Everything posted by தமிழ் சிறி
-
யாழுக்கு குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை
யாழுக்கு குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை. குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான சேவையினை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது. இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் சேவையினை வழங்கி வந்த கடுகதி ரயில் , தற்போதைய பாடசாலை விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் 30ஆம் திகதி வரை தனது சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட புகையிரதமானது 11:15 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடைந்து பின்னர் காங்கேசன் துறையிலிருந்து மதியம் 12.34 க்கு தனது சேவையை ஆரம்பிக்கும் புகையிரதம் இரவு 7.20 மணிக்கு மீண்டும் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து பயணிக்கும் புகையிரதம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் தனது பயணத்தினை நிறைவு செய்கிறது. https://athavannews.com/2024/1411341
-
அதிகரிக்கவுள்ள மழை வீழ்ச்சி
அதிகரிக்கவுள்ள மழை வீழ்ச்சி. கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். https://athavannews.com/2024/1411332
-
தரமற்ற மருந்துகள் தொடர்பாக வெளியான உண்மை
தரமற்ற மருந்துகள் தொடர்பாக வெளியான உண்மை. தரமற்ற மருந்துகள் தொடர்பாக நேற்று முன்தினம் செய்தித்தாள்களில் வெளியான செய்தி குறித்து எதிர்க்கட்சியின் பிரதான இணைப்பாளர் கயந்த கருணாதிலக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து குறிப்பிட்ட அமைச்சர், ” தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகள்தான் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஊடாக விநியோகிக்கப்படுகின்றன. குறித்த அதிகார சபையில் வினைத்திறனற்ற நிலை காணப்படுகின்றது. தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவுகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவ்வாறு கூறும் விதமாக தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பின் ஊடாக செல்லவில்லை. தரத்தின் தன்மை தொடர்பாக பிரச்சினை இருப்பின் அது அறிவிக்கப்படும். இந்நிலையில், இது தொடர்பாக எதிர்காலத்தில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். https://athavannews.com/2024/1411338
-
வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள் – வளரும் புது கலாசாரம்
வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள் – வளரும் புது கலாசாரம். பல ஆண்டுகளாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் குறிப்பிட்ட வயதிற்குள் எல்லாம் நடக்க வேண்டும், வயது தாண்டி போக கூடாது என்று சொல்லி வயதிற்கு ஏற்றவாறு சடங்கு, சுப நிகழ்ச்சிகள் சமூகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருமண வயதை எட்டிய வியட்நாம் பெண்கள் திருமணத்தின் அழுத்தத்தை சமாளிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இளம்பெண்கள் தங்களுக்கு பிடித்த காதலனை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் புதிய நடைமுறை தான் தற்போது வியட்நாமில் நடைபெற்று வருகிறது. திருமணம் செய்துகொள்ளும்படி பெற்றோர்கள் தொந்தரவு செய்வதால் தற்காலிகமாக அவர்களை சமாதானம் செய்வதற்காக பெரும்பாலான பெண்கள் இந்த வழியை பின்பற்ற தொடங்கி உள்ளனர். வடக்கு வியட்நாமை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவருக்கு காதலனை வீட்டிற்கு அழைத்து வருமாறு பெற்றோர் வற்புறுத்தியதன் காரணமாக வாடகைக்கு காதலனை அழைத்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்தே இந்த நடைமுறை அறிமுகமாகி உள்ளது. அந்தவகையில், வாடகைக்கு சென்ற 25 வயதான நபர் கூறும்போது, ஒரு வருடத்திற்கும் மேலாக “போலி காதலனாக” வேலை செய்து வருகிறேன். தனது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக ஜிம்மிற்குச் செல்வது, சமைக்கக் கற்றுக்கொள்வது மற்றும் பாடும் திறன் மற்றும் உரையாடல் திறன்களை மேம்படுத்துவது, தோற்றம் மற்றும் திறன்களை வளர்த்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1411353
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
எங்கள் இடத்தில் இருந்து…. 280 கிலோ மீற்றர் தூரம்தான் München. உங்கள் அண்ணர்… @குமாரசாமி யின் இடத்தில் இருந்து 650 கிலோ மீற்றர். 😂 ஜேர்மனிக்கு முதன் முறையாக வந்தீர்களா? உங்கள் முதல் பார்வையில்… ஜேர்மனியை பற்றி மனதில் தோன்றிய அபிப்பிராயத்தை அறிய ஆவல் ரதி.
-
சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் நாளுக்குநாள் குவியும் தகவல்கள்; வடக்கு ஆளுநர் எடுத்த நடவடிக்கை
எனக்குத் தெரிய…. கஸ்தூரியார் வீதியும், ஸ்ரான்லி வீதியும் சந்திக்கும் மூலையில் (லிடோ தியேட்டருக்கு எதிரில்) பெரிய குளம் ஒன்று இருந்தது. அதில் பல தொழிலாளர்கள் உடுப்புகளை தோய்த்து, அங்கேயே உள்ள விசாலமான இடத்தில் தோய்த்த உடைகளை, உலர்த்தி விட்டு எடுத்துச் செல்வார்கள். 1970 கள் இருக்கலாம்…. அவ்விடத்தில் முதன் முதலாக “பூம்புகார்” என்ற ஒரு குளிர்பான கடை வந்தது. யாழ். மாநகர சபை எப்படி அனுமதி கொடுத்தது என்று தெரியவில்லை. எதிரே… ஹோட்டேல் பரடைஸ் என்ற கடையும், ஒரு தளபாடக் கடையும், சந்தியில்…. இராஜசூரியரின் பெற்றோல் நிலையமும் இருந்தது.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
எப்ப… எந்த இடத்துக்கு வந்தீர்கள் என்று விபரமாக சொல்லுங்கள் ரதி. 😁
-
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
பண்டாரநாயக்காவுக்கு… சிங்களம் எழுத, வாசிக்கத் தெரியாது என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும் குமாரசாமி அண்ணை. ஆனால்… அனுரா பண்டாரநாயக்கா, அவ்வளவு புத்திசாலியான ஆள் இல்லை என்று அரசல் புரசலாக கேள்விப் பட்டுள்ளேன். அப்படி இருந்தும் வாரிசு அரசியல் மூலம் பல முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றார். சந்திரிக்காவின் இடத்திற்கு… அனுரா பண்டாரநாயக்காவை நியமிப்பதே ஶ்ரீமாவோவின் விருப்பமாக இருந்ததாக அறிகின்றேன். இதனைப் பற்றி @goshan_che க்கு கூடுதலாக தெரியலாம். 🙂
-
அரச கட்டடங்களாக மாறும் வாடகை நிறுவனங்கள்
விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில இடங்களிலேயே… கடையுடன் சேர்ந்த வீட்டில் வசிக்கின்றார்கள். எல்லா இடங்களிலும் அல்ல. வீட்டுடன் இருக்கும் கடைகளில்… ஞாயிற்றுக் கிழமைகளிலும் பின் கதவால் போய் பொருட்கள் வாங்கலாம். 🤣 ”கட்டடங்களாக” - ஆதவன் நியூஸ். 😂
-
நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி யாழில் நிதி மோசடி
அனுரவின் அடியில்... அம்மியே காற்றில் பறக்குது வளவன். 😂 👇 இவர் எல்லாம்... எம்மாத்திரம். ஜுஜுப்பி. 🤣
-
நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி யாழில் நிதி மோசடி
கடந்த காலத்தில்… அவர்களுடன் சேர்ந்து, இவரும் “கல்லா கட்டுவதில்” மும்முரமாக இருந்திருப்பார். 😂 இப்போ… “ரைம் பாசிங்” அரசியல் செய்கிறார். 🤣
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- அரச கட்டடங்களாக மாறும் வாடகை நிறுவனங்கள்
அரச கட்டடங்களாக மாறும் வாடகை நிறுவனங்கள். அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டடங்களுக்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார். இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை இயங்கும் அலுவலகத்தின் மாதாந்த வாடகை ஐம்பது இலட்சம் எனவும், இதற்கு மேலதிகமாக வர்த்தக அமைச்சின் மாத வாடகை 65 இலட்சம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 24 பேரும் விலையுயர்ந்த வீடுகளுக்குச் செல்லாமல் மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் போன்றவற்றைச் சேமித்துள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். https://athavannews.com/2024/1411299- டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
இனி மெண்டிஸ் குடிக்க ஏலாது போலை இருக்கே. 😲 இங்குள்ள, தமிழ் கடைகளில் உள்ள மெண்டிஸ் போத்திலை எல்லாம், வாங்கி... பதுக்கி வைக்க வேணும். 😂 🤣- இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா கன்னியுரை
எல்லாப் புகழும்... சிங்களம் மட்டுமே என்ற சட்டத்தை கொண்டு வந்த பண்டாரநாயக்காவுக்கே. 😂- பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
- கருத்து படங்கள்
- இன்று முதல் ஒருவருக்கு 5 கிலோ அரிசி.
இன்று முதல் ஒருவருக்கு 5 கிலோ அரிசி. இன்று முதல் வெளி மாகாணங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாட்டு அரிசி மற்றும் தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும். கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்களுக்கு நேற்று அரிசி மற்றும் தேங்காய் விநியோகம் செய்யப்பட்டதாக அதன் தலைவர் சமித்த பெரேரா தெரிவித்தார். இதன்படி, ஒரு வாடிக்கையாளருக்கு 05 கிலோ நாட்டு அரிசி மற்றும் 03 தேங்காய்களை ஒரே நேரத்தில் வழங்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. https://athavannews.com/2024/1411285- வங்கதேச இந்து சமூதாயத்தின் பாதுகாப்புக்காக அமைதி ஆர்ப்பாட்டம்!
வங்கதேச இந்து சமூதாயத்தின் பாதுகாப்புக்காக அமைதி ஆர்ப்பாட்டம்! உலக இந்து அமைப்புகள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டமொன்று இன்றைய தினம் கொழும்பு 7 பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் முன்பாக நடைபெற்றது. வங்கதேசத்தில் ஒடுக்கப்படும் இந்து சிறுபான்மை சமூகத்தின் துயர நிலையை வெளிக்கொண்டு வரும் விதமாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இவ்விடயத்தில் சர்வதேச தலையீட்டின் அவசியம் குறித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் வலியுறுத்தப்பட்டது. மேலும் இவ் ஆர்ப்பாட்டத்தின் போது, வங்கதேச இந்து சமுதாயத்தின் பாதுகாப்பு, சமத்துவம், மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தில் முறைப்பாட்டு கடிதம் ஒன்றும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1411215- ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் மட்டுப்படுத்துவதற்கு தயாரில்லை-ஜனாதிபதி!
ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் மட்டுப்படுத்துவதற்கு தயாரில்லை-ஜனாதிபதி! மிகச்சிறந்த அரசொன்றைக் கட்டியெழுப்பி அனைத்து பிரஜைகளுக்கும் சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்தும் பணியில் ஊடகங்களை வெளிநபர்களாக அன்றி பங்குதாரர்களாக தான் கருதுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துளார். இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார். சிறந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், அதற்காகவே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துள்ளதாகவும், மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இணையுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பில் எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கேள்விக்குட்படுத்தவோ விமர்சிக்கவோ ஊடகங்களுக்கு எந்த தடையும் இல்லையென்றாலும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான பொய்யான தகவல்களை வெளியிட வேண்டாம் என ஊடக நிறுவன பிரதானிகளிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கோரிக்கை விடுத்தார். அத்துடன் பல தசாப்த காலங்கள் நாடு யுத்தத்திற்கு முகம் கொடுத்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இனவாதத்தை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை எனவும் தெரிவித்தார். நாட்டில் தற்போது பரவலாகப் பேசப்படும் பல தலைப்புகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கிய ஜனாதிபதி, தற்போது பாரிய பிரச்சினையாக உள்ள வறுமையை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் மற்றும் கிளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டம் குறித்தும் ஊடகப் பிரதானிகளுக்கு விளக்கமளித்தார். இதில் இலங்கை ஒலிபரப்பாளர் மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிஊகள், பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள், பொது முகாமையாளர்கள் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1411257- நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
நாலு பக்கமும் கடலால் சூழப்பட்ட நாடுதான், "ரின் மீனையும்" இறக்குமதி செய்கின்றது. 😂- தென்கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் திடீர் பிரகடனம்: காரணம் என்ன ?
தென் கொரிய ஜனாதிபதிக்கு எதிராக “தேசத்துரோக” விசாரணை! தென் கொரியாவில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தும் முயற்சியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு எதிரான “தேசத்துரோக” குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை அந்நாட்டு பொலிஸார் வியாழனன்று (05) ஆரம்பித்தனர். தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின் தகவல்களுக்கு அமைவாக, குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபியிடம் விசாரணை மேற்கொள்ள தேசிய பொலிஸார் முகவர் நிலையத்தில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இராஜினாமா செய்த பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன், இராணுவ தளபதி ஜெனரல் பார்க் அன்-சு மற்றும் உள்துறை அமைச்சர் லீ சாங்-மின் ஆகியோர் மீதும் தேசத்துரோகம் மற்றும் பிற தொடர்புடைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென்கொரியாவின் தேசிய சட்டமன்றம் ஜனாதிபதி யூன் சுக் யோலின் (Yoon Suk Yeol) இராணுவச் சட்ட மூலத்தை தீர்மானமாக இரத்து செய்ததை அடுத்து, நாடு செவ்வாய்க்கிழமை (03) இரவு ஒரு வியத்தகு அரசியல் எழுச்சியைக் கண்டது. நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தென் கொரியாவின் முதல் இராணுவச் சட்டத்தை திணிக்க யூனின் அதிர்ச்சி முயற்சி, அதன் நவீன ஜனநாயக வரலாற்றில் நாட்டை அதன் ஆழ்ந்த கொந்தளிப்பில் ஆழ்த்தியது. இது நாடு முழுவதும் பரவலான கோபம் மற்றும் எதிர்ப்புக்களை தூண்டியதுடன், ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதாரத்தில் பல தசாப்தங்களில் மிகப்பெரிய அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்தியது. இதன் பின்னணியில், யூனுக்கு எதிரான முறைப்பாடுகள் அரசுத் தரப்பிலும் உயர் அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது தோல்வியுற்ற இராணுவச் சட்ட நடவடிக்கையை அடுத்து, ஜனநாயகக் கட்சியின் தலைமையிலான ஆறு எதிர்க்கட்சிகள் யூன் மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் ஆகியோருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானத்தை தாக்கல் செய்தனர். பாதுகாப்பு அமைச்சர் கிம் இராஜினாமா செய்ததையடுத்து அவர் தனது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், யூனுக்கு எதிரான பதவி நீக்க வாக்கெடுப்பு சனிக்கிழமை (07) நடைபெற உள்ளது. https://athavannews.com/2024/1411223- மாவீரர் நாள் குறித்து பொய் தகவல்களை பரப்பிய மொட்டு கட்சியின் முக்கியஸ்தர் கைது
உண்மைதான். அனுர அரசு... ஆரம்பத்திலேயே, அதிரடி நடவடிக்கை மூலம் இவரை கைது செய்து, இனி வரும் காலங்களில்... தேவையில்லாத வதந்திகளை சிங்கள மக்கள் மத்தியில் பரப்புவர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுத்துள்ளார்கள். காலம் காலமாக... இனவாதத்தை வைத்தே... அரசியல் நடத்தியவர்களை கட்டுப்படுத்த இப்படியான நடவடிக்கை மூலம்தான் கடிவாளம் போட முடியும்.- கருத்து படங்கள்
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.