Everything posted by தமிழ் சிறி
-
வடக்கு கிழக்கில் 92,000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்
அண்ணளவாக வடக்கு,கிழக்கில் ஒரு லட்சம் பெண்கள்... தமது குடும்ப பொறுப்பை சுமக்கின்றார்கள். இது எமது இனத்திற்கு மிக அதிகம்.
-
விமானத்தில் உயிரிழந்த பயணியின் உடலிற்கு அருகில் அமர்ந்து நான்கு மணிநேரம் பயணம் - தங்கள் மனஉளைச்சல் குறித்து அவுஸ்திரேலிய தம்பதியினர் தகவல்
விமான நிறுவனத்திடம் பணம் பறிக்கும் நோக்கமாக இருக்கலாம். அது எவ்வளவு வெற்றியளிக்கும் என தெரியவில்லை. எப்படியும்… விமான ஊழியர்கள், இவர்களை இருக்கை மாறி அமரச் சொல்லி நிச்சயம் கேட்டு இருப்பார்கள். இவர்கள் அதனை வெளியே சொல்லவில்லை என நினைக்கின்றேன். விமான ஊழியர்கள்…. இறந்த ஒருவரை, திடீரென்று பயணிகள் அருகில் கொண்டு வந்து வைப்பார்கள் என்பது நம்பக்கூடிய கதை மாதிரி தெரியவில்லை.
-
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ‘தங்க அட்டை’; விலை 5 மில்லியன் அமெரிக்க டொலர் - ட்ரம்ப் அறிவிப்பு
ஐந்து மில்லியன் டொலர் இருக்கிறவன்… அமெரிக்காவில் ஏன், குடியேறப் போறான். 🤩 ட்றம்புக்கு…. விசர் முத்தீட்டுது. 😂 🤣
-
விமானத்தில் உயிரிழந்த பயணியின் உடலிற்கு அருகில் அமர்ந்து நான்கு மணிநேரம் பயணம் - தங்கள் மனஉளைச்சல் குறித்து அவுஸ்திரேலிய தம்பதியினர் தகவல்
இறந்த பயணி பருமனானவர் என்ற படியால், அவர் விழுந்த இடத்திற்கு அருகில் உள்ள இருக்கையில் அமர வைக்கப் பட்டு இருக்கின்றார். வேறு இருக்கைகள்… காலியாக இருந்தது என்று இந்தத் தம்பதிகளே சொல்கிறார்கள். அப்படி என்றால்… இவர்கள் அந்த இடத்தில் போய் அமர்ந்து இருக்கலாமே. அதைச் செய்யாமல்…. பிணத்துக்கு அருகில் இருந்து பயணம் செய்து விட்டு, பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும் மர்மம் என்ன? தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் இடம் மாறி இருந்து, அனுசரித்து போவதுதானே முறையான செயல்.
-
யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
அரிசிக் கொள்ளையர்கள்.... லாரியில், அரிசி கடத்தும் போது எடுத்த படம். 😂
-
கொஞ்சம் ரசிக்க
விடாமுயற்சி... விஸ்வரூப வெற்றி. அதற்கு இதுவே சிறந்த உதாரணம்...! அன்றும்... இன்றும்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
காலை சாப்பாடு... ரெடி. 😂
-
சிரிக்கலாம் வாங்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
- யாழ். போதனா நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம்!
யாழ். போதனா நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளைய தினம்முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் ”நோயாளிகளது பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியமை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலையினது நிர்வாகத்தினைத் தக்க வைப்பதற்காக மருத்துவமனை ஊழியர்களிடையே தொடர்ந்தும் சர்ச்சைகளை உருவாக்கும் முயற்சிகளைத் தொடர்ச்சியாக மருத்துவமனைப் பணிப்பாளர் மேற்கொண்டு வருவதை எதிர்த்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தாம் தீர்மானித்துள்ளதாகவும், யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தோடு இரண்டு மாதங்களாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்த நிலையிலும் நோயாளர்களின் பாதுகாப்பை யாழ் போதனா வைத்தியசாலையினது நிர்வாகம் உறுதி செய்யத் தவறியமையால், குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்தமைக்கான காரணத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அவையாவன… 1.நோயாளர் அவசர சேவைகளுக்கான பிரிவுகளுக்கு ஆளணி பற்றாக்குறையாகவும் அதே நேரம், சாதாரணபிரிவுகளுக்கு அதிகமான ஆளணியும் பொருத்தப்பாடற்ற விதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதனால் நோயாளரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் உள்ளது. 2. யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக விபத்துஇ அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு ஆபத்தான பணியாளரைப் பொறுப்பிலிருத்தி இ அர்ப்பணிப்பான பணியாளரை இடம் மாற்றியுள்ளமை நோயாளிகளின் உயிராபத்திற்கேதுவான பாதகமான நிலைமை நிலையை உருவாக்கியுள்ளது. 3. சில ஊழியர்களின் பொறுப்புணர்ச்சி அற்ற நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக் காட்டியபோதும் அவர்களைத் திருத்துவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 4.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மருத்துவ நிபுணர்களால் தகவல்கள் கோரப்படும் போது தவறான தகவல்களை வழங்குவதுடன் தகவல்களை வழங்குவதில் தாமதம் செலுத்துதல். 5) மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ள அனைத்து நோயாளிகளினதும் பாதுகாப்பை உறுதி செய்யும் வரை தொழிற்சங்க நடவடிக்கையாக, அதிதீவிர சிகிச்சை தவிர்ந்த சாதாரண பணிகளையும் இடை நிறுத்த முடிவு செய்துள்ளோம். இது நோயாளரின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள முடிவு என்பதனால் நீண்டகால நோக்கிலான சரியான முடிவுகள் எட்டப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர வாய்ப்புள்ளது. இதனால் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்பதனை மன வருத்தத்துடன் நாம் தெரிவித்துக் கொள்கின்றோம். https://athavannews.com/2025/1423111- கொழும்பில் திறக்கப்பட்ட Shell´ன் முதலாவது எரிபொருள் நிலையம்!
கொழும்பில் திறக்கப்பட்ட Shell´ன் முதலாவது எரிபொருள் நிலையம்! இலங்கையின் எரிசக்தி துறைக்கு புதிய வலுச் சேர்க்கும் வகையில் அமெரிக்காவின் ஷெல் எண்ணெய் நிறுவனம், இலங்கையில் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்துள்ளது. அதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையமானது கொழும்பு, அம்பத்தளைப் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. ஷெல் பிராண்ட்ஸ் இன்டர்நேஷனல் ஏஜி (ஷெல்) மற்றும் ஆர்எம் போர்க்ஸ் (தனியார்) லிமிடெட் மேலும் இவற்றின் துணை நிறுவனங்கள் 2024 மார்ச் மாதத்தில் தயாரிப்பு விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 1880 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் செயற்பட்டு வந்த ஷெல் எரிபொருள் நிறுவனம் 1961ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தினால் அரசுடைமையாக்கப்பட்டது. அதன் பின்னர் குறித்த நிறுவனம் ஆசியாவில் தமது செயற்பாடுகளை இலங்கையிலிருந்து அகற்றி சிங்கப்பூரில் ஆரம்பித்து இன்று சிங்கப்பூரில் மாபெரும் நிறுவனமாக மாறியுள்ளது. ஷெல் எரிபொளுள் நிரப்பு நிலைய திறப்பு விழாவில் பங்கெடுத்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜூலி சுங் கூறியுள்ளதாவது, கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட RM Parks’ Shell எரிபொருள் நிலையத்தை இலங்கையில் 150 நிலையங்கள் திட்டமிடப்பட்டதில் திறப்பதில் பெருமை கொள்கிறோம். இந்த முதலீடு நம்பகமான எரிபொருள் வழங்குநரைச் சந்தைக்குச் சேர்ப்பதுடன் அமெரிக்காவையும் இலங்கையையும் மேலும் செழுமையாக்குகிறது. எரிபொருள் வழங்குனர்களை பல்வகைப்படுத்துவது இலங்கையின் 2022 எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்திய எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க உதவும் – என்றார். https://athavannews.com/2025/1423142- சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்ட நாமல்!
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் நாமல்! 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஏர்பஸ் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் துறையிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய விமானங்களை மாற்றும் போது நடந்ததாகக் கூறப்படும் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வாக்குமூலம் பதிவு வழங்குவதற்காகவே அவர் குறித்த திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். பொது நிறுவன மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறையின் நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த விடயத்தை விசாரித்து வருகிறது. இதற்கிடையில், ஜே.வி.பி உறுப்பினர்களின் சில அறிக்கைகள்இ நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423156- செவ்வந்தியின் புதிய படங்களை பாருங்கள்...
கெஹல்பத்தர பத்மேவின் குடும்பத்தினர் மீது கொலை முயற்சி! கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் பெற்றோரைக் கொல்ல முன்னெடுக்கப்பட்ட முயற்சி பன்னல பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை முயற்சியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கெஹல்பத்தர பத்மே என்ற குற்றவாளி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கெஹல்பத்தர பத்மேவின் பிரிவுடன் தொடர்புடைய தரப்பினரையும் கொலை செய்யப்போவதாக கணேமுல்ல சஞ்சீவவின் பிரிவு மிரட்டியுள்ளதாக பாதுகாப்புப் பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகைய சூழலில் பன்னலவில் உள்ள கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் வீட்டை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பன்னல பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வீட்டில் வசிக்கும் குடியிருப்பாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து? பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது? கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களும் அங்கு இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில், கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் தாய், தந்தை மற்றும் தம்பி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 21 மற்றும் 24 வயதுடைய இரண்டு இளைஞர்களிடம் விசாரித்தபோது, துபாயைச் சேர்ந்த சமீரா என்ற குற்றவாளியிடமிருந்து கிடைத்த பணிப்புரைக்கு அமைய குறித்த வீட்டை வீடியோ எடுத்ததாகக் கூறியுள்ளனர். மேலும் வீட்டிற்கு செல்லும் வழியை வீடியோ எடுத்து தமக்கு அனுப்புமாறு துபாய் சமீரா அறிவுறுத்தியதாகவும் அவ்வப்போது அவர் போதைப்பொருள் பயன்படுத்துவதற்காக பணம் கொடுத்ததால் அவ்வாறு செய்ததாகவும் சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, பன்னல கொஸ்வத்தை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு இருவரும் தயாராகி வந்ததாக சந்தேகிக்கப்படுவதால், அவர்கள் நாளை (27) வரை தடுத்து நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423196- நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!
நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்! தமிழ்நாட்டின் நாகை -இலங்கை காங்கேசன்துறை ‘செரியா பாணி’ பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது அதன்படி நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இன்று 26-ந்திகதி முதல் 28-ந்தேதி வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் மார்ச் 1-ந் திகதி முதல் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது தமிழ்நாட்டின் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்திகதி ‘செரியா பாணி’ என்ற பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. பின்னர் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிமாக சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்தாண்டுக்கான கப்பல் போக்குவரத்து இம்மாதம் 22-திகதி ஆரம்பமாகிய நிலையில் தமிழ்நாட்டில் 28-திகதி வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது மேலும் நாகை-இலங்கை இடையே நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து தொடங்கி 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsநாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்!தமிழ்நாட்டின் நாகை -இலங்கை காங்கேசன்துறை 'செரியா பாணி' பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது அதன்படி நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இன்று 26-ந்திகதி முதல் 28-ந...@ஏராளன் 😂- Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா?
Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா? Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கனடா, Five Eyes alliance என்னும் அமைப்பில் அங்கத்துவம் பெற்ற நாடாக இருந்து வருகின்றது. உளவுத்தகவல்கள் ஒத்துழைப்புக்காக 1941ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், கனடாவுடன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாளர்களாக உள்ளன. இந்நிலையில், வெள்ளை மாளிகை மூத்த அலுவலரும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவருமான பீற்றர் நவாரோ (Peter Navarro) என்பவர், தற்போது கனடாவை Five Eyes அமைப்பிலிருந்து கனடாவை வெளியேற்ற அழுத்தம் கொடுத்து வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, அடுத்த மாதம், அதாவது, மார்ச் மாதம் 9ஆம் திகதி தனது பிரதமர் பதவியிலிருந்து விலகும் நிலையில், அடுத்து கனடாவுக்கு என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423167- 300 நோயாளிகள் மீது பாலியல் வன்கொடுமை: பிரான்ஸ் மருத்துவர் வாக்குமூலம்!
300 நோயாளிகள் மீது பாலியல் வன்கொடுமை: பிரான்ஸ் மருத்துவர் வாக்குமூலம்! சிகிச்சைக்காக வந்த 300 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில், முன்னாள் பிரான்ஸ் அறுவைசிகிச்சை மருத்துவர் ஜோல் லே மீது வழக்குத் தொடரப்பட்ட விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் குறித்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்த 300 பேரில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளதுடன் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களும் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தான் மிகவும், அருவறுக்கத்தக்க செயல்களை செய்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகத் தான் மிக மோசமான குற்றச்செயலில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்கள் அடைந்த காயங்களை ஆற்ற முடியாது என்று ஒப்புக்கொள்வதாகவும் குறித்த மருத்துவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்நிலையில் இவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. யார் இந்த ஜோல் லே? கடந்த 2017ஆம் ஆண்டு ஜோல் லே மீது, அண்டை வீட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமி, தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாகக் கொடுத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பொலிஸார் அவரது வீட்டை சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டிலிருந்து 3,00,000 புகைப்படங்களும் 650 மோசமான விடியோக்களும், அவர் செய்த பாலியல் துன்புறுத்தல்களைப் பற்றி மருத்துவர் கைப்பட எழுதி வைத்திருந்த நோட்டுப் புத்தகங்களும் பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து 4 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்குகளில் 2020ஆம் ஆண்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மருத்துவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போதுதான், மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததை ஒப்புக் கொண்டார். மருத்துவர் அளித்த தகவல் மற்றும் கிடைத்த விடியோ, புகைப்படங்களின் அடிப்படையில், அவர் 158 ஆண்கள், ஏராளமான குழந்தைகள் 141 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் தொடங்கியுள்ள நிலையில் உலகளவில் குறித்த வழங்கு பெரும் பேசு பொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423182- கருத்து படங்கள்
- பயன்படுத்தப்படாத ஸ்ரீலங்கன் விமானங்களால் பாரிய இழப்பு!
- அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
- இன்று மகா சிவராத்திரி விரதமாகும்!
ஒருமித்த மனங்களுடன் நாம் தேர்ந்தெடுத்த பாதையை மென்மேலும் ஔிரச் செய்ய வேண்டும்-ஜனாதிபதி! உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்த்தப்படும் சந்தர்ப்பமாகவும் இது நினைவுகூறப்படுகிறது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது உலகிலும், வாழ்விலும் “மாயை இருளை” வெற்றிகொள்ளவதை குறிக்கிறது. எனவே,மாயை இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும்’ என்ற நம்பிக்கையுடன் இந்து பக்தர்கள் இந்த நாளில் இரவு முழுவதும் விரதமிருந்து தான தர்மங்களில் ஈடுபடுகின்றனர். மேலும் மகா சிவராத்திரி நாளில் வாழ்வில் சுபீட்சம் கிட்ட பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது. சிவன், பார்வதியின் சங்கமம் ஞானம் மற்றும் ஆற்றலின் சங்கமாகும். அது கண்களை மறைத்திருக்கும் மாயையின் திரைகளை கிழித்து யதார்த்தத்தின் வெளிச்சத்திற்கு கண்களை திறக்கிறது. பல யுகங்களாக எம்மை சகோதரத்துவத்திலிருந்து ஒதுக்கி வைத்த பிரிவு – பிளவுகளை உருவாக்கிய இருள் திரையைக் கிழித்து, ஒற்றுமையை கட்டியெழுப்பி இந்த பூமியில் ஒரு புதிய யுகத்தின் உதயத்தை காணும் வேளையில் இந்த தருணம் வந்திருக்கிறது. இது, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை முன்பை விடவும் வரவேற்று, பாதுகாத்து நாட்டின் அனைத்து மக்கள் குழுக்களும் ஒருவருக்கொருவர் மத்தியில் கௌரவம் – அன்பை முன்னிலைப்படுத்தி எமது தாய்நாட்டின் சுபீட்சத்துக்காக அர்ப்பணிக்கும் தருணமாகும். இந்த வலுவான களத்திலிருந்து சிறந்ததொரு நாட்டை உருவாக்கிக்கொள்ள ஒரே தேசமாக நாம் அனைவரும் முன்னோக்கி செல்ல வேண்டும். அனைவரும் கோரும் நல்லதொரு அரசியல் கலாசாரத்துடன் கூடிய வளமான நாட்டைக் கட்டியெழுப்பும் பல புதிய அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் பலவற்றுடன் தற்போது நாம் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம். மஹா சிவராத்திரி தினத்தில் ஒளிரச் செய்யப்படும் விளக்குகளின் ஒளியால் ஒருமித்த மனங்களுடன் நாம் தேர்ந்தெடுத்த பாதையை மென்மேலும் ஔிரச் செய்ய இலங்கையர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். மேலும் மகா சிவராத்திரியை கொண்டாடும் இலங்கை இந்து பக்தர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள இந்து மக்களின் நல்ல எண்ணங்களும், விருப்பங்களும் நிறைவேறி அவர்களின் வாழ்வு அர்த்தமுள்ளதாக அமைய வேண்டுமெ பிரார்த்திக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1423050- இந்திய மீனவர்கள் விவகாரம் : இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் விடுத்துள்ள கோரிக்கை
இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம், கடற்றொழில் அமைச்சர் விசேட கோரிக்கை! இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதை தடுப்பதற்கு இந்திய ஒன்றியம் மற்றும் தமிழக அரசாங்கம் என்பன உரிய காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே மற்றும் கடற்றொழில் அமைச்சருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனை வலியுறுத்தினார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதாலேயே அவர்கள் கைது செய்யப்படுகின்றனர் எனவும், மீனவர் விவகாரத்தை மனிதாபிமானத்துடனேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அணுகுகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்திய மீனவர்களின் இழுவை படகு உட்பட சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையால் வடக்கு மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் இலங்கையின் கடல்வளத்துக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றியும் அமைச்சர் எடுத்துரைத்தார். இதன்போது கருத்து தெரிவித்த பிரதி உயர்ஸ்தானிகர், இலங்கை கடற்பரப்புக்குள் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டதுடன், மீனவர் பிரச்சினையை மனிதாபிமான ரீதியிலேயே அணுக வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், சம்பவ தினத்தன்று இந்திய மீனவர்கள் கடற்படையினரை அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாலேயே இவ் அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது எனவும் விளக்கமளித்துள்ளார். https://athavannews.com/2025/1423095- இன்று ஜெனிவாவுக்கு செல்லும் விஜித தலைமையிலான குழு
தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை இலக்காகக்கொண்டு எமது அரசாங்கம் செயலாற்றும்-விஜித்த ஹேரத்! சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையில் நேற்று இக்கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்தார் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரிப்பதற்கான ஆணை அக்கட்டமைப்புக்கு வழங்கப்படும் என்றும் இவ்வாறு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும், நம்பகமான முறையிலும் இயங்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அவர் தெரிவித்தார் எமது நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்றுமுடிந்த தேர்தல்களின் ஊடாக அரசியல், பொருளாதார மற்றும் சமூக மறுசீரமைப்பை ஏற்படுத்தும் நோக்கில் நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த மக்கள் பெரும்பான்மை வாக்குகள் ஊடாக எம்மைத் தெரிவு செய்தனர். அதனையடுத்து இலங்கை வரலாற்றிலேயே எம்மால் கட்டமைக்கப்பட்ட நாடாளுமன்றமே மலையகத்தைச்சேர்ந்த இருவர் உள்ளடங்கலாக அதிகளவு பெண் பிரதிநிதிகளையும், மாற்றுத்திறனாளி ஒருவரையும் உள்ளடக்கிய சகல தரப்பினருக்குமான பிரதிநிதித்துவத்துடன்கூடிய நாடாளுமன்றமாகத் திகழ்கிறது. தற்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்திருப்பதுடன், அதனை சகலருக்குமான சமபங்கீட்டை உறுதிப்படுத்தக்கூடிய பொருளாதாரமாக நிலைமாற்றமடையச்செய்வதை நோக்கி நாம் பயணிக்கிறோம். அதேபோன்று எமது அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களுக்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதன் ஊடாக நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் மக்களுக்கான நிவாரணத்தை வழங்கியிருக்கிறோம். அதுமாத்திரமன்றி வட, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம், வீடமைப்பு மற்றும் நட்டஈடு வழங்கல் ஆகியவற்றுக்கு அவசியமான நிதியொதுக்கீடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நாம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ செயற்திட்டத்தின் ஊடாக நேர்மைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புக்கூறத்தக்கதுமான ஆட்சிநிர்வாக முறைமையொன்றை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு உத்தேசித்துள்ளோம். அடுத்ததாக தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு உறுதிபூண்டிருக்கிறது. அதன்பிரகாரம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட உள்ளகப்பொறிமுறைகள் மேலும் வலுப்படுத்தப்படுவதுடன், அவை சுயாதீனமானதும், நம்பகத்தன்மை வாய்ந்த முறைமையிலும் இயங்குவது உறுதிசெய்யப்படும். அதேபோன்று சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும். இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரிப்பதற்கான ஆணை அக்கட்டமைப்புக்கு வழங்கப்படும். இவ்வாறு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும், நம்பகமான முறையிலும் இயங்கும். அத்துடன் எமது நாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களிலும், உபகுழுக்களிலும் அங்கம் வகிக்கின்றது. அக்குழுக்களினால் மேற்கொள்ளப்படும் கூட்டங்கள் மற்றும் மீளாய்வுகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிப் பங்கேற்கிறது. நாட்டின் தேசிய சட்டதிட்டங்களுக்கு அமைவாக இந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1423064- தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா-‘Get Out’ கையெழுத்து இயக்கமும் ஆரம்பம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா-‘Get Out’ கையெழுத்து இயக்கமும் ஆரம்பம்! தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. அதன்படி விழா மேடைக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்ததுடன் அதனை தொடர்ந்து த.வெ.க. இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா தொடங்கியது. முதலில் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின்னர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றிருந்தனர் இதனை தொடர்ந்து ‘Get Out’ கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி தொடங்கியதுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சியமைக்க போகுது’ கண்டா வரச்சொல்லுங்க பாடல் புகழ் பாடகி கிடாக்குழி மாரியம்மாள் பாடலை பாடினார். இதனை தொடர்ந்து விஜய்க்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய மாரியம்மாளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த விஜய் புத்தகத்தை பரிசாக வழங்கி குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனிடையே, பா.ஜ.க.வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1423103- சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்ட நாமல்!
சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்ட நாமல்! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (25) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய விமானப் படையணியை மாற்றியமைக்கும் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொது நிறுவன அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் சில அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். https://athavannews.com/2025/1423061 - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.