Everything posted by தமிழ் சிறி
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
மற்றப் பக்கம்… காப்பு கை ஒண்டு தெரியுது 😂. யாராய்… இருக்கும் 🤔, தெரியாட்டி தலை வெடிச்சிடும் போலை இருக்கே.. 🤣 கட்சியில் தனி ஒரு ஆளாக நின்று, ஜனாதிபதி ஆகிய பெருமை… உலகத்தில் எவருக்குமே கிடைக்காது. ஶ்ரீலங்கா ஒரு விசித்திரமான நாடு. 😂
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
ஒரு தேரரும்… ஜனாதிபதி வேட்பாளாராக போட்டி போடுவதற்கு, கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையத்துக்கு சென்ற போதுதான் தெரிந்தது… அவர் கட்டுக்காசு பணத்தை விகாரையில் மறந்து போய் விட்டு விட்டு வந்து விட்டாராம். 😂 திங்கள்கிழமை (இன்று) கட்டுவதாக சொல்லிவிட்டு வந்து விட்டாரம். இன்று கட்டினாரோ தெரியவில்லை. 🤣
-
பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!
ஒருவரும் சேர்க்கவில்லை. 😂 போற இடம் எல்லாம் கட்சிகளை பிளந்து கொண்டு இருந்தால், யார்தான் பக்கத்தில் வைத்திருப்பார்கள். 🤣
-
பிரிட்டனில் கத்திக்குத்து தாக்குதல் - 9 பேர் காயம்
ஐரோப்பியன் வாள்வெட்டு கோஷ்டி. 😂 எதை விதைத்தாயோ… அதைத்தான் அறுவடை செய்வாய்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நிழல் தரும் மரத்தை வெட்டி விட்டு, இப்போ அந்த மரத்திலேயே குடை பிடிக்கின்றார்கள்.
-
காட்டு சூழலை ஏற்றுக்கொள்ளாமல் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இடம் மாறிய புலி - காரணம் என்ன?
ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள். நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள். பதுங்குவதாக இருந்தால் பாய்வதற்காக பதுங்குங்கள். ஆனால் ஒருபோதும் அடிமையாகவே வீழ்ந்து கிடந்துவிடாதீர்கள். (இன்று சர்வதேச புலிகள் தினம்.) தோழர் பாலன்
-
நாளை யாழில் கறுப்பு ஜுலை அனுஷ்ட்டிப்பு
ஆதவன் போட்ட படம் என்ற படியால்... நீங்கள் சொன்ன மாதிரியும் இருக்கும். 😂
-
நாளை யாழில் கறுப்பு ஜுலை அனுஷ்ட்டிப்பு
ஈழப்பிரியன்... தமிழரசு கட்சியின் சுமந்திரன் பிரிவு நடத்திய கூட்டத்துக்கு இவ்வளவு ஆக்கள் வந்ததே பெரிய விஷயம். சம்பந்தர் அய்யாவின் மரணச் சடங்குக்கு வந்தவர்களை விட, இங்கு ஆட்கள் அதிகமாக நிற்கிறார்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
சிங்கத்துக்கு... மாடு மாதிரி, நாலு காம்பு இருக்கும் என இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன். 😂 "டவுட்"டை... கிளியர் பண்ணினத்துக்கு, நன்றி சுவியர். 🤣
-
மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
பையா... எனக்கும் சிங்களம் புரியவில்லைத்தான். ஆனால்... கேலிசித்திரத்துக்கு மொழி புரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. படத்தைப் பார்த்தே... ஓரளவு ஊகிக்கலாம். 🙂 எனக்கு விளங்கியபடி... பல நோய்களால் பீடிக்கப் பட்டு, நடக்கவே... முடியாத ஸ்ரீலங்காவுக்கு... மகளிர் அணியினர் ஆசிய கிண்ணத்தை எடுத்துக் கொடுத்ததன் மூலம், மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்துள்ளனர். 😂 உங்களுக்கு இன்னும் புரிய வேண்டும் என்றால்... @விசுகு, @புங்கையூரன், @ரஞ்சித் ஆகியோர் உதவுவார்கள். 😂
-
நாளை யாழில் கறுப்பு ஜுலை அனுஷ்ட்டிப்பு
மாவை, ஸ்ரீதரன் போன்றோரின் படங்களை காணவில்லை. தமிழரசு கட்சி இரண்டாக பிரிந்து விட்டது போல் தெரிகின்றது.
-
கருத்து படங்கள்
- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
- மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
- அமலநாயகிக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு!
அமலநாயகிக்கு அழைப்பு விடுத்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு! மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகியை பயங்கரவாத தடுப்பு பிரிவில் இன்று முன்நிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின், அலுவலகத்திற்கு இன்று காலை 10.00மணிக்கு சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவிக்கு இவ்வாறு புலனாய்வுப் பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமது உரிமைக்காக போராடுவோரை அச்சுறுத்தும் வகையில் இவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393930- நாளை யாழில் கறுப்பு ஜுலை அனுஷ்ட்டிப்பு
கறுப்பு யூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல்! கறுப்பு யூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், 1983 ஆம் ஆண்டு ஜூலை படுகொலை செய்யப்பட்டவர்கள் மற்றும் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53 அரசியற் கைதிகள் உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் யூலை கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393922- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து 31 ஆம் திகதி அறிவிக்கப்படும்! -மஹிந்த அமரவீர. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதை எதிர்வரும் 31ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதேவேளை இன்றையதினம் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. இன்று இடம்பெறவுள்ள அரசியல் குழுக் கூட்டத்தின்போது, வேட்பாளரை தீர்மானிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ரஜபக்சவிற்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. கொழும்பு – விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதற்கு முன்னரும் இவ்வாறான பல சந்திப்புகள் இடம்பெற்ற நிலையில் அவை இணக்கப்பாடின்றி நிறைவடைந்திருந்தன. அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராகத் தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், தமது கட்சியின் வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று வெளியிடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1393921- 2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
இரண்டாவது சீனா, மூன்றாவது அவுஸ்திரேலியா, நான்காவது பிரித்தானியா, ஐந்தாவது பிரான்ஸ், ஆறாவது ஜேர்மனி, ஏழாவது கனடா, எட்டாவது ஜப்பான், ஓன்பதாவது கொரியா பத்தாவது இத்தாலி…. வரும் என்பது எனது கணிப்பு. 😁- 2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
- ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
கட்டுப்பணத்தை... விகாரையில் மறந்து போய் விட்டு விட்டு வந்த ஆமத்துறு. 😂 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் சீலரத்ன தேரர், கடந்த வெள்ளிக்கிழமை கட்டுப்பணம் செலுத்துவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு சென்ற நிலையில்... தனது கட்டுப் பணத்தை விகாரையில் மறந்து போய் விட்டு விட்டு வந்ததால்... வருகின்ற திங்கள்கிழமை கட்டுப்பணம் செலுத்துவார் என எதிர்பார்க்கப் படுகின்றது. 🤣 அடுத்த ஜனாதிபதியாக வர இருக்கும் இவருக்கு... கட்டுப் பணம் செலுத்தாமலே, தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். 🤣- மகளிர் ரி20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்
- "◆என்◆இதயம்◆எரிகிறது◆" [நவீன கவிதை]
❤️ காதலிப்பவர்கள் எல்லோருக்கும் கவிதை எழுதும் திறமை உள்ளதை பல இடங்களில் அவதானித்து உள்ளேன். 💗 நல்ல ஒரு கவிதைக்கு நன்றி. 👍🏽- ஜனாதிபதி வேட்பாளர் - இறுதி முடிவை கூறிய மகிந்த!
எனக்கென்னவோ…. நாமல் அல்லது தம்மிக்க பெரேராவைத்தான் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவார்கள் போலுள்ளது.- மொத்த கிரகமுமே வைரம், வைடூரியம்தான்!
மகிழ்ச்சியான நல்ல செய்தியை முதலில் சொல்லி விட்டு, கடைசியில்… பூமியில் தயாரிக்கப்படும் விண்கலத்தில் அங்கு செல்வது கடினம் என்று சொல்லி விட்டார்கள். 😁 மினைக்கெட்டு வாசிச்சது… சப்பெண்டு போச்சுது. 😂 🤣- தமிழ்ப் பொது வேட்பாளர் = தமிழ் ஐக்கியம்! நிலாந்தன்.
தமிழ்ப் பொது வேட்பாளர் = தமிழ் ஐக்கியம்! நிலாந்தன். தமிழ்ப் பொது வேட்பாளர் = தமிழ் ஐக்கியம் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் ஒரு பேசுபொருள் என்ற கட்டத்தைக் கடந்து ஒரு செயலாக மாற்றமடையும் நிலைமைகள் படிப்படியாக வளர்ந்து வருகின்றன. கடந்த 22 ஆம் தேதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடந்த ஒரு நிகழ்வில் ஏழு தமிழ்த் தேசிய கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் “தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு ” என்று ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த மாதம் 29ம்தேதி வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.எனினும் அப்பொழுது கையெழுத்திடப்படவில்லை. கையெழுத்திடும் நிகழ்வை இம்மாதம் ஆறாம் தேதி ஒழுங்கு செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது.ஆனால் சம்பந்தரின் மறைவையொட்டி அந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அது கடந்த 22 ஆம் தேதி நடந்தது. தமிழ்த் தேசிய அரசியலில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆகப் பிந்திய ஒரு பொதுக் கட்டமைப்பு அதுவாகும். இதற்கு முன் கட்சிகளின் கூட்டுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.ஆனால் மக்கள் அமைப்புக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கூட்டெனப்படுவது இதுதான் முதல் தடவை.அதுவும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் இணைவது என்பது இதுதான் முதல் தடவை. இந்தக் கட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தி உழைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அடுத்தடுத்த கட்டத்திற்கு கட்டமைப்பு ரீதியாக முன்னேறத் தொடங்கியுள்ளது என்று தெரிகிறது. ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாராக இருந்தால் கட்சிகளும் மக்கள் அமைப்பும் ஒன்றாக உழைத்து அவருக்கு வாக்குத் திரட்டும் பொழுது என்ன நடக்கும்? தமிழ் பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளை பெருமளவுக்கு பெறுவாராக இருந்தால் அது தென் இலங்கை வேட்பாளர்களின் வெற்றிகளை சவால்களுக்கு உள்ளாக்கும். எந்த ஒரு தென் இலங்கை வேட்பாளரும் பெருமைப்படக்கூடிய பெரும்பான்மையைப் பெற முடியாத ஒரு நிலைமை தோன்றக்கூடும். ஏனென்றால் கிடைக்கும் செய்திகளின்படி தென்னிலங்கையில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் நிறுத்தப்படும் நிலமைகள் காணப்படுகின்றன. ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின் வெற்றி குறித்த நிச்சயமின்மைகளை அதிகமாகக் கொண்ட ஒரு தேர்தல் இது. ஒரு மேற்கத்திய நாட்டின் தூதரக அதிகாரி ஒருவர் கூறியதுபோல, தேர்தல் முடிவுகளை எதிர்வு கூற முடியாதிருக்கிறது என்பது மட்டுமல்ல, ஊகிக்கவும் முடியாத ஒரு நிலைமை காணப்படுகிறது என்பது சரியானதுதான். ஏனெனில் ஒப்பீட்டளவில் யாருமே மிகப்பெரிய பெரும்பான்மையோடு வெல்வார் என்று கூற முடியாத அளவுக்கு நிலைமை காணப்படுகிறது. இப்படிப்பட்ட நிச்சயமின்மைகள் அதிகமுடைய ஒரு தேர்தல்களத்தில் தமிழ் பொது வேட்பாளர் தமிழ் மக்களின் அதிகப்படியான வாக்குகளை கவர்வாராக இருந்தால் நிலைமை என்னவாகும் ? தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டாலும் நிறுத்தப்படாவிட்டாலும் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்தான் ஜனாதிபதியாக வரப்போகிறார். ஆனால் தமிழ் வாக்குகள் அவருக்கு இல்லை என்றால் முதலாவதாக அவர் பெறும் வெற்றியின் அந்தஸ்து குறைந்து விடும். எவ்வாறெனில் தமிழ் மக்களின் ஆணை அவருக்கு இல்லை என்பது அவரை நாடு முழுவதுமான ஜனாதிபதி என்ற அந்தஸ்திலிருந்து தரமிறக்கும். இரண்டாவதாக தமிழ் மக்களின் வாக்குகள் பெருமளவுக்கு அவருக்கு கிடைக்காவிட்டால் அவர் பெறக்கூடிய வெற்றியின் பருமன் குறையும். அதுவும் அவருடைய அந்தஸ்தை, அங்கீகாரத்தை குறைக்கும். எனவே தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் அதிகளவு வாக்குகளைப் பெறுவாராக இருந்தால் இந்த ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்படப் போகும் எந்த ஒரு ஜனாதிபதியும் அங்கீகாரம் குறைந்த;அந்தஸ்து குறைந்த ஒரு ஜனாதிபதியாகத் தான் காணப்படுவார்.அவர் பெறக்கூடிய வெற்றியின் பருமன் அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சிகள் பெறக்கூடிய வெற்றி தோல்விகளில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும். எனவே ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளை அதிகமாகக் கவர்ந்தால், தென்னிலங்கையில் பலம் குறைந்த ஒரு அரசுத் தலைவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்.அதேசமயம் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிறுத்தப்படாவிட்டால் என்ன நடக்கும் ? தமிழ் வாக்குகள் பலவாகச் சிதறும். ரணில் விக்கிரமசிங்க நம்புகிறார், ஆங்கிலம் பேசும் படித்த தமிழ் நடுத்தர தர்க்கம் தன்னை ஆதரிக்கும் என்று. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை அவர் மீட்டிருப்பதாக ஆங்கிலம் பேசும் படித்த நடுத்தர வர்க்கத் தமிழர்கள் கருதுவார்களாக இருந்தால், அவர்கள் ரணிலுக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும். அதேபோல சஜித்தோடு ஏதாவது ஒரு உடன்படிக்கைக்கு வர விரும்பும் கட்சிகள் தனது வாக்காளர்களை சஜித்தை நோக்கி சாய்ப்பாபார்களாக இருந்தால், சஜித்துக்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும். தென்னிலங்கை வேட்பாளர்கள் தமது வாக்குறுதிகளை வெளிப்படையாக முன்வைத்தபின் அவர்களோடு பேசலாம் என்று காத்திருக்கும் கட்சிகள்,தமிழ் மக்களின் வாக்குகளை யாரோ ஒரு தென் இலங்கை வேட்பாளரை நோக்கித்தான் சாய்க்கப் போகின்றன.எனவே சஜித்,ரணில் போன்ற வேட்பாளர்கள் அவ்வாறான எதிர்பார்ப்புகளோடு இருக்க முடியும். அடுத்ததாக, அனுர.மாற்றத்தை விரும்புகிறவர்கள் முன்னைய தலைவர்களில் சலித்துப் போனவர்கள், அனுரவை எதிர்பார்ப்போடு பார்க்கக்கூடும். அதனால் அவருக்கும் ஒரு தொகுதி தமிழ் வாக்குகள் கிடைக்கலாம். இந்த மூன்று தென்னிலங்கை வேட்பாளர்களையும் தவிர பகிஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேட்கின்றது.அதற்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கக்கூடும்.ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்றால் தமிழ் வாக்குகள் மேற்கண்டவாறு சிதறும் நிலைமைகளை அதிகமாக ஏற்படும். இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக்கூட்டமைப்பானது தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தத் தவறினால் யாரோ ஒருவர் தமிழ்ப் பொது வேட்பாளர் என்று கூறிக்கொண்டு களமிறங்கத்தான் போகிறார். அவருக்கும் ஏதோ ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும்.இப்படிப்பார்த்தால் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்று சொன்னால்,தமிழ் வாக்குகள் முன்னெப்பொழுதையும்விட பல கூறாகச் சிதறும் ஆபத்தும் அதிகம் தெரிகிறது. அதாவது தமிழ்ப் பலம், தமிழ் அரசியல் சக்தி பல துண்டுகளாகச் சிதறப் போகின்றது. இது அடுத்தடுத்த தேர்தல்களிலும் எதிரொலிக்கும்.ஜனாதிபதித் தேர்தலில் சிதறடிக்கப்பட்ட தமிழ் வாக்குகள் அடுத்தடுத்த கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலிலும் மாகாண சபை தேர்தலிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் மேலும் சிதறடிக்கப்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.எனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்குகளை ஒன்றுதிரட்டத் தவறினால்,தொடர்ந்து நடக்கக்கூடிய ஏனைய மூன்று தேர்தல்களிலும் தமிழ்மக்கள் மேலும் சிதறடிக்கப்படுவார்கள். இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தவிர வேறு புத்திசாலித்தனமான தீர்க்கதரிசனமான தெரிவு தமிழ்மக்களுக்கு உண்டா? அல்லது அதை மேலும் ஆழமான பொருளில் கேட்டால், ஐக்கியப்படுவதைத் தவிர வேறு உடனடி நிகழ்ச்சி நிரல் தமிழ் மக்களுக்கு உண்டா? ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் ஐக்கியம் நிரூபிக்கப்பட்டால்,அது அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்லப்படும். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு பொதுநிலைப்பாட்டின் கீழ் ஒன்று திரட்டப்பட்டால், தமிழ் மக்கள் மத்தியில் உற்சாகம் பிறக்கும்; உத்வேகம் பிறக்கும். இது தமிழரசியலில் ஒரு புதிய ரத்தச் சுற்றோட்டத்தை ஏற்படுத்தும். கடந்த பல தசாப்தங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கும் ஓர் உண்மை எதுவென்றால், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வாக்களிப்பு அலை தோன்றும் போதுதான் அதிகப்படியான ஆசனங்கள் கிடைக்கின்றன.தமிழ் வாக்களிப்பு அலை எனப்படுவது அதன் பிரயோக அர்த்தத்தில் தமிழ்த் தேசிய அலைதான். தமிழ்த் தேசிய அலை என்பது அதை வேறு வார்த்தைகளில் சொன்னால் தமிழ் ஐக்கியம் தான். தேசியவாத அரசியல் எனப்படுவது அது எந்த தேசியவாதமாக இருந்தாலும், ஐக்கியம்தான்.எவ்வாறெனில்,தேசியவாத கட்சி அரசியல் எனப்படுவது மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது.அதாவது ஆகக்கூடிய பெரும் திரளாக திரட்டுவது.அதை தேர்தல் வார்த்தைகளில் சொன்னால், வாக்காளர்களை ஆகக்கூடியபட்சம் திரட்டுவது.எனவே தமிழ்த்தேசிய வாக்களிப்பு அலை எனப்படுவது தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஐக்கியப் படுத்துவதுதான். அந்த அடிப்படையில்தான் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் சிந்திக்கப்படுகிறது.கடந்த திங்கட்கிழமை தந்தை செல்வா கலையரங்கில் எழுதப்பட்ட உடன்படிக்கையில் 7கட்சிகள் கையெழுத்திட்டன.உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி முடிவெடுக்க முடியாதபடி இரண்டாக நிற்கின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளரைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சிக்குள் இரண்டு அணிகள் உண்டு.சிறீதரன் அணி பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது. சுமந்திரன் அணி எதிர்க்கின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட காணொளி ஊடகம் ஒன்று மாவை சேனாதிராஜாவை நேர்கண்ட பொழுது,அவர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகப் பதில் சொல்லியிருக்கிறார்.தமிழ்ப் பொது வேட்பாளரை நியாயப்படுத்தும் பொழுது, அவர் ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்டியுமிருக்கிறார்.மக்களிடம் ஆணை பெறுவது என்பதை விடவும்,மக்களை ஐக்கியப்படுத்தவேண்டும்; கட்சிகளை ஐக்கியப்படுத்த வேண்டும் என்ற பொருளில் அவருடைய பதில் அமைந்திருந்தது.மாவை சேனாதிராஜாதான் இப்பொழுதும் கட்சியின் தலைவர். எனவே அவருடைய கருத்துக்கு இங்கு அதிகம் முக்கியத்துவம் உண்டு. அது தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் சிறீதரன் அணியைப் பலப்படுத்தக் கூடியது. இப்பொழுது ஏழு கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கியிருக்கும் பொதுக் கட்டமைப்பானது ஏனைய கட்சிகளுக்காகத் திறக்கப்பட்டிருக்கும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.அதன்மூலம் ஆகக்கூடியபட்ச ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதுதான் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கம் என்று கூறப்பட்டிருக்கிறது.இந்த ஐக்கியம் வெற்றி பெறுமாக இருந்தால் எதிர்காலத்தில் தமிழ் அரசியலை அது புதிய வழியில் செலுத்துமா? https://athavannews.com/2024/1393877 - ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.