Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. காணுற... மின் கம்பங்கள் எல்லாம், காலைத் தூக்குகின்ற பிராணி மாதிரி, சுமந்திரன் ஐயா கடுமையாக உழைக்கின்றார். 😂 🤣
  2. 50 திருமணமான ஆண்களின் கூட்டத்தில்... "மனைவியிடம் அடி வாங்கியவர்கள் எல்லாம் கை தூக்குங்கள்" என்று கேட்கப் பட்டது.... ஒருவர் தவிர, மற்றவர்கள் எல்லோரும் கைகளை உயர்த்தினார்கள். கை உயர்த்தாத அந்தக் கணவரை அழைத்து "பரவாயில்லையே... உங்கள் மனைவி மிகவும் அனுசரணையானவர் போல", நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என புகழ்ந்தனர். அதற்கு அவர் சொன்னார்... அட "போங்கப்பா, நீங்க சும்மா வயித்தெரிச்சலை கிளப்பிக்கிட்டு... நேற்று வாங்கின அடியிலை... கையை தூக்கவே, முடியலேப்பா... என்றார். 😂 🤣
  3. வந்து உங்களை புரட்டி எடுக்கப் போகிறார். ரெடியாய் இருங்கோ…. 😂 🤣
  4. ஒலிம்பிக் விளையாட்டும் இன்றுடன் நிறைவு பெறுகின்றது. கொஞ்ச நாட்களாக அந்தப் போட்டிகளை பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருந்தது. இனி…? 🙂
  5. அல்வாயன் அண்மையில்… மட்டக்களப்பில் மௌலவி ஒருவர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப் பட்ட போது… அவன் விடுதலைப் புலிகளிடம் இருந்து கிடைத்த ஆயுதம் என்று சொல்வான் என்று அல்வாயன் முன்பே சொன்ன மாதிரியே நடந்தது. 🙂
  6. அப்ப... ஐயர் தான் தாலியை, ஆட்டையை போட்டிருக்கின்றார் போலுள்ளது. 😂 அல்வாயன் எப்படி,இதை எல்லாம்... முன்பே கண்டு பிடிக்கின்றீர்கள். 🤣
  7. மும்முனைப் போட்டியா? நான்கு முனைப் போட்டி? – நிலாந்தன். ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களின் பொது வேட்பாளராகக் களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ராஜபக்சக்களின் வேட்பாளராக களமிறங்குவதை விடவும் ராஜபக்சக்களின் ஆட்களுக்கு தான் தலைமை தாங்குவது என்று முடிவெடுத்து விட்டது போல் தெரிகிறது.ரணில் ராஜபக்சக்களின் கட்சியைச் சாப்பிடத் தொடங்கி விட்டார். கட்சியைக் காப்பாற்றவும் ரணிலுடன் தமது பேரத்தைப் பலப்படுத்தவும் இளைய ராஜபக்சவாகிய நாமல் களமிறக்கப்படுகிறாரா? அவர் இக்கட்டுரை எழுதப்படும் வரையிலும் கட்டுப் பணம் செலுத்திதியிருக்கவில்லை. ராஜபக்சக்களின் வேட்பாளராக களம் இறங்கினால் தனக்கு பின்வரும் பிரதிகூலங்கள் உண்டு என்பது ரணிலுக்கு நன்றி தெரியும். முதலாவது, அவர் ராஜபக்சகளோடு சேர்த்து பார்க்கப்பட்டால் மேற்கு நாடுகள் அவரிடம் இருந்து சிறிது விலகித்தான் நிற்கும். ஏன் என்றால் மேற்கு நாடுகளும் இந்தியாவும் ராஜபக்சவை ஒரு விருப்ப தெரிவாகப் பார்க்கவில்லை. தவிர பன்நாட்டு நாணய நிதியமும் அப்படித்தான் சிந்திக்கின்றது. அனைத்துலக அளவில் ராஜபக்சக்கள் இப்பொழுதும் விருப்பத்தெரிவாக இல்லை. சீன விரிவாக்கத்தின் கருவிகளாகவே பார்க்கப்படுகிறார்கள். மிகக்குறிப்பாக கடந்த வாரம் பங்களாதேஷில் இந்தியாவுக்கு அதிகம் இணக்கமான அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு விட்டது. ஏற்கனவே மாலைதீவுகளில் இந்தியாவின் பிடி, பலவீனமடைந்து விட்டது. பங்களாதேஷிலும் நிலைமைகள் நிச்சயமற்றவைகளாகவே தெரிகின்றன. எனவே இந்தியா இலங்கையில் மீண்டும் சீன விரிவாக்கத்துக்கான வாய்ப்புகள் அதிகரிப்பதை விரும்பாது. இப்படிப் பார்த்தால் ராஜபக்சகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு ஜனாதிபதியை இந்தியா விரும்பாது. அமெரிக்கா விரும்பாது. மேற்கு நாடுகள் விரும்பாது. பன்னாட்டு நாணய நிதியமும் விரும்பாது. உலக வங்கியும் விரும்பாது. இரண்டாவது பிரதிகூலம், ராஜபக்சக்களை ஆட்சியில் இருந்து துரத்திய மக்கள் போராட்டக்காரர்கள் இப்பொழுது தேர்தல் கேட்கின்றார்கள். அவர்கள் தேர்தலில் பெரு வெற்றி பெறப் போவதில்லை. எனினும் சில ஆண்டுகளுக்கு முன் மக்களால் துரத்தியடிக்கப் பட்டவர்களின் பொது வேட்பாளராகக் களம் இறங்கினால் படித்த சிங்கள இளையோரின் வாக்குகளை இழக்கக்கூடிய ஆபத்து அதிகரிக்கும். மூன்றாவது பிரதிகூலம், ரணில், ராஜபக்சக்களோடு சேர்த்துப் பார்க்கப்பட்டால் தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.முஸ்லிம்களும் பெரிய அளவில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். எனவே ராஜபக்சக்களிடம் இருந்து விலகி நிற்பதன் மூலம் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என்று ரணில் எதிர்பார்க்கிறார். பொருளாதார நெருக்கடியில் இருந்து அவர் நாட்டை மீட்டிருக்கிறார் என்று ஆங்கிலம் பேசும் படித்த நடுத்தர வர்க்கும் நம்புகின்றது என்று ரணில் நம்புகின்றார். ராஜபக்சக்களிடம் இருந்து விலகி நின்றால் தமிழ் முஸ்லிம் வாக்குகளையும் அதிகமாகச் சேகரிக்கலாம் என்று அவர் கணக்குப் போடுகிறார்.அதனால்தான் யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி வருகிறார்.முன்பு சஜித்துக்கு தமிழ் வாக்குகளைச் சாய்த்துக் கொடுக்கத் திட்டமிட்ட தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தன்னை நோக்கித் திரும்பலாம் என்ற எதிர்பார்ப்பு அவரிடம் உண்டு. இனி வரும் நாட்களுக்குள் மேலும் புதிய சேர்க்கைகளுக்கும் விலகல்களுக்கும் கட்சித் தாவல்களுக்கும் வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன. இப்பொழுதும் ரணிலின் ஆட்பலம் ராஜபக்சகளின் கட்சியில் இருந்து கழட்டி எடுக்கப்பட்டவர்கள் தான். ஒற்றை யானையாக நாடாளுமன்றத்துக்குள் வந்தவர் இப்பொழுது 90க்கும் அதிகமான தாமரை மொட்டுக்களைப் பிடுங்கி எடுத்து விட்டார். இன்னும் எத்தனை பேரைப் பிடுங்கி எடுப்பார்? வேறு எந்த எந்தக் கட்சிகளில் இருந்து பிடுங்கி எடுப்பார் ? என்பவையெல்லாம் இனிவரும் நாட்களில் தெரியவரும். பல்வேறு கட்சிகளின் பொது வேட்பாளராக அவர் மேலெழுந்தாலும் அவருடைய அடிப்படைப் பலம் தாமரை மொட்டுக் கட்சிதான். பொருளாதார நெருக்கடியில் இருந்து அவர் நாட்டை மீட்டதாகக் கருதும் நடுத்தர வர்க்கத்தின் வாக்கு தீர்மானகரமானது அல்ல. எனவே இப்பொழுதும் ரணிலின் பலம் ராஜபக்சக்கள் தான்.ஆனால் ராஜபக்சக்களை வெளியே தள்ளிவிட்டு அவர் ராஜபக்சக்களின் ஆட்களைத் தன்வசப்படுத்தி விட்டார். வெளித்தோற்றத்துக்கு அவர் ராஜபக்சகளோடு இல்லை என்று தோன்றலாம். ஆனால் அவருடைய அடிப்படைப் பலமே ராஜபக்சக்களின் கட்சிதான். அது ராஜபக்சகளின் தந்திரமாக இருக்கலாம் என்ற ஊகமும் உண்டு.ரணிலை வெற்றி பெற வைப்பதற்காக அவர்கள் அவ்வாறு ஒதுங்கி நிற்பதாகவும் சில ஊடகவியலாளர்கள் ஊகிக்கின்றார்கள்.ஆனால் அப்படி ஒரு தந்திரத்துக்காக தமது கட்சியைப் பலியிட ராஜபக்சக்கள் தயாரா? கடந்த சில வாரங்கள் வரையிலும் தேர்தல் களத்தில் அனுரவும் சஜித்தும்தான் முன்னணியில் நின்றார்கள். மெய்யான போட்டி அனுரவிற்கும் சஜித்துக்கும் இடையில் என்றுதான் அபிப்பிராய வாக்கெடுப்புகள் தெரிவித்தன.இலங்கை போன்ற நாடுகளில் அபிப்பிராய வாக்கெடுப்புகள் திருத்தமாக அமைவது குறைவு. ஆனால் இந்தியாவில் சில பல்கலைக்கழகங்கள் அல்லது ஆய்வு நிறுவனங்கள் நடாத்தும் அபிப்பிராய வாக்கெடுப்புகள் மிகத் துலக்கமானவைகளாக அமைவதுண்டு. இப்பொழுது கிடைக்கும் செய்திகளின்படி சஜித்தும் அனுரவும்தான் முன்னணியில் நிற்கின்றார்கள். ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் தேர்தல் வெற்றிகளை கடைசி வாரங்கள், அல்லது கடைசி நாட்கள் தீர்மானிக்க முடியும். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் நிகழக்கூடிய திருப்பகரமான சம்பவங்கள் வெற்றியின் போக்கைத் தீர்மானித்து விடும். எனவே நாடு அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்கும் நாட்களுக்குள் நுழைந்து விட்டது. இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் குறிப்பாக ஜனாதிபதி முறைமை அமுல்படுத்தப்பட்ட பின்னரான கடந்த பல தசாப்தங்களில்,பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாகக் கட்டுப்பணம் செலுத்தியது என்பது இதுதான் முதல் தடவை. ஒரு சுயேட்சையாக கட்டுப் பணம் செலுத்தியவர் பல்வேறு கட்சிகளின் பொது வேட்பாளராக தன்னை முன்னிறுத்துவதில் வெற்றி பெறுவாராக இருந்தால்,நாமலும் கட்டுப் பணம் செலுத்துவராக இருந்தால்,தேர்தலில் நான்கு முனைப் போட்டிகளுக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றனவா? https://athavannews.com/2024/1395360
  8. தமிழரசுக் கட்சியின் அனுமதி இல்லாமல்… கட்சிக் கட்டுப்பாட்டை மீறி… சுமந்திரன், நாமலை சந்தித்த படியால்… மாவையர்… இதுக்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேணும். 😂 இப்ப… மாவையர், “கோமா”விற்கு போயிருப்பார் என நினைக்கின்றேன். 🤣
  9. @வீரப் பையன்26 பையா…. நீங்கள், குமாரசாமி அண்ணை… அஜித் மாதிரி… தக்காளிப்பழ நிறத்திலை இருப்பார் என்று சொன்னீங்கள். எல்லாம் பொய்யா… பையா… 😂 🤣
  10. மூக்கணாங் கயிறுகளை மாற்றுவதால் மாடுகளுக்கு எந்த சுகமும் கிட்டுவதில்லை. தலையணைகளை மாற்றுவதால் தலைவலி தீருவதில்லை. ஜனாதிபதிகளை மாற்றுவதால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை. தேவை... முகம் மாற்றம் அல்ல. அமைப்பு மாற்றமே. தோழர் பாலன்
  11. நல்லூரில்... பிக்குவுக்கு என்ன அலுவல்? இவர்களை அங்கு வரச் சொல்லி... யாரும் வெத்திலை, பாக்கு வைத்து அழைத்தார்களா. விகாரையில் இருந்து பிரித்து ஓதுறதை விட்டுட்டு... தேவையில்லாத இடங்களில் என்ன இழவுக்கு மூக்கை நீட்டுகிறார்கள்.
  12. ஒரு சிங்கம், நரியிடம் சொன்னது, “எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா. உனக்கு சில எலும்பு துண்டு தருகிறேன்” நரி ஒரு செம்மறி ஆட்டிடம் சென்று சொன்னது “சிங்கம் உன் பிரச்னை எல்லாம் தீர்த்து உனக்கும் முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது” செம்மறி ஆடும் நரியை நம்பி சென்றது. செம்மறி ஆட்டைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் செம்மறி ஆட்டின் காதுகள் அறுபட்டாலும், அது தப்பித்து விட்டது. செம்மறி ஆடு நரியிடம் சொன்னது: “நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது” அதற்கு நரி சொன்னது: “சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம்” செம்மறி ஆட்டுக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது. மீண்டும் செம்மறி ஆட்டைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது: “நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது” நரி சொன்னது: “நீ அரியாசனத்தில் வசதியாக அமர வேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை அகற்றியது. மீண்டும் செல்வோம். வேண்டும் அரியாசனம்” நரி செம்மறி ஆட்டை மீண்டும் அழைத்து சென்றது. இந்த முறை, சிங்கம் செம்மறி ஆட்டை பிடித்து கொன்றது. சிங்கம் நரியிடம் சொன்னது: “பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப செம்மறி ஆட்டை அழைத்து வந்துவிட்டாயே. போய் செம்மறி ஆட்டின் தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா” நரி செம்மறி ஆட்டின் தோலை உரித்து, அதன் மூளையை சாப்பிட்டது. நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது. சிங்கம் கோபமடைந்து கேட்டது: “மூளை எங்கே?” நரி பதிலளித்தது: “அந்த செம்மறி ஆட்டுக்கு மூளை இல்லை, மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி வந்திருக்குமா?” குறிப்பு - இந்த பஞ்ச தந்திரக் கதையை படித்ததும் ரணில் தீர்வு தருவார் என தமிழ் மக்களை அழைக்கும் சுமந்திரன் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.😂 தோழர் பாலன்
  13. நல்லுார் ஆலய வளாகத்திற்குள் நுழைந்த பிக்குமார்களின் வாகனங்களால் பரபரப்பு. நல்லூர் கந்தசுவாமி கோயில் ஆலய சுற்று வீதியில் வாகனங்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சில பிக்குகள் வாகனத்துடன் நுழைந்தமையால் சர்ச்சை எழுந்துள்ளது. நல்லூர் கந்தசாமி கோவில் பெருந்திருவிழா காரணமாக வாகன போக்குவரத்துகளை தடை செய்யும் வீதி தடைகளையும் மீறி நல்லூர் கந்தசாமி ஆலய முன்பக்கம் வரை பௌத்த பிக்குகளின் வாகனம் உள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது. சாதாரண பொது மக்களின் வாகனங்களை திருப்பி அனுப்புகின்ற பொலிஸார், பிக்குகளின் வாகனத்தை உள்நுழைய அனுமதித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2024/1395312
  14. பல கோடி ரூபாய் மதிப்பிலான திருகோணேஸ்வரர் ஆலய தாலி கொள்ளை – சதி திட்டமா? வரலாற்றுச் சிறப்பு மிக்க திருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலயத்தில் பல கோடி ரூபா பெறுமதியான தாலி கொள்ளையிடப்பட்டுள்ளது. சோழர் காலம் முதல் திருகோணேஸ்வர ஆலயத்தில் இருந்து வந்த குறித்த தாலி, போர்த்துக்கேயர் காலத்தில் ஆலயம் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பாதுகாக்கப்பட்டு வந்த தாலி, கடந்த வாரம் பகலில் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் குரலெழுப்ப தொடங்கினர். அதேவேளை திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றனர். பல நூறு கோடி பெறுமதியான இரத்தினங்கள், வைடூரியங்கள் பொதிக்கப்பட்ட 5 சவரன் தாலி பல பூஜைகள் செய்யப்பட்டு சக்தி வாய்ந்ததாக இருந்தது எனவும் இதை எவராலும் ஈடு செய்ய முடியாது எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர். அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு போய், சிவனின் சக்தியை செயலிழக்க செய்யப்பட்ட சதியா ? இல்லையெனின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தாலி விற்பனை செய்வதற்காகவா?” என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து பொறுப்பு கூறவேண்டிய தரப்பினரின் இதுவரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் சோழர் காலத்தில் செய்யப்பட்ட பல நூறு கோடி மதிப்புடைய 16 பவும் வைரம், வைடூரியம் பொதிக்கப்பட்ட தங்க நகைகளும் கடந்த காலத்தில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவ்விடயம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதேவேளை, பொலிஸாருக்கும் பொதுமக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடயம் குறித்து பொதுமக்கள் ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். கொள்ளையிடப்பட்ட தாலியை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395306
  15. 27 ஜனாதிபதி வேட்பாளர்கள் – மேலதிகமாக 200 மில்லியன் ரூபாய் நிதி செலவு. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக நேற்றைய தினம்வரையில் 27 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த 13 பேரும் சுயேட்சை வேட்பாளர்கள் 13 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்காகவும் மேலதிகமாக 200 மில்லியன் ரூபாய் நிதியைச் செலவிட நேரிட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி மேலதிகமாக செலவிடுவதற்காக பொது மக்களின் நிதியே பயன்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் அரச சொத்துக்களை அநாவசியமாகப் பயன்படுத்தும் பல சந்தர்ப்பங்களும் காணப்படுவதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான, கால அவகாசம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது https://athavannews.com/2024/1395272
  16. தமிழ் பொது வேட்பாளர் மலையக மக்களை கண்டுகொள்ளவில்லை -வேட்பாளராக களமிறங்கும் திலகர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலிய மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் களமிறங்குகின்றார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் மலையக மக்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை என நுவரெலிய மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவிக்கின்றார். மலையக மக்களின் பிரச்சினைகளை வெளிகொணரும் வகையிலேயே தான் இந்த தேர்தலில் போட்டியிட எண்ணியதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395269
  17. ”ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ” – ட்ரெண்டிங் பிரச்சாரத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மோடி. இந்தியாவின் சுதந்திர தினம் எதிர்வரும் ஒகஸ்ட் 15ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இதனால் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி ஊக்குவித்து வருகிறார். அதன்படி, ‘ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி’ என்ற பிரசாரத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவரது எக்ஸ் தளத்தில், ‘சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி எனும் பிரசாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அதன் தொடக்கமான எனது எக்ஸ் தளத்தின் முகப்பில் தேசியக்கொடியை வைத்துள்ளேன். நீங்களும் அவ்வாறு செய்வதொடு தேசியக் கொடியுடன் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிரும்படியும் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். https://athavannews.com/2024/1395290
  18. பாடலின் அர்த்தம் புரியாவிட்டாலும், பாடலை கேட்க இனிமையாக உள்ளது. அவர்களின் நடிப்பும் சிறப்பு. 👍🏽 இணைப்பிற்கு நன்றி ராஜவன்னியன்.
  19. ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கும்.. விடுதலைப் புலிகள்தான் தேவையாக உள்ளது. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.