Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. கோழி மேய்க்கிற வேலை என்றாலும், கோரணமேந்து (Government) உத்தியோகம் தான் உசத்தி என்று, வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போனதிலிருந்து கடந்த பல தலைமுறைகளாக மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. பல்கலைக் கழகத்திலிருந்து பட்டம் பெற்று வெளியே வந்தவுடனேயே… யாரையாவது பிடித்து ஒரு அரச உத்தியோகத்தில் அமர்ந்தால்… பென்சன் எடுக்கும்வரை சோத்துக்கு பிரச்சினை இல்லை என்பதே பல இலங்கையரின் மனநிலை. கற்ற கல்வியை வைத்து சுயதொழில் செய்வது… மிக மிக அரிது. அதற்குரிய வழியையும், ஊக்கத்தையும் அரசும் கொடுக்க முன் வருவதில்லை.
  2. A/L படிக்கிற நேரத்திலும் ஒரு பெண்ணை வன் சைட் லவ் பண்ணினேன். நான் லவ் பண்ணுறது அவளுக்குத் தெரியும். அதனால் என்னுடன் பேசும்போது ஒரு இடைவெளி விட்டே பேசுவாள். ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ப்ரொபோஸ் பண்ணினேன். அவள் என்னை ஒரு நண்பனாக மட்டுமே பார்ப்பதாகக் கூறி என்னை ரிஜெக்ட் பண்ணிவிட்டாள். "இதெல்லாம் காரணம் இல்ல, உண்மையான காரணம் சொல்லு?" என்று நான் நச்சரிக்கவும் என்னுடைய தொடர்பு எல்லாத்தையும் துண்டித்து விட்டாள். காலம் உருண்டோடியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவளை ஃபேஸ்புக்ல பார்த்தேன். ரிக்குவெஸ்ட் கொடுத்ததும் அக்செப்ட் பண்ணிவிட்டாள். இப்போது அவளுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருப்பதைக் கண்டேன். போஸ்ட்களுக்கு ரியாக்சன் போடுவது மட்டுமே இருவருக்கும் இடையே இருந்தது. நேற்று மெஸெஞ்சர்ல சும்மா மெஸேஜ் போட்டு பழைய கதைகளைப் பேசினேன். இருவரும் பேசும்போது "உண்மையைச் சொல்லு அப்ப ஏன் என்னைய வேணாம் எண்டு சொன்னாய்?" என்று கேட்டேன். "அப்ப நீ பார்க்கிறதுக்கு நல்லா இருக்க மாட்டா டா" என்றாள். "அப்ப இப்ப பார்க்கிறதுக்கு நல்லா இருக்கேனா?" என்று கேட்டேன். "இல்ல இப்ப இருக்கிறதுக்கு அப்ப இருந்தது பரவால்ல போல" என்றாள். அந்த அவமானத்துல இப்ப நான் அவள ப்ளொக் பண்ணிட்டேன். 😂 Suhirtharaj Logarasa
  3. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் அங்கீகாரம் மற்றும் உத்தரவின் பேரில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடந்த 28ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் பாராளுமன்ற உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி விடயம் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன, கடற்றொழில், அமைச்சருக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு பிரதியிடப்பட்ட கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள்ளது என மாவட்ட செயலக ஊடக பிரிவு அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1410527
  4. யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி. இலங்கை சதுரங்க சம்மேளனம் மற்றும் ஆசிய சதுரங்க சம்மேளனம் ஆகியவற்றின் பூரண ஆதரவுடன் யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனம் நடாத்தும் ” யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2024 ” கார்த்திகை 30 ஆம் திகதி தொடக்கம் மார்கழி 4 ஆம் திகதி வரை கொக்குவிலில் அமைந்துள்ள செல்வா பெளஸ் மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சுமார் 750 க்கு மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கு பற்றுகின்றார்கள். இவர்கள், இந்தியா, ஐக்கிய ராஜ்யம் மற்றும் இலங்கையின் சகல மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இப்போட்டியில் சுமார் 24 லட்சம் ரூபாய் பெறுமதியான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது 150 மேற்பட்ட வீரர்களுக்கு கிடைக்கும் விதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இப்போட்டியானது யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற இரண்டாவது சர்வதேச சதுரங்க போட்டியாகும். சென்ற வருடம் முதலாவது போட்டியை மிகச் சிறப்பாக யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனம் நடாத்தி இருந்தது. இப் போட்டியானது பிரதேசத்தில் உள்ள சதுரங்க வீரர்கள் தங்கள் சர்வதேச தரத்தை அதிகரித்துக் கொள்ள உதவுவதோடு பல சதுரங்க வீரர்களை உருவாக்குவதற்கு வழி வகுக்கின்றது. போட்டியின் இன்றைய தொடக்க விழாவில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகம் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு சிறப்பு விருந்தினராக சிவ பூமி அறக்கட்டளை நிறுவனர் கலாநிதி ஆறு திருமுருகன் கலந்து கொண்டார். லைக்கா ஞானம் பவுண்டேஷன் நிறுவனம் மற்றும் வெளிநாடு, உள்நாட்டில் வசிக்கின்ற நலன் விரும்பிகளின் நிதி பங்களிப்புடன் சிறப்பாக இந்த சதுரங்க போட்டி நடைபெறுகின்றது. https://athavannews.com/2024/1410539
  5. உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த முடியும்- ஜெலன்ஸ்கி. ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ரஷ்யா, போரில் முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புட்டின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்படாத உக்ரைன் பகுதிகளை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் ரஷ்யாவுடனான போரை நிறுத்த முடியும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம் குறித்தும் அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1410513
  6. ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன். மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நன்றிகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,”இம்முறை ஒரு நிறைவான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்களின் மனதில் உள்ள சோகங்களை அவர்கள் நினைவு கூறுகிற இந்த சந்தர்ப்பத்தை எவ்வித இடையூறுகளும் இல்லாமல் முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்கிய ஜனாதிபதிக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த காலங்களில் நாங்கள் பார்க்கின்ற போது மாவீரர் நினைவேந்தலின் போது பொலிஸார் மற்றும் இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணம் காணப்பட்ட நிலையில், இம்முறை மாவீரர் தின நினைவேந்தலின் போது ஒரு சில இடங்களில் பொலிஸாரினால் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டது. எனினும் இம்முறை ஒரு நிறைவான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனாதிபதிக்கும், தற்போதைய அரசிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.”என கூறியுள்ளார். https://athavannews.com/2024/1410499
  7. சிறிதரனுக்கு ஆதரவாக நான் எங்கும் பிரச்சாரம் செய்யவில்லை. தயவு செய்து வீண் வசந்திகளை பரப்பாதீர்கள்.
  8. சுப்பிரமணிய சிவாவுடன்... ஸ்ரீதரனுக்கு என்றுமே நேரடி நட்பு இருந்தது கிடையாது. அவருடைய தகப்பன் தமிழரசு கட்சியில் உள்ளுராட்சி சபை இயங்கிய காலத்தில் ஒரு பதவியில் இருந்தவர். அந்த தொடர்பை வைத்து சுப்பிரமணிய சிவா ஸ்ரீதரனுடன் சில படங்களை எடுத்து வைத்துள்ளார். சுப்பிரமணிய பிரபா... யாரை கண்டாலும் அவர்களுடன் சேர்ந்து நின்று படம் எடுத்து பிற்காலத்தில் அதனை தனது தேவைக்கு பயன்படுத்தும் சுபாவம் உடையவர் என தெரிகின்றது. சுப்பிரமணிய சிவாவிடம்... //சிறீதரன் போலி லெட்டர்ஹெட்டை மொக்குத்தனமாக அடிக்க வைத்தது...// என்று சொல்வதெல்லாம் உங்களின் கற்பனை கதைகள். ஆனபடியால்... இதில் நான், தொடர்ந்து எழுதுவதில் அர்த்தம் இல்லை. நன்றி, வணக்கம் கோசான். 🙏
  9. அப்பிடி என்றால்... சுத்துமாத்து சுமந்திரனை, எட்டு நாளைக்கு... மூத்திர சந்துக்குள் கொண்டு போய் வைத்து அடிப்போம்.
  10. மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால், நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கீழுள்ள செய்தியை.... @goshan_che ஆற, அமர்ந்து.. இருந்து வாசிக்கவும். 😂 🤣 கோசான் சே... சிறீதரன் மதுபான அனுமதி பெற்ற விடயத்தை உறுதிப் படுத்தி, சிறீதரனை பாராளுமனத்திலிருந்து விலக வைக்க அரிய சந்தர்ப்பம். செய்வாரா.... 🤣 அல்லது வதந்திகளை பரப்பாமல் இருக்க வேண்டும். 🙂
  11. தமிழ் மக்களுக்கு சார்பாக நிற்கும், மன்னாரை சேர்ந்த முஸ்லீம் பெருமகன். ரிஷாட் பதியூதினின் பல ஆயிரம் கோடிக்கணக்கான ஊழல்களை வெளியே கொண்டு வருகின்றார். அனுர ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இவர் மீது, நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றோம். அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி.
  12. ஒரு மாவீரரின் வயோதிபத் தாயாரை, எவரும் வேண்டுமென்று அவமானப் படுத்தி இருக்கமாட்டார்கள். அப்படி செய்திருந்தாலும்.... அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று... சாதாரண மனிதராலேயே ஊகிக்க முடியும் போது, ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அப்படி செய்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. கபிதன் கூறியமாதிரி... இது ஒழுங்குபடுத்தலில் ஏற்பட்ட தவறாக இருக்கத்தான் சாத்தியங்கள் அதிகம்.
  13. தமிழ் மக்களுக்கு சார்பாக நிற்கும், மன்னாரை சேர்ந்த முஸ்லீம் பெருமகன். ரிஷாட் பதியூதினின் பல ஆயிரம் கோடிக்கணக்கான ஊழல்களை வெளியே கொண்டு வருகின்றார். அனுர ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இவர் மீது, நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றோம். அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி.
  14. அமைச்சுகளுக்கு சொந்தமான 254 அதி சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட தீர்மானம்! தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று இந்த கார்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்த சொகுசு கார்களை பராமரிக்க அரசு பாரிய செலவை சுமக்க வேண்டியுள்ளதுடன், இவற்றில் பெரும்பாலானவை முன்னாள் அமைச்சர்களே பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதையும் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. அத்துடன், 05 வருடங்களின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1410326
  15. சம்மாந்துறை உழவு இயந்திர விபத்து; நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்! அம்பாறை, காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவர் உட்பட நால்வர் நேற்று (28) கைது செய்யப்பட்டனர். கைதான சந்தேக நபர்களை, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின்னர் சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதிவான் எம்.ரி சபீர் அகமட் முன்னிலையிலும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது மதரசாவின் அதிபர், ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய இரு உதவியாளர்களையும் தலா 1 இலட்சம் ரூபா வீதம் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிவான் உத்தரவிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை (26) நிந்தவூர் பகுதியில் அமைந்துள்ள மதரசா ஒன்றில் கல்வி கற்றி, மாணவர்கள் சம்மாந்துறை பகுதியில் அமைந்துள்ள அவர்களது வீடுகளுக்கு செல்ல பஸ் இல்லாத காரணத்தினால், உழவு இயந்திரத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன்போது, மாணவர்கள் பயணம் செய்யவுள்ள குறித்த வீதியானது மோசமான வானிலையால் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், ஊழவு இயந்திரத்தில் மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டாம் என்றும் சோதனைச் சாவடி பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரும் அறிவுறுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில், 11 மாணவர்களுடன் பயணித்த உழவு இயந்திரம் சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் நீரோட்டத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன்போது ஐந்து மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் 06 மாணவர்கள் காணாமல் போயிருந்தனர். 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 6 மாணவர்களே இவ்வாறு காணாமல் போயிருந்தனர். காணாமல் போன மாணவர்களில் இதுவரை 05 பேர் உயிரிழந்த நிலையில் சடலங்காக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு மாணவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர உழவு இயந்திர சாரதி, மற்றுமொருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போயுள்ள எஞ்சியுள்ள மாணவரை தேடும் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1410343

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.