13 அடி உயர பட்டம் அது வடமராட்சி பகுதிகளில் படலம் என்பார்கள் நெருப்பில் இதமாய் வாட்டிய வின் அதை செய்வது ஒரு கலை போல் வயதானவர்கள் குறிப்பிட்ட சிலர் தான் செய்வார்கள் படத்தில் காணப்படும் படலத்துக்கு வாலா நீளமாய் இருந்தால் நல்ல பிள்ளை போல் கூவிக்கொண்டு இரவிலும் சத்தம் போட வைப்பார்கள் அந்த அதிர்வு சத்ததில் மழை வெள்ளத்துக்கு வரும் பாம்புகள் நச்சு பூச்சிகள் பழைய இடத்துக்கு போகவைத்துவிடும் என்பார்கள் பேய்க்காட்டால் தான் . சிலநேரம் வேணுமெண்டே வாலாவை பாதியை அறுத்துவிடுவார்கள் அதன்பின் காத்தவராயர் கூத்துபோல் வெறிகாரன் போல் அந்த மூலைக்கு ம் அடுத்த மூலைக்கும் பாய்ந்து கொண்டு இருக்கும் விடிய விடிய வின் அதிர்வு வேறு . பகிடி இனிமேல்தான் குட்டி படலம்கள் வாலா முழுக்க பழைய பிளேடு களை கட்டி தொங்க விட்டவாறு உபயம் பாபர் சொப் சண்டை படலங்கள் வானில் திடிரென தோன்றும் அப்படி கூவும் படலம்களை அட்டாக் பண்ணி அறுந்து போக பண்ணும் இப்படி குளிர்கால பட்ட காலம் முழுக்க பருத்திதுறை தொடக்கம் தொண்டமானறு வரை கலகலப்பாய் போகும். அதிலும் ஐந்துமைல் நீளமும் அரைமைல் அகலமும் உள்ள வல்வெட்டித்துறையில் வீட்டுக்கு வீடு ஏதாவது பட்டம் ஏற்றி வைத்து இருப்பார்கள் பருத்தி முனையில் இருந்து சந்நிதியான் கோவில் வரை வாடைக்காத்து வந்தாலே காணும் ஒரே களேபரம்தான் பருத்திதுறை ஓடைக்கரையில் கொக்கு பட்டமும் பாராத்தை எனும் பட்டமும் கட்டுபவர்கள் வயதானவர்கள்தான் முன்பு பட்டப்போட்டி பருத்தித்துறையில்தான் நடப்பது உண்டு .