Everything posted by தமிழ் சிறி
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
எலே… சண்முகம், வுட்றா வண்டிய ரஸ்யாவுக்கு.... 😂 🤣
-
அனைவரது கலாசார அடையாளங்களையும் ஏற்றுக்கொண்டு சுதந்திரமான நாட்டை உருவாக்குவது தான் எமது எதிர்பார்ப்பு - அநுர குமார
1983 ல் கொழும்பில் இந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் வர்த்தகரை கொடூரமாக எரித்துக் கொன்றவர் ஜேவிபியின்( தேசிய மக்கள் சக்தி ) மிக முக்கிய பிரமுகரான ரில்வின் சில்வா. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தினை பிரித்து கூறு போட்டதும் இதே அநுரகுமார எனும் இனவாதியின் ஜேவிபி கும்பல் என்பதை சில தமிழர்கள் மறந்து செயற்படுவது தவறானது. Kunalan Karunagaran
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
சுமந்திரன்... தமிழ் படிக்கத் தெரியாத சிங்களவனுக்கு, முதல் பத்திரிகை வைத்து... தனது சிங்கள விசுவாசத்தை காட்டியது மகா தப்பு. அதுகும் யாழ்ப்பாணத்தில் செய்தது... மன்னிக்க முடியாத குற்றம்.
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
இந்தப் பக்கத்தின் தலைப்பே... "சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்" என்பது தானே, அதைப் பற்றித்தானே இங்கே கதைக்கின்றோம். பேசு பொருளைப்பைப்பற்றி... கவி அருணாசலத்துக்கு சொல்லியதை நீங்கள், உங்களுக்கு சொன்னதாக தொப்பியை எடுத்து போடுகிறீர்கள். கபிதனுக்கு சொன்னதை... கவி அருணாசலம் தனக்கு சொன்னதாக தொப்பியை எடுத்துப் போடுகிறார். ஏன்... ஏன்.... ? திரும்ப ஒருக்கால்.... முதலில் இருந்து நிதானமாக வாசியுங்கள், இந்தக் குழப்பம் ஏற்பட சந்தர்ப்பமே ஏற்படாது.
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு! வேலை செய்யும் இடங்களில் சாப்பாடு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளையை உடலுறவுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு ரஷ்ய மக்களுக்கு புட்டின் வலியுறுத்தியதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வரும் நிலையில், உக்ரைனுக்கு எதிராக போர் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு இது மிகப்பெரிய கவலையை அளித்துள்ளது. இதனால் மக்கள் குழந்தைகள் அதிக அளவில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், நம்முடைய முன்னோர்கள் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்ற வரலாறு உண்டு எனவும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் பணிபுரியும் இடத்தில் இடைவேளையின்போது உடலுறவு கொள்ளுமாறு ரஷ்யர்களுக்கு புட்டின் வலியுறுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் தற்போதுள்ள மக்கள் தொகை அப்படியே நிலைத்திருக்க ஒரு பெண்ணுக்கு 2.1 என்ற சதவீதம் என்ற அளவில் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஆனால் தற்போது இது 1.5 சதவீதமாக குறைந்துள்ளது. 1999-க்கும் பிறகு தற்போது ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஜூன் மாதம் ஒரு லட்சத்திற்கும் குறைவான குழந்தைகள்தான் பிறந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு முதல் பாதியில் பிறந்த குழந்தைகளை விட தற்போது 2024 முதல் பாதியில் 16 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே காலக்கட்டத்தில் உக்ரைன் சண்டை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் 49 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்கள் தொகை வீழ்ச்சி 18 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்கள் குழந்தைகள் அதிக அளவில் பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு மருத்துவ சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. செல்யாபின்ஸ்க் பிராந்தியம் 24 வயதிற்கு உட்பட்ட பெண் மாணவிகள் குழந்தை பெற்றுக் கொண்டால், முதல் குழந்தைக்கு 8500 டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளது. கருத்தடைக்கு கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவாகரத்துக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் தட்யான்யா புட்ஸ்கயா முதலாளிகள் அவர்களுடைய பெண் ஊழியர்களை குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க வலியுறுத்தும் கொள்கைக்கு பரிந்துரை செய்துள்ளார். அரசியல்வாதியான அன்னா குஸ்னெட்சோவா, பெண்கள் 19 அல்லது 20 வயதில் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குடும்பம் மூன்று அல்லது அதற்கு மேலான குழந்தைகளை பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, “ரஷ்ய மக்களைப் பாதுகாப்பதே எங்கள் மிக உயர்ந்த தேசிய முன்னுரிமை. ரஷ்யாவின் தலைவிதி… நம்மில் எத்தனை பேர் இருப்போம் என்பதைப் பொறுத்தது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி” என புட்டின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/2024/1399824
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
எங்கே கவி அருணாசலம். கபிதனுக்கு பதில் போட்டதையா சொல்கிறீர்கள். அவர்தான்... முதல் நொட்டினவர். அதற்கான பதில்தான் அது. உங்களுக்கு அல்ல.
-
ஜனாதிபதி ரணிலுடன் சசிகலா ரவிராஜ், மாவையின் மகன் கலை அமுதல் சந்திப்பு
இன்னும்.... நாலு நாளில், எல்லா சந்திப்பும் முடிந்து விடும். பிறகு அடுத்த தேர்தலுக்கு மீண்டும் சந்திப்பு களைகட்டும். அது மட்டும்... அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். மாவையின் மகன் தகப்பனைப் போல பாடசாலை மாணவர்களை நினைவூட்டும் வகையில் கையை கட்டிக் கொண்டு இருக்கின்றார். வாருங்கள்.. தந்தையை போல், தமிழ் மக்களுக்கு சேவை செய்யாமல், வித்தியாசமாக சேவை செய்ய வாழ்த்துக்கள்.
-
சஜித்தின் வாக்குகளை சிதறடிக்கவே சுமந்திரனின் ஆதரவு நாடகம் – கஜேந்திரகுமார்!
அதுதானே.... சாத்தான். தேர்தலை பகிஸ்கரிக்கச் சொன்னவர், மற்றவர்களின் வாக்களிக்கும் உரிமையில் ஏன் தலையிடுகின்றார். எல்லாரும் தன்னுடையதை மோந்து பார்க்கிறதே விட்டிட்டு, மற்றவர்களை மோந்து பார்த்துக் கொண்டு திரிகிறார்கள். 😂 🤣
-
வவுனியாவில் 15 வயது சிறுமி தந்தை, மற்றுமொரு இளைஞரால் துஷ்பிரயோகம்
கந்தையா.... அண்ணை, இந்தச் சகதி பிடித்த செய்திக்குள் இருந்து வெளியே வாருங்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு... இன்னும் ஐந்து நாட்களே உள்ளது. அதை விட்டிட்டு இதற்குள் நின்று உழன்று கொண்டிருக்காதீர்கள். தேர்தல் செய்திகளுக்குள் போய் உங்கள் தரமான கருத்துக்களை வையுங்கள். 😂 அதுதான்... தற்போது முக்கியம். 👍
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
சுமந்திரனின் அடுத்த, அடிப்பொடி... வெள்ளையடிக்க வந்து விட்டார். 😍 சுமந்திரனை விமர்சித்த ஆத்திரத்தில்... கேனையன்கள் என்று எல்லாம் மற்றைய உறுப்பினர்களை சொல்லக் கூடாது. கூல் டவுன் கபிதன். 😂 பல்கலைக்கழகம் எல்லாமே போய் படித்ததனிங்கள், பண்பாய் எழுதப் பாருங்கோ. 😎 அதிக கோபம்.. உடல் நலத்திற்கு, தீங்கு விளைவிக்கும். 🤣
-
கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா
அப்ப.... இங்கு உள்ள செய்திகளுக்கெல்லாம், அந்தந்த ஊர் மக்கள் தான் கருத்து சொல்ல வேணுமோ... 😮 அப்ப ஏன்... நீங்கள் மற்ற ஊர் செய்திகளுக்குள்ளை மூக்கை நுழைக்கிறீங்கள். 😂 குருக்கள் "குசு" விட்டால்... ஓகே போல இருக்குதே.... 🤣
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
//"சுதந்திரம் தேடும் இனத்துக்கு சுமந்திரம் சூது கவ்வுது தலை சுத்துது ! தந்திரம் இதுவோ மந்திர வேதமோ சுந்தர தமிழில் மந்தியின் பாச்சலோ?"// கள நிலைமையை நன்கு புரிந்து எழுதப் பட்ட அருமையான கவிதை. 😂 நன்றி தில்லை. 👍
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
நுணாவிலான் அவர்களின் தந்தையின் இழப்பு செய்தியை கேட்டு மனம் வருந்தினோம். அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் நுணாவிலானுக்கும், குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன்... அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி. 🙏 🙏 🙏
-
சுமந்திரனின் பத்திரிகை அறிமுகம்
கவி அருணாசலம், நீங்கள்.. சுமந்திரனுக்கு வெள்ளை அடிப்பது எமக்கும் தெரிகின்றது. அது உங்களது தனிப்பட்ட விடயம். அதைப்பற்றி நானும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால்... தமிழரசுகட்சியின் முன்னணி அரசியல்வாதி எனப்படுபவர், தனது முதல் பத்திரிகையை சிங்களவராகிய சஜித்துக்கு கொடுத்து அறிமுகம் செய்தது பற்றியதுதான் இங்கு பேசு பொருள். முதல் பத்திரிகையை, முதலில் கொடுக்க ஒரு தமிழறிஞர் கூட கிடைக்கவில்லையா...? என்பதுதான் எமது ஆதங்கம். புரிந்தால் சரி.
-
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு.... யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கள ஆய்வுகள் முன்னெடுப்பு!
போன பொதுத்தேர்தலில்... சுமந்திரன் யாழ் மத்திய கல்லூரியில் வாக்கு எண்ணும் இடத்திற்கு பின்கதவால் நுழைந்து, திருமதி ரவிராஜுக்கு கிடைத்த வாக்குகளை தனக்கு மாற்றி பாராளுமன்றம் போன மாதிரி... இந்த ஜனாதிபதி தேர்தலிலும் "கோக்கு மாக்கு" வேலை செய்யப் பார்ப்பார். இருக்கிற பின்கதவுகளை எல்லாம் இறுக்கி பூட்டி விடுங்க சார்.
-
கருத்து படங்கள்
- சஜித்தின் வாக்குகளை சிதறடிக்கவே சுமந்திரனின் ஆதரவு நாடகம் – கஜேந்திரகுமார்!
சஜித்தின் வாக்குகளை சிதறடிக்கவே சுமந்திரனின் ஆதரவு நாடகம் – கஜேந்திரகுமார்! இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கும் விடயமானது ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவான வாக்குகளை சேர்ப்பதற்கான சதி நடவடிக்கை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ”தமிழ்த் தேசியக் கட்சிகள் சஜித் பிரேமதாசவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நிலை சிங்கள மக்கள் மத்தியில் சஜித்திற்கான ஆதரவினை குறைக்கும் நடவடிக்கையாகும். சஜித் பிரேமதாச சிங்கள தேசிய வாதத்திற்கு நோ்மையாக நடந்து கொள்வாா் என்னும் நிலைப்பாட்டில் குழப்பத்தினை ஏற்படுத்தி அவரது தென்னிலங்கை வாக்குகளை ரணிலின் பக்கம் திரும்பும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சஜித் பிரேமதாசவினை ஆதாிக்கும் வடக்கு கிழக்கினைப் பிரதிநித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஆதரவு கிடையாது. எனினும் இந்த நிலைப்பாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தினையும் எற்படுத்தப்போவதில்லை. ஆனால் தென்னிலங்கையில் குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாடு குழப்பத்தினை ஏற்படுத்தும். ஆகவே நாம் இவை அனைத்தையும் தொகுத்துப் பாா்த்தால் இன்று தமிழ்த் தேசியத்திற்கு நோ்மையாக கொடுக்கக்கூடிய ஒரு நோ்மையான வழி தோ்தலைப் பகிஸ்காிப்பது மட்டுமே. எனவே 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதே எமது கட்சியின் நிலைப்பாடு” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் சுட்டிக் காட்டினாா். https://athavannews.com/2024/1399691- ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு.... யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கள ஆய்வுகள் முன்னெடுப்பு!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கள ஆய்வுகள் முன்னெடுப்பு! ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தின் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றையதினம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த கள ஆய்வில் மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கள ஆய்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் கி.அமல்ராஜ், வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு ஏ. ஜே. ஹாலிங்க ஜெயசிங்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஆகியோா் பங்குபற்றினார்கள். https://athavannews.com/2024/1399712- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
யாழ். வணிகர் கழகத்தினருடன் அரியநேத்திரன் விசேட சந்திப்பு! யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கழக காரியாலத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 75 வருடங்களாக தமிழர்கள் தங்கள் உரிமைக்காக பலவகையில் போராடி இலங்கை அரசு தமிழ் மக்களுக்கான எந்த தீர்வையும் இதுவரை வழங்கவில்லை எனவும் பல ஒப்பந்தங்கள், பல வட்டமேசை மாநாடுகள் பல பேச்சுவார்த்தைகள், பல வாக்குறுதிகள் நடைபெற்றும் எதையும் நிறைவேற்றவில்லை எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்திய, இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆகக்குறைந்த அதிகாரமான 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தாது, அனைவரும் ஏமாற்றப்பட்டதாகவும், எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தீர்வுக்கான புதிய அணுகுமுறையாக அணுகி ஒவ்வொரு தமிழ் மக்களும் சங்குச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399716- கருணா அம்மான் கட்சிக்குள் உடைவு; கட்சியிலிருந்து வெளியேறினார் ஜெயா சரவணா
நரியன் ரணில்.... கருணா கட்சியையும் பிரித்துப் போட்டார் போலுள்ளது. 😃 நாசமாய் போனதுகள் பிரிந்து, சிதறி... சின்னா பின்னமாய் போகட்டும். 😂 இதுகள் ஒன்றாய் இருந்து... ஊர், உலகத்துக்கு என்ன லாபம்.? 🤣- மோதியை விமர்சித்த 2 அமைச்சர்கள் ராஜினாமா - மாலத்தீவு இந்தியா பக்கம் மீண்டும் திரும்புமா?
இந்தியாவுடன் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை! -மாலைத்தீவு. இந்தியா – மாலைத்தீவு இடையே அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த மோதல் போக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான தவறான புரிதல்கள் தற்போது தீர்த்து வைக்கப்பட்டு விட்டன எனவும் மாலைத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது’ மாலைத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேறும்படி, ஜனாதிபதி முகமது முய்சு உத்தரவிட்டதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. எங்கள் அரசின் ஆரம்ப காலத்தில், இந்தியாவுடன் கசப்பான உறவு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியா – மாலைத்தீவு இடையே இருந்த தவறான புரிதல்கள் தற்போது தீர்த்து வைக்கப்பட்டு விட்டன. சீனா மற்றும் இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். இரு நாடுகளும் மாலைத்தீவை ஆதரிக்கின்றன’ இவ்வாறு மாலைத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர் கூறியுள்ளார். https://athavannews.com/2024/1399588- வெள்ளத்தால் நைஜீரியாவில் 274 கைதிகள் தப்பியோட்டம்!
வெள்ளத்தால் நைஜீரியாவில் 274 கைதிகள் தப்பியோட்டம்! நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தை அடுத்து அங்குள்ள சிறைச்சாலையில் இருந்து 270 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த அனர்த்தத்தால் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் 1,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேசமயம் 281 கைதிகள் பாதுகாப்பான நிலையங்களுக்கு மாற்றப்பட்டபோது தப்பியோடியுள்ளனர் எனவும், அவர்களில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தப்பியோடியவர்களின் அடையாளங்கள், அவர்களின் விபரங்கள் உள்ளிட்டவை வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனமான NEMA இன் அண்மைய தரவுகளின்படி, வெள்ளம் காரணமாக நைஜீரியா முழுவதும் 269 பேர் இறந்துள்ளனர் எனவும், 6,40,000 க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1399693- இது நகைச்சுவை தத்துவ கதை.
”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் . . “எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி. . ஜட்ஜூக்கு சுருக்கென்றது. . பக்கிரியை ஜெயிலுக்கு அழைத்துப் போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார் ஜட்ஜ். . ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார், . “இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு” . பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான். . ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார். . “பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார். . அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள். . முதல் நாளே பக்கிரி பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள். . அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால் ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே! . எல்லோரும் விடுதலை ஆகும் அன்று ஜட்ஜ் வந்தார். . “சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார். . “ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு செக்கண்டில தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான் பக்கிரி. . “பிக் பாக்கெட் கொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும். . ஜட்ஜ் ஒரு திருக்குறள் அபிமானி. வள்ளுவர் சொன்னதைத்தான் அவர் செய்தார். . தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து . குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான். Benitto Kumar- இரசித்த.... புகைப்படங்கள்.
கண் கலங்க வைக்கும் புகைப்படம். 😢- தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
- சஜித்தின் வாக்குகளை சிதறடிக்கவே சுமந்திரனின் ஆதரவு நாடகம் – கஜேந்திரகுமார்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.