Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தனிமையின் கொடுமை : 40,000 க்கும் மேற்பட்ட முதியவர்கள் மரணம்! 2024ஆம் ஆண்டு முதல் அரை வருட காலத்தில் ஜப்பானில் 40,000-க்கும் மேற்பட்ட முதியோர் தனிமையில் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு மரணித்த முதியவர்களில் 4000 பேர் இறந்து ஒரு மாதம் கழித்தும், 130 பேர் ஒரு வருடம் கழித்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மரணங்கள் ஜப்பானில் அதிகரித்து வரும் தனிமைப் பிரச்சனையின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாகவும், பல முதியோர் கவனிப்பாரின்றி தமது இறுதிக் காலத்தை தனிமையில் கழித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பிரச்சனைக்கு தீர்வு காண,அரசு மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது. https://athavannews.com/2024/1397826
  2. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா இன்றி வரும் விண்கலன்! சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இல்லாமல் அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் மட்டும் பூமிக்கு திரும்பும் என நாசா தெரிவித்துள்ளது. அவர்கள் பயணித்த போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக அமைந்துள்ளதுடன் விண்வெளி மையத்தில் சுமார் 90 நாட்களாக உள்ள அவர்களை பூமிக்கு அழைத்து வர நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆளில்லாமல் போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டு அது சனிக்கிழமை அன்று தரையிறங்கும் என நாசா தெரிவித்துள்ளது https://athavannews.com/2024/1397833
  3. புலி... பசித்தாலும், புல்லை தின்னாது. 😂 நான்... ஜேர்மனியிலேயே இருந்து விட்டு போகின்றேன். 🤣
  4. சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவு.
  5. கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே அநுரவும் சஜித்தும் செய்கின்றனர்! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே மீண்டும் அநுரகுமார மற்றும் சஜித் ஆகியோர் செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். தொம்பே பிரதேசத்தில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இரு வருடங்களுக்கு முன்பு வரிசையில் நின்றதாலேயே இன்று பலர் இங்கு நிற்கிறீர்கள். அன்று இறப்பதற்கும் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. பிரதமர் விலகினால் எதிர்கட்சித் தலைவருக்கு இடமளிக்க வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி கூறினார். ஆனால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள பயமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். சரத் பொன்சேகாவும் மறுத்தார். அனுரகுமார கேட்கவே இல்லை. ஆனால் நாட்டின் நிலை மோசமாக உள்ளதை அறிந்தே நான் ஏற்றுக்கொண்டேன். இப்போது என்னோடு இருப்பவர்கள் எனக்கு ஆதரவளித்தால் நான் ஏற்றுக்கொண்டேன். நாட்டை பொறுப்பேற்க விரும்பாத சஜித்தும் அனுரவும் நான் பதவியேற்பதையும் விரும்பவில்லை. சஜித்திற்கும் வழங்கும் வாக்குகள் அனுரவுக்கு வழங்கும் வாக்குகளுக்கு சமமானவை என்பதை ஐக்கிய தேசிய கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும். அதனால் செப்டம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது,முதலீட்டு வலயமும் கிடைக்காது” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1397771
  6. ஸ்ரீலங்காவுக்கு "கொலிடே" போற ஆட்கள் எல்லாம், இப்பவே போயிட்டு வந்திடுங்க. 😂 🤣
  7. அவசரப் படாதீங்க சஜித் பிரேமதாச. சுமந்திரன்தான் உங்களை ஆதரித்துள்ளார். தலைவர்கள் எவருமே இல்லாமல்... தமிழரசு கட்சி மத்தியகுழுக் கூட்டம் என்ற பெயரில் ஒன்றை சுமந்திரன் கூட்டி உங்களை ஆதரிப்பதாக கேலிக்கூத்து ஆடியிருக்கின்றார். இந்த முடிவு தமிழரசுக்கட்சியின் முடிவு இல்லை என்பதை... தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உறுதிப்படுத்தியிருக்கிறார்.
  8. சுண்டெலி மாதிரி இருந்து கொண்டு, யானையின் காதில் புகுந்து விளையாடுது. 😂 பிற்குறிப்பு: இந்தியாவை யானை என்ற உதாரணம் ஓவர்தான். அதற்காக மன்னிக்கவும். 🤣
  9. சுமந்திரனே.... செல்லாக் காசு. அவரே... திருமதி ரவிராஜின் வெற்றியை தட்டிப் பறித்து பாராளுமன்றம் போனவர். இதுக்குள்ளை... அவர் சஜித்துக்கு போடச் சொல்லி சிபாரிசு பண்ணுகிறாராம். 😂 இவங்களின் அலப்பறை தாங்க முடியவில்லை. 🤣
  10. ரணிலின்… 60 கோடியை அமுக்கி விட்டார்கள். தற்செயலாய் ரணில் வென்றால்… சாணக்கியனும், சுமனும் நாட்டை விட்டு தப்பி ஓட வேண்டி வரும். 😂
  11. நல்லூர் கோவிலில்... இஸ்லாமிய சகோதரிகள். அரியும், சிவனும்.. ஒண்ணு, அதை அறியாதவன் வாயில் மண்ணு. 😂
  12. இந்தக் கூட்டத்திற்கு மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன் போன்றவர்கள் சமூகமளிக்கவில்லை. இது... சுமந்திரன் குரூப்பின், மற்றுமொரு தில்லாலங்கடி வேலை. 😎 கட்சியை நடுத் தெருவில் வைத்து, நாறப் பண்ணிக் கொண்டு இருக்கிறாங்கள். 😂 எல்லாம்.. அந்த சம்பந்தனுக்கு, சமர்ப்பணம். 🤣
  13. பொது வேட்பாளர் தமிழ்த் தேசியத் தீவிரவாதியா? நிலாந்தன். அனுர,ரணில், சஜித் ஆகியோரின் தேர்தல் அறிக்கைகள் வெளிவந்துவிட்டன. எதிர்பார்க்கப்பட்டது போல அவை அமைந்திருக்கின்றன. 13க்கு அப்பால் அவர்களிடம் தீர்வு கிடையாது. மேலும் இனப் பிரச்சனைக்கான தீர்வை நோக்கி உருவாக்கப்படும் புதிய யாப்பு அடுத்த நாடாளுமன்றத்தில் தான் தீர்மானிக்கப்படும். இப்பொழுது கேள்வி என்னவென்றால், பிரதான தென்னிலங்கை வேட்பாளர்கள் எதைத் தர கூடும் என்பது தெளிவாகக் கூறப்பட்டு விட்டது. தபால் மூல வாக்கெடுப்புக்கு சில நாட்களே உண்டு. தமிழரசுக் கட்சி அதன் உத்தியோகபூர்வ முடிவை இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரை அறிவிக்கவில்லை. ஆனால் அதன் திருகோண மலைக் கிளை பொது வேட்பாளருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து கிளிநொச்சிக் கிளையும் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கட்சியின் கீழ் மட்டத்தில் பொது வேட்பாளருக்கு ஆதரவான அலை எழத் தொடங்கிவிட்டது.அதை மேற்சொன்னை இரண்டு மாவட்டக் கிளைத் தீர்மானங்களும் நமக்கு உணர்த்துகின்றன. இதனிடையே சுமந்திரன் தனது twitter பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். “தமிழ் வாக்குகள் பெருந்தொகையாக அரியநேந்திரனுக்கு விழுமாக இருந்தால், தமிழ் அரசியலின் போக்கு மேலும் தீவிர நிலைப்பாட்டை நோக்கித் திரும்பும். தமிழ் வாக்குகள் அரியநேத்திரனுக்குக் குறைவாக விழுந்தால் தமிழ்த் தேசிய அரசியல் போக்கு பலவீனமடையும். விளைவு எதுவாயினும், இறுதியிலும் இறுதியாக இழப்பு தமிழ் மக்களுக்குத் தான்.” சுமந்திரன் கூறுவது போல தமிழ்த் தேசிய தீவிரவாத நிலைப்பாடு என்பது என்ன? ஒரு பொது வேட்பாளரின் நிலைப்பாடு தமிழ் தேசிய தீவிரவாத நிலைப்பாடு என்று அவர் கூற வருகிறார். பொது வேட்பாளர் நாட்டை பிரிக்க சொல்லி கேட்கிறாரா? அவர் தெளிவாகக் கூறுகிறார்.தமிழ் மக்களை ஒன்று திரட்டப் போகிறோம் என்று. திரண்ட தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை உரத்த குரலில் சமரசத்துக்கு இடமின்றிக் கூறுவார்கள். அவ்வளவுதான். தமிழ் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதனை பலமான குரலில் பலமான நிலையில் நின்றபடி கூறுவது தீவிரவாதமா? தமிழ் மக்கள் ஒற்றுமைப்படுவது தீவிரவாதமா? தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வது தீவிரவாதமா? இல்லை. தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வது என்பது இலங்கைத் தீவின் பன்மை தேசிய பண்பை பலப்படுத்துவதற்காகத்தான். முதலில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக பலப்பட வேண்டும். அதாவது தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதை, தேசிய இனம் என்பதை சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் போதுதான் இலங்கைத் தீவில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்கள் அல்லது தேசிய இனங்கள் உண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்படும். அதுதான் இலங்கைத் தீவின் இன யதார்த்தம். அதை ஏற்றுக்கொள்வதுதான் இலங்கை தீவை ஐக்கியமாகக் கட்டி எழுப்ப ஒரே வழி. அதுதான் இலங்கைத் தீவின் இறைமையை பாதுகாக்கும்; சுதந்திரத்தைப் பாதுகாக்கும். எனவே தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வது இலங்கைத் தீவை உடைப்பதற்காக அல்ல. இலங்கைத் தீவை ஒரு பலமான நாடாக கட்டி எழுப்புவதற்காகத் தான். தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தை முன்வைத்த கருத்துருவாக்கிகள் தமிழ் மக்கள் பொதுச்சபையை தொடங்கிய பொழுது அதன் அமர்வுகளில் ஒரு விடயத்தை திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டினார்கள். தென்னிலங்கை வேட்பாளர்கள் என்ற வார்த்தையை பாவியுங்கள். சிங்கள வேட்பாளர்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என்று. ஏனென்றால்,தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்துருவம் பொசிட்டிவ் ஆனது. அது நெகட்டிவ் ஆனது அல்ல. ஆனால் அவ்வாறு தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்துவது தீவிரவாதம் என்று சுமந்திரன் கருதுகின்றாரா? தேசியவாத அரசியல் என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரட்டுவதுதானே? இந்த அடிப்படை உண்மை தெரியாமலா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைத்தார்கள்? இந்த அடிப்படை உண்மை தெரியாமலா தனியோட்டம் ஓடினார்கள்? இந்த அடிப்படை உண்மை தெரியாமலா இப்பொழுதும் தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக கருதுரைப்பதாக கூறிக்கொண்டு தமிழ் மக்களைச் சிதறடிக்க முற்படுகிறார்கள்? ஆனால் அவருடைய கட்சியின் அடிமட்டம் அவருக்கு எதிராக முடிவு எடுக்க தொடங்கிவிட்டது. இரண்டு மாவட்ட கிளைகள் அந்த முடிவை வெளிப்படையாக அறிவித்து விட்டன. இனி வரும் நாட்களில் ஏனைய மாவட்ட கிளைகள் மத்தியிலும் அது நொதிப்பை ஏற்படுத்தும்.அதன் விளைவாக தமிழ் பொது வேட்பாளரின் ஆதரவுத் தளம் மேலும் பலமடையும்; பரவலடையும். தமிழ் பொது வேட்பாளரின் நோக்கம் எந்த ஒரு கட்சியையும் உடைப்பது அல்ல. உடைந்து கிடப்பவற்றைச் சேர்ப்பது தான். ஒரு நெல்மணி கூட வீணாக சிந்தக் கூடாது என்று அவர்கள் கூறுகிறார்கள். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு எல்லாருக்குமானது அது அதற்குள் வராத கட்சிகளுக்குமாக எப்பொழுதும் திறக்கப்பட்டு இருக்கின்றது என்று தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் திரும்பத் திரும்பக் கூறுகின்றார்கள். எனவே தமிழ் பொது வேட்பாளருக்கு வெளியே நிக்கும் கட்சிகள் தமிழ்த் தேசிய கட்டமைப்பை விரோதமாக பார்க்கத் தேவையில்லை. பொது வேட்பாளருக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை விநியோகிக்கச் செல்லும் பொழுது மக்கள் தெரிவிக்கும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால், ஒரு உண்மை பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. தமிழ் மக்கள் கட்சி அரசியலின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். அரசியலில் அவர்கள் ஏறக்குறைய சலிப்படைந்து விட்டார்கள். ஒரு பகுதியினர் விரக்தி அடைந்தும் விட்டார்கள். இது ஆபத்தான ஒரு வளர்ச்சி. பொதுவாக கட்சி அரசியல் எனப்படுவது அதன் ஆதரவாளர்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்தெடுப்பதுதான். மக்களை ஓர் அரசியல் சமூகமாகத் திரட்டுவது தான். நம்பிக்கை இழந்தவர்களை வைத்து கட்சியைக் கட்ட முடியாது. நம்பிக்கை இழந்தவர்களை வைத்து நாட்டையும் கட்டி எழுப்ப முடியாது. தேசத்தையும் கட்டி எழுப்ப முடியாது. எனவே தேர்தல் வார்த்தைகளில் கூறின், தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டி எழுப்ப வேண்டும். தமிழ் பொது வேட்பாளர் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறார். கிழக்கில் இருந்து வந்திருக்கும் ஒரு அரசியல்வாதி அவ்வாறு தமிழ்த் தேசிய அரசியலில் நம்பிக்கையை, திரட்சியை கட்டி எழுப்பும் குறியீடாக மாறி வருவது என்பது தமிழ் மக்களின் தாயக ஒருமைப்பாட்டை மேலும் பலப்படுத்தும்; பாதுகாக்கும். வடக்கும் கிழக்கும் ஏற்கனவே சட்டரீதியாகப் பிரிக்கப்பட்டு விட்டன. அரசாங்கம் திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் வடக்குக்கும் கிழக்குக்கும் இடையிலான நிலத் தொடர்ச்சியை அறுப்பதில் கணிசமான வெற்றிகளைப் பெற்று வருகிறது. தவிர நிர்வாக அலகுகளை இணைப்பதன் மூலமும் வடக்குக்கும் கிழக்குக்கும் இடையிலான பிணைப்புகள் அறுக்கப்படுகின்றன. நில ஒருமைப்பாடு இல்லையென்றால் தாயகம் இல்லை. தாயகம் இல்லை என்றால் தேசியவாதமும் இல்லை. எனவே வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைப்பது என்று முடிவு எடுத்து கிழக்கிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கும் ஒரு பொது வேட்பாளர் தமிழ் ஐக்கியத்தின் குறியீடாகவும் தமிழர் தாயக ஒருமைப்பாட்டின் குறியீடாகவும், தமிழ் ஐக்கியத்தின் குறியீடாகவும் மேல் எழுவாரா இல்லையா என்பதை தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு அள்ளிக் கொடுக்கப் போகும் வாக்குகளின் தொகை தான் தீர்மானிக்கும். https://athavannews.com/2024/1397747
  14. நேரலை: தேர் திருவிழா - நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தான பெருவிழா - Nallur Festival | 2024
  15. தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 44ஆவது நினைவு தினம் ! தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 44ஆவது நினைவு தினம் வவுனியாவின் நகர மத்தியில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் சிலை அருகே இடம்பெற்றது. வவுனியா நகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தனிநாயகம் அடிகளாரின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், தனிநாயகம் அடிகளார் தொடர்பான சிறப்புரையும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் வவுனியா நகரசபை செயலாளர் அ.பாலகிருபன், முன்னாள் நகர சபை உறுப்பினர் சேனாதிராசா, தமிழ்மணி அகளங்கன், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தலைவர் ரவீந்திரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்படத்தக்கது. https://athavannews.com/2024/1397700
  16. ஈழத்தின் புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று. ஈழத்தின் வரலாற்று புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா இன்று காலை மிக சிறப்பாக இடம்பெற்றது. நல்லூர் பெரும் திருவிழாவின் 24 ஆம் நாளான இன்று காலை 6.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகியதை தொடர்ந்து பக்தர்களின் விண்ணைமுட்டும் அரோகரா கோக்ஷம் முழங்க தேர் திருவிழாவில் சித்திரவேலைப்பாடுகளுடன் கூடிய திருத்தேரில் ஏறிவந்த நல்லையம்பதி முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்திருந்தார் தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு நல்லுார் கந்தனின் அருளாசியைப்பெற்றிருந்தனர். இதேவேளை, ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி நல்லூர் கந்த பெருமானை பக்தி மயத்துடன் வழிபட்டிருந்தனர். நல்லுார் கந்தனின் தேர் இன்று 60 வருடத்தை பூர்த்தி செய்து மணிவிழா காண்பது இன்றைய திருவிழாவின் விஷேட அம்சமாகும். இலங்கை, இந்திய கலைஞர்களின் வடிவமைப்பில் 1964 ஆம் ஆண்டு இந்த தேர் முதன்முதலில் நல்லுாரான் திருவழாவில் இழுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நல்லூர் கந்தனின் வருடாந்த பெருவிழா உற்சவம் ஒவ்வொரு வருடமும் “ஆடி அமாவாசை” தினத்திலிருந்து ஆறாம் நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி “ஆவணி அமாவாசை”தினத்தன்று தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கடந்த ஓகஸ்ட் 9 ஆம் திகதி கொடியேற்றத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழா ஆரம்பமாகியிருந்த நிலையில், 25 ஆம் திருவிழாவான நாளை திங்கட்கிழமை காலை 6.15 மணிக்குத் தீர்த்த உற்சவம் இடம்பெறும். மாலை 4.30 மணிக்குக் கொடியிறக்கத்துடன் பெருந் திருவிழா நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1397712
  17. //வாழ்வாதாரம் பிரஜாவுரிமைகளை பெற முடியாதவாறு நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். தமிழ் மக்களின் உரிமைகள் பறிபோயுள்ளன. தமிழர் அதிகளவாக வாழும் பகுதிகளில் பௌத்தமயமாக்கல் இடம்பெறுவதை இந்த தேர்தலில் முன்னிலைப்படுத்துவதற்காகவும் அதனை மக்கள் முன் கொண்டு செல்வதற்காகவுமே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன். இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் நாங்கள் இதனையே தெரிவிக்கின்றோம்.// //நாங்கள் தமிழர்கள் 1948 ம் ஆண்டு முதல் பல தலைவர்களின் ஜனாதிபதிகளின் ஆட்சிகளின் கீழ் வாழ்ந்துள்ளோம், தேர்தல் வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன நிறைவேற்றப்படவில்லை. நான் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக போட்டியிடவில்லை, தமிழ் மக்களின் தேவைகளிற்காக நாங்கள் போட்டியிடுகின்றோம் என்ற செய்தியை தெரிவிப்பதற்காக நாங்கள் போட்டியிடுகின்றோம்.// //மூன்று பிரதான வேட்பாளர்களினதும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தமிழ் மக்கள் குறித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருக்கு நாங்கள் செய்தியொன்றை வைத்திருக்கின்றோம். அவர்கள் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தங்களிற்கு வாக்களிக்கவில்லை என்பதை உணர்வார்கள்,அவர்கள் தாங்கள் தவறிழைத்துள்ளதை உணர்ந்து தீர்வொனறை முன்வைப்பார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.// என தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். தமிழ்ப் பொது வேட்பாளரின் தரமான ஒரு பேட்டி. இதற்குப் பிறகும்... வருங்கால ஜனாதிபதி அரியநேத்திரன் என்று சொல்லிக் கொண்டு.. கேலிக்கதைகள் பேசும் ஒரு சிலருக்கு... வேறு குறைபாடுகள் உள்ளதென்றே கருத வேண்டி உள்ளது. 😂
  18. உலகம் எங்கும் புவி வெப்பம் அதிகரிப்பு பெரும் சிக்கலை கொடுத்துள்ளது. ஜேர்மனியில் நான் வசிக்கும் இடத்தில்... நேற்று நள்ளிரவு +27 பாகை காட்டியது. இந்த அளவு வெப்பம் இங்கு நள்ளிரவில் காட்டியதே இல்லை. பிரச்சினை என்ன வென்றால்.... குளிரை தாக்குப் பிடிப்பதற்காக, வீட்டு வெப்பம் வெளியேறாமல் கட்டப் படும் இங்குள்ள வீடுகளில்... காலநிலையின் வெப்பம் அதிகரிக்கும் போது... வீட்டிற்குள்ளும் மிகுந்த வெக்கையாக இருக்கும். இதனால் நித்தரை கொள்ளவும் முடியாது. குளிர் நாடு என்ற படியால்.. மின் விசிறியோ, குளிரூட்டியோ பூட்டுவதும் மிக மிக அருமையாக இருக்கும். ஏனென்றால் இப்படியான வெப்பம் வருடத்தில் ஒரு 15/20 நாட்கள் மட்டுமே வருவதால்.. வீணாக குளிரூட்டி போன்றவற்றை பொருத்துவது இல்லை. அத்துடன்... வயோதிபர்கள், இருதய பிரச்சினை உள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்படும். எமது வீட்டிற்கு அருகில்... இரண்டு முதியோர் இல்லங்கள் உள்ளன. நேற்றைய வெப்ப நிலைக்கு... ஒரு முப்பது தரமாவது அவசர மருத்துவ வண்டி (அம்புலன்ஸ்) வந்து போனது.
  19. ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு பொது மன்னிப்பு! ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற இரண்டு மாத கால பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் ஆட்பதிவு, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு அதிகார சபையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தொழில் வழங்குனரின் சட்டப்பூர்வ அனுமதியின்றி பணியிடத்திலிருந்து விலகி இருப்பவர்கள் மற்றும் செல்லுபடியாகும் விசா இல்லாதவர்கள் இந்த பொது மன்னிப்புக் காலத்தில் அபராதம் அல்லது பிற சட்டத் தடைகளுக்கு உட்படாமல் நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது சம்பந்தப்பட்ட விசா ஆவணங்களை சட்டப்பூர்வமாக செயல்படுத்தவோ இதன்போது வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் பொது மன்னிப்புக் காலத்தின் போது தமது விசாக்களை சட்டப்பூர்வமாக்க ஏற்பாடு செய்ய அல்லது நாடு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்படத்தக்கது. https://athavannews.com/2024/1397683
  20. ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம்: அமைச்சர் உதயநிதி கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். தெற்காசியாவில் முதல் முறையாக சென்னையில் ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டி இன்றைய தினமும் நடைபெறுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நேற்று தீவுத்திடல் பகுதியில் பயிற்சிசுற்றுகளுடன் ஆரம்பமாகியுள்ளது. தெற்காசியாவில் முதன்முறையாக நடத்தப்படும் இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயம் இதுவாகும். இந்த பந்தயத்துக்காக 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம் சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான சாலை சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஞாயிற்றுக்கிழமையான இன்று பிரதான பந்தயம் நடைபெறவுள்ளது. இதில் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப், இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) பந்தயம். ஜேகே டயர் ஜூனியர் தேசிய போட்டி ஆகியவை நடைபெறுகிறது. பிற்பகலில் தொடங்கும் பிரதான பந்தயங்கள் இரவு 10.30 மணிக்கு நிறைவடையவுள்ளமை குறிப்படத்தக்கது. https://athavannews.com/2024/1397685
  21. தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளநிலையில் இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு பதிலாக ஜூன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு 5 சதவீதம் வரை இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், இம்மாதம் 1 ஆம் திகதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1397690
  22. உக்ரைன் விமானப்படைத் தளபதி பதவியிலிருந்து நீக்கம். உக்ரைனின் விலையுயர்ந்த புதிய எப் – 16 போர் விமானம் ஒன்று அழிக்கப்பட்டது தொடர்பான விவாதத்திற்கு மத்தியில் உக்ரைன் விமானப்படை தளபதியை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதவியில் இருந்து நீக்கம் செய்துள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் மைகோலா ஓலேஷ்சுக்கை பணிநீக்கம் செய்ததற்கான காரணத்தை ஜெலென்ஸ்கி குறிப்பிடவில்லை, ஆனால், அனைத்து வீரர்களையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, உக்ரைனின் விமானப்படையின் இடைக்கால தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனடோலி கிரிவோனோஷ்கோ நியமிக்கப்பட்டுள்ளார் என இராணுவத்தின் பொது ஊழியர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1397688

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.