Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இரண்டு வருடங்களுக்கு முன்பு... இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவரும், விமான கதவை... ரொய்லற் கதவு என நினைத்து திறக்க முயற்சித்தவர். இவ்வளவிற்கும்... அவர் கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றவர். அந்த மோட்டு சிங்களவனுடன் ஒப்பிடும் போது... ஜோர்தானிய பிரஜை, எவ்வளவோ திறம். 😂
  2. பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழப்பு.
  3. அஜித்குமாரின் 200 அடி கட் அவுட் சரிந்து விழுந்து விபத்து! சோகத்தில் ரசிகர்கள். நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வரும் 10 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், நெல்லையிலுள்ள திரையரங்கொன்றில் வைக்கப்பட்ட 200 அடி உயரமான கட் அவுட் (Cutout) ஒன்று இன்று திடீரென சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திரையரங்கிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கட் அவுட் முறையாக வைக்கப்படாமையே இவ்விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் குறித்த விபத்தின் போது உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கட் அவுட் சரிந்து விழும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வரும் நிலையில் ” குறித்த கட்அவுட் கலாச்சாரம் ஒழிய வேண்டும் என்றும் இதனால் உயிர் பலி ஏற்படக்கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இத் திரைப் படத்தில் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதோடு ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1427711
  4. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை அர்த்தமற்றது – ஈரான்! இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்காவுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை “அர்த்தமற்றது” என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) விவரித்துள்ளார். கடந்த மாதம் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனிக்கு அனுப்பிய கடிதத்தில், தெஹ்ரான் அணு ஆயுதங்களை வாங்குவதைத் தடுக்கும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நம்புவதாக ட்ரம்ப் கூறியதை அடுத்து ஈரான் வெளிவிகார அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. கடந்த வாரம் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அல்லது குண்டுவீச்சுக்கு உட்பட வேண்டும் என்ற எச்சரித்திருந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (06) இது குறித்து பதிலளித்துள்ள அப்பாஸ் அரக்சி, “பேச்சுவார்த்தைகளை நீங்கள் விரும்பினால், அச்சுறுத்துவதன் பயன் என்ன?”, பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுப்பதில் வொஷிங்டனின் நேர்மையையும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், ஐ.நா. சாசனத்தை மீறி, தொடர்ந்து பலத்தைப் பயன்படுத்துவதை அச்சுறுத்தும் மற்றும் முரண்பாடான நிலைப்பாடுகளை ஏற்கும் ஒரு தரப்பினருடன் நேரடி பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றவை என்று ஈரானிய வெளிவிகார அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, ட்ரம்பின் போர் அச்சுறுத்தலுக்கு சனிக்கிழமை பதிலளித்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைவர் ஹொசைன் சலாமி, நாடு போருக்கு “தயாராக” இருப்பதாகக் கூறினார். 2018 ஆம் ஆண்டில், ஜனாதிபதியாக தனது முதல் பதவிக் காலத்தில், ஈரானுக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களுக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தமான கூட்டு விரிவான செயல் திட்டத்தை ட்ரம்ப் இரத்து செய்தார். இதன் மூலம் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஈடாக அந்நாட்டின் மீதான தடைகளைத் தளர்த்த முடிந்தது. எனினும், ஈரான் அணுசக்தி தளங்களை ஆய்வு செய்யும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் கூற்றுப்படி, ஈரான் ஒப்பந்தத்தின் கீழ் அதன் உறுதிமொழிகளில் இருந்து பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1427692
  5. தனது காணியில் விளைந்த முருங்கைக் காய்களை, சந்தைக்கு கொண்டு செல்லும் பெண்.
  6. இந்தியப் பிரதமர் மோடி, இன்று அனுராதபுரத்தில் புத்த பிக்குவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். சென்ற முறை மோடி... இலங்கைக்கு வந்த தருணம் நல்லூர் கோவிலுக்கு உள்ளே போக விரும்பினார். கோவிலுக்குள் போவதென்றால்... மேல் சட்டையை கழட்டி விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று நல்லூர் கோவில் நிர்வாகம் உறுதியாக சொல்லியதால்... நல்லூர் கோவிலுக்கு போகும் திட்டத்தையே கைவிட்டு விட்டார்கள். தனது மதத்துக்கு வளைந்து கொடுக்காத இந்தியப் பிரதமர், இன்று ஸ்ரீலங்கா பிக்குவின் காலை தொட்டு வணங்குகின்றார். இது, என்ன.. டிசைனோ தெரியவில்லை. 😂 துவக்குப் பிடியால்... பிடரியில் அடிக்கவில்லை என்று, நன்றி தெரிவித்தாரோ. 🤣
  7. இந்தியப் பிரதமர் மோடி, இன்று அனுராதபுரத்தில் புத்த பிக்குவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். சென்ற முறை மோடி... இலங்கைக்கு வந்த தருணம் நல்லூர் கோவிலுக்கு உள்ளே போக விரும்பினார். கோவிலுக்குள் போவதென்றால்... மேல் சட்டையை கழட்டி விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று நல்லூர் கோவில் நிர்வாகம் உறுதியாக சொல்லியதால்... நல்லூர் கோவிலுக்கு போகும் திட்டத்தையே கைவிட்டு விட்டார்கள். தனது மதத்துக்கு வளைந்து கொடுக்காத இந்தியப் பிரதமர், இன்று ஸ்ரீலங்கா பிக்குவின் காலை தொட்டு வணங்குகின்றார். இது, என்ன.. டிசைனோ தெரியவில்லை. 😂 துவக்குப் பிடியால்... பிடரியில் அடிக்கவில்லை என்று, நன்றி தெரிவித்தாரோ. 🤣
  8. இந்தியப் பிரதமர் மோடி, இன்று அனுராதபுரத்தில் புத்த பிக்குவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். சென்ற முறை மோடி... இலங்கைக்கு வந்த தருணம் நல்லூர் கோவிலுக்கு உள்ளே போக விரும்பினார். கோவிலுக்குள் போவதென்றால்... மேல் சட்டையை கழட்டி விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று நல்லூர் கோவில் நிர்வாகம் உறுதியாக சொல்லியதால்... நல்லூர் கோவிலுக்கு போகும் திட்டத்தையே கைவிட்டு விட்டார்கள். தனது மதத்துக்கு வளைந்து கொடுக்காத இந்தியப் பிரதமர், இன்று ஸ்ரீலங்கா பிக்குவின் காலை தொட்டு வணங்குகின்றார். இது, என்ன.. டிசைனோ தெரியவில்லை. 😂
  9. ஸ்ராலினின் உண்மையான பெயர் வெள்ளைச்சாமி என்று எங்கோ வாசித்த நினைவு. பின்.. கருணாநிதியின் "தில்லாலங்கடி" வேலையால் ஸ்ராலின் என்ற பெயர் வைக்கப்பட்டது என்கிறார்கள்.
  10. 1. அம்மா 9 மாதம் சுமக்கிறார், அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார், இருவரும் சமம், ஏன் அப்பா பின்னால் இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 2. அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பம் நடத்துகிறார், அப்பா தனது சம்பளத்தை எல்லாம் குடும்பத்திற்காக செலவு செய்கிறார், இருவருமே சமமான உழைப்பு, இன்னும் அப்பா ஏன் பின் தங்குகிறார் என்று தெரியவில்லை. 3. அம்மா உனக்கு என்ன வேண்டுமானாலும் சமைப்பார், அப்பா உனக்கு என்ன வேண்டுமானாலும் வாங்கித் தருவார், அவர்களின் அன்பு சமமானது, ஆனால் தாயின் அன்பு மேன்மையாகக் காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்னால் இருக்கிறார் என்று தெரியவில்லை. 4. போனில் பேசினால் முதலில் அம்மாவிடம் பேச வேண்டும், கஷ்டத்தில் இருக்கும் போது அம்மா என்று அழுவாள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள், ஆனால் மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில் கொள்ளவில்லை என்று அப்பா ஒருபோதும் வருத்தப்படவில்லையா? குழந்தைகளின் அன்பைப் பெறுவதில் தந்தைகள் ஏன் பின்தங்குகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 5. அலமாரியில் கலர்புல் புடவைகள், நிறைய குழந்தைகளின் உடைகள் இருக்கும் ஆனால் அப்பாவின் உடைகள் மிகக் குறைவு, அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, இன்னும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. 6. அம்மாவுக்கு நிறைய தங்க ஆபரணங்கள் உள்ளன, ஆனால் தந்தைக்கு திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட ஒரே ஒரு மோதிரம் மட்டுமே உள்ளது. இன்னும் குறைந்த நகைகள் பற்றி அம்மா புகார் செய்யலாம் மற்றும் அப்பா இல்லை. அப்பா ஏன் பின்னால் இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை. 7. அப்பா தன் வாழ்நாள் முழுவதும் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள கடினமாக உழைக்கிறார், ஆனால் அங்கீகாரம் என்று வரும்போது, அவர் ஏன் எப்போதும் பின்தங்குகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. 8. இந்த மாதம் காலேஜ் டியூஷன் கட்ட வேண்டும் என்று அம்மா சொல்கிறார், பண்டிகைக்கு எனக்கு புடவை வாங்கித் தாருங்கள், ஆனால் அப்பா புது உடை பற்றி யோசிக்கவே இல்லை. இருவருக்கும் சமமான அன்பு இருக்கிறது, அப்பா ஏன் பின்தங்குகிறார் என்று இன்னும் தெரியவில்லை. 9. பெற்றோர்கள் வயதாகிவிட்டால், குழந்தைகள் சொல்கிறார்கள், அம்மா வீட்டு வேலைகளைக் கவனிக்க குறைந்தபட்சம் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அவர்கள் அப்பாவுக்கு பயனில்லை. 10. குடும்பத்தின் முதுகெலும்பு என்பதால் அப்பா பின்னால் இருக்கிறார். மேலும் நமது முதுகெலும்பு நம் உடலுக்குப் பின்னால் உள்ளது. ஆனால் அவரால் நாம் தனித்து நிற்க முடியும். ஒரு வேளை, இதனால்தான் அவர் பின்வாங்குகிறார்...!!!! யார் எழுதியது என்று தெரியவில்லை, ஆனால் அருமை. அனைத்து தந்தையர்களுக்கும் சமர்ப்பணம்* Jay R Jayakumar
  11. பிரதமர் மோடி இலங்கையுடன் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்திட்டிருக்கிறார். இதில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமும் ஒன்றாகும். இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் சிங்கள ராணுவத்திற்கு பயிற்சி மற்றும் உதவிகளை வழங்க வழி செய்கிறது. இது தமிழ் மக்களுக்கு ஒரு தீங்கான ஒப்பந்தம் ஆகும். அதனால் வைகோகூட பிரதமர் மோடி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் மோடியை சந்தித்த எமது தலைவர்கள் ஒருவர்கூட இதற்கு எதிர்ப்போ அல்லது கண்டனமோ தெரிவிக்காதது ஆச்சரியமாக இருக்கிறது. இது ஏன்? தோழர் பாலன்
  12. யார் அணுகுவது என்று கடைசி வரை சொல்லவில்லை. இப்படித்தான் முன்பு இருந்த ஆட்சியாளர்களும் சொன்னார்கள். இதற்கு முடிவு கிடையாது போல. //Tharcius Emmanuvel Dixict Pachchake. மனிதாபிமானமமுறை பேணுவதாயின் முதலில் எல்லை தாண்டுபவர்களை தடுப்பது பாரத பிரதமரின் முதற்பணி. ஆகாயத்தில் செய்மதி அனுப்பும் உங்களுக்கு உங்கள் நாட்டு மக்களின் வாழ்வாதரத்தை உங்கள் நாட்டின் வளங்களால் மேம்படுத்த முடியாமலா இலங்கையின் வழங்களை நாடுகின்றார்கள்.//
  13. இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் வெற்றிகரமாக நிறைவு! இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்‍தை முடித்துக் கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (06) பிற்பகல் தாயகம் திரும்பியுள்ளார். இந்த விஜயம் குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, இலங்கைக்கான எனது விஜயத்தின்போதான அன்பான அரவணைப்புக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மக்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கொழும்புக்கான விஜயமாக இருந்தாலும் சரி, அநுராதபுரத்துக்கான விஜயமாக இருந்தாலும் சரி இரண்டுமே நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாசார, ஆன்மீக மற்றும் நாகரீக உறவுகளை மீள உறுதிப்படுத்துவதாகவே அமைந்தன. இந்த விஜயம் நமது இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக உத்வேகத்தை தரும் – என்று பதிவிட்டுள்ளார். ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான அரச விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இன்று (06) முற்பகல் அநுராதபுரம் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்தியாவிற்குப் புறப்பட்டுச் சென்றார். இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கை்கு அரச பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்த நான்காவது தடவை இதுவாகும் என்பதுடன், இந்த அரச விஜயத்தினால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார, கலாசார மற்றும் வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கிடையிலான பன்முக ஒத்துழைப்புகளும் பலப்படுத்திக்கொள்ளப்பட்டன. அத்துடன், அயலவருக்கு முதலிடம் என்ற இந்திய வெளிவிவகாரக் கொள்கை மற்றும் மஹாசாகர் நோக்குக்கு அமைவாக, இராஜதந்திர விவகாரங்களில் இலங்கைக்கு சிறப்பிடம் உண்டு என்பதையும் இந்தியப் பிரதமரின் விஜயத்தினால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விஜயம் பல முக்கியமான பல்வேறு எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு உடன்பாடுகளை எட்டக்கூடியதாக அமைந்ததுடன், இந்த ஒத்துழைப்புகளின் வெற்றிகரமான பலன்களை இலங்கை மக்கள் விரைவில் அனுபவிக்க முடியும். மேலும், மக்களுக்கான நிலைபேறான அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் அரசாங்கத்தின் பயணத்தில் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் விஜயம் முக்கிய மைல்கல்லாக அமையும். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இந்திய அரசின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1427696
  14. தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி! தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக தலைவர்களிடமிருந்து பல கடிதங்களைப் பெற்றாலும், அவர்களில் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை என்றும், அவர்கள் தங்கள் மொழியைப் பற்றி உண்மையிலேயே பெருமைப்படுவார்கள் என்றால், குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்றும் கூறினார். ராம நவமியை முன்னிட்டு, தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து மண்டபம் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து மேலும் பேசிய இந்தியப் பிரதமர் மோடி, தமிழ் மொழி மற்றும் தமிழ் பாரம்பரியம் உலகின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சில நேரங்களில், தமிழ்நாட்டின் சில தலைவர்களிடமிருந்து கடிதங்களைப் பெறும்போது நான் ஆச்சரியப்படுகிறேன் – அவர்களில் யாரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை. நாம் தமிழைப் பற்றி பெருமைப்படுகிறோம் என்றால், அனைவரும் குறைந்தபட்சம் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் – என்றார். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பயனடையும் வகையில் தமிழ் மொழியில் மருத்துவப் படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தமிழக அரசை இதன்போது வலியுறுத்தினார். மத்திய பாஜக அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக மாநில அரசு குற்றம் சாட்டியதால், மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் மத்திய அரசும் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன. புதிய கல்விக் கொள்கையின் (NEP) மும்மொழி சூத்திரம் அண்மைய முக்கிய அம்சமாகும். இந்த நடவடிக்கைகள் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை அச்சுறுத்துவதாக தமிழக மாநில அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதற்கிடையில், பாம்பன் பாலம் திறப்பு விழா நிகழ்வை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புறக்கணித்தார். ஊட்டியில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய அவர், மக்கள்தொகை வளர்ச்சியை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் வரவிருக்கும் எல்லை நிர்ணய நடவடிக்கையில் தண்டிக்கப்படாது என்றும், நாடாளுமன்ற இடங்களின் சதவீதத்தில் அவற்றின் பங்கு மாறாமல் இருக்கும் என்றும் பிரதமர் தெளிவான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1427702
  15. சீமான்... நிர்மலாவை மட்டுமல்ல, ஜெய்சங்கர், அமித் ஷா, மோடி எல்லாரையும் சந்தித்து, திராவிடத்தின் அடி வயிற்றில், பழப்புளியை கரைத்து ஊத்த வேண்டும். 🤣
  16. இந்தியா... தமிழ் அரசியல்வாதிகளை பேய்க்காட்ட, தமிழ் அரசியல்வாதிகள், மக்களை பேய்க்காட்ட... கணக்கு சரிதானே. 😂
  17. மஹவ - ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ - அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு. Vaanam.lk
  18. இலங்கையில்.... தம்முடன் கல்வி பயிலும், பாடசாலை மாணவியை, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக 7 மாணவர்கள் கைது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.