Everything posted by தமிழ் சிறி
-
கல் ஓயாவில் தடரம் புரண்ட ரயில்; 5 யானைகள் உயிரிழப்பு!
- தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி வெளியீடு
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி வெளியீடு. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தொழிற்படுகின்ற தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குழுக்களிடமிருந்து பெறப்படுகின்ற உதவியுடன் அந்த அமைப்பை மீள் உருவாக்குவதற்கான எத்தனிப்புகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்த குற்றச்சாட்டில் குறித்த அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிப்பதாக பாதுகாப்பு அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம் மற்றும் கனேடிய தமிழர் தேசிய அவை உள்ளிட்ட அமைப்புகள் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ் இளைஞர் அமைப்பு, எக்சியூ என்று அறியப்படுகின்ற தலைமையகக் குழு, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு, ஜமாதே மிலாதே இப்ராஹிம் அமைப்பு, விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்தபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சேவ் த பேர்ள்ஸ் என்பனவும் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 222 தனிநபர்களின் பெயர் விபரங்களும் அடங்குகின்றன. Athavan Newsதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு...தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம...- நாட்டில் 57 பாதாள உலகக் கும்பல்கள் செயற்படுகின்றன - பதில் பொலிஸ்மா அதிபர்
நாட்டில் இதுவரை 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது – சிறப்பு ஊடக சந்திப்பு நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். நாட்டில் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தையும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிக்கும் ஒரு குழு இருப்பதாகவும், அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்தார். மேலும், நிகழ்வில் பேசிய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, நாட்டில் இதுவரை 58 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைப் பின்தொடர்பவர்களில் சுமார் 1,400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். புலனாய்வு அமைப்புகள் மூலம் அவர்கள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்களின் தலைவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாகவும், இந்தக் குற்றங்களைச் செய்து வருவதாகவும் தெரிவித்தார். அதன்படி, 2024 ஆம் ஆண்டில் 93 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் 75 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் குறிப்பிடப்படாத கூர்மையான ஆயுதங்களால் 18 தாக்குதல்கள் அடங்கும் என்று அவர் கூறினார். 2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 22 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்களால் 5 தாக்குதல்கள் நடந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு நடந்த 17 குற்ற சம்பவங்கள் இப்போது தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தக் குற்றங்களுக்கு பொலிஸ், ஆயுதப்படைகள் அல்லது பாதுகாப்பு சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளித்துள்ளதாகவும், அவர்களைக் கண்டறிந்து கைது செய்ய ஒரு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1422540- மீண்டும் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு!
மீண்டும் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு! கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை அண்மையிலுள்ளும் இங்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இடம்பெற்றுள்ளது. https://athavannews.com/2025/1422517- நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!
நாகப்பட்டிணம் – காங்கேசன் துறை இடையிலான கப்பற்சேவை ஆரம்பம் இந்தியா – இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2003 ஆண்டு அக்டோபர் மாதம் நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புயல், மழை, கடல் சீற்றம், சீதோஷ்ண நிலை உள்ளிட்ட காரணங்களால் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தற்காலிகமாக கப்பல் சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை கப்பல் போக்குவரத்துக்கு தயாரான நிலையில், இந்தியா, இலங்கை இடையிலான கப்பல் சேவை மீண்டும் இன்று தொடங்கவுள்ள்தாக கப்பலை இயக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று கப்பலில் பயணிக்க முன்பதிவு செய்த பயணிகள், நாகை பயணியர் முனையத்திற்கு அதிகாலை முதல் வரத்தொடங்கின்ங்கினர். அதனைத் தொடர்ந்து நாகை பயணியர் முனையத்திற்கு வருகை தந்த 83, பயணிகளின் உடமைகள் மற்றும் பயண டிக்கெட்டை, இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் கப்பலில் பயணிகள் ஏற அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மும்மத பிரார்த்தனையுடன் கப்பல் சேவையானது கொடியசைத்து தொடக்கிவைக்கப்பட்டது. இதில் பயணம் செய்யும், பயணிகள் மகிழ்ச்சியுடன் நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கை காங்கேசன்துறைக்கு பயணத்தை மேற்கொண்டனர். 3, மாதங்களுக்குப் பின் நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை மீண்டும் தொடங்கியதால் இந்திய-இலங்கை இருநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். https://athavannews.com/2025/1422537- சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
மிகவும் துயரமான செய்தி. 😢 புலம் பெயர் தேசத்திலிருந்து செல்லும்... கொழுப்பு மிஞ்சியதுகளால், தனது வருமானத்துக்காக, ஒய்வு பெற்ற பின்பும் உழைத்துக் கொண்டு இருந்த அப்பாவி மனிதனை, பாவிகள் அடித்துக் கொன்று விட்டார்கள். எங்கே போகின்றது நம் இனம்.? அகால மரணத்தை தழுவிய முன்னாள் அதிபருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
புத்தகத்தில்... துப்பாக்கியை கொண்டு வந்து, கொலை செய்யலாம் என்று முதன் முதலாக நிரூபித்து காட்டியவர்கள் புத்த பிக்குகள். கொண்டு வந்த புத்தகம்: திரிபிடகம். பிக்குகள்: 1.புத்தர கித்த தேரோ. 2.சோமராம தேரோ. கூட விமல விஜயவர்த்தன தேரோ. Karthigesu Indran- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
தேனை... தலையில் தேய்த்தால், நரை முடி வளரும்.- இரசித்த.... புகைப்படங்கள்.
- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
- ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
ஆட்டோ... ஆரம்ப விலை 20 லட்சம் ரூபாய்.- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
BYD சொகுசு கார்களின் இலங்கை விலை விபரம்! உலகின் முன்னணி புதிய ஆற்றல் வாகனமான BYD (New Energy Vehicle) இலங்கையில் தமது கார்களின் விலை பட்டியலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் BYD பயணிகள் வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keels CG Auto ஆனது, Plug-in Hybrid BYD SEALION 6 DM – i இன் அறிமுகத்துடன் கொழும்பில் BYD காட்சியறை மற்றும் சேவை மத்திய நிலையத்தை கடந்த வருடம் திறந்து வைத்தது. கொழும்பு 02, யூனியன் பிளேஸ், இல 447 இல் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான காட்சியறையின் திறப்பு நிகழ்வானது 2024 ஆகஸ்டம் மாதம் நடைபெற்றது. இந்த நிலையில், BYD ஸ்ரீலங்கா அவர்களின் மின்சார வாகனங்கள் (EV) மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் மின்சார வாகனங்கள் (PHEV) ஆகியவற்றுக்கான சிறப்பு விலைகளை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு வாகனத்திற்கும் 8 வருட உற்பத்தியாளர் பேட்டரி உத்தரவாதமும் 6 வருட உற்பத்தியாளர் வாகன உத்தரவாதமும் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் இந்த சிறப்பு சலுகை விலைகளுக்கு வாடிக்கையாளர்கள் புத்தம் புதிய BYD வாகனங்களை முன்கூட்டிய முன்கட்டளை (ஆர்டர்) செய்யலாம். BYD SEALION 6 SUPERIOR – 21.7 மில்லியன் ரூபா BYD SEALION 6 PREMIUM – 25.3 மில்லியன் ரூபா BYD SEAL DYNAMIC – 19.7 மில்லியன் ரூபா BYD SEAL PREMIUM – 54.7 மில்லியன் ரூபா BYD SEAL PERFORMANCE – 78.1 மில்லியன் ரூபா BYD ATTO 3 ADVANCED – 14.6 மில்லியன் ரூபா BYD ATTO 3 SUPERIOR – 16.8 மில்லியன் ரூபா BYD M6 STANDARD – 16.2 மில்லியன் ரூபா BYD M6 SUPERIOR – 17.4 மில்லியன் ரூபா BYD DOLPHIN DYNAMIC 49 – 10.7 மில்லியன் ரூபா https://athavannews.com/2025/1422480 @goshan_che , @விளங்க நினைப்பவன் , @அக்னியஷ்த்ரா , @ரசோதரன் , @நிழலி , @இணையவன் , @ஈழப்பிரியன் , @Justin , @ஏராளன்- அர்ச்சுனா எம்.பி. விவகாரம்; சபாநாயகரின் அறிவிப்பு!
அர்ச்சுனா எம்.பி. விவகாரம்; சபாநாயகரின் அறிவிப்பு! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) நாடாளுமன்றில் அறிவித்தார். குழுக்களின் பிரதித் தவிசாளரான கௌரவ (திருமதி) ஹேமாலி வீரசேகர தலைமையில் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக சபாநாயர் அறிவித்தார். அத்துடன், இந்த அறிக்கையானது, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களினால் அவர்களது பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகள் பற்றியும் சபாநாயர் அறிவித்தல் மேற்கொண்டார். அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்களினால் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அடிக்கடி தனக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து பரிசீலனைசெய்ததன் பின்னர், அது தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்காக, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அக்கோரிக்கைகள் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார். https://athavannews.com/2025/1422486- சசரம் வன்முறை: பீகாரில் தரம் 10 மாணவர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்!
சசரம் வன்முறை: பீகாரில் தரம் 10 மாணவர் துப்பாக்கிச் சூட்டில் மரணம்! பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் சசாரம் பகுதியில் இரு குழுக்களிடையே வெள்ளிக்கிழமை (21) ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த வன்முறையில் மேலும் இரு மாணவர்கள் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பரீட்சை நிலையத்தில் மோசடி செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதால் தகராறு ஏற்பட்டது. மோதல் வன்முறையாக மாறியதால், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 வயது அமித் குமார் என்ற தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர் உயிரழந்துள்ளார். PTI செய்திச் சேவையின் தகவல்களுக்கு அமைவாக, பரீட்சை நிலையத்தில் இடம்பெற்ற மோசடி சம்பவம் தொடர்பாக மாணவர்கள் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவரின் மரணம் காரணமாக, இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நீதி கேட்டு தேஹ்ரியில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அதிகாரிகள் தலையிட்டு, இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இறுதியில் போராட்டக்காரர்கள் சமாதானம் செய்யப்பட்டு, குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளில் ஈடுபட்டனர். Athavan Newsசசரம் வன்முறை: பீகாரில் தரம் 10 மாணவர் துப்பாக்கிச் சூட்ட...பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் சசாரம் பகுதியில் இரு குழுக்களிடையே வெள்ளிக்கிழமை (21) ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த வன்முறையில் மேலும் இரு மாணவர்க...- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடும் தமிழ் சிறிக்கு, உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ❣️ இன்னும்... நூறாண்டு காலம், வாழ்க வளமுடன். ❤️ "ஹப்பி பேர்த்டே".... தமிழ் சிறி. 😂 🤣- கருத்து படங்கள்
- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
- எம்.பி ஆகிறார் ரணில் ?
- துப்பாக்கிச் சூட்டில் தந்தை, மகள் உயிரிழப்பு; மகன் படுகாயம்!
மித்தெனிய துப்பாக்கி சூடு; கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது! தந்தை, இரு பிள்ளைகள் உட்பட மூவர் உயிரிழந்த மித்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று காலை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து இதனை உறுதிப்படுத்தினார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணியளவில் மித்தெனிய, கடேவத்த சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தந்தை, அவரது ஆறு வயது மகள் மற்றும் ஒன்பது வயது மகன் உட்பட மூவர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டினை அடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் மற்றும் மகள் படுகாயமடைந்த நிலையில் முறையே எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். எவ்வாறெனினும், பாதிக்கப்பட்டவரின் ஆறு வயது மகள் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் மறுநாள் உயிரழந்தார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர், மேலும் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. https://athavannews.com/2025/1422432- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
நீதிமன்ற வளாக துப்பாக்கி சூடு; கான்ஸ்டபிள் ஒருவர் கைது! கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழு உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கில் பெண் சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) அதிகாரிகளால் அவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நீர்கொழும்பு பொலிஸில் கடமையாற்றும் 26 வயதுடைய பாதெனிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸ் கான்ஸ்டபிளின் மொபைல் போனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெண் சந்தேக நபரின் எண்ணையும் CCD அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கணேமுல்ல சஞ்சீவ புதன்கிழமை (19) காலை கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இலக்கம் 05 நீதிவான் நீதிமன்ற அறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், சட்ட நடவடிக்கைகளுக்காக சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன்போது சட்டத்தரணி போன்று மாறுவேடமிட்டு வந்த நபர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெண் சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2025/1422461- மூன்று மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க தடை
மூன்று மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க தடை. ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கோழிகள் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறது. இதனை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க இறைச்சி, முட்டை வர்த்தகர்களுக்கு கர்நாடக அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1422447- முகநூலில் அறிமுகமான பாகிஸ்தான் பெண்ணுக்கு கடற்படை தள படங்களை பகிர்ந்த இரண்டு இந்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள்
பெண் கொடுத்த 5000 ரூபாய்க்கு... "ஜொள்ளு" விட்டுக் கொண்டு, நாட்டின் ரகசியத்தை பகிர்கின்றவன், ஒறிஜினல் இந்தியனாகத்தான் இருப்பான். 😂Important Information
By using this site, you agree to our Terms of Use.
- தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி வெளியீடு
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.