Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிப்பு: பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு! பிரான்சில் உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. குறித்த அறிவிப்பானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 92 டிரில்லியன் டொலர் மதிப்புடைய உலகின் மிகப்பெரிய வெள்ளை ஹைட்ரஜன் களஞ்சியத்தையே பிரான்ஸ் அரசு கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இது எதிர்காலத்திற்கான சுத்தமான எரிசக்தியாக கருதப்படும் இயற்கை ஹைட்ரஜன் கண்டுபிடிப்பில் மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. பூமியின் அடியிலிருந்து 1,250 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சுரங்கம் பூமியின் இயற்கையான செயல்முறைகளால் உருவாகும் ஹைட்ரஜன் வகை எனவும், இதனை எரிக்கும்போது தண்ணீரை மாத்திரம் வெளியிடுவதால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசுழற்சி செய்யக்கூடிய, சுற்றுச்சூழல் மாசற்ற எரிசக்தி ஆதாரம் என்பதால் எதிர்கால எரிசக்தியாக வெள்ளை ஹைட்ரஜன் கருதப்படுவதாகவும், இதனால் எந்த விதமான பச்சை வீட்டு வாயுக்களும் உருவாகாது எனவும், எனவே இது கார்பன் நீக்கமற்ற எரிசக்தியாகச் செயல்படுமெனவும் மாசு ஏற்படுத்தும் எரிசக்திகளுக்கு மாற்றாக இது பயன்படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பானது உலகளாவிய ஹைட்ரஜன் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், இது உலகளவில் மீளச்சுழற்சி செய்யக்கூடிய எரிசக்திக்கான வரலாற்றுச் செயல்முறையாகக் கருதப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424736
  2. தென்கொரிய இராணுவத்தின் போர் பயிற்சியை குழப்பும் நோக்கில் வடகொரியா ஏவுகணை தாக்குதல்! அமெரிக்கவுடன் இணைந்து தென்கொரிய இராணுவம் நேற்று ஆரம்பித்த போர் பயிற்சியை குழப்பும் நோக்கில் வடகொரியா கடலுக்கு அடியில் பல பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென்கொரிய இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. தென்கொரிய அரசாங்கம் நேற்று பயிற்சியை ஆரம்பித்த சில மணிநேரங்களின் பின்னர் வடகொரியா இவ்வாறு ஏவுகளைகளை ஏவி தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்கள் வருடாந்த கூட்டு ராணுவ பயிற்சியை நேற்று ஆரம்பமானது. 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு நாடுகளின் படைகளும் தங்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் திறன்களை வெளிப்படுத்தவுள்ளன. எனினும் இந்த ஏவுகணை தாக்குதலும் தமது இராணுவப்பயிற்றசி என வடகொரியா அறிவித்துள்ளதுடன் தென்கொரியாவின் குற்றச்சாட்டினை மறுத்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணைகள் ஹ்வாகி மாகாணத்திலிருந்து ஏவப்பட்டன. வருடத்தில் ஐந்தாவது முறையாக வடகொரியா இதுபோன்ற ஏவுகணைகளை கடற்பகுதிக்குள் ஏவியுள்ளதாக தென் கொரியாவின் கூட்டு ராணுவத் தலைவர் தெரிவித்தார். தென் கொரியா – அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சியை எதிர்த்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வெளியே போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சி தென்கொரியாவில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதால் அதை நிறுத்தமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த வாரம் இடம்பெற்ற பயிற்சியின் போது, வட கொரிய எல்லையில் உள்ள போச்சான் பகுதியில் இரண்டு தென் கொரிய போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகளை வீசியுள்ளதாகவும் இதில் 30 பேர் காயமடைந்திருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கூட்டு ராணுவ பயிற்சியும், கடலில் வடகொரியாவின் ஏவுகணை வீச்சும் குறித்த பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. https://athavannews.com/2025/1424766
  3. வட கடலில் இரு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து! வடகிழக்கு இங்கிலாந்தில் அமெரிக்க இராணுவத்திற்காக ஜெட் எரிபொருளை ஏற்றிச் சென்ற ஒரு டேங்கர் கப்பல் ஒரு கொள்கலன் கப்பலுடன் திங்கட்கிழமை (10) மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலில் இரு கப்பல்களிலும் தீப்பிடித்தது. இதனால் பல வெடிப்புகள் ஏற்பட்டதுடன், இரு குழுவினரும் கப்பலை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான தொன் ஜெட் எரிபொருளை சுமந்து செல்லக்கூடிய அந்த டேங்கர் கப்பல், சிறிய கொள்கலன் கப்பல் மோதியபோது நங்கூரமிட்டிருந்ததாகவும், அதன் சரக்கு தொட்டி உடைந்து கடலில் எரிபொருளை வெளியிட்டதாகவும் அதன் இயக்குநரான ஸ்டெனா பல்க் கூறினார். இந்த சம்பவத்தில் தீங்கிழைக்கும் செயல்கள் அல்லது பிற நபர்கள் ஈடுபட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று இரண்டு கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. பிரித்தானியாவின் கடலோர காவல்படை ஒரு அறிக்கையில், விபத்தினை அடுத்து 36 பணியாளர்கள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது. போர்த்துகீசியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலான சோலாங் (Solong) இன் குழு உறுப்பினர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், தேடுதல் பணி முடிவடைந்துள்ளதாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இன்னும் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர். அமெரிக்க தளவாடக் குழுவான க்ரௌலியால் இயக்கப்படும் ஸ்டெனா இம்மாகுலேட் (Stena Immaculate) என்ற டேங்கர் கப்பல், ஜெட்-ஏ1 எரிபொருளை ஏற்றிச் சென்றபோது, நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பலான சோலாங்கில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த டேங்கர் கப்பல் அமெரிக்க அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாகும், தேவைப்படும்போது ஆயுதப் படைகளுக்கு எரிபொருளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய அணுகுமுறையை திறக்கிறது என்று அமெரிக்க இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஹாம்பர்க்கை தளமாகக் கொண்ட சோலாங் கப்பலின் உரிமையாளர் எர்ன்ஸ்ட் ரஸ், கப்பல் பிரித்தானிய கடற்கரையான ஹம்பர்சைடில் இருந்து வடக்குக் கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, GMT 10.00 மணிக்கு ஸ்டெனா இம்மாகுலேட்டுடன் மோதியதாக குறிப்பிட்டார். மோதலின் தாக்கத்திலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்துகளிலும் இரு கப்பல்களும் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்தன. சோலாங் கப்பலில் இருந்த 14 பேரில் 13 பேர் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். காணாமல் போன குழு உறுப்பினரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டினார். கடற்படை தரவு வழங்குநர்களின் விபத்து தொடர்பான அறிக்கையின்படி, சோலாங் கப்பலில் 15 கொள்கலன்களில் சோடியம் சயனைடு, முக்கியமாக தங்கச் சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனம் மற்றும் அறியப்படாத அளவு ஆல்கஹால் ஆகியவை இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதனிடையே, திங்கட்கிழமை காலை சம்பவ இடத்திற்கு அவசரகால குழுக்கள் ஒரு ஹெலிகொப்டர், நிலையான இறக்கை விமானம், உயிர்காக்கும் படகுகள் மற்றும் தீயணைப்பு திறன் கொண்ட கப்பல்களும் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1424712
  4. ஞானசார தேரர்தான் இந்த நாட்டின்…. முதலாவது இனவாதியும், மதவாதியும் ஆவார். இவர்கள் எல்லாம்… தங்கள் மேல் முழுத் தவறையும் வைத்துக் கொண்டு, மற்றவர்களுக்கு வகுப்பு எடுப்பதை பார்க்க சகிக்க முடியவில்லை. இவருக்கு காவி உடுப்பு ஒரு கேடு.
  5. மல்லாகம் நீதிமன்றில்…. இந்த யூரிப்பரை பிணை எடுக்க, திருக்குமரன் என்பவர் தலைமையிலான 10 சட்டத்தரணிகளுடன், தன்னந்தனியாக வாதாடிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ராகவனுக்கு எமது பாராட்டுக்கள். வீடியோ ஆதாரங்களையும் காட்டி, சட்ட திட்டங்களையும் வெளிப்படுத்திய இளவாலை பொலிஸ் உத்தியோகத்தர் ராகவனின் வாதத் திறமையால் கிருஷ்ணா 19.03.2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தகவல்: யாழ்ப்பாணம். COM
  6. https://www.facebook.com/61555822700733/videos/993748038819254 உள்ளாடையை காணொளியில் காட்டும் sk கிருஸ்ணா குடும்பம். சீனித் தம்பி
  7. படலந்த வதை முகாமில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக இருந்த ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர் ஏ. பீ கருணாரத்ரன ஒரு நேர்காணலில் வழங்கிய திரள் வாக்குமூலத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. ♦️ ஊடகவியலாளர் : இந்த வாக்குமூலத்தை நீங்கள் வழங்குவதால் உங்களுக்கு ஏதாவது உயிராபத்து ஏற்படும் என நீங்கள் நினைக்கிறீர்களா? ♦️ஏ. பீ கருணாரத்ரன : இந்த நேர்காணலிற்கு போக வேண்டாம் என்று அச்சுறுத்தினார்கள். நான் யாருக்கும் கடனுமில்லை. பயமும் இல்லை. எனக்கு இப்போது 88 வயது . என்னை இன்று கொலை செய்தாலும் பராவாயில்லை. நாளை கொலை செய்தாலும் பராவாயில்லை. நாங்கள் வாழ்ந்த காலம் முடிந்து விட்டது. ♦️ ஊடகவியலாளர் : நீங்கள் யார் ? உங்கள் பதவி என்ன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : ஏ. பீ கருணாரத்ரன , ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர் , இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ரன்ஜன் விஜேரத்ன அவர்களின் ஆலோசனைக்கு அமைய படலந்தவில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்றேன். ♦️ ஊடகவியலாளர் : படலந்த என்றால் என்ன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : படலந்த என்பது காடு அல்ல. கொழும்பிலிருந்து கிரிபத்கொடவிற்கு செல்லும் போது, கிரிபத்கொடயில் இருந்து மாத்தறை வீதிக்கு செல்லும் போது கொஞ்சம் தூரம் சென்ற பின் வலது பக்கம் சுமார் 20 ஏக்கர் அளவிலான தென்னந்தோப்பு ஒன்று இருக்கும். அதில் வேலை செய்யும் வேலையாட்களுக்கான களஞ்சிய அறைகள் உட்பட பல வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அதே 20 ஏக்கரில் பெரும் கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த கட்டிடங்களில் தான் வதை முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டன. ♦️ ஊடகவியலாளர்: படலந்தவில் என்ன நடந்தது? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : படலந்தவிற்கு ஒருவரை கொண்டுவந்தால் முதலில் அவர்களை தலைகீழாக தொங்கவிடுவார்கள். அதன்பிறகு அவர்களின் இரு காதுகளிற்கு பெரிய இரும்பு ஆணி அடிக்கப்படும். கண்களிற்கு தையல் ஊசியால் குத்துவார்கள். கண்ணாடித் துண்டுகளை சாப்பிடக் கொடுப்பார்கள். சாப்பிடாவிட்டால் பலமாக அடித்து சாப்பிட வைப்பார்கள். சாப்பிடும் போதே அந்த கண்ணாடி துண்டுகள் உடல் பாகங்களை கிழித்துக் கொண்டு கீழே வரும். சூடாக்கப்பட்ட இரும்புக் கோளினால் முதுகில் சூடு வைப்பார்கள். இவற்றை செய்யும் போதே அந்த மனிதர் அரைவாசி இறந்த விடுவார். பின்னர் கீழே இறக்கி பொலித்தீன் உறைகளில் போடுவார்கள். பின்னர் விசாலமாக வெட்டப்பட்டுள்ள குழிகளில் அவர்களை போட்டு அவர்களுக்கு மேல் டயர்களை போட்டு கொளுத்துவார்கள் . இங்கே இடம் போதாத சந்தர்ப்பங்களில் சிலரை மட்டக்குளியில் உள்ள குப்பை சேகரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்று , அங்கே ரொட்டி போடும் தட்டு போல் ஒரு பெரிய தட்டு இருந்தது. அதில் போட்டு கொளுத்து வார்கள். ♦️ ஊடகவியலாளர் : அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களுள் யாராவது விஷேடமானவர்கள் இருந்தனரா? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : விஜயதாஸ லியனாரச்சி . திறமைமிக்க ஒரு சட்டத்தரணி. பெரும்பாலான காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைப் பற்றியே வாதிட்டார். ♦️ ஊடகவியலாளர் : அவருக்கு என்ன நடந்தது? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : இவர் ஒருநாள் ஒரு வழக்கிற்காக வாதிட்டுவிட்டு வெளியே வரும் போது சிவில் ஆடை அணிந்த 04 பொலிஸ் அதிகாரிகள் வந்து வழக்கொன்றிற்காக வாதிட உள்ளதாக கூறி வெள்ளை வேன் ஒன்றில் ஏற்றி தங்காலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கே கரவிட்ட என்ற ஏ. எஸ். பீ ஒருவர் இருந்தார். அவர் பல கேள்விகளை இவரிடம் கேட்டார். இவர் எதற்கும் பதில் கொடுக்காமல் மௌனமாக இருந்தார். பின் அவரை பலமுறை அடித்து கேள்விகளை கேட்டார். எதற்கும் இவர் பதில் அளிக்காததால் படலந்தவிற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு கொண்டு வரும் போதே அவர் அரைவாசி இறந்த நிலையிலேயே இருந்தார். கொண்டுவரப்பட்ட உடன் டக்ளஸ் பீரிஸ் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவிற்கு செய்தி அனுப்பினார். உடனே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும் , ரணில் விக்கிரமசிங்கவும் ஒரே வாகனத்தில் அங்கு வந்தனர். அவர்களும் முடியுமான அளவு கேள்விகளை கேட்டனர். ஆனால் அந்த சட்டத்தரணி எதற்கும் பதில் கொடுக்காமல் மௌனமாகவே இருந்தார். அவருக்கு பதில் கொடுக்கும் அளவிற்கு கூட உயிர் இருக்கவில்லை. அதன் பின்னர் இருவரும் டக்ளஸ் பீரிஸிடம் இந்த சட்டத்தரணியை முடியுமான அளவு சித்திரவதை செய்து கொலை செய்யுமாறு பணித்தனர். அதன் பின்னர் அந்த சட்டத்தரணியின் இரு கண்களும் பிடுங்கப்பட்டு மிளாகாய் தூளை முகத்தில் போட்டனர். நான் ஆயுத களஞ்சியசாலை இருந்து மிகவும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் முடியுமான அளவு சித்திரவதை செய்தனர். மாலை 5 அல்லது 6 மணியளவில் அவர் உயிர் அவரின் உடலை விட்டு சென்றது. அன்று இரவே பெரிய வைத்தியசாலைக்கு அருகில் அவரின் உடலை போட்டுவிட்டு வந்தனர். காலையில் சடலத்தை கண்ட மக்கள் வைத்தியசாலையின் பிணவறையில் கொண்டு சென்று வைத்தனர். பிணவறையில் அவர் உடல் வெட்டப்பட்டு மரண பரிசோதனை செய்யப்பட்டு உட்காயங்கள் 46 இனால் இரத்தம் வெளியேறி உயிரிழந்ததாக கூறினர். பின்னர் அவரின் அண்ணாவை அழைத்து அவரது சடலம் கையளிக்கப்பட்டது. அவரது கண்கள் இருந்த இடத்தில் ஏதோ ஒன்றை நிரப்பியிருந்தனர். ♦️ஊடகவியலாளர் : கண்களால் கண்ட மறக்க முடியாத சம்பவங்கள் ஏதாவது உள்ளதா? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : ஆம். களுத்துறை பிரதேசத்தில் நடந்த சம்பவம். தென் மாகாணத்திற்கு பொறுப்பான விஜய சூரிய என்ற ஒரு இராணுவ கேப்டன் இருந்தார். அவரின் அம்மாவின் வீடு வேயங்கொட பாடசாலைக்கு அடுத்த காணியில் இருந்தது. JVP இன் சிலர் வந்து அவரின் அம்மாவின் தேசிய அடையாள அட்டையையும் , பணத்தை எடுத்துச் சென்றனர். மகனிற்கு உடனடியாக இராணுவத்தில் இருந்து வெளியேறும் கூறிவிட்டு சென்றனர். மகன் வந்தவுடன் அம்மா நடந்ததை கூறியதும் கோபமடைந்த கேப்டன் விஜய சூரிய லொறி ஒன்றை எடுத்துச் சென்று களுத்துறை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்த உயர் தர வகுப்பிற்கு சென்று அங்கு கற்றுக் கொண்டிருந்த பெண் மாணவிகள் உட்பட 20 பேரை படலந்தவிற்கு அழைத்துக் கொண்டு வந்து பெண் மாணவிகள் அனைவரையும் துஷ்பிரயோகம் செய்து ஆண் மாணவர்களை படுக்க வைத்து இரும்பு சுத்தியலால் தலையில் பலமுறை அடித்து பின்னர் பொலித்தீன் உறைகளில் அவர்களை போட்டுக் கொண்டு அந்த கேப்டனின் அம்மாவின் வீட்டுக்கு அருகில் பாடசாலைக்கு முன்பாக அவர்கள் மீது டயர்களை இட்டு கொளுத்தினர். அவர்களை கொண்டு வரும் பயத்தினால் அனைவரும் கதறி அழுதனர். சிலர் எங்கள் அம்மாவை ஒரு முறை காண்பித்து விட்டு எங்களை கொலை செய்யுமாறு கெஞ்சினர். ♦️ ஊடகவியலாளர் : இது போன்ற சித்திரவதைகள் படலந்தவில் மாத்திரமா மேற்கொள்ளப்பட்டன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : படலந்தவிற்கு பெரும்பாலும் கொண்டுவரப்பட்டவர்கள் பிற இடங்களில் வசித்தவர்கள் . ஹபராதுவை வரை , அம்பலங்கொட , பலப்பிட்டிய , வேயங்கொட , மீரிகம , திஹாரிய மற்றும் அத்தனகல்ல பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் தான் படலந்தையில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். படலந்த போன்ற வதைக்கூடங்கள் நாடு பூராவும் 46 காணப்பட்டன. அவைகள் அனைத்தும் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்பட்ட தொழிற் கிராமங்கள் ஆகும். சூரியகந்த , வவுல்பெலே, மினுவங்கொட பலங்கொட உடவலை மற்றும் மல்மீகன்த என்பன சில உதாரணங்களாகும். ♦️ ஊடகவியலாளர் : படலந்தவிற்கு அடிக்கடி வந்து சென்றவர்கள் யார் ? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : தினமும் ரணில் விக்கிரமசிங்க வந்து செல்வார். அதேபோன்று கோணவில சுனில். கோணவில சுனில் வைத்தியர் ஒருவரின் மகளை கற்பழித்து கொலை செய்து சிறைவாசம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது ரணில் விக்கிரமசிங்கவினால் விடுதலை செய்யப்பட்டு சமாதான நீதிவானாக மற்றும் இளைஞர் வேலைவாய்ப்பு அமைச்சில் செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். ♦️ ஊடகவியலாளர் : பிரபல்யமான தேசிய அடையாள அட்டை கொண்டு செல்லுதல் தொடர்பான உங்கள் கருத்து என்ன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : உண்மை. "கோணிபில்லா" என்ற ஒரு குழுதான் செய்தது. அதில் பெரும்பாலானோர் JVP இல் இருந்தவர்கள் தான். தேசிய அடையாள அட்டைகளை எடுத்து சென்றனர். கட்சிக்கு உதவுவதாக கூறி பணத்தை கொள்ளை அடித்தனர். JVP இனர் 03 கோணிப் பைகளில் தேசிய அடையாள அட்டைகளை எடுத்து வைத்திருந்தனர். நாங்கள் விசாரணைக்காக எல்லா வதைக்கூடங்களிற்கும் சென்றோம். அனைத்தினதும் தகவல்களை சேகரித்து இருந்தோம். ஆனால் படலந்தவிற்கு மாத்திரமே வழக்கு தொடுக்கப்பட்டது. மற்றைய வதைக்கூடங்களிற்கு வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. அதே போன்று JVP இனரால் வாக்களிக்க சென்ற 5 பேரை கொலை செய்து வாக்களிக்கும் இடத்திலேயே போட்டனர். இதுபோன்று 225 பேர் கொலை செய்யப்பட்டனர். ♦️ ஊடகவியலாளர் : இவ்வளவு நடந்த பின்பும் ஏன் இவர்களுக்கு எதிராக சட்டம் எதையும் செய்யவில்லை? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : நான் நீதிமன்றத்திற்கு சாட்சியளிக்க செல்ல இருந்தேன். ஆனால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க போக வேண்டாம் என பயமுறுத்தினார். இருந்தாலும் நான் போனேன். போகும்போதே டக்ளஸ் பீரிஸ் பெயரை மாற்றி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். இரண்டாவது பிரதிவாதியான நிஷ்ஷங்க என்பவர் வீட்டிலேயே துப்பாக்கியினால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். ♦️ ஊடகவியலாளர் : ரணில் விக்கிரமசிங்க தற்போது அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை போன்றே செயற்படுகிறார்? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : இன்று ரணில் விக்கிரமசிங்க அதைத் தருகிறேன். இதை செய்வேன் என்று கதை சொல்லித்திரிகிறார். அவரின் பழைய வரலாறு கொலையை யும் , வதையையும் ஊக்குவித்த ஒருவராக காணப்படுகிறார். புதிதாக அவர் ஒரு கூட்டத்தில் இதை கூறினார். அப்போது எனக்கு பண்டைய வதைக்கூடங்கள் ஞாபகம் வந்தது. ♦️ ஊடகவியலாளர் : பண்டைய வரலாற்றை தெரியாத ஒருவருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? ♦️ ஏ. பீ கருணாரத்ரன : நீங்கள் வாக்களிக்க 88/89 நடைபெற்றது என்ன என்பதை தேடிப் படியுங்கள். பின்னர் புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள். 🛑 பிற்குறிப்பு இவர் இந்த நேர்காணலில் கூறியது போல் JVP இனரால் தேசிய அடையாள அட்டைகள் திருடப்பட்டது உண்மை தான். தற்பாதுகாப்பிற்காக சில கொலைகள் செய்யப்பட்டன. நானும் 2000 ஆண்டுக்கு பிற்பாடு பிறந்தவன். நானும் இவர் சொன்னது போல் வாக்களிக்க முன் பண்டைய அரசியலில் 88/89 உண்மைத் தன்மைகளை ஓரளவு தேடிப் படித்தேன். நான் தெரிந்த மட்டில் JVP இன் பெயரை வைத்து அவர்களின் கொள்கைக்கும் அரசியல் கோட்பாடுகளிற்கும் அப்பால் ஒரு அரச அங்கீகாரம் பெற்ற ஒரு குழு JVP பெயரை வைத்து பல அப்பாவிகளை கொலை செய்ததையும், இந்த குழுவில் இந்திய ரோ அமைப்பின் சிலரும் அரசினால் மறைமுகமாக கொண்டுவரப்பட்டு அராஜகம் செய்தாக பல நடுநிலை வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியாளர்களின் அறிக்கைகளில் எழுதப்பட்டிருத்ததை வாசித்தேன். அன்று ஊடகங்களும் அரசாங்கம் எதைச் சொன்னதோ அதே மக்களிற்கும் காட்டியது. அடாவடித்தனத்திற்கும், ஊழலிற்கும் எதிராக குரல் கொடுத்ததால் தீவிரவாதிகள் JVP இனரை முத்திரை குத்த அரசாங்கம் செய்த செயலாகவே பெரும்பாலான ஊடகவியலாளர் எழுதியிருந்தனர். இது தொடர்பாக இன்னும் ஆராய்ந்து எழுதவுள்ளேன். எது எப்படியோ இந்த வதை முகாம்களில் கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது தற்கால அரசாங்கத்தின் பொறுப்பாகும். சிலர் நினைக்கலாம் நான் JVP சுத்தப்படுத்த முனைவதாக. எழுதுவது என் விருப்பம். வாக்களிப்பதும் எனது உரிமை. விமர்சிப்பதற்கும் உங்களுக்கு உரிமை உள்ளது. ✍🏻Usaidh Muaaz யாழ்ப்பாணம்.com
  8. அவர்களை நாடு கடத்த முதல்.... சுன்னத்து செய்து, குல்லாவும் போட்டு நாடு கடத்தி இருந்தால், இனி ஒரு பயலும் இலங்கைக்கு, மதம் மாற்ற கிளம்பி வரமாட்டார்கள். இல்லாவிடில்... மீனவர் பிரச்சினை மாதிரி, இதுவும் தொடர்கதையாக இருக்கப் போகின்றது.
  9. போட்டியில்... முதலிடத்தை பெற்றுக் கொண்ட முதல்வர் @வீரப் பையன்26 க்கும், அதே அளவு 42 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட... @செம்பாட்டான், @Eppothum Thamizhan, @புலவர், @நீர்வேலியான், @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் உரித்தாகட்டும்.
  10. E-சிகரெட் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை! E-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. வேப்பிங் அல்லது E-சிகரெட்டுகள் சட்டவிரோதமானது என்று நாடாளுமன்ற நிதிக்குழுவில் தெரிய வந்துள்ளது. இந்த விடயத்தினை கருத்திற் கொண்டு ஒரு திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிகரெட் வரி இதேவேளை ஏப்ரல் முதலாம் திகதி முதல் சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் நிறுவன வருமான வரியை 45% ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் சிகரெட் வரி படிப்படியாகக் குறைந்து வருவதாக தெரிவித்த பொது நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா, சிகரெட்டுகள் மீதான வரியை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆலோசனை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424683
  11. நடிகை மாலினி பொன்சேகா வைத்தியசாலையில் அனுமதி! பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாலினி பொன்சேகா சில காலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் நோய் நிலைமை அதிகரித்தமையைத் தொடர்ந்து அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலினி பொன்சேகா இந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424657
  12. நீதிமன்றில் தேசபந்து மனுத் தாக்கல்! முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ. 15 ஆவது விருந்தகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தம்னை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு அந்த மனுவில் அவர் கோரியுள்ளார். இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற ஆயம் முன்னிலையில் இன்று (10) பரிசீலனைக்கு அழைக்கப்பட்டது. பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுத்த பின்னர், மனுவை எதிர்வரும் 12 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1424639
  13. மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்! இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வலியுறுத்தி தமிழகத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்போவதாக விஜயின் கட்சியான தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தளபதி விஜய்யும் கலந்து கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்தவராம் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான அனுமதியை தமிழக வெற்றி கழகம் பொலிசாரிடம் முன்வைத்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் இந்த போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424675
  14. 17.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது! 17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 20 வயது கனேடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று இரவு (9) விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர், இளங்கலை மாணவி என்றும் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் நேற்று இரவு 8.35 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY-396 மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைவதற்கு முன்பு கனடாவின் டொராண்டோவிலிருந்து அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். சோதனையில், சுங்க அதிகாரிகள் அவரது பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 17 கிலோகிராம் 573 கிராம் ஹஷிஷ் போதைப்பொருளை கண்டுபிடித்தனர். சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன், மேலதிக விசாரணைக்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1424556
  15. உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கும் சமல் ராஜபக்ஷ! முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட இளம் வேட்பாளர்களை பெருமளவில் முன்னிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். SLPP வேட்பாளர்களில் பெண்கள் மற்றும் தன்னைப் போன்ற மூத்த நபர்களும் அடங்குவர் என்று அவர் மேலும் கூறினார். எனினும், முன்னாள் சபாநாயகர் எந்த உள்ளூராட்சி சபைக்கு போட்டியிடப் போகிறார் என்பதை இதன்போது வெளிப்படுத்தவிலை. https://athavannews.com/2025/1424607
  16. விலங்குகளை வேட்டையாடிய கும்பல் சிக்கியது! துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் ஏனைய உபகரணங்களுடன் விலங்குகளை வேட்டையாடிய ஆறு சந்தேக நபர்களை பேராதனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (09) யஹலதென்ன பிரதேசத்திற்கு விலங்குகளை வேட்டையாட வந்த போது பிரதேசவாசிகளால் மடிக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பேராதனை பொலிஸ் நிலையத்தில் இரவு நேர நடமாடும் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் உரிய இடத்திற்கு சென்று பார்த்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட பன்றியையும் விலங்குகளை வேட்டையாடிய ஆறு நபர்களையும் கைது செய்தனர். இதன்போது, 03 12-துளை ரவைகள், 03 ஸ்கால்பெல்கள், ஒரு கோடாரி, ஒரு கை கோடாரி, 02 டிராகன் லைட்டுகள் மற்றும் ஒரு கத்தி ஆகியவை சந்தேக நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 மற்றும் 71 வயதுடைய மாவத்தகம பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். பேராதனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளின் போது யஹலதென்ன பிரதேசத்தில் வீதியோரமாக உள்ள காட்டுப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 12 போர் ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸாரும் மாவத்தகம பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1424604
  17. அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருக்கும் தென்னகோன்? முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதேவேளை தேசபந்து தென்னகோன் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தெரிவித்துள்ளார். தேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது. 2023 டிசம்பர் 31 அன்று மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையின் பிரகாரம் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 11 நாட்கள் கடந்துள்ள போதிலும் அவர் இதுவரையில் கைது செய்யப்படாத நிலையில் இவ்வாறு ஆறு பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடவடிக்கை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும் தேசபந்து தென்னகோன் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தை தவிர்க்கும் பிடியாணைதாரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நேற்று தெரிவித்தார். சட்டத்தை செயல்படுத்துவதற்கு தரவரிசை ஒரு பொருட்டல்ல என்றும் பிரதி அமைசச்ர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1424591

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.