இரு தேர்தல்களிலும் தக்கவைத்திருந்த தங்களுக்கான பாரம்பரிய வாக்காளர்கள் பலரை மாவை சேனாதிராஜா, சரவணபவன், சித்தார்த்தன், சிறீதரன் ஆகியோர் இழந்திருந்தார்கள். இவற்றில் கணிசமான ஊடுருவல்களும் உடைப்புக்களும் சுமந்திரனால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் அவர் வென்றிருந்தார். அவர் உட்கட்சி தேர்தலில் வாக்கு விகிதாசாரத்தில் ஏனையவர்களை விடவும் முன்னேறியிருந்தார். இதற்காக பல பதவி அமர்த்துகைகள் மற்றும் கட்சிக்குள் முக்கியத்துவங்கள் முதலியன வழங்கப்பட்டிருந்தன. உட்கட்சி ஜனநாயகம் இச்சந்தர்ப்பத்தில் நேரடியாக அரசியல் வியாபாரத்தில் தோற்ற அம்பாறை கலையரசன் தேசியப்பட்டியலால் உள்வாங்கப்படுகின்றார். மக்களால் வெல்ல வைக்கப்பட முடியாத ஒருவர் உட்கட்சி ஜனநாயகத்தால் வெல்லவைக்கபடுகின்றார். இவ்வாறான தீர்மானம் மிக்க முடிவுகள் எடுக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மத்திய குழுவோ பொதுச் சபையின் நியாயமோ அறியப்பட்ட வரலாறு எட்டவில்லை. இதனை சவாலுக்கு உட்படுத்த எந்தவொரு கட்சியின் நியாயத்தினை காக்கும் இன்றைய காவலர்களுக்கும் திராணி இருக்கவில்லை, முக்கியமாக அவர்களுக்கு அவ்வாறான தேவையும் அந்தச் சந்தர்ப்பத்தில் இருக்கவில்லை. மிகச் சிறப்பான நிலை தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு உருவாகின்றது. இதனால் தான் இவரை கழன்ற கத்திப்பிடி என விளிக்கவேண்டியதாயிற்று. தனது இறுதி இலக்கினை சுமந்திரன் அடையமுடியாது விட்டதால் மாவை சேனாதிராஜா நாடாளுமன்றம் வந்துவிட்டால் தொடர்ந்தும் வாழ்நாள் தலைவராக தமிழரசுக் கட்சிக்கு அமர்ந்துவிடுவாரோ என்றதொரு முன்னேற்பாடுதான் அன்றைய செயலாளருடன் சேர்ந்து சம்பந்தரின் நிழலில் சுமந்திரன் கலையரசனுக்கு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பிச்சை. அதுவரை தமிழ் தேசிய இரத்தம் கொதித்துக்கொண்டிருந்த கலையரசன் மென்வலு மிதவாத அரசியல் மாத்திரைகளை விழுங்கியதும் தமிழ்த் தேசிய அழுத்தத்தினை சீர்செய்துகொண்டார். இறுதி இலக்கில் சுமந்திரன் தெளிவாக பயணித்து அனைத்தினையும் தனக்கு சாதகமாக வடிவமைத்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் புதிய தலைவர் தேர்வு 2024 வருகின்றது. இச் சம்பவங்கள் அனைவரும் அறிந்த விடயங்கள், இதன் தொடர்சியில் தலைவர் பதவி என்பதைத் தாண்டி காத்திரமான நிர்வாக பணிகள் செயலாளருக்கு உரியவை. அந்த பதவியில் இருப்பவர் சுயாதீனமாக செயற்படுவாராயின் அவர் தான் ஏனையவர்களின் குறிப்பாக தலைவரதும் தலையெழுத்தை தீர்மானிக்கவல்லவராவார். இந்த சூழ்நிலையிலேயே குகதாசன் என்ற கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகின்றது. கனேடிய மண்ணில் மிகவும் உன்னத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த குகதாசன் கனேடிய காங்கிரசின் ஒரு முக்கிய பிரமுகராக இருந்தார். கனேடிய காங்கிரஸ் ஆனது விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் 2000ம் ஆண்டளவில் கனடாவில் ஒரு இலாகநோக்கற்ற அறக்கட்டளை அமைப்பாக உருவாக்கப்பட்டாலும் பிற்காலத்தில் அங்கே ஏற்பட்ட விரிசல்கள் விடுதலைப் புலிகளுடைய நிலைப்பாட்டிற்கு இடைவெளியுடையதாக பேணப்பட்டு வந்தது. விடுதலைப் புலிகள் காலத்தில் கனேடிய காங்கிரஸ் கனடா மண்ணை மாத்திரமே கவனம்கொண்டது. விடுதலைப்புலிகளின் நீக்கத்திற்கு பின்னராக இலங்கைத் தமிழ் அரசியலில் வடக்கு கிழக்கை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக கனடா காங்கிரஸ் உருவெடுக்க ஆரம்பிக்கின்றது. மன்னரதும் மந்திரியினதும் முடிவு இதன் வளர்சியை கடந்த மூன்று பொதுத் தேர்தலிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் விளைந்த விளைவுகளை வைத்துக்கொண்டு எடைபோட்டிட முடியும். ஒரு வாக்காளரது குழப்பத்திற்கும் துப்பாக்கி சுடுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட ஜனநாயகத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தெரிவு எவ்வித ஜனநாயகமும் அற்ற முறையில் பல வியாக்கியானங்கள் கற்பிக்கபட்டு தேர்தலில் போட்டியிட்டு வெல்வைக்கப்படுவார்கள். ஜனநாயகமான தேர்தல் முறமை, எதேச்சாதிகாரமான வேட்பாளர் தெரிவு இதுதான் கடந்தகால வரலாறு. இது ஒரு செயற்கையான அரசியல் சூழல் உருவாக்கம் ஆகும். அதனை பின்னின்று பணம் என்றதொரு விடயத்தினால் சாதிப்பதில் முன்னிலை வகிப்பது கனடா காங்கிரஸே ஆகும். இப்பணத்தில் கையளைந்த வேட்பாளர்கள் தோற்றாலும் தோற்கடிக்கப்பட்டாலும் வாய்திறக்க மாட்டார்கள். இது கட்சித் தலைவரான கழன்ற கத்திப்பிடி மாவை சேனாதிராஜாவுக்கும் பொருத்தமானதாகும். இவ்வாறு கிடக்கும் நிதிகள் எவையும் சட்டரீதியாக கட்சிக்கு கிடைக்கப்பெறுவதில்லை. அங்கத்துவ கட்டணக் கணக்கினை சீர்செய்வது மாத்திரமே கட்சிப் பொருளாளரது கடமையாக இன்னும் தொடர்கின்றது. மறுபுறத்தில் இச் செயற்பாடுகளுக்காக இதுவரை கிடைத்த நிதியை எவ்வகையில் செலவு செய்வது எவ்வகையில் அறிக்கைப்படுத்துவது தொடர்பான எந்தவொரு நியமமோ நிபந்தனைகளோ கட்சியிடம் இல்லை. இது மன்னர் காலத்து மன்னரதும் மந்திரியினதும் முடிவே ஆகும். இறுதியில் ஐந்து தானத்திற்கு உட்பட்ட நிலுலையை இன்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கணக்கறிக்கைகளாக சமர்ப்பித்து வருகின்றது 72வருட பாரம்பரிய வரலாற்றை தனக்காக கொண்ட தேசிய தமிழ் கட்சி. செயலாளருக்கான முதன்மைத் தெரிவுகளாக முன்னின்ற குகதாசன், சிறீநேசன் இருவரும் நேரடியாக நாடாளுமன்ற தேர்தல் களத்தில் தோற்ற வேட்பாளர்கள். குறிப்பாக இச் சந்தர்ப்பத்தில் கடந்தகால சம்பவம் ஒன்றினை நினைவுபடுத்திக்கொண்டு செல்லது பொருத்தமாக இருக்கும், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் பதவியை விட்டு நீங்க வேண்டும் என்ற சுமந்திரனது பகிரங்க கோரிக்கை சம்பந்தர் பால் இருந்த தேகாரோக்கிய அனுதாபத்தில் இல்லை, அவ்வாறு இருப்பின் அதனை நேரடியாக சம்பந்தரிடமே சொல்லியிருக்கலாம். மாறாக அடுத்த நிலையில் இருக்கும் குகதாசன் பால் இருந்த கரிசனை தான் என்பதை இந்த செயலாளர் முன்மொழிவு மீண்டும் ஒருமுறை இறுதிசெய்துவிட்டது. இவர்கள் இருவருக்கும் தங்களை வெல்லவைக்கவேண்டிய செயற்பாடுகளுக்காக கட்சிக்குள் காத்திரமான பதவிகள் வேண்டும் என்ற கள யதார்த்தம் மாத்திரமே நம்புகின்றார்கள். பின்னர் இவை சமரசம் செய்யப்பட்டு புதிய தலைவரது அறிவித்தலில் தேசிய மாநாட்டிற்கான திகதிகள் வெளிவந்த பின்னர் கட்சியின் இரு அங்கத்தவர்கள் வழக்குகளை தாக்கல் செய்கின்றார்கள். தடையுத்தரவை பெற்றுக்கொள்கின்றார்கள். குகதாசனது தெரிவை முன்னகர்த்துவதில் சுமந்திரனால் அன்று நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்திற்கு மேலதிகமாக குகதாசனுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் நேரடியாக காத்திரமாக வெளிப்படையாக எதனையும் செய்ய முடியவில்லை. இணக்கப்பாட்டினை நோக்கிய நகர்வு திட்டம் 02 உடன் சுமந்திரன் முன்னேறியிருக்கலாம், அது குகதாசனுக்கு தெரிந்தும் இருக்கவில்லை, நம்பிக்கையையும் வளர்க்கவில்லை. காரணம் நேரடிப் போட்டியாளராக இருந்த சிறீநேசனை சுமந்திரனால் அணுக முடியவில்லை. சாணக்கியனுக்கும் சிறீநேசனுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி காரணமாகவும், சுமந்திரன் கடந்த காலங்களில் சிறீநேசனை சிறந்த உறவுமுறைக்குள் பேணாத காரணத்தினாலும் இதனைச் செய்ய முடியவில்லை. இச்சந்தர்ப்பத்தில் கட்சித் தலைவராக செயற்பட்ட சிறீதரன் இருவரையும் ஒரு இணக்கப்பாட்டினை நோக்கி நகர்த்தியிருந்தார். இச்சூழலில் குகதாசன் தங்களது கையை மீறி சிறீதரன் பக்கம் சாய்ந்து விட்டாரா? என்பதே இங்கே சுமந்திரன் தரப்பிற்கு இருந்த அழுத்தமாயிற்று. இவ்வாறான சூழ்நிலையிலேயே தமிழரசுக் கட்சியின் உட்கட்சி ஜனநாயக் காலவர்களால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதிவாதிகளாக கட்சியின் கட்டமைப்பு ரீதியாக பெயர்கள்குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சி சார்பாக சுமந்திரனும் முன்னிலையாவதாக அறிவித்திருக்கின்றார். வாதியின் தரப்பில் யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி குருபரன் முன்னிலையாகியிருக்கின்றார். இரண்டு சட்டவாதிகளினதும் நேரடியாக முன்னிலையாகிய வழக்கு வெற்றி விகிதாசாரத்தில் குருபரனே முன்னிலை வகிக்கின்றார். தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு சட்ட நிபுணத்துவ புலமையாளனாக தேசியப்பட்டியல் ஊடாக அரசியலில் நுழைக்கப்பட்ட சுமந்திரன் தமிழ் மக்களது தேசிய பிரச்சினையை கையாளுவதில் தவறு விட்டிருந்தாலும், குறைந்தபட்சம் தான் சார்ந்த தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களில் அச்சுறுத்தல் விடுத்திருக்கும் உட்கட்சி ஜனநாயகக் காவலர்களிடம் இருந்து கட்சியைக் காப்பாற்றுவாரா? குறைந்த பட்சம் அதற்கான புலமையேனும் அவரிடம் இருக்கின்றதா? என்பதை எதிர்வரும் நீதிமன்ற நாட்கள்தான் முடிவுசெய்யப்போகின்றன. https://tamilwin.com/article/can-sumanthran-save-the-tamil-rashid-party-1708405107
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
இவர் ரொம்ப அவசர படுகிறார்யுவர் ஆனார் ?😀
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
நம்ம தலை தொடங்கிட்டார் முக்கிய பிரச்சனையே 2௦ கிலோ தான் கொண்டு போகலாம் என்ற அறிவிப்பு @ஈழப்பிரியன் அண்ணா கவனியுங்கள் லண்டனில் இருந்து கொழும்புக்கு 4௦ கிலோ ஒரு ஆளுக்கு மிகுதிய யார் கொண்டு போவது ?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
பச்சை முடிந்து விட்டது இந்த திரியில் யார் திசைமாறி கூட்டமாக இருப்பதை பாருங்கள் அவர்கள் எண்ணப்படி நடக்கவில்லை அதனால் புலிகளை இழுத்து தாங்கள்தான் நீதிபதி போல் எப்போதோ அழிந்து போன புலிகள் மீது போர்குற்றம் சொல்கிறார்கள் இவர்கள் யார் புலிகளை குற்றம் சொல்ல ?
-
கொவிட் தடுப்பூசிகள் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்!
இந்த செய்தியை பார்த்து விட்டு கொஞ்சபேர் கிளம்ப போகினம் .
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தற்போது புலி எதிர்ப்பு கருத்து வைத்தால் அல்லது சொந்த இனத்தை கெக்கே பிக்கே என்று நக்கல் அடித்தால் குழுவாக வந்து பச்சை போடுகிறார்கள் இந்த திரியே சாட்சி .
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இந்த ஒரு வசனத்தை வைத்துதானே புலிகளை யாழ் கருத்து களத்தில் குற்றவாளிகளாக காட்டி கொண்டு இருகிரியல் வேறை ஏதாவது புதுசா கேளுங்க 😆 இனிவரும் தமிழர் தலைவர் சொல்லவேண்டிய வசன்ம்களை .................................
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அப்பாடா ஒரு மாதிரி 6௦௦ போலிசை புலிகள் கொன்றார்கள் என்று நிறுவி ஆயிற்று ரஜனி திரனகம நீலன் திருசெல்வம் கூடவே என்ன தண்டனை கொடுக்க்போவதாய் உத்தேசம் 😆? தமிழனாய் பிறந்ததுக்கு நோக வேண்ட்டி உள்ளது . இந்த 14 வருட புலியில்லாத காலத்திலும் புலியின் மீது தவறு காண முன்டியடிக்கினம் என்றால் அவ்வளவுக்கு வேண்டி கட்டி இருக்கினம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
விளங்குது . என் முதுகில் 32 கத்திகள் 33 ஆவதாக இருக்க கூடாது என்று கடவுளை பிரார்திக்கிறேன் .- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இப்ப யார் போர் குற்றம் செய்தது ? விளங்குது தலை .- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அதை யார் செய்தது அப்போதைய பொறுப்பாளரின் பெயர் தெரியுமா ?- இலங்கை அமெரிக்காவின் பிராந்தியமல்ல - அமெரிக்க தூதுவரின் கருத்துக்கு அரசாங்கம் பதில்
இந்த பந்துல குணவர்தன கனவிலை இருக்கிறார் போல் உள்ளது இந்தியாக்காரன் ஏற்கனவே தனது 29 மாநிலங்களுடன் முப்பதாவது மாநிலமாய் இலங்கையை சேர்த்து விட்டார்கள் என்பது கேள்விப்படவில்லை போல் உள்ளது .😀- நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
@நன்னிச் சோழன் மேடைக்கு அழைக்கபடுகிறார்.- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஓம் நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரிதான் அதிகம் கறந்தார்கள் பிஜேபி அதே பிஜேபி எப்படி அப்பாவி இந்திய ஜனம்களை மடையர்களாக்கியது என்ற கதையையும் சொல்லவா ? RKW Developers கதை 1993-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர், ‘நிழலுலக தாதா’ என்று அழைக்கப்படும் தாவூத் இப்ராகிம். இவரின் நெருங்கிய உதவியாளர் இக்பால் மேமன் என்ற இக்பால் மிர்ச்சி.இவரிடமிருந்து அவரின் நிறுவனம்தான் ஆர்கேடபிள்யு (RKW)எனும் நிறுவனத்திடம் இருந்து பிஜேபி 2014 - 2015ஆம் ஆண்டில் 10 கோடி ரூபாய் நன்கொடை யாக இதே தேர்தல் பத்திர முறை மூலம் பெற்றுள்ளார்கள் எப்படி கதை இந்தியா எனும் நாட்டை தீவிரவாதம் மூலம் அழிக்கும் திவிரவாதிகளிடமே தேர்தலுக்குரிய நிதியை பெற்று ஆட்சி அமைப்பவர்கள் நாட்டுக்கு எவ்வளவு விசுவாசமாக இருப்பார்கள் ? மேல் உள்ள கதைகள் தமிழ் bbc ஏன் போடுவதில்லை என்பதில் இருந்தே தமிழ் bbc யாருக்கு ஊது குழல் என்பதை தெரிந்து கொள்ளனும் . இப்ப யார் அப்பாவி கோயிந்து ?😆 சமிபத்தில் தமிழ் நாட்டு அரசியல் சீமான் கட்சியினர் வீடுகளில் nia சோதனை போட்டார்களே அவசர அவசரமாக என்னத்துக்கு >?😀😀 இன்னும் நான் காங்கிரஸ் கதைக்கு வரவில்லை நேரம் கிடைக்கும்போது மிக முக்கியமானது மேல் உள்ளவைகளை படித்து நான் யாருக்கும் ஆதரவானவன் என்ற முடிவை எடுக்கவேண்டாம் அவைகள் செய்திகள் அவ்வளவே .- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
@cruso பூனை கண்ணை மூடினால் ..........................மேலே 2௦19 கீற்று எழுதிய கட்டுரையை படித்து விட்டு சொல்லவும் bbc தமிழ் என்பது இங்கிலாந்து மக்களின் வரிபணத்தில் ஓசியில் டெல்லிக்கு மகிடி ஊதும் கூட்டம் தங்கள் நாட்டின் ஜனநாயக கேவலம்களை பிட்டுகேடுகளை மறைக்கவே செய்வார்கள் . தடை செய்தி வந்தபின் சர்வதேச ஊடகங்கள் எப்படி கிழித்து தொங்க விடுகிறார்கள் இந்தியாவை கொஞ்சமாவது எட்டி பாருங்க .தமிழ் bbc விட கூடிய தகவல்கள் உள்ளன . https://www.reuters.com/world/india/what-were-indias-electoral-bonds-how-did-they-power-modis-party-2024-02-16/ https://www.aljazeera.com/news/2024/2/15/what-are-electoral-bonds-the-secret-donations-powering-modis-bjp https://www.aljazeera.com/news/2024/2/16/check-on-quid-pro-quo-will-indias-electoral-bonds-ban-hurt-modi- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
உங்களுக்கு ஆதரவான அல்லது மற்றவரை மொட்டையடிக்க என்றால் bbc செய்திகள் நம்பகத்தன்மையான செய்தி இணையம் Electoral Bond சமமான பெயருடன் அப்போது தொடங்கப்பட்ட காங்கிரசுக்கு ஆதரவாக 193௦ களிலே பாரிய நிருவன்ம்கள் நன்கொடை அளித்து உள்ளன . @Justin @Cruso உங்க இருவருக்கும் ஆங்கிலத்தில் தேடுவது பிடிக்காத விடயம் என்பது விளங்குது அதனால் இணைக்கிறேன் . தேர்தல் பத்திரம் - கார்ப்பரேட்டுகளின் கருப்புப் பணத்திற்கான முகமூடி. நாடாளுமன்றத்துக்கும் ஆந்திரம், அருணாசலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேர வைகளுக்கும், தமிழ்நாட்டில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 2019 ஏப்பிரல் 11 முதல் மே 19 முடிய ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடந்து கொண்டிருக் கிறது. இதற்குமுன் நடைபெற்ற தேர்தல்களைவிட இந்தத் தேர்தலில் பணம் கோடி கோடியாய்ச் செலவிடப்படுகிறது. ஆந்திரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வரும் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தவருமான ஜெ.சி. திவாகர் ரெட்டி வெளியிட்ட அறிக்கை “தி இந்து” ஆங்கில நாளேட்டில் 23.4.2019 அன்று வெளியாகியுள்ளது. அதில், “ஆந்திரத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் கிட்டத்தட்ட 25 கோடி உருபா செலவிட்டனர். ஆந்திரத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைக்கும் சேர்த்து தேர்தல் செலவு ரூ.10,000 கோடியைத் தாண்டியுள்ளது. வாக் காளர்கள் ரூ.2000-க்குக் குறைவான தொகையைப் பெற மறுக்கின்றனர். சில இடங்களில் வேளாண் தொழிலாளர்களும் பிற கூலி வேலை செய்வோரும் ரூ.5000 கேட்டனர்” என்று திவாகர் ரெட்டி கூறியுள்ளார். /images/stories/people/delhi_electioncommision-office_600.jpgஊடகவியல் ஆய்வு நடுவம் மேற்கொண்ட ஆய்வில், 2010 முதல் 2014 வரை இந்தியாவில் நடந்த தேர்தல் களில் ரூ.1,50,000 கோடி செலவிடப்பட்டதாகவும், இதில் பாதித் தொகை கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணம் என்றும் கூறியுள்ளது. பா.ச.க.வும், காங்கிரசும் 2019 ஏப்பிரல்-மே மாதங்களில் நடைபெறும் தேர் தலில் தனித்தனியே ரூ.50,000 கோடி செலவிடத் திட்டமிட்டிருப்பதாக 14.4.2019 நாளிட்ட ‘டெக்கான் கிரானிக்கிள்’ ஆங்கில நாளேட்டின் ஆசிரியவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்குக் கோடி கோடியாகப் பணம் கொடுப்பது யார்? பெருமுதலாளிகள், பெரும் வணிகர்கள், பெரிய ஒப்பந்தக்காரர்கள் முதலானோர் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கின்றனர். 1930-கள் முதலே காங்கிரசுக் கட்சிக்கு பிர்லா, டாடா போன்ற முதலாளிகள் பெருந்தொகையை நன்கொடையாக அளித்து வந்தனர். அதனால், இவர்களின் பொருளியல் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் காங்கிரசுக் கட்சியில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன. 1937-இல் பெரும்பாலான மாகாணங்களில் காங்கிரசுக் கட்சியின் தலைமையிலான ஆட்சி அமைந்த போது, ஆட்சியதி காரத்தில் முதலாளிகளின் செல்வாக்கு வளர்ந்தது. இம்முதலாளிகள் பார்ப்பன - பனியா - மார்வாரி உள்ளிட்ட மேல்சாதியினராகவே இருந்தனர். இன்றளவும் இந்தியாவில் உள்ள பெருமுதலாளிய நிறுவனங்களும் வணிகக் குழுமங்களும் இந்த மேல்சாதியினரின் ஆதிக்கதிலேயே இருக்கின்றன. இந்தியா குடியரசானபின் 1952இல் நடந்த முதலாவது பொதுத் தேர்தலின்போதே வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது என்பது ஏற்பட்டுவிட்டது. தேர்தலில் அதிக அளவில் செலவு செய்ய வாய்ப்புள்ள கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெறக் கூடிய நிலை உண்டாயிற்று. மக்கள் நாயக ஆட்சியாக வளர வேண்டியது பணநாயகத்தின் ஆட்சியாக மாறியது. தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்குப் பெருந்தொகையை நன்கொடையாக அளிப்பது, சனநாயக நெறிமுறைகளுக்கும் மக்களாட்சிக் கோட்பாட்டுக்கும் எதிரானதாகும் என்று எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. இது தொடர்பாக, 1957-இல் மும்பை உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடரப்பட்டது. தலைமை நீதிபதி யாக இருந்த எம்.சி. சாக்ளா, “இது மிகப் பெரிய ஆபத்து; வேகமாக வளர்ந்து வரும் சனநாயகத்தின் குரல்வளையைக் கூட நெரித்து விடும், தொழில் நிறுவனத்தின் பங்குதாரர்கள் மட்டுமின்றி, வாக்களிக்கும் வாக்காளர்கள் கூட தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளித்த நன்கொடை குறித்து அறிவது முதன்மையாகும்” என்று தீர்ப்பளித்தார், இதே போன்றதோர் தீர்ப்பை கொல்கத்தா நீதிமன்றமும் 1957-இல் வழங்கியது, அதன் பிறகும் தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளித்துவந்த நன்கொடை குறித்த விவரம் பொது மக்கள் அறிய முடியாதவாறு இரகசியமாக வைக்கப்பட்டது. இந்த நன்கொடையில் பெரும்பகுதி கருப்புப்பணம் என்பதால் அரசியல் கட்சிகளும் தொழில் நிறுவனங்களும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்படு கின்றனர். 1991-இல் தாராள மயம் - தனியார் மயம் என்கிற கொள்கையை அரசுகள் நடைமுறைப்படுத்தத் தொடங்கிய பின், நிலம், காடுகள், கனிம வளங்கள், மணல், பெட்ரோலிய எண்ணெய் வயல்கள் முதலானவை பெருமுதலாளிய நிறுவனங்களின் கொள்ளைக்குத் திறந்துவிடப்பட்டன. இந்த இயற்கை வளங்களை மலிவு விலையில் பெறவும், அப்பகுதிகளில் வாழும் மக்களை வெளியேற்றவும் முதலாளிய நிறுவனங்கள் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிக்கும், எதிர்க் கட்சி களுக்கும் பெருந்தொகையைக் கையூட்டாகவும், நன் கொடையாகவும் அளிப்பது வேகமாகப் பெருகியது. சனநாயகம் என்பது பணம் குவிக்கும் வணிகமாக மாறிவிட்டது. தேர்தல் நன்கொடை என்பது அரசியல் கட்சிகளின் அச்சாணி போலாகிவிட்டது. சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் போன்ற பதவிகளுக்குச் செல்வது குறுகிய காலத்தில் கோடிகளில் பணத்தைக் கொள்ளையடிப்பதற்கே என்ற நிலை ஏற்பட்டுவிட்டது, அரசியல் கட்சி, நன்கொடை என்கிற பெயரில் இவ்வளவு தொகைதான் பெறவேண்டும் என்கிற வரம்பு ஏதும் இல்லை. அதேபோல் தேர்தலில் செலவு செய்வதற்கும் வரம்பு இல்லை, தற்போது நாடாளுமன்றத் திற்குப் போட்டியிடும் வேட்பாளர் எழுபது இலட்சம் உருபா வரையில் செலவு செய்யலாம் என்று விதிக்கப் பட்டுள்ளது, அரசியல் கட்சிகளின் வரவு-செலவு எந்த வொரு தணிக்கைக்கும் உட்படுத்தப்படுவதில்லை, அதனால் அதில் ஊழலும் கருப்புப் பணமும் தாராள மாகப் புழங்குகின்றன. அரசியல் கட்சிகளின் வரவு-செலவை இந்திய அரசின் தலைமைத் தணிக்கைக் கணக்காயரின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசியல் கட்சிகள் செவிமடுப்ப தில்லை. சனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு என்கிற தன்னார்வ அமைப்பின் தகவல்படி, அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில் 69 விழுக்காடு இன்னாரிட மிருந்து பெறப்பட்டவை என்பதே தெரியாதவை; மீத முள்ள 31 விழுக்காடு வருமான வரித்துறைக்கு அரசியல் கட்சிகள் அளிக்கும் அறிக்கையிலிருந்து வெளியில் தெரிய வருபவை ஆகும். அரசியல் கட்சிகளின் உண் மையான வருவாய் அவற்றின் அறிக்கையில் வெளி யிடுவதைவிட இரண்டு மடங்கு இருக்கும், இவற்றின் உண்மையான வருவாய் குறித்து வருமானவரித் துறையிடமோ, தேர்தல் ஆணையத்திடமோ அதிகாரப் பூர்வ ஆவணம் கிடையாது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை கள் குறித்து சில தகவல்களைப் பெறமுடிந்தது. இந்த நிலையைத் தேர்தல் பத்திரத் திட்டம் ஒழித்துவிட்டது. தேர்தல் ஆணையமும், சட்ட ஆணையமும் அரசியல் கட்சிகளுக்குத் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் தேர்தல் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதைப் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளன. சனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு 2002-இல் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், வேட்பாளரின் கல்வித் தகுதி, சொத்து விவரம், குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை வேட்பாளர் விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்; வாக்காளர்கள் இந்த விவரங்களை அறிவதற்கான உரிமை உடைய வர்கள் என்று தீர்ப்பளித்தது. இது நடைமுறையில் பின்பற்றப்படுகிறது. வேட்பாளர்கள் விண்ணப்பத்தில் அளித்த விவரத்தின்படி, 2009இல் நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்களில் 300 பேர் (58ரூ) கோடீசுரவர்கள், 2014-இல் 100 விழுக்காட்டினரும் கோடீசுவரர் கள். எனவே கோடிகளில் செலவிடக்கூடிய பணவசதி படைத்தவர்களையே எல்லாக் கட்சிகளும் வேட்பாளர் களாக நிறுத்துகின்றன. 2017ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை நாடாளு மன்றத்தில் முன்மொழிந்த போது, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, அரசியல் கட்சிகளுக்குப் பணமாக நன்கொடை தரும் முறையில் கருப்புப் பணத்தின் புழக்கத்தைத் தடுத்திட, தேர்தல் பத்திரத் திட்டம் என்பதை நடுவண் அரசு அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்தார். இதற்காக 1951-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச்சட்டம், 1934-ஆம் ஆண்டின் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 2013-ஆம் ஆண்டின் தொழில் நிறுவ னங்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப் பட்டன. நடுவண் அரசு 2018 சனவரி 2 அன்று தேர்தல் பத்திரத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின்படி, ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 இலட்சம், ரூ.10 இலட்சம், ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் ஒவ்வொரு ஆண்டும் சனவரி, ஏப்பிரல், சூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் பத்து நாள்களுக்கு வழங்கப்படும். நாடாளு மன்றத்துக்குத் தேர்தல் நடக்கும் ஆண்டுகளில் கூடுதலாக முப்பது நாள்களுக்குத் தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். இதன்படி 2019 பிப்பிரவரி 28 அன்று நடுவண் அரசு வெளியிட்ட அறிவிப்பில் 2019 மார்ச்சு, ஏப்பிரல், மே மாதங்களில் முப்பது நாள்களுக்குத் தேர்தல் பத்திரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மே 15 வரை தேர்தல் பத்திரங்கள் கிடைக்கும். மே 19 அன்று இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தனி நபரோ, இந்துக் கூட்டுக் குடும்பமோ, சிலர் ஒன்று சேர்ந்தோ, தொழில் நிறுவனமோ தேர்தல் பத்திரத்தை வங்கியில் வாங்கி, தனக்கு விருப்பமான கட்சிக்கு நன்கொடையாக அளிக்கலாம். அந்தக் கட்சி தன் வங்கிக் கணக்கில் தேர்தல் பத்திரத்தைச் செலுத்திப் பணமாக மாற்றிக் கொள்ளும். தேர்தல் பத்திரம் வழங்கிய வரின் பெயர் வெளியிடப்படாமல் இரகசியமாக வைக்கப் படும். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் இருந்த கருப்புப் பணப் புழக்கத்தைத் தேர்தல் பத்திரத் திட்டத்தின் மூலம் தடுத்துவிட்டதாக மோடி அரசு பெருமை கொள்கிறது. ஆனால் இது உண்மை அன்று. வங்கிகள் மூலம் தேர்தல் நன்கொடைப் பத்தி ரங்களை நடைமுறைப்படுத்துவதால் திரைமறைவு நன்கொடைகள் தடுக்கப்படும் என்று மோடி அரசு சொல்கிறது. நீண்டகாலமாக வங்கிகள் மூலமாகத்தான் கருப்புப் பணம் வெள்ளையாக் கப்பட்டு வருகிறது என்பது ஊரறிந்த உண்மை யாகும். ஹவாலா பணப் பரிமாற்றத்திற்கு வங்கிகள் துணைபோகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, கருப்புப் பணத்தைப் புதிய பணத்தாள்களாக மாற்றிக் கொள்வதில் ரிசர்வ் வங்கி முதல் உள்ளூர் கிளை வங்கிகள் வரையில் துணைபோயின என்பது அம்பலப் பட்டுச் சந்தி சிரிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்த லிலும் ஒரு விழுக்காட்டுக்குமேல் வாக்குகள் பெற்ற - தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரம் வழங்க முடியும். 2017ஆம் ஆண்டு வரையில் ஒரு தொழில் நிறுவனம் அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்க வேண்டுமானால் அது குறைந்தது மூன்று ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும்; இலாபத்தில் இயங்கியிருக்க வேண்டும்; மூன்று ஆண்டுகளின் நிகர இலாபத்தில் 7.5 விழுக்காடு அளவுக்கு மட்டுமே நன்கொடை தர முடியும் என்கிற விதிகள் இருந்தன. தேர்தல் பத்திரத் திட்டம் இந்த விதிமுறைகளை நீக்கிவிட்டது. மேலும் தொழில் நிறுவனங்கள் சட்டம் 182(3)-இன்படி அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை விவரத்தை ஆண்டு வரவு-செலவு அறிக்கையில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று இருந்த விதியும் இப்போது நீக்கப் பட்டுவிட்டது. அதேபோன்று இந்தியாவில் இயங்கும் அயல்நாட்டு முதலாளிய நிறுவனங்கள் தேர்தல் நன் கொடை அளிப்பதற்கு இருந்த தடைகளும் அகற்றப்பட்டு விட்டன. எனவே, தேர்தல் நேரத்தில் முளைக்கும் காளான் நிறுவனங்கள், போலி நிறுவனங்கள் பெயர்களில் கருப்புப் பணம் தேர்தல் பத்திரங்களாக மாற்றப்படும். இந்நிறுவனங்களின் பெயர்கள் இரகசியமாக வைக் கப்படும் என்பதால் எவ்வளவு பணம் எந்த அரசியல் கட்சிக்குத் தேர்தல் பத்திரமாக வழங்கப்பட்டது என்ப தெல்லாம் திரைமறைவு தில்லுமுல்லுகளாகவே இருக்கும். எனவேதான், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, “தேர்தல் பத்திரம் அரசியல் கட்சி களுக்குத் தொழில் நிறுவனங்கள் தரும் கருப்புப் பணத்தை மூடி மறைப்பதற்கான ஒரு திட்டம்” என்று கூறியிருக் கிறார் (தி இந்து-ஆங்கிலம்-27.1.2019). தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி, அரசு ஊழியர்கள் மக்களின் பொதுநலன் தொடர்பாக எடுக்கும் கொள்கை முடிவுகளைக் குடிமக்கள் அறிந்து கொள்ள உரிமை இருக்கிறது. அதுபோல் தேர்தலில் வெற்றி பெறும் ஒரு அரசியல் கட்சி எடுக்கும் முடிவுகளைத் தேர்தல் பத்திரங்கள் தீர்மானிக்க வாய்ப்பு இருப்பதால், வாக்காளர்கள் தேர்தல் நன்கொடைப் பத்திரங்ளை வாங்கி வழங்கியவர்களின் விவரத்தைத் தெரிந்து கொள்ளும் உரிமை இருக்க வேண்டும். சனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு 2019 மார்ச்சு மாதம் உச்சநீதிமன்றத்தில், “தேர்தல் பத்திரம் வழங்குவதைத் தடைசெய்ய வேண்டும். அல்லது தேர்தல் நடவடிக்கையில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் வகையில் நன்கொடை வழங்கியவர்களின் விவரங்களை வெளியிட ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்று வழக்குத் தொடுத்தது. மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சியும் இதேபோன்று ஒரு வழக்கைத் தொடுத்தது. /images/stories/people/jeyadeep_prasanthpoosan_ramadoss_600.jpg2019 ஏப்பிரல்-மே மாதங்களில் நாடாளுமன்றத் துக்குப் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை முதன்மை வழக்காகக் கருதி, உச்சநீதிமன்றம் 2018 திசம்பர் மாதத்திற்குள் விசாரித்து, தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். இதற்கு மாறாக, முதல் கட்டத் தேர்தல் தொடங்குவதற்கு முதல் நாள் ஏப்பிரல் 10 அன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மூன்று நாள்கள் நடந்த இந்த வழக்கு விசாரணையின் போது, சனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பின் சார்பில், “தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத் தன் மையை மறுக்கின்றன; போலியான நிறுவனங்கள் பெயரில் கருப்புப் பணம் நுழைவதற்கான வாய்ப்பு உள்ளது. நன்கொடையாளர் யார் என்பதை அறியும் வாய்ப்பு ஆளும் கட்சிக்கு மட்டும் இருக்கிறது; அதனால் மற்ற கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதைத்தடுத்திட தன் அதிகாரத்தைப் பயன்படுத்தும்” என்று வாதிடப் பட்டது. தேர்தல் பத்திரத் திட்டத்தை எதிர்த்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் ராக்கேஷ் திவேதி, “வேட்பாளர் பற்றிய விவரத்தை அறிவது ஒரு பகுதி மட்டுமே ஆகும். வேட்பாளர் போட்டி யிடும் கட்சிக்கு நன்கொடை அளித்தது யார் என்பதை அறிவது அதைவிட முதன்மையாகும். அரசியல் கட்சிகள் யாரிடமிருந்து நன்கொடை பெற்றன என்கிற விவரத்தை அக்கட்சிகளின் வலைதளத்தில் வெளியிட வேண்டும்” என்று கூறினார். நடுவண் அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், “தேர்தலில் கருப்புப் பணம் செலவழிக்கப் படுவதைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது செயல்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி இந்தத் தேர்தல் நேரத்தில் உச்சநீதி மன்றம் தலையிடக்கூடாது. தேர்தல் முடிந்த பின்னர் இதனை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்திருந்தார். மேலும், “அரசியல் கட்சிக்கு யார் நன்கொடை அளித்தார் என்பதை அறியும் உரிமை வாக் காளர்களுக்கு இல்லை; நன்கொடை அளித்தவரின் பெயர் இரகசியத்தைக் காத்திட அரசமைப்புச் சட்டப்படி அரசுக்கு உரிமை உண்டு” என்று தலைமை வழக்கு ரைஞர் வாதிட்டார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு ஏப்பிரல் 12 அன்று ஒரு இடைக்காலத் தீர்ப்பை அளித்தது. அதில், “நாட்டில் நியாயமான முறையில் தேர்தல் நடைமுறைகள் செயல்படுவது குறித்து தேர்தல் பத்திரத் திட்டம் அழுத்த மான சிக்கலை உண்டாக்கியிருக்கிறது. எனவே அரசியல் கட்சிகள் தாம்பெற்ற தேர்தல் பத்திரங்கள் எந்த நாளில் எந்த வங்கியின் கணக்கில் செலுத்தப்பட்டது, நன்கொடை வழங்கியவர்களின் பெயர்கள், அவர்களின் வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட அறிக்கையை முத்திரையிட்ட உறையில் தேர்தல் ஆணையத்திடம் மே 30-க்குள் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அந்த விவரங்களையும் வருமானவரிச் சட்டம், தேர்தல் சட்டம், வங்கிச் சட்டம் ஆகியவற்றில் செய்யப்பட்ட மாற்றங்களையும் ஒப்பிட்டு விரிவாக ஆராய்வோம் என்று கூறிய நீதிபதிகள், இறுதித் தீர்ப்புக் கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர். நாடாளுமன்ற சனநாயகத்திற்கு அடிப்படையாக விளங்கும் தேர்தல் முறை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தேர்தல் பத்திரத் திட்டம் குறித்து முன் கூட்டியே விசாரித்துத் தீர்ப்பு வழங்கி நியாயம் செய்திட உச்சநீதிமன்றம் தவறிவிட்டது. குறைந்த அளவில், தேர்தல் பத்திரத் திட்டத்துக்கு இடைக்காலத் தடைவிதித்து விட்டு, விசாரணையைத் தொடர்ந்து நடத்தியிருக்கலாம். இந்த இடைக்காலத் தீர்ப்பால் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் பத்திரம் மூலம் கருப்புப் பணம் புழங்குவதைத் தடுக்க இயலாது. 2017-2018-ஆம் ஆண்டில் கடைசி மூன்று மாதங்களில் தேர்தல் பத்திர விற்பனை ரூ.220 கோடி ஆகும். இதில் பா.ச.க.வுக்கு ரூ.210 கோடி, காங்கிரசுக்கு ரூ.5 கோடி, மற்ற கட்சிகளுக்கு ரூ.6 கோடி அளிக்கப்பட்டுள்ளது. 2017-18-இல் பா.ச.க. பெற்ற தேர்தல் நன்கொடை ரூ.1,027 கோடி; காங்கிரசு பெற்ற நன்கொடை ரூ.197 கோடி. தேர்தல் பத்திரத் திட்டம் ஆளும் கட்சிக்கு அதிக அளவில் வெள்ளைப் பணமாகவும் கருப்புப் பணமாகவும் அளிப்பதற்கே உதவும். அமெரிக்காவில் தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடைக்கு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தேர்தல் பத்திரம் மூலம் வரம்பின்றி எவ்வளவு தொகை வேண்டுமானாலும் தரலாம். இங்கிலாந்தில் குறிப்பிட்ட நிதி ஆதாரங்களிலிருந்து மட்டுமே அரசியல் கட்சி களுக்கு நன்கொடை வழங்க முடியும். ஒவ்வொரு காலாண்டிற்கும் அளிக்கப்பட்ட நன்கொடை விவரத் தை அரசியல் கட்சியின் பொருளாளர் வெளியிட வேண்டும். பிரான்சிலும் கனடாவிலும் தனிநபர் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தர முடியும். அதற்கும் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை என்பது சனநாயகத் தின் ஆணிவேர் போன்றதாகும். வேட்பாளரின் விவரத்தை அறியும் உரிமை வாக்காளருக்கு இருப்பது போல், வேட்பாளரின் அரசியல் கட்சி பெறுகின்ற தேர்தல் நன்கொடை விவரத்தை அறியும் உரிமையும் இருக்க வேண்டும். தேர்தல் பத்திரத் திட்டம் இவற்றை மறுக்கிறது. இரகசியம் காத்தல் என்கிற பெயரால் கார்ப்பரேட்டு நிறுவனங்களின் கருப்புப் பணம் தேர்தல் நிதியாக அளிக்கப் பட்டு, தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதுடன், அமைக்கப்படும் ஆட்சியின் கொள்கை முடிவுகளை - செயல் திட்டங்களை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் வாய்ந்ததாகவும் விளங்கும். எனவே சனநாயகம் காக்கப்பட தேர்தல் பத்திரத் திட்டம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும். https://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may-19/37302-2019-05-24-06-33-21- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இப்படியொரு லூப் ஹோல் 193௦களில் இருந்தே இருக்கிறது இதில் அதிக லாபம் பார்த்தவர்கள் காங்கிரஸ் கூட்டம் ஏன் தீம்கா கூட கடந்த தேர்தலுக்கு 6௦௦கோடிக்கு மேல் கடன் பத்திரங்களை பெற்றுள்ளது எல்லா கட்சியும் இப்படித்தான் தேர்தல் நிதியை சட்ட ரீதியாக சேர்த்து தேர்தலுக்கு சிலவளிப்பது உண்டு இதில் கட்சிக்கு எவ்வளவு சேந்து அந்த காசை எவ்வளவு சிலவளித்தார்கள் என்ற விபரம் தேர்தல் ஆணையகத்துக்கு முழுமையாக காட்ட தேவையில்லை ஏன் நீதி மன்றத்துக்கு கூட உரிமையில்லை என்கிறார்கள் .இதை சீமான் போன்றவர்கள் சுட்டிக்காட்ட அல்ல உபயோக தொடங்க தேசிய மாநில டைனசோர்கள் விழித்து கொண்டு அலறுகின்றனர் விடயம் அவ்வளவுதான் . - நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
Important Information
By using this site, you agree to our Terms of Use.