Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. எங்களுக்கு, உங்களுடைய தைரியமும் பிடிச்சிருக்கு புட்டின் சார். 😂
  2. 3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து! இந்த வருடத்தில் 3000 க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது உரிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் மொஹமட் மஹிஷ் தெரிவித்துள்ளார். எனவே, வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது அவசியமானது. நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1407734
  3. ஆராய்ச்சி மையத்தில் இருந்து தப்பியோடிய 43 குரங்குகள். அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் இருந்து 43 குரங்குகள் தப்பி ஓடியுள்ளன. பாதுகாவலரால் தவறுதலாக மையத்தின் கதவு திறக்கப்பட்டதாகவும், இந்த குரங்குகள் தப்பிச் சென்றதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி குறித்த பகுதியில் குரங்கு கூட்டத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், குடியிருப்பாளர்கள் தங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பாதுகாப்பாக மூடி வைக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கரோலினா மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் தப்பியோடிய குரங்குகளைக் கண்டால், உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1407752
  4. நீங்கள், அந்தக் கடைக்குள் போக முதல்… மக்கள் இப்படி “குறுகுறு” என்று பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லையா. 😂 வெளியே வரும் போது.. உங்கள் மனநிலை எப்படி இருந்தது. 🤣
  5. கந்தையா அண்ணை…. ஊகங்களாக வரும் செய்திகளுக்கு எல்லாம், பதில் சொல்லி மினைக்கெடுவது சரியாக இராது. ஆனால்… இந்தியர்கள் மட்டுமல்ல பொதுவாக ஆசியர்கள் போகின்ற நாடுகளில் எல்லாம் அங்குள்ள மக்களுக்கு தமது கலாச்சாரத்தை காட்டுகின்றோம் என்ற போர்வையில்… எரிச்சலூட்டும் நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. ஆபிரிக்கர்கள் கூட இந்த அளவுக்கு மோசமாக நடப்பது இல்லை.
  6. படத்தைப் பார்க்க…. டில்லி, ஷங்காய் போன்ற மாசு அடைந்த நகரம் போல் கொழும்பு தெரிகின்றது. தொழிற்சாலைகள், வாகனங்கள் மூலம் காற்று மாசு படுவதை தீவிரமாக கண்காணித்து எடுக்க வேண்டிய வழிமுறைகளை கடைப்பிடிக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். நகரம் இப்படி மாசு பட்டுப் போனால்… மக்கள்தான் நோயாளிகள் ஆவார்கள். ஆரோக்கியமில்லாத மக்களும் அரசுக்கு சுமை என்பதை மறக்கக் கூடாது.
  7. ஓம்... சமாதானப் புறா பறக்கும். நீங்கள் அதை பிடித்து, கறி வைத்து தின்னப் படாது. 😂
  8. நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க, 16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
  9. கனடாவில் உள்ள ஒரு கடற்கரையில்.... மலசலம் கழித்து விட்டு, மண்ணால் மூடி விட்டுப் போகும் அளவுக்கு கொஞ்சம் முன்னேறி இருக்கின்றார்கள் என அறிந்தேன். 😂
  10. //கஸ்தூரி என்ன பேசினாலும் எமோசன் ஆகாத, இல்லேனா நாம தெலுங்கு கூட்டம் என்று தெரிந்திடும்.// மூடிக்கிட்டு இரு... மூமென்ட். 😂 🤣
  11. மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல் பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும், பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 6,00,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார். பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் போன்றவை தற்போதும் காணப்படுகின்ற போதிலும் ஆபத்தான கட்டத்தை அவை நெருங்கவில்லை, 25 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன அவை ஆபத்தான கட்டத்தை அடையவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407705
  12. மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல். பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும், பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 6,00,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார். பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் போன்றவை தற்போதும் காணப்படுகின்ற போதிலும் ஆபத்தான கட்டத்தை அவை நெருங்கவில்லை, 25 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன அவை ஆபத்தான கட்டத்தை அடையவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407705
  13. வட-கிழக்கு மாவட்டங்களில் மட்டும் ஏன் இந்த நிலை? யாழ்ப்பாணம்-கிளிநொச்சி: 44 கட்சிகள்/குழுக்கள் 396 வேட்பாளர்கள் 6 ஆசனங்கள் வன்னி: 47 குழுக்கள் 423 வேட்பாளர்கள் 6 ஆசனங்கள் திருகோணமலை: 31 குழுக்கள் 217 வேட்பாளர்கள் 4 ஆசனங்கள் மட்டக்களப்பு: 56 குழுக்கள் 448 வேட்பாளர்கள் 5 ஆசனங்கள் அம்பாறை: 72 குழுக்கள் 720 வேட்பாளர்கள் 7 ஆசனங்கள் நாட்டில் வேறு எந்த மாவட்டங்களிலும் இந்த நிலை இல்லை. Malaravan Uthayaseelan
  14. வட-கிழக்கு மாவட்டங்களில் மட்டும் ஏன் இந்த நிலை? யாழ்ப்பாணம்-கிளிநொச்சி: 44 கட்சிகள்/குழுக்கள் 396 வேட்பாளர்கள் 6 ஆசனங்கள் வன்னி: 47 குழுக்கள் 423 வேட்பாளர்கள் 6 ஆசனங்கள் திருகோணமலை: 31 குழுக்கள் 217 வேட்பாளர்கள் 4 ஆசனங்கள் மட்டக்களப்பு: 56 குழுக்கள் 448 வேட்பாளர்கள் 5 ஆசனங்கள் அம்பாறை: 72 குழுக்கள் 720 வேட்பாளர்கள் 7 ஆசனங்கள் நாட்டில் வேறு எந்த மாவட்டங்களிலும் இந்த நிலை இல்லை. Malaravan Uthayaseelan
  15. இலங்கைக்கு தங்க விருது. 2024 ஆம் ஆண்டில் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கைக்கு தங்க விருது வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் லண்டன் நகரில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த தரப்படுத்தலில் இலங்கை 8வது இடத்தில் இருந்தது. இலங்கையை Most Desirable Island பெயரிடுவதற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்திய பெருங்கடலின் முத்து என்ற வகையில், சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான தீவுகளில் ஒன்றாக இலங்கை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள புராதன இடங்கள் குறிப்பாக சிகிரியா, தம்புள்ள குகைகள், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை புராதன இடிபாடுகள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகை விருதுகளில், இரண்டாவது இடத்தை தாய்வானும், மூன்றாவது இடத்தை போர்ட்டோ ரிகோவும் பெற்றுள்ளது. சர்வதேச ரீதியாக 22 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற தரப்படுத்தலுக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1407698
  16. ஓகே...ஓகே... மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை வளவன். 😂
  17. நீங்கள் கூறியபடி நடக்கவும் சாத்தியங்கள் உண்டு. அப்படி ஒரு இடம்தான், வெல்வார்கள் என்றால்... ஒரு கேவலமான அவமானம் மகிந்த குடும்பத்திற்கு ஏற்படும். போர் வெற்றி என்ற அவர்களின் விம்பம்.. எல்லாம், நொருங்கிப் போகும்.
  18. என்ன... ராஜபக்ச கட்சிக்கு, ஒரு இடமா? 😲 முன்னொரு காலத்திலை... இரண்டு ஜனாதிபதிகளையும், பிரதம மந்திரிகளையும், 25 அமைச்சர்களையும் நாட்டுக்கு தந்த குடும்பம் ஐயா அது. 😂 அதுக்கு இப்ப ஒரு இடமா? ரொம்ப அநியாயமாய் இருக்கே. 🤣 கோசான்... அந்த ஒரு இடமும், யாருக்கு என்று நீங்களே... சொல்லி விடுங்கள். 😂
  19. வளவனுக்கு ஜேர்மனி நல்ல அத்துப்படி போலை இருக்கு. 😂 நீங்கள் ஜேர்மனியிலா வசிக்கின்றீர்கள்.
  20. உண்மைதான். இந்த இந்தியர்களால் விரைவில்... எமக்கும் அடி விழும் போலை இருக்கு.
  21. உயிர் போற நேரத்திலை கொள்கை ஆவது, Hair ஆவது. 😂 ஆபத்துக்கு... பாவம் இல்லை என்று ஸ்ரீலங்கன் என்று சொல்லி தப்பிக்க வேண்டியதுதான். 🤣
  22. இன்று திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கும்... ராசவன்னியரின் மகனுக்கும், மருமகளுக்கும்... இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் 🙏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.