Everything posted by தமிழ் சிறி
-
நம்பிக் கெட்டோம்
சில காலத்திற்கு முன் பார்த்த காணொளி ஒன்றில்… கனடாவில் இருந்து சென்ற தமிழ் தொழிலதிபர் ஒருவர், மண்டைதீவில் பெரும் உல்லாச விடுதி ஒன்று கட்டி, பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க ஆயத்தமான போது… நமது தமிழ் அரசியல்வாதி ஒருவர் 10% லஞ்சமாக கேட்டாராம். அத்துடன் அவர் வெறுத்து… தனது திட்டத்தை சிங்களப் பகுதிக்கு மாற்றி, வெற்றிகரமாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது. வேறு பலரும் தாயகத்துக்கு உதவி செய்ய வந்த போது… சில தமிழ் எம்.பி.க்கள் கமிஷன் கேட்டு வெறுப்பேற்றியதாக சொன்னார்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தில் விசாரணை!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை வடமாகாணத்தில் இன்று. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் 2 ஆவது நாளாக வடமாகாணத்தில் இன்றும் இடம்பெற்றுள்ளது. இதன்படி யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இன்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த குறித்த நடவடிக்கையின்போது கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் ,சங்கானை, காரைநகர், நல்லூர், சாவகச்சேரி, சண்டிலிப்பாய், நெடுந்தீவு, ஊர்காவற்துறை, வேலணை ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கியவாறு விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. 2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் காணாமல் போனோர் தொடர்பாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களின் குடும்பங்களுக்கான விசாரணைகள் இன்று மாலை மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் காணாமல்போனவர்கள் தொடர்பாக இதுவரை பதிவு அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் இன்றைய தினம் பதிவுகளை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது, குறிப்பாக 2009 ஆம் ஆண்டு யுத்தசூழ்நிலையி;ன் போது காணாமல்போனவர்கள் மற்றும் குறித்த காலகட்டத்தில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைகாரணமாக காணாமல் போனவர்கள்தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1396297- பொதுக் கட்டமைப்பும் மூன்று கட்சிகளும்! நிலாந்தன்.
பொதுக் கட்டமைப்பும் மூன்று கட்சிகளும்! நிலாந்தன். தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் ஜனாதிபதியையும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்திருக்கின்றன. ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியப் பொதுக்கூட்டமைப்புச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அழைப்பு விடுத்தார்கள். கட்டமைப்பாக அழைக்கவில்லை. ஆனாலும் கட்டமைப்பில் உள்ள பெரும்பாலானவர்களை அழைத்தார்கள்.ஆனால் பொதுக் கட்டமைப்பாக அழைக்கிறோம் என்று அழைப்பில் குறிப்பிடப்படவில்லை. எதற்காக அழைக்கிறோம் என்றும் இரு தரப்புமே கூறவில்லை. இதில் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் ஏழு பேர்களும் மேற்படி இரண்டு சந்திப்புகளுக்கும் செல்லவில்லை. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் செல்லவில்லை. ஆனால் மூன்று கட்சிகள் சென்றன. அவை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் பிரதிநிதிகளாக அங்கே செல்லவில்லை. ஆனாலும் அவர்கள் அவ்வாறுதான் சென்றார்கள் என்று வெளியில் நம்பப்படுகின்றது. ஏனென்றால் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் பொதுக் கட்டமைப்பை ஒரு கட்டமைப்பாக அணுகவில்லை என்றாலும் கூட, அது பொதுக் கட்டமைப்பு என்பதற்காகத் தான் அந்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதை இன்னும் ஆழமான பொருளில் சொன்னால் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தும் பொதுக் கட்டமைப்பை அவர்கள் அழைத்தார்கள். தமிழ் பொது வேட்பாளர் அவர்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியதே அதற்குக் காரணம். எனவே அந்த இரண்டு அழைப்புகளும் வெளிப்படையாக பொதுக் கட்டமைப்புக்கு என்று கூறப்படாவிட்டாலும், பொதுக் கட்டமைப்பை நோக்கியவை தான். இந்த அடிப்படையில் சிந்தித்தால், அந்த மூன்று கட்சிகளும் அந்த இரண்டு சந்திப்புகளுக்கும் போயிருக்கக் கூடாது.ஆனால் அதற்கு அவர்கள் கூறும் விளக்கம் என்ன ? நாட்டில் உள்ள கட்சிகள் என்ற அடிப்படையில், நாட்டின் தலைவர் ஓர் அழைப்பை விடுக்கும் பொழுது சென்று சந்திப்பதுதான் அரசியல் நாகரீகம் என்று கூறப்படுகிறது. தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அழைக்கும் பொழுது அவர்கள் சென்று சந்திப்பது இயல்பானது. இம்மூன்று கட்சிகளில் இரண்டு கட்சிகளிடம் மொத்தம் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. எனவே அந்த அடிப்படையில் மேற்படி சந்திப்புகள் இடம்பெற்றதாக ஒரு விளக்கம் தரப்படுகின்றது. பொதுக் கட்டமைப்பின் ஊடக அறிக்கை ஒரு பொதுக் கட்டமைப்பாக அந்த சந்திப்பில் தாங்கள் பங்குபற்றப் போவதில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டது. மூன்று கட்சிகளும் பொதுக் கட்டமைப்பின் சார்பாகத் தங்கள் பங்குபற்றியதாகத் தெரிவிக்கவில்லை. ஆனால்,பொதுக் கட்டமைப்பை விமர்சிப்பவர்கள் பொது வேட்பாளர் விமர்சிப்பவர்கள் அவ்வாறுதான் வியாக்கியானம் செய்கின்றார்கள். பொதுக் கட்டமைப்பு உடைந்து விட்டது, பொதுக் கட்டமைப்புக்குள் ஐக்கியம் இல்லை, அந்த மூன்று கட்சிகள் கூட்டுப் பொறுப்பின்றி நடந்து கொண்டு விட்டன,பொதுக் கட்டமைப்பில் உள்ள மக்கள் அமைப்புக்கும் கட்சிகளுக்கும் இடையில் உருகிப் பிணைந்த கூட்டு உருவாகவில்லை… என்றெல்லாம். விமர்சனங்கள் வருகின்றன முதலில் ஒன்றை தெளிவுபடுத்த வேண்டும். கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கிய கட்டமைப்பு தமிழ்த் தேசிய வரலாற்றில் ஒரு புதிய தோற்றப்பாடு.அவ்வாறு ஒரு கட்டமைப்பை உருவாக்கும் பொழுது அதற்கென்று ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதிக் கொண்டமையும் ஒரு புதிய தோற்றப்பாடுதான்.கடந்த 15 ஆண்டுகளாக பலரும் எதிர்பார்த்த;எழுதி வந்த ஒன்று.அது இப்பொழுது ஏறக்குறைய ஒரு மாதக் குழந்தைதான்.அதில் பலவீனங்கள் உண்டு.அங்கே தவறுகள் நடக்கும்.அங்கே முழுமையான கூட்டுப் பொறுப்பை, உருகிப் பிணைந்த இணைப்பை எதிர்பார்க்க முடியாது.அதைப் படிப்படியாகத்தான் ஏற்படுத்தலாம்.இவ்வாறு கட்சிகளையும் மக்கள் அமைப்பையும் இணைத்து ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? ஏனென்றால் தமிழர் அரசியலில் எல்லாமே சிதறிப் போய் இருக்கின்றன என்பதனால்தான், தமிழரசியலின் சீரழிவு காரணமாகத்தான் அவ்வாறு ஒரு கட்டமைப்பு தேவைப்பட்டது.தமிழரசியல் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சீரழிந்து வருகிறது. தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்துவதற்காக குடிமக்கள் சமூகங்கள் இன்று நேற்று உழைக்கவில்லை.கடந்த 15 ஆண்டுகளாக உழைத்து வருகின்றன.மறைந்த முன்னாள் மன்னார் ஆயரின் தலைமையில்,தமிழ் சிவில் சமூக அமையத்தில் இருந்து தொடங்கி இப்பொழுதுள்ள பொதுமக்கள் சபை வரையிலும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இந்தக் கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக விடாமல் முயற்சித்து வருகிறார்கள்.அதில் தற்காலிக வெற்றிகளை அவர்களால் பெற முடிந்திருக்கிறதே தவிர நிரந்தர வெற்றிகளைப் பெற முடியவில்லை. இவ்வாறான ஒரு துர்பாக்கியமான அரசியல், சிவில் சமூகப் பின்னணியில், இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மாதக் குழந்தையாகிய தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பும் ஒரு தற்காலிக வெற்றியாக மாறிவிடக்கூடாது என்ற கரிசனை குடிமக்கள் சமூகங்களுக்கு மட்டுமல்ல எல்லாத் தமிழ் மக்களுக்கும் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒற்றுமையைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு தெரிவு கிடையாது. ஒற்றுமை சிதைந்தால் அதை விட்டுவிட்டு வேறு ஒன்றை யோசிக்கலாம் என்று கூறுவதற்கு வேறு தெரிவே கிடையாது. தமிழ் மக்கள் ஒன்றுசேரத் தவறினால் தமிழ்க் கட்சிகளை ஒரு மையத்தில் ஒன்றிணைக்கத் தவறினால்,அது அடுத்தடுத்த தேர்தல்களில் எதிரொலிக்கும் என்பதை விடவும் ஆபத்தான விடயம் என்னவென்றால், தமிழ் மக்கள் ஒரு தூர்ந்து போகும் சமூகமாக மாறிவிடுவார்கள் என்பதுதான். எனவே தமிழ்ச் சமூகம் தூர்ந்து போய் ஒரு தேசமாக இல்லாமல் சிதறிப் போவதற்கு அனுமதிக்க முடியாது.அந்த அடிப்படையில் சிந்தித்தால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லா அரசியல் சக்திகளையும் தரப்புகளையும் ஐக்கியப்படுத்துவதுதான் ஒரே வழி. ஐக்கியம் இல்லையென்றால் தமிழ்த் தேசியமே இல்லை என்ற ஒரு விளிம்பில் இப்பொழுது தமிழ் அரசியல் வந்து நிற்கின்றது. அந்த அடிப்படையில்தான் ஒரு பொதுக் கட்டமைப்பு யோசிக்கப்பட்டது. தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியவாத அரசியல் எனப்படுவது மக்களை ஆகக்கூடிய பெரிய திரளாகக் கூட்டிக்கட்டுவது. அவ்வாறு மக்களை ஒரு பெரிய திரட்சியாகக் கூட்டிக்கட்டுவது என்று சொன்னால், அந்த மக்கள் மத்தியில் வேலை செய்யும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் கட்சிகளையும் கூட்டிக்கட்ட வேண்டும். அவ்வாறு கூட்டிக்கட்டத் தவறினால் தமிழ்ச் சமூகம் இப்பொழுது இருப்பதை விடவும் கேவலமான,பாரதூரமான விதத்தில் தூர்ந்து போய்விடும்.அவ்வாறு தூர்ந்து போகக்கூடாது என்பதற்காகத்தான் பொதுக் கட்ட்டமைப்பு.எனவே பொதுக் கட்டமைப்பு உடைய வேண்டும் என்று உழைப்பவர்கள் வெற்றி பெற்று விடக்கூடாது. தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதை விரும்பாத சக்திகள் பொதுக் கட்டமைப்பு உடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள்; விரும்புகிறார்கள்;அதற்காகக் காத்திருக்கிறார்கள்.அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்கும் விதத்தில் ஒரு மாதக் குழந்தையான பொதுக் கட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்த வேண்டுமா? அல்லது தமிழ் குடிமக்கள் சமூகங்கள் மேலும் தீவிரமாக,தீர்க்கதரிசனமாக;அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டியிருப்பதை அது காட்டுகின்றதா? ஏனென்றால் இந்த இடத்தில் மனம் தளர்ந்தால்,இந்த இடத்தில் சோர்வடைந்தால், பிறகு தமிழ் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப எத்தனை ஆண்டுகள் செல்லும்? ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவை தோல்வியுற்ற பின் எட்டு ஆண்டுகள் சென்றன இப்படியொரு கட்டமைப்பை உருவாக்க.ஆரம்ப காலத்தில் ஏற்பட்டிருக்கும் சிறிய சறுக்கல்கள், தளம்பல்கள் போன்றவற்றை பொருட்படுத்தி பலவீனமான ஒரு ஐக்கியத்தை உடைப்பதா? அல்லது அதனை மேலும் பலப்படுத்தி உடைக்கப்பட முடியாத ஒன்றாக உருகிப் பிணைந்த ஒன்றாக வளர்த்தெடுப்பதா? என்ற கேள்விக்கு விடை முக்கியம்.தத்துவ ஞானி ஹெகல் கூறுவார் “வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்டது எதையென்றால்,நாம் வரலாற்றிலிருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான்.இது தமிழ் அரசியலுக்கு குறிப்பாக பொதுக் கட்டமைப்புக்கும் பொருந்தும். அரசற்ற சிறிய ஒரு மக்கள் கூட்டம் எதிர்த் தரப்பு விரும்புவதை செய்ய வேண்டுமா அல்லது செய்யக் கூடாதா? https://athavannews.com/2024/1396287- கருத்து படங்கள்
- வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை? – பிரதான வேட்பாளா்கள் கோாிக்கை!
வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை? – பிரதான வேட்பாளா்கள் கோாிக்கை! ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை 1000 ரூபா வரை வழங்கப்பட வேண்டுமென பிரதான வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இது தொடர்பான முன்மொழிவுகள் குறித்த இறுதித் தீர்மானம் எதிர்காலத்தில் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும்; அவர் கூறியுள்ளார். தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, வேட்புமனுக்கள் பெறப்பட்ட 5 நாட்களுக்குள் ஒரு வாக்காளருக்குச் செலவிடப்படும் அங்கீகரிக்கப்பட்ட தொகை வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் எனவும், அது குறித்து முடிவெடுப்பதற்காக வேட்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒவ்வொரு வேட்பாளரும் செலவிட்ட தொகை தொடர்பான அறிக்கையை ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த 20 நாட்களுக்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வழங்குப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக ஒரு வேட்பாளருக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நிறுவனத்திற்கு அறிவித்தல் விடுத்துள்ளது. தேர்தல் காலத்தில் பல்வேறு நன்கொடைகள் செய்து வாக்களிக்க முயற்சிப்பதன் மூலம் வாக்காளர் அவமானப்படுத்தப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1396259- நம்பிக் கெட்டோம்
சம்பந்தரும்... நம்பிக் கெட்டோம், ஏமாற்றி விட்டார்கள் என்று கடைசி காலத்தில் சொல்லி விட்டு... செத்துப் போனார். இப்போ.. ஸ்ரீதரனும் அதையே சொல்கிறார். இதற்குள்... சுமந்திரனும், ரணில்... வாக்குறுதி தந்துள்ளதாக சொல்லிக் கொண்டு திரிகிறார். நடந்த சம்பவங்களில் இருந்து, பாடம் கற்க வேண்டாமா? உங்களது அணுகு முறையை மாற்றாமல்... வருகின்ற எல்லாரும் இதையே சொல்லிக் கொண்டு இருக்கவா உங்களை பாரளுமன்றம் அனுப்பினார்கள். மக்கள் உங்கள் மீது... பயங்கர வெறுப்பில் இருக்கின்றார்கள். இப்படியே... போனால், செல்லாக் காசு ஆகி விடுவீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.- ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!
காமக் கொடூரன்கள். இந்தியாவில் பெரும்பாளான இடங்களில், ஓரு பெண் தனியே செல்ல முடியாத அளவிற்கு பல ஆண்களின் காமப் பார்வையும், சீண்டல்களும் இருக்கும். சூழ் நிலையை பொறுத்து அந்தப் பெண் சீரளித்து, கொல்லப் படுவார். அந்த அளவிற்கு ஆபத்தான நாடு இந்தியா.- அருச்சுணா வடக்கின் நெல்சன் மண்டேலா-பொதுத்தேர்தலில் 5 ஆசனங்களை வெல்வார்”தமிழ்தேசியத்தின்புதிய யுகம்”
முஸ்லீம்களும், சிங்களவர்களும் இப்போது தமிழ்ப் பகுதிகளில் பரவலாக வாழ்கின்றார்கள். தமிழர்களில் பல கட்சிகள் தோன்றி போட்டியிடும் போது…. தமிழ் வாக்குகள் பல கட்சிகளுக்கும் பிரிந்து முஸ்லீம், சிங்களவர்களின் வெற்றியை இலகுவாக்கி விடும். அதனால்… அர்சுனாவின் வருகை அவர்களுக்கும் தேவையாக உள்ளது.- அருச்சுணா வடக்கின் நெல்சன் மண்டேலா-பொதுத்தேர்தலில் 5 ஆசனங்களை வெல்வார்”தமிழ்தேசியத்தின்புதிய யுகம்”
கொம்பு சீவுகின்ற வேலை நடக்குது போலை இருக்கு. 😁- ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!
பையன்... இந்திய அரசியல் வாதிகள், வாயை திறந்தால் பொய்தான். 2000´மாவது ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள். இப்ப... 2024´ம் ஆண்டும் வந்து விட்டது. ம்ஹும்... இன்னும்... அதே தண்டவாளத்தில்தான், கக்கூஸ் இருக்கின்றார்கள். இவங்கள்... சூப்பர் சிங்கர், சூப்பர் டான்சர்... என்று சினிமாவையே செக்கு மாடுமாதிரி சுழன்று கொண்டு இருக்கத்தான் லாயக்கு. போதாக் குறைக்கு... சின்னஞ் சிறுவர்களை, சிறுமிகளை கூட... பெற்றோர் அதற்குள் கொண்டு சேர்த்து பாழாக்குகின்றார்கள். சீனா மாதிரி... இளம் வயதிலேயே விளையாட்டுக்கு ஊக்கம் கொடுத்தால்தானே பத்து வருடத்திலாவது சில தங்கப் பதக்கங்களை எடுக்கலாம். அதற்கான அறிகுறியே இல்லை.- ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!
பையன்... ஒலிம்பிக் போட்டிகளுக்கு, ஒலிம்பிக் கிராமம் ஒன்றை உருவாக்கி... அதனை அண்மித்த பகுதிகளிலேயே போட்டிகள் நடக்கும். உதைபந்தாட்டம், கிரிக்கெட் மாதிரி... இந்தப் போட்டிகள் எல்லா மாநிலத்திலும் நடத்தப் படுவதில்லை. ஒலிம்பிக் போட்டி நடக்கும் நாட்டுக்கு, ஒலிம்பிக் கமிட்டியும் பெருந்தொகையான பணத்தை கொடுக்கும் என நினைக்கின்றேன். இந்தியாவில்... எங்கும், எதிலும் ஊழல் என்ற படியால்... இவர்களால் தரமான கட்டிடங்களையும், சீரான ஒழுங்கமைப்பையும் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி. அதுகும் வட மாநிலங்களில்... இவர்களை மேய்ப்பது கடினம் பையன்.- “ரணிலிடமிருந்து ரூ.60 கோடி வாங்கினார் சாணக்கியன்” - கோவிந்தன் கருணாகரம்
சாணக்கியனுக்கு…. 60 கோடி என்றால், சுமந்திரனுக்கு எவ்வளவு கிடைத்திருக்கும். ப்ளீஸ் ரெல் மீ… 😂- ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!
எமனின் வாகனத்தில்… மழை பெய்த மாதிரி. 😂- ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!
சில வருடங்களுக்கு கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வட இந்தியாவில் நடந்த போது... விளையாட்டு வீரர்கள் தங்கும் வீட்டில் பாம்பு, இருந்தது. தண்ணீர் ஒழுங்காக வரவில்லை. படுக்கையறையில் பழைய மெத்தைகளை போட்டு, அதற்கு மேல் புது சீலைகளை விரித்து இருந்தார்கள் என்று... பல்வேறு குற்றச் சாட்டுக்கள் சுமத்தப் பட்டது. வழக்கம் போல் ஊழல் செய்தவர்களை கண்டிக்க விசாரணை கமிஷன் அமைத்து, அதன் முடிவு தெரியாமலே.. மக்கள் மறந்து விட்டார்கள். சர்வதேச அளவில்... இந்தியா மீது பலத்த கேலியும், கிண்டலும் நடந்த சம்பவம் அது.- சிரிக்கவும் சிந்திக்கவும் .
வயதாகி சாகும் வாய்ப்பு இல்லாத உயிரினம் என்றால்... ஆடும், கோழியும் தான். 😂- திரு.விறாஜ் மென்டிஸ் அவர்கள் இயற்கையெய்திவிட்டார்.
கண்ணீர் அஞ்சலிகள் பெயர் விராஜ் மெண்டிஸ் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் அனைத்துலக மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சாட்சியங்கள் பலவற்றை வெளிக்கொணர்ந்தவர் நடந்தது இனப்படுகொலை என தீர்ப்பு வழங்கிய பெர்லின் தீர்ப்பாயத்தின் முக்கிய செயற்பாட்டாளர். தமிழத்தேசிய ஆதரவாளரான இவரின் மறைவு பேரிழப்பாகும். தமிழ் மக்கள் சார்பாக கண்ணீர் அஞ்சலிகள். தோழர் பாலன்- ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி!
ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்குத் தயாா் – பிரதமா் மோடி! 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று ஆற்றிய உரையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன், நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து வீரர்களையும் மோடி பாராட்டியுள்ளார். ஜி20 உச்சி மாநாடு போன்ற பெரிய நிகழ்வுகளை நடத்துவதற்கான உட்கட்டமைப்பு இந்தியாவிடம் உள்ளது என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள பாராலிம்பியன்களுக்கும் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1396027 @Kapithan, @பாலபத்ர ஓணாண்டி, @வீரப் பையன்26 😂- திரு.விறாஜ் மென்டிஸ் அவர்கள் இயற்கையெய்திவிட்டார்.
ஆழ்ந்த இரங்கல்கள். 🙏- இந்தியாவில் தீவிரமடைந்து வரும் வைத்தியர்களின் போராட்டம்!
பெண்களை தெய்வமாக மதிக்கும் நாடு, இந்தியாவாம் என்று பச்சை போய் சொல்லும் கூட்டம். உத்தரப் பிரதேச மாநிலத்தில்... ஒரு செவிலியர் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்.- இந்தியாவில் தீவிரமடைந்து வரும் வைத்தியர்களின் போராட்டம்!
இந்தியாவில் தீவிரமடைந்து வரும் வைத்தியர்களின் போராட்டம்! கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் திகதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த பெண் மருத்துவருக்கு நீதி கோரி நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் மற்றும் பொது மக்களால் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்போராட்டங்களின் போது வன்முறைச் சம்பவங்களும் ஆங்காங்கே இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் இன்று(17) காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மருத்துவ சேவைகளை நிறுத்துவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த 24 மணிநேரத்தில் அவசர சிகிச்சைகள் மாத்திரம் இடம்பெறும் எனவும், வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1396181- விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா
சுளையாக டொலரை கண்டவுடன், இடையில் புகுந்த கலாச்சாரம். ஒரு சிலர் இதை செய்வதால்... முழு இனத்துக்கும் இது தலைகுனிவு. போரில்... உயிரை, சொத்துக்களை இழந்த இனம் இதை செய்வது வெட்கக் கேடானது. இறந்த ஆத்மாக்களின் சாபம், இவர்களை சும்மா விடாது.- விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா
ஜஸ்டின் ட்ரூடோவின்... பிள்ளைகளின் சாமத்திய சடங்கை, எங்கள் முறைப்படி... உலங்கு வானுர்தியில் வைத்து செய்து, அவரின் மனதை கவர வேண்டும். 😂 🤣- கருத்து படங்கள்
- சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.