Everything posted by நிழலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கட்டிளம் காளைக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
நீதி மன்ற உத்தரவு மகிழ்ச்சியை தருகின்றது திராவிட நாகரிக்கத்தின் தொன்மையை நிரூபிக்கும் இந்த அகழ்வும் ஆராச்சியும் ஸ்ரீராம் எனும் பார்ப்பனரை வைத்து இந்துத்துவா திசை திருப்பும் செயலை திராவிடக் கட்சிகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் கட்சிகள் ஏன் இன்னமும் தடுக்க முனையவில்லை. திராவிடத்தை நிராகரிக்கும் சீமான் போன்றவர்களும் தமிழர் நலனுக்காக இதை கண்டிக்க கூடாதா (அல்லது இது தொடர்பாக ஏதும் செயற்பாடுகளில் உள்ளார்களா ?)
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடி அகழ்வாராய்ச்சி நிறுத்தமா?! தீர்ப்பு என்னவாகும்? பாலமுருகன். தெ வி.சதிஷ்குமார் சிவகங்கை மாவட்டம் கீழடியில், மூன்று மாதங்களுக்கு முன் மூன்றாம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. இந்த ஆய்வுப் பணி, இம்மாதம் 30-ம் தேதியோடு முடிவடைகிறது. இந்நிலையில், கீழடி குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் விசாரணையில் இருக்கிறது. முந்தைய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது குறித்தும், `கீழடியில் எடுக்கப்பட்ட பொருள்களை இங்கேயே வைத்து மியூசியம் அமைக்க முடியுமா?' என்பது குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த வழக்கு, இம்மாதம் 21-ம் தேதி (நாளை) நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் நீதிபதிகள் கீழடிக்கு வருவதாக திடீர் தகவல் கிடைத்தது. “கீழடியில் இதுக்குமேல் ஒன்றும் இல்லை. மனிதர்கள் குடும்பமாக வாழ்ந்ததற்கு எந்த அடையாளமும் இல்லை. தொழிற்சாலைகள் இருந்திருக்கலாம்” என்று சொல்லி, மூடத் தயாராகிவிட்டார் கீழடி தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் ஸ்ரீராம். நீதிபதிகள் சதீஸ்குமார், சுந்தரேசன் ஆகியோர் கீழடியைப் பார்வையிட்டார்கள். அப்போது நீதிபதிகள் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் “இங்கு, அருங்காட்சியகம் அமைக்க முடியுமா? அப்படி அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. திருட்டுச் சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கென பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆகையால், பராமரிப்பது கடினம். அதே நேரத்தில் இது அரசாங்கம் முடிவு பண்ணவேண்டிய விஷயம்'' என்றவரிடம், நீதிபதிகள் “இங்கு உள்ள பொருள்கள் எவ்வளவு வருடங்கள் பழைமையானவை?” என்று கேட்டார்கள். “ஒவ்வொரு லேயருக்கும் ஆண்டுகள் கணக்கிடப்பட்டுள்ளன. இங்கு உள்ள பானைகள் ஐந்நூறு ஆண்டுகளுக்குமேல் பழைமைவாய்ந்ததாக இருக்கலாம்” என்றார் அந்த அதிகாரி. மேலும், நீதிபதிகள் “என்னென்ன பொருள்கள் கிடைத்திருக்கின்றன?” என்று கேட்டார்கள். “இங்கு அதிக அளவில் பாசிமணிகள் கிடைத்திருக்கின்றன. தங்கம், செப்பு, உறைகிணறு, தந்தத்தால் ஆன சீப் போன்றவை கிடைத்திருக்கின்றன. பிராமி, தேவநாகரி எல்லாம் தமிழுக்குப் பிறகே உருவாகியிருக்கின்றன. மதுரையைச் சுற்றி தமிழ் எழுத்துகள் மேட்டுப்பட்டி, அரிட்டாபட்டி மாங்குளம் போன்ற ஏரியாக்களில் அதிகம் காணப்படுவதோடு, தென்னிந்தியாவில் மிக அதிக அளவில் தமிழ் எழுத்துகள் கிடைத்திருக்கின்றன” என்றார் ஸ்ரீராம். கீழடி அகழ்வராய்ச்சிக்கு முதல் மற்றும் இரண்டாம்கட்ட ஆய்வுப் பணிக்கு இடம் கொடுத்த விவசாயி சந்திரன், நீதிபதிகள் திரும்பிச் செல்லும்போது குறுக்கிட்டு, “அய்யா, நான் இந்த அகழ்வாராய்ச்சிக்கு நிலம் கொடுத்த விவசாயிகள்ல ஒருவன். எங்களை இந்த அதிகாரி தரக்குறைவாகப் பேசுகிறார். விவசாயிகளையும் தொழிலாளர்களையும் மரியாதை குறைவாக நடத்துகிறார். இதே அதிகாரி நீடித்தால் நாங்கள் யாரும் அகழ்வராய்ச்சிக்கு நிலம் கொடுக்க மாட்டோம். எனவே, பழைய அதிகாரி அமர்நாத் வந்தால் மட்டுமே ஆராய்ச்சிக்கு நிலம் கொடுப்போம்” என்று தெரிவித்த விவசாயி சந்திரன், “அய்யா, இந்த அகழ்வாராய்ச்சியை நிறுத்தக் கூடாது. இது எங்களுக்குப் பெருமையான விஷயம்” என்றார். கீழடி அகழ்வாராய்ச்சிக்கு இடம் கொடுத்த விவசாயிகளில் ஒருவரான சந்திரனிடம் பேசினோம்... “எங்களுக்கு வழங்கப்பட்ட கூலியில், மோசடி செய்யப்பட்டது. நிலம் கொடுத்தவர்களுக்கு மரியாதை இல்லை. ஸ்ரீராம் எங்களை அதிகார தோரணையில் மிரட்டுகிறார். இவருக்கு அகழ்வராய்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற எண்ணமே இல்லை. கீழடிக்கு எப்படியாவது மூடு விழா நடத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி நடந்துகொள்கிறார். அரசாங்கம் கொடுத்த நிதியில் பெரும்பான்மையான அளவை, அவரின் சொகுசான வாழ்க்கைக்குப் பயன்படுத்தியுள்ளார். இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை மறைத்திருக்கிறார். தங்கம் போன்ற பொருள்கள் கிடைத்திருப்பது கீழடியில்தான். அதிகாரி ஸ்ரீராம் வந்ததிலிருந்தே எடுக்கப்பட்ட பொருள்கள் மர்மமாகவே உள்ளன. ஆராய்ச்சியில் கிடைத்த பெரும்பான்மையான பொருள்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பது மட்டும் உண்மை. ஏனென்றால், எடுக்கப்பட்ட பொருள்கள் பத்திரிகைகளுக்கோ பொதுமக்களுக்கோ காட்சிப்படுத்தவில்லை. விவசாயிகள், நிலம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் அதிகாரி வேறு நபராக மக்களோடு மக்களாகப் பழகக்கூடியவராக இருக்கவேண்டும்” என்றார் விவசாயி சந்திரன். கீழடி தொல்லியல் துறை அதிகாரி ஸ்ரீராம் பேசும்போது, “நான்காம்கட்ட ஆய்வுப் பணிகள்குறித்து மத்திய தொல்லியல் துறைக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறோம். மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து, பணியைத் தொடர தொல்லியல் துறை அனுமதி வழங்கிய பிறகு மீண்டும் பணி தொடரும்” என்றார். http://www.vikatan.com/news/tamilnadu/102804-what-is-the-judgement-of-keezhadi-excavation.html
- தமிழைக் கட்டாயப் பாடமாக எப்போது அறிவிக்கும் தமிழக அரசு?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல நந்தன்
- சென்னையின் முகம்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் மகனை வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பான நன்றி!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளை கொண்டாடும் கிருபனுக்கும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
ஓவியர் வீரசந்தானம் ஐயா !
மறைந்த ஓவியர் வீர சந்தானம் ஆசைப்பட்டது இதற்குத்தான்...! கே.பாலசுப்பிரமணி "அவ்வளவு லேசில் என் உயிர் போகாது. தனி ஈழத்தை பார்த்துவிட்டுதான் இந்த உயிர் பிரியும்'' என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருப்பார் வீர சந்தானம். அவரது மறைவு காரணமாக தமிழ் சமூகம் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளது. விருப்ப ஓய்வு ஓவியர் வீர சந்தானம், கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோவில் என்ற ஊரைச் சேர்ந்தவர். நவீன ஓவியராக, சமூகப் போராளியாக அறியப்பட்டவர். மத்திய நெசவாளர் மையத்தில் பணியாற்றியவர். இந்த மையத்தின் சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றியவர். 25 ஆண்டுகள் பணிக்குப் பின்னர், தமிழ் சமுதாயத்துக்குத் தொண்டு செய்யவேண்டும் என்ற அக்கறையோடு தானாக பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். தஞ்சை அருகே விளாரில் முள்ளிவாய்க்கால் நினைவு இடத்தில் உள்ள சிற்பங்களுக்கான ஓவியங்களை வரைந்தவர். பாலுமகேந்திராவின் சந்தியா ராகம் திரைப்படத்தில் நடித்தவர். பீட்சா உட்பட மேலும் பல படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகராக... கடந்த 2015-ம் ஆண்டு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் உடல் நலம் தேறினார். ஈழத்தமிழர்களுக்கான கருத்தரங்குகள் பலவற்றில் பங்கேற்றிருக்கிறார். கி.ராஜநாராயணன் எழுதி, இயக்குநர் வ.கெளதமன் இயக்கிய வேட்டி என்ற குறும்படத்தில் வீர சந்தானம் நடித்திருக்கிறார். வீர சந்தானம் மறைவை அடுத்து தமிழ் இன உணர்வாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர். வ.கெளதமனிடம் வீர சந்தானத்தின் நினைவுகள் குறித்து கேட்டோம். "தம் வாழ்நாள் முழுக்க, தமிழ், தமிழ் இனம், தமிழ் ஈழ விடுதலை என வாழ்ந்த ஒரு தூரிகைக் கலைஞர். தம்முடைய மனைவி மனநிலை சரியில்லாத நிலையில் கூட, ஒரு குழந்தையைப் போல காதல் மனைவியைப் பார்த்துக்கொண்டவர். கூட்டங்களில் பங்கேற்க செல்லும்போது, தம் மனைவியைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைத்து விட்டுச் செல்வார். ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும், உடனே வீட்டுக்குத் திரும்பி மனைவியை கவனித்துக்கொள்வார். குறும்பட நாயகர் ஒரு முறை உடல் நிலைக்குறைவாக இருந்தபோது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். வெளிச்சம் படக்கூடாது என்று கூறி இருந்தனர். அந்த சமயத்தில் லயோலா கல்லூரி மாணவர்களுக்காக, கி.ராஜநாராயணன் கதையை வேட்டி என்ற பெயரில் குறும்படமாக நான் எடுத்தேன். அந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டேன். மருத்துவர்கள் வெளியே சொல்லக் கூடாது என்று அறிவுறுத்தி இருப்பதைச் சொன்னார். என்னை கொல்லப்பார்க்கிறாய் என்றும் சொன்னார். அப்படி இல்லை. நீங்கள் முழுக் கதையையும் கேளுங்கள், நீங்களே நடிக்க விரும்புவீர்கள் என்றேன். அதன்படி முழுக் கதையையும் சொல்லி முடித்த உடன், 'நான் இந்தப் படத்தில் நடித்த பிறகுதான் சாவேன்' என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார். என்னிடம் அவர், ஒரு பைசா கூட வாங்காமல் குறும்படத்தில் நடித்தார். தம் சொந்த செலவில் சென்னையில் இருந்து டாக்சியில் காஞ்சிபுரத்துக்கு நடிக்க வந்தார். அதேபோல குறும்படத்தின் இறுதிக் காட்சியில் மிகவும் ஆக்ரோஷமாக இந்த தேசத்தை நினைத்து காரி உமிழ்வது போன்ற காட்சி இருந்தது. அதில் ஆக்ரோஷமாக அவரால் கத்த முடியுமா என்று நினைத்தேன். அப்போது அவர், அதை மட்டும் டப்பிங்க் மூலம் குரல் கொடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நான், இல்லை நீங்களே சொன்னால்தான் சரியாக இருக்கும் என்றேன். அதன் படி வேட்டி படத்துக்காக குரல் கொடுத்தார். போய்வா என் கதாநாயகனே தமிழினத்துக்காக உயிர்கொடுத்துப் போராடியவர். இந்த மண்ணில் இன்றைக்கு அவர் உயிரை விட்டிருக்கிறார். என்னை வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைத்தவர். தமிழ் உணர்வோடு நான் இருக்க வேண்டும் என்று விரும்பினார். உலகம் முழுக்க இருந்து வீர சந்தானம் இழப்பு பற்றி என்னிடம் கேட்டு வருகின்றனர். போய் வா என் கதாயாநாயகனே, உன் ஆன்மா அமைதியாகட்டும் உன் சொல், உன் செயல் அசராமல் பின் தொடர்கிறோம் போய்வா http://www.vikatan.com/news/tamilnadu/95449-this-is-the-last-wish-of-artist-veerasanthanam.html?artfrm=related_article
- பெயர் மாற்றங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்!
-
சிரிக்க மட்டும் வாங்க
எனக்குத் தெரியாமல் ஆர் வீடியோ எடுத்தது?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமேக்கு இனிய (பிந்திய) பிறந்த தின வாழ்த்துகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு பிந்திய பிறந்த தின வாழ்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரதி புங்கைக்கு இன்னுமொருக்கா பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்த தினத்தினை கொண்டாடிய நுணாவுக்கும், தமிழ் சிறிக்கும் என் பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள். நெடுக்கருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். இது 'தலை' பிறந்தநாள் என்பதால் துணைவியுடன் மகிழ்வாக கொண்டாடுங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராசவன்னியனுக்கும் அக்கினிக்கும் என் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அக்னியஷ்த்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் பிறந்த நாளுக்கு வாழ்த்திய நந்தன், ஈழப்பிரியன், வந்தியத்தேவன், புங்கை, ஜீவன், நிலாமதி அக்கா, தமிழ் சிறி, கிருபன், நவீனன், யாயினி,விசுகு, தமிழினி, ராசா வன்னியன், சுவி அண்ணா ஆகிய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி நிழலியானந்தாவின் ஆசிரமத்தில் சிஷ்யைகளினதும் சிஷ்யர்களினதும் தேவ கூத்து விரைவில் நிகழ இருக்கின்றது. அதற்கு வாழ்த்தியவர்கள் இலவசமாக வந்து அருளையும் இன்ன பிற வரங்களையும் பெற முடியும்
-
மாவீரர் யாரோ என்றால்....
நான் இஞ்சாலப் பக்கதால முகநூலூடாக ஜூட் பிரகாசிடம் (பொன்னுக்கோனிடம்) "டேய் நீ எங்கட 'நைனா' வைப் பற்றி எழுதியதை யாழில் பிரசுரிக்கவா என்று கேட்க அவனும் " டோய்... இப்படி கேட்டு என்னை அவமானப்படுத்தாதே போடுடா நாயே" என்று அன்பாக பதில் போட நான் சரி என்று யாழுக்குள் பிரசுரிக்க வந்தால் பகலவன் நீங்கள் என்னை முந்தி விட்டீர்கள் ------ சேரலாதனின் வகுப்பில் தான் நானும் படித்தேன். கலகலப்புக்கும் குறும்புக்கும் PhD முடித்தவன்/ர். 2002 இற்கு முதல் ஒரு முறையும் பின் இன்னொரு முறையும் பின் 2004 அளவில் கொழும்பிலும் சந்திக்க முடிந்தது. அவரின் அண்ணாவை நீண்ட நாட்களின் பின் இங்கு சந்தித்தேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துகள் வாத்தியார்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சசி வர்ணத்துக்கும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
-
சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இத் திரியில் 1000 ஆவது பதிவாக தலைவரின் படத்துடன் அவர் பெருமை பற்றி பதிவிட்டதற்கு மிக்க நன்றி தமிழரசு! - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.