Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. பறக்கின்ற விமானத்தில்... பாலியல் வன்புணர்வு செய்த ஆள் என்றால், எப்படிப்பட்ட கில்லாடியாக இருப்பான். நிச்சயம் சிங்களவனாகத்தான் இருப்பான். தமிழன் என்றால்... பெயர், ஊர், விலாசம் எல்லாம் பத்திரிகையில் போட்டிருப்பார்கள். 😂
  2. தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஆரம்பம்! தேசியதைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளது. புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்,மற்றும் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் இணைந்து 2025ம் ஆண்டுக்கான தேசிய தைப்பொங்கல் பண்டிகை நடைபெறவுள்ளது. அதன்படி புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியின் தலைமையில் காலை 7.30 மணிக்குதெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் சமய வழிபாடுகளுடன் ஆரம்பமாகி பின்னர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வரை ஆன்மிக விழிப்புணர்வு நடைப் பயணமும் அதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது. https://athavannews.com/2025/1416023
  3. புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு! ரஷ்ய ஜனாதிபதியுடன் ஒரு சந்திப்பினை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சந்திப்பு குறித்த திகதி மற்றும் இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்பதற்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப், ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் உக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்தார். இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான தீர்வுகளைப் பற்றி விவாதிக்க ட்ரம்புடன் ஒரு சந்திப்பினை கோரியிருந்தார். அதற்கு இணங்க இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. 2022 பெப்ரவரி முதல் ரஷ்யப் படையெடுப்பின் கீழ் இருக்கும் உக்ரேனில் அமைதியை நிலை நாட்டுவதற்கான பிரச்சார வாக்குறுதிகளை ட்ரம்பின் கருத்துக்கள் வெளிக்காட்டுகின்றன. எனினும், பதவியேற்கும் ஜனாதிபதி இன்னும் உறுதியான போர்நிறுத்தம் அல்லது சமாதான ஒப்பந்த முன்மொழிவுகளை கோடிட்டுக் காட்டவில்லை. ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் உக்ரேனுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க இராணுவ உதவியை ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் விமர்சித்தார். மேலும், நேட்டோவில் அமெரிக்காவின் தொடர் ஈடுபாடு குறித்து சந்தேகம் தெரிவித்தார். எவ்வாறெனினும், 2022 பெப்ரவரி முதல் $65 பில்லியனுக்கும் அதிகம் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்கிய வொஷிங்டன், போரின் போது உக்ரேனின் மிகப்பெரிய ஆதரவாளராக இருந்து வருகிறது. https://athavannews.com/2025/1416003
  4. 👇 கபிதன்... நான் இணைத்த படம் மூன்று கிழமைக்கு முன்பு, யாழில் ஏராளனால், இணைக்கப்பட்ட செய்தியில் இருந்து எடுக்கப் பட்டது. 17. 12. 2024´ல் இணைக்கப் பட்ட தலைப்பில், நீங்களும் கருத்து எழுதிவிட்டு. இப்போ வந்து.... அது 2017´ம் ஆண்டில் எடுத்த படம் என்று பச்சைப் பொய் சொல்லி, சுமந்திரனுக்கு.. வெள்ளை அடிப்பதாக நினைத்துக் கொண்டு, மற்றவர்கள் மீது அவதூறு பரப்பி... முட்டாளக்கும் செயலை செய்யாதீர்கள். இந்தத் தலைப்பு, தன்னுடைய பாட்டில்... "தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!" என்பதுடன் முடிந்து இருக்க வேண்டியது. அதற்குள்... நீங்களும், இன்னும் ஒருவரும்... திரிக்கு சம்பந்தமே இல்லாமல், பார் லைசன்சைப் பற்றி கதைத்து, சுமந்திரனை முச்சந்தியில் வைத்து துகில் உரியப் பண்ணி விட்ட பெருமை, உங்கள் இருவரையுமே சாரும். 😂 நீங்கள் இங்கு வந்து, சுய நினைவுடன் தான் கருத்து எழுதுகின்றீர்களா என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகின்றது. மற்றவர்கள் மீது குற்றம் சொல்ல முதல் நன்கு யோசித்து சொல்வது உங்களுக்கு நல்லது. இத்தகைய செய்கைகளால் உங்களுடன் பலர் கருத்தாடுவதை தவிர்த்து விட்டார்கள் என்பதை அறிவீர்கள் என நினைக்கின்றேன். இனியாவது சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கும் போது.... உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எழுதவும். அது, உங்கள் மீதுள்ள மரியாதையை தக்க வைக்கும். நன்றி. 🙏
  5. பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு! அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்க நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா பயணித்த விமானத்தில் 41 வயதான குறித்த சந்தேக நபர் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பெண் பயணி ஒருவர் விமான ஊழியர்களிடம் முறைப்படு அளித்திருந்தார். இதையடுத்து டிசம்பர் 18 ஆம் திகதி மெல்பேர்ன் விமான நிலையத்லை் வைத்து சந்தேக நபரான இலங்கையர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு எதிரான வழக்கு வியாழனன்று மெல்போர்ன் நீதிவான் நீதிமன்றில் வந்த நிலையில் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். தற்சமயம் குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கையர் பிணையில் உள்ளார். அவரது கடவுச்சீட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு விசாரணை முடியும் வரை விக்டோரியா அல்லது அவுஸ்திரேலியாவின் ஏனைய பகுதிகளில் தங்கியிருப்பார். பிணையின் நிபந்தனைகளின் கீழ், அவர் வாரத்திற்கு மூன்று முறை பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1415943
  6. 2025ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் மாற்றம் ஏற்படும்-வடக்கு மாகாண ஆளுநர்! அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் . ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலர் சாரதாஞ்சலி மனோகரன் கலந்துகொண்டு, ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத் திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கியதுடன், அரசாங்க அலுவலர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதன் பின்னர் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத் திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பதையும் இந்த அரசாங்கத்தின் அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு என்றும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் சேவைகளை விரைவாகவும், தரமாகவும், அன்பாகவும் வழங்குவது அரச பணியாளர்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அந்த மாற்றத்தை அரச பணியாளர்களின் நடத்தையில் ஏற்படுத்துவதன் ஊடாக செய்ய முடியும் என்று தெரிவித்தார் அத்துடன் இந்த நடத்தை மாற்றங்கள் உடனடியாகச் செய்யக் கூடியவை எனக் குறிப்பிட்ட ஆளுநர் 2025ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக மாற்றுவோம் என்றும் குறிப்பிட்டார் https://athavannews.com/2025/1415898
  7. தண்டனை அறிவிப்பை நிறுத்துமாறு கோரிக்கை முன்வைத்த ட்ரம்ப். ஆபாச பட நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்திவைக்க கோரி டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த நிலையில், தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து குடியரசுக் கட்சி சாா்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டாா். அப்போது, ஆபாச பட நடிகை ஸ்டாா்மி டேனியல்ஸ் மற்றும் டிரம்ப் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், நடிகையுடன் இருந்த தொடா்பு குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்காக டொனால்ட் டிரம்ப் நடிகைக்கு 1.3 லட்சம் டாலா்கள் டிரம்ப் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த பண பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவன கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதவிர, தோ்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்த ஆதரவாளா்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை டிரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டொனல்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நியூயாா்க்-இல் உள்ள மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு உறுதி செய்தது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒருவா் மீது குற்றவியல் வழக்கில் குற்றச்சாட்டு உறுதி செய்யட்டது அதுவே முதல்முறை ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1415959
  8. ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் சங்கமித்த 5 அமெரிக்க ஜனாதிபதிகள்! கடந்த மாத இறுதியில் தனது 100 ஆவது வயதில் உயிரிழந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் இறுதிச் சடங்கில் தற்போதைய, முன்னாள் ஜனாதிபதிகள் 5 பேர் மற்றும் துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இறுதிச் சடங்கானது வியாழக்கிழமை (09) வொஷிங்டன் நேஷனல் கதீட்ரலில் நடைபெற்றது. அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதிகளான ஜோ பைடன், டெனால்ட் ட்ரம்ப், பராக் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பில் கிளிண்டன் ஆகியோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, முதல் வரிசையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர். கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சித் தலைவர் ட்ரம்பிடம் தோல்வியடைந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் அவரது முன்னோடிகளான மைக் பென்ஸ் மற்றும் அல் கோர் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளும் இறுதி சடங்கில் கலந்து கொண்டு கார்டருக்கு மரியாதை செலுத்தினர். 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் டரம்பிடம் தோல்வியடைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அவரது கணவருடன் சடங்கில் பங்கெடுத்தனர். ஜனாதிபதி ஜோ பைடன் தனது புகழஞ்சலியில், கார்டரின் பண்பு மற்றும் தலைமைத்துவத்தை பலமுறை பாராட்டினார். ஒரு தசாப்தத்தில் அரசியல் ரீதியாக மோதலில் ஈடுபட்டுள்ள ட்ரம்ப் மற்றும் ஒபாமா – இறுதி சடங்கு நிகழ்வானது தொடங்குவதற்கு முன்பு சிரித்து அரட்டையடிப்பதை காட்டும் புகைப்படங்களும் இதன்போது படம்பிடிக்கப்பட்டது. முன்னாள் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் தனது கணவருடன் சடங்கில் பங்கெடுத்தார்.ஆனால் மிச்செல் ஒபாமா கலந்து கொள்ளவில்லை. அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தபோது ட்ரம்ப் மற்றும் அவரது முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் கைகுலுக்கினர். ட்ரம்பின் ஜனாதிபதி பதவியின் முடிவில் இருவரும் வெளியேறினர், ட்ரம்பின் அழுத்தம் இருந்தபோதிலும் பைடனின் ஜனாதிபதி பதவி வெற்றிக்கான சான்றிதழை பென்ஸ் தலைமை தாங்கினார். ஒரு கலக கும்பல் 2021 ஜனவரி 6 அன்று அமெரிக்க கேபிட்டலில் நுழைந்து சான்றிதழை நிறுத்த முயற்சித்தது, சிலர் பென்ஸ் தூக்கிலிடப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். பின்னர் அவர் 2024 குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்பிற்கு எதிராக போட்டியிட்டும் இருந்தார். நிகழ்வில் போர்த்துக்கள் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சௌசா, நெதர்லாந்தின் இளவரசி மாபெல் ஆஃப் ஆரஞ்ச்-நாசாவ் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உட்பட பல தற்போதைய மற்றும் முன்னாள் உலகத் தலைவர்கள், முக்கிய சர்வதேச அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதேநேரம், அண்மையக் காலங்களில் ட்ரம்பின் கண்ணில் வீழ்ந்த தூசியாகவுள்ள பதவி விலகும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இதில் பங்கெடுத்தார். அண்மைய வாரங்களில் ட்ரம்ப், ட்ரூடோவை “கவர்னர் ட்ரூடோ” என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு, கனடாவிற்கு எதிராக “பொருளாதார சக்தியை” பயன்படுத்துவதாக சபதம் மேற்கொண்டிருந்தார். 2024 தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் இடையில் எவ்விதமான பேச்சுக்களும், புன் சிரிப்புக்களும் இங்கு இடம்பெறவில்லை. இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும், இரு அரசியல்வாதிகளும் தேவாலயத்திற்குள் நுழைந்த பின்னர் கைகுலுக்கவில்லை. ட்ரம்ப் தனது இருக்கையில் அமர்ந்தபோது ஹாரிஸை வெறித்துப் பார்த்தார். ஹாரிஸின் கணவரான செகண்ட் ஜென்டில்மேன் டக் எம்ஹாஃப், பின்னர் கமலா ஹாரிஸ் புஷ்ஷிடம் பேசிய சந்தர்ப்பத்தில் ட்ரம்புடன் கைகுலுக்கினார். இவர்கள் தவிர கார்டரின் உயிருள்ள வாரிசுகள் அனைவரும் வொஷிங்டனில் வியாழன் அன்று நடந்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர். 1976 ஆம் ஆண்டு ஜெரால்ட் ஆர். ஃபோர்டை தோற்கடித்து, அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியான காட்டர் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி தனது 100 ஆவது வயதில் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1415931
  9. கடந்த பாராளுமன்றத் தேர்தலில்.... மக்களால் நிராகரிக்கப் பட்டு, படு தோல்வி அடைந்த சுமந்திரன், ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியை மூன்று கிழமைக்கு முன் சாணக்கியனுடன் சென்று சந்தித்த சந்திப்பு. 👇
  10. "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு..'' - காந்தக் குரலோன் ஜெயச்சந்திரன் காலமானார்.
  11. பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்! பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80 வயது) உடல்நலக்குறைவால் காலமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (09-01-2025) சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அவரது குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பாடகர் ஜெயச்சந்திரன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 14000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். https://jvpnews.com/article/popular-playback-singer-jayachandran-passed-away-1736438344
  12. இசையில் ஆர்வம் கொண்ட ஒரு இளம் பெண்... தன் சகோதரியோடு இணைந்து ஒரு பாடலை பாடி வெளியிட நினைத்து .. பல கிராமபோன் ரிகார்டு [இசைத்தட்டு ] கம்பெனிகளை கேட்டுப் பார்த்தாராம்.. ஆனால் இசைத்தட்டு கம்பெனிகள் இதற்கு மறுத்து விட்டார்களாம்.. அவர்கள் சொன்ன ஒரே காரணம் ‘‘ஓதுவார்கள் பலர் பாடியும் அது மக்களைச் சரியாக சென்றடையவில்லை. வேண்டாம் இந்த வீண்வேலை, விட்டு விடுங்கள்..’’ விடவில்லை அந்த சகோதரிகள்.. இசைத்தட்டு சுழல்வது போல் இசைத்தட்டு கம்பெனிகளை சுற்றி சுழன்று வந்து முயற்சித்தும்... கீறல் விழுந்த இசைத்தட்டாக “முடியாது “ என்ற பதிலே திரும்ப திரும்ப வந்ததாம்... ஆனாலும் மனம் தளராத அந்த சகோதரிகள் அந்தப் பாடலை பல ராகங்களில் டியூன் போட்டுப் பாடிப் பார்த்தார்களாம்... முதலில் ‘ஆபேரி’ அடுத்து ‘சுப பந்துவராளி’. அதனைத் தொடர்ந்து ‘கல்யாணி’. இறுதியாக ‘தோடி’.. இப்படி நான்கு ராகத்தில் பாடினார்கள் இந்தப் பாடலை... ஒருவழியாக 1970 - ல் வெறும் 500 ரிகார்டுகள் மட்டுமே வெளியிட்டார்களாம். ஆனால் அந்த ரிக்கார்ட் பல ரிக்கார்டுகளை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தது... இப்படி அந்தக் காலத்தில் படாத பாடுபட்டு பாடி இந்த இசைத்தட்டை வெளியிட்ட சகோதரிகள் சூலமங்கலம் சகோதரிகள்.. அந்தப் பாடல்... கந்த சஷ்டி கவசம்... சஷ்டியை நோக்கச் சரவண பவனார்.. சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்.. கந்தசஷ்டி கவசத்தை வேறு சிலரும் பாடியிருந்தாலும், சூலமங்கலம் சகோதரிகள் அளவுக்கு வேறு எதுவும் நம்மைக் கவரவில்லை... சரணம் சரணம் சண்முகா சரணம்.. சரணம் .. Paranji Sankar
  13. ஆழ்ந்த அனுதாபங்கள். வீதியில் அனாமத்ததாக திரியும்... கட்டாக்காலி நாய், மாடுகள் போன்றவற்றால் தினமும் பல மனித உயிர்கள் பறி போகின்றன. மூன்று மாதத்திற்கு முன் எனது உறவினர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது... தெருவில் நின்ற நாய் திரத்த, இவர் பதட்டப் பட்டு வேகமாக ஓட, வீதியில் இருந்த மணலில்... மோட்டார் சைக்கிள் சறுக்கி விபத்து ஏற்பட்டு, மூன்று மாதமாக... பல லட்சங்கள் செலவழித்து, வைத்தியம் பார்த்து இன்னும் மருத்துவ விடுப்பில் உள்ளார்.
  14. கொரோனாவின் போது... ஜனாஸாவை எரித்த, கோத்தாவும் பதவியில் இல்லை என்ற படியால்... அனுரா... "அது, ஒரு துன்பியல் சம்பவம்" என்று சொன்னால், காத்தான்குடிகாரனின் வாக்கும், அனுரவுக்கே கிடைக்கும்.
  15. அத்துடன்... முஸ்லீம்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காத கவலையையும் மறந்து விடுவார்கள். 😂 வரும் உள்ளூராட்சி தேர்தலிலும்... முஸ்லீம்களின் வாக்கை, அனுர... கொத்தாக அள்ளுகின்றார். 🤣
  16. மேலுள்ள படத்தப் பார்த்து... இலங்கை முஸ்லீம் ஒருவர், அமெரிக்காவின்... காஸா போலுள்ளது என கருத்து எழுதி இருந்தார்.
  17. பிரான்ஸ் மனைவிக்கு... இரண்டு பெரிய பெண் பிள்ளைகள். அவர் மனது வைத்தால்... ஞானசார தேரரின் அபராதத்தை 1500 ஐரோவாக கட்டி... கந்தையா அண்ணையை குளிர்விப்பார் என நினைக்கின்றேன். 😂 இப்ப சந்தோசமா.... 🤣
  18. நீளக் கை வைத்த சேர்ட் உங்களுக்கு, Summer Shirt ? 😂 யாழ்ப்பாண வெக்கைக்குள்... கோட்டு, சூட்டுடன் திரியும்... முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஒரு வெளி நாட்டு அதிகாரியை சந்திக்கப் போகும் போது வெளியில் இழுத்து விடப்பட்ட கசங்கிய சட்டையும், அவரின் உடல் மொழியும்... சாணக்கியனின் கார்ச் சாரதியாக போயிருப்பார் என்ற சந்தேகத்தை இங்கு பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது. 😎 உங்களுக்கு அது தெரிய வாய்ப்பு இல்லை. நீங்கள் அதுக்கு, வெள்ளையடிக்கப் பார்க்கிறீர்கள். 🤣 போட்ட சேர்ட்டின் நிறத்தையும் கவனிக்கவும். கொள்ளையிலை போன ராஜதந்திரமோ.... 😂 🤣
  19. இது இன்றைய (அமெரிக்கா) லாஸ் ஏஞ்சல்ஸ், காட்டு தீ 🔥 AB Amam
  20. பிக்குகள்.... சொத்து , சுகம் எல்லாம் துறந்தவர்கள். அவர்கள் வேலை வெட்டிக்குப் போய் சம்பாதிப்பதில்லை. அதனால் அவர்களிடம் பணம் பெரிதாக இராது என்று, நீதவான், 1500 ரூபாவை அபராதமாக விதித்திருக்கலாம்.
  21. பெரியார்... தனது வளர்ப்பு மகளான, மணியம்மையை திருமணம் செய்தது உண்மைதானே. 😎 😂 அதற்கு ஏன்... வேலை வெட்டி இல்லாதவங்கள், செந்தமிழன் சீமான் வீட்டை முற்றுகையிடுகிறார்கள். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.