Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நாட்டை பொறுப்பேற்க, எந்நேரமும் நான் தயார். - நாமல் ராஜபக்ச -
  2. கணேமுல்ல சஞ்சீவ விவகாரம்; பிரதான பெண் சந்தேக நபரின் தாய், சகோதரர் கைது! கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ” என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக நபரான சஞ்சீவ குமார சமரரத்னவின் படுகொலை சம்பவத்துடன் தெடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவு (CCD) அதிகாரிகளினால் சந்தேக நபர்கள் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள், குற்றத்திற்கு உதவியதாகவும், தகவல்களை மறைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட பிரதான பெண் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் இளைய சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம பகுதியில் வசிக்கும் 23 வயதான பிங்புர தேவகே சமிது திவங்க வீரசிங்க மற்றும் 48 வயதான சேசத்புர தேவகே சாமந்தி ஆகியேரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் கூற்றுப்படி, சந்தேகநபர்கள் இருவரும் குற்றம் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்தனர், ஆனால் அது தொடர்பில் முறைப்பாடு அளிக்க தவறியதுடன், குற்றவாளிகளுக்கு உதவியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவியதாகக் கூறப்படும் பெண் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பிங்புர தேவகே இஷார செவ்வந்தி என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், 243/01, நீர்கொழும்பு வீதி, ஜயா மாவத்தை, கட்டுவெல்லேகமவில் வசிக்கும் 25 வயதுடையவர். 995892480V என்ற தேசிய அடையாள அட்டையை (NIC) கொண்டவர். இந்த கைதுகளின் மூலம் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கைதான நபர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1422871
  3. ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க உத்தரவு! பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு, மேல் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டது. இஸ்லாம் மதத்திற்கு எதிரான அவதூறான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் 9 மாத சிறைத்தண்டனை உத்தரவினை அவர் எதிர்கொண்டுள்ளார். இந்த தண்டனைக்கு எதிராக ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலித்து, வழக்கு தொடர்பான மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை, இறுதித் தீர்ப்பு அறிவிக்கும் வரை குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரி 09 அன்று, கொழும்பு, நீதிவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக ஒன்பது மாத சிறைத்தண்டனை உத்தரவை பிறப்பித்தது. தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசேன, பிரதிவாதிக்கு 1500 ரூபா அபராதமும் விதித்து உத்தரவிட்டார். கலகொட அத்தே ஞானசார தேரர் 2016 ஜூலை 16 ஆம் திகதி கொழும்பு, கிருலப்பனை பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, “இஸ்லாம் ஒரு புற்றுநோய்.. அதனை ஒழிக்க வேண்டும்” என குறிப்பிட்டு இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டமைக்காக அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1422908
  4. 7 கோள்களும் ஒரே அணிவகுப்பில்; இலங்கையர்களுக்கு அரிதான சந்தர்ப்பம்! இன்றைய நாட்களில் சூரிய குடும்பத்தின் 7 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இன்று (25) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சூரிய அஸ்தமனத்தின் பின்னர் இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வை இலங்கையர்கள் பார்க்க முடியும் என கொழும்பு, பல்கலைக்கழகத்தின் விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். பூமியைத் தவிர சூரியக் குடும்பத்தின் அனைத்துக் கோள்களும் இந்தக் காலகட்டத்தில் பொதுவான பாதையில் செல்வதைக் காணலாம் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்த சாட்சியின் போது, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய ககோள்களை வெற்றுக்கண்களால் அவதானிக்கக் கூடியவாறு பிரகாசமாக தென்படும். எனினும், நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்களை தொலைநோக்கியினுடாக பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 2025 ஆகஸ்ட் மாதம், சூரியன் உதிக்கும் முன் நான்கு கிரகங்கள் ஒரே நேரத்தில் தெரியும் போது மற்றொரு கோள்கள் அணிவகுப்பு உருவாகும் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். https://athavannews.com/2025/1422916
  5. 7 கோள்களும் ஒரே அணிவகுப்பில்; இலங்கையர்களுக்கு அரிதான சந்தர்ப்பம்! இன்றைய நாட்களில் சூரிய குடும்பத்தின் 7 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இன்று (25) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சூரிய அஸ்தமனத்தின் பின்னர் இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வை இலங்கையர்கள் பார்க்க முடியும் என கொழும்பு, பல்கலைக்கழகத்தின் விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். பூமியைத் தவிர சூரியக் குடும்பத்தின் அனைத்துக் கோள்களும் இந்தக் காலகட்டத்தில் பொதுவான பாதையில் செல்வதைக் காணலாம் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இந்த சாட்சியின் போது, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய ககோள்களை வெற்றுக்கண்களால் அவதானிக்கக் கூடியவாறு பிரகாசமாக தென்படும். எனினும், நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்களை தொலைநோக்கியினுடாக பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 2025 ஆகஸ்ட் மாதம், சூரியன் உதிக்கும் முன் நான்கு கிரகங்கள் ஒரே நேரத்தில் தெரியும் போது மற்றொரு கோள்கள் அணிவகுப்பு உருவாகும் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். https://athavannews.com/2025/1422916
  6. கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த நான்கு கைதிகள் மாயம்! பொலன்னறுவை, கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த நான்கு கைதிகள் இன்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர் தப்பிச் சென்றவர்கள் 29 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் காலி பொத்தல, அக்மீன மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் வெலிகந்த பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர் . இதேவேளை உணவுப் பற்றாக்குறை மற்றும் போதிய வசதிகள் இல்லாததால் படையினருடன் மோதலில் ஈடுபட்ட பின்னர் கண்டகாடு மறுவாழ்வு மையத்திலிருந்து கைதிகள் தப்பிச் சென்றதாக இதற்கு முன்னர் பல தகவல்கள் வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1422929
  7. சிவஞானத்துக்கு... தோல்விப் பயம் வந்திட்டுது. அதுதான்... ரெலோவுக்கு அழைப்பு விடுக்கிறார். சுமந்திரனை... மடியில் கட்டி வைத்துக் கொண்டு இருந்தால், தமிழரசு கட்சி குப்புற விழுந்து, மண் கவ்வுவது உறுதி. 😂
  8. பயன்படுத்தப்படாத ஸ்ரீலங்கன் விமானங்களால் பாரிய இழப்பு! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று விமானங்கள் பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த போதிலும், மாதாந்தம் 9 இலட்சம் டொலர்களை தவணை முறையில் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும இன்று (25) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான மொத்த விமானங்களின் எண்ணிக்கை 22 ஆகும். பிரதான விமான சேவையில் தற்போது 3,194 ஊழியர்களும், மூலோபாய வணிக பிரிவுகளில் 2,862 ஊழியர்களும் பணிபுரிகின்றனர். விமான சேவையை வலுப்படுத்தும் நோக்கில் 2025 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாது. அதன்படி, இந்த 5 ஆண்டுகளில் விமான நிறுவனத்தின் செயல்பாட்டு இலாபம் மற்றும் அரசாங்க ஒத்துழைப்பு ஆகியவை எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1422942
  9. ஒரு மில்லியன் ரூபாய் சன்மானம்-பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விசேட அறிவிப்பு! கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பில் தலைமறைவாகியுள்ள இஷார செவ்வந்தி என்ற பெண் சந்தேக நபரைப் பற்றி தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இன்று பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் சஞ்சீவ குமார சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்த பிரதான சந்தேகநபர் இன்னும் நாட்டிற்குள் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறுகையில், நாட்டை விட்டு வெளியேறக்கூடியதாகக் கருதப்படும் அனைத்து இடங்களுக்கும் தற்போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 19ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில், கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பிரதான சந்தேகநபருக்கு ஆயுதத்தை வழங்கியவர் கட்டுவெல்லேகம, நீர்கொழும்பு முகவரியில் வசிக்கும் 25 வயதான இஷாரா செவ்வந்தி என்ற இளம் பெண்ணாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1422939
  10. உக்ரேன் மீது ரஷ்யா பாரிய ஏவுகணைத் தாக்குதல்! ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையில் யுத்த நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்தைகளை அமெரிக்கா முன்னெடுத்து வருகின்ற நிலையில் நேற்று ஒரே நாளில் 267 ஏவுகணை தாக்குதலை ரஷ்ய இராணுவம் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனில் 13ற்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய இராணுவம் இந்த பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க முன்னெடுத்துவரும் நிலையில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நேற்றுடன் மூன்று ஆண்டுகள் கடந்துள்ளன. ஐரோப்பிய யூனியனின் நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரேன் இணைவதற்கு ரஸ்யா எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022ஆம் ஆண்டு யுத்தத்தை ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் ரஷ்யா இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தாக்குதலை நேற்று உக்ரைன் மீது நடத்தியுள்ளது. எனினும் ரஷ்யா ஏவிய 267 ட்ரோன்களில் 138 இடைமறிக்கப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டதாக உக்ரேன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இக்னாட் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த தாக்குதலின் போது மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் உடன் ஏவி, உக்ரேனின் ஐந்து நகரங்களில் ரஷ்யா பாரிய சேதத்தை விளைவித்ததுள்ளதாக உக்ரேன் விமானப்படை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். உக்ரேன் வெளியுறவு அமைச்சு இந்த தாக்குதல் சம்பவத்தின் காணொளிகளை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது. உக்ரேன் மீதான யுத்தத்தை நிறுத்துவதற்கு சவுதி அரேபியாவில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் அண்மையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. உக்ரேனை நேட்டோ நாடுகளுடன் சேர்த்தால் தனது ஜனாதிபதி பதவியை விட்டுக்கொடுப்பதாக உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1422897
  11. உக்ரேனுக்கு ஆதரவான ஐ.நா. தீர்மானம்; ரஷ்யாவின் பக்கம் நின்ற அமெரிக்கா! உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் தொடர்பான வாக்கெடுப்பில் அமெரிக்கா ரஷ்யாவின் பக்கம் நின்றது. இது போரில் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டை மாற்றியதை எடுத்துக் காட்டுவதாக அமைந்ததுடன், அமெரிக்கா தனது ஐரோப்பிய நட்பு நாடுகளுடனா கொள்கைக்கு முரணாக செயற்பட்டது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் திங்கட்கிழமை (24) ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள், போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தன. உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் தொடர்பான வாக்கெடுப்பில் அமெரிக்கா ரஷ்யாவின் பக்கம் நின்றது. இது போரில் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டை மாற்றியதை எடுத்துக் காட்டுவதாக அமைந்ததுடன், அமெரிக்கா தனது ஐரோப்பிய நட்பு நாடுகளுடனா கொள்கைக்கு முரணாக செயற்பட்டது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் திங்கட்கிழமை (24) ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள், போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தன. ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கும் இந்தியாவும், ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவும், ஐ.நாவின் உக்ரேன் போர் தீர்மானங்களுக்கு வாக்களிப்பதில் இருந்து விலகின. அதேநேரம், ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவில் உக்ரேனுக்கு கிடைத்த வெற்றியில், ஐ.நா பொதுச் சபை திங்களன்று போரை நிறுத்த வலியுறுத்தும் அமெரிக்க ஆதரவு தீர்மானத்தை அங்கீகரிக்க மறுத்தது. மொஸ்கோவின் ஆக்கிரமிப்பைக் குறிப்பிடத் தவறியதால், சபை உறுப்பினர்கள் வொஷிங்டனின் தீர்மானத்தை ஏற்க மறுத்துவிட்டனர். அதற்கு பதிலாக, அவர்கள் ஐரோப்பிய ஆதரவுடன் கூடிய தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தனர். இது ரஷ்யா உடனடியாக உக்ரேனிய பிரதேசங்களில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறது. இதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் எதிர்த்தது. வொஷிங்டன் அதன் முன்மொழிவுக்கு ஆதரவாக தங்கள் தீர்மானத்தை திரும்பப் பெறுமாறு உக்ரேன் மீது அழுத்தம் கொடுக்க முயன்றது. மூன்று ஐரோப்பிய முன்மொழியப்பட்ட திருத்தங்களுடன் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன், உக்ரேன் மறுத்துவிட்டது. 193 உறுப்பினர்களைக் கொண்ட உலக அமைப்பில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பின்னடைவாக 93 வாக்குகளால் திருத்தப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உக்ரேன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு தனித் தீர்மானமும் ஆதரவாக 93 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து வாக்களிக்கவில்லை. தீர்மானங்கள் சர்வதேச அளவில் உக்ரேனுக்கான ஆதரவு குறைந்து வருவதைக் குறிக்கிறது. முன்னதாக ஐ.நா. பொதுச் சபை உக்ரேனிய தீர்மானங்களை அதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது, சில சமயங்களில் 140 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ரஷ்யாவைக் கண்டிக்கும் போது அவற்றை ஏற்றுக்கொண்டனர். இந்த தீர்மானங்கள் சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை, ஆனால் உலகக் தலைவர்களின் தீர்மானமாக அடையாளமாக பார்க்கப்படுகின்றன. ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. Athavan Newsஉக்ரேனுக்கு ஆதரவான ஐ.நா. தீர்மானம்; ரஷ்யாவின் பக்கம் நின்...உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் தொடர்பான வாக்கெடுப்பில் அமெரிக்கா ரஷ்யாவின் பக்கம் நின்றது. இது போரில் டொனால்ட் ட்...
  12. நமது மக்களுக்கு ஞாபக மறதி அதிகம் என்ற படியால், உடனே மறவன்புலவின் படத்தை தேடி எடுத்து இணைத்து விட்டேன். 😁
  13. மறவன்புலவு சச்சிதானந்தம் தனது வேட்டியை கழட்டி, பிக்குவின் கதிரைக்கு போர்த்திவிட்டு, ஜட்டியுடன் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம். 😂 🤣
  14. பதவியைத் துறக்கத் தயார்! – ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவிப்பு. உக்ரேனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவியைக் கொடுத்தால், தனது ஜனாதிபதிப் பதவியைத் துறக்கத் தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரேன்-ரஷ்யா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் இப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். மேலும் ‘உக்ரரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சர்வதிகாரிபோல் செயற்படுகிறார் எனவும், இவர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக விட மாட்டார் எனவும் ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த போதே வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது உக்ரேனில் அமைதி நிலவ வேண்டும் என்றால் தனது பதவியை விட்டுக்கொடுக்கத் தயார் எனவும், உக்ரேனுக்கு நோட்டோ உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் எனவும், ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பிற்கு எதிராக உக்ரேனுக்கு ட்ரம்ப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மிகவும் தேவை. உக்ரேன் மற்றும் ரஷ்யா இடையே டிரம்ப் மத்தியஸ்தராக இருக்க வேண்டும் எனவும் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். நோட்டோ நாடுகளுக்கு நேட்டோ படைகள் பாதுகாப்பு தரும். குறிப்பாக நேட்டோ உறுப்பு நாட்டை யாராவது தாக்கினால், பதிலாக அனைத்து நேட்டோ நாடுகளும் ஆதரவாக வரும். இது தனக்கான பாதுகாப்பைத் தரும் என உக்ரேன் கருதுகிறது. நோட்டோவில் உக்ரேன் உறுப்பினராக இணைய ரஷ்யா மறுப்பு தெரிவித்ததே போருக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1422747
  15. இரண்டு நாட்களுக்கு முன்புதான்... வெளிநாட்டில் வந்த ஒருவர் வைத்த மது விருந்தில்... போதை தலைக்கு ஏறி, வீதியால் சென்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவரை அடித்துக் கொன்றார்கள். இப்போ...பெற்ற தகப்பனையே அடித்துக் கொன்று இருக்கின்றார்கள். புலம் பெயர் தேசத்திலிருந்து... ஊரில் உள்ளவர்களை கொலை செய்ய போகின்றார்கள் போலுள்ளது.
  16. ஸ்ரீலங்காவில் விலைவாசி உயர்ந்திருக்கின்ற நிலையில்... 10 லட்சம் ரூபாய் ரொம்ப கம்மியாய் இருக்கே... 😂
  17. பின்புற செவ்வந்தி என்றவுடன்... பிழம்பார் மதி மயங்கி விட்டார். 😂 🤣
  18. நாங்கள்... வைத்தியர் அர்ச்சுனாவுக்கு, வக்கீல் கோட்டு போட்டு... களம் இறங்குவோம். 😂
  19. பின்புர செவ்வந்தியை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு... எவ்வளவு சன்மானம் கொடுக்கின்றார்கள். அதன் தொகையையும் சொன்னால் தானே... மக்கள் உற்சாகமாக தேடுவார்கள்.
  20. தவறான தகவல் தந்து, கள உறுப்பினர்களை அலைய விட்டமைக்காக ஈழப்பிரியன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 😂 🤣
  21. ஜேர்மனியில் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் கென்சவேர்ட்டிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதி தீவிர வலதுசாரி கட்சி கென்சவேர்ட்டிவ் (AfD) கட்சிக்கு அடுத்ததாக அதிகளவு வாக்குகள் கிடைத்துள்ளது. 152 ஆசனங்களுடன் 20.8% பெற்று உள்ளது. "She is my wife She is my life" ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும்... ஒரு பெண்ணின் உந்து சக்தி உள்ளது. உண்மை உரைகல்
  22. காணாமல் ஆக்கப்பட் டோரின் 3000 ஆவது நாள் நிறைவடையும் தினத்தில் பிரிந்த தாயின் உயிர்! வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி தொடர்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 3000 ஆவது போராட்ட நாளான இன்று தமிழர் தாயக காணமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தாயொருவர் இன்று உயிரிழந்துள்ளார். வவுனியா தோனிக்கல் பகுதியைச் சேர்ந்த 79 வயதான குறித்த பெண் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் மகன் கடந்த 2009 ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட உறவுகளின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் பலவற்றில் தொடர்ந்து முன்னின்று போராடியிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1422848
  23. இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை இரத்து செய்த ஹமாஸ்! இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் காணப்படும் நிலையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை ஹமாஸ் இரத்து செய்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் காணப்படும் நிலையில் ஒப்பந்தத்தின் பிரகாரம் ஹமாஸ் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றது. இதற்கு பதிலீடாக இஸ்ரேல் தமது நாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்து வருகின்றது இந்த நிலையில் பணயக்கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடலை ஹமாஸ் ஒப்படைத்திருந்தது. கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் நால்வரின் உடல்கள் காசாவின் முக்கிய நகரில் வைத்து செஞ்சிலுவை சங்கம் ஊடாக இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் இதன்போது இஸ்ரேலியர்களைன அவமதிக்கும் வகையில் காசாவில் அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது இந்த நடவடிக்கையானது போர் நிறுத்தத்தினை மீறும் செயலாகும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது அத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை ஹமாஸ் மீறியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளதுடன் பணயக்கைதிகளை விடுதலை செய்யும் தீர்மானத்தினையும் நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யாத நிலையில் இஸ்ரேல் போர்நிறுத்தத்தினை மீறியுள்ளதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது. இஸ்ரேலுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை எனவும் அறிவித்துள்ளது இதேவேளை போர் நிறுத்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு படையினரை தயார் நிலையில் இருக்குமாறும் இஸ்ரேல் பிரதமர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Athavan Newsஇஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை இரத்து செய்த...இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில் காணப்படும் நிலையில் இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையினை ஹமாஸ் இரத்து செய்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர்நிறுத்தம் அமுலில...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.