Everything posted by தமிழ் சிறி
-
உடல் நலப் பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி
போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடம்; வத்திக்கான் தகவல்! நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள புனித போப் பிரான்சிஸ், இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், அவரது சிறுநீரக செயல்பாட்டில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வத்திக்கான் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்துள்ளது. நீண்டகால ஆஸ்துமா போன்ற சுவாச நெருக்கடியை எதிர்கொண்ட 88 வயதான கத்தோலிக்க பேரவையின் தலைவருக்கு சனிக்கிழமை இரண்டு யூனிட் இரத்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. பெப்ரவரி 14 அன்று போப் பிரான்சிஸ், ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை (22 அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக வத்திக்கான் முதன்முதலில் அறிவித்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் ஒரு அறிவிப்பில், பரிசுத்த தந்தையின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது, எனினும் நேற்று இரவு (சனிக்கிழமை இரவு) முதல் அவருக்கு சுவாசக் கோளாறுகள் எதுவும் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டியது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரத்தப் பரிசோதனைகள் சிறுநீரக செயல்பாட்டில் இலகுவான பாதிப்பை குறிக்கின்றன, இது தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் வத்திக்கான் கூறியது. 2013 ஆம் ஆண்டு முதல் போப்பாக இருக்கும் பிரான்சிஸ், கடந்த இரண்டு ஆண்டுகளில் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இளம் வயதிலேயே நுரையீரல் ஒவ்வாமை ஏற்பட்டு, ஒரு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டதால், அவர் நுரையீரல் தொற்றுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1422751
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
“நான் வளர்கிறேனா மம்மி” சிரிப்பை வரவழைத்த நல்ல உதாரணம். 😂 🤣
-
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு அவசர எச்சரிக்கை | உடனடி கைது
காணொளி பகிர்விற்கு நன்றி உடையார்.
-
தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டி: மலையகத்தின் வக்சனுக்கு தங்கம், துதிஹர்ஷிதனுக்கு வெள்ளி
தெற்காசியா அளவில்…. தங்கத்தையும், வெள்ளியையும் பரிசாக பெற்ற மலையக இளைஞர்களுக்கு பாராட்டுக்கள். இன்னும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்.
-
யாழ். மாவட்டச் செயலரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து
பிள்ளையின் செயலால்…. தகப்பனுக்கும் கெட்ட பெயர். நல்ல காலம்…. வாகனம் மரத்துடன் மோதி நின்றது. வீதியில் போனவர்களை… பலி எடுக்கவில்லை.
-
கூட்டுப்பேச்சுவார்த்தை குறித்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி மறுபரிசீலனை செய்யவேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்
@satan
-
'யாருக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற முடிவை பொலிஸார் எடுப்பதாகயிருந்தால் நாளை நாட்டில் எவரின் உயிருக்கும் உத்தரவாதமற்ற நிலைதான் உருவாகும்" - மக்கள் போரட்ட முன்னணியின் ரஜீவ்காந்
அந்த இருவரையும், பொலிஸார் திட்டமிட்டு கொலை செய்த மாதிரித்தான் நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன.
-
விசேட தேவையுடைய மாணவர்களின் உயர் கல்வியில் சிறப்பு கவனம்!
விசேட தேவையுடைய மாணவர்களின் உயர் கல்வியில் சிறப்பு கவனம்! கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய மாணவர்களின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மாற்றுத்திறனாளி சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதற்காக மாற்றுத்திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களுடன் தொடர்புடைய குழுவினருடனான சந்திப்பொன்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய மற்றும் சர்வதேச விதிமுறைகளை கவனத்திற்கொண்டு விசேசட தேவைகள் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முன்மொழிவை அவர்கள் முன்வைத்தனர். விசேட தேவையுடையவர்களின் உரிமைகளை வலுப்படுத்துதல், விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்துதல் மற்றும் அவர்களுக்கான உயர்கல்வி நிலைகளை அறிமுகம் செய்தல் போன்ற பல விடயங்கள் குறித்து இந்த முன்மொழிவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மதியிருக்கம் (ஒட்டிசம்) நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வியை உயர்த்தவும், அநாதை பிள்ளைகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தவும் தற்போதைய அரசு 2025 வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை அவர்கள் பாராட்டினர். இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், விசேட தேவையுடையவர்கள் பொதுச் சமூகத்தில் இயல்பான வாழ்க்கையை முன்னெடுக்க தேவையான சமூக அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். Clean sri lanka திட்டத்தினூடாகவும் நாம் அதனை செய்ய எதிர்பார்க்கின்றோம். எமது நாட்டில் பல கொள்கைகள் இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதுதான் பிரச்சனை. நாம் பார்ப்பது போல், கொள்கைகளை செயற்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது இங்கு மிகவும் முக்கிய விடயம். அதுதான் 2025 வரவுசெலவுத்திட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு குறிப்பாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ், விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர் கல்வியை ஒரு தலைப்பாக மாற்றுவதற்கு எதிர்பார்க்கிறோம். அதற்கு தேவையானவர்களை நியமித்துள்ளோம். கல்வியில் ஒரு பாரிய மாற்றத்திற்கு நாம் இப்போது தயாராகி வருகிறோம். 2025-ம் ஆண்டு இது தொடர்பான கொள்கைகள் தயாரிக்கப்பட்டு, 2026-ல் இதை நடைமுறைப்படுத்தத் தொடங்குவோம். இது முழு முறைமையையும் மாற்றும் நீண்ட காலத் திட்டம். நிச்சயமாக, விசேட தேவைகளைக் கொண்ட பிள்ளைகளின் கல்வி முறைக்கு விசேட கவனம் செலுத்தப்படும். அனைத்து பாடசாலைகளிலும் விசேட தேவையுடைய பிள்ளைகள் வழமை போன்று கல்வியில் ஈடுபடுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம். ஆனால் இது ஒரு பெரிய செயல்முறை. ஒரேயடியாக அதைச் செய்ய முடியாது, படிப்படியாக அந்த இலக்குகளை அடைவோம் என்று நம்புகிறோம். முதற்கட்ட நடவடிக்கையாக, ஒரு கல்வி நிர்வாக வலயத்தில் குறைந்தபட்சம் ஒரு பாடசாலையிலாவது இந்த பிள்ளைகளை கல்வி கற்க தகுதியுடையவர்களாக மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று பிரதமர் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டி.டி.டி.எல்.தனபால உள்ளிட்ட அங்கவீனமுற்ற சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1422689
-
முன்னணியின் அழைப்பை நிராகரித்த தமிழரசுக் கட்சி- நிலாந்தன்!
முன்னணியின் அழைப்பை நிராகரித்த தமிழரசுக் கட்சி- நிலாந்தன்! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்புக்கு தமிழரசுக் கட்சி பதில் கூறியிருக்கிறது. அதன்படி ஒரு புதிய யாப்பை நோக்கித் தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கான அழைப்பை தமிழரசுக் கட்சி நிராகரித்து விட்டது என்று கூடச் சொல்லலாம். “உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம்” என்ற பதில் எதைக் குறிக்கிறது? இது அதற்குரிய நேரம் இல்லை என்றுதானே பொருள்? கட்சித் தலைமையின் நிலைப்பாடு இதுவென்றால் கட்சிக்குள் சிறீதரனின் நிலைப்பாடு என்ன? கஜேந்திரக்குமாரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அவரோடு தொடர்ச்சியாக சந்திப்புகளை மேற்கொண்டவர் அவர். கட்சித் தலைமையின் நிலைப்பாட்டை மீறி அவர் தனிப்பட்ட முறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு ஒத்துழைக்கப் போகிறாரா இல்லையா? இதே போல ஒரு நிலை கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது அவருக்கு ஏற்பட்டது.ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் ஒரு பகுதி பொது வேட்பாளரை ஆதரித்தது. ஒரு பகுதி பொது வேட்பாளரை மூர்க்கமாக எதிர்த்தது.எதிர்த்த தரப்புக்கு சுமந்திரன் தலைமை தாங்கினார். ஆதரித்த தரப்புக்கு சிறீதரன் தலைமை தாங்கினார்.அதாவது தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டிக்குள்ளும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியது. சிறீதரன் சுமந்திரனின் எதிர்ப்பை மீறி தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக நின்றார்.அவருடைய அந்த நிலைப்பாடு குறித்து இரண்டு விதமான வியாக்கியானங்கள் இருந்தன.ஒன்று அவர் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை கோட்பாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்கிறார்.எனவே அதற்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து கட்சியின் மத்திய குழு அதை எதிர்த்த போதிலும் வெளிப்படையாக அதற்கு ஆதரவாக இயங்கினார். கிளிநொச்சியில் நடந்த பொது வேட்பாளருக்கு ஆதரவான கூட்டங்களில் அவர் பகிரங்கமாகக் காணப்பட்டார். குறிப்பாக அங்கு ஒழுங்கு செய்யப்பட்ட மிகப்பெரிய பிரச்சாரக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜாவும் காணப்பட்டார்.இது ஒரு வியாக்கியானம். இன்னும் ஒரு வியாக்கியானம் உண்டு. அது என்னவென்றால், கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைப் போட்டிக்குள் அவர் தன்னைப் பலப்படுத்திக் கொள்வதற்காக பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நின்றார் என்பது.அதாவது கட்சிக்குள் தனது பேரம்பேசும் சக்தியை பலப்படுத்துவதற்காக அவர் அவ்வாறு ஒரு முடிவை எடுத்தார் என்பது.அதாவது அவர் பொது வேட்பாளருக்கு ஆதரவாக நிலைப்பாட்டை எடுத்தார் என்பதை விடவும் தனது உட்கட்சிப் போட்டியாளராகிய சுமந்திரனுக்கு எதிரான ஒரு அணியை பலப்படுத்த விரும்பினார் என்பதே சரி என்ற வியாக்கியானம். எதுவாயினும் பொது வேட்பாளரை ஆதரித்ததன் மூலம் சிறிதரன் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு நெருக்கமாக நின்றார். கட்சிக்குள் இருந்த பலமான ஒரு அணியின் எதிர்ப்பை மீறி அவர் துணிச்சலாக முடிவெடுத்தார்.பொது வேட்பாளரை எதிர்த்ததன் மூலம் சுமந்திரன் தேசத் திரட்சிக்கு எதிராக நின்றார். இப்பொழுதும் சுமந்திரன் தேசத் திரட்சிக்கு எதிராகத்தான் இருக்கிறார்.தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது தமிழ் மக்களை ஆகப்பெரிய திரளாகத் திரட்டுவது. கடந்த 15 ஆண்டுகளாக அவ்வாறு தமிழ் மக்களை ஒரு திரட்சியாகக் கூட்டிக் கட்டுவதற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டைத்தான் சுமந்திரன் எடுத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்ததில் அவருக்குப் பெரிய பங்கு உண்டு. அதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த ஆகப்பெரிய கூட்டை உடைத்தார். ஆயுதப் போராட்டத்தின் ஒரு கட்ட வளர்ச்சிக்குப் பின் அதில் ஏற்பட்ட பண்புரு மாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட அதிகம் சாம்பல்தன்மை மிக்க ஒரு கூட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகும். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு காலம் தன்னால் அரங்கில் இருந்து அகற்றப்பட்ட கட்சிகளையும் அமைப்புகளையும் ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லாதொழித்ததில் சுமந்திரனுக்குப் பெரிய பங்கு உண்டு. அதன் விளைவாக தமிழரசுக் கட்சி மட்டும் மிஞ்சியது. இப்பொழுது தமிழரசுக் கட்சியும் இரண்டாகிவிட்டது. அதற்கும் சுமந்திரன் பொறுப்பு. தனது சொந்தக் கட்சிக்குள் ஒரு திரட்சியை ஏற்படுத்த முடியாத ஒரு தலைவர் எப்படித் தேசத் திரட்சியை ஏற்படுத்தலாம்? எனவே சுமந்திரன் செய்வது தமிழ்த் தேசிய அரசியல் அல்ல. பொது வேட்பாளரில் அவர் எடுத்த நிலைப்பாடும் அதுதான். நாடாளுமன்றத் தேர்தலில் அவர் எடுத்த நிலைப்பாடும் அதுதான். கடந்த வாரம் கஜேந்திரக் குமாருக்கு சிவஞானம் அனுப்பிய பதிலும் தேசத் திரட்சிக்கு ஆதரவானது அல்ல. தேசத் திரட்சியைப் பாதுகாக்க விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒரு பாடம். நாடாளுமன்றத் தேர்தல் தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் மட்டுமல்ல சுமந்திரனுக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு பாடம் கிடைத்தது.தமிழ் மக்கள் அவரை நிராகரித்தார்கள். கடந்த ஆண்டில் சுமத்திரனுக்கு இரண்டு கசப்பான பாடங்கள் கிடைத்தன.ஆண்டின் தொடக்கத்தில் அவருடைய கட்சியாட்களே அவரை நிராகரித்தார்கள்.ஆண்டின் முடிவில் தமிழ் மக்கள் அவரை நிராகரித்தார்கள்.இந்த இரண்டு தோல்விகளிலிருந்தும் அவர் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இந்தத் தோல்விகளை ஏற்றுக்கொள்ள மறுத்து அவர் கட்சியைத் தொடர்ந்தும் எப்படித் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறார். இப்பொழுது கட்சி படிப்படியாக அவருடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.சிறீதரனின் நிலை மேலும் கேள்விக்குள்ளாகியுள்ளது.ஆனால் சிறீதரன் தானாக கட்சியை விட்டு நீங்க மாட்டார் என்று தெரிகிறது.அப்படி என்றால் அவரை கட்சியை விட்டு நீக்குவது தான் சுமந்திரன் அணியின் அடுத்த நகர்வாக இருக்கலாம். ஏற்கனவே அரியநேத்திரனை நீக்கி விட்டார்கள்.தமிழரசியல் வரலாற்றிலேயே அதிக வாக்குகளைப் பெற்ற ஓர் அரசியல்வாதி அவர். பொது வேட்பாளராக அவருக்கு மூன்று மகத்துவங்கள் உண்டு. முதலாவது தமிழ் அரசியல் வரலாற்றில் அதிகம் வாக்குகளைப் பெற்ற ஒரு தமிழ் அரசியல்வாதி அவர். இரண்டாவது கிழக்கில் இருந்து வந்த ஒரு தமிழ் வேட்பாளருக்கு வடக்கே கிடைத்த ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள். அவை தாயக ஒருமைப்பாட்டுக்கு கிடைத்த வாக்குகள். தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்திய கருத்துருவாக்கிகளில் ஒருவர் ஓர் ஊடக முதலாளியைச் சந்தித்து உரையாடிய பொழுது அவர் கேட்டார்,கிழக்கில் இருந்து வரும் ஒரு வேட்பாளருக்கு பத்தாயிரம் வாக்குகளாவது கிடைக்குமா? என்று. தமிழ் பொது வேட்பாளருக்கு அதிகம் உதவிய அந்த ஊடக முதலாளி பின்னர் பொது வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளைக் கண்டு வியந்தார். அவை தாயக ஒருமைப்பாட்டுக்கும் தேசத் திரட்சிக்கும் கிடைத்த வாக்குகள். அந்த வாக்குகளுக்கு மற்றொரு முக்கியத்துவம் உண்டு.கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியலில், கொழும்பின் நகர்வுகளுக்குப் பதில் வினையாற்றும் ஒரு போக்கில் இருந்து மாற்றி தமிழ் மக்கள் அதனை செயல்முனைப்போடு அணுகலாம் என்ற முன்னுதாரணம் அது. அதாவது “ப்ரோ ஆக்டிவாக” அணுகலாம் என்ற முன்னுதாரணம் அது. அத்தகைய முன்னுதாரணத்தின் வேட்பாளர் ஆகிய அரிய நேத்திரனை கட்சியிலிருந்து நீக்கியமை என்பது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தேசத் திரட்சிக்கு எதிராகத் திரும்பி விட்டது என்பதைத்தான் காட்டுகிறதா?அதற்குள் சிறீதரனைப் போன்றவர்கள் தொடர்ந்தும் இருந்து என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை. கட்சிக்குள் தொடர்ந்தும் நிலைத்திருப்பதன் மூலம் சுமந்திரனை அகற்றலாம் என்று சிறிதரன் திட்டமிடுகிறாரோ தெரியவில்லை. ஆனால் சுமந்திரனுக்கு எதிரான அணிகளோடு அவர் சேர்க்கைகளை வைத்துக் கொள்வதன் மூலம் கட்சிக்குள் தன்னைப் பலப்படுத்த விளைகிறார் என்பது உண்மை.பொது வேட்பாளரின் விடயத்திலும் அவர் அதைச் செய்தார். முன்னணியின் ஒன்றிணைப்பு முயற்சிகளிலும் அவர் அதைத்தான் செய்கிறார். இப்பொழுது அந்த விடயத்திலும் கட்சித் தீர்மானத்துக்கு எதிராக அவர் செயற்பட வேண்டிய நிலைமை தோன்றியிருக்கிறது. சிதறிக்கொண்டு போகும் கட்சிக்குள் தனது ஸ்தானத்தைப் பாதுகாப்பதா? அல்லது தேசத் திரட்சியைப் பாதுகாப்பதா? https://athavannews.com/2025/1422686
-
கொஞ்சம் ரசிக்க
எப்பிடி இருந்த நான்... இப்பிடி ஆயிட்டேன். 😂 🤣
-
சிரிக்க மட்டும் வாங்க
- மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்து ஜன்னல் வழியாக வீசிய 18 வயது மாணவி!
மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்து ஜன்னல் வழியாக வீசிய 18 வயது மாணவி! மட்டக்களப்பு வைத்தியசாலையில் மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்த மாணவியொருவர் ஜன்னலிருந்து அக் குழந்தையை வீசி எறிந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (23) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி பயிலும் 18 வயதுடைய மாணவியொருவரே சம்பவத்துடன் தொடர்புற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவதினமான இன்று (23) அதிகாலை 3.30 மணியளவில் நிறைமாத கர்ப்பிணியான இவர், கர்ப்பிணி என தெரிவிக்காது வயிற்று வலி என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆரம்ப சிகிச்சைக்காக குறுந்தரிப்பு அலகு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, வயிற்றுவலி என தெரிவித்த இவரை உரிய முறையில் வைத்தியர் சோதனையிடாது, வயிற்று வலிக்காக ஊசி மூலமாக வலி நிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின், அதிகாலை 05.00 மணியளில் குறித்த மாணவி மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் குழந்தையை ஈன்றெடுத்த ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளார். குழந்தை ஜன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்ற நிலையில் மாணவி குழந்தையை ஈன்றெடுத்துள்ளார் என அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, குழந்தையை மீட்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன் மாணவிக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த குழந்தையையும் மற்றும் மாணவியையும் பாதுகாப்பாக உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsமலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்து ஜன்னல் வழியாக வீசிய...மட்டக்களப்பு வைத்தியசாலையில் மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்த மாணவியொருவர் ஜன்னலிருந்து அக் குழந்தையை வீசி எறிந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (23) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற...- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- ஒரு சிறுவருக்கு ஏறத்தாழ 30,000 ரூபா ஒதுக்கப்படுகிறதா?
ஒரு சிறுவருக்கு ஏறத்தாழ 30,000 ரூபா ஒதுக்கப்படுகிறதா? இலங்கை முழுவதிலும் 379 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இயங்குவதாகவும், இவற்றில் 47 நிலையங்கள் அரசாங்கத்திற்குரியது என்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். ஏனைய அனைத்து சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் அரசுசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் அனுசரணையுடன் பராமரிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நாடு முழுவதிலும் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் திறன்களை மேம்படுத்தவும் அவற்றின் பௌதீக வள, மனிதவள மேம்பாட்டிற்கும் இந்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கடந்த 21ஆம் திகதி கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் கூடியபோதே இந்தத் தகவல்கள் முன்வைக்கப்பட்டன. சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு உதவிகள், திணைக்களத்தின் ஊடாக பல்வேறு வழிகளிலிருந்து கிடைக்கும் நிதியுதவிகளைக் கருத்தில் கொள்ளும்போது ஒரு சிறுவருக்கு ஏறத்தாழ 30,000 ரூபா ஒதுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருந்தபோதும் இந்த நிதி அந்தச் சிறுவர்களுக்கு உரிய முறையில் சென்றடைகின்றதா என்பதைக் கணக்காய்வு செய்வதற்கு முறையான கட்டமைப்பு எதுவும் இல்லையென்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். நன்னடைத்தை அதிகாரிகளின் சுற்றிவளைப்புக்களில் சில சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இதுவரை மூடப்பட்டிருப்பதாகவும், அந்தச் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சிறுவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். சிறுவர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குறுத்துவதற்கான நடைமுறையொன்று தயாரிக்கப்படும் என கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதிலளித்தார். மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு பணமீட்டும் அமைச்சு அல்ல என்றும், மாறாக கிராமப்புற மற்றும் பொருளாதார அடிப்படையில் சமூக நலனை மேம்படுத்துவதற்கு முதன்மையாக பங்களிக்கும் அமைச்சு என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனவே, மக்களுக்கு நன்மை செய்வதே முக்கியப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும், அதற்காக ஒதுக்கப்படும் அனைத்து நிதி மற்றும் ஏனைய ஒதுக்கீடுகளை சமூக நலனுக்காக சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தேசிய அடையாள அட்டை தயாரிப்பதில் உள்ள சிக்கல் நிறைந்த சூழ்நிலையால் பௌத்த பிக்குனிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இந்தப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்கான வழிமுறையை வகுப்பது குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், சூப்பர் மார்க்கட்டுகளுக்கு அருகில் யாசகம் மற்றும் பல்வேறு வியாபார நடவடிக்கைகளில் பாடசாலை சிறுவர்களை ஈடுபடுத்துவது குறித்தும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பினர். இதனைத் தடுப்பதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டம் போதுமானதாக இருந்தாலும் அவற்றைச் செயற்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக குழுவில் ஆஜராகியிருந்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதியமைச்சர் (வைத்தியர்) நாமல் சுதர்ஷன, நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாணயக்கார, புத்தசாசன, மத மற்றும் காலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, அதனுடன் இணைந்த நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1422581- தேசிய பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை - ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – ஜனாதிபதி. நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) உறுதியளித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்திருந்த போது பாதாள உலக வன்முறைகள் அதிகரித்து வருவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது நிலவும் நெருக்கடியானது பாதாள உலகக் கும்பல்களுக்கிடையிலான மோதலே என தெளிவுபடுத்திய ஜனாதிபதி, நிலைமையைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். https://athavannews.com/2025/1422652- சட்டவிரோத மீன்பிடி; தமிழக மீனவர்கள் 32 பேர் கைது!
சட்டவிரோத மீன்பிடி; தமிழக மீனவர்கள் 32 பேர் கைது! நாட்டின் கடற் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி பணிகளில் ஈடுபட்ட குற்றத்துக்காக 32 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்று (23) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்காக இந்திய மீனவர்கள் பயன்படுத்தி 05 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான மீனவர்கள் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னாருக்கு வடக்கே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட படகுகளுடன் தலைமன்னார் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இதுவரை 131 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், 18 இந்திய மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. https://athavannews.com/2025/1422643- நியூஸிலாந்தில் ஒரே இரவில் பல தேவாலயங்களுக்கு தீ வைப்பு!
நியூஸிலாந்தில் ஒரே இரவில் பல தேவாலயங்களுக்கு தீ வைப்பு! நியூசிலாந்தில் ஒரே இரவில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் தீ வைப்புத் தாக்குதலில் குறைந்தது ஏழு தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலின் போது, தலைநகர் வெலிங்டனுக்கு வடக்கே உள்ள மாஸ்டர்டன் நகரத்தில் உள்ள நான்கு தேவாலயங்கள் மிதமான சேதத்தை சந்தித்ததாக நியூஸிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், மேலும் மூன்று தேவாலயக் கட்டிடங்கள் விசமிகளால் தாக்கப்பட்டுள்ளன. எனினும் அவை தீப்பிடிக்கவில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். வைரராபா பகுதி முழுவதும் உள்ள மீட்பு குழுவினர் சனிக்கிழமை அந்நாட்டு நேரப்படி மாலை 04:30 மணிக்கு தீயை அணைத்துள்ளனர். எபிபானியின் ஆங்கிலிகன் தேவாலயம், செயின்ட் பாட்ரிக் கத்தோலிக்க தேவாலயம் மாஸ்டர்டன், மாஸ்டர்டன் பாப்டிஸ்ட் தேவாலயம் மற்றும் எக்விப்பர்ஸ் சர்ச் மாஸ்டர்டன் ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நியூசிலாந்தில் உள்ள மத கட்டிடங்கள் சமீப வருடங்களில் தீவைப்பு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, ஆக்லாந்தில் உள்ள ஒரு தேவாலயத்தின் சொத்து ஒரே இரவில் இரண்டு தீ தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டது. நவம்பர் மாதம் இதே பகுதியில் ஒரு மசூதி தீ வைத்து எரிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில், கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதிகளில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது. Athavan Newsநியூஸிலாந்தில் ஒரே இரவில் பல தேவாலயங்களுக்கு தீ வைப்பு!நியூசிலாந்தில் ஒரே இரவில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் தீ வைப்புத் தாக்குதலில் குறைந்தது ஏழு தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலின் போது, தலைநகர் வெலிங்டனுக்கு வடக்கே உள்ள மாஸ்டர்டன் நக...- கருத்து படங்கள்
- எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி!
எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி! தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் சுகயீனம் காரணமாக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். கொழும்புக்கு பயணித்த வேளையில், சுயநினைவற்று மயங்கி விழுந்த நிலையில், அவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1422607- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கி சூடு; மேலும் மூவர் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுகளுடன் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கையானது 08 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட மூவரும் கம்பஹா மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்தமை, குற்றம் நடந்த தினத்திற்கு முந்தைய நாள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு துப்பாக்கியை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அஸ்கிரிய, கம்பஹா மல்வத்தை வீதியைச் சேர்ந்த தமிது லக்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதேநேரம், படுகொலை சம்பவத்தின் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் மற்றைய சந்தேக நபரையும் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றதற்காகவும், குற்றச் செயல்களுக்கு உதவிய குற்றத்திற்காகவும் 25 வயதுடைய தமித் அஞ்சன நயனஜித் என்ற இளைஞனும், அஸ்கிரியவல்பொல, உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1422604- ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
வாகன இறக்குமதி வரிகளை குறைப்பதில் அரசாங்கம் கவனம்! சந்தை நடத்தையின் அடிப்படையில், எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. சுமார் 5 வருடங்களாக தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த தனியார் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை 2025 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், வாகன இறக்குமதி வரி 300 வீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளமையினால் புதிய வாகனங்களின் விலைகள் மிக அதிகமாக இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறான இறக்குமதி வரிகள் காரணமாக வேகனார் என்ற சிறிய ரக காரின் விலை 70 இலட்சத்தில் இருந்து ஒரு கோடியாக உயரும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சுட்டுக்காட்டுகின்றனர். இந்த இறக்குமதி வரிகள் காரணமாக சந்தையில் புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றின் விலை டேவிட் பீரிஸ் நிறுவனத்தித்தின் தகவல்களுக்கு அமைவாக சுமார் 20 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. அதேநேரம், சந்தையில் பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளின் விலைகளும் அசாதாரணமாக அதிகரித்துள்ளன. இந்த வாகன விலைகளின்படி இன்று ஒரு சாதாரண மனிதனால் வாகனம் வாங்கி செலுத்த முடியாத நிலை காணப்படுவதாக வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நிலையில், சந்தையின் விலை நிலவரங்களை கண்காணித்து வாகன இறக்குமதி வரிகளை குறைக்க வாய்ப்புள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை, இலங்கை மத்திய வங்கியும் இதற்கான வழிகாட்டல்களை வழங்கி வருவதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1422621- துப்பாக்கிச் சூட்டில் தந்தை, மகள் உயிரிழப்பு; மகன் படுகாயம்!
மித்தெனிய துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் கைது! கடந்த 18 ஆம் திகதி மித்தெனிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதான தெலம்புயாய வெகந்தாவல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். வீரகட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலம்புய பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். இதனடிப்படையில், இக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் மித்தெனிய, கடேவத்த சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தந்தை, அவரது ஆறு வயது மகள் மற்றும் ஒன்பது வயது மகன் உட்பட மூவர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டினை அடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் மற்றும் மகள் படுகாயமடைந்த நிலையில் முறையே எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். எவ்வாறெனினும், பாதிக்கப்பட்டவரின் ஆறு வயது மகள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் மறுநாள் உயிரழந்தார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. https://athavannews.com/2025/1422627- தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு: சிக்கிக் கொண்ட 8 தொழிலாளர்கள்!
தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு: சிக்கிக் கொண்ட 8 தொழிலாளர்கள்! தெலுங்கானாவில் கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சனிக்கிழமை (22) இடிந்து விழுந்ததில் குறைந்தது எட்டு தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். தெலுங்கானாவின் ஸ்ரீசைலம் அணைக்கு பின்புறம் உள்ள சுரங்கப்பாதையின் ஒரு பகுதியில் கசிவை சரிசெய்ய சில தொழிலாளர்கள் உள்ளே சென்றபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. விபத்தினை அடுத்து சுரங்கத்தில் சிக்கி பல தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். எனினும், எட்டு தொழிலாளர்கள் இன்னும் சுரங்கத்தில் சுக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மீட்புப் படை தெரிவித்துள்ளன. சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களில் 4 பேர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இருவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் மற்றும் ஒருவர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்திய இராணுவம் தனது பொறியாளர் பணிக்குழுவையும் (ETF) விரைவாக பணியமர்த்தியுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, இராணுவ பொறியாளர் பணிக்குழுவானது விபத்து நடந்த இடத்தில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். Athavan Newsதெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு: சிக்கிக் கொண்ட 8 தொழிலாள...தெலுங்கானாவில் கட்டுமானப் பணியில் இருந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சனிக்கிழமை (22) இடிந்து விழுந்ததில் குறைந்தது எட்டு தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். தெலுங்கானாவின் ஸ்ரீசைலம் அணைக்கு பின்பு...- பிரான்ஸ் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு, 3 பொலிஸார் காயம்!
பிரான்ஸ் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு, 3 பொலிஸார் காயம்! பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள மல்ஹவுஸ் (Mulhouse) நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். 37 வயதான அல்ஜீரிய சந்தேக நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார். அத்துடன், தாக்குதல்தாரி கத்திக் குத்தினை மேற்கொள்ளும் போது, “அல்லாஹு அக்பர்” (பெரியவர்) என்று கூச்சலிட்டதாகவும் நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்துள்ளன. சந்தேக நபர் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்ததால் நாடு கடத்தும் உத்தரவுக்கு உட்பட்டார் என்று அந் நாட்டு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, “இது இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என்பதில் சந்தேகமில்லை” என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். அதேநேரம், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்த மக்ரோன், “எங்கள் மண்ணில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான பணிகளைத் தொடர வேண்டும் என்ற எனது அரசாங்கத்தின் உறுதியை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் ” – என்றார். கொங்கோ ஜனநாயகக் குடியரசை ஆதரித்து காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. Athavan Newsபிரான்ஸ் கத்திக்குத்து; ஒருவர் உயிரிழப்பு, 3 பொலிஸார் கா...பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் உள்ள மல்ஹவுஸ் (Mulhouse) நகரில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்....- உடல் நலப் பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி
போப் பிரான்சிஸின் உடல்நிலை மோசமான நிலையில்! முன்னதாக சனிக்கிழமையன்று “நீண்ட ஆஸ்துமா போன்ற சுவாச நெருக்கடியால்” பாதிக்கப்பட்ட புனித போப் பிரான்சிஸின் உடல்நிலையானது தொடர்ந்தும் “மோசமாக” இருப்பதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. பல நாட்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால், கடந்த 14 ஆம் திகதி கத்தோலிக்க பேரவையின் தலைவர் போப் பிரான்ஸிஸ் ரோமின் ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமை (22) மாலை வத்திக்கான் ஒரு அறிக்கையில், 88 வயதான பிரான்சிஸ் காலை வேளையில் “நீண்ட நேர ஆஸ்துமா போன்ற சுவாச நெருக்கடியை” எதிர்கொண்டாகவும், அதற்கு “அதிக ஓட்ட ஆக்ஸிஜனை” நிர்வகிக்க வேண்டியிருந்ததாகவும் கூறியது. மேலும், பரிசுத்த பாப்பரசரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதுடன், அவர் இன்னும் ஆபத்திலிருந்து மீளவில்லை. அதேநேரம், “புனிதத் தந்தை விழிப்புடன் இருக்கிறார், நேற்றைய தினத்தை விட அவர் அதிகமாக அவதிப்பட்டாலும், ஒரு நாற்காலியில் இன்றைய நாளைக் கழித்தார். தற்போது அவரது உடல் நிலை தொடர்பான பாதுகாப்பு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கூடுதல் ஆக்ஸிஜனைத் தவிர, அவருக்கு இரத்த மாற்றமும் மேற்கொள்ளப்பட்டதாக வத்திக்கான் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியது. 2013 ஆம் ஆண்டு முதல் போப்பாக இருக்கும் பிரான்சிஸ், கடந்த இரண்டு ஆண்டுகளில் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இளம் வயதிலேயே நுரையீரல் ஒவ்வாமை ஏற்பட்டு, ஒரு நுரையீரலின் ஒரு பகுதி அகற்றப்பட்டதால், அவர் நுரையீரல் தொற்றுக்கு ஆளாக நேரிடும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1422610 - மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்து ஜன்னல் வழியாக வீசிய 18 வயது மாணவி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.