Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இலங்கையின் பிரம்மாண்ட சொகுசு ஹோட்டல் இன்று திறப்பு. Cinnamon Life at City of Dreams Sri Lanka சொகுசு ஹோட்டல் இன்று (15) திறக்கப்பட உள்ளது. 1.2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் , இலங்கையில் தனியார் துறையின் மிகப் பெரிய முதலீடாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹோட்டல் வசதிகள், வணிகம், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு ஆகிய வசதிகள் இங்கு உள்ளது., தெற்காசியாவின் மிகவும் தனித்துவமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இந்த நாட்டின் சுற்றுலாத் துறைக்கு ஒரு புதிய அர்த்தம் சேர்த்துள்ளது. 687 அறைகளைக் கொண்ட சினமன் லைஃப் Ballroomகள், விருந்து அரங்குகள் மற்றும் மாநாட்டு வசதிகளைக் கொண்டுள்ளது. 5,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு சேவைகளை வழங்குவது இதன் சிறப்பு அம்சமாகும். சர்வதேச மாநாடுகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய பெரிய அளவிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும், Cinnamon Life ஆனது உலகளாவிய சந்திப்புகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சுற்றுப்பயணங்களுக்கான முன்னணி இடமாகும். 250 சமையல் கலைஞர்களுடன் 1,500 க்கும் மேற்பட்ட குழுவினர் சினமன் லைஃப் விருந்தினர்களுக்கு சுவையான உணவு மற்றும் பானங்களுடன் விருந்தளித்து வருகின்றனர். French Bistro முதல் American Grill வரை வெவ்வேறு உணவு சுவைகளை இங்கு சுவைக்க முடியும். இதேவேளை, ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்களுக்கு மேலும் பல சுவையான சமையல் அனுபவங்களை வழங்கவும் Cinnamon Life தயாராக உள்ளது. ஹோட்டல் வளாகத்தில் உள்ள அழகாக வடிவமைக்கப்பட்ட இடங்களின் அழகு மற்றும் நேர்த்தியான அமைப்பு திருமணங்கள் மற்றும் பிற சிறப்பு நிகழ்வுகளுக்கு சிறந்த இடமாக அமைக்கப்பட்டுள்ளது. சினமன் லைஃப் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா இன்று (15) பிரமாண்டமாக திறந்து வைக்கப்படவுள்ளது. மேலும், திட்டத்தின் இறுதி கட்டம் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு வணிக வளாகம் மற்றும் விளையாட்டு இடங்களுடன் கூடிய பொழுதுபோக்கு மண்டலத்துடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1404180
  2. இணையவழி நிதி மோசடி-சீனத் தூதரகம் விசேட அறிக்கை! இணையவழி நிதி மோசடி தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் குறித்து கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இணையவழி நிதி மோசடி தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளின் உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதுடன், இலங்கை சட்ட விதிமுறைகளுக்கு இணங்க அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விடயம் தொடர்பாக சீனா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இந்த சம்பவம் இரு நாட்டு மக்களின் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமல்லாமல், சீனாவின் நற்பெயரை கடுமையாக பாதிப்பதாகவும், இரு நாடுகளுக்கிடையேயான பாரம்பரிய நட்புறவை பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. சந்தேக நபர்களை சட்டப்படி அவர்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீனத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. https://athavannews.com/2024/1404183
  3. இந்தியாவின் எல்லைப் பகுதியில் குடியேற்றங்களை அமைத்துள்ள சீனா. இந்தியாவின் எல்லைப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில் தற்போது எல்லையில் பாங்காங் ஏறி அருகே சீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள சாட்டலைட் ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்திய – சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் ஏறியின் [Pangong Lake] குறுக்கே பாலம் ஒன்றையும் சீனா கட்டி முடித்தது. இதில் சீன ராணுவ வாகனங்கள் பயணிக்கும் சாட்டலைட் ஆதாரங்கள் கிடைத்திருந்தன. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மேக்சார் தொழில்நுட்ப நிறுவனம் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தின்படி பான்காங் ஏரியின் வடக்கே, புதிய கிராமம் ஒன்றையே சீனா உருவாக்கியுள்ளது. எல்லையில் இருந்து 36 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 70 நிரந்தர கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் 6 – 8 ராணுவ வீரர்கள் தங்க முடியும். மேலும் இந்த பகுதியைச் சுற்றிய ராணுவ கட்டமைப்பையும் சீனா வலுப்படுத்தி வருகிறது. இந்த கிராமத்தை விரிவுபடுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன் பயன்படுத்தப்படாத இந்த பகுதிகளில் மக்களைக் குடியேற்ற சீனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அவசியம் ஏற்பட்டால் ராணுவ தளமாகவும் சீனா இதைப் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. பாங்கோங் ஏரி அருகே மொத்தமாக 17 ஹெக்டேர் அளவுக்குச் சீன கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 4,347 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டு கருவிகளும் நிறுவப்பட்டுள்ளது. கடந்த 2020 இல் பாங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1404164
  4. 6 இந்திய தூதுவர்களை வெளியேற்ற கனடா உத்தரவு! இந்தியாவின் உயர் ஆணையர் மற்றும் ஐந்து தூதுவர்களை கனடா திங்களன்று (14) வெளியேற்ற உத்தரவிட்டது. கனேடிய மண்ணில் பல கொலைகள் மற்றும் பிற வன்முறைச் செயல்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உறுப்பினர்களை தொடர்புபடுத்துவதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக கனடாவின் தேசிய காவல்துறை தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது. இதற்குப் பதிலளித்த இந்தியா, கனடாவில் உள்ள தனது உயர்மட்ட தூதரக அதிகாரியை திரும்பப் பெறுவதாகக் கூறியதுடன், ஆறு கனேடிய தூதர்களை வெளியேற்றும் திட்டத்தை அறிவித்தது. திங்கட் கிழமை (14) பிற்பகல் ஊடகவியலாளர்களிடம் இது குறித்து பேசிய கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் பொதுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இந்திய அரசு முகவர்கள் ஈடுபட்டதற்கான “தெளிவான மற்றும் நம்பகத் தகுந்த ஆதாரங்களை” ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸார் (RCMP) கண்டுபிடித்துள்ளனர். இதில் இரகசிய தகவல் சேகரிக்கும் நுட்பங்கள், தெற்காசிய கனேடியர்களை குறிவைத்து பலவந்தமான நடத்தை மற்றும் கொலை உட்பட பல அச்சுறுத்தல் மற்றும் வன்முறை செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை அடங்கும் என்று கூறினார். 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டதில் இந்திய முகவர்களைத் தொடர்புபடுத்துவதற்கான நம்பகமான ஆதாரங்கள் கனடாவிடம் இருப்பதாகப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதிலிருந்து, 2023 செப்டெம்பர் முதல் இந்தியா-கனடா உறவுகள் பதட்டமாக உள்ளன. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவாகப் பல வழக்குகளில் இந்திய அரசால் தேடப்பட்டு வந்தவர் ஆவார். இவர் ஒரு சீக்கிய தாயகத்தை ஆதரித்தார் மற்றும் 2020 ஜூலையில் இந்திய அரசால் “பயங்கரவாதி” என்று அடையாளமிடப்படார். https://athavannews.com/2024/1404136
  5. வணக்கம் சின்னக்குட்டி, உங்களை இங்கு மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. 👍🏽
  6. பல வருடங்களுக்கு முன்... துருக்கிய விமானம் ஒன்று 300 பயணிகளுடன் பயணித்துக் கொண்டு இருக்கும் போது... விமானிக்கும், துணை விமானிக்கும் சண்டை வந்தபோது... அவர்கள் விமானத்தை தானியங்கி முறையில் இயங்க விட்டு விட்டு, கைகலப்பில் இறங்கி விட்டார்களாம். இது எப்படியோ... விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தெரிந்து, சில நிமிட போராட்டத்தின் பின் சண்டையை முடிவுக்கு கொண்டு வந்ததாக ஜேர்மன் பத்திரிகையில் செய்தி வந்திருந்தது. 🙂 அவர்கள் இருவருக்கும்... அதுதான் கடைசி வேலை நாளாக இருந்திருக்கும் என நான் நினைக்கின்றேன்.🤣
  7. பழமொழி: அற்பனுக்கு பவுசு வந்தால்... அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான். 😂 புதுமொழி: அற்பனுக்கு பவுசு வந்தால்... "அல்லக்கையை" குடை பிடிக்கச் சொல்வான். 🤣
  8. வாய்... அகலமான, போத்தலில் அடைக்கப் பட்ட கள்ளு. 😂
  9. அவர்களிடம் பதில் இல்லாவிட்டால்... "அழாப்பி" விளையாட்டுத்தான் விளையாட வேண்டும். 😂 வேறு வழி, இல்லையே....? பாவங்கள்... வெள்ளை அடிக்க, எவ்வளவு கஸ்ரப் படுகிறார்கள். 🤣
  10. பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களும், விளம்பரங்களும் மெதுவாக ஆரம்பிக்கின்றன. 🙂
  11. குறுநில மன்னர், சுத்துமாத்து சுமந்திரன்... குடை பிடிக்க, ஆள் வைத்திருக்கிறார். 😂 🤣
  12. குறுநில மன்னர், சுத்துமாத்து சுமந்திரன்... குடை பிடிக்க, ஆள் வைத்திருக்கிறார். உங்களுக்கும் இப்ப திருப்தி தானே... கபிதன். 😂
  13. ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்! -உதயகம்மன்பில- ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும், ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் வெளியிடாவிட்டால், அவற்றை தான் வெளியிடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார். மேலும், குறித்த அறிக்கைகளில் எந்தவொரு பக்கமும் காணாமல் போகவில்லை என்றும் எந்தவொரு விசாரணை அறிக்கையும் மாயமாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீர்க்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அண்மையில் சென்றிருந்தார். அவர் வெறுங்கையுடன்தான் அங்கு சென்றிருந்தார். எனினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளிவராத அறிக்கைகள் இரண்டை அவர், அங்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று தெரிவித்திருந்தேன். இனியும் தாமதிக்காமல், அந்த இரண்டு அறிக்கைகளையும் ஜனாதிபதி வெளியிட வேண்டும் என்று நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தோம். எனினும், அமைச்சரவைப் பேச்சாளரான விஜத ஹேரத், சில அறிக்கைகளின் பக்கங்கள் குறைவாக காணப்படுவதாகவும் சில அறிக்கைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், இதுதொடர்பாக தாங்கள் விசாரணை நடத்துவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார். அமைச்சரே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான எந்தவொரு அறிக்கையின் பங்கங்கள் குறைவடையவும் இல்லை, எந்தவொரு அறிக்கையும் காணாமல் போகவும் இல்லை என்பதை நாம் பொறுப்புடன் கூறிக்கொள்கிறோம். அரசாங்கத்திற்கும், சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும், ஜனாதிபதியின் செயலகத்திற்கும் இந்த அறிக்கைகளை தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், எம்மிடம் தற்போது அந்த இரண்டு அறிக்கைகளும் கிடைத்துள்ளன. எனவே, ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் இதுவரை வெளியிடப்படாத, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான இந்த இரண்டு விசாரணை அறிக்கைகளையும் வெளியிட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், நாம் அந்த இரண்டு அறிக்கைகளையும் வெளியிடுவோம்” இவ்வாறு உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1404109
  14. ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய பொருளாதார தடை! ஈரானுடன் தொடர்புடைய ஏழு தனிநபர்கள் மற்றும் ஏழு நிறுவனங்களுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் உக்ரேன் மீதான போருக்காக ரஷ்யாவிற்கு ஏவுகணைகளை ஈரான் வழங்கியமைக்காக இந்த தடை உத்தரவை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் நாட்டின் முதன்மையான விமான நிறுவனமான ஈரான் ஏர், அத்துடன் விமான நிறுவனங்களான சாஹா ஏர்லைன்ஸ் மற்றும் மஹான் ஏர் ஆகியவை அடங்கும். அதேநேரம், தடைகளை எதிர்கொண்ட நபர்களில் ஈரானின் துணை பாதுகாப்பு அமைச்சர் செயத் ஹம்சே கலந்தாரியும் அடங்குவர். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவை ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பத்தை ரஷ்யாவிற்கு உக்ரேனுக்கு எதிராக ஒரு மாதத்திற்கு முன்பே அனுப்பியதாக குற்றம் சாட்டியது. உக்ரேனுக்கு எதிரான தனது போருக்காக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ரஷ்யா பெற்றுள்ளதை உறுதிப்படுத்திய பின்னர், தெஹ்ரான் மீதான பொருளாதாரத் தடைகளை பரிசீலிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மாதம் கூறியது. குற்றச்சாட்டுகள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்ட போது, மொஸ்கோ அதற்கு மறுப்பு வெளியிடவில்லை. மாறாக தெஹ்ரானுடன் வளர்ந்து வரும் உறவு குறித்த கருத்தினை வெளியிட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் போர் தொடங்கியதில் இருந்து ஈரான் ரஷ்யாவிற்கு நூற்றுக்கணக்கான ட்ரோன்களை வழங்கியுள்ளது. எனினும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் விநியோகம் உக்ரேன் – ரஷ்ய மோதலில் ஈரானின் ஆழ்ந்த ஈடுபாட்டை எடுத்துக் காட்டுகிறது. https://athavannews.com/2024/1404117
  15. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு. 2024ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசானது அமெரிக்காவைச் சேர்ந்த டெரன் அசோமோக்லு, சைமன் ஜோன்சன், ஜேம்ஸ் ஏ.ரொபின்சன் ஆகியோருக்கு பகிர்தளிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டமைக்காகவே அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1404080
  16. தாய்வானை சுற்றி போர்ப் பயிற்சியை ஆரம்பித்த சீனா. சீனாவின் இராணுவம் திங்களன்று (14) தாய்வான் அருகே ஒரு புதிய சுற்று போர்ப் பயிற்சியைத் தொடங்கியது. இது “தாய்வான் சுதந்திரப் படைகளின் பிரிவினைவாத செயல்களுக்கு” ஒரு எச்சரிக்கை என்ற தைபே மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் கண்டனத்தையும் பெற்றது. தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம், சீனாவின் “பகுத்தறிவற்ற மற்றும் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு” தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்ததுடன், “சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், தாய்வானின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் அதற்கேற்ப பதிலளிக்க தகுந்த படைகளை அனுப்பியுள்ளதாக” கூறியது. அண்மைய ஆண்டுகளில், சீனா தைவானைச் சுற்றி தனது இராணுவ நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. ஒக்டோபர் 10 அன்று ஜனாதிபதி லாய் சிங்-தேவின் தேசிய தின உரையின் சில நாட்களுக்கு பின்னர் சீனாவின் இந்த போர் பயிற்சிகள் வந்துள்ளன. ஜனநாயக ரீதியில் ஆளும் தாய்வானை, சீனா தனது சொந்தப் பிரதேசமாக கருதுகிறது. https://athavannews.com/2024/1404050
  17. இஸ்ரேலுக்கு படைகளை அனுப்பும் அமெரிக்கா! இந்த மாத தொடக்கத்தில் ஈரானில் இருந்து ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு அதன் வான் பாதுகாப்பை வலுப்படுத்த இஸ்ரேலுக்கு உயர் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மற்றும் அமெரிக்க இராணுவக் குழுவை அனுப்புவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவினை ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கியுள்ளதாகவும் பென்டகன் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் விநியோகம், ஒரு முழுமையான போரைத் தவிர்ப்பதற்கான பரவலான இராஜதந்திர முயற்சிகள் இருந்தபோதிலும், மத்திய கிழக்கில் மோதலை மேலும் தூண்டிவிடும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஒக்டோபர் 1 ஆம் திகதி ஈரான் சுமார் 200 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியது. பெரும்பாலானவை இடைமறித்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது, ஆனால் சில ஏவுகணைகள் மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலைத் தாக்கியது. இந்த தாக்குதலுக்கு எவ்வாறு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் இதுவரை கூறவில்லை. https://athavannews.com/2024/1404060
  18. சிவராம் படுகொலை – லலித் குகன் காணாமலாக்கப்பட்டமை – விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவு.
  19. அரசியலில் இருந்து ஓய்வு பெறும் கெஹலிய? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து ஆதரவாளர்களுக்கு அறிவிப்பதற்காக கண்டியில் நேற்று (13) நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு எதிரான வழக்கில், நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் என தான் உறுதியாக நம்புவதாகவும், நிரபராதியாக அரசியலுக்குத் திரும்புவேன் எனவும் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1403969
  20. நீர்க் கட்டணங்களைச் செலுத்தத் தவறிய 41 முன்னாள் எம்.பிக்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இவ்வாறு அறவிடப்படாது 9 மில்லியன் ரூபா நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் பொதுவிதிகளுக்கு அமைய குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக எவ்வித விசேட சலுகைகளும் இன்றி சுற்றறிக்கைகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1403924
  21. உலக நாடுகளை எச்சரிக்கும் ஈரான்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு உதவி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஈரான் எச்சரித்துள்ளது. அத்துடன் தனது வான்பரப்பினை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்த அனுமதியளிக்கும் நாடுகள் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை சந்திக்கும்’’ என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. https://athavannews.com/2024/1403918
  22. கடந்த முறை யாழ் மாவட்டத்தில் 19 கட்சிகளும் 14 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன.. அதாவது 330 வேட்பாளர்கள் 7 எம்.பி பதவிக்காக போட்டியிட்டனர். இம்முறை யாழ் மாவட்டத்தில் 6 எம்.பி பதவிக்காக 396 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழ் மக்களுக்கான போராட்டங்களில் பங்கு பற்றாதவர்கள் எதற்காக தேர்தலில் போட்டியிட முன் வருகின்றனர்? ஏனெனில் எம்.பி யானால் நல்ல சம்பளம் சலுகைகள் கிடைக்கும். அதைவிட சொகுசு வாகனம் விற்று 5 கோடி சம்பாதிக்கலாம். பார் பெர்மிட் விற்று மூன்று கோடி சம்பாதிக்கலாம். இப்படி சம்பாதிப்பதற்காகவே தேர்தலில் போட்டியிட முன் வருகின்றனரேயொழிய தமிழ் மக்கள் நலனுக்காக அல்ல. தயவு செய்து இம்முறை இந்த திருடர்களுக்கு வாக்களிக்காதீர்கள். தோழர் பாலன்
  23. கஜேந்திரனை தவிர மிகுதி எல்லாரும் போவார்கள் என்று நினைக்கின்றேன். முதலாவது ஆள்... டக்ளஸ் தேவானந்தா. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.