Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இந்தியாவை விட ஜேர்மனி முன்னுக்கு நிக்குது எண்டு சந்தோசப் படுங்கோ. 😂 🤣
  2. பாவம். வயது 27. வாழ்க்கையின் முக்கிய பகுதியில் காலடி எடுத்து வைக்கும் நேரம் மரணம். அடுத்த நாள் கனடா போக இருந்தவராம். அவரை நம்பி இருந்த குடும்பம் வாழ்க்கை முழுக்க சோகத்தில் வாழப் போகின்றார்கள். 🥲
  3. 20 லட்ச ரூபாய்க்காக ஒரு இளைஞன் கொலை. பெரும் தொகை பணத்துடன் செல்லும் போது இரகசியமாக கொண்டு செல்லலாமே. அது... மூன்றாம் ஆளுக்கு எப்படி தெரிய வந்தது. யாரோ... நன்கு அறிந்தவர்கள்தான் இதனை செய்து இருக்கின்றார்கள்.
  4. நன்றி ஏராளன். 👍 அப்ப... படத்தில் இருப்பது, அப்பா சிங்கம் போலுள்ளது. 😂
  5. மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியா கொலை வழக்கு! புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் விசாரணைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் – புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் மேன்முறையீட்டு மனுக்கள், 5 நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டது. இந்த வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பிரதிவாதி சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, இந்த பிரதிவாதிகள் 08 வருடங்களுக்கும் மேலாக சிறைச்சாலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார். இதன்போது, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக பிரதி மன்றாடியார் நாயகம் ஆயிஷா ஜினசேன மன்றிற்கு தெரிவித்தார். பிரதிவாதிகள் கொலை, சதி மற்றும் சட்டவிரோத குடியேற்றம் ஆகிய குற்றங்களில் குற்றவாளிகளாக காணப்பட்டதாக தெரிவித்த அவர், யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பிரதிவாதிகள் இருவர் விடுவிக்கப்பட்டதாகவும் மன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். இதனையடுத்து வழக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை பிரதிவாதிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மன்றாடியார் நாயகத்துக்கு உத்தரவிட்டது. அத்துடன், வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தி வைக்கப்பட்டுவதாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1394208
  6. 1500 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்! பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டு உடன்படிக்கையை மீள கைச்சாத்திட பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் தெரிவித்தார் அடிப்படை சம்பளமாக 1350 ரூபாவுடன் 1500 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் அத்துடன் 1700 ரூபா சம்பளத்திற்கான அழுத்தத்தை பிரயோகித்ததை அடுத்தே, 1500 ரூபா சம்பள அதிகரிப்புக்கான இணக்கப்பாட்டிற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் வந்துள்ளதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் .சக்திவேல் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1394209
  7. ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை! ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராகச் செயல்பட்டு வந்த இஸ்மாயில் ஹனியே ஈரானில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து இஸ்மாயில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவருடன் அவரது உதவியாளரும் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறதுடன் இதில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்ததுள்ளது. மேலும் 90 ஆயிரத்து 589க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன நிலையில் இஸ்ரேல் தரப்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394215
  8. ஒவ்வொரு நாளும் கோழி இறைச்சி சாப்பிட்டால்... கால் இப்பிடி வரும். 😂
  9. கடந்த 2019 ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயவுக்கு வாக்களித்த 69லட்சம் போரில் 39-42லட்சம் பேர் இந்த தடவை ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவுக்கு வாக்களிப்பார்கள். இது100% உறுதியானது. மிகுதி18-20லட்சம் வாக்காளர்கள் சிங்கள தேசியவாதிகள் இவர்கள்தான் மகிந்தவின் உண்மையான வாக்கு வங்கி. ஆனால் கடந்த அரகலயவுக்கு பின் கிட்டதட்ட 8லட்சம் பேர் ( மிதவாத சிங்கள தேசியவாதிகள்) மகிந்த தரப்பை விட்டு விலகி JVP பக்கம் சாய்ந்துள்ளனர். இவர்களே இப்போது அநுரவுக்கு கூடும் கூட்டடத்தினர். இவர்கள்தான் அநுரவின் வாக்கு சதவிதத்தை 300% தால் அதிகரிக்க செய்யப்போகின்றனர். மகிந்த வாக்கு வங்கியாக இருந்தவர்களில் கடைசியான மிகுதி 8-12லட்சம் பேர் கடும் சிங்கள தேசியவாதிகள்/ பேரினவாதிகள். துட்டகைமுனு கோஷ்டியினர். இவர்கள் உயிரே போனாலும் ரணிலுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இவர்களின் பிரதான எதிரியே ரணில்தான். அதே நேரம் இன்றுவரை இவர்களின் ஒரே தலைவன் மகிந்த ராஜபக்ச தான். தனது மகனின் எதிர்கால அரசியல் கருதி இந்த வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள மகிந்த தரப்பு தமது விசுவாசி யாரேனும் ஒருவரை வேட்பாளராக்க முயற்சிப்பார்கள். அதே வேளை அந்த வேட்பாளர் இந்த வாக்குகளை முழுமையாக அறுவடைசெய்து விடாமலும் பார்த்தும் கொள்வார்கள். ஒருவேளை அவர் மகிந்தவை அகற்றிவிட்டு இந்த கடும் சிங்கள தேசியவாதிகளின் தலைவனாகிவிட்டால் நாமலின் எதிர்காலம் சூனியமாகிவிடும். இவ்வாறு மகிந்தவை அகற்றி இந்த வாக்குகளை தம்வசப்படுத்தகூடிய வல்லமையுள்ள மகிந்தவின் விசுவாசிகளில் முதன்மையானவர் விமல் வீரவன்ச. எனவே மகிந்த தரப்பு இவரை தவிர்த்து சரத் வீரசேகர, உதய கமன்பில போன்ற பலவீனமான ஒரு கடும்சிங்கள தேசியவாதியை முன்னிறுத்தவே விரும்புவார்கள். இந்த நபரே வேட்பாளர் No 4. ஜனாதிபதி ரணில் சஜித்துக்கு செக் வைக்க அநுரவை பயன்படுத்துவது போன்று அநுரவுக்கு செக் வைக்க மகிந்த ஊடாக விமலை பயன்படுத்த முயற்சிப்பார். விமல் என்னும் கல்லின் மூலம், மகிந்த, நாமல், அநுர என்னும் மூன்று மாங்காய்களை அடிக்க பார்க்கின்றார் ரணில். இது மகிந்தவுக்கும் தெரியும். எல்லாம் ரணில் செயல். (ஜெய் பூரிஜெகநாதர் ) Rajh Selvapathi
  10. ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளைத் தோற்கடிப்போம்! -நாமல். ”ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுடன், ஜனாதிபதித் தேர்தலில் தொடர்ந்தும் செயற்படுவோம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனுவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதித் தேர்தலின்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை தோற்கடிக்க நாம் செயற்படுவோம். தேசிய வேலைத்திட்டமொன்றுடன் பயணித்த தலைவர்தான் ஜனாதிபதியாக இவ்வளவு காலத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்களில் சிலர் நேற்று இரவும் எமது வீடுகளுக்கு வந்தார்கள். சிலர் காலையிலும் வந்தார்கள். இவர்கள் எல்லாம் குழப்பமானதொரு மனநிலையில்தான் தற்போதும் உள்ளார்கள். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது ஒன்றும் புதிது கிடையாது. மொட்டுக் கட்சியின் வேட்பாளர் தொடர்பாக நாம் இன்னும் கலந்துரையாட வேண்டியுள்ளது. நாம் நபரை இலக்குவைத்து அரசியல் செய்யப்போவதில்லை. எமக்கு அரசியல் கொள்கைகளே முக்கியமாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார் என்று குற்றச்சாட்டுக்கள் வந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவர் சிரேஷ்ட அரசியல்தலைவர் என்றவகையில், நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவார் என்றே நம்புகிறோம்” இவ்வாறு நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1394190
  11. ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் தம்மிக்க பெரேரா! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா களமிறங்கவுள்ளார் என்றும் நாளைய தினம் இதுதொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் மொட்டுக் கட்சியின் உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாளைய தினம் மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார். அந்தவகையில், வர்த்தகர் தம்மிக்க பெரேரா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புத்திக் கூர்மையான அரசியல் தலைவர் என்று பலரும் இங்கு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரைவிட பசில் ராஜபக்ஷ சிறந்ததொரு தலைவராவார். ரணிலைவிட பசிலுக்கு அரசியல் தொடர்பாக நன்றாகத் தெரியும். இதனால்தான் நேற்று மொட்டுக் கட்சி அப்படியானதொரு விசேட தீர்மானத்தை எடுத்தது. நாம் நிச்சயமாக தம்மிக்க பெரேராவை களமிறங்குவோம். அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்த பின்னர்தான் பசில் ராஜபக்ஷ ஓய்வார். ஏனெனில், மொட்டுக் கட்சிதான் நாடளாவிய ரீதியாக பலமானதொரு கட்சியாக இன்னமும் இருந்து வருகின்றது. ஒகஸ்ட் 15 ஆம் திகதியிலிருந்து நாம் எமது அரசியல் செயற்பாட்டை மேற்கொள்வோம்;. நாம் ஸ்தாபிக்கவுள்ள அரசாங்கத்தில் நாமல் ராஜபக்ஷ தான் பிரதமராக பதவியேற்பார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் 51 நாட்கள்தான் உள்ளன.அவரால் தொடர்ந்தும் ராஜபக்ஷவினரை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. அமைச்சர் கஞ்சன விஜேயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தற்போது ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கினாலும், விரைவிலேயே தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு எமது தரப்பில் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” இவ்வாறு உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1394192
  12. தேசபந்து தென்னகோனுக்கு ஆதரவாக தேரர் குழுவொன்று பேரணி! தேசபந்து தென்னகோனை மீண்டும் பொலிஸ் மா அதிபர் பதவியில் அமர்த்துமாறு கோரி அகலக்கட சிறிசுமண தேரர் முக்கியஸ்தர்கள் குழுவொன்று கொழும்பில் இன்று பேரணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பமாகி கோட்டை போதி வரை சென்றதுடன் இந்த பாதயாத்திரையில் வெளிநாட்டு தேரர்களும் கலந்துகொண்டிருந்தனர் இந்தக் குழுவினர் போதி கோட்டைக்கு அருகில் சென்று சமயச் சடங்குகளை நடத்தியதுடன், பொலிஸ் மா அதிபருக்கு அவர் பதவிக்காலத்தில் பணியாற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர் அத்துடன் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்காக பொலிஸ் மா அதிபரினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு எதிராக தற்போது பல்வேறு தடைகள் விதிக்கப்படுவதாக அங்கு கூடியிருந்த தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர் மேலும் தேஷ்பந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றுவதைத் தடுத்து, உயர் நீதிமன்றம் ஜூலை 24 அன்று இடைக்காலத் தடை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394179 @ரசோதரன் 😂
  13. ஒலிம்பிக் போட்டியை நிறுத்த தொடரும் சதி திட்டம் ! பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஆரம்பமான குறித்த போட்டியன்று காலையில் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது. பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்து தாக்குதலால், பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டிருச்தது. இதனால், சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படடிருந்த நிலையில், பாதிப்புகள் மெல்ல மெல்ல சரிசெய்யப்பட்டு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் நேற்று பிரான்ஸ் நாடு நெடுகிலும் பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு [டெலிகாம்] கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பைபர் ஆப்டிக்ஸ் தொலைத்தொடர்பு கேபிள்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொலைத்தொடர்புத்துறைச் செயலர் மெரினா பெர்ராரி தெரிவிக்கையில், ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் தொலைதொடர்பு சேவைகள் பைபர் லைன் மற்றும் மொபைல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பிரதான நகரமாக மார்சில் [Marseille] உட்பட பல்வேறு நகரங்களில் இந்த சேதங்கள் பதிவாகியுள்ளன என்றுதெரிவித்துள்ளார். இதனால் நடந்துவரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி நாடுகளிடையே எழுந்துள்ளது. https://athavannews.com/2024/1394152
  14. நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் – காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு! வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்சவ பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பெருந்திருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டுதல் வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் மரபினருக்கு காளாஞ்சியும்,பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. நல்லூர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டில் மூலம் கல்வியங்காட்டில் உள்ள கொடிச்சீலை வழங்கும் செங்குந்தர் மரபினருக்கு பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் எடுத்து சென்று கையளிக்கப்பட்டன. இவ் நிகழ்வில் ஆலய பிரதம சிவாச்சாரியர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதுடன், தொடர்ந்து 25 நாட்களுக்கு மகோற்சவ பெருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1394116
  15. பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) நகர கத்திக்குத்து தாக்குதலில், இரு சிறுவர்கள் பலி! பிரித்தானியாவின் சவுத்போர்ட் நகர கத்திக்குத்து தாக்குதலில் (Southport stabbing attack) 2 சிறுவர்கள் பலி யாகி உள்ளனர். 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் 6 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) நகரில் செயல்பட்டு வரும் நடன பள்ளி ஒன்றிற்குள் புகுந்த 17- வயது சிறுவன், அங்கிருந்த சிறுவர்களை கத்தியால் தாக்கியுள்ளார். பிரித்தானியாவின் கடலோர பகுதியில் அமைந்துள்ள சவுத்போர்ட் நகர ஹார்ட் ஸ்ட்ரீட் என்ற இடத்தில், சிறுவர்களுக்கான நடன பயிற்சிக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் நூற்றுக்கணக்கான சிறுவர்களும் சிறுமிகளும் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் டெய்லர் ஸ்விஃப்ட்-கருப்பொருள் நடன நிகழ்வின் போது (Taylor Swift-themed dance event) கல்லூரிக்குள் புகுந்த சிறுவனால் இந்த தாக்குதல் நடத்த்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக, வேல்ஸின் கார்டிஃப் நகரில் பிறந்து லங்காஷையரில் உள்ள பேங்க்ஸ் கிராமத்தில் வசிக்கும் 17-வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தாக்குதலாக இதை கருதவில்லை என முதல்கட்ட விசாரணையில் பொலிசார் தெரிவித்துள்ளனர். கத்திக்குத்து தாக்குதலில் சிறுவர்கள் பலியான சம்பவத்திற்கு பிரித்தானிய மன்னரும், ராணியும், பிரதமரும் ஆழ்ந்த இரங்கலையும், அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளனர். https://athavannews.com/2024/1394053
  16. புலவர், வடிவாய் உற்றுப் பார்த்தும்… முக்கிய தடயத்தை காணவில்லையே. 🤣
  17. குமாராசாமி அண்ணை இணைத்த முதல் படத்தில், காப்பு மட்டும்தான் தெரிந்தது புலவர். 😁 அதுதான்…. ஆரெண்டு அறிய வேணும் என்று ஆவல் வந்தது. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.