Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. வாற தீபாவளியும் சம்பந்தன் இல்லாததால்… சப்பெண்டு போகப் போகுது. 😂
  2. 1975 களில் ஒரு போத்தல் தென்னங்கள்ளு ரூபா 1:50, பனங்கள்ளு 1:75. நாட்டை விட்டு புறப்படும் போது... 3 ரூபாய் அளவில் விற்றது. கீரிமலைக்குப் போனால்... கூவிலுக்குப் போய் பனங்கள்ளு வாங்கி அடிப்பதுண்டு. இல்லா விட்டால்.. எப்பவாவது நண்பர்ளுடன் கொக்குவில், ஆனைக்கோட்டைக்குப் போய் தனி மரத்தால் இறக்கிய கள்ளை அடிப்போம். அது எல்லாம் ஒரு இனிமையான காலம். அப்ப... சாராய போத்தல் ஒன்றின் விலை 35 ரூபாய். மெண்டிஸ் ஸ்பெஷல் 65 ரூபாய். 😂 Bristal சிகரட் ஒன்று 20 சதம். 🤣
  3. மகாவன்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பு. பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள இலங்கையின் வரலாற்றின் முக்கிய ஆதாரமான மகாவன்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலக பாரம்பரியச் சின்னமாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விழாவுக்கு பிரதம விருந்தினராக யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசுலே (Audrey Azoulay) கலந்து கொண்டார். யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகத்தினால் மகாவன்சத்தை உலக மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்துவதற்கான சான்றிதழ் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் ஜி.எச்.பீரிஸிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன், பல்கலைக்கழகத்துகு்கு விஜயம் செய்ததைக் குறிக்கும் வகையில் பிரதி வேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச, பணிப்பாளர் நாயகத்திற்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார். https://athavannews.com/2024/1392719
  4. இனி இலங்கை திரையரங்குகளில் தொலைபேசிக்கு தடை. திரையரங்குகளில் தொலைபேசிப் பாவனையைத் தடை செய்யுமாறு திரைப்பட இயக்குநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் திரைப்படமொன்று சட்டவிரோதமாகப் பதிவுசெய்யப்பட்டு ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் திரையரங்கு உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரைப்பட இயக்குநர் ஜயந்த சந்திரசிறி கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனமும் இது தொடர்பில் உத்தியோகபூர்வ உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பிரபல இயக்குநரின்‘சிங்கபாகு’ திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவு செய்து யூடியூப்பில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் கண்டியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1392711
  5. கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை-நீதிமன்றம் அறிவிப்பு! நான்கு வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது இதேவேளை அண்மையில் இலங்கையில் சிங்கள பௌத்த தேசியத்திற்காக கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் குரல் எழுப்பியதாகவும் அவரை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என பிரதான மதகுருக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1392689 ############## ##################### #################
  6. ஊழல் வைத்தியர்களையும், ஊழியர்களையும் அரசாங்கமே பாதுகாக்கின்றது போலுள்ளது.
  7. அரவிந்துக்கு லூஸ். தீர விசாரிக்காமல் ஏன் தாலி கட்டினவர். 15 கலியாணம் கட்டின சத்தியாவால், அரவிந்தின்ரை தாத்தாவும் செத்துப் போனார். லூஸு கூட்டங்கள் செய்யிற வேலையாலை, எத்தனை பேருக்கு அலுப்பு.
  8. மூன்று பிள்ளைகளின் தாய் இறந்தது சோகமான செய்தி. எவ்வளவுதான் நண்பர், உறவினர் என்றாலும்... பணம் கொடுக்கல், வாங்கலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். "துணைக்குப் போனாலும், பிணைக்கு போகக் கூடாது" என்று சொல்வார்கள்.
  9. தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்வது ஒரு இனமாக பின்னடைவாகும்- சித்தார்த்தன் எம்.பி தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகிற்கு காட்டுவது தான் தங்களது விருப்பம். அது தான் பொது வேட்பாளர் குறித்தான விடயம் என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றி்ன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புளொட் அமைப்பின் தலைவர் காலமாகி 38 வருடங்கள் முடிந்து விட்டது. இந்த 38 வருடங்களுக்குள் ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்திருந்தாலும் கூட என்ன காரணத்திற்காக முதலில் சாத்வீகமாகவும் பின்பு ஆயுதப் போராட்டமாகவும் தமிழ் மக்களால் தொடங்கப்பட்டதோ அந்த காரணம் இன்றும் மாறாது அப்படியே இருக்கின்றது. மாறாமல் இருப்பதைக் காட்டிலும் இந்த நாட்டில் எம்மவர்களின் தொகை இன்னும் குறைந்து வருவதை பார்க்க கூடியதாகவுள்ளது என தெரிவித்தார். மேலும், சகல வழிகளிலும் தமிழ் மக்கள் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம், அரசியல், கல்வி, எண்ணிக்கை என நீண்டு செல்வதாகவும், அண்மைக் காலமாக இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா என பல நாடுகளுக்கு அதிகளவில் மக்கள் சென்றுள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த நிலை தொடருமானால், தமிழ் மக்களை பின்னடைவுக்கும், படுபாதாளத்திற்கும் கொண்டு செல்லும் எனவும் தெரிவித்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக மக்கள் வெளி நாடுகளுக்கு குடி பெயர்ந்தாலும், ஒரு இனமாக பார்க்கின்ற பொழுது இது ஒரு பின்னடைவு என சுட்டிக்காட்டினார். அத்தோடு, பேச்சுவார்த்தை என்று வருகின்ற போது ஜனாதிபதி கூட புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச வேண்டும் என கூறுவதாகவும், அவர்களிடம் இருக்கக் கூடிய அந்த பொருளாதரா பலத்தை இங்கு கொண்டு வரலாம் எனவும் சிந்திக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் தொடர்ந்து வருகின்ற எந்தவொரு அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வை கொடுக்க தயாரில்லை என சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1392679
  10. உங்கள் பேரனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  11. ஆரம்பமானது ஆடிப்பிறப்பு! ஜூலை மாதம் 17ஆம் திகதியான இன்று தமிழர்கள் விமர்சையாக ஆடிப் பிறப்பினைக் கொண்டாடி வருகின்றனர். ஆடிப்பிறப்பு என்றதுமே முதலில் ஞாபகத்திற்கு வருபவர் தங்கத் தாத்தா என அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நவாலியூர் சோமசுந்த புலவர். அவர் ஆடிப்பிறப்பின் சிறப்பு மற்றும் ஆடிக்கூழ் காய்ச்சும் முறை தொடர்பாக எழுதிய ”ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே… கூடிப்பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுகட்டை தின்னலாம் தோழர்களே…” என்ற பாடல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானது. எமது முன்னோர்கள் சூரியனின் வட திசை மற்றும் தென் திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப் பிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றனர். சைவ சமயத்தில் இந்த நாளை தேவர்களுடன் தொடர்பு படுத்தி வழிபடுகின்றனர். இந்நிலையில் இன்று வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வானது, தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவர் சிலையடியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் சோமசுந்தரபுலவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து விபுலாநந்தா கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றிருந்ததுடன் ஆடிக்கூழ் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1392592
  12. டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய சதித்திட்டம் : மறுக்கும் ஈரான்! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை படுகொலை செய்வதற்கு ஈரானே சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், இது குறித்து ஒரு வாரத்திற்கு முன்னரே அமெரிக்க அதிகாரிகளுக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயதுடைய தோமஸ் மேத்யூ க்ரூக்ஸுக்கும், ஈரானிய சதிக்கும் நேரடி தொடர்பு உள்ளதா? என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லை என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த சதி குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரான், இது ஆதாரமற்ற, ஈரானுக்கு களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டு என தெரிவித்துள்ளது. ஈரான் மீதான இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, ஐ,நாவுக்கான ஈரானின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், ஈரான் நாட்டின் பார்வையில் ட்ரம்ப் ஒரு குற்றவாளி எனவும், ஜெனரல் சுலைமானியின் படுகொலைக்காக அவர் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், டொனால்ட் ட்ரம்பை, ஈரான் சட்டத்தின் வழியிலேயே சந்திக்கும் எனவும் ஐ நாவுக்கான ஈரானின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, பென்சில்வேனியா மாநாட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே சதித் திட்டம் தொடர்பான எச்சரிக்கை கிடைத்ததாகவும், இது குறித்து ட்ரம்ப் பேரணி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே, ட்ரம்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவித்த அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள், இந்த சதித் திட்டம் பற்றி தாம் முன்னதாகவே அறிவித்ததை தற்போது, ட்ரம்ப் பேரணி ஒருங்கிணைப்புக் குழு மறுத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை பென்சில்வேனியாவில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது காதில் காயம் ஏற்பட்ட நிலையில் நூலிழையில் உயிர் தப்பினார். இந்தத் தாக்குதலில் அவரது ஆதரவாளர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1392560
  13. ட்ரம்பின் நிலை அநுரவுக்கும் ஏற்படலாம்! -வாகமுல்லே உதித்த தேரர். ”தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயகாவுக்கும் ட்ரம்பின் நிலை ஏற்படலாம்” என்பதால் அவரது பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என தேசிய பிக்குகள் முன்னனியின் அழைப்பாளர் வாகமுல்லே உதித்த தேரர் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியினால் கண்டியில் நடைபெற்ற கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே உதித்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளராகக் களமிறங்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதே நிலைமை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயகாவுக்கும் ஏற்படலாம். எனவே அவரது பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். மேலும் அனுர குமார திஸாநாயக்க பொதுவெளியில் தோன்றாமல் உரைகளை ஆற்றவேண்டும். இந்த ஊழல் அரசியல்வாதிகள் அதிகாரத்திற்காக எந்த இரக்கமற்ற செயல்களையும் செய்வார்கள் என்பதால் அவரது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் ” இவ்வாறு வாகமுல்லே உதித்த தேரர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1392512
  14. எண்ணெய் கப்பல் மூழ்கியதில் மூன்று இலங்கையர்கள் உட்பட 16 பணியாளர்கள் மாயம்! ஓமான் கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் மூழ்கியதில் மூன்று இலங்கை பிரஜைகள் உட்பட 16 பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மையத்தில் உள்ள ராஸ் மத்ரகாவின் தென்கிழக்கில் “கொமரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது” விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருவதாக கடல்சார் பாதுகாப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. Prestige Falcon எனும் பெயருடைய குறித்த கப்பலில், 13 இந்திய பிரஜைகள் மற்றும் மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட 16 பணியாளர்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1392498
  15. அடிப்படை நிர்வாக அறிவு கூட இல்லாத திமுகவின் திராவிட மாடல்-அண்ணாமலை சீற்றம்! மின் உற்பத்தியைப் பெருக்காமல், விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் அளவை அதிகரித்துக் கொண்டே இருந்தால், மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வுக்குத் தான் வழிவகுக்கும். இந்த அடிப்படை நிர்வாக அறிவு கூட இல்லாத திமுகவின் திராவிட மாடல் அரசு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். அதன்படி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், சொத்து வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், பால் விலை, பத்திரப் பதிவு கட்டணம், என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி, கட்டண உயர்வைப் பொதுமக்கள் தலையில் சுமத்தியுள்ள திமுக அரசு, தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், மீண்டும் ஒரு முறை மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் மேலும் தமிழகம் முழுவதும், சூரிய ஒளி மின்சார உற்பத்தி உள்ளிட்ட மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மாதாந்திர மின் கட்டண நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். https://athavannews.com/2024/1392453
  16. சம்பந்தன்… சிங்களத்துக்கு செய்த சேவைக்கு, பாராளுமன்றத்தில் அவரின் சிலையை வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். 😂
  17. மற்றைய அண்டை மாநிலங்கள் எல்லாம் அணை கட்டி புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்குகின்றார்கள். தமிழ்நாட்டு திராவிட அரசுகள் அதைப் பற்றிய சிந்தனை இல்லாமல்… ஆற்று மணலை அள்ளி விற்று நதிகளை கெடுக்கின்றார்கள். இருக்கின்ற ஏரிகளை பங்கு போட்டு விற்று காசாக்குகின்றார்கள்.
  18. அரசாங்கத்துடன் கள்ளத் தொடர்பில் இருந்தவர்களுக்கு எல்லாம் சிலை வைக்கின்றார்கள். 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.