Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை! அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு, மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப் போவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் பரஸ்பரம் என்ற பெயரில் அனைத்து வர்த்தக கூட்டாளிகள் மீதும் தான்தோன்றித்தனமாக வரிகளை விதித்து, ‘பரஸ்பர வரி’ பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், எளியோரை வலிமையானவர்கள் வேட்டையாடினால், அனைத்து நாடுகளுமே பாதிக்கப்படும் எனவும், அமெரிக்கா உடனான வர்த்தக மோதலை தீர்க்க முயற்சிக்கும் அனைத்து தரப்பினரையும் சீனா மதிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வதேச அளவில் நீதி, நியாயத்தை நிலைநாட்ட, அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது எனவும், அதே நேரத்தில், சீனாவுக்கு தன்னுடைய சட்டப்பூர்வமான உரிமை மற்றும் நலனை பாதுகாக்கும் திறனும் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார், மேலும் சீனாவின் நலன்களை பலி கொடுத்து, அமெரிக்காவும்,அதன் கூட்டாளி நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்வதை மிகக் கடுமையாக எதிர்ப்பதாகவும், அது போன்ற சூழல் ஏற்பட்டால், அதற்கேற்ற எதிர் நடவடிக்கைகளை சீனா உறுதியாக எடுக்கும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளுக்கு சீனா பதிலடி கொடுக்கும் எனவும் சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429114
  2. மற்றைய நாடுகளில் எப்படியோ... ஸ்ரீலங்காவில் சிங்கம், வீட்டோடு மாப்பிள்ளைதான். 😂
  3. மனைவிக்கு உழைத்து கொடுக்கும் அவசியம் இல்லை என்றால்... நீங்களும் சமையல் செய்து, சீலை தோய்த்து, விட்டு வேலைகள் செய்து, குழந்தைக்கு "பம்பஸ்" மாத்தி, குளிக்க வார்க்கின்ற வேலைகளையும் நீங்கள் செய்யத் தயாராக இருக்க வேண்டும். டீல்... ஓகேயா. 😂
  4. குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு! குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நாட்டில் இரண்டாம் கட்டமாக மீண்டும், குரங்குகள் உள்ளிட்ட விவசாய நிலங்களுக்கு பாதிப்பினை ஏற்டுத்தக் கூடிய வனவிலங்குகள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார். விலங்குகள் கணக்கெடுப்பு தொடர்பாக அமைச்சின் குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் எதிர்வரும் நாட்களில் இக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் முதல் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் ஊடாக தீர்மானங்களை எடுக்காது இரண்டாம் கட்ட கணக்கெடுப்பினையும் மேற்கொண்டு தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429115
  5. “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டம் விடுத்துள்ள வேண்டுகோள்! புனித தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தலதா மாளிகையைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலின் தூய்மையைப் பராமரிப்பதில் அதிகபட்ச கவனம் செலுத்துமாறும், குப்பைகூழங்களை உரிய இடங்களில் மாத்திரம் கொட்டுவது தொடர்பில் கூட்டாக தலையீடு செய்து பிரஜைகள் என்ற வகையில் தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என “கிளீன் ஸ்ரீ லங்கா ” திட்டம் நினைவுகூர்ந்துள்ளது. நாட்டில் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைசார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சமூகத்தை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் நோக்கத்துடன் அரசாங்கத்தின் பிரதான திட்டமாக “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குப்பைகூழங்கள் அற்ற சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கும், குப்பைகளை முறையாக அகற்றும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த திட்டத்தின் கீழ் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ தலதா மாளிகை கண்காட்சியுடன் இணைந்து, ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தை மையமாகக் கொண்டு “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1429143
  6. உள்ளுராட்சி தேர்தல் முடிந்த பின்... இந்தச் சோதனைச் சாவடிகள் மீண்டும் முளைக்கும். இப்பிடி எத்தினை சித்து விளையாட்டுக்களை பார்த்து விட்டோம். 😂 நமக்கே... விபூதி அடிக்கிறாங்கள். 🤣
  7. பரிசுத்த பாப்பரசருக்கு வவுனியாவில் அஞ்சலி! பாப்பரசர் போப்பிரான்சிஸ் அவர்களிற்கு வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் போப்பிரான்ஸ்சிஸ் வத்திகானில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலிநிகழ்கள் இடம்பெற்றுவருகிறது.அந்தவகையில் வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்கள் தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அன்னாரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. https://athavannews.com/2025/1429146
  8. போப்பின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை! போப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 26 சனிக்கிழமை அந் நாட்டு நேரப்படி காலை 10:00 மணிக்கு (BST 09:00) நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் கலந்துகொள்ளும் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கைத் திட்டமிடுவதற்காக செவ்வாயன்று (22) கார்டினல்கள் வத்திக்கானில் கூடினர். இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் நடைபெறும் ஒரு மாநாட்டிற்கு முன்னதாக இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதனிடையே, இன்று முதல் இறுதி மரியாதை செலுத்தத் தொடங்க அனுமதிக்கப்படும் வகையில் அவரது பூதவுடல் தாங்கிய சவப்பெட்டி செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு கொண்டு வரப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், முதல் பெண்மணி மெலனியா ட்ரம்பும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1429153
  9. அடுத்த போப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் கார்டினல் மெல்கம் ரஞ்சித்! போப் பிரான்சிஸின் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது திடீர் மறைவு, வத்திக்கானின் அடுத்த பிரதிநிதி யார் என்பது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், திங்கட்கிழமை (21) காலமான போப் பிரான்சிஸுக்குப் பின்னர், இலங்கையின் கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித்தை அடுத்த போப்பாக தேர்வு செய்ய பல சர்வதேச ஊடகங்கள் பெயரிட்டுள்ளன. சாத்தியமான வாரிசுகளின் தொகுப்பில், வொஷிங்டன் எக்ஸாமினர், பிலிப்பைன்ஸின் கார்டினல் லூயிஸ் டேகிள், பிரான்சின் கார்டினல் ஜீன்-மார்க் அவெலின் மற்றும் இத்தாலியின் கார்டினல் பியட்ரோ பரோலின் போன்ற பிற முக்கிய நபர்களுடன் கார்டினல் மெல்கம் ரஞ்சித்தும் பெயரிடப்பட்டுள்ளார். கார்டினல் மெல்கம் ரஞ்சித்தின் பாரம்பரியவாத நிலைப்பாட்டை, குறிப்பாக லத்தீன் வழிபாட்டு முறைக்கு அவர் அளித்த ஆதரவு மற்றும் ஒரே பாலின திருமணத்திற்கு எதிர்ப்பு ஆகியவற்றை வொஷிங்டன் டைம்ஸ் எடுத்துக்காட்டி, கார்டினல்கள் கல்லூரிக்குள் மிகவும் பழமைவாத குரல்களில் அவரை நிலைநிறுத்தியது. எவ்வாறெனினும், அடுத்த போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டிற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. https://athavannews.com/2025/1429092
  10. அடுத்த போப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் கார்டினல் மெல்கம் ரஞ்சித்! போப் பிரான்சிஸின் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது திடீர் மறைவு, வத்திக்கானின் அடுத்த பிரதிநிதி யார் என்பது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், திங்கட்கிழமை (21) காலமான போப் பிரான்சிஸுக்குப் பின்னர், இலங்கையின் கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித்தை அடுத்த போப்பாக தேர்வு செய்ய பல சர்வதேச ஊடகங்கள் பெயரிட்டுள்ளன. சாத்தியமான வாரிசுகளின் தொகுப்பில், வொஷிங்டன் எக்ஸாமினர், பிலிப்பைன்ஸின் கார்டினல் லூயிஸ் டேகிள், பிரான்சின் கார்டினல் ஜீன்-மார்க் அவெலின் மற்றும் இத்தாலியின் கார்டினல் பியட்ரோ பரோலின் போன்ற பிற முக்கிய நபர்களுடன் கார்டினல் மெல்கம் ரஞ்சித்தும் பெயரிடப்பட்டுள்ளார். கார்டினல் மெல்கம் ரஞ்சித்தின் பாரம்பரியவாத நிலைப்பாட்டை, குறிப்பாக லத்தீன் வழிபாட்டு முறைக்கு அவர் அளித்த ஆதரவு மற்றும் ஒரே பாலின திருமணத்திற்கு எதிர்ப்பு ஆகியவற்றை வொஷிங்டன் டைம்ஸ் எடுத்துக்காட்டி, கார்டினல்கள் கல்லூரிக்குள் மிகவும் பழமைவாத குரல்களில் அவரை நிலைநிறுத்தியது. எவ்வாறெனினும், அடுத்த போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டிற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. https://athavannews.com/2025/1429092
  11. கெஹெலியவுக்கு எதிரான வழக்கு – சட்டமா அதிபரின் கோரிக்கை! தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றை அமைக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். தலைமை நீதிபதியிடம் எழுத்துப்பூர்வ கடிதம் மூலம் சட்டமா அதிபர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு 2024 செப்டெம்பரில் பிணை வழங்கப்பட்டது. இரண்டு மூத்த அரச அதிகாரிகளின் உதவியுடன் போலி ஆவணங்களை உருவாக்கி 22,500 தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசி குப்பிகளை ஒரு மருந்து நிறுவனம் இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடி விசாரணையைத் தொடங்கிய பின்னர், அவர் பல சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், மேற்படி தரமற்ற மருந்தை இறக்குமதி செய்ததன் மூலம் ரூ.130 மில்லியன் நிதி மோசடி நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கெஹெலிய ரம்புக்வெல்ல அண்மையில் (ஏப்ரல் 09) குற்றப் புலனாய்வுப் பிரிவில் (சிஐடி) முன்னிலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429124
  12. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பானை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 05 ஆம் திகதி வரை சாமர சம்பத் தசநாயக்கவை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் தசநாயக்க முன்னிலையான போது அவர் 03 குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு அவற்றில் முதல் இரண்டு வழக்குகளுக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும் மற்றுமொரு வழக்கிற்காக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1429060
  13. அமெரிக்க துணை ஜனாதிபதியின் குழந்தைகளுக்கு மயில் இறகுகளைப் பரிசளித்த பிரதமர் மோடி! அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் (JD Vance ) 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு வருகை தந்தார். இதன்போது அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸுக்கு மத்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இச் சந்திப்பின்போது ஜே.டி.வான்ஸ் அவரது மனைவியான இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகள் இவான், விவேக், மிராபெல் ஆகியோரும் உடன் இருந்தனர். இதன்போது பிரதமர் மோடியும், ஜே.டி. வான்சும் கலந்துரையாடிக்கொண்டிருந்த வேளை ஜே.டி.வான்சின் குழந்தைகள் பிரதமர் மோடி அருகே சென்று அவரின் மடியில் அமர்ந்துகொண்டனர். இதையடுத்து குழந்தைகளுக்கு பிரதமர் மோடி மயில் இறகுகளை பரிசாக அளித்துள்ள நிலையில் அதை அக் குழந்தைகளும் பெற்றுக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429095
  14. ட்ரம்பை எதிர்கொள்ள வலுவான ஆணையை கோரும் கனேடிய பிரதமர்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தலைச் சமாளிக்க வாக்காளர்கள் தனக்கு வலுவான ஆணையை வழங்க வேண்டும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி திங்களன்று (21)மீண்டும் அழைப்பு விடுத்தார். ட்ரம்பின் வரிகளும், இணைப்பு பற்றிய பேச்சும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், கனடா அமெரிக்காவை நம்பியிருப்பதைக் குறைத்து அதன் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டும் என்றும் ஏப்ரல் 28 ஆம் திகதி தேர்தலுக்கு முன்னதாக நடந்த கருத்துக் கணிப்புகளில் முன்னணியில் இருக்கும் கார்னி கூறியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் லிபரல் தலைவராக போட்டியிடுவதற்கு முன்பு எந்த அரசியல் அனுபவமும் இல்லாத 60 வயதான முன்னாள் மத்திய வங்கியாளர் ஆவார். அடுத்த நான்கு ஆண்டுகளில் கனடாவில் சுமார் 130 பில்லியன் டொலர் கூடுதல் செலவினங்களை உறுதியளிக்கும் லிபரல் தளம், 2025/26 பற்றாக்குறை கனடாவில் 62.3 பில்லியன் டொலர்களாக இருக்கும் என்று கணித்துள்ளது. இது கடந் டிசம்பரில் கணிக்கப்பட்ட 42.2 பில்லியன் டொலர்களை விட மிக அதிகம். ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக திங்களன்று வெளியிடப்பட்ட மூன்று நாள் நானோஸ் கருத்துக்கணிப்பு, லிபரல்களுக்கு 43.7 சதவீத மக்கள் ஆதரவும், கன்சர்வேடிவ்களுக்கு 36.3 சதவீத மக்கள் ஆதரவும் இருப்பதாகக் காட்டுகிறது. https://athavannews.com/2025/1429119
  15. புளோரிடா விமான நிலையத்தில் தீப்பிடித்த டெல்டா விமானம்! மத்திய புளோரிடா விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பு திங்கட்கிழமை (21) டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனல், விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று டெல்டா ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது. திங்கள்கிழமை காலை டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் 1213 இல், ஆர்லாண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு புறப்படுவதற்கு முன்பு விமானத்தின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர். இதையடுத்து விமானத்திலிருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமான நிலைய மீட்பு மற்றும் தீயணைப்பு குழுவினர் பதிலளித்ததாக விமான நிலைய அறிக்கை தெரிவித்துள்ளது. டெல்டாவின் கூற்றுப்படி, ஏர்பஸ் A330 விமானத்தில் 282 பயணிகளும், 10 விமான பணிப்பெண்கள் மற்றும் இரண்டு விமானிகளும் இந்த சந்தர்ப்பத்தின் போது விமானத்தில் இருந்தாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் விமான விபத்துகளானது விமானப் பயணம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429108
  16. கனடாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையே புதிய மைக்ரோ கண்டம் கண்டுபிடிப்பு! கனடாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையே புதிய மைக்ரோ கண்டமொன்று (Micro Continent) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவீடன் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்விலேயே கடலின் அடியில் புதைந்து கிடக்கும் Proto Microcontinent எனப்படும் இந்த புதிய நிலப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கிரீன்லாந்துக்கும் கனடாவின் பாபின் தீவிற்கும் இடையே உள்ள Davis Strait எனும் பகுதியில் இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலப்பகுதி சுமார் 19 முதல் 24 கிலோமீற்றர் வரை அகலமுள்ளதும், சாமான்ய நிலப்பரப்பை விட அடிக்கடி அடர்த்தியுடைய கொண்டதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் புது மைக்ரோகண்டம், கிரீன்லாந்தும் வட அமெரிக்காவும் பிரிந்த போது முழுமையாக பிரியாமல் ஒரு பகுதி இணைந்தே இருந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கிரீன்லாந்து பிரிதல் ஆரம்பமான நிலையில், 56 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த புதிய மைக்ரோகண்டம் உருவாகத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 33 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கிரீன்லாந்து Ellesmere தீவுடன் மோதியதனால் அப்பகுதி தற்போது நிலையானதாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது போன்ற மைக்ரோகாண்டினெண்ட்கள் பிற இடங்களிலும் (Jan Mayen, Tasman Rise) காணப்பட்டுள்ளன. பூமியின் உள் கட்டமைப்பு நிலப்பலகைகள் இயக்கத்தில் முக்கிய பங்காற்றுவதை இது வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429088
  17. போப் பிரான்சிஸ் பக்கவாதத்தால் இறந்தார் – மரண சான்றிதழில் சுட்டிக்காட்டு! போப் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் மீளமுடியாத இதய செயலிழப்பு காரணமாக இறந்தார் என்று வத்திக்கான் மருத்துவர் ஆண்ட்ரியா ஆர்க்காங்கெலி இறப்புச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ளார். திங்கட்கிழமை (21) வெளியிடப்பட்ட 88 வயதான போப்பாண்டவரின் இறப்புச் சான்றிதழில், திங்கட்கிழமை காலை இறப்பதற்கு முன்பு போப் கோமாவில் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரான்சிஸ் “பெருமூளை பக்கவாதம், கோமா, மீளமுடியாத இருதய சுற்றோட்டக் கோளாறு” காரணமாக இறந்தார் என்று இறப்புச் சான்றிதழ் கூறுகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்றில் முதல் லத்தீன் அமெரிக்க போப்பாண்டவர் வத்திக்கானில் உள்ள சாண்டா மார்டா இல்லத்தில் உள்ள அவரது குடியிருப்பில் திங்கட்கிழமை காலை 7:35 மணிக்கு (GMT 05:35) இறந்தார் என்றும் அது மேலும் கூறியது. இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் திறந்தவெளியில் இருந்து போப். ஆயிரக்கணக்கான ஈஸ்டர் வழிபாட்டாளர்களை வரவேற்று, ஒரு உதவியாளர் மூலம் ஆசீர்வாதத்தை வழங்கினார். இது அவரது இறுதியும் முக்கியத்துவமான பொதுத் தோற்றமாக அமைந்திருந்தது. பிரான்சிஸ் தனது 12 ஆண்டுகால போப்பாண்டவராக இருந்த காலத்தின், அண்மைய வாரங்களில் இரட்டை நிமோனியாவின் போது உயிருக்கு ஆபத்தான சிக்கல்களுடன் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ரோமின் ஜெமெல்லி பல்கலைக்கழக மருத்துவமனையில் 38 நாட்கள் கழித்தார். இறப்புச் சான்றிதழில், பிரான்சிஸ் தமனி உயர் இரத்த அழுத்தம், பல மூச்சுக்குழாய் ஒவ்வாமை மற்றும் வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முன்னர் வெளியிடப்படாத நோய்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், அவரது உடல் போப்பாண்டவர் ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டு, அவரது அடக்கத்திற்கு முன் பொதுமக்கள் பார்வைக்காக செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் வைக்கப்படும். இந்த நேரத்தில் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களிலும், செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிலும் தினசரி பிரார்த்தனை சேவைகள் மற்றும் ரெக்விம் திருப்பலிகள் நடைபெறும். https://athavannews.com/2025/1429069
  18. எனக்கு யாழ்.களம் மிக மெதுவாக வேலை செய்கின்றது. ஒவ்வொரு திரியை திறக்கும் போதும் நீண்ட நேரம் (Loading) எடுக்கின்றது. மற்றவர்களுக்கும் இதே பிரச்சினை உள்ளதா.. அல்லது எனக்கு மட்டும்தானா என தெரியவில்லை.
  19. காணொளி: 👉 https://www.facebook.com/reel/1325997961813563 👈 நேற்றைய தினம் வத்திக்கானின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற ஈஸ்டர் விழாவில், ஆயிரக்கணக்கானோர் முன்னால் தோன்றிய போப் பிரான்சிஸ் பக்தர்களுக்கு ஈஸ்டர் தின வாழ்த்துக்களை கூறினார்.
  20. இப்ப, வடிவா... இருக்கா பிரண்ட்ஸ். 😂 @ஏராளன் , @suvy , @உடையார், @goshan_che , @S. Karunanandarajah , @ஈழப்பிரியன் ,
  21. Saravanan Selvaraj 2B)1 - கூட்டணி கட்சியிடம் நிதியை பெற்று கொண்டு கட்சியை நடத்துவது, கூட்டணி கட்சி கொடுக்கும் இடத்தை மறுக்காமல் ஏற்பது - அதைவிட கொடுமை கூட்டணி தலைமை செல்லும் இடத்தில் எல்லாம் சகட்டுமேனிக்கு பாய்வது, ஏன், எதற்க்கு, என்ற கேள்வியே கேட்க தெரியாத கட்சிகள். என்னை பொறுத்தவரை அவர்கள் அந்த கூட்டணி தலைமையின் தொழிற்சங்க அல்லது ஒடுக்கப்பட்ட அல்லது பெரும்பான்மை அல்லது சிறுபான்மை பிரிவாக இருந்து விட்டு போகலாம். எந்த மக்கள் பிரச்சனைக்கும் கூட்டணி தலைமை கோவித்து கொள்ளும் என்று குரல் கொடுக்காமல் இருக்கும் அந்த அடிமை தனத்திற்கு எதற்க்கு மக்களை ஏமாற்றி ஒரு கட்சி நடத்த வேண்டும். கட்சி தலைவன் என்ற முறையில் தனக்கான அதிகார போதை ஒன்றை தவிர வேறெதுவும் எனக்கு தெரியவில்லை. Pushpabarathy Srinivasan இதுல 2Cம் உண்டு. அதாவது தேர்தல் நேரத்துல ரெண்டு பக்கமும் துண்டு போட்டு வைக்கும். பெட்டி எந்தப் பக்கம் பலமோ, அந்த பக்கம் ஜம்ப்🤣🤣 Gokul Kannamani தேர்தல் நேரத்தில் திமுக அதிமுக இரு கட்சிகளில் இருந்தும் நேருக்கு நேர் வாடா ஒத்தைக்கு ஒத்த வாடா ஆம்பளையா இருந்தா வாடா மோதிப் பார்க்கலாம் நாங்கள் யார் தெரியுமா? எங்கள் கட்சி எப்படிப்பட்ட கட்சி தெரியுமா என்று வீர வசனம் பேசி மக்களை ஏமாற்றுவது தான் நடக்கின்றது. ஆனால் கோடி கோடியாய் கொள்ளை அடித்த ஊழல் வழக்குகள் எதுவும் இல்லாமல் இரு கட்சிகளிலும் சமரசம் செய்து கொள்கின்றனர். மு.அருள்செல்வன் ஆனால் பத்திரிக்கையாளர்களில் ஒரே வகைதான்... ஆண்ட, ஆளும் கட்சிகளை விட்டுவிட்டு மற்ற கட்சிகளையே எப்போதும் நொட்டம் சொல்லும் வகை. Elumalai Krishnan அப்படியே இந்த பிரஸ் மீட் முடிந்தவுடன் கவர் கொடுப்பாங்களாமே , அதையும் A, B என்று தரவரிசை பிரிக்கலாமே? Gokul Kannamani திமுகவும் அதிமுகவும் மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு பிற கட்சிகளை ஆட்சிக்கு வராமல் பல ஆயிரம் கோடி பணத்தை ஒவ்வொரு இந்நாள் முன்னாள் அமைச்சர்களும் சேர்த்து வைத்துக் கொண்டுள்ளனர் குறைந்தபட்சம் கூட்டணி ஆட்சி என்பதற்குக் கூட இவர்களுக்கு கசக்கின்றது காலகாலத்திற்கும் இவர்களே மாறி மாறி கொள்ளை அடிக்க வேண்டும். ஆனால் இருவரும் எதிர்ப்பது போல் நடிப்பார்கள். Kalaiselvan Siddharth Abimanyu ஆட்சியை பிடித்த கட்சி எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமே அடித்துக்கொண்டு அடுத்த தேர்தலில் நிறை பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆசை காட்டி ஓட்டு போட பணமும் கொடுத்து தங்கள் இருப்பை தக்க வைக்கும்.அதே நேரத்தில் தமிழக அரசின் கடன் சுமையை மள மளவென அதிகரித்து வைக்கும். இதையே தான் அந்த போட்டியில் முண்ணனி வகிக்கும் இரண்டு கட்சியின் நிலைப்பாடும் . Gokul Kannamani அதிமுக ஆட்சி காலத்தில் திமுகவின் மீது ஊழல் சம்பந்தமாக எந்த அமைச்சரும் சிறை செல்லவில்லை அதேபோல் திமுக ஆட்சியிலும் அதிமுக அமைச்சர்கள் ஊழல் வழக்குக்காக யாரும் சிறை செல்லவில்லை. Saravanan Selvaraj இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய திருத்தம் உடனடி தேவை... எந்த ஒரு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடவே அனுமதிக்க கூடாது. கட்சி என்று ஒன்றை பதிவு செய்துவிட்டால், அவர்கள் தனித்தே நிற்க வேண்டும் --- வாக்கு வங்கியை நிருபிக்க தவறினால் கட்சி என்ற அங்கீகாரம் ரத்து, மாறாக அவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்பட முடியும். இது போன்ற மாற்றங்கள் எல்லாம் காலத்தின் கட்டாயம்!!! Mohan Ramachandran கட்சி ஆதரவாளர்கள் நிலைதான் பரிதாபத்திற்குறியது ! தேவையில்லாமல் கம்பு சுத்துவது. வாங்கி கட்டிக் கொள்வது. அதுவும் தூய சென்னைத் தமிழில்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.