Everything posted by தமிழ் சிறி
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் முதன்முறையாக பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றிருந்தனர். குறித்த விவாதத்தின்போது இருவரும் தனது கருத்துகளை தெரிவித்தனர். கமலா ஹாரிஸ் “நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு சரியான தலைவர் தேவைப்படுகிறார். மக்களின் பிரச்சனைகள், கனவுகள் பற்றி டிரம்ப் பேசவே மாட்டார். அரசியலமைப்பின் மீது டிரம்புக்கு எந்த மரியாதையும் இல்லை என அவருடன் பணியாற்றிய அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். டிரம்பே ஒரு குற்றவாளிதான். அவர் குற்றவாளிகளை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் அவர் மீது உள்ள வழக்குகளில் இருந்து தப்பித்து விடுவார். அமெரிக்காவின் சட்டத்தின் மீது டிரம்ப்-க்கு நம்பிக்கை இல்லை. இவர் மீண்டும் ஜனாதிபதியானால் நாடு தாங்காது என்று இவருடன் பணியாற்றிய அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். ப்ராஜெக்ட் 2025 என்ற ஆபத்தான திட்டத்தை டிரம்ப் வைத்துள்ளார். அனைவரையும் ஒன்றிணைக்கும் தலைவரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப் “கொரோனா தொற்றை மிக சிறப்பாக கையாண்டோம். அமெரிக்காவிற்கான மிக சிறந்த பொருளாதாரத்தை உருவாக்கினேன். என்னுடைய ஆட்சியில் பண வீக்கம் மிக குறைவாக இருந்தது. சீன பொருட்கள் மீது அதிக வரி சுமத்தி வருவாய் ஈட்டினோம். பைடன் ஆட்சியில் பணவீக்கத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. நான் ஆட்சிக்கு வந்தால் வரியை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்” என்று குறிப்பிட்டார். மேலும் “கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட். அவரிடம் எந்த திட்டமும் இல்லை. நமது பொருளாதாரத்தை கமலா சீர்குலைத்து விட்டார். போலி வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை பைடன் ஏமாற்றினார். முக்கிய விஷயங்களில் ஜனநாயக கட்சி இரட்டை நிலைப்பாடு எடுத்தது. வங்கி கடன் ரத்து என கூறி பைடன் ஏமாற்றினார். எனது பிரசாரக் கூட்டங்களில் இருந்து யாரும் வெளியேறுவது இல்லை. அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் மூன்றாம் உலகப் போர் உருவாகும். நான் வித்தியாசமான ஒருவர். சரியாக பணி புரியாதவர்களை நான் பணி நீக்கம் செய்தேன். வெளியே சென்று அவர்கள் என்னைப் பற்றி தவறாக பேசுகின்றனர். வரலாற்றில் யாருக்கும் இல்லாத ஆதரவு எனக்கு உள்ளது. எனக்கும் ப்ராஜெக்ட் 2025-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனை நான் படித்தது கூட இல்லை. படிக்கவும் மாட்டேன். நான் திறந்த புத்தகம். வரிகளைக் குறைப்பேன். கமலா ஹாரிஸ் ஜனாதிஜபதியானால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நின்றுவிடும். மேலும், எங்கள் கட்சி பேரணியில் பங்கேற்றவர்கள் சுடப்பட்டார்கள்” என்றும் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1398873
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
சுமந்திரனின் வாய் அப்படி. பாவம் சஜித்துக்கு... கிடைக்க இருந்த வாக்கையும் இந்தாள் கெடுத்துப் போட்டுது. சுமந்திரன், சஜித்தின் ஜனாதிபதி கனவுக்கு ஆப்பு வைத்து விட்டார். +++++++ +++++++ +++++++ +++++++ "சிலர் வாயை திறந்து பேசினால்... வெள்ளி கொடுக்கலாம். சிலர் வாயை மூடிக் கொண்டிருந்தாலே... பவுண் கொடுக்கலாம்." 😂 👆- துருக்கிய பழமொழி -👆 சுமந்திரன் எந்த வகை.... என்பதை, உங்கள் தெரிவிற்கே விட்டு விடுகின்றேன். 🤣
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!
சம்பந்தன் இருந்திருந்தால்... நான்காவது அணியாக, பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து.... இருக்கின்ற குழப்பங்களுக்கு மணி மகுடம் வைத்திருப்பார். நீங்கள் சொன்ன மாதிரி... விரைவில் வடக்கில் இருந்து தேசியக் கட்சிகள் மூலமாக... சிங்களவனும், முஸ்லீமும் எம்.பி.யாகி வரப் போகும் காலம் வெகு விரைவில் நடக்கும். பிறகு... இவர்கள் உன்னாலை நான் கேட்டேன், என்னாலை நீ கெட்டாய் என்று, மாறி மாறி... முதுகு சொறிந்து கொண்டு இருக்க வேண்டியதுதான். இப்ப இவர்களுக்கு, சிங்களவனிடம் இருந்து... பெட்டியும், வரும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வாங்கும் போட்டியும் தான் நடக்குதே தவிர.. தமிழனின் நலன் சார்ந்து ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!
மாவைக்கு, வக்காலத்து வாங்கப் போய்.... மூக்கு, உடைபட்டது தான் மிச்சம். 😂 இவர்களுக்கு... மணி கட்டின மாடு சொன்னாலும் கேட்க மாட்டார்கள். ஏனென்றால்... அவர்களின் "டிசைன்" அப்படி. 🤣
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!
அப்புக்காத்து சுமந்திரன் என்பவர், முதலில்... சஜித்துக்கு ஆதரவு தெரிவிப்பாராம். பிறகு... 10 நாள் கழித்து, சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடி மக்களுக்கு அறிவிப்பாராம். மக்களை இவர் முட்டாள் பயலுகள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாரா. நீங்கள், ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் 😂. கட்சி தலைமைக்கு கட்டுப் பட்டு, வாயை பொத்திக் கொண்டு இருந்தாலே போதும். 🤣
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!
இலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட கூட்டம்! 15ஆம் திகதி முக்கிய அறிவிப்பு! இலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெற்றபோதும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற, உத்தியோகபூர்மான தீர்மானம் எட்டப்படாத நிலையில் கூட்டம் நிறைவடைந்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி மூன்று விதமான நிலைப்பாட்டினை வெளியிட்டுள்ள நிலையில் கட்சியாக ஒருமித்து தீர்மானம் எடுப்பதில் குழப்நிலை காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது. சுமந்திரன் தலைமையிலான அணியினர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளபோதும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ள சி.சிறிதரன் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு என நேற்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இன்று வவுனியாவில் கட்சியின் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்தது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்தியர், ப.சத்தியலிங்கத்தின் வவுனியா இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றிருந்தது. சுமார் மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்றிருந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன் மற்றும் வடமகாண சபை அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சரவணபவன் இன்றைய தினம் கலந்துகொள்ள முடியாமையினால் ஆறு பேர் கொண்ட குழுவில் 5 பேர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1398853
-
வன்னியர் குழந்தைக்கு ட்ரெஸ் கிடைக்குமா..??
அந்த துணிக்கடையில் ஒரு பெண் உள்ளே நுழைந்தார்.. "ஏங்க, வன்னியர் குழந்தைக்கு ட்ரெஸ் கிடைக்குமா..?? என்றார்... . "இருக்குமா, அந்த செக்ஷனுக்கு போங்க.." என்றார்... . என்னடா பெரியாரு மண்ணுக்கு வந்த சோதனைனு பீதியில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்த என்னை கடைக்காரரே சமாதானப்படுத்தினார்... . அவங்க கேட்டது One Year, குழந்தைக்கு Dress, நீங்க ஒன்னும் பதறாதீங்க... . அப்பாடா.. . ஓ.. இது சாதி பிரச்சனையோன்னு பார்த்தேன்.. நல்ல வேளை இது மொழியை ஸ்டைலா பேசற குந்தானிகளால வந்த பிரச்சனை.. . 24 மணி நேரமும் நம்ம பதட்டத்துலயே வச்சுருக்கானுங்க.... Venkat Bvk
-
"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
இங்கு ஒரு கோவிலில் பூசகரே... மக்களின் ஆதரவுடன் தமிழில் பூசை செய்வோம் என முன் வந்த போது, கோவில் நிர்வாகத்தின் ஒரு பகுதி கோவிலை பூட்டி, திருவிழாவும் செய்ய விடாமல் பண்ணி விட்டார்கள். இவ்வளவிற்கும் அவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். தமிழ் என்றவுடன் இவர்களுக்கு ஏன்... கசக்கின்றது என்று தெரியவில்லை. நல்லதொரு கட்டுரைக்கு நன்றி புத்தன்.
-
தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் தமிழ்ப் பொது வேட்பாளர்
நடை பெற இருந்ததாக அறிவிக்கப் பட்ட ... உள்ளூராட்சி தேர்தல் நேரமே, தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடும் என்று சுமந்திரன் அறிவித்த போது... அதிலிருந்த ஏனைய கட்சிகள் வெளியேறி, அவர்கள் ஒரு அமைப்பாக போட்டியிட ஆயத்தமானார்கள். பின் உள்ளூராட்சி தேர்தல் தள்ளிப் போட்டமை வேறு விடயம். ஆனால்... பிரிந்த போன கட்சிகள் மீண்டும் ஒன்று சேரவே இல்லை. அப்போதே... தமிழ் தேசிய கூட்டடமைப்பையும், தமிழரசு கட்சியையும் பிளவு படுத்திய பெருமை சுமந்திரனையே சாரும். இது தெரியாத மாதிரி பலர் இன்னும்... மல்லாக்கப் படுத்து இருந்து கொண்டு துப்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
அதே... ஊரில் உள்ள அரச ஊழியர் பலரும், சங்கிற்கு வாக்களித்துள்ளதாக சொன்னார்கள்.
-
கருத்து படங்கள்
- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
- சிங்களவர்களும் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்!
சிங்களவர்களும் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்! சிங்கள மக்கள் கூட தமது முதல் வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்த பின்னர் ஏனைய இரு விருப்பு வாக்குகளையும் தாம் விரும்புபவருக்கு அளிக்கலாம் என அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”தமிழ் பொது வேட்பாளர் தான் தமிழ் மக்களுக்கு தேவை. சங்கே தமிழர்களின் அடையாளம். அதனால் அனைத்து தமிழ் மக்களும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் தமிழ் மக்களின் குரலை வலுப்படுத்தவேண்டும் முஸ்லீம் மக்களும் மதங்களை தாண்டி தமது முதல் வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கு அளிக்க வேண்டும். அதேபோன்று மலையகம் மற்றும் தெற்கு உள்ளிட்ட இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களும் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். குறிப்பாக சிங்கள மக்கள் கூட தமது முதல் வாக்கினை தமிழ் பொது வேட்பாளருக்கு அளித்த பின்னர் ஏனைய இரு விருப்பு வாக்குகளையும் தாம் விரும்புபவருக்கு அளிக்கலாம்” இவ்வாறு மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1398782- தமிழ் பொதுவேட்பாளர் குறித்து தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அச்சம் – அரியநேத்திரன்!
தமிழ் பொதுவேட்பாளர் குறித்து தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அச்சம் – அரியநேத்திரன்! தென்பகுதி வேட்பாளர்கள் வடக்கு கிழக்கில் முகாமிட்டுள்ளமையானது தமிழ் பொதுவேட்பாளர் குறித்து அவா்களிடத்தில் ஒருவித அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதை தெளிவாகக் காட்டுவதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற நமக்காக நாம் பிரசாரப்பணிகளில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், தமிழ் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டதன் பின்னர் தெற்கில் உள்ள பிரதான வேட்பாளர்கள் தெற்கில் பிரசாரங்களை முன்னெடுக்காமல் வடகிழக்கில் முகாமிட்டுவருகின்றனா். தமிழ் மக்களின் திரட்சி கண்டு அவர்கள் அச்சமடைந்துள்ளனா். இந்த தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் வெற்றிபெறவேண்டும் என்று வடகிழக்கில் மக்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கின்றார்கள். தென்பகுதியிலிருக்கு தென்பகுதி வேட்பாளர்கள் அங்கு பிரசாரம் செய்வதை காணமுடியவில்லை. அவர்கள் இப்போது வடகிழக்கில் முகாமிட்டுள்ளனர் என்றால் மக்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் அவர்களுக்கு ஒரு அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள் திரட்சியாக ஒற்றுமையாக இருக்கின்றார்கள். அவர்களை நாங்கள் இனி சிதறடிக்கமுடியாது என்று என்னை வேட்பாளராக நிறுத்திய பின்னர் அவர்கள் அச்சமடைகின்றார்கள்” என தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1398765- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
ஏராளன், நீங்கள் கேட்ட ஆள்... சுமந்திரனின் ஆள் போலை இருக்கு. 😂 அதுதான்... சஜித்துக்கு வாக்கு போட்டிருக்கிறார். சுமந்திரனின் ஆளிடம் போய்... அரியநேத்திரனை பற்றி கேட்டால் தும்பு பறக்க பேசுவார்தானே... 🤣 அதே போல்... அரியநேத்திரனின் ஆளிடம் போய், சுமந்திரன் பற்றி கேட்டால் காதால் இரத்தம் வர பேசுவார்கள். 😂- யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி சடலமாக மீட்பு!
பாவம்... தனிமையில் இருந்த முதியவரின் மரணம் பரிதாபகரமானது. முதியோர் இல்லங்களின் முக்கியத்துவத்தை இந்த மரணம் உணர்த்துகின்றது.- இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!
தமிழ் அரசுக் கட்சியின் இன்றைய கூட்டம்... சட்டை கிழியாமல், வேட்டி அவிழாமல், மண்டை உடையாமல்... அமைதியாக நடக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகின்றேன்.- தமிழரசுக் கட்சியின் முடிவா? எம்.ஏ.சுமந்திரனின் முடிவா? – அகிலன்
சுமந்திரன் தரப்பு... சஜித்தை ஆதரித்தது சஜித்துக்கே தெரியாதாம். 😂 தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் குழுவின் ஆதரவு, சிங்களப் பகுதிகளில் தமக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சஜித்துக்கு பீதி ஏற்பட்டிருக்கு. 🤣 அப்ப.. ரணிலை வெல்ல வைக்க... சுமந்திரனும், சாணக்கியனும் தீயாய் வேலை செய்கிறார்கள். சஜித்துடன் ஒரு பேச்சு வார்த்தையும் நடத்தாமல்... சுமந்திரன், சாணக்கியன் குரூப் அவருக்கு ஆதரவு கொடுக்கின்றது என்றால்... சமூக ஊடகங்களில் சொல்வது போல் ரணிலிடம் இருந்து சாணக்கியன் 60 கோடி ரூபாயும், சுமந்திரன் 55 கோடி ரூபாயும் பெற்றது உண்மைபோல் தெரிகின்றது.- பூமியை மாசுப்படுத்தும் நாடுகளில் இந்தியாவிற்கு முதலிடம்
பூமியை மாசுப்படுத்தும் நாடுகளில் இந்தியாவிற்கு முதலிடம். பிளாஸ்டிக் கழிவுகளால் பூமியை மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கமைய, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 93 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது என்று நேச்சர் ஜர்னலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக அளவில் 5-ல் ஒரு பங்கு பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் தான் உருவாகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நாளும் 120 கிராம் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக நைஜீரியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. அந்த நாடுகளில் முறையே 35 லட்சம் மற்றும் 34 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. உலகில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளில் பட்டியலில் சீனா 4-ம் இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்பு சீனா தான் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடாக இருந்தது. ஆனால் இப்போது அந்நாட்டில் சிறப்பாக மேற்கொள்ளப்படும் கழிவு மேலாண்மையால் பிளாஸ்டிக் கழிவுகளை சீனா குறைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1398699- யாகி சூறாவளி-60 பேர் உயிரிழப்பு!
யாகி சூறாவளி-60 பேர் உயிரிழப்பு! யாகி சூறாவளி காரணமாக வியட்நாமில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன இந்த ஆண்டு ஆசிய கண்டத்தை தாக்கும் மிக மோசமான சூறாவளி இதுவாகும் என்றும் இதன் விளைவாக வடக்கு வியட்நாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன மேலும் நாட்டின் 12 மாநிலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், கரையோரப் பகுதியில் இருந்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன https://athavannews.com/2024/1398754- ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
நாளையுடன்... தமிழரசு கட்சி, இரண்டாக பிரிந்தாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை.- கருத்து படங்கள்
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தலதா அத்துகோரல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.- மாவையுடன் திடீர் சந்திப்பில் ஈடுபட்ட ரணில்.
“தென்னை மரத்துல ஒரு குத்து…பனை மரத்துல ஒரு குத்து” 😂 🤣- கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!
கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு! கடந்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 15,491 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், 4,860 மில்லியன் ரூபா பெறுமதியான 511 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், அந்தக் காலப்பகுதியில் கேரள கஞ்சா, ஹாஷிஸ், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களையும் கடற்படையினர் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. https://athavannews.com/2024/1398667- நைஜீரியாவில் கொடூர விபத்து: 48 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் கொடூர விபத்து: 48 பேர் உயிரிழப்பு. நைஜீரியாவின், நைஜர் மாகாணம் அகெயி நகரில் நேற்றைய தினம் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி மீது பயணிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் குறித்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1398663 - ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.