Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
- டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
- சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!
- சி.ஐ.டி.யில் ஆஜரான கெஹெலிய!
சி.ஐ.டி.யில் ஆஜரான கெஹெலிய! முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார். தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஆஜரானதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டது. இரண்டு மூத்த அரச அதிகாரிகளின் உதவியுடன் போலி ஆவணங்களை உருவாக்கி 22,500 தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசி குப்பிகளை ஒரு மருந்து நிறுவனம் இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடி விசாரணையைத் தொடங்கிய பின்னர், அவர் பல சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், மேற்படி தரமற்ற மருந்தை இறக்குமதி செய்ததன் மூலம் ரூ.130 மில்லியன் நிதி மோசடி நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2025/1428016- இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க மாட்டோம் - ஜனாதிபதி
சட்டத்தை மதித்து நடக்கும் சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும்! – ஜனாதிபதி தெரிவிப்பு, ”கையூட்டல் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால் அதிகாரிகளும் விரைவில் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும்” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ‘தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029’ வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது நாட்டின் அரச நிறுவன கட்டமைப்பின் கௌரவம் மற்றும் பெறுமதிகளை அழித்து, கையூட்டல் மற்றும் ஊழல் ஆட்சி மேலோங்கியிருந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் அரச சேவையில் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன் அதிகாரிகள் இனியும் மாறத் தயாராக இல்லையெனில், மே மாதத்திற்குப் பின்னர் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஊழலுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியல் பழிவாங்கல் அன்றி, மனிதாபிமான கடமை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ”சட்டத்தை மதிக்கும், சட்டத்திற்கு அஞ்சும் சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும், நாட்டிலிருந்து கையூட்டல் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொறுப்பை அடுத்த தலைமுறையின் மீது சாட்டாமல் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அதற்குத் தீர்வு அளிக்கப்படும்” எனவும் ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார். மேலும்” மக்களின் ஒவ்வொரு ரூபாய்க்கும் பொறுப்புக்கூறும் வகையிலான தேசிய நிகழ்ச்சி நிரலின் மூலம் இலங்கையை உலக நாடுகளுக்கு முன்பாக உயர்த்தி வைக்கும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1428143- யாழில் கடற்றொழில் அமைச்சரின் வருகைக்காகக் காத்திருந்த மீனவர்களுக்கு ஏமாற்றம்!
யாழில் கடற்றொழில் அமைச்சரின் வருகைக்காகக் காத்திருந்த மீனவர்களுக்கு ஏமாற்றம்! யாழ், சுழிபுரத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,வருகை தரவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், அவரது வருகைக்காக வெகுநேரம் காத்திருந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று முன் தினம் சுழிபுரம் காட்டுப்புலம் மீனவர்களை காலை 10 மணியளவில் கடற்தொழிலாளர் மண்டபத்தில் ஒன்று கூடுமாறும், கடற்றொழில் அமைச்சர் உட்பட்ட குழு மூன்று வாகனங்களில் வருகை தரவுள்ளனர் எனவும், அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு பிரதேச கடற்றொழில் பரிசோதகர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சரின் வருகைக்காக காலை 10 மணியிலிருந்து பி.ப 2 மணி வரை மீனவர்கள் காத்திருந்துள்ள நிலையில் அவர்கள் வருகை தரப்போவதில்லை எனத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனையடுத்து மீனவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது அப்பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428122- ரணில் ஜனாதிபதியாக இருந்திருந்தால் 44% அமெரிக்க வரியை ஒரே நாளில் நீக்கியிருப்பார் – ராஜித
ரணில் ஜனாதிபதியாக இருந்திருந்தால் 44% அமெரிக்க வரியை ஒரே நாளில் நீக்கியிருப்பார் – ராஜித ரணில் விக்ரமசிங்க இன்னும் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இலங்கை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 44% வரியை ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். யூடியூப் அலைவரிசை ஒன்றுக்கு அளித்த செவ்வியின் போது பேசிய அவர், பில்லியனர் தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் ஆலோசனையின் பேரில் ட்ரம்ப் நிர்வாகத்தின் போது இந்த வரி விதிக்கப்பட்டதாகக் கூறினார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர்களில் எலோன் மஸ்க் ஒருவர் என்றும், அந்த வலுவான நட்பைப் பயன்படுத்தி இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்றும் அவர் மேலும் கூறினார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இல்லாததால் இலங்கை அந்த வாய்ப்பை இழந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். ரணில் விக்ரமசிங்கே பதவியில் இருந்திருந்தால், 44% வரியை முழுமையாக நீக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் 24% ஆகக் குறைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1428090- யாழில். 35 ஆண்டுகளின் பின் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி!
யாழில். 35 ஆண்டுகளின் பின் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி! யாழ்.வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியானது கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு செல்லும் நிலைமை காணப்பட்டு வந்த நிலையில் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுமார் 15 வருட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் குறித்த வீதியானது இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் , பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டப்பட்டுள்ளது. குறித்த வீதி ஊடாக காலை 06 மணி முதல் மாலை 05 மணி வரை மாத்திரமே மக்கள் பயணிக்க முடியும் என்றும் வீதியில் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் வாகனத்தினை நிறுத்துதல், வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் நடைபயணம் மற்றும் பேருந்து தவிர்ந்த பாரவூர்திகள் குறித்த வீதியூடாக செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மாத்திரமே பயணிக்க வேண்டும். சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனும் அறிவுறுத்தல் பதாகை வீதியில் தமிழ் மொழியில் எழுதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428116- ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்?- ரஜினி விளக்கம்
ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்?- ரஜினி விளக்கம். மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று, ‘ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர்’ என்ற ஆவணப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த முன்னோட்டக் காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் ஆர்.எம்.வீரப்பன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு எதிராக நான் குரல் கொடுத்ததற்கு சில காரணங்கள் இருந்தால்கூட, இந்த காரணம் முக்கியமானது. இதுகுறித்து ஜெயலலிதாவிடம் நான் பேசுவதாக ஆர்.எம்.வி.யிடம் கூறினேன். ஆனால், ஜெயலலிதா ஒரு முடிவெடுத்தால் மாற்ற மாட்டார், அவரிடம் பேசி உங்கள் மரியாதையை நீங்கள் இழக்க வேண்டாம். அப்படி சொல்லி அங்கு சேர வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துவிட்டார்” என்றார். https://athavannews.com/2025/1428070- பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்களை வாங்கும் இந்தியா!
பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்களை வாங்கும் இந்தியா! பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது. விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு பேச்சு வார்ததை நடத்தி வருகின்றது. இந்நிலையில், பிரான்சிடம் இருந்து இந்திய பெறுமதியில் 63,000 கோடி ரூபாய் செலவில் 26 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அந்தவகையில் ஒற்றை இருக்கை கொண்ட 22 விமானங்கள், இரண்டு இருக்கை கொண்ட 4 விமானங்கள் என மொத்தம் 26 ரபேல் விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதுதொடர்பாக இந்தியா, பிரான்ஸ் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428076- ஹொலிவூட் திரைப்படங்களுக்குச் சீனாவில் தடை விதிக்கத் தீர்மானம்!
ஹொலிவூட் திரைப்படங்களுக்குச் சீனாவில் தடை விதிக்கத் தீர்மானம்! சீன அரசு ஹொலிவூட் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 104% வரி விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் வணிகத்தில் திரைப்படத் துறை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக அமெரிக்காவில் எடுக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்கள், சீனாவில் அதிக அளவிலான வசூலைக் குவித்து வருகின்றன. இதன்காரணமாக ஏராளமான ஹொலிவூட் திரைப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டும் வருகின்றன. ஹொலிவூட் படங்கள் உலகளவில் செய்யும் வசூலில் 10% சீனாவில் இருந்து மட்டும் கிடைக்கிறது என்பதும் குறிப்பிட்டுக் கூறக் கூடிய விடயமாகும். இந்நிலையில் அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பின்மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான திரைப்பட வணிகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428021- சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!
சீனாவை தவிர பிற நாடுகளுக்கான வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தம். அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 125 வீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு கடந்த 2ஆம் திகதி அமெரிக்கா அறிவித்த புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை இரட்டிப்பாக்கியதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி வழங்கும் வகையில் சீனா இன்று அமெரிக்க பொருட்களுக்கு 84 வீத வரி விதிப்பை அமுல்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்கா சீன பொருட்களுக்கான வரியை 125 வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மருந்துப் பொருட்கள் மீதும் விரைவில் வரி உயர்வு மருந்துப் பொருள்கள் மீதான வரி உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் மருந்துப் பொருள்களின் உற்பத்தி அதிக அளவு இல்லையென்றாலும், மருத்துவத் துறை வணிகத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. இதனால், மற்ற நாடுகளின் மருத்துவ இறக்குமதிகளுக்கு விரைவில் புதிய வரியை டிரம்ப் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினருக்கான நிதி திரட்டும் விழாவின் இரவு உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி டிரம்ப், ”புதிய வரி விதிப்பின் மூலம் உலக நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன. இது அமெரிக்காவுக்குக் கிடைத்த வெற்றி. விரைவில் மருந்துப் பொருட்களுக்கான வரி உயர்வை எதிர்பார்க்கலாம். மருந்துப் பொருட்களின் விற்பனை சந்தையாக அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிப்பதால், இந்த விலையேற்றத்தால் உலக நாடுகள் நம்மிடம் வரவேண்டிய நிலை ஏற்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு மருந்து உற்பத்தி கணிசமாக இல்லாதது குறித்து நீண்ட காலமாக அமெரிக்கா வருந்திவரும் நிலையில், நாட்டிற்குள் அதிக மருத்துவத் துறை உற்பத்திகளைக் கொண்டுவர வரிகளை உயர்த்தும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. எஃகு, அலுமினியம், ஆட்டோமொபைல், தாமிரம் மற்றும் மின்னணு சில்லுகள் (சிப்) உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஏற்கனவே வரி உயர்வை அறிவித்துள்ள நிலையில், விரைவில் மருந்து பொருள்களுக்கும் புதிய வரி விதிக்கப்படும் என்ற டிரம்ப்பின் அறிவிப்பு சந்தை முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1428133- டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
இவதான்... உங்களுக்கு சிங்களம் கற்றுத்தரப் போகின்ற ரீச்சர். உங்கள் வீட்டிற்கே வந்து, வடிவாக சொல்லித் தருவார். சம்பளம் பெரிய பிரச்சினை இல்லை. இலவச கல்விதான். 😂 உங்களுக்கு ஓகேயா... அப்பிடி என்றால், நாளைக்கே ஆரம்பிப்பம். 🤣- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
பிள்ளையான் கைது செய்யப்பட்டமை வரவேற்கத்தக்கது - சாணக்கியன்.- டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
எனக்கு... சிங்கள மொழியில் கதை, கவிதை, கட்டுரை எழுதும் அளவிற்கு புலமை உண்டு. 😂 உங்களுக்கு வேணுமென்றால்... சிங்களம் படிக்க ஒரு ரீச்சரை ஒழுங்கு படுத்தி விடவா? 🤣- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
எனக்கு கிழக்கு மாகாணம் அவ்வளவு பரிச்சயம் இல்லை. காத்தான்குடி முஸ்லீம் மக்களை அதிகமாக கொண்டது என்று அறிந்தேன். களுவாஞ்சிக்குடி... தமிழர் பகுதியா முஸ்லீம்கள் பகுதியா என தெரியவில்லை. பிள்ளையான் கைதிற்கு, களுவாஞ்சிக்குடியில் வெடி கொளுத்தியது யார் என்று அறிய ஆவல்.- காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள்.- இரசித்த.... புகைப்படங்கள்.
ஆஸ்திரேலியாவின் மிதக்கும் காடு: ஒரு தனித்துவமான இயற்கை அதிசயம் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஹோம்புஷ் விரிகுடாவில், உலகின் மிகவும் பிரமிக்க வைக்கும் மற்றும் ஒளிச்சேர்க்கை நிலப்பரப்புகளில் ஒன்று அமைந்துள்ளது: இயற்கையால் "மிதக்கும் காடாக" மாற்றப்பட்ட ஒரு பழைய நீராவி கப்பல் SS Ayrfield. 1911 இல் ஐக்கிய இராச்சியத்தில் கட்டப்பட்ட இந்தக் கப்பல், 1912 இல் ஆஸ்திரேலியாவிற்கு வந்தது. பல தசாப்தங்களாக, இது ஒரு சரக்குக் கப்பலாகவும், இரண்டாம் உலகப் போரின் போது (1939-1945) பசிபிக் பகுதியில் உள்ள நேச நாட்டுப் படைகளுக்கு பொருட்களை கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டது.- நிர்மலா சீதாராமனுடன் சீமான் சந்திப்பா?
இன்று நடக்கும் சட்டப்பேரவையில் கூட கலந்து கொள்ளாமல் அவசரமாக மாமியை எதற்கு சந்திக்க வேண்டும். Anbu Raj @goshan_che 😂- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
2006 டிசம்பர் 15 இல், கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத், கொழும்பில் விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டு மட்டக்களப்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டார். இந்தக் கடத்தல் தொடர்பாகவே இன்று பிள்ளையான் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பிள்ளையான் குழு 2006-2009 காலப்பகுதிகளில் அரசின் தேவைகளுக்காக எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் அறிவோம். திருகோணமலையில் வர்ஷா என்கிற 6 வயதுக் குழந்தையின் கொடூர மரணம் இன்னும் நினைவிருக்கிறது. 2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13 ஆம் திகதி கண்கள், வாய், கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகின்றார் இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் பொலீசாரால் கொல்லப்படுகின்றார்கள், இவர்களின் பூரணமான விசாரனை நடத்தியிருந்தால் இதன் சூத்திரதாரியை அன்றே கைது செய்திருக்க முடியும். பிள்ளையானை இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இயக்கியது என்பதை சனல் 4 உறுதிப்படுத்தியது. பல கொலைகள் அந்தக் காலத்தில் சர்வ சாதாரணமாக நிகழ்ந்தன. ஆனால் இவற்றை இயக்கிய இதன் பின்னணியில் இருந்த மஹிந்த தரப்பு இது தொடர்பாக விசாரிக்கப்படுமா? அதே போல் இன்று கைது செய்த குற்றம் இடம்பெறும் போது மஹிந்தவோடு JVP அரசில் அங்கம் வகித்தது. அதற்கான பொறுப்புக்கூறலை நேர்மையாக செய்ய முடியுமா ? எங்களால் என்றுமே மறக்க முடியாத வர்ஷாவின் உடல் கண் கொண்டு பார்க்க முடியாத நிலையில் பார்த்த இடம் இதுவே. Malaravan Uthayaseelan- கருத்து படங்கள்
- சீனா மீது அமெரிக்கா 104% வரி; பங்குச் சந்தைகள் மீண்டும் சரிவு!
- பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழப்பு; சட்டத்தரணிகள் சங்கம் கவலை!
- அமெரிக்க வரியும் இந்திய – இலங்கை வர்த்தகமும்
- ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!
ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு! ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை அதிக இலாபத்தை ஈட்டக்கூடிய அரச நிறுவனமாக மாற்றுவதற்கான பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் கடன் முகாமைத்துவத்துக்கான குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை இலாபகரமான நிறுவனமாக மாற்றுவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் செயல்பாட்டு இலாபம் இருந்தபோதிலும், தவறான நிர்வாக முடிவுகளால் நட்டத்தைச் சந்திக்கும் முன்னணி அரச நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த அரசாங்கம் இந்த நிறுவனத்தை தனியார்மயமாக்க எடுத்த தீர்மானத்தை மாற்றியமைத்து, தற்போதைய அரசாங்கம் அதை தேசிய விமான சேவையாக தொடர்ந்து செயற்படுத்தவும், புதிய நிர்வாகத்தின் கீழ் இலாபகரமான நிறுவனமாக மாற்றி, முன்னோக்கிக் கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளது. தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் தலைவர் சரத் கனேகொட மற்றும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் குழுவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். https://athavannews.com/2025/1427979 - டொனால்ட் ட்ரம்பிற்கு கடிதம் அனுப்பிய ஜனாதிபதி அநுர
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.