Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. மிக்க மகிழ்ச்சி வாதவூரான். பலர் கலந்து கொண்டால்தான்... முசுப்பாத்தியாய் இருக்கும். யாழ் மாவட்டத்தில் 6 எம்.பி பதவிக்காக 396 வேட்பாளர்களும் வன்னி மாவட்டத்தில் 6 எம்.பி பதவிக்காக 423 வேட்பாளர்கள் போட்டியிடும் போது.. நாமும் யாழ். கள போட்டியில் அதிகளவிலான ஆட்கள் கலந்து கொள்ள வேண்டும். அநேகமாக இம்முறை திடுக்கிடும் முடிவுகள் வரும் என்பது மட்டும் நிச்சயம். 🙂
  2. கந்தையா அண்ணை... இவ்வளவு நாட்டு நடப்புகளை தெரிந்த நீங்கள் பயப்படலாமா? ஒரு கணிப்புத்தானே, எவ்வளவு தூரம் சரியாக கணித்திருக்கின்றோம் என்று எம்மை நாமே.. சோதித்துப் பார்க்க நல்ல ஒரு சந்தர்ப்பம். தவற விடாதீர்கள். துணிந்து போட்டியில் இறங்குங்கள்.
  3. டாக்டர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா அனுரவின் கட்சியில் வேட்பாளராக நிற்கிறார். சின்னம்: திசைகாட்டி.
  4. 15 பிளாஸ்ரிக் கதிரைகளுடன் ஒரு மேசையும் இலவசமாக கிடைக்கும். 😂 “ஆ”வெண்டு பார்த்துக் கொண்டு இருங்கோ… சுமந்திரன். 🤣 நீங்கள் செய்யிற வேலைக்கு... 15 செருப்படிதான் கிடைக்கும். வாங்க ரெடியாய் இருங்கோ. 😂
  5. "யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி" கந்தப்பு அவர்களால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. 👇 கீழுள்ள இணைப்பிற்கு சென்று, போட்டியில் பங்கு பற்றுங்கள். 👇
  6. யாழ். கள தேர்தல் போட்டியை ஆரம்பித்து வைத்தமைக்கு மிக்க நன்றி கந்தப்பு. 👍🏽 நல்ல கேள்விகள். நன்றாக யோசித்து பதில் சொல்ல வேண்டும். நிச்சயம் நானும் போட்டியில் கலந்து கொள்வேன். மற்றவர்களையும் போட்டியில் கலந்து கொள்ள ஊக்கப் படுத்துகின்றேன். மீண்டும் நன்றிகள் கந்தப்பு. 🙏
  7. ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து! ஹிங்குராங்கொட மற்றும் கல் ஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் எரிபொருள் ரயில் ஒன்று காட்டு யானைகள் மீது மோதுண்டு தடம் புரண்டுள்ளது. இதனால், மொத்தம் நான்கு பெட்ரோல் டேங்கர்கள் தடம் புரண்டதாகவும், அவற்றில் இரண்டு கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல யானைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவ‍ேளை ரயில் தடம் புரண்டதன் காரணமாக குறித்த மார்க்க மூடான ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் பாதையும் பாரியளவில் சேதத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் கொலன்னாவ பெற்றோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், இன்று (18) காலை கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை பயணிக்கவிருந்த ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டது. மட்டக்களப்பு-கொழும்பு பிரதான பாதையின் ரயில் சேவைகள் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. மீட்பு பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1404652
  8. ஆம் விசுகு. அதுகும்... இவரின் கொலைக்காக கருணாவும், புளொட்டும் கைகோர்த்தது என்றால், தமிழருக்கு பலன் கொடுக்கக் கூடிய எப்படியான ஆளுமை அவர் என்பதை புரிந்து கொள்ளலாம். தமிழன் நன்மை பெறுவதை இந்தத் தீய சக்திகள் விரும்பவில்லை.
  9. நன்றி நொச்சி. சில விடயங்களை வாசிக்க தந்தை செல்வாவிற்கு இப்படி வாரிசுகளா… என்ற ஆச்சரியமும், கவலையும் ஏற்படத்தான் செய்தது.
  10. தராகி சிவராமின் கொலையில்… கருணா, புளொட், ஶ்ரீலங்கா புலனாய்வுத்துறை என்று… பல குழுக்கள் ஒற்றுமையாக செயல் பட்டிருக்குது போலுள்ளதே. நல்ல விடயத்துக்கு… ஒன்று சேராதவர்கள், ஒரு பிரபலமான தமிழனை கொலை செய்ய ஒன்று சேர்ந்த கேவலம் மிக்க இனம். 😥
  11. நீங்கள் சொல்வதும் சரிதான். ✅ முஸ்லீம் வாக்குகளை இழந்து விடுவோம் என அவர்கள் இதனை கண்டும் காணாமல் இருக்கவே சாத்தியங்கள் அதிகம் உள்ளது. பொலிஸ் முறைப்பாடு, வழக்குக்கு காசு வாங்காமல் வாதாட… எங்களின் “லோயர்” மார் வர வேணுமே. 😎 அதுகும் எங்களின் பிரபல வக்கீல்களுக்கு… தமிழ் என்றால் கசக்குது. சிங்களம், முஸ்லீமுக்கு பிரச்சினை என்றால்… கேட்காமலே ஓடிப்போய் முன்னுக்கு நிற்கிறார்கள்.
  12. நல்ல செயலை செய்துள்ளீர்கள் நிழலி. 👍🏽 தேர்தல் நேரம் இதனை, உங்கள் நண்பரின் கவனத்திற்கு கொண்டு சென்றது நிச்சயம் உடனடியான நல்ல பலனை தரும் என நம்புகின்றேன். 🙂
  13. ராஜபக்சவின் மொட்டு கட்சிக் கூட்டம் என்று நினைத்து, அனுரவின் கட்சிக் கூட்டத்துக்கு வந்து விட்டாரோ. 😁 கன கட்சி இருந்தால், இப்பிடித்தான் குழம்ப வேண்டி வரும். 😂 வாக்குப் போடும் நாளில்… என்ன கூத்து எல்லாம் நடக்கப் போகுதோ… 🤣
  14. உண்மை. சிலருக்கு…. எதிர் கருத்தாட வேண்டும் என்பதற்காக, தங்களின் மனதில் உள்ள வக்கிரகங்களை சகட்டுமேனிக்கு அள்ளித் தெளிப்பது காலம் காலமாக உள்ள வியாதிதான். இதனை மாற்றுவது கடினம். இதை கணக்கில் எடுக்காமல் வழமை போல் கடந்து போவது சிறந்த மருந்து.
  15. ஈழப்பிரியன்… நீங்கள், கண்ணை மூடிக் கொண்டு சுமந்திரனின் எல்லாச் செயலையும் போற்ற வேண்டும் என்றால், உங்கள் மூளையை கழட்டி ஓரமாக வைத்து விட்டு அவரின் செம்பாகவோ, அல்லக்கையாகவோ…. மாற வேண்டும். 😂 அப்பிடி ஒரு பிழைப்பு பிழைக்க வேண்டிய அவசியம்… மற்றவர்களுக்கு இருக்கலாம், ஆனால் உங்களுக்கு இல்லை என்று எனக்கு நன்கு தெரியும். 🤣
  16. உடனே… மூலச் செய்தியை தேடிப் பிடித்து இணைத்தமைக்கு நன்றி ஈழப்பிரியன். 🙂
  17. நிழலி… நான்கு, ஐந்து மாதங்களுக்கு முன்பு தமிழ் பாடசாலை ஒன்று முஸ்லீம் பாடசாலையாக மாற்றப் பட்ட செய்தி யாழ். களத்திலும் இணைக்கப் பட்டிருந்தது.
  18. சிலரின் பின்னுட்டங்கள். இவரது அப்பா சந்திரகாசன் இரண்டாயிரத்தி பதின் ஒன்றா அல்லது பதின் மூன்றாம் ஆண்டா என்று சாியாகத் தொியவில்லை யூரோப் பாராளுமன்ற உறுப்பு நாடுகள் இலங்ககை்கு வந்து பொருளாதார தடை சம்பந்தமாக வந்திருந்த போது வவுனியா தம்பா விடுதியில் சந்தித்து எமது போராட்டத்துக்கு எதிராக சிங்கள அரசுக்கு ஆதரவாக பேசியிருந்தாா் நான் இன் னெருவரை எனது வாகனத்தில் வந்தவா் அவா்களை சந்திக்க சென்றிருந்த வேளையில் சந்திரகாசன் அவா்களை சந்தித்து விட்டு வெளியேறும் போது நானும் கூட்டிச் சென்றவரும் வெளியே எனது வாகனத்தில் ஏறும் போது எனக்கு கூறினாா் தந்தை செல்வாவின் மகன் என்றும் இந்தியாவில் இருந்து வந்து தமிழா்களுக்கு எதிராக கதைக்கின்றாா் என்று அவா் ஏசினாா் அன்றுதான் எனக்கு தொியும் தந்தை செல்வாவுக்கு மகன் உள்ளாா் என்று ...அவா் எமது இனத்துக்கு எதிரானவா். Loganathan Kokilan இவருடைய தந்தை சந்திரஹாசன் பேட்டி ஒன்று கேட்டேன். சில வருடங்களிற்கு முன்பு மிக கடுமையாக தேசிய விடுதலை போராட்டத்தை மிக கொச்சைபடுத்தி பேசி இருந்தார்.அத்தோடு இந்திய குள்ளநரிகளை வேறு நியபடுத்தி பேசி இருந்தார்.இது உண்மை ஆனால் அண்ணா எந்த ஊடகம் என ஞாபகம் வரவில்லை.புலி பயங்கரவாதம் இருக்கும் வரை இந்தியா எந்த ஆணியும் பிடுங்காது என வேற கூறி இருந்தார்.இப்ப 15 வருடமாக புலியும் இல்லை எலியும் இல்லை.எல்லாம் கழுதை விட்டை என்றால் மேல் விட்டையும் ஒன்று கிழ் விட்டையும் ஒன்று எல்லாம் கள்ள கூட்டம். Sivakumar Sunthararasa ஒபர் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள் தமிழ்நாட்டிலுள்ள ஈழஅகதிகளுக்காக நடத்துபவர்களுக்கு நல்ல ஒபர் எஜமானர்கள் தொடர்ந்து இ௫க்க வேண்டும் என்றால் அடிமைகள் இ௫க்கவேண்டும் என்ற கோட் பாட்டுடன் செயல்பட்டு வருகிறது ஒபர் பல அகதிமுகாங்களை நேரில் பாத்தேன் இவர்களுடைய செயல்பாட்டையும் பாத்தேன் ஈழத்தில் தமிழ்தேசப்பற்றுக்குள் இல்லாத போராளிகள் குழுக்களின் பிள்ளைகள் உறவினர்களுக்கே ஒபரில் வேலைவாய்ப்பு ஒட்டுமொத்தத்தில் றோ வின் மிகப்பெரிய கைக்கூலி. கந்தசாமி ஞானேந்திரன் ஞாணன்
  19. எல்லாரும் தேர்தல் வரும்போதுதான்... மைக்கை பிடித்து கருத்து சொல்கிறார்கள். அதிகாரத்தில்... இவர் இருக்கும் போது, அந்த லஞ்சம் கொடுத்தவரை கைது செய்திருக்க வேண்டியதுதானே. இப்ப வந்து... யாருக்கு நாடகம் போட்டு காட்டிக் கொண்டு இருக்கின்றா. சீனா போன்ற நாடுகளில்... இப்படி காலம் கடந்து தகவல்களை சொன்னால்... பிடித்து உள்ளே போட்டிருப்பார்கள். அல்லது ஆளே... அட்ரஸ் இல்லாமல் போயிருக்கும்.
  20. மேலே உள்ள உள்ள படத்தில் சுமந்திரனுக்கு அருகில் கறுப்பு வட்டத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா? இவர் யாழ் மாவட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர்களில் ஒருவராகிய இளங்கோவன். இவர் தந்தை செல்வாவின் பேரன் என்பதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். 1977ல் தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் வாய்ப்பு கேட்டபோது வாரிசு அரசியலுக்கு இடமில்லை என மறுக்கப்பட்டது. இப்போது அதே சந்திரகாசனின் மகனுக்கு தந்தை செல்வாவின் பேரன் என்று வழங்குவது “வாரிசு அரசியல்” இல்லையா? தந்தை செல்வாவின் பேரன் என்பதைவிட வேறு என்ன தகுதி இவருக்கு இருக்கிறது? இவர் தொண்டு நிறுவனம் மூலம் இந்தியாவில் அகதிகளுக்கு உதவி செய்து வருகிறாராம். சரி. அகதிகளுக்கு என்ன உதவி செய்துள்ளார் என்று கேட்டால் பதில் இல்லை. அகதிகளுக்கு இதுவரை ஏன் இந்திய குடியுரிமை பெற்றுக்கொடுக்கவில்லை என்று கேட்டால் இலங்கையில் தமிழர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே அகதிகளை திருப்பி அழைத்து வர வேண்டும் என்கின்றனர். சரி அகதிகளை ஏன் இன்னும் திருப்பி அழைத்து வரவில்லை என்று கேட்டால் இலங்கையில் இன்னும் சுமூக நிலை ஏற்படவில்லை என்கின்றனர். அதாவது அகதிகள் தொடர்ந்தும் அகதிகளாகவே இருக்க வேண்டும். இவர்கள் அதை காரணம் காட்டி தொண்டு நிறுவனம் நடத்தி தங்கள் வயிற்றை நிரப்ப வேண்டும். தமிழ்நாட்டில் போராளிகளால் ஆபத்து என்று காரணம் காட்டி நீண்ட காலம் பொலிஸ் காவல் பெற்ற தலைவர் என்ற பெருமை பெற்றவர் இவரின் தந்தை சந்திரகாசன். சுமந்திரனுக்கு வேண்டப்பட்டவர், இந்திய தூதரின் சிபாரிசு பெற்றவர் என்பதற்காக ஒருவரை தமது பிரதிநிதியாக தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமா? தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். தோழர் பாலன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.