Everything posted by தமிழ் சிறி
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
கோத்தா போல்... குப்பைத் தொட்டிக்குப் போன வங்கதேச பிரதமர். 😂 🤣
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
பங்களாதேஷின் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது! பங்களாதேஷில் உள்ள டாக்கா சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமான நிலையம் பல மணி நேரம் மூடப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் இராணுவம் தெரிவித்துள்ளது. விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், பங்களாதேஷிற்கு வருகைத்தரும் சில விமானங்கள் இந்தியாவுக்கு திருப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. பங்களாதேஷின் டாக்கா நகரில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2024/1394872
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
திருமணத்திற்குப்பின் இந்திய பணக்காரர் ஆனந்த் அம்பானி மற்றும் அவரின் மனைவி ராதிகா இருவரும் பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை பார்த்து ரசித்த வண்ணம் தங்கள் தேனிலைவை கொண்டாடுகின்றார்களாம். அதுவல்ல நான் கூற வந்த விடயம். உலகத்தில் அமேசன் காட்டு மூலிகை முதற்கொண்டு ஆட்டு மூ...ம் வரை இயற்கை அல்லது செயற்கை ரீதியான முடி முளைக்கும் மருந்து கண்டு பிடிக்கிறதா விளம்பரம் செய்ற கம்பனிகளே, சித்த வைத்திய சிகாமணிகளே.. ஆனந்த் அம்பானி தலையில் அரை வட்ட வடிவில் சொட்ட தெரியுதே… அதுல, ஒத்த முடிய வளர வச்சு காட்டுங்க பார்ப்போம். 😂 உங்களுக்கு Life Time settlement Confirm. Meera Ramesh
-
மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் மனச்சாட்சி உள்ள உத்தியோகத்தர்களே! மன்னாரின் புத்திஜீவிகளே! மன்னார் மக்களின் வாக்குகளைப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களே, அமைச்சர்களே! மன்னாரின் மதத்தலைவர்களே! அரச அதிகாரிகளே! அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகளே! சட்டத்துறை வல்லுநர்களே! காவல்துறை தமிழ் அதிகாரிகளே! சமூக சேவையாளர்களே! சமூக ஊடகப் போராளிகளே! மன்னாரைச் சோர்ந்த சமூக அக்கறையுள்ள புலம்பெயர் தேசத்தவர்களே! இந்த நாதியற்ற ஜீவன்களுக்கு நாம் என்ன பதில் வழங்கப்போகின்றோம்? இல்லை மட்டக்களப்பில் இருந்து இன்னுமொரு அர்ச்சுனா வந்து நியாயம் கேட்கட்டும் என்று காத்திருக்கப் போகின்றோமா? நம் ஒவ்வொருவரிற்கும் இதற்கு பதில் சொல்ல வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது. ஒரு அநீதி இழைக்கப்படும் பொழுது அதை வேடிக்கை பார்த்து மொளனியாக இருப்பவன் அநீதியை இழைத்தவனைவிட மோசமானவன் ஆகின்றான். நமது குடும்பத்தில் இவ்வாறு நடந்திருந்தால்? நம் எதிர்வினை எவ்வாறு அமைந்திருக்கும். இதுவரை இலங்கையில் குறிப்பாக வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் நடந்த எந்த ஒரு மருத்துவ உதாசீன கொலைகளிற்கும் நீதி வழங்கப்பட்டுள்ளதா? குற்றவாளியை அவனது தாய் புலன் விசாரணை செய்தால் நியாயமான தீர்ப்பு கிடைக்குமா? ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டு அதற்கு சரியான தண்டனை வழங்கப்படுமானல் மீண்டும் அதே குற்றங்கள் நிகழ்வதை தடுக்கலாம். அநீதிகளுக்கு நியாயம் கேட்பது என்பது காழ்ப்புணர்ச்சியினால் அல்ல அக்குற்றங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்கே. அன்பார்ந்த வைத்திய துறைசார் உறவுகளே! ஒருவன் உங்களை கொலை செய்ய வருகின்றான் நீங்கள் கடவுளே! காப்பாற்று என்று கோவிலுக்குள் ஓடுகின்றீர்கள் அந்த தெய்வமே உஙகளுக்கு ஈட்டியால் குத்தினால் உங்களுக்கு எவ்வாறான உணர்வு ஏற்படுமோ அதே உணர்வு தான் உங்கள் மருத்துவ உதாசீனத்தின் போதும் எமக்கும் ஏற்படுகின்றது. வைத்தியத்துறை புனிதமானது அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை எனினும் ஒருசிலரின் தான்தோற்றித்தனமான செயற்பாடுகளினால் அர்ப்பணிப்பான சேவையாளர்கள் பாதிக்கப்பட கூடாது. Rex Leon
-
சிரிக்கலாம் வாங்க
ஒரு லெமன் ஜூஸ் குடுங்க. ~ 25 ரூபா குடுப்பா... நேத்தும் இங்கதான் குடிச்சேன். 20 ரூவாதான் வாங்குனாங்க... ~அப்படியா.. அந்த 5 ரூவாயும் சேர்த்து 30 ரூபாவா கொடுப்பா..! 😂😂😂
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
தற்செயலாக, ரணில் தேர்தலில் வென்றால்.... கிடைக்க இருக்கும் ஒரு அமைச்சர் பதவிக்காக, செம்மறி ஆடு, பெரிய திட்டம் போடுகின்றது. 😃 சம்பந்தர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து... காலத்தை வீணடித்த மாதிரி, செம்மறி ஆடும் ஆயத்தப் படுத்துகின்றது. 😂 "சோழியன் குடும்பி சு(ம்)மா ஆடாது." 🤣
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
கோத்தபாயாவுக்கு ஏற்பட்ட நிலைமை… இந்த மனிசிக்கும் ஏற்பட்டு விட்டது. 😂 கெட்டவர்களுடன் சகவாசம் வைத்தால்… இப்பிடித்தான் நடக்கும் போலை. 🤣
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
நான் ரணிலுக்கு வாக்கு போடச் சொல்லி சொல்லவில்லை. சுமந்திரன்தான் ரணிலுக்கு வாக்குப் போடச் சொல்லி சொல்லுகிறார். இப்போ… யார் செம்மறி ஆடு என்று தெரிகிறதா. 🤣
-
இரசித்த.... புகைப்படங்கள்.
சொத்து, பிரித்த பின்.... 😂 🤣
-
இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!
- அதிசயக்குதிரை
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
சோறு வடிச்சதுக்கு அப்புறம் நாங்க ஏன்(டா) சப்பாத்தி சுடணு ம்..? 🙆♂️🙆♂️🙆♂️🙆♂️ 😂😂😂😂- மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால்... நீங்கள், ஒதுக்கித் தள்ளப்படுவீர்கள்.
1. ஆண்ட்ராய்டு வேண்டாம் என்றது நோக்கியா 2. கூகுள் வேண்டாம் என்றது யாகூ 3. மின்னணு கேமராக்களை ஒதுக்கியது கோடக். இன்று, நோக்கியா, யாகூ,கோடக் நிலைமை என்ன? படிப்பினை மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீங்கள் ஒதுக்கித் தள்ளப்படுவீர்கள். 1. சந்தைக்குப் புதிதாக வந்த whatsapp instagram ஐ முகநூல் தன் வசப்படுத்திக் கொண்டது 2. தென்கிழக்கு ஆசியாவில் ஊபர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது கிராப் Grab. படிப்பினை போட்டியாளர்களை நண்பர்கள் ஆக்கிக் கொள்வது வலிமையைப் பெருக்கும்; வளர்ச்சிக்கு வழி வகுக்கும். 1. Colonel Sanders 65 வயதில் கென்டகி ஃபிரைட் சிக்கன் நிறுவனத்தைத் தொடங்கினார். KFC. 2. Jack Ma வுக்கு KFC யில் வேலை கிடைக்கவில்லை. Alibaba நிறுவனத்தைத் தொடங்கினார். சீனாவின் மிகப்பெரும் பணக்காரர் ஆனார். 55 வயதில் ஓய்வு பெற்றார். படிப்பினை வயது ஒரு பொருட்டு அல்ல. தொடர்ந்து முயற்சிப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். உழைப்பே உயர்வு தரும். யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். காலம் பொன் போன்றது. தோல்வியே, வெற்றிக்குப் படிக்கட்டு. Arunagiri Sankarankovil- மன்னாரில் குழந்தையை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!
மன்னார் பெண்ணின் மரணம் – உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கை! மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்களின் கவனக்குறைவு காரணமாக உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த பினனர், உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத்.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்த இளம் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 27 ஆம் திகதி பட்டதாரி இளம் குடும்ப பெண்ணான மரியராஜ் சிந்துஜா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறித்த பெண்ணின் மரணம் சம்பவ தினம் நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்கள் அசமந்த போக்குடன் செயற்பட்டதாக பெண்ணின் தாயார் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு உரிய தரப்பினருடன் கலந்துரையாடியிருந்தார். இதேவேளை மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இடையூறை ஏற்படுத்திய வைத்தியர் அர்ஜுனாவின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். https://athavannews.com/2024/1394781- சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்!
சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்! இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்கும் முறை தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்படும் என எதிர்பார்ப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு E-விசா சேவையை வழங்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் சமீபத்தில் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதற்கமைய ஆகஸ்ட் 2 ஆம் திகதி இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இணைய முறையின் ஊடாக விசா வழங்குவதை இடைநிறுத்துவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில், குறித்த இணையத்தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக விசா பெற்றுக் கொள்வதற்காக பணம் செலுத்தியவர்களுக்கு அந்த பணத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் ON ARRIVAL விசாக்கள் மாத்திரமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1394793- தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்!
தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்! ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளர் யார் என்பது குறித்து இன்று வவுனியாவில் தீர்மானிக்கப்படவுள்ளது. இந்நிலையில், பொதுவேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு சந்திரகாந்தன் மற்றும் அரியநேத்திரன் ஆகியோரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கே.வி.தவராசா மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவு என்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் 7 பிரதிநிதிகளும் 7 அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளும் கூட்டிணைந்து இந்த தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை ஸ்தாபித்துள்ளனர். எனினும், ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படும் நபரை தெரிவு செய்வதற்காக நீண்ட பட்டியலொன்று தயார் செய்யப்பட்ட நிலையில் தற்போது சந்திரநேரு சந்திரகாந்தன், தவராசா, அரியநேத்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் இறுதிப்பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கில் இருந்து அரசியல் சாராத ஒருவரை களமிறக்குவதற்கு முயற்சிக்கப்பட்டபோதும் அது பலனளிக்காத நிலையில் தற்போது அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் கட்சி மற்றும் சின்னம் தொடர்பாகவும் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை. இந்த நிலையில் எந்தவொரு தரப்பினரும் பொருந்தாத நிலையில் இறுதியாக சி.வி. விக்னேஸ்வரனை பரிசீலிப்பதாகவும் குறிப்பாக அவர் இரண்டாவது வாக்கு தொடர்பில் அதிகமாக பிரஸ்தாபித்து வருவதால் அவருடைய பெயரை இறுதி நிலையில் வைப்பதற்கு பொதுக்கட்டமைப்பின் சிவில் தரப்பினர் தீர்மானித்துள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1394799- விருப்பு வாக்கினைப் பயன்படுத்துவது தமிழா்களின் ஜனநாயக உரிமை – சி.வி.விக்னேஸ்வரன்!
விருப்பு வாக்கினைப் பயன்படுத்துவது தமிழா்களின் ஜனநாயக உரிமை – சி.வி.விக்னேஸ்வரன்! விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை என்பதால் குறித்த ஒரு நபருக்கே வாக்களிக்குமாறு தான் எந்தத் தருணத்திலும் கூறவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளாா். தமிழ் பொது வேட்பாளா் குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா். அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தொடர்பில் தான் தெரிவித்திருந்த கருத்துக்கள் பற்றி தவறான பிரச்சாரங்கள் செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளாா். மேலும் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும் போது, ஒட்டு மொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்கே தமது வாக்குகளை அளிக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் தொிவித்துள்ளாா். ஜனாதிபதித் தேர்தலின் பின்விளைவுகள் குறித்தே தேர்தலைப் பிற்போட்டால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என தான் முன்னா் கூறியிருந்ததாகவும், எந்த ஒரு சிங்கள வேட்பாளரினாலும் ஐம்பது சதவிகித வாக்குகளைப் பெற முடியாமல் போகும் பட்சத்தில் நாட்டின் அரசியல் நிலை கவலைக்கிடமாகலாம் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தொிவித்தாா். விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயம் என்பதால், இது தொடர்பில் அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தொிவித்துள்ளாா். https://athavannews.com/2024/1394797 @புலவர்- யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!
ஒன்றரை மாதக் குழந்தை உயிாிழப்பு விவகாரம் – பொலிஸார் தீவிர விசாரணை! யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாதக் குழந்தை சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெல்லிப்பழை பொலிஸார் தொிவித்துள்ளனா். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் குழந்தையை வளர்த்த இருவரையும், குழந்தையின் தந்தையும் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளுக்காக அழைத்துள்ளனர். அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தையே இவ்வாறு நேற்று உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பின்னர் குழந்தை அசைவற்று கிடந்ததாக குழந்தையின் தாய் குழந்தையை அளவெட்டி வைத்தியசாலைக்கு கடந்த 3 ஆம் திகதி கொண்டு சென்றுள்ள நிலையில், குழந்தையை அங்கிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மாற்றிய போது, குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால், உட்கூற்று பரிசோதனை நேற்று முன்னெடுக்கப்பட்ட போது, குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிந்து இருந்தமை, தலையில் அடிகாயங்கள் காணப்பட்டமை, உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், குறித்த குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394803- ஜனாதிபதித் தேர்தல் – இதுவரையில் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தினா்!
ஜனாதிபதித் தேர்தல் – இதுவரையில் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தினா்! ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரையில் 16 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் இருவர் சுயாதீன வேட்பாளர்களாக இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் இதன்படி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார் தம்மிக்க ரத்நாயக்கவினால் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க ஜனாதிபதி வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியிலிருந்து 9 வேட்பாளர்களும் சுயாதீனமாகப் போட்டியிடவுள்ள 6 வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவது குறித்து அமைச்சுகளின் செயலாளர்களுக்குத் தெளிவுப்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர் எல் ஏ எம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், அன்றைய தினம் அரச சொத்துகள் தொடர்பான பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். https://athavannews.com/2024/1394822- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதித் தோ்தல் – புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கையில் வெளியான தகவல்! எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், வெற்றிபெறப்போகும் வேட்பாளர் தொடர்பான புலனாய்வு அமைப்புக்களின் அறிக்கை அண்மையில் வெளியாகியிருந்தது. இவ்விடயம் தொடா்பாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில், 4 இடச்சத்திற்கும் இற்கும் அதிகமான வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் புகழ், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்கள் வைத்திருக்கும் வேலைத்திட்டம், நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் போன்ற அனைத்து உண்மைகளையும் ஆய்வு செய்த பின்னரே, வேட்பாளரை தேர்வு செய்வதற்கு சில குழுவினர் தயாராகி வருவதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முதன் முறையாக பத்து இலட்சத்திற்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், புலம்பெயர் நாடுகளில் உள்ள இலங்கையர்களின் எழுச்சி காரணமாக தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிவாய்ப்பு அதிகரித்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் புதிய அறிக்கை ஒன்றை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகளின் ஆதரவும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி வாய்ப்பினை உறுதி செய்துள்ளதாக புலனாய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். எனவே செப்டம்பர் மாதம் 21ம் திகதி தேசிய மக்கள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஓய்வுபெற்ற முப்படையினர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுர குமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1394836 @Kapithan 😂- ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன எந்த வகையிலும் ஆதரவளிக்காது – உதயங்க வீரதுங்க!
ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன எந்த வகையிலும் ஆதரவளிக்காது – உதயங்க வீரதுங்க! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த வகையிலும் ஆதரவளிக்காது என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், “பொதுஜன பெரமுனவில் இருந்து யார் வெளியேறினாலும் எமக்கு சவாலாக அமையாது.வரலாற்றில் ரணில் விக்ரமசிங்க தவறான தீர்மானங்களையே மேற்கொண்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிளவடைந்தமை ஐக்கிய தேசியக் கட்சி இன்று முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதேபோல் மைத்ரிபால சிறிசேனவுக்கு கட்சி என்ற ஒன்று இல்லாமல் உள்ளது. பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ள பலர் விரைவில் வீடு செல்ல நேரிடும். ஏனெனில் பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் ஒரு போதும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள். பொதுஜன பெரமுன கட்சி சார்பாக நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் பலர் மஹிந்த ராஜபக்ஷவின் அடையாளத்தினாலேயே நாடாளுமன்றம் சென்றனர் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிடகூடாது. பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறிய எவருக்கும் தனிப்பட்ட விருப்பு வாக்குகள் கிடைக்கப்பெறாது” என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1394835- வங்கதேசத்தில் வன்முறை - 25 பேர் பலி
நாட்டிலிருந்து வெளியேறினாா் பங்காளதேஷ் பிரதமா்! பங்காளதேஷ் பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதுடன் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாக சா்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மாணவர்கள் போராட்டத்துக்கு மதிப்பளித்து பிரதமர் ஷேக் ஹசீனா உடனடியாக தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அந்நாட்டு இராணுவம் கோாிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதுடன், நாட்டிலிருந்து தனது சகோதாியுடன் வெளியேறியுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1394826- பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல், சொத்துகளுக்கு சேதம்
பிாித்தானியாவில் அகதிகள் குடியேற்றத்திற்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டம்! அகதிகள் குடியேற்றத்திற்கு எதிரான உள்ளூர் மக்களின் போராட்டம் சவுத்போர்ட், ரூதர்ஹம் உள்பட பல்வேறு நகரங்களிலும் பரவி வருகிறது. குறித்த பிரதேசத்தில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மோதலில் 10 போலீசார் காயமடைந்துள்ளனா். மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன பள்ளியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 3 சிறுமிகள் உயிரிழந்ததுடன் 7 பேர் படுகாயமடைந்த நிலையில், குறித்த தாக்குதலை நடத்திய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதல் சம்பவம் சவுத்போர்ட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தாக்குதல் நடத்தியது இங்கிலாந்தில் அகதியாக குடியேறிய குடும்பத்தை சேர்ந்த சிறுவன் என செய்திகள் பரவியிருந்தன. இதையடுத்தே அகதிகளுக்கு எதிராக உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394819- வங்கதேசத்தில் வன்முறை - 25 பேர் பலி
பங்களாதேஷின் பிரதமருக்கு எதிராகத் தொடரும் போராட்டங்கள்! பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டில் மீண்டும் போராட்டங்கள் மேலும் வலுப்பெற்று வருவதாக சா்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற போராட்ங்களில் 70 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று நடத்தப்பட்ட குறித்த போராட்டங்களைக் கலைப்பதற்காக பங்களாதேஷ் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பங்களாதேஷில் நேற்று காலை 6 மணிமுதல் மறு அறிவித்தல் வரை, முழுமையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்று முதல் 3 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டின் பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். குறித்தப் போராட்டம் அந்த நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பங்களாதேஷ் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது வீதிகளில் இறங்கிப் போராடுபவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அல்ல எனவும் அவர்கள் நாட்டை சீர்குலைக்கும் பயங்கரவாதிகள் எனவும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. https://athavannews.com/2024/1394805- ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
பையா.... விளையாட்டு வீரர்கள்/ வீராங்கனைகள் தங்கும் ஹோட்டேலில் வைத்துதான், உடலுறவு கொள்ள வேண்டும் இல்லை. இந்த விஷயம் எல்லாம், "கோச்" சுக்கு சொல்லிப் போட்டு செய்யிற காரியமும் இல்லை. 😃 செய்ய வேண்டும் என்று... ஆர்வம் வந்திட்டுது என்றால், "கோச்" சை சுழிச்சுக் கொண்டு போக CCTV கமெரா இல்லாத ஆயிரம் வழிகளும், இடங்களும் உள்ளன.😂 அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் செய்த விளையாட்டை அதுக்கிடையில் மறந்து போனீர்களா பையன். 🤣 - அதிசயக்குதிரை
Important Information
By using this site, you agree to our Terms of Use.