Everything posted by தமிழ் சிறி
-
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
பலே.. பலே... இரண்டு நாளில்... மனம் மாறி, ஜனாதிபதியை சந்தித்து விட்டார்களா. ஏதாவது அறிக்கை விடும் போது நிச்சயமான, சாத்தியமான அறிக்கைகளை விட வேண்டும். மனுசர் இருக்கிற விசரிலை... நீங்கள் வேறை, காமெடி பண்ணிக் கொண்டு இருக்கக் கூடாது. பிறகு உங்களைத்த்தான்.... "லூசு" கூட்டம் என்று சனம் சொல்லும். 😂 🤣
-
இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை!
இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை! மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியப் படையினர் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே பரஸ்பர நட்புறவை மென்மேலும் விருத்தி செய்யும் முக்கிய படிமுறையாக, வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகின்ற இந்த மித்ரசக்தி போர்ப் பயிற்சியானது, எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை மாதுரு ஓயா பிரதேசத்தில் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய இராணுவ வீரர்களே நேற்று மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர். இந்திய இராணுவ படையினரை காலாட்படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, மித்ர சக்தி இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தினேஷ் உடுகம, இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இவர்களை வரவேற்றனர். போர்ப் பயிற்சியில் இந்திய இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கேணல் ரவீந்திர அலவட் தலைமையில் 18 அதிகாரிகளும் 102 சிப்பாய்களும் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கஜபா படையணியின் 18 அதிகாரிகளும் 102 சிப்பாய்களும் பங்கேற்கவுள்ளனர். 10 ஆவது தடவையாக இம்முறை இடம்பெறும் இந்த இராணுவப் பயிற்சிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இலங்கையிலும் இந்தியாவிலும் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395546
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
கபிதன்... நீங்கள், "சேம் சைட் கோல்" போடுறீங்கள். 😂 🤣
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதித் தேர்தல்: வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. இதன்படி நேற்றைய தினம் 5 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. அத்துடன் வேட்பு மனுக் கோரல் எதிர்வரும் 15 ஆம் திகதி முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் இராஜகிரிய பகுதியிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் அடங்கலாக 1,500 பேர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1395505
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
அவர்... தனக்கு, லாபம் வருமென்றால்... அலகு குத்தி, காவடியும் எடுப்பார். 😂
-
கருத்து படங்கள்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
நாளாந்த சம்பளம் 1700 ரூபாய் நிறைவேற்றம்!
- ஜனாதிபதித் தேர்தல் – ரணில் விக்கிரமசிங்கவிற்கு அமைச்சர் பவித்ரா ஆதரவு!
- ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
- உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி..?
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி..? உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்திலேயே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார். மேலும் அங்கு கூகுள் நிறுவன அதிகாரி உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் அமெரிக்கா செல்லும் நிலையில் அதற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறு இருப்பினும் இது குறித்த உத்தியோக பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்போது, வரும் 19ஆம் திகதிக்கு மேல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகலாம் என்ற கருத்தை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395498- சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
ஆட்டு மந்தைக்குள், ஓநாய் நுழைவதென்றால்... வேசம் போட்டால் தான், ஓட்டு கிடைக்கும். 😂 இல்லாட்டி.... பட்டினி தான். 🤣- சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
படத்தில் உள்ளவர்… சுமந்திரன் என்று நினைக்கின்றேன். ஏனெனில்… அண்மையில் நாமல் ராஜபக்சதான், சுமந்திரனை சந்தித்து வாக்குறுதிகளை அள்ளி வழங்கி இருந்தார். 🙂- தொடருந்தை நடு வீதியில் நிறுத்தி கடையில் உணவு வாங்கும் சாரதி.
சாப்பாடு... சூடு ஆற முதல் சாப்பிட்டு முடிக்க, இனி.. எந்த சந்தியிலை நிற்பாட்டப் போறாரோ. 😂- கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா: எடப்பாடி,அண்ணாமலைக்கு அழைப்பு.
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா: எடப்பாடி,அண்ணாமலைக்கு அழைப்பு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகினறது. இந்த விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோரும் பங்கேற்க முதலமைச்சர் விரும்புகிறார். அதன் அடிப்படையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395451- தொடருந்தை நடு வீதியில் நிறுத்தி கடையில் உணவு வாங்கும் சாரதி.
“பசி வந்திட, பத்தும் பறந்து போகும்.” இது எத்தினை நாளாக நடக்குது என்று தெரியவில்லையே. இண்டைக்கென்று… இதனை ஒருத்தன் படம் பிடிப்பான் என்று அவருக்கு தெரியாமல் போச்சுது. 😂 இதோடை… வேலைக்கு ஆப்போ தெரியவில்லை. 😁 சிங்களவன் என்றால் தப்பி விடுவான். 🤣- நாளாந்த சம்பளம் 1700 ரூபாய் நிறைவேற்றம்!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளம் 1700 ரூபாய் நிறைவேற்றம்! பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று வாக்கெடுப்பொன்று நடத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளது . இதேவேளை, சம்பள விடயம் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட தவறுகளை திருத்தி அமைத்து 1700 ரூபாய் சம்பளம் உயர்வை பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை முன்மொழிந்தது போல அதனை மக்கள் கை பெற்றுக்கொடுக்கும் முழுப்பொறுப்பும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1395448- மஹிந்தவுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் அரசியல் ரீதியாக இனிமேல் தலை தூக்க முடியாது!
மஹிந்தவுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் அரசியல் ரீதியாக இனிமேல் தலை தூக்க முடியாது! பொதுஜன பெரமுனவின் முதலாவது கன்னி தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” எதிர்வரும் 21ஆம் திகதி அதிகளவான மக்கள் எமது கூட்டத்தில் கூடுவார்கள். எனவே அதற்காக நாம் எல்லா வகையிலும் தயாராக உள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக செயற்பட்டவர்கள் அரசியல் ரீதியாக இனிமேல் தலை தூக்க முடியாது. அதேபோன்றதொரு விடயம் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு கிராம மட்டத்திலேயே அதிகமாக உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அணுகிய சிலர் மீண்டும் கட்சிக்கு வருமாறு கோரியுள்ளனர். ரணில் விக்கிரமசிங்க மிகக் குறைந்த வாக்குகளை மாத்திரம் பெற்று தேர்தலில் தோல்வியடைவார். பொதுஜன பெரமுன ஒரு இளம் ஜனாதிபதி வேட்பாளராக நாமலை களமிறக்கியுள்ளது. எனவே நாமலை சுற்றி அனைவரும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1395414- நீதி அமைச்சராக அலி சப்ரி நியமனம்!
நீதி அமைச்சராக அலி சப்ரி நியமனம்! வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார் இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜிநாமாவை அடுத்து ஜனாதிபதியால் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1395444- கருத்து படங்கள்
நாமலுடன்.. படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா. 😂- சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
@Kapithan, @alvayan, @பெருமாள், @Kandiah57, @புலவர், @satan நாமலுடன்.. படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா. 😂- தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை ஆராய்வதற்கு நடவடிக்கை. - ரணில் -
தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை ஆராய்வதற்கு நடவடிக்கை. - ரணில் - அரசாங்கத்தினால் புதிதாக உருவாக்கப்படவுள்ள சமூக மற்றும் நீதிக்கான ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை விரிவாக ஆராய்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நுவரெலியா மாவட்ட கல்விசார் நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று நுவரெலியாவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எனவே அதனை மாற்றி வேறுபாதையில் பயணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது மலையகத் தமிழ் மக்களுக்கு சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக அடுத்த வருடம் மாநாடு ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளேன். அத்துடன் அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள சமூக நீதி ஆணைக்குழுவில் தமிழ் மக்களின் சமூகப் பிரச்சினைகளை விரிவாக ஆராய சந்தர்ப்பம் கிடைக்கும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட இந்து பூசகர்கள் குழுவின் தலைவர் வேலு சுவிஸ்வர சர்மா மற்றும் தொழில் வல்லுனர்கள் குழுவினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395417- மும்முனைப் போட்டியா? நான்கு முனைப் போட்டி? – நிலாந்தன்.
நாமலின் ஜனாதிபதி இலக்கு, இதற்கு அடுத்த தேர்தல்தான். மகிந்த, தேக ஆரோக்கியமாக இருக்கும் போதே… சித்தப்பன் மாரால்… நாளைக்கு பிரச்சினை வராமல் இருக்க… தனது குடும்பத்துக்கு… நாமல் என்ற விதையை ஊன்றி, “லைனை, கிளியர்” பண்ணி விட்டிருக்கின்றார் அப்பா மகிந்த. 😂 🤣- ஜனாதிபதியை புதனன்று சந்திக்கிறார் சுமந்திரன் : சஜித், அநுரவுடனும் விரைவில் பேச்சு
காணுற... மின் கம்பங்கள் எல்லாம், காலைத் தூக்குகின்ற பிராணி மாதிரி, சுமந்திரன் ஐயா கடுமையாக உழைக்கின்றார். 😂 🤣- குட்டிக் கதைகள்.
50 திருமணமான ஆண்களின் கூட்டத்தில்... "மனைவியிடம் அடி வாங்கியவர்கள் எல்லாம் கை தூக்குங்கள்" என்று கேட்கப் பட்டது.... ஒருவர் தவிர, மற்றவர்கள் எல்லோரும் கைகளை உயர்த்தினார்கள். கை உயர்த்தாத அந்தக் கணவரை அழைத்து "பரவாயில்லையே... உங்கள் மனைவி மிகவும் அனுசரணையானவர் போல", நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என புகழ்ந்தனர். அதற்கு அவர் சொன்னார்... அட "போங்கப்பா, நீங்க சும்மா வயித்தெரிச்சலை கிளப்பிக்கிட்டு... நேற்று வாங்கின அடியிலை... கையை தூக்கவே, முடியலேப்பா... என்றார். 😂 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
- ஜனாதிபதித் தேர்தல் – ரணில் விக்கிரமசிங்கவிற்கு அமைச்சர் பவித்ரா ஆதரவு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.