Everything posted by தமிழ் சிறி
-
வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
@ஏராளன் ஐ.பி.சி. கருத்துக் கணிப்பின் படி... அரியநேந்திரனின் இன்றைய நிலையை அறியத் தரவும். 🙂
-
ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
சுயலாபத்துக்காக போலி தகவல்களை தலைவர்கள் வழங்கி வருகின்றனர்- கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித். தங்களது சுயலாபத்துக்காக பல்வேறுபட்ட உறுதிமொழிகள் மற்றும் போலியான தகவல்களை எமது தலைவர்கள் வழங்கி வருவதாகவும், கடந்த 75 வருட காலமாக இவ்வாறான செயற்பாடுகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதுடன, தொடர்ந்தும் தங்களை ஏமாற்ற இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1397154
-
கருத்து படங்கள்
- அரச ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு 25 ,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்!
- பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரம்!
பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரம்! ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் இன்று தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார பயணத்தின் ஒரு கட்டமாக அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன்படி யாழ். நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் இருக்கும் திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியிருத்தார். இவ் அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி பிரச்சாரப் பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1397218- முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை!
முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை! முன்னாள் அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனையும் 10 வருட காலத்திற்கு பணி இடைநிறுத்தமும் செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார். இதில் ஏ. எச். . எம் ஃபௌசி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் 4 இலட்சம் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2010 இல், ஏ. எச். எம் ஃபௌசி அனர்த்த முகாமைத்துவ அமைச்சராக கடமையாற்றிய போது, நெதர்லாந்திலிருந்து சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக தனது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தியதாகவும் நிதியமைச்சு வாகனத்தின் பராமரிப்புக்காக சுமார் 10 இலட்சம் ரூபா பணம் செலவழித்தமை போன்ற 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் ஒதுக்கப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் இந்த தீர்பு வழங்கப்பட்டுள்ளது https://athavannews.com/2024/1397212- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
19 வேட்பாளர்கள் எவ்வித பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை-தேர்தல்கள் ஆணைக்குழு! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 19 வேட்பாளர்கள் இதுவரை எவ்வித பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி குறித்த வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஒரு கூட்டத்தைக்கூட நடத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர் ஒருவருக்கு வாக்குச் சீட்டு அச்சடித்தல் உள்ளிட்ட தேவைகளுக்கான தேர்தல்கள் ஆணைக்குழு சுமார் ஒரு கோடி அல்லது ஒன்றரை கோடி ரூபாவை செலவிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரம் செய்யாமை சிக்கலான நிலை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் இதுவரை பிரசாரத்தில் ஈடுபடாத வேட்பாளர்களில் சுமார் 10 வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் சுவரொட்டிகள் மற்றும் பாரிய கட்அவுட்கள் பயன்படுத்துவது குறைந்துள்ளமை மிகவும் நல்ல விடயம் எனவும் மேலும், தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிட்டுள்ளார் https://athavannews.com/2024/1397147- ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
கூட்டமின்றி வெறிச்சோடிய சரத் பொன்சேகாவின் பிரசார கூட்டம்! நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற முன்னாள் இராணுவ தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள சரத் பொன்சேகாவின் பிரசார கூட்டம் நுவரெலியா பிரதான நகரில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைந்துள்ள வாகனத்தரிப்பிடத்தில் மேடை அமைத்து நடைபெற்றது இதிலும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைக்கப்பட்ட மேடையில் பொன்சேகா உள்ளிட்ட சுமார் 10 பேர் இருந்தனர் மேலும் மேடையின் முன் போடப்பட்டிருந்த இருக்கைகளில் எதிர்பார்த்த அளவில் பொது மக்கள் வருகைத்தந்து அமரவில்லை என்பது பெரும் ஏமாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் தாக்குதலுக்கு உள்ளான காரையும் லொறியில் ஏற்றி மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது அதன் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களும் அங்கு தொங்க விடப்பட்டிருந்தது. எனினும் குறித்து கூட்டத்தின் போது ஏராளமான பொலிஸார் வரவழைக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1397153- சுயலாபத்துக்காக போலி தகவல்களை தலைவர்கள் வழங்கி வருகின்றனர்-மெல்கம் ரஞ்சித்!
சுயலாபத்துக்காக போலி தகவல்களை தலைவர்கள் வழங்கி வருகின்றனர்-மெல்கம் ரஞ்சித்! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து அவற்றை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும் தலைவர்களைத் தெரிவு செய்வதனால் பாதிப்பே ஏற்படக்கூடும் எனக் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ராகம – தேவத்த – பெசிலிக்கா தேவாயலத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் தெரிவித்தார் தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தயவுசெய்து விழிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தங்களது சுயலாபத்துக்காக பல்வேறுபட்ட உறுதிமொழிகள் மற்றும் போலியான தகவல்களை எமது தலைவர்கள் வழங்கி வருவதாகவும், கடந்த 75 வருட காலமாக இவ்வாறான செயற்பாடுகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதுடன, தொடர்ந்தும் தங்களை ஏமாற்ற இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இன்று நாட்டின் பெரும்பாலானோர் தமது கொடுப்பனவிற்கேற்ப வாழ்க்கையை முன்கொண்டு செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பதுடன், நாட்டு மக்கள் அனைவருக்கும் வளம் பகிர்ந்தளிக்கப்படும் வகையிலான வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1397154- சுவிஸ் நாட்டில் இருந்து வந்தவர் வவுனியா வடக்கில் சடலமாக மீட்பு
சுவிஸ்லாந்தில் இருந்து வவுனியாவுக்கு வந்தவா் சடலமாக மீட்பு! சுவிஸ்லாந்தில் இருந்து வவுனியாவுக்கு வருகை தந்து கனகராயன்குளம் சின்னடம்பன் பகுதியில் தங்கி இருந்த நபரொருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 66 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியாவிலுள்ள சின்னடம்பன் கிராமத்தில் அவரது உறவினரின் வீடு ஒன்றில் தங்கி இருந்தபோதே கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும் நேற்றிரவு இரவு வீட்டிற்குள் புகுந்து குழுவினர் தாக்குதலை மேற்கொண்டதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று காலை நான்கு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வருவதோடு இது தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலீசார் முன்னெடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு பதில் நீதிபதி திருவருள் விஜயம் மேற்கொண்டு சடலத்தை பார்வையிட்டிருந்தார். https://athavannews.com/2024/1397190- ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
பால்ராஜிடம்... சரத் பொன்சேகா அடி வாங்கினவரா. இதைப் பற்றிய மேலதிக விபரங்களை அறிய ஆவலாக உள்ளோம். நீங்கள் அறிந்தவற்றை, எமக்கும் சொல்லுங்கள் தமிழன்பன். 🙂- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சூர்யோற்சவ உற்சவம்!
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சூர்யோற்சவ உற்சவம்! வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோட்சவத்தின் 19ஆம் நாள் திருவிழாவான சூர்யோற்சவ உற்சவம் இன்று காலை மிக சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா, மற்றும் வெளி வீதியுலாவும் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். இதேவேளை, சூரிய திருவிழாவான இன்றையதினம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். நல்லூர் மகோற்சவத்தின் தேர் திருவிழா எதிர்வரும் முதலாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நல்லூர் திருவிழாவின் நேரடியான காட்சிகளை ஆதவன் தொலைக்காட்சியில் நேரலையாக நேயர்கள் கண்டுதரிசிக்க முடியும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். https://athavannews.com/2024/1397203- சூடானில் கனமழை – 30 பேர் பலி
சூடானில் கனமழை – 30 பேர் பலி. சூடானில் பெய்து வரும் பலத்த மழையினால் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு உடைந்துள்ளதையடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20 கிராமங்கள் பாதிக்கபட்டுள்ளதுடன் 30 பேர் உயிரிழந்துள்ளர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. குறித்த பகுதி அடையாளம் காண முடியாத அளவிற்கு அழிந்துள்ளதோடு மின்சாரம் மற்றும் தண்ணீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன. 150 முதல் 200 பேர் வரை காணமல் போயுள்ளதுடன் ஏறக்குறைய 50,000 பேரின் வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1397201- அமெரிக்க தேர்தல் வரலாற்றில் கமலா ஹாரிஸ் சாதனை!
அமெரிக்க தேர்தல் வரலாற்றில் கமலா ஹாரிஸ் சாதனை! அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுவதுடன், குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதுடன், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் கமலா ஹாரிஸ் பிரசாரத்துக்காக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.4,528 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளமை அமரிக்க தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1397157- இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை!
இவ… இந்திய இராணுவத்தின் மகளிர் அணித் தலைவியாக இருக்குமோ… 😂 🤣- ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை வழங்கத் தயார். - சஜித் பிரேமதாச.- ################### ################## #################### * ஐ.பி.சி. யின் வாக்கெடுப்பு. (25.08.2024) பொது வேட்பாளருக்கு இவ்வளவு வாக்குகளா? அதிர்ச்சியில் தென் இலங்கை.- ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
சரத் பொன்சேகாவின்... எல்லா கூட்டத்திற்கும் பிக்கு ஒருவர் தவறாமல் போகின்றார். யார் பெத்த பிள்ளையோ... பாவம். அவருக்கு என்ன வேண்டுதலோ.... 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
ஊழல் அற்ற சிறந்த நிர்வாகத்தை நாங்கள் உருவாக்குவோம். - நாமல் ராஜபக்ச.- சஜித், ரணில், அனுரா.... எல்லாரும் மேடையில பேசுற பேச்சை பார்த்தால்... அடுத்த வருசமே டுபாய், கத்தார் ஷேக் எல்லாம் இலங்கை வந்து.. வேலை தேடுவாங்க போலை இருக்கே.... 😂 🤣- ஜனாதிபதி தேர்தல் சிரிப்புகளும், வாக்குறுதிகளும்.
ரணிலும், பிள்ளையானும்... முக்கிய ஆலோசனையில். 😂 பெண்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபாய் வழங்கி, 24 மாதங்களில் வறுமையை ஒழிப்பதற்கான திட்டம் ஒன்று அமுல் படுத்தப்படும். - சஜித் பிரேமதாச.- ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விசேட சுகாதார சேவை. - அனுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதிமொழி. - ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், விசாரணைக்கு தனிக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்படும். - நாமல் ராஜபக்ச.- உங்கள் வாய்... உங்கள் உருட்டு. 😂 யாராய் இருக்கும்.... 😂 🤣- தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
- அமெரிக்காவை தொடர்ந்து இலங்கைக்கு விரையும் சீன கப்பல்
கண்டதுக்கு எல்லாம் குலைத்துக் கொண்டு இருக்கின்ற, சரத் வீரசேகர கூட.... வாயை திறக்க காணோம்.- அமெரிக்காவை தொடர்ந்து இலங்கைக்கு விரையும் சீன கப்பல்
இந்தியா எவ்வளவு... குத்தி முறிந்தாலும், ஸ்ரீலங்காவின் காதல் என்றுமே சீனாவின் பக்கம்தான். அது இந்திய கொள்கை வகுப்பாளருக்கு புரியவே புரியாது. ஏனென்றால்... அவர்கள் மண்டையில் களிமண். 😂 🤣- பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: இன்று ஆரம்பம்
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு | முதலாம் நாள். அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாடு 2024. இரண்டாம் நாள்.- ஐ.நா உயர்ஸ்தானிகரின் குற்றச்சாட்டுகளை இலங்கை மறுப்பு!
ஐ.நா உயர்ஸ்தானிகரின் குற்றச்சாட்டுகளை இலங்கை மறுப்பு! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இலங்கை ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஐநா மனித உரிமைகள் பேரவையின் இந்த அறிக்கை வெளியாகியிருந்தது. மனித உரிமைகள் பாதுகாப்பு முறையை சீர்திருத்துவதாக உறுதியளித்த போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை இன்னும் செய்யாமல் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், 2023 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் மசோதாக்கள் மூலம் பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கருத்து சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், கைதிகளுக்கு எதிரான சித்திரவதைகள் அதனால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளியன்று, ஐ.நா உயர்ஸ்தானிகரின் அறிக்கை மீதான அதன் நிலைப்பாட்டை ஜெனிவாவை தளமாகக் கொண்ட உலக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளிநாட்டு தூதர்களுக்கு அரசாங்கம் விளக்கியுள்ளது. https://athavannews.com/2024/1397125 - அரச ஊழியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு 25 ,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.