Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. மாகாணசபைத் தேர்தல் நடாத்தப் பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்... இலங்கையின் தமிழ் மக்களுக்கு வடக்கிலும், கிழக்கிலும் இரு மாகாண சபைகள் கிடைக்க இருந்தது. அதில் கிழக்கில் இருந்ததை... சம்பந்தன் முஸ்லீம்களுக்கு தாரைவார்த்து கொடுத்தபின்... மிஞ்சி இருந்தது விக்கியர் தலைமையில் இருந்த வடக்கு மாகாண சபை. அதனை பொறுக்க முடியாத சுமந்திரன்... இல்லாத குடைச்சல் எல்லாம், சி. வி. கே. சிவஞானம் மூலமாக கொடுத்து அதை இயங்க விடாமல்... இறுதியில் ஜனாதிபதிவரை சென்று, அதனை முடக்கியவர்தான் சுமந்திரன். அவர்... மீண்டும் மாகாண சபை தேர்தல் வேண்டும் என்று கேட்பது முரணின் உச்சம். தனக்குத் தேவை இல்லாவிடில்... குழப்பி அடிப்பது. இப்போ... தனக்குத் தேவை என்றவுடன், தேர்தல் வேண்டும் என்று சொல்வதைத்ததான் தவறு என்கிறோம்.
  2. அதேதான்... நொச்சி. வந்த வேலையில்...பலதை முடித்து விட்டார். இன்னும் மிஞ்சி இருக்கிறதையும்... "வெட்டி சாய்ப்பம்" என்று புறப்பட்டு விட்டார். அண்மையில், யாழ்ப்பாணத்தில் சிறீதரனின் வீட்டில்... கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், செல்வராஜா கஜேந்திரனும் சந்தித்தித்தமையும்... சுமந்திரனுக்கு... "வயிற்று எரிச்சலை" ஏற்படுத்தி இருக்கும். அதை குழப்ப வேண்டுமென்றால்... இப்போ மாகாணசபை மூலமாக உள்ளே வந்துதான் ஆகவேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார் போலுள்ளது.
  3. நீங்கள்... எல்லா, முட்டையையும் ஒரே கூடையில் வைக்கின்கிறீர்கள். அது... தப்புங்க. கூடை, கீழே விழுந்தால்.... "ஆம்லெட்" போடக் கூட... ஒரு முட்டையும், மிஞ்சாதுங்க.
  4. மாகாண சபை முதல்வராக... வர, சுமந்திரன் அந்தரப் படுகிறார் போலுள்ளது. அது சரி... "பாடின வாயும், ஆடின காலும் சும்மா இருக்காது" என்று சொல்வார்கள். 😂 விக்கியர் தலைமையில் இருந்த மாகாண சபைக்கு... குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருந்ததே சுமந்திரன் தானே. 😎 சுமந்திரன்... மாகாண சபை தேர்தலில் நின்றால், அனுரா கட்சிக்கும், அர்ஜுனா கட்சிக்கும் "ஜாக்போட்" பரிசு காத்திருக்குது. 🤣
  5. ஜோர்தானில் புரட்சி ஏற்பட்டாலும்... சவூதி கொஞ்சம் கஸ்ரம் என நினைக்கின்றேன். 😂 நம்ம அமெரிக்க Cow Boy அண்ணர் மனது வைத்தால் எதுவும் சாத்தியமே. 🤣
  6. புதிய அரசியலமைப்பை உருவாக்கி சமர்ப்பிக்க... மூன்று வருடங்களை எடுக்கும் என்று எங்கோ ஒரு செய்தியில் வாசித்தேன். அதன் பின் இரண்டு வருடத்தில்... அடுத்த தேர்தல் வந்து விடும். நமது நாட்டில்.... வாக்குறுதிகளுக்கு மட்டும் பஞ்சம் ஏற்பட்டதே இல்லை. மகிந்த, ரணில், அனுர... ஆட்சி எதுவாக இருந்தாலும், புத்திரிகைகள் தினமும் வாக்குறுதிகளால் நிரம்பி வழியும்.
  7. சிந்திக்க வைக்கும்.... நியாயமான கேள்வி சுவியர். உப்பை... அரசனில் இருந்து ஆண்டி வரை பாவிக்கின்றார்கள். ஆனால்.... அதில், பெரும் லாபம் இல்லாததால்... முதலாளிகள் அதில் அக்கறை செலுத்துவதில்லை.
  8. தேர்தல் முடிவுகளில் இருந்து கற்றுக் கொள்வதும் கற்றுக் கொள்ளாததும் – நிலாந்தன்! நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பு, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வழங்கிய ஒரு தண்டனைதான். அதே சமயம் அர்ஜுனாவைத் தெரிவு செய்தமை என்பது தமிழ் மக்கள் தங்களுக்கு தாங்களே வழங்கிய ஒரு தண்டனைதான்.அதன் விளைவுகளை அவர்கள் பின்னாளில் அனுபவிக்க வேண்டியிருக்கும் . தேர்தலுக்கு முன்பாக கட்சிகள் தங்களுக்கு இடையே அடிபட்டுக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் ஒரு மூத்த அரசு அதிகாரி என்னிடம் சொன்னார்,” போகிற போக்கைப் பார்த்தால் தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம் என்று தமிழ்ச் சனம் முடிவெடுக்கும் ஒரு நிலைமை வரலாம்” என்று. ஆம் அதுதான் நாடாளுமன்ற தேர்தலில் நடந்தது. அதுபோல கொழும்பில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஒரு மூத்த முகாமையாளர் சொன்னார் “இந்த முறை தும்புத்தடியை மாற்றிப் பார்ப்போம்” என்று. திருநெல்வேலி சந்தையில் ஒரு மூத்த வியாபாரி சொன்னார், “இவர்களுக்கு- அதாவது- தமிழ் தேசிய கட்சிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும்” என்று. இம் மூன்று கூற்றுக்களும் தமிழ் மக்களின் மனநிலையை ஏதோ ஒரு விகிதமளவுக்கு பிரதிபலித்தன என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய தண்டனை. ஆனால் அந்த தண்டனையிலிருந்து கட்சிகள் கற்றுக் கொண்டனவா ? தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணி அவ்வாறு கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.தேர்தல் முடிவுகளின் பின் சுமந்திரன் வழங்கும் நேர்காணல்கள், அவருடைய விசுவாசிகள் சமூகவலைத்தளங்களில் எழுதும் கருத்துக்கள், உட்கட்சி முரண்பாடுகளை அவர்கள் வெளிப்படுத்தும் விதம், தோல்வியை, அதனால் ஏற்பட்ட வெறுப்பை வெளிப்படுத்தும் விதம், போன்றவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அவர்கள் தேர்தல் முடிவுகளில் இருந்து எதையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. தேர்தல் முடிவுகள் மிகவும் தெளிவானவை.கடந்த ஆண்டின் முடிவிலும் இந்த ஆண்டின் தொடக்கத்திலும் ஆதவனுக்கு நான் எழுதிய கட்டுரைகளில் அதை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தேன். “இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும் ஒரு தேர்தல் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மூத்த,பெரிய கட்சிக்குள் காணப்படும் சீரழிவை வெளியே கொண்டுவரும். அதேபோல இந்த ஆண்டின் முடிவில் நடக்கக்கூடிய ஒரு தேர்தலானது தமிழ்த் தேசிய அரசியலுக்குள் காணப்படும் சீரழிவை வெளியே கொண்டு வரும்” என்று. உண்மையில் அங்கு இந்த ஆண்டின் முடிவில் என்று கருதப்பட்டது, ஜனாதிபதி தேர்தல்தான். ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியதன்மூலம் அந்தச் சீரழிவை ஓரளவுக்குத் தவிர்க்கக்கூடியதாக இருந்தது. எனினும் ஜனாதிபதித்தேர்தல் முடிந்த கையோடு வந்த நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவை வெளியே கொண்டு வந்துவிட்டது. அந்தத் தேர்தல்மூலம் தமிழ் மக்கள் தங்களுக்கு வழங்கிய தண்டனையை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் போதிய அளவுக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்களா? இதில் தொடர் தோல்வி சுமந்திரனுக்குத்தான். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்குள் நடந்த தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் அவரைத் தோற்கடித்தார்கள். அந்தத் தோல்வியை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. விளைவாக ஏற்பட்ட குழப்பங்களின் முடிவில் கட்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது. இப்பொழுதும் நீதிமன்றத்தில் தான் நிற்கிறது. அதன் தலைவர் யார் என்பதில் தெளிவற்ற ஒரு நிலை. சுமந்திரன் உட்கட்சிப் பிரச்சினையை கையாண்ட விதம் தமிழ் மக்களுக்கு அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியதும் அவருடைய தோல்விக்கு ஒரு காரணம். அதாவது ஆண்டின் தொடக்கத்தில் அவருடைய கட்சி ஆட்களே அவரைத் தோற்கடித்தார்கள்.ஆண்டின் முடிவில் தமிழ்மக்கள் அவரைத் தோற்கடித்தார்கள்.இந்த தோல்விகளில் இருந்து அவர் கற்றுக் கொண்டிருக்கிறாரா ? அவருடைய நேர்காணல்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. கட்சிக்கு ஆசனங்கள் அதிகரித்து இருப்பதனை ஒரு வெற்றியாக அவர் காட்டப் பார்க்கிறார். இல்லை,அது வெற்றி அல்ல. தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த அதே அளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும் கிடைத்திருக்கின்றன. அதையும் ஒப்பிட வேண்டும். மொத்த தமிழ் தேசிய ஆசனங்கள் சுருங்கியுள்ளன. அதையும் கணக்கில் எடுக்க வேண்டும். சாணக்கியனுக்கு கிடைத்த வெற்றி அவருடைய தனிப்பட்ட உழைப்பினால் மட்டும் கிடைக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலின் விளைவாகவும்தான் அந்த வெற்றி கிடைத்தது. தமிழ்ப் பொது வேட்பாளருக்கு மட்டக்களப்பில் கிடைத்தது 36 ஆயிரம் வாக்குகள்தான். ஆனால் வடக்கில் கிடைத்தது அதுபோல நான்கு மடங்கு. ஒரு கிழக்கு வேட்பாளருக்கு வடக்கில் கிடைத்த வாக்குகள் தாயக ஒருமைப்பாட்டுக்கு கிடைத்த வாக்குகள்தான். தாயக ஒருமைப்பாட்டுக்கான ஒரு நொதிப்பை அந்த வாக்களிப்பு ஏற்படுத்தியது. அந்த நொதிப்பும் ஒரு விதத்தில் கிழக்கில் தமிழரசுக் கட்சி பெற்ற வெற்றிகளுக்குக் காரணம். எனவே சாணக்கியன் தன்னுடைய வெற்றியின் எல்லாப் பரிமாணங்களையும் சரியாக மதிப்பிட வேண்டும். தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேர்தல் முடிவுகளிலிருந்து பாடங்களைக் கற்றிருப்பதாகத் தெரியவில்லை. புலம்பெயர்ந்து வாழும் அதன் உறுப்பினர்கள் சிலர் வழங்கும் நேர்காணல்களில் அதைக் காண முடிகிறது. இம்முறை தேர்தலில் ஆயுதப் போராட்டப் பாரம்பரியத்தில் இருந்து வந்த பெரும்பாலான தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். செல்வம் அடைக்கலநாதனைத் தவிர. அவருக்கு கிடைத்த வெற்றி கூட அரும்பொட்டில் கிடைத்த ஒரு வெற்றி.மன்னாரில் அவருக்குச் சவாலான ஒரு வேட்பாளர் நிறுத்தப்படாததால் கிடைத்த வெற்றி. உள்ளூரில் சமூகம் சார்ந்து, மதம் சார்ந்து கிடைத்த வெற்றி. அவரைத் தவிர வேறு எந்த ஆயுதப் போராட்ட மரபில் வந்த தலைவரும், உறுப்பினரும் வெற்றி பெறவில்லை. அதிலிருந்து கற்றுக் கொள்வதற்குப் பதிலாக “அங்கே ஒரு சதி நடந்திருக்கிறது. ஆயுதப் போராட்ட மரபில் வந்தவர்களைத் தோற்கடிக்கும் சதி ” என்று ஒரு சூழ்ச்சிக் கோட்பாடு உருவாக்கப்படுகிறது. அது மட்டுமல்ல,பொதுக் கட்டமைப்பு தொடர்ந்து இயங்கியிருந்திருந்தால் அந்த தோல்வியைத் தவிர்த்திருக்கலாம் என்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அதில் உண்மை உண்டு. ஆனால் பொதுக் கட்டமைப்பை நோக்கி உழைத்த தமிழ் மக்கள் பொதுச்சபையானது அரசியலில் அறம், நேர்மை என்பவற்றை அதிகம் வலியுறுத்திய ஒரு சிவில் சமூகக் கூட்டமைப்பு ஆகும். கட்சிகள் தந்திரங்களைச் செய்யலாம். அரசியல்வாதிகள் தந்திரம்தான் வாழ்க்கை என்று கூறலாம். ஆனால் சிவில் சமூகங்கள் அவ்வாறு கூற முடியாது. “அரசியலில் கண்ணியமானவர்களின் தொகையை அதிகப்படுத்துவது, நேர்மையானவர்களின் தொகையை அதிகப்படுத்துவது, வாக்காளர்களுக்கு பொறுப்புக் கூறும் ஆட்களை முன்னிறுத்துவது…” என்றெல்லாம் கூறிவிட்டு, சிவில் சமூகங்கள் அதற்கு மாறாக நடக்க முடியாது. பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் பொருட்டு எழுதப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மாறாக சங்குச் சின்னத்தை சில கட்சிகள் சுவிகரித்தன. தமிழ் மக்கள் பொதுச்சபையானது அந்த சின்னத்தை பயன்படுத்த வேண்டாம் என்று ஞாயிற்றுக்கிழமை கேட்டிருந்தது. திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களுக்குள் அது தொடர்பான முடிவை எடுத்து தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருக்கலாம். அந்த இடத்தில் பொதுக் கட்டமைப்பின் புரிந்துணர்வுத் தளத்தைப் பாதுகாப்பதா? அல்லது சங்குச் சின்னத்தின் மூலம் புதிதாகத் திரட்டப்பட்ட வாக்குகளை சுவிகரிப்பதா? என்ற இரண்டு தெரிவுகளுக்கு இடையில் முடிவெடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்தது. அவர்கள் பொதுக் கட்டமைப்பை பாதுகாப்பது என்று முடிவெடுத்து இருந்திருந்தால், சங்குச் சின்னத்தை சுவிகரிக்கும் முயற்சியைக் கைவிட்டு இருந்திருப்பார்கள். எனவே பொதுக் கட்டமைப்பை பாதுகாக்க முடியாமல் போனதற்கு கட்சிகள்தான் பொறுப்பு. இப்பொழுது தோல்விக்கு யார் யார் மீதோ பழியைப் போட்டு, சூழ்ச்சிக் கோட்பாடுகளை உற்பத்தி செய்து கொண்டிருப்பது என்பது அந்தத் தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள தயாரில்லை என்பதனைத்தான் காட்டுகின்றது. இவ்வாறு தமிழ்த்தேசிய அரங்கில் உள்ள பிரதான கட்சிகளும் கூட்டுக்களும் தேர்தல் முடிவுகளில் இருந்து பொருத்தமான உண்மைகளைக் கற்றுக்கொள்ள முயற்சிக்காத ஒரு பின்னணிக்குள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தல் முடிந்த கையோடு, பகிரங்கமாக ஒரு அறிவிப்பை விடுத்திருக்கிறது. புதிய அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்குமாக இருந்தால் அதில் இனப் பிரச்சனைக்கான தீர்வாக முன்வைக்கப்படக்கூடிய தீர்வு பொதியை எதிர்கொள்வதற்கு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அந்த அழைப்பு.தமிழ் மக்கள் பேரவையின் யாப்பு முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று முன்னணி அழைத்திருக்கிறது. அந்த அழைப்பு இறந்த காலத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவாக இருந்தால், அதை வரவேற்கலாம். அந்த அழைப்பை ஏற்று சிறீதரன் இரண்டு கஜன்களையும் சந்தித்திருப்பதனை ஆர்வத்தோடு பரிசீலிக்க வேண்டும். முன்னணி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோடும் அது தொடர்பாகப் பேச விருப்பதாக ஒரு தகவல். முன்னணி மீது ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஐக்கிய முயற்சிகளுக்கு முதலில் முட்டுக்கட்டை போடுவது அவர்கள்தான். எனினும் இம்முறை அவர்களாக முன்வந்து ஓர் அழைப்பை விடுத்திருப்பதை சாதகமாகப் பரிசீலிக்கலாம். கட்சி அரசியலில் நிரந்தரமான நண்பர்களோ பகைவர்களோ கிடையாது. நிரந்தரமான நலன்கள்தான் உண்டு.தமிழ்த்தேசிய அரசியலில் தமிழ் மக்களுக்குப் பொருத்தமான,தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வை நோக்கி உழைப்பதற்காக இறந்த காலத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், நேர்மையாக உண்மையாக, யார் உழைத்தாலும் யார் அழைத்தாலும் அதனை வரவேற்க வேண்டும். https://athavannews.com/2024/1411448
  9. சட்டவிரோத மீன்பிடி: 8 இந்திய மீனவர்கள் கைது! யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் இன்று (08) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி நடவடிக்கைக்காக அவர்கள் பயன்படுத்திய இரு படகுகளும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கசந்துறை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 537 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 67 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. https://athavannews.com/2024/1411433
  10. புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் வீழ்ச்சி! இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த நவம்பர் மாதம் மொத்தமாக 530.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர். இந்த தொகை கடந்த ஒக்டோபர் மாதம் 587.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக 2024 ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது நவம்பர் மாதம் புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பலானது நவம்பர் மாதம் சரிவினை கண்டுள்ளது. மேலும், 2023 நவம்பரில் பதிவுசெய்யப்பட்ட 537.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை ஒரு சிறிய வீழ்ச்சியையும் எடுத்துக் காட்டுகிறது. இதேவேளை, 206,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த ஏல விற்பனை எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 76,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 90,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன. மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1411422
  11. நாட்டில் உப்பு உற்பத்தி வீழ்ச்சி குறித்து விசேட ஆய்வு! நாட்டில் உப்பு உற்பத்தி வீழ்ச்சி குறித்து ஆராய்ந்து வருவதாக வர்த்தகம், வணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த வருடமும் இந்த வருடமும் உப்பு உற்பத்தி குறைந்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து உடனடியாக ஆய்வு செய்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடமும் இந்த வருடமும் நாட்டில் உப்பு உற்பத்தி 40 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி தற்போது உள்நாட்டில் உற்பத்தி குறைவடைந்துள்ளதாகவும், இதற்கு தீர்வாக உப்பை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உப்பு வரத்தக நிறுவனங்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன. எவ்வாறெனினும், நாட்டில் உள்ள உப்பு இருப்பு மற்றும் நுகர்வுக்கு தேவையான அளவு ஆகியவற்றை ஆய்வு செய்த பின், இறக்குமதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களைச் சுற்றி விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களைச் சரிபார்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக சுமார் 1750 கள பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார். பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பட்டார். டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் 150க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1411426
  12. வழமையாக புங்குடுதீவு ஆட்கள்.... வியாபாரத்தில் கவனம் செலுத்தி முன்னேறுவார்கள். இவர்... களவில் இறங்கி முன்னேறியதை, பிரபா குறிப்பிடுகின்றார் என நினைக்கின்றேன் ரதி. 😂
  13. டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; எல்லை பகுதிகளில் பதற்றம்! வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பேராட்டத்தை ஆரம்பித்துள்ள இந்திய விவசாயிகள் குழு, இன்று டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனை முன்னிட்டு பஞ்சாப்-ஹரியானா எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ‘டெல்லிக்கு செல்வோம்’ (டெல்லி சலோ) என்ற போராட்டத்தை பஞ்சாப் – ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு என்ற இடத்தில் இருந்து விவசாயிகள் நவம்பர் 6 தொடங்கினர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று இருகின்றனர். டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி இந்தப் பேரணி செல்லும் என அவர்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து, விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதற்கான ஏற்பாடுகளும், தண்ணீர் பீய்ச்சும் வாகனங்களும் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன. இருப்பினும் விவசாயிகள் கைகளில் கொடிகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிக்கொண்டு பேரணியை தொடங்கினர். பொலிஸார் அமைத்திருந்த கொங்கிரீட் தடுப்பு அருகே வந்தபோது, அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 6 பேர் காயமடைந்ததால் பேரணியை சற்று நிறுத்தி இருந்தனர். இந்நிலையில் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்க உள்ளனர். இதனால் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. விவசாயிகளின் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஷம்பு எல்லையைவிட்டு வெளியே நகர முடியாத வகையில் ஆணி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஷம்பு எல்லையில் பெரும் எண்ணிக்கையில் பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. https://athavannews.com/2024/1411436
  14. டொலரை பலவீனப்படுத்தும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை – எஸ் ஜெய்சங்கர். பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க டொலரை பலவீனப்படுத்தும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை என்று கூறினார். கட்டார் தலைநகர் தோஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பில் உரையாற்றிய அவர், பிரிக்ஸ் நாணயத்தை வைத்திருக்கும் திட்டம் எங்களிடம் இல்லை என்றும், அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்த பங்காளியாகும். இந்த விவகாரத்தில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அமெரிக்க டொலருக்கு பதிலாக புதிய நாணயத்தை உருவாக்கவோ அல்லது வேறு எந்த நாணயத்தையும் திரும்பப் பெறவோ மாட்டோம் என்று பிரிக்ஸ் நாடுகளிடம் உறுதிமொழி கோரி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக தளத்தில் பதிவிட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் ஜெய்சங்கரின் இந்த பதில் வந்துள்ளது. ஜனவரி 2025 இல் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்பத் தயாராக உள்ள குடியரசுக் கட்சித் தலைவர், அமெரிக்க டொலரில் இருந்து விலகிச் செல்லும் திட்டங்களைத் தொடர்ந்தால், பிரிக்ஸ் நாடுகள் 100 சதவீத வரிக் கட்டணங்களை எதிர்கொள்வார்கள் என்றும் எச்சரித்திருந்தார். கடந்த மாதம் ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, அதன் உறுப்பு நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டொலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தியிருந்தன. பிரிக்ஸ் குழுவில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிற நாடுகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1411409
  15. பல கொலைகளுடன் தொடர்புடைய இலங்கையர் கனடாவில் கைது! யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜந்தன் சுப்ரமணியம் என்று அழைக்கப்படும் 32 வயதான பிரசன்ன நல்லலிங்கம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், சந்தேகநபரை கைது செய்ய இலங்கையின் பாதுகாப்புப் படையினர் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற இவர், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கனடாவுக்கு வந்த போது கனேடிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர‍ை மேலதிக விசாரணைகளுக்காக பிரான்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கனேடிய பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர். பிரசன்ன நல்லலிங்கம் தற்போது காவலில் வைக்கப்பட்டு, நாடு கடத்துவது தொடர்பான முடிவுக்காக காத்திருக்கிறார். அவரது விசாரணை 2025 மே மாதம் திட்டமிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1411450
  16. டமாஸ்கஸை கட்டுப்படுத்தியதாக சிரியா கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு! பஷர் அல்-அசாத்தின் 24 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததாக சிரிய கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மின்னல் தாக்குதலைத் தொடர்ந்து அரசு தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை (07) வெளியிட்ட முதல் அறிவிப்பில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர். சிரியாவின் ஆயுதமேந்திய எதிர்க்கட்சி, அதன் போராளிகள் தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியதாகவும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. டமாஸ்கஸ் “இப்போது அசாத்திடமிருந்து விடுபட்டுள்ளது” என்று கிளர்ச்சியாளர்கள் சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டனர். ஜனாதிபதி பஷர் அல்-அசாத் எங்கிருக்கிறார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. எனினும், பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு, அசாத் டமாஸ்கஸில் இருந்து டிசம்பர் 8 அன்று அதிகாலையில் விமான மூலமாக புறப்பட்டுச் சென்றதாகக் கூறியது. அந்த அறிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் சிரிய பிரதமர் மொஹமட் காசி அல்-ஜலாலி ஒரு வீடியோவில், “மக்கள் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு தலைமைக்கும் அரசாங்கம் ஒத்துழைக்க தயாராக உள்ளது” என்று கூறினார். ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) கிளர்ச்சிக் குழுவின் தலைவரான அபு மொஹமட் அல்-கோலானி, 775,000 மக்கள் வசிக்கும் ஹோம்ஸை கிளர்ச்சிப் போராளிகள் “விடுவிப்பதற்கான இறுதி தருணங்களில்” இருப்பதாக டிசம்பர் 7 ஆம் திகதி பிற்பகுதியில் கூறியிருந்தார். அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் HTS ஒரு பயங்கரவாதக் குழுவாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், அசாத் ஆட்சியின் வீழ்ச்சி ரஷ்யாவுக்கு‍ ஒரு பெரிய புவிசார் அரசியல் பின்னடைவை பிரதிநிதித்துவப்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். இது தெஹ்ரானுடன் சேர்ந்து பல ஆண்டுகால உள்நாட்டுப் போரின் மூலம் சிரிய அரசாங்கத்தை ஆதரித்துள்ளது. சிரியாவில் ரஷ்யா பல இராணுவ தளங்களைக் கொண்டுள்ளது. இதில் ஹெமிமிமில் ஒரு விமானத் தளம் மற்றும் டார்டஸில் உள்ள மூலோபாய கடற்படை வசதிகளும் அடங்கும். இவை ஆப்பிரிக்காவில் மொஸ்கோவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் பயன்படுத்தப்படுகின்றன. https://athavannews.com/2024/1411444
  17. சிரிய அதிபர் அசாத், சிரியாவை… விட்டு வெளியேறியதுடன் சிரியாவில் அமைதி திரும்புமா. அல்லது சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சிக்காரர்களின் மூலம், “தலிபான்கள்” போல கெடுபிடிகள் தொடருமா?
  18. உப்புக்கு தட்டுப்பாடு ? பண்டிகைக்காலம் நெருங்குகின்ற நிலையிலாவது அரசாங்கம் அத்தியவசிய பொருட்களின் விலையை குறைத்து, பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். இந்நிலையில், எதிர்வரும் பண்டிகை காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இதனால் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் எச்சரித்துள்னர். எனவே இதற்கு பரிகாரமாக இந்தியாவில் இருந்து உப்பை விரைவில் இறக்குமதி செய்ய வேண்டும் என தொழிலதிபர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மழையால் உப்பு உற்பத்தி இல்லை, மழையால் விளைந்த உப்பை அறுவடை செய்ய முடியாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றனர். இதற்கிடையில், உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், அதிக அளவு உப்பு கரைந்து நாசமாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 05 கிராம் உப்பை ஒருவர் சாப்பிட வேண்டும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, சிற்றுண்டி மற்றும் உலர் உணவு உற்பத்தியிலும் உப்பு பயன்படுத்தப்படுகிறது, விவசாய நடவடிக்கைகளிலும் உப்பைப் பயன்படுத்துகின்றனர். அதன்படி, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 38,325 மெட்ரிக் டன் உப்பும், 46,000 மெட்ரிக் டன் உப்பும் தேவைப்படுகிறது. அம்பாந்தோட்டை, புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மற்றும் அரச சுரங்கங்களில் மட்டுமே இந்த நாட்டில் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது என்பது சுட்டிக்காட்டத்தக்கது. https://athavannews.com/2024/1411376
  19. நீங்கள் பென்சன் எடுத்து விட்டீர்கள்தானே…. முன்னுக்குப் போய், “நோட்டம்” பார்த்து வையுங்கள். 😁 நாங்கள் பின்னாலை வாறம். 😂 🤣
  20. “Made in Germany“ என்றாலே… இரும்பு சாமான்களுக்கு, உலகம் எங்கும் மதிப்புத்தானே அண்ணை. 🤣
  21. அப்ப… யாழ். களத்திலை இருந்து ஒரு கூட்டமே வியட்னாம் போகப் போகுது போலை இருக்கு. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.