Everything posted by தமிழ் சிறி
-
தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்!
விஜய் ... போக வேண்டிய துராம், நிறைய உள்ளது. 😂 எடுத்தவுடன் எல்லோரும்... எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாதுதானே. 🤣
-
புகையிலைத் தோட்டத்தில் கஞ்சா வளர்த்தவர் கைது!
இப்போ கொஞ்சம் தளர்த்தி உள்ளார்களாம். அதுகும்... முன்பு பயிரிட்டவர்களுக்கு மட்டுமே அந்த அனுமதி கொடுத்துள்ளார்கள் என்று முகநூலில் ஒருவர் தெரிவித்து இருந்தார். இது நல்லது என்றே நினைக்கின்றேன். அந்த மண்ணுக்கே உரிய பாரம்பரிய பயிர்களை முற்றாக அழிய விடாமல் பாதுகாக்கப் படுவது நல்லது. குரோஷியா நண்பர் ஒருவர் தமது நாட்டில்... அரசாங்கம், சிகரெட் கொம்பனிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு... உள்ளூரில் புகையிலை பயிரிடுவதை தடை செய்து விட்டார்களாம். இப்போ... தமது நாட்டின் பாரம்பரிய புகையிலை கன்றுகள் முற்றாக அழிந்து விட்டது என்று கவலைப் பட்டார்.
-
யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு சாப்பாட்டுக் கடை
ஈழப்பிரியன்... தன்னடக்கம். 😂 🤣
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்!
தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்! தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர். காலை 10 மணி அளவில் கூட்டம் நடைபெறும் மையத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய், கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும், மதுபானசாலை முறைகேடு தொடர்பாக தீர்மானம், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றம்,மீனவர்கள் போராட்டத்திற்கு தீர்வு: அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், இலங்கை தமிழர் பிரச்சினைக்க்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும், கொள்கை தலைவர்கள் வழியில் பயணிக்க வேண்டும், கூட்டணி அமைப்பு, கட்சியை வழிநடத்துவது தொடர்பாக தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் விஜயின் பெற்றோர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர். இதையடுத்து பொதுக்குழுவில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றியிருந்தார். டெல்லியில் மோடியும், தமிழகத்தில் அண்ணாமலையும் பல்வேறு அரசியல் விஷயங்களை திசை திருப்புகிறார்கள். பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் போது சாட்டையால் அடித்து கொண்டு திசைதிருப்ப முயற்சிகிறார்கள். அண்ணாமலையை செட் செய்து தி.மு.க. வைத்துள்ளது. புலி அமைதியாக இருக்கும்போது ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது. எங்கள் கட்சியையும், தலைவரையும் தொட்டால் உங்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டுவோம். இன்றுவரையும் மக்களால், கட்சியால் பாசமுடன் அழைத்த நம்முடைய தளபதியை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும். எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தியது போல், தற்போது த.வெ.க. தலைவர் விஜயை இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க. பற்றிய உண்மை தெரியவந்த காரணத்தினால் தான் அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன். Work From Home அரசியல் இல்லை. உங்களை வீட்டுக்கு அனுப்பப்போகும் அரசியல். உங்களுக்கு எல்லாம் ஓய்வு கொடுக்கவே நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம் என தனது உரையில் கூறினார். https://athavannews.com/2025/1426754- பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் : நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு; பிரதான சந்தேக நபர் அடையாளம்! அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அனுராதபுரம் தலைமை நீதிவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட மருத்துவர் சந்தேக நபரை அடையாளம் கண்டார். அனுராதபுரம் தலைமை நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (28) அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. மார்ச் 10 ஆம் திகதி சந்தேக நபரால் கத்தி முனையில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ குடியிருப்பிற்குள் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நபர் பெண் மருத்துவரின் மொபைல் போனுடன் தப்பிச் சென்றுள்ளார். மறுநாள் கல்னேவ பகுதியில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். திருடப்பட்ட மொபைல் போனை பின்தொடர்வதன் மூலம் காவல்துறையினர் அவரைக் கண்டுபிடிக்க முடிந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ ஊழியர்கள் ஒரு அடையாள வேலைநிறுத்தத்தையும் மேற்கண்டிருந்தனர். https://athavannews.com/2025/1426772- மதுபோதையில் வாகனம் ஓட்டிய சாரதி; அனுமதி பத்திரம் வாழ் நாள் முழுவதும் இரத்து!
இதனை... பாணந்துறையில் தலைமை நீதிவானால் மட்டும் சரி செய்ய முடியாது. மேற்கு நாடுகளில் உள்ளது போல்... மதுபோதையில் வாகனம் ஓடுபவர்களை கடுமையாக தண்டிக்கும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அதனை... லஞ்சம் வாங்காத காவல்துறை இலங்கையில் இருக்க வேண்டும். இல்லையேல் இது தொடர் கதைதான். நமது நாட்டில்... சட்டத்தை ஏய்த்துப் பிழைப்பதை ஒரு கெட்டித்தனமாகவே நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அரச நிர்வாகத்திலும் இதே... பொட்டுக்கேடுதான்.- மியான்மரில் அடுத்தடுத்து இரு பெரிய நிலநடுக்கங்கள்.. அண்டை நாடான தாய்லாந்திலும் அதிர்ந்த கட்டடங்கள்
அப்ப... பிலிப்பைனுக்கு போங்கோ. அதுகும்... தாய்லாந்து மாதிரியான கலாச்சாரம் உள்ள இடம்தான். போன காசுக்கு, கைநிறைய பலன் கிடைக்கும். கை நடுக்கம் வந்தாலும்.... நிலநடுக்கம் வரவே... வராது. 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- மியான்மரில் அடுத்தடுத்து இரு பெரிய நிலநடுக்கங்கள்.. அண்டை நாடான தாய்லாந்திலும் அதிர்ந்த கட்டடங்கள்
கட்டிடங்கள் அதிர்ந்து வீழ்ந்தன, பல சேதம்! மியன்மாரின் மண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நில அதிர்வு 7.7 ரிச்டர் அளவில் பதிவு, இந்த நில நடுக்கம் இலங்கை நேரப்படி 11.50 மணியளவில் ஏற்பட்டதாக தகவல்! நில அதிர்வின் அலைகளால் தாய்லாந்து பேங்கொக் பகுதியின் கட்டிடங்கள் அதிர்ந்து வீழ்ந்தன.- சவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத்ஜெயசூரிய, கருணா அம்மானிற்கு எதிராக தடைகள் - பிரிட்டன் அறிவிப்பு
கருணாவுக்கு பிரித்தானிய பாதுகாப்பு கொடுத்தது என்பது உண்மை இல்லை! 2007, நவம்பர்,02, ல் பிரித்தானியாவிற்கு போலி கடவுச்சீட்டில் சென்றதால் லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சரியாக எட்டு மாதங்களால் லண்டன் சிறையில் இருந்து வெளியேற்றப்பட்டு 2008,யூலை,02, ல், லண்டனில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். லண்டனில் இருந்து இலங்கை அரசிடம் ஒப்படைக்கவே கட்டுநாயக்கா விமான நிலையம் வரை அவர்கள் வந்து இலங்கை அரசின் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். Monisha Kokul கருணா... பிரித்தானிய சிறையில் இருக்கும் போது.. மற்றைய கைதிகள் சுடு தண்ணீரால் ஊற்றிய கூத்தும் நடந்தது. அதனை கருணா மறந்திருந்தாலும், நாங்கள் மறக்கவில்லை. 😂- மதுபோதையில் வாகனம் ஓட்டிய சாரதி; அனுமதி பத்திரம் வாழ் நாள் முழுவதும் இரத்து!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய சாரதி; அனுமதி பத்திரம் வாழ் நாள் முழுவதும் இரத்து! மதுபோதையில் தனியார் பேருந்தை ஓட்டியதற்காக, பேருந்து சாரதியின் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் இரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை வெளியிட்ட பாணந்துறை தலைமை நீதிவான் சம்பிகா ராஜபக்ஷ, குற்றம் சாட்டப்பட்டவருக்கு அபராதமும் விதித்தார். பாணந்துறையிலிருந்து களுத்துறைக்கு ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற குற்றம் சாட்டப்பட்டவர், போக்குவரத்து பொலிஸாரால் சோதனை செய்யப்பட்டார். இதன்போது, மதுவின் வாசனை அவர் மீது தொடர்ந்து இருந்ததால், பொலிஸார் அவரை மேலும் விசாரித்தனர், அப்போது அவர் மது போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சாரதி தனது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததான வாதத்தின் அடிப்படையில், பாணந்துறை தலைமை நீதிவான் அவரது உரிமத்தை இடைநிறுத்தி அபராதம் விதித்தார். https://athavannews.com/2025/1426762- மியான்மரில் அடுத்தடுத்து இரு பெரிய நிலநடுக்கங்கள்.. அண்டை நாடான தாய்லாந்திலும் அதிர்ந்த கட்டடங்கள்
மியன்மார், தாய்லாந்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்! மியன்மாரில் வெள்ளிக்கிழாமை (28) 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான இரண்டு தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தினால் மியன்மாரின் மண்டலேயில் உள்ள புகழ்பெற்ற அவா பாலம் இராவடி ஆற்றில் இடிந்து விழுந்ததாகவும், சாகைங் அருகே மையமாக இருந்த பாரிய நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கங்களின் தாக்கம் அந்த அளவுக்கு அதிகமாக இருந்ததால், சுமார் 900 கி.மீ தொலைவில் உள்ள பாங்கொக்கை நிலநடுக்கம் உலுக்கியது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உயரமான கட்டிடங்களில் இருந்த நீர்த்தொட்டிகளில் இருந்து தண்ணீர் வெளியேறியது. மேலும் நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பல கட்டிடங்கள் அசைந்ததால் அதிலிருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். எனினும், தாய்லாந்து தலைநகரில் சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. https://athavannews.com/2025/1426755- இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் அரிய வகை கடல் ‘ஆலா பறவை’
இதன் இறைச்சி, சுவையாக இருக்குமா... 😂 🤣- ”கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்” - சுமந்திரன்
சென்ற பாராளுமன்ற தேர்தலில்... உங்களுக்கு தந்த, பதிலடி மாதிரியா... சுமந்திரன். உள்ளுராட்சி தேர்தலில் உங்கள் எல்லாருக்கும்... நல்ல பதிலடி கிடைக்கும். கவலைப்படாதீங்க.- கருத்து படங்கள்
- இலங்கையின் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் – IMF
இலங்கையின் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் – IMF இலங்கையின் பொருளாதார மீட்சி வேகம் பெற்று வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கையில் சீர்திருத்தங்கள் பலனளிப்பதாகக் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கோசாக் (Julie Kozack) குறிப்பிட்டார். இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ள அவர், கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, IMF நிர்வாகக் குழு இலங்கைக்கான EFF (விரிவாக்கப்பட்ட நிதி வசதி) ஏற்பாட்டின் கீழ் மூன்றாவது மதிப்பாய்வை அங்கீகரித்தது. மேலும் இது நாட்டிற்கு உடனடியாக $334 மில்லியன் ஆதரவை அணுக அனுமதித்தது. எனவே, அந்த மூன்றாவது மதிப்பாய்வை வாரியம் அங்கீகரித்தவுடன், $334 மில்லியன் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை ஆதரிக்கக் கிடைத்தது. மேலும் இந்த $334 மில்லியனுடன், இது IMF இலிருந்து இலங்கைக்கு மொத்த நிதி உதவியை $1.34 பில்லியனாகக் கொண்டு வருகிறது. இலங்கையில் சீர்திருத்தங்கள் பலனளிக்கின்றன என்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியும். பொருளாதார மீட்சி வேகம் அதிகரித்து வருகிறது, இலங்கையில் பணவீக்கம் குறைவாகவே உள்ளது, நிதிப் பக்கத்தில் வருவாய் வசூல் மேம்பட்டு வருகிறது, சர்வதேச இருப்புக்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. 2024 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை எட்டியது, அது இரண்டு வருட பொருளாதார சுருக்கத்திற்குப் பிறகு. மேலும் 2025 ஆம் ஆண்டிலும் இலங்கையில் மீட்சி தொடரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவை அனைத்தும் இலங்கைக்கும் நாட்டு மக்களுக்கும் மிகவும் சாதகமான முன்னேற்றங்கள். எனினும், இவை அனைத்தும் கூறப்பட்டாலும், பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளது. எனவே பெரிய பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மை நீடித்து நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்கு சீர்திருத்த உந்துதல் நிலைத்திருப்பது மிகவும் முக்கியமானது – என்றார். https://athavannews.com/2025/1426750- 37வது பொலிஸ் மா அதிபர் பதவிக்காக ஏழு மூத்த பொலிஸ் மா அதிபர்களின் பெயர்கள் முன்மொழிவு!
37வது பொலிஸ் மா அதிபர் பதவிக்காக ஏழு மூத்த பொலிஸ் மா அதிபர்களின் பெயர்கள் முன்மொழிவு! பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான முன்மொழிவைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்காக ஏழு மூத்த பொலிஸ் மா அதிபர் இடையே பனிப்போர் ஆரம்பமாகியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன அதன்படி தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, லலித் பத்திநாயக்க சஞ்சீவ மெதவத்த, ரன்மல் கொடிகுணு, சஞ்சீவ தர்மரத்ன, கித்சிறி ஜெயலத் மற்றும் எம்.ஜி.ஆர் எஸ். தமிந்த ஆகியோர் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. மேலும் அடுத்து நியமிக்கப்படவுள்ளவர் இந்த நாட்டின் 37வது பொலிஸ் மா அதிபர் ஆவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளடன் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதி அவரை பதவியில் இருந்து நீக்குவார். அத்துடன் நியமிக்கப்படும் அடுத்த பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியால் அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைக்கப்படுவார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. https://athavannews.com/2025/1426722- சட்ட விரோதமான மீன்பிடி முறைமைகளுக்கு எப்பொதும் அனுமதி வழங்க முடியாது-இராமலிங்கம் சந்திரசேகர்!
சட்ட விரோதமான மீன்பிடி முறைமைகளுக்கு எப்பொதும் அனுமதி வழங்க முடியாது-இராமலிங்கம் சந்திரசேகர்! கடற்றொளில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திருகோணமலை மாவட்டத்தில் பல மக்கள் சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார். அந்தவகையில் திருகோணமலை மாவட்ட மட்டங்களில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துகொண்ட அவர் அதற்கான தீர்வுத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். விசேடமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் போரில் இந்தியாவால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் குறித்து விசேட கவனம் எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார் மேலும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை உபயோகிப்பதன் ஊடாக எங்களது மீனவர்கள எமது கடல் வளங்களை நாசப்படுத்துகின்றனர். ஆகையால் சட்ட விரோதமான மீன்பிடி முறைமைகளுக்கு எப்பொதும் அனுமதி வழங்க முடியாது என்றும் அவ்வாறு எவரும் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி டிஜிட்டல் மயமாக்கத்தின் ஊடாக மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது தொடர்பில் அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1426716- அரசாங்கம் கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது – நாமல்
அரசாங்கம் கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது – நாமல். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கக் கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிரான சில சட்டத் தீர்ப்புகளைத் தொடர்ந்து, ஷிராணி பண்டாரநாயக்க மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், 2013 ஜனவரியில் அவர் தலைமை நீதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அந்த நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் தான் இருந்ததாகக் கூறினார். “தற்போதைய அரசாங்கம் நாம் செய்த அதே தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. அவர்கள் அதை மீண்டும் செய்தால், அது சரியல்ல. இதுபோன்ற முடிவுகளுக்கான விலையை எங்கள் கட்சி இன்னும் செலுத்தி வருகிறது,” என்றும் அவர் கூறினார். அரசியல் முடிவுகளை எடுப்பதற்காக ஒரு தனிநபரை குறிவைக்க நாடாளுமன்றம் பயன்படுத்தப்பட்டால், தனது கட்சி அதை ஆதரிக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரேரணைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். https://athavannews.com/2025/1426709- தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையால் முதலாவது மாதிரி உணவகம் நாரஹேன்பிட்டியில் திறப்பு!
தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையால் முதலாவது மாதிரி உணவகம் நாரஹேன்பிட்டியில் திறப்பு! மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான, போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்துகொடுக்க, நாடளாவிய ரீதியில் புதிய உணவகங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுக்களின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது தேசிய உணவு ஊக்குவிப்புச் சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து தற்போது உணவகங்களை நடத்தி வரும் வர்த்தகர்களின் ஆதரவுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலாவது மாதிரி உணவகம் ஏப்ரல் 1ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் திறக்கப்படவுள்ளது. இதன் இரண்டாம் கட்டமாக தற்போதுள்ள உணவகங்களின் தரத்தை உயர்த்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் மக்களின் உரிமையை உறுதிப்படுத்தல், சரியான சுகாதாரத் தரத்திற்கு ஏற்ற உணவை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான சூழலை உருவாக்குதல், நுகர்வோர் நம்பிக்கையை வளர்ப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், அது தொடர்பில் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்வது குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், உணவு தரப்படுத்தல் மற்றும் தரம் தொடர்பில் நாட்டில் காணப்படும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயற்பாட்டு ரீதியாக நடைமுறைப்படுத்துதல், நுகர்வோருக்கு சத்தான மற்றும் போசாக்கான மற்றும் சுகாதார பாதுகாப்பு மிக்க உணவை வழங்குதல் குறித்த வர்த்தக சமூகத்தின் அணுகுமுறை மாற்றத்தை உருவாக்க “Clean Srilanka” திட்டத்தின் மூலம் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426729- யாழில் மாணவியை தடியால் அடித்த குற்றத்தில் ஆசிரியர் கைது
பரீட்சை வினாத்தாளை திருத்தும் வேலையை... ஆசிரியர் மாணவர்களுக்கு கொடுத்தது முதல் பிழை. அதுகும்.... விபரம் புரியாத 5´ம் வகுப்பு மாணவரிடம் கொடுத்தது இரண்டாவது பிழை. பிரம்பு எடுத்து அடித்தது... மூன்றாவது பிழை. ஆசிரியருக்கு... அதனை வீட்டில் கொண்டு திருத்த நேரம் இல்லைப் போலுள்ளது. மாலையில் தனியார் வகுப்பு நடத்தும் ஆசியராக இருப்பாரோ. 😂 இப்ப ஆசிரியருக்கு... நீதவான், நீதிமன்றத்தில் வைத்து அடிக்கப் போகின்றாரே. 🤣- இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் மோடி!
நரேந்திர மோடியின் இலங்கை வருகை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்பதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் தங்கியிருக்கும் போது, பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரத்தில் உள்ள ஜெயகிரக மகா போதிக்கு வழிபாடு நடத்துவார் என்றும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாட்டில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் இந்திய வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளியுறவு செயலாளர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் பல மூத்த அதிகாரிகள் இந்தியப் பிரதமருடன் இந்தப் பயணத்தில் பங்கேற்க உள்ளனர் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1426735- இலங்கை சிறையில் 97 இந்திய மீனவர்கள் இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்!
இலங்கை சிறையில் 97 இந்திய மீனவர்கள் இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்! இலங்கையின் காவலில் தற்போது மொத்தம் 97 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர், மூன்று பேர் விசாரணைக்காக காத்திருக்கிறார்கள், மேலும் 11 பேர் வியாழக்கிழமை (27) கைது செய்யப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மாநிலங்களவையில் தெரிவித்தார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜெய்சங்கர், இதுபோன்ற சூழ்நிலை மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மீன்பிடி படகுகளில் டிரான்ஸ்பாண்டர்களை நிறுவுவது உள்ளிட்ட நீண்டகால வழிகளை மத்திய அரசு கண்டுபிடித்து வருகிறது. இந்த நிலையில் இந்த பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையை எடுக்க இலங்கையுடன் இந்தியா ஈடுபட முயற்சிக்கின்றது. 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள்தான் இன்று நாடு எதிர்கொள்ளும் இந்த நிலைமைக்கு மூல காரணம். தற்போதுள்ள நிலைமை என்னவென்றால், நேற்று வரை (நேற்று முன்தினம்) இலங்கை காவலில் 86 இந்திய மீனவர்கள் இருந்தனர். இன்று (நேற்று) மேலும் ஒரு இழுவை படகு கைது செய்யப்பட்டுள்ளது, அதன்படி, மேலும் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தத்தில், தற்சமயம் 97 பேர் காவலில் உள்ளனர். இவர்களில் 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர், மூன்று பேர் விசாரணைக்காக காத்திருக்கின்றனர், இன்று (நேற்று) 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று தண்டனை அனுபவித்து வருபவர்களில் பலர் படகுகளின் உரிமையாளர்களாகவோ அல்லது மீண்டும் மீண்டும் குற்றவாளிகளாகவோ உள்ளனர். இந்தப் பிரச்சினையைக் கையாள்வதில் இதுவே சவாலாக உள்ளது. 1974 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு மாநில அரசுடன் கலந்தாலோசித்து சர்வதேச கடல் எல்லையை வரைந்தபோது இந்தப் பிரச்சனை தொடங்கியது. பின்னர் 1976 ஆம் ஆண்டு, மீன்பிடி அதிகார வரம்புகள் வரையறுக்கப்பட்ட கடிதப் பரிமாற்றம் நடந்தது. எனவே, 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள்தான் இன்று நாம் எதிர்கொள்ளும் நிலைமைக்கு மூல காரணம், இலங்கை அரசாங்கத்தை ஒரு மனிதாபிமான பிரச்சினையை எடுக்க வைப்பதற்காக நாங்கள் அவர்களுடன் இணைந்து செயல்பட முயற்சிக்கிறோம். மேலும், அமைச்சர் மத்ஸ்ய சம்பதா யோஜனா மூலம், டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்ட முடிந்தவரை பல படகுகளைப் பெற நாங்கள் முயற்சிக்கிறோம் – என்றும் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டார். மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் நீண்டகால திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர், நீண்டகால திட்டம் இரண்டு முயற்சிகளைச் சார்ந்துள்ளது. ஒன்று பிரதான் அமைச்சர் மத்ஸ்ய சம்பதா யோஜனா. இதற்கு 20,050 கோடி இந்திய ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மேலும் இதன் நோக்கம் டிரான்ஸ்பாண்டர்களுடன் படகுகளை பொருத்துவதாகும், இதனால் நீங்கள் இதுபோன்ற கவனக்குறைவாக எல்லை கடக்குதல், படகுகள், வலைகள் மற்றும் பயிற்சி பெறுதல், ஆழ்கடல் மீன்பிடி படகுகளை ஆதரிப்பது மற்றும் அவற்றுக்கு உபகரணங்கள் வழங்குவது மற்றும் மாற்று வழிகளை வழங்குவது ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தலாம். மாற்று வழிகளை வழங்குவதே மற்றொரு யோசனை ஆகும். ஆனால், இதைச் செய்ய, நமது மீனவ சமூகங்களுக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும் ஒரு புரிதல் ஏற்பட, மாநில அரசின் ஒத்துழைப்பும், மீனவர் குழுக்களும் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும். சில கேள்விகளுக்கு எழுத்து பூர்வமாகவும் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர். 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 147 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 135 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், 10 பேர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார். 2024 ஆம் ஆண்டில், மொத்தம் 560 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 526 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், 29 பேர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் என்றும், சிலர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார். 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 76 மீனவர்களும், புதுச்சேரியைச் சேர்ந்த 9 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டில் 501 தமிழக மீனவர்களும், 29 புதுச்சேரி மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். https://athavannews.com/2025/1426712- உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர தற்காலிக நிர்வாகம் – புட்டின் பரிந்துரை!
உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர தற்காலிக நிர்வாகம் – புட்டின் பரிந்துரை! புதிய தேர்தல்களை நடத்தவும், போரில் ஒரு தீர்வை எட்டுவதற்கான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் உக்ரேனை ஒரு தற்காலிக நிர்வாகத்தின் கீழ் வைக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பரிந்துரைத்ததாக மொஸ்கோ செய்தி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை செய்தி வெளியிட்டன. ரஷ்யாவுடனான உறவுகளை மீண்டும் நிலைநாட்டுவதன் மூலமும், மொஸ்கோ மற்றும் கீவ் ஆகிய இரு நாடுகளுடனும் தனித்தனி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதன் மூலமும் மோதலுக்கு ஒரு தீர்வை உருவாக்க அமெரிக்கா முயற்சிக்கும் நிலையில், வடக்கு துறைமுகமான முர்மான்ஸ்க்கு விஜயம் செய்தபோது புட்டினின் மேற்கண்ட கருத்துக்கள் வந்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறார் என்று தான் நம்புவதாக கிரெம்ளின் தலைவர் இதன்போது கூறினார். 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று காயமடைந்தது, மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயர்ந்தது, நகரங்களை இடிபாடுகளாக மாற்றியது மற்றும் மொஸ்கோவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக மிகக் கடுமையான மோதலைத் தூண்டியது. ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது பதவிக்காலம் 2024 மே மாதத்துக்குப் பிறகும் ஆட்சியில் நீடிப்பதால், உக்ரேனின் அதிகாரிகள் ஒரு முறையான பேச்சுவார்த்தை கூட்டாளியாக இல்லை என்ற அவரது நீண்டகால முறைப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் புட்டினின் தற்காலிக நிர்வாகத்திற்கான பரிந்துரை தோன்றியது. தற்காலிக நிர்வாகம் குறித்த புட்டினின் கருத்துக்கள் குறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வினவியபோது, உக்ரேனில் ஆட்சி அதன் அரசியலமைப்பு மற்றும் நாட்டு மக்களால் தீர்மானிக்கப்படுகிறது என்றார். ரஷ்யா ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கு உக்ரைனிடமிருந்து உடனடி கருத்து எதுவும் வரவில்லை. ஐரோப்பியத் தலைவர்கள் வியாழக்கிழமை பாரிஸில் நடந்த கூட்டத்திற்குப் பின்னர், உக்ரேனில் எதிர்கால பாதுகாப்பின் மூலக்கல்லாக இருப்பதை உறுதிசெய்ய கியேவின் இராணுவத்தை வலுப்படுத்துவதாக உறுதியளித்து, தங்கள் சொந்த முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவுடன் ஒரு போர் நிறுத்தம் ஏற்பட்டால், பிரான்சும் பிரிட்டனும் ஒரு வெளிநாட்டு “உறுதிப்படுத்தும் படைக்கு” ஆதரவை விரிவுபடுத்த முயற்சித்தன, இருப்பினும் உக்ரேனில் வெளிநாட்டு படைகளின் இருப்பை மொஸ்கோ நிராகரித்தது. இதேவேளை, தனது நியாயத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் எந்தவொரு கருத்தையும் உக்ரேன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நிராகரித்தார். உக்ரேன் இராணுவச் சட்டத்தின் கீழ் தேர்தல்களை நடத்துவதற்கு சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், போர்க்கால சூழ்நிலையில் ஒரு தேர்தலை நடத்துவது எப்படியிருந்தாலும் சாத்தியமற்றது என்றும் கூறினார். அண்மைய நாட்களில் புட்டின் மோதலைத் தொடர விரும்புவதாக ஜெலென்ஸ்கி பலமுறை குற்றம் சாட்டியுள்ளார். https://athavannews.com/2025/1426725 - தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.