Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. பிரதமருக்கென ஒதுக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவு மீண்டும் பொதுச் சேவைக்கு கையளிப்பு! பிரதமர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த வைத்திய பிரிவினை கலைத்து அதில் சேவை செய்த வைத்திய அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் உட்பட அங்கிருந்த சுகாதார உபகரணங்கள், ஒளடதங்கள், இரண்டு அம்புலன்ஸ் வண்டிகள் என்பவற்றை மீண்டும் சுகாதார அமைச்சிற்கு பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி தலைமையில் இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது அத்தியாவசியமற்ற செலவுகளை குறைப்பதற்கு அரசு எடுத்துள்ள கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கமைய இந்த பிரிவிடம் காணப்பட்ட மனிதவள மற்றும் பௌதீக வளங்கள் சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவை பொதுமக்களின் சுகாதார தேவைகளுக்கென பயன்படுத்தப்படவுள்ளன.. இதன்போது பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி அவர்களினால் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபாலவிடம் அதற்கான ஆவணங்கள் மற்றும் திறப்புகள் இதன்போது கையளிக்கப்பட்டிருந்தன. https://athavannews.com/2024/1407406
  2. வைத்தியர் மொஹமட் ஷாபி விடுதலை-குருநாகல் நீதிமன்றம் உத்தரவு! குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபியை விடுதலை செய்து குருநாகல் பிரதான நீதவான் பந்துல குணரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார். மருத்துவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதைக் கருத்தில் கொண்டு, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதவான் அறிவித்துள்ளார் இது தொடர்பாக நடத்தப்பட்டமருத்துவ அறிக்கைகளின்படி, குற்றம் சாட்டப்பட்ட மருத்துவரின் அறுவை சிகிச்சையால் குறித்த பெண்கள் மலட்டுத்தன்மைக்கு ஆளானார்கள் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என நீதவான் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407419
  3. காலி முகத்திடல் தொடர்பில் விசேட தீர்மானம்! காலி முகத்திடலை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு கீழுள்ள இலங்கை துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகள் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ மற்றும் நிர்வாகத்தின் கீழ் உள்ள காலிமுகத்திடல் மைதானத்தை மதம் சார்ந்த நோக்கங்கள் தவிர, பிற நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதி வழங்கக் கூடாது என 17-04-2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டது. காலி முகத்திடல் மைதானத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புக்கு மாதாந்தம் சுமார் 2.5 – 3.0 மில்லியன் ரூபா செலவாகும். எனவே 2023 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததைப் போன்று உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக உலாவுவதற்கு மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும், அந்தத் தொகையை ஈடுகட்டுவதற்கும் சிறந்த வாய்ப்பாக இது அமையும். விழாக்கள், இசைக் கச்சேரிகள் மற்றும் மக்கள் சுதந்திரமாக பங்கேற்க அனுமதிக்கும் பிற கொண்டாட்டங்களுக்கு பொருத்தமான அளவுகோல்களுக்கு உட்பட்டு காலி முகத்திடல் மைதானத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கவுள்ளோம். இதன்படி, “தூய்மையான மற்றும் பசுமையான காலி முகத்திடல்” என்ற கருத்தின் அடிப்படையில் காலி முகத்திடலின் நிர்வாகத்தை மிகவும் ஒழுங்காகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. https://athavannews.com/2024/1407415
  4. சுமந்திரனே.. ஒரு சுத்துமாத்துக்காரன். இவரின் வாயிலிருந்து வருவது... பொய்யும்,பிரட்டும், உருட்டும் தான். இந்த வீடியோவை... மினக்கெட்டு கேட்பது நேர விரயம். வருகின்ற தேர்தலுடன்... மக்களால் இவருக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி... கழுதை மேல் ஏற்றி, ஊரை விட்டு விரட்டியடிப்பது நிச்சயம்.
  5. உக்ரைன் போருக்கு… பணம் கொடுத்த எந்த ஐரோப்பிய நாட்டையும் மக்கள் ஆதரிக்கவில்லை. இந்தப் போரால்… விலைவாசிகள் அதிகரித்து, சாதாரண வாழ்க்கை நடத்தும் சாமானியர்களே மிகவும் பாதிக்கப் பட்டார்கள். இதன் விளைவுகளை… ஐரோப்பிய நாடுகளில் தேர்தல் நடக்கும் போது, அந்தந்த நாட்டு அரசுகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
  6. செலன்ஸ்கிதான்… ஆப்பு இழுத்த குரங்கின் நிலையில் உள்ளார். நாடும் அழிந்து… நடுத்தெருவில் நிற்கிறார். அரசனை நம்ப் புருசனை கைவிட்ட… கதை அது.
  7. உக்ரைன் போரில்…. பைடன் அரசு காட்டிய அதீத ஆர்வமும், ஆயுதம் வழங்கலும்தான் கமலாவின் தோல்விக்கு முதன்மையான காரணமாக இருக்க முடியும்.
  8. ஐரோப்பிய நாடுகளின் ஆசையில் மண் அள்ளிப் போட்ட ட்ரம்ப் கெட்டிக்காரன்தான். 🙂
  9. கமலாவுக்கு… கட்டுக்காசும் கிடைக்காது போலிருக்கு. 😂 🤣
  10. செலன்ஸ்கிக்கு…. இப்ப, உச்சா… போக ஆரம்பித்து இருக்கும். 😂
  11. ட்ரம்ப் ஐயா வெற்றி பெற்று… உலகத்தில் சமாதானப் புறாவை பறக்க விட முற்கூட்டிய வாழ்த்துக்கள். 💪 💐 உக்ரைன்காரர்… இப்பவே ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, புட்டினிடம் சரணடைவது புத்திசாலித்தனம். முரண்டு பிடித்தால்… அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பால், ஆயுதங்கள் களையப்படுவது நிச்சயம். 🙂
  12. பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் சசிகலா இரவிராஜ் மீது சாவகச்சேரியில் தாக்குதல். தென்மராட்சி பாரளுமன்ற வேட்பாளர் சசிகலா இரவிராஜின் வாகனம் மீது கொலைவெறித்தாக்குதல் இன்று மாலை இடம்பெற்றுள்ளது .சிறிய உரசல் காயங்களுடன் மயிரிழையில் உயிர்தப்பினார் . தேர்தல் பிரச்சாரத்திற்காக தனது வீட்டில் இருந்து புறப்படும் போது, சாவகச்சேரி தமிழரசுக் கிளையின் குழு ஒன்றும் அதன் பெண் ஒருவர் தலைமையில் மீண்டும் தாக்குதல் நிகழ்தப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல் முன்பும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் இல்லை. குறித்த தொகுதி சட்டத்தரணி ஒருவரிடம் பொலிஸார் கையூட்டு பெற்றுக் கொண்டுள்ளார்களோ என எண்ணத்தோன்றுவதாக சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக தென்மராட்சி இலங்கை தமிழரசுக்கட்சி சாவகச்சேரி கிளைக்கு எதிராக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1407369
  13. உண்மை தான் ஆனா கடைசில அவங்க ரெண்டு பேருக்கும் நடந்த முடிவை நினைக்கத்தான் பக்கின்னு இருக்கு. Prashanthan Navaratnam
  14. சுமந்திரனின் சுத்துமாத்துக்கள்... வர வர எல்லை இல்லாமல் கூடிக் கொண்டு போகுது. நவம்பர் 14 திகதி தேர்தலுடன்... இந்தப் பேயை, வேப்பிலை அடித்து விரட்டப் படும். 😂
  15. 2036 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி இந்தியாவில்? உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டது. அடுத்த (2028ம் ஆண்டு) ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், 2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுகையில், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும். இது 140 கோடி இந்தியர்களின் கனவு என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் சபையிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள், அவற்றில் இருக்கும் வசதிகள் உள்பட பல்வேறு தகவல்களும், ஒலிம்பிக் போட்டி நடத்த அனுமதி அளித்தால், இந்திய அரசு என்னென்ன உதவிகள் செய்யும் என்ற விபரங்களும் அந்த விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1407342
  16. உலக சாதனை படைத்த பூசணிக்காய் படகு! (வீடியோ) அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தைச் சேர்ந்த கேரி கிறிஸ்டென்சன் என்பவர் இராட்சத பூசனிக்காய் படகில் பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். 46 வயதான அவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தனது தோட்டத்தில் இராட்சத பூசணிக்காய்களை வளர்த்து வருகிறார். அதன்படி இந்த ஆண்டு சுமார் 500 கிலோ எடை கொண்ட பூசணிக்காய் ஒன்றை வளர்த்த அவர் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் குறித்த பூசனியை படகாக மாற்றியுள்ளார். அதன் பின்னர் குறித்த படகினைப் பயன்படுத்தி கொலம்பியா ஆற்றில் சுமார் 73 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளார். அதன்படி போன்வில்லே நகரில் இருந்து வான்கூவர் வரை 73 கிலோ மீற்றர் தூரத்துக்கு அவர் அந்த படகில் பயணித்துள்ளார். 26 மணி நேரம் நீடித்த இந்த கின்னஸ் சாதனை முயற்சி சமூகவலைதளங்களில் வைரலாகியது. இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1407300
  17. டியாகோ கார்சியாவில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதி! ஐக்கிய இராஜ்ஜியத்தின் இந்தியப் பெருங்கடல் பிரதேசமான டியாகோ கார்சியாவில் (Diego Garcia) கடந்த மூன்று வருடங்களாக தங்கியிருந்த 60க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மோதல்கள் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய 16 சிறுவர்கள்/குழந்தைகள் உட்பட 64 இலங்கை தமிழர்கள் கொண்ட குழு, ஏனைய நாடுகளுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் 2021 ஒக்டோபர் மாதம் முதல் தொலைதூர தீவில் சிக்கித் தவித்துள்ளது. இவர்கள் அங்கு, எலி தொல்லைகளுடன் கூடிய நெரிசலான கூடாரங்களில் வாழ்வது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றை எதிர்கொள்வது, மன உளைச்சல் மற்றும் தற்கொலை முயற்சிகள் போன்ற பல்வேறு துயரங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பல வருட சட்ட மற்றும் மனிதாபிமான அழுத்தங்களுக்குப் பிறகு பிரித்தானிய அரசாங்கத்தின் மேற்படி சலுகை அவர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது. இதன் மூலம், குற்றவியல் தண்டனைகள், நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் அல்லது விசாரணைகள் இல்லாத அனைத்து குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் துணையில்லாத ஆண்களின் குடும்பங்கள் நேரடியாக பிரித்தானியாவுக்கு மாற்றப்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டும். எவ்வாறெனினும், குற்றவியல் தண்டனை பெற்றதாகக் கூறப்படும் மூன்று தமிழர்கள் பிரித்தானியாவுக்கு நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சலுகைக்கான பணிகள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்துக்குள் இது தொடர்பில் முறையான தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவில் உள்ள இலங்கை தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இந்த நடவடிக்கையை “நீதிக்கான நீண்ட போரில்” “மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை” என்று விவரித்தனர். https://athavannews.com/2024/1407347
  18. இரவு மூன்று மணிக்குத்தான் படுக்கப் போகின்றவர்கள் என்ற படியால், இரவு 7 மணிக்கு ஒரு சாப்பாடும், இரவு 2 மணிக்கு ஒரு சாப்பாடுமாக இருட்டில்... இரண்டு நேரம் சாப்பிடுகின்றார்கள். 😂
  19. வாக்களிப்பு சில மணித்தியாலத்துக்கு முன்பு தான் ஆரம்பித்தது. ஜேர்மன் செய்திகளின் படி... வாக்களித்து விட்டு வந்தவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்திய போது இருவரும் சம நிலையில் இருக்கின்றார்கள். எங்களுடைய ஆட்கள் நித்திரையாலை எழும்பி வாக்களிக்கப் போக மத்தியானம் தாண்டும். 🤣
  20. ஜனாதிபதியின் உருவத்துடன் போலி நாணயத்தாள்; ஒருவர் கைது! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத் தாள் ஒன்றை தயாரித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேக நபர் நேற்று (04) பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாணயத் தாள்களை அச்சடித்ததாக அண்மையில் வெளியான செய்திகளுக்கு மத்தியில் இந்த கைது வந்துள்ளது. எவ்வாறெனினும், அரசாங்கமும் மத்திய வங்கியும் புதிய நாணயத்தாள்கள் அச்சடிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளது. https://athavannews.com/2024/1407246
  21. ஒரு தொகை ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கைது! இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய பகுதியில் பல துப்பாக்கிகள், கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொத்தலாவல சந்திக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது. AK47 துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, 7.62 துப்பாக்கியின் 25 தோட்டாக்கள், 09 மிமி துப்பாக்கியின் 07 தோட்டாக்கள், AK47 ஆயுதத்தின் மகசீன், இரண்டு வாள்கள் மற்றும் ஒரு கத்தி என்பன இதன்போது மீட்கப்படடன. எம்பிலிப்பிட்டிய பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய சந்தேகநபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1407198

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.