Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. குமாரசாமி அண்ணை... நமது அரசியல்வாதிகள் எல்லோரும். மக்கள் சேவை செய்ய என்று பாராளுமன்றம் போவதெல்லாம் தமது சந்ததிக்கு சொத்து சேர்க்க மட்டுமே. இப்போ இருக்கும் இந்தத் தற்குறி அரசியல்வாதிகளால்... மக்களுக்கோ, இனத்திற்கோ எந்தவித பிரயோசனமும் இல்லை என்பதுடன், இருக்கும் பிரச்சினைகளை இழுத்தடித்து மேலும் சிக்கலாக்கி மீள முடியாத நிலைக்கு கொண்டு வந்து விட்டு விடுவார்கள். இந்த இழுத்தடிப்பு நேரத்தில் எதிரியானவன்... பலமடங்கு முன்னேறி எம்மை விழுங்கி விடுவான். அண்மையில்... ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டத்தை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். ரணில் ஜனாதிபதியாக இருந்த போது ... சாணக்கியனுக்கு 60 கோடி ரூபாயும், சுமந்திரனுக்கு 90 கோடி ரூபாயும் கொடுக்கப் பட்டதாம். உடனே சாணக்கியன், மக்களின் தேவைகளை நிறைவேற்றவே அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டதாக சுய வாக்குமூலமும் கொடுத்து இருந்தார். ஆக சாணக்கியனும், சுமந்திரனும் எப்போதும் பின்கதவால் ஜனாதிபதிகளை சந்தித்து தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இருக்கின்றார்கள். "நக்குண்டார் நாவிழந்தார்" என்பது போல்... இவர்கள் தமிழ் மக்களுக்கு பலன் பெற்றுக் கொடுப்பார்கள் என்பது முட்டாள்தனமானது. ரணிலிடம் வாங்கிய 90 கோடி ரூபாயை பற்றி, சுத்துமாத்து சுமந்திரன்... ஒன்றும் நடவாதமாதிரி அதைப்பற்றி கதைக்கவே இல்லை. அண்மையில் ரணில் கைது செய்யப் பட்ட போது ... விழுந்தடித்து ரணிலுக்கு ஆதரவாக அறிக்கை விட்டதன் மர்மமும்... அந்த செஞ்சோற்று கடன் அன்றி வேறு இல்லை. பல வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு குரல் கொடுக்க முடியாத சுமந்திரனுக்கு, ஊழல் செய்த ரணிலை கைது செய்தவுடன்.. பாசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. இதுகள்... எல்லாம், தமிழருக்கு கிடைத்த சாபக்கேடுகள். சிலர் இதற்கு வழக்கம் போல் ஆதாரம் வேண்டும் என்று கேட்கலாம். கோடிக்கணக்கில் கள்ளக் காசு வேண்டுகின்றவன் ஆதாரம் எல்லாம் வைத்துக் கொண்டு இதுகளை செய்வான் என்று நம்புகின்றமை.... அடிப்படை அறிவும் இல்லாத விதண்டாவாதக் காரர்களாகத்தான் இருப்பார்கள் என்பதை பலரும் அறிவார்கள். தீய சக்திகளுக்கு வெள்ளையடிக்க வரும் அவர்களை கணக்கில் எடுக்கத் தேவை இல்லை. 😂
  2. கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன. அதன் தொடர்சியாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவிலுள்ள 07 ஏக்கர் காணி கடந்த 07ஆம் திகதி விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த காணி தற்காலிகமாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திடம் பொறுப்பில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், இதே போன்று நல்லூர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள முட்கொம்பன் பகுதியில் இரானுவத்தினர் வசமிருந்த 20 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள இயக்கச்சி பகுதியில் இரானுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான எட்டுப் பேரின் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447340
  3. ரஷ்யா–பெலருஸ் இணைந்து மாபெரும் இராணுவப் பயிற்சி! ரஷ்யா மற்றும் பெலருஸ் நாடுகள் இணைந்து நடத்தும் ‘Zapad‑2025‘ என்ற மாபெரும் இராணுவப் பயிற்சி, ஐரோப்பிய நாடுகளுக்கான நேரடி எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. செப்டம்பர் 12 முதல் 16 வரை நடைபெறும் இப் பயிற்சியில் ஹைபர்சோனிக் ஏவுகணைகள், Su‑34 போர் விமானங்கள், கனரக ராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. மேலும், ரஷ்யா வெலருஸ் நிலப்பரப்பில் இடைத் தூர ஏவுகணைகள் (intermediate-range missiles) அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா–பெலருஸ் கூட்டணி இந்த இராணுவப் பயிற்சி “பாதுகாப்பு நோக்கத்துக்காக மட்டுமே” எனத் தெரிவிக்கின்ற போதும் ஐரோப்பிய நாடுகள் இது குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. குறிப்பாக போலந்து, லிதுவேனியா போன்ற நாடுகள், எல்லைப் பாதுகாப்பு மற்றும் வான்வழி கண்காணிப்பு குறித்து கூடுதல் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சர்வதேச நிபுணர்கள், இந்த பயிற்சிகள் சாதாரண இராணுவப் பயிற்சி அல்ல எனவும் தங்கள் சக்தியை வெளிப்படுத்தி, ஐரோப்பாவுக்கும் NATO கூட்டமைப்பிற்கும் எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகின்றது. முன்னதாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, அதற்கு பதிலாக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகளுக்கு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447312
  4. பிரித்தானிய நாடாளுமன்றம் குறித்து எலோன் தெரிவித்த கருத்துக்கு எதிராக வலுக்கும் கண்டனம்! ‘பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்கிற்கு, அந்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிபோவதாகவும், அவர்களை திருப்பி அனுப்பும் படியும் வலியுறுத்தி, வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில், ‘யுனைட் தி கிங்டம்’ என்ற பெயரில் லண்டனில் பேரணி நடந்தது. இதில், 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர். இதற்கு போட்டியாக, ‘பாசிசத்துக்கு எதிரான அணிவகுப்பு’ என்ற பெயரில், ‘ஸ்டாண்ட் அப் டு ரேசிசம்’ என்ற குழு போராட்டம் நடத்தியது. இதில், 5,000 பேர் பங்கேற்றனர். இரு தரப்பும் மோதலில் ஈடுபடாமல் தடுக்க 1,000க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டனர். அப்போது பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததில், 26 பொலிஸார் காயமடைந்தனர். இது தொடர்பாக, 25 பேர் கைது செய்யப்பட்டனர். யுனைட் தி கிங்டம் பேரணியில், நேரலை மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் பணக்காரர்களில் ஒருவரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் உரையாற்றினார். அப்போது, ‘பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். அங்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும். இடதுசாரி கட்சிகள் கொலைகார கட்சிகள்’ என, உரையாற்றியிருந்தார். இந்நிலையில், எலோன் மஸ்க்கின் இக் கருத்து பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் எலோன் மஸ்கிற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் ‘வன்முறையைத் துாண்டும் வகையில் பேசிய எலான் மஸ்க்கை கண்டிக்க வேண்டும் எனவும் அவரது பேச்சு பொருத்தமற்றது எனவும் அவருக்கு எதிராக தடை விதிக்கப்பட வேண்டும்’ எனவும் கொதித்தெழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447302
  5. அந்த இரண்டு பேர்... சுமந்திரனும், சிவஞானமும்தான். 😂 அவர்கள் மாறி, மாறி... முதுகு சொறிஞ்சு கொண்டு இருக்க, சோக்காக இருக்கும். 🤣
  6. மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு! ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை களுத்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனையின் போது, ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உபகரணங்கள், இரசாயனங்கள் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாகனம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 52 லிட்டர் இரசாயனங்கள் அடங்கிய 14 கேன்களையும், போதைப்பொருள் உற்பத்தி செயல்முறையின் ஒரு பகுதியாக நம்பப்படும் பல்வேறு உபகரணங்களையும் அதிகாரிகள் இதன்போது கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வெல்லவாயவைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் சுரங்காவின் சகா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். இந்தோனேசியாவில் அண்மையில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை இதுவாகும். முன்னதாக, நுவரெலியா, மித்தேனியா, நெட்டோல்பிட்டிய மற்றும் கந்தான ஆகிய இடங்களில் இதுபோன்ற ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447215
  7. செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கு புதைகுழிகளுக்கு நீதிகோரி கையெழுத்து போராட்டம்! செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (15) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள மனித புதை குழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்குமான சர்வதேச நீதிக்கோரிய கையெழுத்துப் போராட்டம் மாற்றத்திற்கான இளையோர் குரல் அமைப்பினால் யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இந்த கையெழுத்து போராட்டத்தில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் யாழ் மருதனார்மடம் வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1447169
  8. இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்த விஜித ஹேரத்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவுதொடர்பாக இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது இதேவேளை உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கத்தை அடைவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அமைச்சர் விஜிதஹேரத் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் கலந்துகொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஜெனீவா பயணம் நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சு அறிக்கையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளது அனைத்து இலங்கையர்களின் பொருளாதார, சமூக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உட்பட அனைத்து மனித உரிமைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஜெனீவா விஜயத்தில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. அத்துடன் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் நாட்டிற்குள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு மற்றும் உதவி குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அவற்றை முழுமையாக நிறைவேற்ற அரசாங்கத்திற்கு நேரம் மற்றும் அவகாசம் தேவை என்பதை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயரர்ஸ்தானிகர், வோல்கர் டர்க் உடனான சந்திப்பின் போது அமைச்சர் குறித்த விடயங்களை வலியுறுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது இதேவேளை மனித உரிமைகள் பேரவையின் தலைவரான, சுவிட்சர்லாந்தின் ஜூர்க் லோபரையும் அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடனான இலங்கையின் உயர் மட்ட அரசியல் ஈடுபாட்டின் அவர் வரவேற்றதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது இதேவேளை இலங்கைக்கு ஆதரவாகப் உரையாற்றியிருந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கும் அமைச்சர் விஜித ஹேரத், நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447155
  9. யானை தந்தங்களுடன் இராணுவ சிப்பாய் கைது! ஒரு ஜோடி யானை தந்தங்களை வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் மொரகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் ஹல்மில்லவெவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஆவார். மொரகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, மொரகொட ஹல்மில்லேவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த ஜோடி தந்தங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களுடன் சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1447160
  10. அப்ப... உங்கடை "பவுசு" காட்டுற மச்சானை, ஊரிலை பார்க்கலாம் எண்டுறியள். 😂
  11. சுமந்திரனுக்கு… நாக்கிலை சனி. அதற்கு வாய்ப்பில்லை ராஜா. 😂 அவருக்கு மாகாணசபை முதல்வர் பதவி எல்லாம் எட்டாக்கனி. இவர் போட்டியிட்டால்…. தமிழரசு கட்சிக்கு விழும் எதிர் வாக்குகள், அனுரவுக்கு போகும். வட மாகாண முதலமைச்சராக ஒரு சிங்கள கட்சியை சேர்ந்தவரை தெரிவு செய்ய வைத்த கேவலத்தையும் சுமந்திரன் போட்டியிடுவதால் ஏற்படும் தீமையாக அமையும். ஏற்கெனவே சுமந்திரனின் செய்கைகளால்…. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தானும் தோற்று….. அனுரவின் கட்சியை சேர்ந்த மூன்று பேரையும், டாக்டர் அர்ச்சுனாவையும் வெல்ல வைத்தது... இந்தத் தேவா*கு தான். 😂 🤣
  12. வட மாகாணத்தில்… எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் பல நல்ல விடயங்களை நடைமுறைப் படுத்திக்கொண்டு இருக்கும் நல்லூர் பிரதேச சபைக்கு பாராட்டுக்கள். இந்த நல்லூர் பிரதேச சபையை நிர்வகிக்கும் கட்சி எது என்று அறிய ஆவலாக உள்ளது.
  13. மித்தேனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனம் ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருள் என உறுதி! மித்தேனியவில் உள்ள ஒரு நிலத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருள், மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மித்தேனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனங்கள் குறித்து தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) தனது அறிக்கையை பொலிஸாரிடம் சமர்ப்பித்த பின்னர் இது தெரியவந்தது. அதன்படி, மித்தேனியாவிலிருந்து எடுக்கப்பட்ட 20 மாதிரிகளில் 17 மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக NDDCB இன் அறிக்கை வெளிப்படுத்தியது. செப்டம்பர் 5 ஆம் திகதி, மித்தேனியாவின் தலாவாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு தொகுதி இரசாயனப் பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இலங்கையில் ‘ஐஸ்’ உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட இந்த இரசாயனங்கள், மேற்கு வடக்கு குற்றப்பிரிவு நடத்திய நடவடிக்கையின் போது புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்ட மொத்த இரசாயனங்களின் அளவு சுமார் 50,000 கிலோ கிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசாரணையில், பியால் மனம்பேரி மற்றும் அவரது சகோதரர் இருவரும் இரசாயனங்களை மறைப்பதில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அண்மையில் பல கும்பல் உறுப்பினர்களுடன் கைது செய்யப்பட்ட பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரியவந்தது. இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ‘பேக்கோ சமன்’ என்று அழைக்கப்படும் சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘கெஹல்பத்தர பத்மே’ ‘ஐஸ்’ உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்ததாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. சந்தேக நபரான ‘கெஹெல்பத்தர பத்மே’ சிஐடி காவலில் இருக்கும் போது நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல் வெளிப்பட்டது. மேலும் விசாரணையின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, சந்தேக நபர் இந்த நடவடிக்கையில் ரூ. 4 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாகவும், அதை மேற்கொள்வதற்காக நுவரெலியாவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் உற்பத்திக்குத் தேவையான சுமார் 2,000 கிலோகிராம் இரசாயனப் பொருட்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும் சந்தேக நபர் வெளிப்படுத்தியிருந்தார். https://athavannews.com/2025/1447100
  14. 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் மீட்பு! கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (14) காலை 210 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேக நபர், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு சேவைகள் அமைப்பின் தலைவராகவும் உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் எடை 5.94 கிலோ கிராம் ஆகும். விமான நிலையத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட நபர் இந்த தங்க பிஸ்கட் கையிருப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கலாம் என்றும், சந்தேக நபர் நீண்ட காலமாக இந்தக் கடத்தலை மேற்கொண்டு வந்திருக்கலாம் என்றும் சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபரை காவலில் எடுத்துள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1447114
  15. குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்! மத்திய லண்டன் சனிக்கிழமையன்று (14) அண்மைய பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் ஒன்றைக் கண்டது. குடியேற்ற எதிர்ப்பு ஆர்வலர் டோமி ரொபின்சனின் பதாகையின் கீழ் 100,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். ஆர்ப்பாட்டங்களின் போது பல அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். “Unite the Kingdom” அணிவகுப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் சுமார் 110,000 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், போராட்டத்தின் வான்வழி காட்சிகள் மத்திய லண்டன் வீதிகளின் சில கிலோ மீட்டர்கள் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிவதைக் காட்டியது. இது அதிகாரிகளால் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் 26 அதிகாரிகள் காயமடைந்ததாகவும், அதில் நான்கு பேர் படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக மேலதிக படைகள் வரவழைக்கப்பட்டன. அதிகாரிகள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருந்தனர் மற்றும் சட்ட ஒழுங்கை மீட்டெடுக்க உதவும் வகையில் பொருத்தப்பட்ட பிரிவுகளின் ஆதரவுடன் செயல்பட்டனர். ஆரம்ப கட்ட தகவலின்படி மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த அணிவகுப்பு இங்கிலாந்தில் மிகவும் பரபரப்பான கோடையின் உச்சக்கட்டத்தை அடையாளப்படுத்தியது. புலம்பெயர்ந்தோர் வசிக்கும் ஹோட்டல்களுக்கு வெளியே போராட்டங்களால் குறிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானியாவின் யூனியன் கொடியையும், இங்கிலாந்தின் சிவப்பு மற்றும் வெள்ளை செயிண்ட் ஜார்ஜ் சிலுவையையும் ஏந்திச் சென்றனர். போராட்டக்காரர்கள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை விமர்சிக்கும் கோஷங்களை எழுப்பினர் மற்றும் “அவர்களை வீட்டிற்கு அனுப்புங்கள்” என்று கூறும் பதாகைகளை ஏந்திச் சென்றனர். பிரித்தானியாவில் குடியேற்றம் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. னெனில் நாடு சாதனை எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கைகளை எதிர்கொள்கிறது. இந்த ஆண்டு இதுவரை 28,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கால்வாயைக் கடந்து சிறிய படகுகள் மூலமாக அங்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1447097
  16. ரஷ்யாவில் 7.7 ரிச்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை. ரஷ்யாவின் கம்சட்கா கரையோரப் பகுதியில் இன்று (13) 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 7.7 ரிச்டர் அளவில், 39.5 கிலோமீட்டர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கம்சட்காவின் சில பகுதிகளில் சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் செவெரோ, குரில்ஸ்க் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக அவ்விடங்களிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். https://athavannews.com/2025/1447050
  17. போகிற போக்கை பார்க்க… விஜய் தான், அடுத்த முதலமைச்சர் போல் உள்ளது. ஸ்ராலின், உதயநிதி, சபரீசன் எல்லாம் அடுத்த பத்து வருசத்துக்கு எம். ஜீ. ஆர்., ஜெயலலிதா காலத்தில் கருணாநிதி கூப்பிலை உட்கார்ந்து இருந்த மாதிரி வீட்டிலை குந்தி இருக்கப் போகிறார்கள் போலுள்ளது. அவர்கள் சேர்த்த சொத்து இன்னும் 50 தலைமுறைக்கு காணும் என்ற படியால் ஆறுதலாக வீட்டில் காலை நீட்டிக் கொண்டு இருந்து சாப்பிடட்டும். 😂 வருங்கால முதல்வர், ஈழத்தின் மருமகன் விஜய் வாழ்க. 💪 👍🏼 🤝 🥰 🙏🏽

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.