Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. "மூ.தேவி விலாஸ்" இட்லி கடை. எண் சாத்திரம் பார்த்து, பெயர் வைத்திருப்பாரோ. 😂
  2. கைத்தொலைபேசி வந்த பின் தான்... இந்த மாற்றம், நிலாமதி அக்கா. சென்ற தலைமுறையின்... பாட்டி - பேரன் / பேத்தி உறவு மிகவும் உணர்வு பூர்வமானது. ❤️
  3. காற்றில் பறக்கும்... கராத்தே பிக்கு.
  4. மஹிந்தவின் 116 பாதுகாவலர்கள் நீக்கம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கொள்கை மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு நேற்று (10) வழங்கிய கடிதம் மூலம் பிரதி பொலிஸ் மா அதிபர் (மனித வள முகாமையாளர்) அறிவித்துள்ளதாக சட்டத்தரணி ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அந்தப் பாதுகாப்புப் பிரிவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்காக மொத்தமாக 60 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, அதிகபட்சமாக நாளொன்றுக்கு 20 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1411834
  5. சபாநாயகர் பதவி... சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். அவராகவே... பதவி விலகினால், கௌரவமாக இருக்கும். "ஜவ்வு" மாதிரி இழுத்துக் கொண்டு இருந்தால்.. அனுர அரசு இந்தப் பிரச்சினையிலேயே, மல்லுக்கட்ட நேரம் சரியாக இருக்கும். ஏற்கெனவே... அரிசி, தேங்காய், உணவுப் பொருட்கள் என்று... விலைவாசி உயர்ந்து மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. போதாக்குறைக்கு... இதுவும் சேர்ந்தால், ரணில் பரவாயில்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விடுவார்கள்.
  6. சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் ஜப்பானிய பல்கலைகழகம் வெளியிட்டுள்ள தகவல். சபாநாயகர் அசோக சபுமல் ரன்வெல (Ashoka ranwala), ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்வில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அசோக ரன்வெல, ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளது. இந்நிலையில், அசோக சபுமல் ரன்வால என்னும் நபர் தமது பல்கலைகழகத்தில் கல்வி கற்கவில்லை என அப்பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் 22ஆவது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சபாநாயகர் அசோக ரன்வல்ல தனது கலாநிதி பட்டம் குறித்து வெளிவரும் தகவல்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிக்கை ஒன்றினை வெளியிடுவார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். இவற்றிற்கு மத்தியில் ஜப்பானிய பல்கலைக்கழகம் வழங்கிய இந்த தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/speaker-ashoka-sapumal-ranwala-s-doctorate-issue-1733840862?itm_source=parsely-api
  7. சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்! சபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சையான விவாதம் உருவாகியுள்ளது. அவர் உண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா என்பதை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இந்த சந்தேகத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. சபாநாயகர் அசோக ரன்வல நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே, அவரைப் பற்றிய அறிமுகங்களில் கலாநிதி என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டது. அவர் சபாநாயகரான பின்னரும், இலங்கை நாடாளுமன்ற இணையதளத்தில் அவரது பெயர் கலாநிதி அசோக ரன்வல என்று பதிவு செய்யப்பட்டது. எனினும், அவருக்கு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட கலாநிதி பட்டம் வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட பல தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால், அவரது கலாநிதி பட்டம் குறித்து விவாதம் உருவானது. இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பதாக சபாநாயகர் அசோக ரன்வல குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1411726
  8. கொழும்பு துறைமுக திட்டத்திற்கான அமெரிக்க நிறுவன உதவியை நிராகரித்த அதானி போர்ட்ஸ்! இலங்கை துறைமுகத் திட்டத்திற்கு நிதியளிக்க தனது சொந்த வளங்களைப் பயன்படுத்துவதாகவும், அமெரிக்க நிதியுதவியைப் பெறப் போவதில்லை என்றும் அதானி துறைமுகம் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் (APSEZ) நிறுவனம் செவ்வாயன்று (10) அறிவித்துள்ளது. அதேநேரம், இலங்கையில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையம் (CWIT) திட்டம் சிறப்பாக முன்னேறி வருவதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயல்படத் தொடங்கும் என்றும் நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம் என்று அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டமானது நிறுவனத்தின் உள் திரட்டல்கள் மற்றும் மூலதன மேலாண்மைத் திட்டத்தின் மூலம் நிதியளிக்கப்படும். யுஎஸ் இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (DFC) யிடமிருந்து நிதியுதவிக்கான எங்கள் கோரிக்கையை நாங்கள் திரும்பப் பெற்றுள்ளோம் என்றும் நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியது. கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் DFC நிறுவனம், இலங்கையில் கொழும்பு துறைமுகத்தில் CWIT இன் அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் இயக்கத்திற்கு உதவியாக 553 மில்லியன் டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டது. அதானி போர்ட்ஸ், இலங்கை கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையம் அபிவிருத்தி செய்யப்படுகிறது. இத் திட்டம் 2021 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இது இலங்கையின் மிகப்பெரிய மற்றும் ஆழமான கொள்கலன் முனையமாக இருக்கும் என்பதுடன் 1,400 மீட்டர் நீளம் மற்றும் 20 மீட்டர் ஆழம் கொண்டதாக அமையும். கொழும்பு துறைமுகம் இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான துறைமுகமாகும், மேலும் இது 2021 முதல் 90 சதவீதத்திற்கும் அதிகமான சுறுசுறுப்பான பயன்பாட்டில் இயங்கி வருகிறது. புதிய முனையம் வங்காள விரிகுடாவில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களை பூர்த்தி செய்யும், முக்கிய கப்பல் வழித்தடங்களில் கப்பல்கள் இலங்கையின் பிரதான துறைமுகத்தை பயன்படுத்தி கொள்ளும். இந்த புதிய முனையத்தின் ஆண்டு பொருட்கள் கையாளும் திறன் 3.2 மில்லியன் டொலரை தாண்ட வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1411743
  9. தடுப்புக் காவலில் தற்கொலைக்கு முயன்ற தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்! இராணுவச் சட்ட முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தென் கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் (Kim Yong-Hyun) புதன்கிழமை தற்கொலைக்கு முயன்றார். அதன்படி, தென் கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தடுப்புக் காவலில் தற்கொலை செய்து கொள்ள தனது உள்ளாடைகளை பயன்படுத்தினார் என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி யூன் சுக் யோல் இராணுவச் சட்டத்தை அமல்படுத்திய பின்னர், தேசத்துரோக குற்றச்சாட்டை விசாரித்து வந்த தென் கொரிய வழக்கறிஞர்களால், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரவை அண்மையில் கைது செய்தனர். தனது பதவியை இராஜினாமா செய்த கிம் யோங்-ஹியூன், தற்காலிக இராணுவ சட்டத்தை அமல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார் என்று குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த வாரம் நாடு தழுவிய கொந்தளிப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி யூன் சுக் யோலின் குறுகிய கால இராணுவச் சட்டப் பிரகடனத்தைத் தொடர்ந்து தென் கொரியாவில் உள்ள சிறப்புப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதி அலுவலகத்தில் சோதனை நடத்தியது. சிறப்பு புலனாய்வுக் குழு ஜனாதிபதி அலுவலகம், தேசிய பொலிஸ் முகவர் நிலையம், சியோல் பெருநகர பொலிஸ் முகவர் நிலையம், மற்றும் தேசிய சட்டமன்ற பாதுகாப்பு சேவை என்பவற்றில் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1411753
  10. சிரியாவின் கடற்படை, இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் சரமாரியான தாக்குதல்! ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அந்நாட்டு இராணுவம் விட்டுச் சென்ற ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த இரு நாட்களில் நூற்றுக்கணக்கான சிரியாவின் கடற்படை மற்றும் பிற இராணுவ சொத்துக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலிய ஏவுகணைக் கப்பல்கள் அசாத்தின் படைகளுக்குச் சொந்தமான கடற்படைக் கப்பல்களை அழித்தன, அவை 120 மைல்கள் வரை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் திங்கட்கிழமை ஒரு அறிக்கையில், லதாகியா மற்றும் எல் பெய்டா விரிகுடாவின் துறைமுகப் பகுதியில் இந்த தாக்குதல்கள் நடத்தியதாக கூறியது. ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களின் கைகளில் கிடைத்தால், அவற்றை இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்ற காரணத்தினால், அவை கிளர்ச்சியாளர்களின் கைகளில் கிடைப்பதை தடுக்கும் நோக்கில் இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளது. லதாகியா துறைமுகத்தில் குண்டுவெடிப்புகளைக் காட்டும் வீடியோக்களை பிபிசி சரிபார்த்துள்ளது, படக்காட்சிகள் கப்பல்கள் மற்றும் துறைமுகத்தின் சில பகுதிகளுக்கு விரிவான சேதத்தை எற்படுத்துவதை வெளிக்காட்டுகின்றன. சிரியா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளுக்கு இடையே உள்ள இராணுவமற்ற பாதுகாப்பு மண்டலத்திற்கு தரைப்படைகளை நகர்த்தும்போது, சிரியா முழுவதும் உள்ள இலக்குகள் மீது அதன் போர் விமானங்கள் 350 க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை கூறியுள்ளது. முன்னதாக, சிரிய அரசாங்கம் கிளர்ச்சியாளர்களால் ஞாயிற்றுக்கிழமை தூக்கியெறியப்பட்டதிலிருந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படை 310 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு (SOHR) கூறியது. இதனிடையே, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒரு அறிக்கையில், “இஸ்ரேல் அரசை அச்சுறுத்தும் மூலோபாய திறன்களை அழிப்பதை” இஸ்ரேலிய படையினரின் நோக்கம். சிரிய கடற்படையை அழிக்கும் நடவடிக்கை “பெரும் வெற்றி” பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். சிரிய தலைநகர் டமாஸ்கஸ், ஹோம்ஸ், டார்டஸ் மற்றும் பால்மைராவில் உள்ள விமானநிலையங்கள், இராணுவ வாகனங்கள், விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் ஆயுத தயாரிப்பு தளங்கள் உட்பட – பரந்த அளவிலான இலக்குகள் தாக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிபய பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது. தாக்குதல்கள் ஆயுதக் கிடங்குகள், வெடிமருந்துக் கிடங்குகள் மற்றும் கடல் ஏவுகணைகளையும் குறிவைத்து அரங்கேற்றப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1411736
  11. சிவாஜிலிங்கம் அவர்கள், விரைவில் நலம்பெற பிரார்த்திக்கின்றோம்.
  12. நீதியை நிலைநாட்டுவதைத் தாமதப்படுத்துவதும் நீதியை நிலைநாட்டுவதாக அமையாது! -ஜனாதிபதி அநுர.- எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால், அந்த அதிகாரம் பயனற்றதாகிவிடும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற “2024 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின தேசிய நிகழ்வில்” ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் “தூய்மையான எதிர்காலத்திற்காக இளைஞர்களை ஒன்றிணைப்போம்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது. இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு போதுமான சட்டங்களும் நிறுவனங்களும் இருந்த போதும் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதற்கு இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தமது மனசாட்சியிடம் கேட்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் ஊழல் மற்றும் இலஞ்சம் என்பன சமூக அவலமாக மாறியுள்ளது. 2013 சர்வதேச சுட்டெண்ணில் 79 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2023 ஆம் ஆண்டளவில் 115 வது இடத்தைப் பிடித்துள்ளது. எனவே சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பினார். வருடா வருடம் ஊழல் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் அடுத்த வருடம் அதனை குறைக்க முடியாவிட்டால் சர்வதேச தின கொண்டாட்டங்களை நடாத்துவதில் எவ்வித பயனும் இல்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். 2021ஆம் ஆண்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 69 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதுடன் 40 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. 2022 இல் 89 வழக்குகளை தாக்கல் செய்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 45 வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது. இந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டமைக்கான காரணத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் விசாரணை அதிகாரிகள் வழக்குகளில் சாட்சிகளாகாதது ஏன் என்பதற்கான காரணங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒரு வருடத்தில் இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு கிராம உத்தியோகஸ்தர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் ஆகியோர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தண்டிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் சட்டம் சிலந்தி வலையைப் போன்று செயற்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.மேலும் அந்த வலையில் சிறிய விலங்குகள் சிக்குகின்றன. பெரிய விலங்குகள் சிலந்தி வலையை சேதமாக்கி தப்பிச் செல்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இதேவேளை எமது நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரச கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறு செய்யாமல் ஆரோக்கியமான நாடொன்றை உருவாக்க முடியாது எனவும் தெரிவித்தார். சட்டத்தை அமுல்படுத்தும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நீதியை நிலைநாட்டுவதைத் தாமதப்படுத்துவதும் நீதியை நிலைநாட்டுவதாக அமையாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எனவே இலங்கையை குறைந்த இலஞ்சம் பெறும் நாடாக மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இதன் மூலம் பிரஜைகளின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் சர்வதேச அபிவிருத்தித் திட்டத்தின்(UNDP)ஜுரே (JURE) திட்டத்தின் மூலம் ஏற்கனவே 1,000க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 15 அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமனம் வழங்கப்பட்டது. இதில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் ஜீ.பி. சபுதந்திரி,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி டபிள்யூ. எம். என்.பி. இத்தவெல, மேல் நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1411577
  13. கைதான குற்றப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் இன்று நீதிமன்றில் ஆஜர்! குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றவியல் விசாரணைப் முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பொலிஸ் களப்படை தலைமையகத்தில் வைத்து அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறையில் அடைத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, கைது செய்யப்பட்ட நெவில் சில்வா இன்று (10) இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். https://athavannews.com/2024/1411590
  14. வைத்தியர்களின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை! வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் அலோக பண்டார குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதன்படி, தற்போது 62 வயதாகும் வைத்தியர் ஒருவரின் ஓய்வு வயது மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்படும். https://athavannews.com/2024/1411606
  15. ரஸ்யாவின் முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு அமெரிக்கா பயணத்தடை! ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவிற்கும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது . குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதித்துள்ளது. ஊழலிற்கு எதிரான சர்வதேச தினம் மற்றும் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு உலகில் ஊழல் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேன பிரதமநிறைவேற்றதிகாரியாக பணியாற்றியவேளை இலங்கை ,எயர்பஸ்ஸினை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதை உறுதி செய்வதற்காக இவர் இலஞ்சம் பெற்றார் என அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்து அவரை குறிப்பிட்ட பட்டியலில் இணைத்துள்ளதுடன் இவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டு அவர்களிற்கு எதிராகவும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இலங்கைக்கு மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது உதயங்க வீரதுங்க ஊழல் நடவடிக்கையை திட்டமிட்டு முன்னெடுத்து அதனால் நன்மையடைந்தார் என்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிற்கும் பயணத்தடை விதித்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2024/1411609
  16. வாகன இறக்குமதி: தவறான விளம்பரங்களுக்கு எதிராக அரசாங்கம் எச்சரிக்கை! இலங்கைக்கு எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் விரைவில் கிடைக்கும் என விளம்பரங்களை வெளியிடும் முகவர் நிலையங்களுக்கு அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ பதிலளித்துள்ளார். அதன்படி, அனைத்து வகையான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இதுவரையில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், கடந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எமது பிரதி நிதியமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கலந்து கொண்டு வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானத்தை அறிவித்தார். அதன் பிரகாரம் சில கட்டுப்பாடுகளுடன் வாகன இறக்குமதியை அனுமதிக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. எனவே, எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிப்பதாக விளம்பரங்களை வெளியிட்டு மக்களை குழப்ப வேண்டாம். எதிர்காலத்தில் நாட்டின் கையிருப்பினை கருததிற் கொண்டு வாகன இறக்குமதி குறித்து தீர்மானம் எடுக்கப்படும். பொருளாதாரத்தில் தாக்கத்தை செலுத்தும் எந்த முடிவினையும் நாங்கள் எடுப்பதற்கு தயார் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1411644
  17. உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலை தொடர்பான முக்கிய அறிவித்தல்! உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தலொன்று நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை 215 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு கிலோகிராம் உள்நாட்டு அரிசியின் மொத்த விலை 225 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கிலோகிராம் உள்நாட்டு கீரிசம்பாவின் மொத்த விலை 255 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1411635
  18. முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்! சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இப்போராட்டத்தில் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1411681

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.