Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அப்போ நல்லூர் திருவிழா நேரங்களில் நிறைய பம்பாய் மிட்டாசு விற்பவர்களை காண முடியும். அந்த இனிப்பின் சிகப்பு நிறத்திற்கும், பளபளப்பிற்கும் அதனை வாங்கி சாப்பிட ஆசை இருந்த போதும், அந்தத் தடியில் கட்டி இருந்த ஊத்தைத் துணி, அந்த ஆசையை குழி தோண்டிப் புதைத்து விட்டது. 🤮 நிறைவேறாத ஆசைகளில் இதுவும் ஒன்று. 😁
  2. இவர்கள் குரங்குகளை வேறு ஒரு தீவில் விடுவது என்று போக்குக் காட்டி, சீனாவுக்கு ஏற்றுமதி செய்கிறார்களோ… யார் கண்டது. மாட்டு இறைச்சி உண்டால் ஆளையே கொல்கின்ற இந்தியாவில் இருந்துதான்… உலகிலேயே பெரும்பாலான மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்கின்றார்கள். தென் கிழக்கு ஆசிய நாட்டவர்களின் சொல்லுக்கும்… செயலுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை.
  3. அல்வாயன், எப்பிடியும் வீடியோ வரும் தானே… இந்தியாவில் நடப்பதை விட…. இலங்கையர் கொஞ்சம் நேர்த்தியாக நடதுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பார்ப்போம். இந்தியாவில் நடந்த ஒரு சர்வதேசப் போட்டியின் போது.. விளையாட்டு வீரர்கள் தங்கும் வீடுகளை கடைசி நாள் வரை கட்டி பெயின்ற் அடித்துக் கொண்டு இருந்தார்கள். சில வீட்டு மலசல கூடங்களில் தண்ணீர் வரவில்லை. படுக்கையறையில் பாம்பு. பழைய மெத்தைகளுக்கு மேல் புதிய உறையை போட்டு இருந்தார்கள் என்று நிறைய புகார்களை வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் தெரிவித்து இருந்தார்கள். சர்வதேச விளையாட்டு அமைப்பு கொடுத்த பணத்தை அமைச்சர் தொடக்கம் அதிகாரிகள் வரை ஏப்பம் விட்டு விட்டார்கள். இதற்குள்…. இந்தியாவுக்கு ஒலிம்பிக் நடத்தும் நீண்ட நாள் ஆசையும் இருக்கின்றது. 🤣
  4. அல்வாயன்… ஆழம் அறியாமல் காலை விடக் கூடாது. 😂 🤣 சுவி, ஈழப்பிரியன், நெடுக்காலை போவான், வாலி, கந்தையா அண்ணை எல்லாரும் இந்துக் கல்லூரிதான்.
  5. 2025 ஆம் ஆண்டுக்கான இன்டோர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இலங்கையில்! 12 ஆவது உலகக் கிண்ணப் போட்டியான 2025 ஆம் ஆண்டுக்கான இன்டோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை நடத்துவதாக சிலோன் இன்டோர் கிரிக்கெட் சங்கம் (CICA) அறிவித்துள்ளது. 5 மாதங்களுக்கு முன்பு CICA மிகவும் வெற்றிகரமான உலக மாஸ்டர்ஸ் தொடரை நடத்திய பின்னர் சர்வதேச இன்டோர் கிரிக்கெட் கூட்டமைப்பு (WICF) போட்டியை நடத்தும் உரிமையை வழங்கியது. இந்த போட்டிகள் பின்வரும் ஆண்கள் ஓபன், பெண்கள் ஓபன், 22 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் 22 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் நடத்தப்படும். அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் நடத்தும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் போட்டியில் பங்கேற்கும். இந்தப் போட்டி செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 05 ஆம் திகதி வரை நடைபெறும். இந்தப் போட்டிகள் தலவதுகொடவில் உள்ள ஆஸ்டாசியா விளையாட்டு வளாகத்திலும் புதிதாகக் கட்டப்பட்ட யு ப்ரோ அரங்கிலும் நடைபெறும். இந்த மதிப்புமிக்க நிகழ்விற்கு நாட்டில் சுமார் 1000 வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஈடுபட்டுள்ள அனைத்து முக்கிய நாடுகளிலும் குறிப்பிடத்தக்க ஊடக ஒளிபரப்பு சாத்தியமாகும். ஒரு பெரிய விளையாட்டு நிகழ்வாக இருப்பதைத் தவிர, தீவு நாட்டில் சுற்றுலாத் துறை வருகையில் ஒரு உயர்ந்த போக்கைக் காணும் நேரத்தில், இது ஒரு பிரபலமான விளையாட்டு சுற்றுலா வாய்ப்பாகவும் செயல்படும். கடந்த வருடத்தில், இலங்கையில் சர்வதேச இண்டோர் கிரிக்கெட் தொடர்பான அதிக செயல்பாடுகள் நடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426655
  6. கனடாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கையர்கள் இருவர் கைது! கனடா- டொரெண்டோ பகுதியில் கடந்த 6 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இரு வேறு கொலை சம்பவங்கள் தொடர்பாக அந்நாட்டில் வசிக்கும் இலங்கை இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கொலைச் சம்பவத்தின் பின்னர், அந்தப் பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கெமெரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 31 மற்றும் 34 வயதுடைய இருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து வேலை வாய்ப்புக்காக கனடாவுக்குச் சென்று தற்போது அங்கு குடியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச் சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த இருவரும் கனடாவில் நடந்த மூன்று கொலை சம்பவங்கள் மற்றும் பல சொத்து திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என தகவல் வெளியாகியுள்ளன. சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இருவருக்கும் ஏப்ரல் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426688
  7. சுவியர்... மேலே விமர்சனம் எழுதியவரின் வரிகளையே வாசித்து விழுந்து விழுந்து சிரித்தேன். அப்போ... படம் பயங்கர சிரிப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன். செத்த வீட்டிலும்... அந்த மருமகள்கள், தங்கள் கணவனை சாட்டோடு, சாட்டாக குத்திக் காட்டுவதன் மூலம் ரொம்ப பாதிக்கப் பட்டுள்ளார்கள் போலுள்ளது.
  8. உள்ளூராட்சி தேர்தல்; வாக்காளர் சார்பில் செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை அறிவிப்பு! எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக வாக்காளர் ஒருவர் சார்பில் அதிகபட்சமாக வேட்பாளர் செலவு செய்யக் கூடிய தொகையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வாக்காளர் ஒருவர் சார்பில் அதிகபட்சமாக வேட்பாளர் செலவு செய்யக் கூடிய தொகையாக 74 ரூபா முதல் 160 ரூபா என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்புக்கு தனித்தனியாக இந்தத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வாக்காளர் ஒருவரின் சார்பாக வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய மிகக் குறைந்த தொகை மன்னாரில் ஆகும். அங்கு அந்த தொகை 74 ரூபா என சுட்டிக்காட்டப்பட்டுள்ள. அதேநேரம், வாக்காளர் ஒருவரின் சார்பாக வேட்பாளர் ஒருவர் செலவிடக்கூடிய மிக அதிகபட்ச தொகை லஹுகலவில் ஆகும். அங்கு அந்த தொகை 160 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1426634
  9. வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை வௌியீடு! வனவிலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை நாளை (28) வௌியிடப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்தார். இதன்போது ” பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள், மயில்கள் மற்றும் அணில்கள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கையினை தாம் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாகவும், குறித்த கணக்கெடுப்புக்கு அமைவாக, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1426579
  10. இராமேஸ்வர மீனவர்கள் 11 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படை! எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில், நெடுந்தீவு கடப்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை கைது செய்யப்பட்ட மீனவர்களை விசாரணைகளின் பின்னர், நீதிமன்றில் ஆஜர் படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1426589
  11. திடீரென இடிந்து வீழ்ந்த ரயில்வே மேம்பாலம்! கரையோரப் புகையிரத மார்க்கத்தின் மொரட்டுவை, எகொடஉயன புகையிரத நிலையத்தில் பயணிகள் மேம்பாலம் திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது. எவ்வாறாயினும், பாலம் இடிந்து விழும் போது பாலத்தின் மீது யாரும் நடமாடவில்லை எனவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு 7.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், மொரட்டுவையில் இருந்து பாணந்துறை வரை செல்லும் புயிரத மார்க்கம் பாதிக்கப்பட்டதாகவும், ஒரு பாதை மாத்திரமே இயங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது. தற்போது ரயில்வே துறை தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் மின்சார சபை அதிகாரிகள் ரயில் பாதையின் குறுக்கே இடிந்து விழுந்த பாலத்தின் குப்பைகளை அகற்றும் பணிகளை முன்னெடுத்திருந்தனர். https://athavannews.com/2025/1426557
  12. கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல். கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, வழக்கில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார் கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.70 மில்லியன் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தொடர்ந்திருந்தார் இதேவேளை சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்த வழக்கு தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பெப்ரவரி மாதம் பிணை வழங்கியிருந்தது மேலும் இலங்கையில் ரக்பி மேம்பாட்டிற்காக இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனமான கிரிஷ் லங்கா பிரைவேட் லிமிடெட் வழங்கிய 70 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி, சட்டமா அதிபரால் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426601
  13. மொழி சர்ச்சையில் யோகி ஆதித்யநாத்துக்கு ஸ்டாலின் பதிலடி! எல்லை நிர்ணயம் மற்றும் மும்மொழிக் கொள்கை தொடர்பான உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்துகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை (27) கடுமையாக விமர்சித்தார். ஆதித்யநாத், செய்தி நிறுவனமான ANI-க்கு அளித்த பேட்டியில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பிராந்தியம் மற்றும் மொழி அடிப்படையில் பிளவுகளைத் தூண்ட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து ஸ்டாலினின் கருத்துக்கள் வந்துள்ளன. “நாட்டை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக, மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் பிளவுகளை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். இத்தகைய அரசியல் தேசத்தை பலவீனப்படுத்துகிறது,” என்று உத்தரப் பிரதேச முதல்வர் குறித்த பேட்டியில் கூறியிருந்தார். எல்லை நிர்ணயம் குறித்த ஸ்டாலினின் கவலைகளையும் அவர் நிராகரித்து, அதை ஒரு “அரசியல் நிகழ்ச்சி நிரல்” என்று அழைத்தார். இது குறித்த எக்ஸ் பதிவில் ஸ்டாலின், இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டின் நீண்டகால எதிர்ப்பையும், நியாயமான நாடாளுமன்ற தொகுதி எல்லை நிர்ணய செயல்முறைக்கான அதன் கோரிக்கையையும் அவர் ஆதரித்தார். இருமொழிக் கொள்கை மற்றும் எல்லை நிர்ணயம் குறித்த மாநிலத்தின் “நியாயமான மற்றும் உறுதியான குரல்” நாடு முழுவதும் வேகம் பெற்று வருவதாகவும், இது பாஜகவை வெளிப்படையாகவே சங்கடப்படுத்துவதாகவும் அவர் கூறினார். “இப்போது மாண்புமிகு யோகி ஆதித்யநாத் வெறுப்பு பற்றி எங்களுக்குப் போதிக்க விரும்புகிறீர்களா? எங்களை விட்டுவிடுங்கள். இது முரண்பாடல்ல, இது அரசியல் ரீதியாக மிகவும் மோசமான நகைச்சுவை,” என்று அவர் பதிவிட்டார். அதேநேரம், தமிழ்நாடு முதல்வர் தனது கட்சி எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, ஆனால் மொழியியல் திணிப்பு மற்றும் பேரினவாதத்தை எதிர்க்கிறது என்று தெளிவுபடுத்தினார். “இது வாக்குக்காக கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம்” என்றும் ஸ்டாலின் பதிவில் சுட்டிக்காட்டினார். முன்மொழியப்பட்ட மும்மொழிக் கொள்கை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக தொடர்ந்து பதட்டங்கள் நிலவுவதைத் தொடர்ந்து இரு மநில முதல்வர்கள் இடையிலான வார்த்தைப் போர் வெடிக்கிறது. இந்தியை ஒரு ஆதிக்க தேசிய மொழியாக ஊக்குவிக்கும் பாஜகவின் முயற்சிகளை திமுக நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. இது இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையை அச்சுறுத்துகிறது என்று வாதிடுகிறது. மக்கள்தொகை வளர்ச்சியை வெற்றிகரமாக நிர்வகித்த தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை எல்லை நிர்ணயம் குறைக்கக்கூடும் என்ற கவலைகளையும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1426631
  14. உயிருடன் இருக்கும் 19 பேரும் அப்பாவித் தமிழர்களா... அல்லது இராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய படையினரா? உயிருடன் இருப்பவர்கள் தமிழர்கள் என்றால்... 2024´ல் அறிக்கை சமர்ப்பித்தும், இதுவரை அவர்களின் பெயரை பொதுமக்களுக்கு அறிவிக்காமல் இருப்பது ஏன்? தங்கள் பிள்ளைகளை, வருடக் கணக்காக கண்ணீருடன் தேடிக் கொண்டு இருக்கும் பெற்றோரின் வேதனையை புரியாதவர்களா இவர்கள். ஆசை காட்டி மோசம் செய்யாமல்.. கண்டுபிடித்த 19 பேரின் பெயர்களையும், அவர்கள் இப்போ எங்கே இருக்கின்றார்கள் என்பதையும் வெளியிடுங்கள்.
  15. தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை முந்தி இந்தியா 2ஆவது இடம்! 2024 ஆம் ஆண்டில் இந்தியா மொத்தம் 254 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளதாக இந்திய தேயிலை வாரியம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் இரண்டாவது அதிக தேயிலை ஏற்றுமதியாளராக இந்தியா மாறியுள்ளது. உலக தேயிலை ஏற்றுமதியில் கென்யா முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டாலும், இந்தியா இலங்கையை விஞ்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 2024 ஆம் ஆண்டில் கென்யா 500 மில்லியன் கிலோவுக்கு மேல் தேயிலையை ஏற்றுமதி செய்தது. 2023 ஆம் ஆண்டில், இந்தியாவும் இலங்கையும் சுமார் 231 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதியுடன் நேருக்கு நேர் மோதின. ஆனால் 2024 ஆம் ஆண்டில் இந்தியா 24 மில்லியன் கிலோ கூடுதல் ஏற்றுமதியுடன் தீவு நாட்டை முந்தியது. இந்தியாவின் 2024 புள்ளிவிவரங்கள், 2018 ஆம் ஆண்டில் சுமார் 256 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்ததைத் தொடர்ந்து இரண்டாவது சிறந்த ஏற்றுமதி இலாபமாகும். இந்தியாவின் 2024 தேயிலை ஏற்றுமதி வருமானம் ₹7,112 கோடி ரூபாவாக இருந்தது. கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் ஏற்றுமதி புள்ளிவிவரங்கள் 200-225 மில்லியன் கிலோவாகவே இருந்தன. 2018 ஆம் ஆண்டைத் தவிர, இந்த அற்புதமான வளர்ச்சி தேயிலைத் தொழிலுக்கு 2030 ஆம் ஆண்டுக்குள் 300 மில்லியன் கிலோ என்ற இலக்கை எட்டும் நம்பிக்கையை அளித்துள்ளது. இந்தியா சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 1,400 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்கிறது. இதன் வளர்ச்சிக்கு சமீப காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடங்கிய பல்வேறு திட்டங்கள் துணைபுரிந்துள்ளன. https://athavannews.com/2025/1426570

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.