Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நடு வானத்தில் விமானப் பணிப்பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு முயற்சி! சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் பணிபுரியும் இரு விமானப் பணிப்பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டவர் ஆவார். சந்தேக நபர் நேற்று (15) இரவு 10.00 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். வருகையின் போது, சந்தேக நபர் அதிக குடிபோதையில் விமானத்தில் பணிபுரியும் இரண்டு விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார். அதன்படி, விமானப் பணிப்பெண்கள் இருவரும் சம்பவம் குறித்து விமானத்தின் பைலட்டிடம் தெரிவித்ததையடுத்து, அவர் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்கியதும் இலங்கை குற்றப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்து கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விமானப் பணிப்பெண்கள் இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பயணி நீர்கொழும்பு சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டதும் அவர் அதிகளவில் குடிபோதையில் இருந்தமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இலங்கையின் வான்பரப்பில் இடம்பெற்றுள்ளதால், சந்தேகநபர் இன்று (16) கொழும்பு இல.01 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். https://athavannews.com/2025/1425326
  2. வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு! வேலைவாய்ப்புக்காக தனியார் முகவர்களின் ஊடாக வெளிநாடு செல்லும்போது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி குறித்த முகவர் நிலையம் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புகின்றோம் எனக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பணியகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ள முடியும் என்றும், எந்தவொரு தரப்பினரும் அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட அதிகமாகப் பெற்றுக் கொண்டால் அல்லது அனுமதிப் பத்திரம் இன்றி ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் பணியகத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்கள் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த குழுவின் தலைவர், இந்த நிலைமையை தான் அறிந்திருப்பதாகவும், இது மிகவும் சிக்கலான சூழ்நிலை என்றும் வலியுறுத்தினார். சுற்றுலா வலயங்களில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் இரவு விருந்துகளுக்கான ஒலிபெருக்கிகளின் பயன்பாடு இரவு 10 மணியுடன் மட்டுப்படுத்தப்படுவது சுற்றுலாத்துறையின் விருத்திக்குப் பொருத்தமானதாக இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்குச் சுட்டிக்காட்டினர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கௌரவ பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1425329
  3. ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி! இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று (16) காலை நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். காலை 7:30 மணியளவில் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டடதாகவும், அங்கு வைத்தியர்கள் ECG மற்றும் எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகளை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படலாம் என்று வைத்தியசாலைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1425303
  4. தெற்கு அமெரிக்க சூறாவளி; 34 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களில் சனிக்கிழமை (15) வீசிய பயங்கர சூறாவளியால் குறைந்தது 34 பேர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மிச்சிகன், மிசோரி மற்றும் இல்லினாய்ஸ் உட்பட ஏழு மாநிலங்களில் சனிக்கிழமை இரவு வரை 250,000 க்கும் மேற்பட்ட வீடுகளும், கட்டிடங்களும் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டன. கிழக்கு லூசியானா, மேற்கு ஜோர்ஜியா, மத்திய டென்னசி மற்றும் மேற்கு புளோரிடா பன்ஹேண்டில் முழுவதும் சூறாவளி எச்சரிக்கை வெளியிடப்படுள்ளதால், பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்கிழக்கு முழுவதும் கடுமையான வானிலை தொடர்ந்து நிலவி வருவதால், மத்திய மிசிசிப்பி, கிழக்கு லூசியானா மற்றும் மேற்கு டென்னசி ஆகிய இடங்களிலும்; அலபாமா மற்றும் ஆர்கன்சாஸின் சில பகுதிகளிலும் திடீர் வெள்ளம் மற்றும் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் வெள்ளம் ஆபத்தானதாக இருக்கலாம் என்று தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது. சனிக்கிழமை இரவு அலபாமா முழுவதும் பல சூறாவளி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. மிசோரியின் அவசரகால மேலாண்மை நிறுவனம், இதுவரை 25 மாவட்டங்களில் 19ஐ சூறாவளிகளைத் தாக்கியதாக தெரிவித்துள்ளது. மிசோரியில் உயிரிழந்த 12 பேரில் ஒருவரின் வீடு ஒரு சூறாவளியால் இடிந்து விழுந்துள்ளதுடன், அனர்த்தம் காரணமாக பல வாகனங்களும் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1425332
  5. ஏமனின் ஹவுத்திகள் மீது ட்ரம்ப் பாரிய அளவிலான தாக்குதல்! செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் (Houthis) மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை (15)பாரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார். இந்த தாக்குதலில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஹவுத்திகளின் முக்கிய ஆதரவாளரான ஈரானை, அந்தக் குழுவிற்கான ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். இதனிடையே, ஹவுத்திகளுக்கு எதிரான புதிய தாக்குதல்களானது பல நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்கும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த ஜனவரியில் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. அமெரிக்கா தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக தெஹ்ரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அழுத்தத்தை அதிகரித்து வரும் அதேவேளையில், ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முயற்சிக்கும் நிலையில் ஹவுத்திகளுக்கு எதிரான தாக்குதல் வந்துள்ளது. இதேவேளை, ஏமன் தலைநகர் சனாவில் அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 13 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், ஒன்பது பேர் காயமடைந்ததாக ஹவுத்தி நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், சாதாவின் வடக்கு மாகாணத்தில் அமெரிக்க தாக்குதல்களில் நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்ததாகவும் ஹவுத்தி நடத்தும் அல்-மசிரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் எடுத்த ஆயுதமேந்திய இயக்கமான ஹவுத்திகள், 2023 நவம்பர் முதல் கப்பல் போக்குவரத்தை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இது உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைத்துடன், அதிகளவிலான பதில் நடவடிக்கையில் அமெரிக்க இராணுவத்தையும் ஈடுபடுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1425297
  6. சர்வதேச அளவில் குரங்குகளின் தாக்குதல். 😂 🤣
  7. உங்களுடைய மன உறுதிக்கு பாராட்டுக்கள் ஈழப்பிரியன். இங்கு பல தமிழர்கள் வந்த ஆரம்பத்தில் குடிக்க ஆரம்பித்து, அதனை நிறுத்த முடியாமல் மொடா குடிகாரர்களாகி செய்த வேலையையும் இழந்து நோயாளிகளாகி, குடும்பத்தையும் பிரிந்தவர்கள், இறந்தவர்கள் என்று நிறைய உதாரணம் சொல்லலாம். ஒரு நல்ல விடயம்… இப்போ அப்படியான செய்திகளை கேள்விப் படுவதில்லை. அடுத்த தலைமுறை இந்த விடயத்தில் முன் எச்சரிக்கையாக இருக்கின்றார்கள் என்றே நினைக்கின்றேன்.
  8. எனக்குத் தெரிந்த பல நாட்டவர்கள், இளவயதில் சிகரெட் புகைத்து… ஒரு கட்டத்தில் அதனை நிறுத்திய பின் 60 வயதுகளில் சுவாசம் சம்பந்தப் பட்ட பெரும் பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள். முக்கியமாக அயலவர் ஒருவர் அதனால் படும் சிரமத்தை நேரில் கண்டேன். நேர காலம் இல்லாமல் நள்ளிரவில் அம்புலன்ஸ் வந்து அவர் வீட்டு வாசலில் நிற்கும். இறுதிக் காலங்களில் அவர் ஒட்சிசன் சிலிண்டருடன் தான் நடமாடினார். அவரின் நோயால்… அவரின் குடும்பத்தவர்களும் மிகவும் சிரமப் பட்டு விட்டார்கள். சிகரட் புகைப்பவர்கள் யாராவது இருந்தால்… தயவு செய்து அதனை நிறுத்தி விடுங்கள்.
  9. பரமசிவன் (ஸ்ராலின்), பாத்திமா (பாத்திமா பாபு) கதையைத்தான் உல்டா பண்ணுகின்றார்கள் என நினைக்கின்றேன். வெளியிட்ட இருவரையும் பார்க்க… அப்படித்தான் எனக்கு தோன்றுகின்றது.
  10. "கிழக்கு தமிழர் கூட்டமைப்பு" எனும் புதிய கட்சி பிள்ளையான் தலைமையில் உதயம். கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (15) சனிக்கிழமை காலை 10 மணியளவில் மட்டக்களப்பு ரிவேரா விடுதியில் இடம் பெற்றுள்ளது. கிழக்குத் தமிழர்களின் வளர்ச்சியையும் சுபிட்ஷத்தையும் கருத்தில் கொண்டு பல்லின சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் வண்ணம் பலமிக்க அரசியல் சக்தி ஒன்றினை கட்டமைக்கும் முயற்சியில் ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு இன்று உதயமானது. இதன் முதற்கட்டமாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு கைச்சாத்திட்டனர் இந்த ஒற்றுமைக்கான பயணத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கை அடிப்டையாகக் கொண்டு இயங்கும் அரசியல் சக்திகள் அனைவரையும் ஒன்றிணைத்து போட்டியிட உள்ளதோடு எதிர்காலத்தில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளையும் சிவில் சமூக ஆர்வலர்களையும் ஒன்றிணைத்து அதனுடாக எதிர்காலத்தில் கிழக்குத் தமிழர்களின் அரசியல், சமூக பாதுகாப்பு அரணாக பலம்பொருந்திய கட்டமைப்பாக இது செயல்படவுள்ளது என தெரிவித்தனர். https://athavannews.com/2025/1425285
  11. குரங்குகளை கணக்கு எடுப்பதற்கு அரசாங்கத்தால் வழங்கப் பட்டுள்ள படிவம்.
  12. 👉 https://www.facebook.com/reel/1222394072637639👈 குரங்குகளின் கணக்கெடுப்புக்கு உதவுங்கள். தண்டரோ அடித்து அறிவித்தல்.
  13. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்ன கூட்டமைப்பில் இணைந்தனர் சிறீகாந்தா , சிவாஜிலிங்கம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் கடந்த வாரம் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தலைமையிலான சனநாயக தமிழரசுக் கட்சி இணைந்திருந்த நிலையில் அக்கூட்டமைப்பினை பலப்படுத்தும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான ந. சிறீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசிய கட்சியும் இணைந்துள்ளது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற தமிழ்த் தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் நேற்றைய தினம் இக்கூட்டமைப்பில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டதாகவும் சட்டத்தரணி ந. சிறீகாந்தா புதிய சுதந்திரன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சில ஒற்றர்களின் ஊடுருவல் காரணமாக பல கட்சிகளாக உடைந்து சின்னாபின்னமாகிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை மீள் உருவாக்கும் காலம் இவ்வாறான தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒற்றுமையின் காரணமாக கனிந்துள்ளதாகவும் தற்போது உருவாகியுள்ள இக்கூட்டமைப்பு நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் அதிகளவான ஆசனங்களை கைப்பற்றும் வாய்ப்பு காணப்படுவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கணிப்பு கூறுகின்றனர். Kunalan Karunagaran
  14. 3000 டொலர்களை விஞ்சிய தங்கத்தின் விலை! சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது வரலாற்றில் முதன் முறையாக வெள்ளிக்கிழமை (14) அவுன்ஸ் ஒன்றுக்கு மூவாயிரம் அமெரிக்க டொலர்களை தாண்டியது. அமெரிக்க ஜனாதிபதியின் திடீர் கட்டணக் கொள்கை, பொருளாதார மந்தநிலை மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்த அச்சங்கள் தொடர்பில் முதலீட்டாளர்கள் கணக்கிட்டு வருவதால் தங்கத்தின் விலையானது உச்சத்துக்கு சென்றுள்ளது. வெள்ளிக்கிழ‍ைமை சந்தை அமர்வின் தொடக்கத்தில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,004.86 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியது. பின்னர் மதியம் 02:01 ET (1801 GMT) நிலவரப்படி 0.1% குறைந்து 2,986.26 அமெரிக்க டொலர்களாக பதிவானது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.3% உயர்ந்து 3,001.10 டொல்களில் முடிவடைந்தது. வர்த்தகப் போர்களின் போது முதலீட்டாளர்கள் தங்கத்தை பெரும்பாலும் பாதுகாப்பான புகலிடமாக நாடுகிறார்கள். மேலும், இந்த ஆண்டு அதன் விலை சுமார் 14 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜனவரியில் பதவியேற்ற ஜனாதிபதி ட்ரம்பின் வரிகளின் தாக்கம் மற்றும் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட விற்பனையின் தாக்கம் குறித்த அச்சம் இதற்கு ஒரு காரணமாகும். தங்கத்தின் விலை மத்திய வங்கியின் தேவையால் ஆதரிக்கப்பட்டுள்ளது, முக்கிய வாங்குபவரான சீனா பெப்ரவரியில் தொடர்ந்து நான்காவது மாதமாக அதன் தங்க இருப்புக்களை அதிகரித்துள்ளது. அமெரிக்க கொள்கை நிச்சயமற்ற தன்மை முதலீட்டாளர்களின் தேவையை ஆதரிக்கக்கூடும் என்பதால், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அதன் விலை $3,100-$3,300 செல்லும் என்றும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இதேவ‍ேளை, வெள்ளிக்கிழமை வெள்ளி ஒரு அவுன்ஸ் $33.80 ஆகவும், பிளாட்டினம் 0.1% உயர்ந்து $995.20 ஆகவும், பல்லேடியம் 0.6% உயர்ந்து $963.76 ஆகவும் இருந்தது. இதேவ‍ேளை, இலங்கையில் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்றைய தினம் 235,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலையானது பவுண் ஒன்றுக்கு 217,300 ரூபாவாகவும் காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1425269
  15. திருமணத்திற்கு பின் ஆபாசாமான உரையாடலில் ஈடுபட கூடாது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு திருமணத்திற்குப் பிறகு கணவனோ மனைவியோ தங்களது ‘எதிர்பாலின’ நண்பர்களுடன் ‘ஆபாசமான’ முறையில் உரையாட கூடாது என்றும், எந்தக் கணவரும் தனது மனைவியிடமிருந்து இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டார் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விவாகரத்து வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனைவி மேன்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனைவி தனது ஆண் நண்பர்களுடன் அவளது பாலியல் வாழ்க்கை குறித்து ஆபாசமான முறையில் வாட்சப்பில் சாட் செய்ததை நீதிமன்றத்தில் கவனத்தில் கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தது. அதாவது, “திருமணத்திற்குப் பிறகு கணவரோ, மனைவியோ தங்களது நண்பர்களுடன் கண்ணியமற்ற முறையில் ஆபாசமான உரையாடலில் ஈடுபட கூடாது. தனது மனைவி மொபைல் மூலம் இத்தகைய மோசமாக பேசுவதை எந்த கணவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார். திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் நண்பர்களுடன் மொபைல் மற்றும் பிற வழிகளில் உரையாடலாம். ஆனால் அந்த உரையாடல் கண்ணியமானதாக இருக்க வேண்டும். கணவரின் எதிர்ப்பு தெரிவித்தும் மனைவி தனது ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து மோசமாக உரையாடுவது நிச்சயமாக கணவருக்கு மனரீதியிலான கொடுமையை ஏற்படுத்தும்” என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இறுதியில், கணவருக்கு விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்டு மனைவியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. https://athavannews.com/2025/1425265
  16. இசைப்பிரியாவுக்கும் , கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களுக்கும் நீதி கிடைக்காதா? – சாணக்கியன் சாடல். அனுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியருக்கு நிகழ்ந்த வன் கொடுமைக்கு நீதி வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இந்த நாட்டிலே இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இசைப்பிரியாவுக்கு நீதி வழங்க ஏன் அரசாங்கம் முன்வரவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (15) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டிலே ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். அதற்கு ஏன் இந்த அரசாங்கமும் நாட்டு மக்களும் நடவடிக்கை எடுப்பதற்கு கொந்தளிக்கவில்லை. இனவாதம் இல்லை என்று சொல்லும் இந்த அரசாங்கம் தான் மோசமான இனவாதிகள். கடந்த கால அரசாங்கங்கள் தங்களை இனவாதிகளாக அடையாளப்படுத்திக் கொண்டு தமது செயல்பாடுகளை முன்னெடுத்தார்கள். ஆனால், இந்த அரசாங்கம் இனவாதம் இல்லை என கூறுகிறார்கள். ஆனால் முழுக்க முழுக்க இனவாதத்தில்தான் ஈடுபடுகிறார்கள். இசைப்பிரியா ஒரு பெண் இல்லையா? இசைப்பிரியாவுக்கு இந்த நாட்டிலே நீதி தேவையில்லையா எனவும் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். https://athavannews.com/2025/1425262
  17. இன்று.. குரங்கு, யானை, மர அணில் போன்றவைகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.