Everything posted by தமிழ் சிறி
-
தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்ய சதி!
இரண்டு மாதங்களுக்கு முன் சிவஞானம்.... உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழரசு கட்சியில் ஆட்கள் இல்லை என்றும், இளைஞர்களை கட்சியில் வந்து இணையும் படியும், வேண்டுகோள் விடுத்திருந்தார். இவர்கள் செய்யும்... செயலுக்கு, எவராவது வேலை மினைக்கெட்டு அங்கு போவார்களா. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கே...அருவெறுப்பாக உள்ளது. முதலில்... தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். கடைசியில்... ஆனந்தசங்கரி, ஒரு பிரயோசனமும் இல்லாமல் வைத்திருக்கும்... தமிழர் விடுதலை கூட்டணியும் உதயசூரியன் சின்னமும் மாதிரி... தமிழரசு கட்சியை செல்லாக் காசு ஆக்கப் போகின்றார்கள். இதற்கு முழுக் காரணமும் சுமந்திரனையே சேரும்.
-
தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்ய சதி!
சுமந்திரன் ஏற்கெனவே... தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசு கட்சி எல்லாவற்றையும், உடைத்து விட்டார். அதில் உடைக்க இனி ஒன்றும் இல்லை என்பது சிவஞானத்துக்கு புரியவில்லை. தோல்வி பயத்தில்... புசத்திக் கொண்டு திரியிறார்.
-
கருத்து படங்கள்
- பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை முடிவு - பிமல் ரத்நாயக்க
- அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
ஒரு இனத்தின் சார்பாக சந்திக்கும் போது, வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். சுமந்திரனில் இந்தப் பழக்கம் அறவே இல்லை. தமிழ் மக்களால் தெரிவு செய்யப் பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் போது, தனிப்பட்ட சந்திப்புக்கள் இரகசிய பேரம் பேசுதல் போன்றன நடப்பதாகவே சந்தேகிக்கப் படும். இவ்வளவு காலமும் இப்படியான சந்திப்புக்கள் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகளையும் அவர்கள் தான் சொல்ல வேண்டும். இல்லாவிடில்.... வழக்கம் போல், நானும் கச்சேரிக்குப் போனேன்.. என்ற விதத்தில், பத்திரிகைகளுக்கு பல்லைக் காட்டிக் கொண்டு எடுத்த, படம் காட்டலாகவே இருக்கும். வர வர... கோமாளிக் கூத்துக்கள் கூடிக் கொண்டே போகின்றது. 😂 🤣- பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை முடிவு - பிமல் ரத்நாயக்க
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு! பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை இன்று (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த விடயம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தியதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இதன்போது “இலங்கையில் வடக்கு மற்றும் தெற்கில் பல தசாப்தங்களாக, மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வந்துள்ளதாகவும், அதை தாம் நன்கு அறிவதாகவும், இந்த நாட்டு மக்களுக்கு ஜனநாயகம் தேவை எனவும், இந்த விடயத்தில் மக்களின் நம்பிக்கையை வென்று, ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425125- கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்!
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்! கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது இன்னிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் வழமை போல இந்த வருடமும் இந்திய இலங்கை பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கின்றனர் என்றும் இருநாட்டு பக்தர்கள் 8 ஆயிரம் பக்தர்களும் சிவகங்கை மறைமாவட்ட ஆயருடன் இணைந்து 100 குருக்களும் இந்த யாத்திரையில் கலந்து கொள்கின்றனர், அத்துடன் நெடுந்தீவு பிரதேச சபை யாழ் மாவட்ட செயலகம் கடற்படை இணைந்து இந்த ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன் சனிக்கிழமை அதிகாலை 4:30 குறிகட்டுவானுக்கான பேருந்து சேவைகள் இடம் பெறும் குறிகாட்டுவானிலிருந்து படகு சேவைகள் இடம்பறவுள்ளது. இதேவேளை குடிநீர், உணவு, மலசலகூடம் என அனைத்து வசதிகளும் என ஏற்பாடு செய்யபட்டுள்ளன.ஆகவே இந்த திருநாளின் ஊடாக ஆசி பெற அனைத்து பக்தர்களையும் அழைத்து நிற்கின்றோம் என்றும் இன்று மாலை 4 மணயளவில் திருச்செபமாலையும் அதனை தொடர்ந்து திருச்சிலுவை பாதை, திருப்பலி, கருணை ஆராதனையை தொடர்ந்து புனித அந்தோனியாருடைய திருச்சொரூப பவனி இடம்பெறும் தொடர்ந்து நாளை சனிக்கிழமை காலை 7 மணிக்கு திருநாள் திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புகொடுக்கபடவுள்ளது இது தவிர இலங்கையின் தென்பகுதி சகோதரர்களும் வர இருப்பதனால் சிங்கள மொழியிலும் சில வழிபாட்டு பகுதிகள் இடம்பெறவுள்ளன. சிங்கள மொழியில் மறையுரை ஆற்றுவதற்காக கொழும்பு மறைமாவட்டத்தில் இருந்து அருட்தந்தை சிஸ்வாண்டி குருஸ் அடிகளார் கலந்து கொள்ளவுள்ளார் . மேலும் சனிக்கிழமை காலை 6 மணிக்கு திருச்செபமாலை இடம்பெறும் என்றும் 7 மணிக்கு திருநாள் திருப்பலி ஆரம்பமாகி சுமார் 9 மணிவரை திருநாள் திருப்பலி இடம்பெறுவதுடன் திருவிழா நிறைவு பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1425108- கனடாவை அடுத்து பிரான்ஸை எச்சரிக்கும் ட்ரம்ப்!
கனடாவை அடுத்து பிரான்ஸை எச்சரிக்கும் ட்ரம்ப்! அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் விஸ்கி மீது ஐரோப்பிய ஒன்றியம் விதிக்க திட்டமிட்டுள்ள வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மதுபானப் பொருட்களுக்கு 200% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘அமெரிக்கா மீதான வரியை ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக நீக்கா விட்டால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதித்துவ நாடுகளிலிருந்து வரும் அனைத்து வையின்கள், ஷாம்பெயின்கள் மற்றும் மதுபானப் பொருட்களுக்கும் அமெரிக்கா விரைவில் 200% வரி விதிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்பின் இந்த அறிவிப்பு உலகளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பை அமுல்படுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அழுத்ததிற்கு ஒருபோதும் கனடா அடிபணியப் போவதில்லை என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425119- உக்ரேன் போர் நிறுத்தம்; அமெரிக்காவின் முன்மொழிவுக்கு புட்டின் ஆதரவு!
உக்ரேன் போர் நிறுத்தம்; அமெரிக்காவின் முன்மொழிவுக்கு புட்டின் ஆதரவு! உக்ரேனில் போர் நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை மொஸ்கோ கொள்கையளவில் ஆதரிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வியாழக்கிழமை (13) தெரிவித்தார். இருந்த போதிலும், மோதலை விரைவாக நிறைவுக்குக் கொண்டுவருவதற்கான பல விளக்கங்களையும் நிபந்தனைகளையும் அவர் கோரினார். 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று, காயடையச் செய்தது. மேலும், மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயரச் செய்ததுடன், நகரங்களை இடிபாடுகளாக மாற்றியது மற்றும் மொஸ்கோவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக மிகக் கடுமையான மோதலைத் தூண்டியது. இந்த நிலையில், அமெரிக்க போர் நிறுத்த திட்டத்திற்கு புட்டினின் பெரிதும் தகுதிவாய்ந்த ஆதரவு, வொஷிங்டனுக்கு நல்லெண்ணத்தை சமிக்ஞை செய்வதற்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் மேலும் பேச்சுவார்த்தைகளுக்கான கதவைத் திறப்பதற்குமான வாய்ப்பாக தோன்றியது. ஆனால், பல முக்கியமான விவரங்கள் வரிசைப்படுத்தப்பட வேண்டும் என்றும் எந்தவொரு ஒப்பந்தமும் மோதலின் மூல காரணங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் புட்டின் வியாழக்கிழமை கூறினார். மேலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் நன்றி தெரிவித்தார். புட்டினின் கருத்துக்களுக்குப் பின்னர் வெள்ளை மாளிகையில் பேசிய ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், ரஷ்யத் தலைவரைச் சந்திப்பதில் “ஆசப்படுகிறேன்” என்றும், மொஸ்கோ “சரியானதைச் செய்யும்” என்றும், முன்மொழியப்பட்ட 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளும் என்றும் நம்புவதாகவும் கூறினார். சவுதி அரேபியாவில் இந்த வாரம் தொடக்கம் அமெரிக்கா-உக்ரேன் இடையே நடந்த ஒரு நாள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடியான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக கெய்வ் தெரிவித்துள்ளது. ஜெட்டாவில் செவ்வாயன்று (11) நடந்த பேச்சுவார்த்தை, ஓவல் அலுவலகத்தில் ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான முன்னதாக நடந்த சந்திப்பின் அசாதாரண மோதலுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாகும். பேச்சுவார்த்தையின் பின்னர், வொஷிங்டன் நிறுத்தி வைத்திருந்த உக்ரேனுக்கான உளவுத்துறை பகிர்வு மற்றும் பாதுகாப்பு உதவியை உடனடியாக மீண்டும் தொடங்குவதாக அறிவித்தது. 2022 பெப்ரவரியில் ரஷ்யா, உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது. இப்போது உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% ஐக் கட்டுப்படுத்துகிறது. ரஷ்ய இராணுவத்திற்காகப் போராடும் 95,000 க்கும் மேற்பட்டோர் போரில் இறந்துள்ளனர். உக்ரேன் தனது உயிரிழப்பு புள்ளிவிவரங்களை கடைசியாக 2024 டிசம்பரில் புதுப்பித்தது, அப்போது ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் 43,000 உக்ரேனிய இறப்புகளை ஒப்புக்கொண்டார். மேற்கத்திய ஆய்வாளர்கள் இந்த எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுவதாக நம்புகின்றனர். ரஷ்யா, தனது 2022 படையெடுப்பை உக்ரேனை “நாசியை அழிக்க” மற்றும் நேட்டோவின் விரிவாக்கத்தை நிறுத்த வடிவமைக்கப்பட்ட “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று வர்ணித்துள்ளது. மெஸ்கோவும், வொஷிங்டனும் இப்போது இந்த மோதலை மூன்றாம் உலகப் போராக விரிவடையக்கூடிய ஒரு கொடிய மறைமுகப் போராக சித்தரிக்கின்றன. https://athavannews.com/2025/1425112- குரங்குகளை பிடித்தால் பணம்
குரங்கு பிடித்தால்... 1000 ரூபாய். 😂 குரங்கு பிடிக்கும் போது, அது கடித்தால்... 1000 கனேடிய டொலர் செலவாகுமே. 🤣- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பையா.... நானும் போட்டியில் கலந்து கொள்கின்றேன். 👍 மற்றது.... இந்த கிரிக்கெட் விமர்சகர் என்ற அடைமொழி எல்லாம் எனக்கு ஓவர் பையா. 😂 குருவி தலையில்... பனங்காயை வைக்காதீங்க. 🤣- துப்பாக்கிச் சூட்டில் தந்தை, மகள் உயிரிழப்பு; மகன் படுகாயம்!
டுபாய் தப்பிச் செல்ல முற்பட்ட போ...104K views · 1K reactions | டுபாய் தப்பிச் செல்ல முற்பட்ட...டுபாய் தப்பிச் செல்ல முற்பட்ட போது சிக்கிய மித்தெனிய முக்கொலை சந்தேக நபர் #sooriyanfmnews #sooriyanfm #sooriyan #hirunews #tamilnews #news #arrest...டுபாய் தப்பிச் செல்ல முற்பட்ட போது, சிக்கிய மித்தெனிய முக்கொலை சந்தேக நபர்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
அப்போ... சாட்சியங்கள் கலைக்கப்பட்டு விட்டதா? தண்டனையிலிருந்து தப்பி விடுவாரா?- இரசித்த.... புகைப்படங்கள்.
வலிமை அதன் வழியைக் கண்டுபிடிக்கிறது. "பச்சை மிளகாய் செடி தடையை தாண்டிச் சென்று, வரம்புகளை மீறி வானத்தைத் தொடுவது போல."- சிரிக்கலாம் வாங்க
👇 கஸ்ரப் படாமல்... நிம்மதியாக வாழ என்ன செய்ய வேண்டும். 👉 https://www.facebook.com/reel/994610855928795 👈 😂- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
பேச்சுவார்த்தைக்காக செல்லும் ஒரு தூதுவரை சுட்டுக்கொல்ல முடியுமா? அதுவும் அமைதிப்படை என்று வந்தவர்கள் செய்ய முடியுமா? சென்னையில் சிறை வைக்கப்பட்டிருந்த போராளி ஜொனியை தூதுவராக அழைத்துச் சென்று வன்னியில் இந்திய ராணுவம் நயவஞ்சகமாக கொன்ற தினம் 13.03.1988 தோழர் பாலன்- யாழ். யூடியூப்பரின் செயலுக்கு ரஜீவன் எம்.பி கடும் எதிர்ப்பு
- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
- இராணுவ உடையில் புட்டின் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
இராணுவ உடையில் புட்டின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இராணுவ சீருடை அணிந்த நிலையில், மேற்கு ரஷ்யாவில் உக்ரேனியப் படைகளை விரைவாக தோற்கடிக்க உத்தரவிட்டார். இது வியாழக்கிழமை (13) போர்நிறுத்தம் குறித்து விவாதிக்கத் தயாராகும் நிலையில், மொஸ்கோ இராணுவ முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது என்பதற்கான சமிக்ஞையாகும். அண்மைய மாதங்களில் ரஷ்யாவின் போர் முனை முன்னேற்றங்களும், உக்ரேனில் மூன்று வருடங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சியும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் இயங்கும் கெய்வ் போரில் தோல்வியடையக் கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. ட்ரம்பின் மத்திய கிழக்கு சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் வியாழக்கிழமை மொஸ்கோவிற்கு வந்து புட்டினை சந்தித்தார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் புதன்கிழமை போர்நிறுத்த யோசனை குறித்த விவரங்களை வழங்கியதாகவும், ரஷ்யா அதைப் பற்றி விவாதிக்க தயாராக இருப்பதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரேன் ஆதரிப்பதாகக் கூறிய 30 நாள் போர்நிறுத்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவை மொஸ்கோ ஒப்புக் கொள்ளும் என்று நம்புவதாக ட்ரம்ப் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் தெரிவித்திருந்தார். ட்ரம்ப் பேசிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரஷ்யப் படைகளின் மின்னல் தாக்குதலுக்குப் பின்னர் உக்ரேன் தனது நிலையை இழக்கவிருக்கும் மேற்கு ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதிக்கு பச்சை நிற உருமறைப்பு சீருடையில் புட்டின் வருகை தரும் காட்சிகளை கிரெம்ளின் வெளியிட்டது. இதன்போது பேசிய புட்டின், எதிர்காலத்தில், மிகக் குறுகிய காலத்தில், குர்ஸ்க் பிராந்தியத்தில் வேரூன்றியிருக்கும் எதிரியை (உக்ரேன்) தீர்க்கமாக தோற்கடிப்பதே எங்கள் பணி. நிச்சயமாக, மாநில எல்லையில் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் – என்று கூறினார். எனினும், போர் நிறுத்த யோசனையை அவர் குறிப்பிடவில்லை. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று காயப்படுத்தியது, மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயர்ந்தது, நகரங்களை இடிபாடுகளாக்கியது. மேலும், ஆறு தசாப்தங்களில் மொஸ்கோவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான மிகப்பெரிய மோதலைத் தூண்டியது. கிழக்கு உக்ரேனில் இருந்து ரஷ்யப் படைகளைத் திசைதிருப்பவும், பேரம் பேசும் வாய்ப்பைப் பெறவும், புட்டினை சங்கடப்படுத்தவும், உக்ரேன் கடந்த ஆகஸ்ட் மாதம் எல்லையைத் தாண்டி குர்ஸ்க் பகுதிக்குள் நுழைந்தது. இது 1941 ஆம் ஆண்டு நாஜி படையெடுப்பிற்குப் பின்னர் ரஷ்ய பிரதேசத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதலாகும். ரஷ்ய இராணுவத்தின் கூற்றுப்படி, கடந்த கோடையில் ஊடுருவலின் உச்சத்தில் 1,300 சதுர கிமீ (500 சதுர மைல்) இருந்த குர்ஸ்கில், இப்போது உக்ரேனின் பகுதி 200 சதுர கிமீ (77 சதுர மைல்)க்கும் குறைவாக உள்ளது. https://athavannews.com/2025/1425059- ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயார் – உக்ரேன் இணக்கம்!
இன்னும் கனிமங்களுக்கான கையெழுத்து வைக்கப் படவில்லை. 5 அம்ச திட்டங்களுக்கு உக்ரைன் சம்மதித்ததாக தெரிகின்றது. அதில் கனிமவளமும் ஒன்று.- யாழில் 17 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றுவோம் - அமைச்சர் சந்திரசேகர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, சுமந்திரன் சுக்கு நூறாக உடைத்ததால்... அனுர கட்சிக்கும், அர்ச்சுனா கட்சிக்கும் மக்கள் வாக்களிக்க சாத்தியக் கூறுகள் அதிகம். சுமந்திரன் தானும் கெட்டு... கட்சியையும் கெடுத்ததுதான் கண்ட பலன்.- இந்திய ரூபாவுக்கு (ரூ என்ற) புதிய குறியீடு; இந்தி திணிப்புக்கான ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை!
இந்திய ரூபாவுக்கு புதிய குறியீடு; இந்தி திணிப்புக்கான ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை! திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான தமிழக அரசு, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அதிகாரப்பூர்வ இந்திய ரூபாய் சின்னத்தை (₹) நீக்கி, அதற்கு பதிலாக தமிழ் எழுத்துக்களை (ரூ) மாற்ற முடிவு செய்துள்ளது. மார்ச் 14 ஆம் திகதி மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மாநில வரவுசெலவுத் திட்டத்துக்கான ஒரு முன்னோட்டத்தை ஸ்டாலின் எக்ஸில் பகிர்ந்து கொண்டார். அதில், “சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட…” என்று கூறியுள்ளார். தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP) எதிரான எதிர்ப்பை ஒரு மாநிலம் புதிய நிலைக்கு எடுத்துச் சென்று, தேசிய நாணய சின்னத்தை நிராகரிப்பது இதுவே முதல் முறை. இந்தி திணிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வரும் நிலையில், மாநில வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து ₹ சின்னத்தை நீக்கும் முடிவு வந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020 இன் முக்கிய அம்சங்களை, குறிப்பாக மும்மொழி சூத்திரத்தை செயல்படுத்த தமிழகம் மறுத்ததன் விளைவாக, சமக்ர சிக்ஷா அபியான் (SSA) கீழ் மத்திய கல்வி உதவியில் 573 கோடி இந்திய ரூபாவை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. கொள்கை விதிகளின்படி, மாநிலங்கள் SSA நிதியைப் பெற NEP வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். இதில் 60 சதவீதம் மத்திய அரசால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. மாநிலத்தில் உள்ள திமுக தலைமையிலான அரசாங்கம், NEP மூலம், பாரதிய ஜனதாக் கட்சி (பாஜக) தலைமையிலான மத்திய அரசு தமிழ் பேசும் மக்கள் மீது இந்தி மொழியைக் கற்க கட்டாயப்படுத்த விரும்புகிறது என்று வாதிடுகிறது. இந்தக் கூற்றுக்களை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிராகரித்து, ஆளும் கட்சியின் செல்வத்தை “புத்துயிர் பெற” ஆளும் திமுக அரசியல் இலாபம் ஈட்ட முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மார்ச் 5, 2009 அன்று இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வடிவமைப்புத் திட்டத்தைத் தொடர்ந்து, 2010 ஜூலை 15, அன்று இந்திய ரூபாய் சின்னம் (₹) அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. டி உதய குமார் உருவாக்கிய இந்த வடிவமைப்பின் மேலே உள்ள இணையான கோடுகள் இந்திய மூவர்ணக் கொடியைக் குறிப்பதாகவும், பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைக்கும் நாட்டின் விருப்பத்தைக் குறிக்கும் சமத்துவ அடையாளத்தையும் சித்தரிப்பதாகவும் கூறப்படுகிறது. புதிய சின்னம் பின்னர் நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்களில் இணைக்கப்பட்டது, ₹ சின்னம் கொண்ட முதல் நாணயங்கள் ஜூலை 8, 2011 அன்று புழக்கத்தில் வந்தன. https://athavannews.com/2025/1425045- கருத்து படங்கள்
- பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவை முடிவு - பிமல் ரத்நாயக்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.