Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. புத்தாண்டின் இரு நாட்களில் 412 பேர் வைத்தியாசலையில் அனுமதி! புத்தாண்டின் இரண்டு நாட்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 412 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார். அவர்களில் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர். மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த நோயாளிகளில் 80 பேர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்த விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலானவை வீடுகளில் பதிவாகியுள்ளன. அந்த விபத்துகளில் காயமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 110 ஆகும். மேலதிகமாக வீதி விபத்துக்கள் காரணமாக 94 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2025/1428631
  2. ஒளரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாக்கக் கோரி ஐ.நாவுக்குக் கடிதம்! மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, அங்கு சில நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித்தோன்றல் என்று கூறும் யாகூப் ஹபீபுதீன் டூசி, ஷம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாப்பதை உறுதிசெய்யக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு கடிதம் எழுதியுள்ளார். முகலாயப் பேரரசரின் கல்லறை அமைந்துள்ள வக்ஃப் சொத்தின் பராமரிப்பாளர் என்றும் கூறும் இளவரசர் யாகூப், அந்தக் கல்லறை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக’ அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம், 1958இன் கீழ் பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், ‘இச் சட்டத்தின் விதிகளின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னத்தில் அல்லது அதற்கு அருகில் எந்தவோர் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம், மாற்றம், அழிவு அல்லது அகழ்வாராய்ச்சியையும் மேற்கொள்ள முடியாது. மேலும், இதுபோன்ற எந்தவொரு செயலும் சட்டவிரோதமாகவும் சட்டத்தின்கீழ் தண்டனைக்குரியதாகவும் கருதப்படும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில், 1972ஆம் ஆண்டு உலக கலாசார மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான யுனெஸ்கோ மாநாட்டில் இந்தியா கையெழுத்திட்டதை மேற்கோள் காட்டி, ‘அத்தகைய நினைவுச்சின்னங்களை அழித்தல், புறக்கணித்தல் அல்லது சட்டவிரோதமாக மாற்றுவது சர்வதேச கடமைகளை மீறுவதாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு, ஔரங்கசீப்பின் கல்லறைக்கு தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களின்படி முழு சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் ASI -க்கு உத்தரவிடுமாறு அவர் ஐ.நா. பொதுச் செயலாளர் அலுவலகத்தை வலியுறுத்தியுள்ளார். https://athavannews.com/2025/1428626
  3. ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அமெரிக்காவை சீரழித்துவிட்டார் ட்ரம்ப் – பைடன் குற்றச்சாட்டு. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதையடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். குறிப்பாக ட்ரம்ப் அண்மையில் விதித்த புதிய வரிக்கொள்கை உலகநாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தமது ஆட்சிக்காலம் நிறைவடைந்த பின்னர் முதல் முறையாக முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் உரையொன்றை நிகழ்த்தினார். இதன்போது ” ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அமெரிக்க அரசாங்க நிர்வாகத்தை டொனால்ட் ட்ரம்ப் சீரழித்து விட்டார்” என ஜோ பைடன் விமர்சித்துள்ளார். அத்துடன் அவசர அவசரமாக ட்ரம்ப் கொண்டுவந்த மாற்றங்களால், அமெரிக்கர்களுக்கு கிடைக்கப்பெறும் சலுகைகளும் பாதிக்கப்படும் என்று கூறினார். மேலும் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பேரழிவுகளை ட்ரம்ப் அரசு கொண்டுவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் வர்த்தகப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் சீனாவின் இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245 சதவீதமாக உயர்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428615
  4. ஈரானின் அணு ஆயுதம் குறித்து ஐ.நா. எச்சரிக்கை! ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அபாயகரமான நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரஃபேல் க்ரோஸி (Rafael Grossi) எச்சரித்துள்ளார். நாட்டின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டம் குறித்து ஈரானிய அதிகாரிகளுடன் முக்கியமான விவாதங்களுக்காக அவர் தெஹ்ரானுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த அறிக்கை வந்துள்ளது. பிரான்ஸ் செய்திச் சேவையான லு மொண்டேவிடம் பேசும் போது க்ரோஸி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து, ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் மற்றும் 2015 அணுசக்தி ஒப்பந்தத்துடன் அதன் இணக்கத்தை கண்காணிக்கும் பணியை சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு (IAEA) தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் பின்னர், ஈரான் அதன் யுரேனியம் செறிவூட்டல் நடவடிக்கைகளை கணிசமாக அதிகரித்துள்ளது. வொஷிங்டனின் உறுதியான நிலைப்பாடு இருந்தபோதிலும், ஈரான் தனது திட்டம் முற்றிலும் சிவிலியன் என்று நிலைநிறுத்துகிறது. இந்த நிலையில் ஈரானும் அமெரிக்காவும் சனிக்கிழமை (19) திட்டமிடப்பட்ட இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் நிலையில், க்ரோசியின் வருகை அதிகரித்த இராஜதந்திர நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகிறது. ஓமானில் நடைபெற்ற முதல் சந்திப்பை இரு தரப்பினரும் “ஆக்கபூர்வமானது” என்று வர்ணித்தனர். இருப்பினும் தெஹ்ரான் ரஷ்யாவுடன் ஆலோசனை நடத்துவதற்காக மொஸ்கோவிற்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளது. இதற்கிடையில், அமெரிக்காவுடனான வரவிருக்கும் சுற்று அணு ஆயுதப் பேச்சுவார்த்தைகள் இந்த வார இறுதியில் ரோமில் நடைபெறும் என்பதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. இது பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் குறித்த முந்தைய நிச்சயமற்ற தன்மையை நீக்குகிறது. ஈரானின் அணுசக்தி முன்னேற்றம் ஆயுதமயமாக்கலில் குறுக்கிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான தொழில்நுட்ப பாதுகாப்புகள் மற்றும் சரிபார்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும். https://athavannews.com/2025/1428578
  5. சீனா மீது மீண்டும் 245 சதவீதமாக வரியை உயர்த்திய அமெரிக்கா! அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் சீனாவின் இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245 சதவீதமாக உயர்த்தியுள்ளது. நேற்று முன் தினம் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சீன இறக்குமதிக்கான வரியை 145 சதவீதத்தில் இருந்து 245 சதவீதமாக உயர்த்தி அமெரிக்கா அறிவித்துள்ளது. பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான ‘உலகின் அரிய மண் தாதுக்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. தனது உற்பத்திக்கு அமெரிக்கா சீனாவையே அதிகம் சார்ந்துள்ளது. இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், மற்றும் பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’கிடம் இருந்து விமானங்கள் வாங்க தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது. மேலும் விமானம் தொடர்பான எந்த கருவிகளையும் அமெரிக்காவிடமிருந்து வாங்க வேண்டாம் எனவும் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது. இந்நிலையிலேயே சீன இறக்குமதிக்கான வரியை ஏற்கனவே விதித்த 145 சதவீதத்தில் இருந்து 245 சதவீதமாக உயர்த்தி அமெரிக்கா அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பு உலகரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தகக்து. https://athavannews.com/2025/1428589
  6. இப்படி நடக்க சாத்தியமே இல்லை. தெலுங்குப் படத்திலும்…. இப்படித்தான் சில காட்சிகளை எடுப்பார்கள்.
  7. உள்ளூராட்சி தேர்தல் முடிந்து, மாகாணசபைத் தேர்தல் வரும் போது… சுமந்திரன், சத்தியமூர்த்திக்கு இடையில் யாருக்கு என்ன பதவி என்ற, புடுங்குப்பாடு சூடு பிடிக்கும். சத்தியமூர்த்தியின் செயலாளர் பதவியை… சுமந்திரன் ஆட்டையை போட்ட பின், சத்தியமூர்த்தியின் பேச்சு, மூச்சையே காணவில்லை. அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப் பட்டு விட்டார் போலுள்ளது. என்ன செய்வது… சத்தியமூர்த்தி முன்பே சுமந்திரனின் சுத்துமாத்து குணம் தெரிந்து உசாராக இருந்திருக்க வேண்டும். கோட்டை விட்டு விட்டார். அனுபவிக்கட்டும்.
  8. புலவர்... இங்கு சுமந்திரனுக்கு முட்டுக் கொடுப்பதற்காக... ஜஸ்ரின் கோமாவில் இருந்து வந்தவர் போல், நடிக்கின்றார். இப்படி இவர் நடிப்பது, இது முதல் முறையும் அல்ல. நன்றாக தெரிந்து கொண்டே... பித்தலாட்டம் செய்வது அவரது குணாதிசயம். அதனால் அவருக்கு பதில் எழுதி விளங்கப் படுத்துவது, நேர வீண் விரயம் என்பதால், இங்கு ஒரு சிலருக்கு , நான் பதில் எழுதி மினைக்கெடுவதில்லை. ஆர்வம் இருந்தால்... 2015´ம் ஆண்டு வந்த செய்திகளை புரட்டிப் பார்க்கட்டும்.
  9. சிங்கம், புலிக்கு கிட்டப் போய்... எண்ணை வைக்க ஒருவருக்கும் "தில்" இல்லை. கிட்டப் போனால், கடித்து குதறி விடும் என்பதே உண்மை. அப்பாவி பிராணிகளின் மீதுதான், இவர்களின் சம்பிரதாயம் எல்லாம்.
  10. ஏராளன்... நீங்களும் சிங்கத்துக்கு ஈனம் எண்ணை வைக்கவில்லை என அப்பாவிடம் கேட்டீர்களா. அதற்கு அப்பா என்ன பதில் சொன்னார் என அறிய ஆவலாக உள்ளது. 😂
  11. ஆமை, யானைக்கு எல்லாம் எண்ணை பூசியவர்கள், ஏன்... சிங்கம், புலி, கரடி, முதலைக்கு எல்லாம் எண்ணை பூசவில்லை. 😂 முக்கியமாக.... சிங்கத்தின் வம்சத்தில் வந்த சிங்களவர், சிங்கத்தை மறந்தது மிக வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியது. 🤣
  12. மேடத்துக்கு விரயச் சனி மீனத்துக்கு ஜென்மச் சனி, கும்பத்துக்கு பாதச் சனியாம்... என்று யாழ். பெருமாள் கோயில் ஐயர் சொல்லுறார். 😂 பிள்ளையான்... இதில் என்ன ராசி என்று, உதயகம்மன்பில நீதிமன்றத்தில் வாதாடும் திறமையில்தான் உள்ளது. அவரும்... நாமல் ராஜபக்ச மாதிரியான வக்கீல் என்றால், பிள்ளையானுக்கு மரணச்சனி தான். 🤣 எள்ளெண்ணை எரித்தாலும், தப்ப ஏலாது. 😂
  13. சுத்துமாத்து கள்ளன் சுமந்திரனும், அவரின் அல்லக்கை சி.வி.கே. சிவஞானமும் தமிழரசு கட்சியின் பின்கதவால் வந்து.. செயலாளர், தலைவர் பதவியில் இருக்கும் போது... பதவி எதுவும் இல்லாமல் இருக்கும் ஸ்ரீதரன், கட்சியில் இருந்து ஒருவரை நீக்கும் அதிகாரத்தை எப்படி பெற்று இருக்க முடியும். ஒரு கட்சியின் நடை முறை எப்படி இருக்கும் என்பதைக்கூட அறியாதவரா நீங்கள். தட்டசசு கிடைத்தால்... எதையாவது எழுதி விட்டுப் போவதா? இனியாவது நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை எழுதப் பாருங்கள்.
  14. அலன்டீன் மீது சுமந்திரன் மேற்கொண்ட நடவடிக்கைகளை, சுகிர்தன், சயந்தன் மீது மேற்கொள்ளாமை ஏன்? திருமணத்தின் பின் ஒரு பெண்ணை கள்ளக்காதல் மூலம் ஏமாற்றி அந்த பெண்ணின் வீட்டில் உணவு உண்டு, அவளுடன் இன்பமடைந்து அந்த பெண்ணுக்கு ஒரு பிள்ளையை குடுத்து பின் அந்த பெண்ணை ஏமாற்றி அந்த பெண்ணை தற்கொலை செய்ய வைத்த சுமந்திரனின் வலதுகையான சுகிர்தன் ஏன் இதுவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை? சுகிர்தனும் பொலீஸால் கைது செய்து விசாரணை செய்யப்பட்டவன் தானே? அதே போல் மருதனார் மடத்தில் உள்ள விடுதியில் சிங்கள விபச்சாரிகளை கொண்டுவந்து சரக்கடித்து மக்களால் சம்பவ இடத்தில் வைத்தே பிடித்து நையப்புடைக்கப்பட்ட சுமந்திரனின் நெருங்கிய சகா பிரகாசை ஏன் இதுவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை? குறித்த விபச்சார வழக்கு தற்போதும் நீதிமன்றில் நடைபெற்றுவருகிறது. லிப்ஸ்ரிக் புகழ் சயந்தன் சாவகச்சேரியில் ஒரு பெண்ணை வானில் கடத்தி கற்பழிக்க முயற்சித்து மக்களால் பிடிக்கப்பட்டு அடித்து துரத்தப்பட்ட கள்ளன். இதே சயந்தன் கோபிகா என்ற பெண்ணை தன்னோடு வரச்சொல்லி அழைத்த Screenshot ஆதாரங்கள் சமுகவலைத்தளங்களில் 2016 ஆம் ஆண்டுகளில் வெளிவந்திருந்தது. இப்படியாக கேவலம் கெட்ட நபர்களுக்கு எதிராக ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? சுகிர்தனுக்கும், சயந்தனுக்கும் அப்போது மாவை சேனாதிராசா நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது அதை சுமந்திரன் வேண்டாம் என்று தடுத்திருந்தார். இப்படியான சமூக விரோதிகளை கட்சியில் காப்பாற்றி வைத்திருக்கும் சுமந்திரன் இப்போதாவது இந்த பொம்பிளை கள்ளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பாரா? யாழ்ப்பாணம்.com
  15. புலி… பிறகு, நிறைய முட்டை🥚 இட தொடங்கி விடும். 😂
  16. ஜேர்மனியில் உள்ள மிருகக்காட்சி சாலையில் உள்ள புலி ஒன்று, மூன்று முட்டைகளை இட்ட அதிசயம். 😮 இதனை நம்பாதவர்கள், இரத்தம் கக்கி சாவார்கள். 😂
  17. நமக்குள் நிறம் மட்டுமே ஒற்றுமை. 🥰 ஆடு, கன்றுக் குட்டி, நாய்.
  18. அட... இந்த அலன்டீலன், ஆபிரகாம் சுமந்திரனின் கட்சியாம். உப்பிடியானதுகளின் புத்தி, அப்பிடித்தானே போகும். கறுமம் பிடிச்சதுகள். 😡 // Alan என்று அழைக்கப்படும் திரு. அலன்டீலன் கிளிநொச்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் 16 மாணவர்களுக்கு எதிராக இடம் பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில் அங்கத்தவர். குற்றச்சாட்டின் பாரதூர தன்மையை கருத்திற் கொண்டு அவர் உடனடியாக கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்படுகிறார். // யாழ்ப்பாணம்.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.